அருஞ்சொற் பொருள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அக்நி - தீ
அங்குலீ -மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிறமை.
அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று ‘த்வைத’ மும் ‘விசிஷ்டாத்வைத’மும் கருதுகிறது.
அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்
அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்வீக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள் } - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸ - துன்புறுத்தாமை
அபரிக்ரஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ர - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.
அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச' - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய - ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதார - அடிப்படை
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுத்திகாளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | - அணிகலன் |
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்’ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்’ரய தோஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீர்வாத் | - ஆசீர்வாதம் |
| ஆஹார | - உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | - ஆசை |
| இடா | - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | - ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | - ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | - செயல் |
| க்ரு’ஹஸ்த | - கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | - தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கர்மா | - ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | - வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
கல்பநா - கற்பனை
கால - நேரம்
காண்டவ - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்வீக வில்
குண்டலினி - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்பமேளா - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்
- கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
- ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
- உஜ்ஜைியில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
- நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல் - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷ - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள் - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். கோபுர - கோயில் கோபுரம் கோயந் - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். கோவிந்த பாத - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு. கோச' - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.
- அன்னமய அல்லது உடல் அடுக்கு
- பிராணமய அல்லது பிராண அடுக்கு
- மனோமய அல்லது எண்ண அடுக்கு
- விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
- ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு சக்ரம் - மன -உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் சண்டாள - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். சந்தந - சந்தனமரம் சகீஷு - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் சித்த - மனம், மேலும் மனஸ், புத்தி சித்ரகுப்த - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திரம் சைதன்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் த்ரி காலம், - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். த்ரி கால ஜ்ஞானி - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் தந்த்ரா - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் தபஸ் - தீவிர ஆன்மீக முயற்சி. தமஸ் - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற
| குணம் | |
|---|---|
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
| துரீய, ஸமாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு’ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்யாந | - ஆழ்ந்த சிந்தனை |
| தர்ச’ந் | - காட்சி, தெய்வீகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தர்ம | - நேர்மையான |
| தக்ஷிணாயன சூரியனின் | - ஜூன் 21 -ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் |
| தீ | - விவேகம் |
| தீக்ஷை | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தோஷ | - குறைபாடு |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். |
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் |
| நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை |
| நதி | - ஆறு |
| நாக | - பாம்பு |
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள் |
| நாடி | - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச’க்தி பாதை |
| நாரீ | - பெண்மணி |
| நாந்த | - முடிவில்லாத |
| நித்தியாஸநா | - வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தோஷ | - காரணத்தை அடிப்படையாகக் |
| கொண்டகுறைபாடு | |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
| நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| நிஸர்கத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார இருத்தல்’ புலன்களில் | - பொதுவாக ‘உணவிலிருந்து விடுபட்டு என்று பொருள். இங்கு, அனைத்துப் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணாயாம | - மூச்சை அடக்குவது |
| ப்ரு’த்வீ | - பூமி சக்தி |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகாநந்த } | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | - ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக வாழ்க்கை | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச்’ருதி | - பழம், இறை வழிபாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிரகாச’நந்த ஸரஸ்வதி } | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டவை. |
புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்
புத்ர - மகன்
புரோஹித் - அர்ச்சகர்
பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.
ப்ர்ஹ்மன் - தெய்வீகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ர்ஹ்ம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ர்ஹ்மன்
ப்ர்ஹ்மசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ர்ஹ்மசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
பிக்தர் - பக்தன்
பக்தி - உணர்வு வழிபாடு
பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந - கற்பனை
பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
பீஜ - விதை; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்த - ‘நிர்வாண’ நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்து - முட்டாள்
மங்கல - நன்னிமித்தமான
மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு மந்த்ர - ஒரு சப்தம், ஒரு ஸ்ஸோத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர் - கோயில்
மநந - சிந்தித்தல், தியானம்
மநஸ் - மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி - மிகப்பெரிய ஞானி
மஹா - மிகப்பெரிய
மஹாவாக்ய - மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர் - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய ‘திருவாசகம்’ இயற்றியவர்.
மாயா - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மாலா - மாலை
மீமாம்ஸா - பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார் - ஆதாரம் -முதல் சக்தி மையம், மூல -மூலமான
மோக்ஷ - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம - நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்வீக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் பிரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.
- ஸத்ய
- த்ரேதா
- த்வாபர
- கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்த - இரத்தம்
ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில்
இரண்டாவது வகை குணமாகிய தீவிர
உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
ராத்ரி - இரவு
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேஸ்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.
ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன்,
இந்தியாவின் இதிகாஸமான ராமாயணத்தில்
இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.
ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.
லாவோட்ஸ்ீ - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
வர்ண - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாநப்ரஸ்த - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை - குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயு - காற்று
வாஸந - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா - அறிவு, கல்வி
வால்மீகி - புகழ் பெற்ற இதிகாரஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதி - இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த - இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விச்'வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணு - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்
வேத - ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண - நினைவுபடுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்வீகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்
ஸ்வதந்த்ர - சுதந்திரமான
ஸ்வப்ந - கனவு
ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப்ப - முடிவு
ஸந்யாஸீ - துறவி
ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ - ஆன்மீக அமைதி
ஸம்ச'ய - சந்தேகம்
ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார - கர்மச் சக்ரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
ஸமாதி - மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்த்ய | - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி. |
| ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | - சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | - கேட்டல் |
| ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச்'க்தி | - சக்தி, அறிவு சக்தி |
| ச்'ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி'வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | - சீடன். |
| சூ'த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம். |
| சூ'ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
ஜ்யோதிஷ - ஜோதிடம்
ஜோதிஸி - ஜோதிடர்
ஜநக்ராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதாஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத் - விழிப்பு நிலை
ஜாதி - பிறப்பு
ஜாதி தோஷ - பிறப்பில் உள்ள குறைபாடு
ஜீவ - வாழ்தல்
ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.
ஹம்மரபீ - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடாமிய அரசர் புகழ்பெற்றார்.
ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகασ சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்
அத ஸப்தமோऽத்யாய:
அத்தியாயம் - 7
ஜ்ஞான விஜ்ஞான யோக:
ஞான விஞ்ஞான யோகம்
ஶ்ரீபகவாநுவாச
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஶ்ரய: /
அஸம்ஶயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு //
7.1
ஶ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; மயி - என்னிடம்; ஆஸக்தமநா: - ஒன்றிய மனத்துடன்; பார்த - ஓ பிரிதாவின் மைந்தனே; யோகம் - ஒருங்கிணைத்தல்; யுஞ்ஜந் - பயிற்சிசெய்பவனாக; மதஆஶ்ரய: - என்னையே மேலான புகலிடமாகக் கொண்டு; அஸம்ஶயம் - எவ்வித ஐயமுமின்றி; ஸமக்ரம் - முழுமையாக; மாம் - என்னை; யதா - எவ்வாறு; ஜ்ஞாஸ்யஸி - நீ அறிந்து கொள்வாயோ; தத் - அதை; ஶ்ருணு - கேள்
ஸ்ரீ பகவான் சொன்னது
7.1 கிருஷ்ணன் சொல்கிறார், “பிரிதாவின் மைந்தனே! கேள், என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை.”
..........................................................................................................
ஜ்ஞானம் தேऽஹம் ஸவிஜ்ஞானமிதம் வக்ஷ்யாம்யஶேஷத: /
யஜ்ஜ்ஞாத்வாநேஹ பூயோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஶிஷ்யதே//
7.2
ஜ்ஞானம் - புலன்களால் உணர்ந்துகொள்ளக்கூடிய அறிவு; தே - உனக்கு; அஹம் - நான்; ஸவிஜ்ஞானம் - பூரணத் தன்மையைப் பற்றிய அறிவுடன்; இதம் - இந்த; வக்ஷ்யாமி - விளக்குவேன்; அஶேஷத: - முழுமையாக; யத் - எதை; ஜ்ஞாத்வா - அறிந்து கொண்டபின்; ந - இல்லை; இஹ - இவ்வுலகில்; பூய: - மேலும்; அந்யத் - வேறு ஒன்றும்; ஜ்ஞாதவ்யம் - தெரிந்து கொள்ள வேண்டிய; அவசி'ஷ்யதே - அறிந்து கொள்ளப்பட வேண்டியவை
7.2 புலன்களால் உணரக்கூடியதும், முழுமையான அறிவையுடையதுமான அதனைப் பற்றி நீ உணர்ந்து கொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்;
இதை அறிந்து கொண்டாயானால், மேற்கொண்டு அறிந்துகொள்ள வேண்டியதென்று வேறு எதுவுமே இல்லை.
.........................................................................................................
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்'சித்யததி ஸித்தயே /
யததாமபி ஸித்தநாம்ப கச்'சின்மாம் வேத்தி தத்தவத: // 7.3
மநுஷ்யாணாம் - மனிதர்களில்; ஸஹஸ்ரேஷு - ஆயிரக்கணக்கானவர்களுள்; கச்'சித் - யாரோ ஒருவன்; யததி - முயல்கிறான்; ஸித்தயே - தம்மை முழுமையாக உணர்ந்துகொள்வதற்காக; யததாம் - அவ்வாறு முயல்கின்ற; அபி - உண்மையாகவே; ஸித்தநாம் - பூரணத்தன்மையை அடைந்தவர்களில்; கச்'சித் - யாரோ ஒருவன் தான்; மாம் - என்னை; தத்தவத: - உள்ளபடியே; வேத்தி - அறிகிறான்
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர்தான் தம்மை உணர்ந்து கொள்வதற்கு, ஜீவன்முக்தராவதற்கு பெருமுயற்சி செய்கிறார் அப்படிப் பெருமுயற்சி செய்பவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஜீவன்முக்தியை அடைகிறார்.
அவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஸத்யத்தில் என்னைக் காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கும் நிலையை அடைகிறார்.
.........................................................................................................
பூமிராபோऽநலோ வாயு: கம் மனோ புத்திரேவ ச /
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ரு'திரஷ்டதா // 7.4
பூமி: - நிலம்; ஆப: - நீர்; அநல: - நெருப்பு; வாயு: - காற்று; கம் - ஆகாசம்; மந: - மனம்; புத்தி: - புத்தி; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்; அஹங்கார: - அஹங்காரம்; இதி - இவ்வாறு; இயம் - இந்த; மே - எனது; பிந்நா - பிரிக்கப்பட்டுள்ளது; ப்ரக்ரு'தி: - வெளியுலக சக்திகள்; அஷ்டதா - எட்டு வகையாக
7.4 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும், பொய்யான அஹங்காரம் இந்த எட்டும் என்னிடமிருந்து பிரிந்த வெளி உலகச் சக்திகளாக இருக்கின்றன.
........................................................................................................
அபரேயமிதஸ்த்வன்யாம் ப்ரக்ரு'திம் வித்தி மே பராம் /
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் // 7.5
அபரா - கீழான ஜடப்ரகிருதி; இயம் - இது; இத: - இதிலிருந்து; து - ஆனால்; அந்நாம் - வேறான; ப்ரக்ரு'திம் - சக்தி; வித்தி - புரிந்து கொள்; மே - எனது; பராம் - மேலான; ஜீவபூதாம் - வாழும் உயிர்கள்; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே; யயா - யாரால்; இதம்ப - இந்த; தார்யதே - பயன்படுத்தப்படுகிறதோ; ஜகத் - பொருள் சார்ந்த உலகம்
7.5 இயல்பில் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெளி உலகச் சக்திகளைத்தவிர, ஒ! திரண்ட தோள்களை உடைய அர்ஜூனா, என்னிடம் ஓர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது.
இந்தப் பொருள் சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆத்மாவாக இந்த சக்திதான் இருக்கிறது.
........................................................................................................
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய /
அஹம் க்ரு'த்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா // 7.6
ஏதத் - இந்த இரண்டு விதமான இயல்புகள்; யோநீநி - பிறப்பிற்கு மூலகாரணமான; பூதாநி - படைக்கப்பட்ட அனைத்தும்; ஸர்வாணி - எல்லா; இதி - இவ்வாறு; உபதாரய - தெரிந்து கொள்; அஹம் - நானே; க்ரு'த்ஸ்நஸ்ய - எல்லாவற்றையும் உள்ளடக்கிய; ஜகத: - உலகிற்கு; ப்ரபவ: - உற்பத்தியாகும் இடம்; ப்ரலய: - ஒடுங்குகின்ற இடம்; ததா - அவ்வாறே
7.6 என்னுடைய இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன்.
........................................................................................................
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய /
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ // 7.7
மத்த: - என்னைக் காட்டிலும்; பரதரம் - உயர்ந்த; ந - இல்லை; அந்யத் கிஞ்சி த் - வேறு ஒன்றும்; அஸ்தி - இருக்கிறது; தநஞ்ஜய - வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே; மயி - என்னிடம்; ஸர்வம் - அனைத்தும்; இதம - எதை நாம் பார்க்கிறோமோ; ப்ரோதம் - கோர்க்கப்பட்டுள்ளன; ஸூத்ரே - ஒரு நூலில் ; மணிகணா: இவ - முத்துக்களைப் போல
7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாக எந்த ஸத்யமும் இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல, என்மீதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன.
...........................................................................................................
ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ச'சி'ஸூர்யயோ:/
ப்ரணவ: ஸர்வவேதேஷு ச'ப்த: கே பௌருஷம் ந்ரு'ஷு//
7.8
ரஸ: - சுவையாகவும்; அஹம் - நான்; அபஸு - நீரில்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; ப்ரபா - ஒளியாகவும்; அஸ்மி - இருக்கிறேன்; ச'சி'ஸூர்யயோ: - சந்திர சூரியர்களில்; ப்ரணவ: - ஓம்காரமாகவும்; ஸர்வவேதேஷு - எல்லா வேதங்களிலும்; ச'ப்த: - ஒலியாகவும்; கே - ஆகாசத்தில்; பௌருஷம் - ஆண்மையாகவும்; ந்ரு'ஷு - ஆண்களிடத்தில்
7.8 ஓ குந்தியின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; சூரியன், சந்திரர்களின் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மந்த்ரங்களில் புனிதமான 'ஓம்' என்ற மந்த்ரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.
...........................................................................................................
புண்யோ கந்த: ப்ரு'திவ்யாம் ச தேஜச்'சாஸ்மி விபாவஸௌ/
ஜீவநம் ஸர்வபூதேஷு தபச்'சாஸ்மி தபஸ்விஷு // 7.9
புண்ய: - மூலமுதலான; கந்த: - நறுமணமாகவும்; ப்ரு'திவ்யாம் - மண்ணில்; ச - மேலும்; தேஜ: - வெப்பமாகவும்; ச - அவ்வாறே; அஸ்மி
- இருக்கிறேன்; விபாவஸௌ - நெருப்பில்; ஜீவநம் - உயிராகவும்; ஸர்வபூதேஷு - வாழும் எல்லா உயிரினங்களிலும்; தப: - தவமாகவும்; ச - மேலும்; அஸ்மி - இருக்கிறேன்; தபஸ்விஷு - தவம் செய்வோர்களிடத்தில் 7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பில் வெப்பமாக நானே இருக்கிறேன். எல்லா உயிர்களின் வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன்.
........................................................................................................................
பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த ஸனாதனம் /
புத்தீர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம் //
பீஜம் - விதை என்று; மாம் - என்னை; ஸர்வபூதானாம் - சராசரங்கள் அனைத்திற்கும்; வித்தி - புரிந்துகொள்ள முயற்சிசெய்; பார்த - ஓ பிரிதாவின் மைந்தனே; ஸனாதனம் - மூலகாரணமாக; புத்தி: - புத்தியாகவும்; புத்திமதாம் - புத்திசாலிகளுடைய; அஸ்மி - இருக்கிறேன். தேஜ: - உள்ளத் துணிவாகவும்; தேஜஸ்வினாம் - திறன் படைத்தவர்களுடைய; அஹம் - நான்
7.10 ஓ பிரிதாவின் மகனே, எல்லா உயிர்களினுடைய நிலையான ‘மூல’மாக இருப்பதும் நானே, புத்திசாலிகளிடத்தில் இருக்கும் புத்தியாகவும், திறனமிக்கவர்களிடத்தில் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன்.
........................................................................................................................
பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் /
தர்மாவிருத்தோ பூதேஷு காமோऽஸ்மி பரதர்ஷப //
பலம் - வலிமையாக; பலவதாம் - வலிமை மிக்கவர்களுடைய; ச - மேலும்; அஹம் - நான்; காம - உயிரினங்களில் சந்ததிகளைுண்டு பண்ணும் ஆற்றலாக; ராக - பற்றுதல்; விவர்ஜிதம் - நீங்கப்பெற்ற; தர்ம அவிருத்த: - தர்மத்திற்கு மாறுபடாத; பூதேஷு - உயிரினங்களில்; காம: - காமமாக; அஸ்மி - இருக்கிறேன்; பரதர்ஷப - பரதகுலச் செம்மலே
7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய பலமாகவும், உயிர்களிடத்தில் ஆக்க சக்தியாகவும், தர்மத்திற்கு முரண்படாத காமமாகவும் இருக்கிறேன்.
........................................................................................................................
யே சைவ ஸாத்தவிகா பாவா ராஜஸாஸ்தாமஸாச்’ச யே /
மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி // 7.12
யே - அந்த எல்லா; ச ஏவ - மேலும் கூட; ஸாத்தவிகா: நல்லொழுக்கத்தில்; பாவா: - உணர்வு நிலைகள்; ராஜஸா: - தீவிர உணர்ச்சிகளில்; தாமஸா:
- அறியாமையில்; ச - மேலும்; யே - இருந்தாலும்; மத்த: ஏவ - என்னிடமிருந்தே தோன்றின; இதி - என்று; தான் - அவற்றை; வித்தி - அறிந்து கொள்; ந - இல்லை; து - ஆனால்; அஹம் - நானும்; தேஷு - அவற்றில்; தே - அவை; மயி - என்னிடம்
7.12 எல்லா உணர்வு நிலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சிவயப்பட்டவையோ அல்லது அறியாமையோ - என்னிடமிருந்துதான் தோன்றுகின்றன. நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.
.......................................................................................................
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத் /
மோஹிதம் நாபிஜானாதி மாமேப்ய: பரமவ்யயம் // 7.13
த்ரிபி: - மூன்று; குணமயை: - ஸாத்விக, ராஜஸ, தாமஸ குணங்களின் விளைவுகளான; பாவை: - உணர்வுகளால்; ஏபி: - இந்த; ஸர்வம் எல்லா; இதம் - இந்த; ஜகத் - பிரபஞ்சமும்; மோஹிதம் - மயக்கம் அடைந்துள்ளது; ந அபிஜானாதி - அறிவதில்லை; மாம் - என்னை; ஏப்ய: - இம்முக்குணங்களுக்கும்; பரம் - மேலான; அவ்யயம் - மாறுதல் இல்லாத
7.13 இந்த முழு உலகமும் முக்குணங்களால் (நல்லவை, உணர்ச்சிவயப்பட்ட நிலை மற்றும் அறியாமை) மயக்கப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறது. இதனால்தான் அவற்றால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இந்தக் குணங்களை எல்லாம் கடந்தவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறேன்.
.......................................................................................................
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா /
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே // 7.14
தைவீ - உலகியலுக்கே அப்பாற்பட்ட தெய்வீகமான; ஹி - நிச்சயமாக; ஏஷா - இந்த; குணமயீ - உலோகாயதம் சார்ந்த முக்குணமயமான; மம மாயா - என்னுடைய ஆற்றல்; துரத்யயா - கடப்பதற்கு அரிதானது; மாம் ஏவ - என்னையே; யே - எவர்கள்; ப்ரபத்யந்தே - சரணடைகிறார்களோ; மாயாம் ஏதாம் - இந்த மாயா சக்தியை; தரந்தி - கடந்து விடுகிறா ர்கள்; தே - அவர்கள்
7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்வீக சக்தியை வெற்றிகொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச் சுலபமாக இதைக் கடந்துவிட முடியும்.
........................................................................................................................
ந மாம் துஷ்க்ரு'தினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: /
மாயயாபஹ்ரு'தஜ்ஞானா ஆஸுரம் பாவமாச்ரிதா: // 7.15
ந - இல்லை; மாம் - என்னை; துஷ்க்ரு'தின: - சமயக் கொள்கையில் நம்பிக்கையற்ற; மூடா: - அறிவிலிகள்; ப்ரபத்யந்தே - சரணடைவது. நராதமா: - மனிதர்களில் தாழ்ந்தவர்களும்; மாயயா - மாயையினால்; அபஹ்ரு'தஜ்ஞானா: - ஞானம் அபகரிக்கப்பட்டவர்களும்; ஆஸுரம் பாவம் - அசுரத்தன்மையை; ஆச்ரிதா: - ஏற்றுக்கொள்ளுதல்
7.15 சமயக்கொள்கையில் நம்பிக்கையற்ற மூடர்கள், மனித இனத்திலேயே மிகவும் தாழ்ந்தவர்கள், மாயையால் அபகரிக்கப்பட்ட அறிவுடையவர்கள், அரக்கத்தனமான இயல்புகளில் நிலைகொண்டவர்கள், மூடர்கள் இத்தகையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.
........................................................................................................................
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ரு'தினோர்ஜுந /
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஞானீ ச பரதர்ஷப // 7.16
சதுர்விதா: - நான்கு விதமான; பஜந்தே - பக்தி சேவைபுரிகிறா ர்கள்; மாம்
- என்னை; ஜனா: ஸுக்ரு'தின: - பக்தியுடைய மனிதர்கள்; - அர்ஜூந - அர்ஜூனா; ஆர்த: - துன்பமடைந்தவன்; ஜிஜ்ஞாஸு: - சத்தியத்தை அறிய ஆவலுடையவன்; அர்தார்தீ - உலகியல் பொருட்களைப் பெறவேண்டி வழிபடுவன்; ஜ்ஞானீ - உள்ளதை உள்ளபடியே அறிந்தவன்; ச - மேலும்; பரதர்ஷப - பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே
7.16 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்திமான்கள் எனக்கு பக்திசேவை புரிகிறார்கள்.
அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், இறுதியான அறிவைத் தேடுபவர்கள் உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.
தேஷாம் ஜ்ஞானீ நித்யயுக்த ஏகபக்திர்விசி'ஷ்யதே /
ப்ரியோ ஹி ஜ்ஞானிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய: // 7.17
தேஷாம் - அவர்களுள்; ஜ்ஞானீ - ஞானியான பக்தன்; நித்யயுக்த: - எப்பொழுதும் என்னிடமே நிலைத்த, ஒன்றிய; ஏகபக்தி: - ஒன்றின் மேல் மட்டும் செலுத்தப்படும் ஒருவருடைய பக்தியானது; விசி'ஷ்யதே - மிகவும் சிறந்தவன்; ப்ரிய: - பிரியமானவன்; ஹி - நிச்சயமாக; ஜ்ஞானிந:
- ஞானிக்கு; அத்யர்தம் - மிகவும்; அஹம் - நான்; ஸ: ச - அவனும்; மம
- எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்
7.17 இவர்களுள், யார் ஒருவர் முழுமையான அறிவைப் பெற்றவராகவும் இடைவிடாத யோகத்தால் ஒரே மனத்துடன் என்னையே பக்தி செய்து, என்னுடனேயே இணைந்திருப்பவராகவும் இருக்கிறாரோ அவரே மிகச் சிறந்தவராகிறார்.
நான் அந்த ஞானிக்கு மிகவும் பிரியமானவன்; அவரும் எனக்குப் பிரியமானவர்.
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞானீ த்வாத்மைவ மே மதம் /
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் // 7.18
உதாரா: - சிறந்தவர்கள்; ஸர்வே - எல்லோருமே; ஏவ - நிச்சயமாக; ஏதே
- இவர்கள்; ஜ்ஞானீ - உண்மை அறிவில் நிலைகொண்டிருக்கும் ஒருவர்; து - ஆனால்; ஆத்மா ஏவ - என்னுடைய ஸ்வரூபமே; மே - என்னுடைய; மதம் - கருத்து; ஆஸ்தித: - உறுதியாகப் பற்றி நிற்கிறா ன்; ஸ: - அவன்; ஹி
- நிச்சயமாக; யுக்தாத்மா - பக்தி சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்; மாம் ஏவ - என்னையே; அனுத்தமாம் - மிகவும் உயர்ந்த; கதிம் - கதியாகிய
7.18 உண்மையில் இந்த எல்லா பக்தர்களுமே சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்து கொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவர் என்னையே அடைகிறார்.
பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே /
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: // 7.19
பஹூநாம் - பல; ஜந்மநாம் - பிறவிகளுக்கு; அந்தே - பிறகு; ஜ்ஞாநவாந்
- தத்துவஞானம் அடைந்த மனிதன்; மாம் - என்னை; ப்ரபத்யதே - சரணாகதி அடைகிறா ன்; வாஸுதேவ: - காரணங்களுக்கு எல்லாம் காரணமானவன்; ஸர்வம் - அனைத்தும்; இதி - இவ்வாறு; ஸ: - இந்த; மஹாத்மா - மஹாத்மா; ஸுதுர்லப: - மிக மிக அரிதானவன்
7.19 பல பிறவிகளுக்குப் பிறகு, எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார்.
அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது.
காமைஸ்தைஸ்தைர்ஹ்ரு'தஜ்ஞாநா:
ப்ரபத்யந்தேऽந்யதேவதா: /
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ரு'த்யா நியதா: ஸ்வயா // 7.20
காமை: - போகப் பொருட்களில் ஏற்படும் ஆசையினால்; தை: தை:
- அந்தந்த; ஹ்ரு'த - தவறாக வழிநடத்தப்பட்ட; ஜ்ஞாநா: அறிவு; ப்ரபத்யந்தே - சரணடைகிறா ர்கள். அந்யதேவதா: - மற்ற தேவதைகளை; தம் தம் - அந்தந்த; நியமம் - நியமங்களை; ஆஸ்தாய - கைக்கொண்டு; ப்ரக்ரு'த்யா - இயல்பினால்; நியதா: - கட்டுப்படுத்தப்பட்ட; ஸ்வயா - தம்முடைய சொந்த
7.20 பல்வேறு ஆசைகளால் தவறாக வழிநடத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள், சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
யோ யோ யாம்ப யாம்ப தநும் பக்த: ச்'ரத்தயார்சிதும் இச்சதி /
தஸ்ய தஸ்யாசலாம் ச்'ரத்தாம் தாமேவ விததாம்யஹம் // 2.21
ய: ய: - அந்தந்த; யாம் யாம் - எந்தெந்த; தநும் - தேவதையின் ஸ்வரூபத்தை; பக்த: - பக்தன்; ச்'ரத்தயா - சிரத்தையுடன்; அர்சிதும் - பூஜிக்க; இச்சதி - விரும்புகிறா னோ; தஸ்ய தஸ்ய - அந்தந்த பக்தனுக்கு; அசலாம் - ஸ்திரமாக; ச்'ரத்தாம் - சிரத்தையை; தாம் ஏவ - அந்த தேவதையிடமே; விததாமி - தருகிறேன்; அஹம் - நான்
7.21 நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன்.
ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட சிறுதெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்தி செலுத்த முடியும்.
ஸ தயா ச்'ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே /
லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் // 7.22
ஸ: - அந்த மனிதன்; தயா ச்'ரத்தயா - அந்த சிரத்தையுடன்; யுக்த: - கூடியவனாக; தஸ்ய - அந்த தேவதையினுடைய; ஆராதநம் - பூஜையை; ஈஹதே - விரும்பிச் செய்கிறான்; லபதே - அடைகிறான்; ச - மேலும்; தத: - அந்த தேவதையிடமிருந்து; காமாந் - விரும்பிய ஆசைகளை; மயா ஏவ - என்னாலேயே; விஹிதாந் - கொடுக்கப்படுகின்றன; ஹி - சந்தேகமின்றி; தாந் - அந்த
7.22 இதுபோன்ற ஒரு நம்பிக்கையுடன் கூடியவனாக, ஒரு குறிப்பிட்ட சிறு தெய்வத்தைப் பெருமுயற்சியுடன் வழிபட்டு, அவர் தன் ஆசைகளை அடைகிறார்;
உண்மையில், இந்த நன்மைகளை நான் மட்டுமே தருகிறேன்.
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் /
தேவாந் தேவயஜோ யாந்தி மத்_பக்தா யாந்தி மாமபி // 7.23
அந்தவத் - எல்லையுடையதாகவும், தற்காலிகமாகவும் இருக்கின்ற; து - ஆனால்; பலம் - பயன்; தேஷாம் - அவர்களுடைய; தத் - அந்த; பவதி - ஆகின்றது; அல்பமேதஸாம் - சிற்றறிவு படைத்தவர்களாகிய; தேவாந் - தேவதைகளுடைய; தேவயஜ: - தேவதைகளைப் பூஜிப்பவர்கள்; யாந்தி - அடைகிறா ர்கள்; மத்_பக்தா: - என்னுடைய பக்தர்கள்; யாந்தி - அடைகிறா ர்கள்; மாம் அபி - என்னையே
7.23 எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே வழிபடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கின்றன.
சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களின் உலகிற்கு மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.
..........................................................................................................................
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: / பரம் பா_வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் // 7.24
அவ்யக்தம் - வெளிப்படாத; வ்யக்திம் - கண்களால் காணக்கூடியதோற்றத்தை; ஆபந்நம் - அடைந்தவன் என்று; மந்யந்தே - எண்ணுகிறா ர்கள்; மாம் - என்னை; அபுத்தய: - அறிவற்றவர்கள்; பரம் - மேலானதுமான; பா_வம் - உணர்வு நிலையை; அஜாநந்த: - அறிந்து கொள்ளாமல்; மம - என்னுடைய; அவ்யயம் - அழிவற்றது; அநுத்தமம் - அதி உன்னதமான
7.24 என்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அறிவீனர்கள், தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான, பகவானான நான் இதற்கு முன் புலன்களால் உணரமுடியாதவனாக இருந்து இப்போது இந்த மனித உருவெடுத்து வந்திருப்பதாக நினைக்கிறார்கள்.
உடலெடுத்திருந்தாலும்கூட, நான் அழிவற்றவனாகவும், எல்லாவற்றிற்கும் மேலானவனாகவும் இருக்கிறேன் என்பது பற்றி அவர்கள் அறிவதில்லை.
..........................................................................................................................
நாஹம் ப்ரகாஸஃ ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ரு'தஃ /
மூடோயம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் // 7.25
ந - இல்லை; அஹம் - நான்; ப்ரகாஸ' ந - புலப்படுவதில்லை; ஸர்வஸ்ய
- எல்லோருக்கும்; யோகமாயாஸமாவ்ரு'தஃ - என்னுடைய உள்ளார்ந்த ஆற்றலால் மறைக்கப்பட்டுள்ள; மூடஃ - அறிவற்ற; அயம் - இந்த; ந அபிஜானாதி - அறிவதில்லை; லோகஃ - மனித ஸமுதாயம்; மாம் - என்னை; அஜம் - பிறப்பற்றவன் என்றும்; அவ்யயம் - அழிவற்ற பரம்பொருள் என்றும்
7.25 நான் என்னை எனது தெய்வீக சக்தியால் மறைத்துக் கொண்டிருப்பதால், முட்டாள்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் ஒருபோதும் என்னை வெளிப்படுத்திக் காட்டுவதில்லை.
நான் பிறப்பற்றவன், நிரந்தரமானவன் என்பதை அறியாமையில் இருப்பவர்கள் அறிய மாட்டார்கள்.
..........................................................................................................
வேதாஹம் ஸமதீதானி வர்தமானாநி சார்ஜுந /
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கச்'சந // 7.26
வேத - அறிவேன்; அஹம் - நான்; ஸமதீதாநி - முன்பே உயிர் வாழ்ந்து காலமாகி விட்டவையும்; வர்தமானாநி - இப்பொழுது இருக்கின்றவையும்; ச - அவ்வாறே; அர்ஜுந - அர்ஜூனா; பவிஷ்யாணி - இனித் தோன்றப் போகின்றவையும் ஆன; பூதாநி - எல்லா உயிரினங்களையும்; மாம் - என்னை; து - ஆனால்; வேத - அறிவேன்; ந - இல்லை; கச்'சந - எவரும்
7.26 ஓ அர்ஜூனா! தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான், நடந்த அனைத்தையும் அறிவேன். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் அறிவேன்.
உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.
..........................................................................................................
இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத/
ஸர்வபூதானி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப // 7.27
இச்சாத்வேஷ - விருப்பு வெறுப்புகளால்; ஸமுத்தேந - உண்டான; த்வந்த்வமோஹேந - இரட்டைகள் வடிவான மயக்கத்தினால்; பரத
- பரதகுலத் தோன்றலே; ஸர்வபூதானி - எல்லா உயிரினங்களும்; ஸம்மோஹம் - மிகுந்த அறியாமையை; ஸர்கே - பிறக்கும்போதே; யாந்தி
- அடைகின்றன; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே
7.27 ஓ எதிரிகளை எல்லாம் வாட்டுகிற பரத குலத்தில் உதித்தவனே! பிறக்கும் பொழுதே எல்லா ஜீவராசிகளும் குழப்பத்துடன்தான் பிறக்கின்றன. அவை விருப்பு, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.
.......................................................................................................
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் /
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ரு'டவ்ரதா: // 7.28
யேஷாம் - எந்த; து - ஆனால்; அந்தகதம் - முழுவதுமாக நசித்துவிட்டதோ; பாபம் - பாவம்; ஜநாநாம் - மனிதர்களுடைய; புண்யகர்மணாம் - முந்தைய சிறந்த செயல்கள்; தே - அந்த; த்வந்த்வமோஹநிர்முக்தா: - விருப்பு வெறுப்புகளால் உண்டாகிற இரட்டைகள் வடிவான மயக்கத்திலிருந்து விடுபட்ட; பஜந்தே - வழிபடுகிறா ர்கள்; மாம் - என்னை; த்ரு'டவ்ரதா: - உறுதியான நிச்சயத்துடன் கூடிய பக்தர்கள்
7.28 யாரெல்லாம் தர்ம நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதோ, யாரெல்லாம் நிஜம், கற்பனை என்ற இருமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுதியான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
.......................................................................................................
ஜராமரணமோக்ஷாய மாமாச்'ரித்ய யதந்தி யே /
தே ப்ரஹ்ம தத்விது: க்ரு'த்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம் //
7.29
ஜராமரணமோக்ஷாய - மூப்பு மரணம் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக; மாம் - என்னை; ஆச்'ரித்ய - சரணமடைந்து; யதந்தி - முயல்கிறா ர்களோ; யே - எவர்கள்; தே - அவர்கள்; ப்ரஹ்ம - பிரஹ்மத்தையும்; தத் - அந்த; விது: - அறிந்து கொள்கின்றனர்; க்ரு'ஸ்நம் அத்யாத்மம் - முழுவதையும் கடந்து செல்கிற; கர்ம - கர்மத்தையும்; ச - அவ்வாறே; அகிலம் - முழுமையாக
7.29 பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைய கடும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் என்னிடம் சரணாகதி அடைகிறார்கள்.
இவற்றை எல்லாம் கடந்திருக்கும் செயல்களைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையில் அவர்கள் பிரஹ்மமாகவே ஆகிறார்கள்.
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது: /
ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: // 7.30
ஸாதிபூதா: - பொருள் சார்ந்த வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்தும் அடிப்படை கொள்கை; ஆதிதைவம் - எல்லா சிறு தெய்வங்களுக்கும் அடிப்படை ஆதாரமான; மாம் - என்னை; ஸாதியஜ்ஞம் - எல்லா யாகங்களையும் தாங்கி அவற்றிற்கு வலிமையளிக்கின்ற; ச - மேலும்; யே - எவர்கள் ; விது: - அறிகிறார்களோ; ப்ரயாணகாலே அபி - மரணத்தறுவாயிலும் கூட; ச - மேலும்; மாம் - என்னை; தே - அவர்கள்; விது: - அறிகிறார்கள்; யுக்தசேதஸ: - அத்தகைய ஒன்றிய மனத்தோடு கூடிய
7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காணிக்கும் மேன்மை மிக்க கடவுளாகவும், எல்லா சிறு தெய்வங்களின் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்ஞங்களை ஆதரித்து வளர்ப்பவனாகவும் அறிந்துகொள்கிறார்களோ, புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரண காலத்தில்கூட என்னை நிலையான மனத்துடன் நினைக்கின்றனர்.
ௐ தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஶ்ரீக்ரு'ஷ்ணார்ஜுனஸம்வாதே ஜ்ஞானவிஜ்ஞானயோகோ நாம ஸப்தமோऽத்யாய: //
ௐ தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஞான விஞ்ஞான யோகம் எனப் பெயர் படைத்த ஏழாவது அத்தியாயம் .
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
| அந்தவத்து பலம் | 7 -23 |
| அபரேயமிதஸ்த்வந் | 7 -5 |
| அவ்யக்தம் வ்யக்தி | 7 -24 |
| இச்சாத்ப்வேஷஸமுத் | 7 -27 |
| உதாரா: ஸர்வ | 7 -18 |
| ஏதத்யோநீநி | 7 -6 |
| காமைஸ்தைஸ்தைர் | 7 -20 |
| சதுர்விதா பஜந்தே | 7 -16 |
| ஜராமரணமோக்ஷா | 7 -29 |
| ஜ்ஞாநம் தேऽஹம் | 7 -2 |
| தேஷாம் ஜ்ஞாநீ | 7 -17 |
| த்ரிபிர்குணமயை | 7 -13 |
| தைவீ ஹ்யேஷா குண | 7 -14 |
| ந மாம் துஷ்க்ரு'திநோ | 7 -15 |
| நாஹம் ப்ரகாச': ஸர்வ | 7 -25 |
| புண்யோ கந்த: | 7 -9 |
| பலம் பலவதாம் சாஹ | 7 -11 |
| பஹூநாம் ஜந்மநா | 7 -19 |
| பீஜம் மாம் ஸர்வபூ | 7 -10 |
| பூ மிராபோऽநலோ | 7 -4 |
| மத்த: பரதரம் நாந்ய | 7 -7 |
| மநுஷ்யாணாம் ஸஹ | 7 -3 |
| மய்யாஸக்தமநா: | 7 -1 |
| யே சைவ ஸாத்த்விகா | 7 -12 |
| யேஷாம் த்வந்தகதம் | 7 -28 |
| யோ யோ யாம்ப யாம் | 7 -21 |
| ரஸோऽஹமப்ஸு | 7 -8 |
| வேதாஹம் ஸமதீ | 7 -26 |
| ஸ தயா ச்'ரத்தயா | 7 -22 |
| ஸாதிபூதாதிதைவம் | 7 -30 |