KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/நான்கு விதமான பக்திமான்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

நான்கு விதமான பக்திமான்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்திமான்கள் எனக்கு பக்திசேவை புரிகிறார்கள்.

அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், இறுதியான அறிவைத் தேடுபவர்கள் உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.

இவர்களுள், யார் ஒருவர் முழுமையான அறிவைப் பெற்றவராகவும் இடைவிடாத யோகத்தால் ஒரே மனத்துடன் என்னையே பக்தி செய்து, என்னுடனேயே இணைந்திருப்பவராகவும் இருக்கிறாரோ அவரே மிகச் சிறந்தவராகிறார்.

நான் அந்த ஞானிக்கு மிகவும் பிரியமானவன்; அவரும் எனக்குப் பிரியமானவர்.

உண்மையில் இந்த எல்லா பக்தர்களுமே சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்து கொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவர் என்னையே அடைகிறார்.

பல பிறவிகளுக்குப் பிறகு, எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமதுவாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார்.

அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது.

Peather icon

ஆன்மீகக் கலாச்சாரமே இந்தியாவை உயிரோடு வைத்திருக்கிறது

கிருஷ்ணர் இப்போது மேலும் ஆழமாகப் போகிறார். அவர் இந்திய சமுதாய அமைப்பு முறையைப் பற்றிப் பேசுகிறார்.

இந்த விஷயத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ரிஷிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன். ஏனென்றால் இந்தச் சமுதாய அமைப்புதான் நமது ஒட்டுமொத்த ஆன்மீக விஞ்ஞானத்தையும் நிஜமாக்கி இருக்கிறது.

nநமது வேதங்களை, புனித நூல்களை உயிருடன் வைத்திருக்கும் இந்தச் சமுதாய அமைப்பு முறைக்கு, நமது ஆன்மீக விஞ்ஞானத்தை உயிருடன் வைத்திருக்கும் இந்தச் சமுதாய அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன்.

> ரிஷிகளால்
> உருவாக்கப்பட்டிருக்கும்
> இந்தச் சமுதாய
> அமைப்பு முறைக்கு
> நான்
> தலை வணங்குகிறேன்.

இன்றைய நவீன காலத்தில், நமது சமுதாய அமைப்பு முறையை அவமதிப்பதும், ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சமுதாய அமைப்புமுறையை இழிவுபடுத்துவதும் ஒரு ‘நாகரிகமாக’ மாறிவிட்டது!

nநமது வேத முறையைத் தூற்றுவதும் அல்லது நமது வேத முறைகளை அவமதிப்பதும் ஒரு ‘நாகரிகமாக’ மாறிவிட்டது. குறிப்பாக தென் இந்தியாவில், வேத முறைகளை அவமதிப்பதும், ஸந்யாஸிகளை அவமதிப்பதும் ஒரு புதிய பாணியாக மாறிவிட்டது. உங்களை நீங்களே ஒரு பெரிய படிப்பாளியாகவோ அல்லது முக்கியமான மனிதனைப் போலவோ காட்டிக்கொள்ள விரும்பினால், நமது வேத முறையை நீங்கள் இழிவாகப் பேசினால் போதும். உடனடியாக நீங்கள் பிரபலமாகி விடுவீர்கள்.

நீங்கள் சொல்வதைக் கேட்க, குறைந்த பட்சம் அங்கு பத்து முட்டாள்களாவது இருப்பார்கள். பிரபலமாவதற்கு இதுவொரு எளிமையான, சுலபமான வழி.

நாம், நமது வேத முறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், நமது பண்டைய ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சிறந்த முறையையும் நாம் அவமதிக்கத் தொடங்கி இருக்கிறோம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமது
ஸாதுக்களால் உருவாக்கப்பட்ட வேத முறையால்
மட்டும்தான்,ன்றும் இந்தியாவில் ஆன்மீகக்
கலாச்சாரம் உயிரோடு இருக்கிறது.

இன்னுமொரு ஆழமான ஸத்யம்
என்னவென்றால், உண்மையில் இதனால்
மட்டுமே இந்திய நாடே உயிரோடு
இருக்கிறது.

> இந்திய
> சமுதாய அமைப்பு
> முறைதான்
> நமது ஒட்டுமொத்த
> ஆன்மீக
> விஞ்ஞானத்தையும்
> நிஜமாக்கி இருக்கிறது.

ஒருநாள், நான் பரமஹம்ஸ யோகானந்தரின் சுயசரிதத்தைப் படித்தேன். ‘புக் ஆப் ஜீனிலிஸ்’ என்ற புத்தகத்திலிருந்து ஓர் அழகான மேற்கோள் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.

ஆப்ரகாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தை அழிக்க வேண்டாம் என்று கடவுளிடம் முறையிடுகிறார்.

கடவுள் சொல்கிறார், ‘‘அந்த இடத்தில் ஒரு பத்து நல்ல மனிதர்கள் இருந்தால் போதும், நான் அந்த இடத்தை ஒன்றும் செய்ய மாட்டேன். விட்டு விடுகிறேன்,’’ என்கிறார். இந்தியா ஏன்ன்றும் நிலைத்திருக்கிறது என்பதை இந்த வரிகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள், இந்தியா இன்றும் நிலைத்திருக்கிறது, இது கடவுளின் மிகப்பெரிய அற்புதம். அது ஏனென்றால் அந்தப் பத்து மனிதர்களால்தான். இத்துணை நீண்ட காலத்திற்கு எந்தக் கலாச்சாரமும் நிலைத்திருந்ததில்லை.

ஒருவருக்கு உடலில் ஒரு கட்டி இருந்தால், அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டுமே ஒழிய அந்த நபரையோ நீங்கள் கொன்றுவிட முடியாது.

இந்திய கலாச்சாரங்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய அல்லது அதற்குப் பிறகு தோன்றிய பாபிலோனிய, ரோமன், கிரேக்கம், போன்ற எத்தனையோ, மற்ற எல்லாக் கலாச்சாரங்களுக்கும் எப்படிப் போர் செய்வது, ஒரு திட்டமிட்ட முறையில் எப்படி சாம்ராஜ்ஜியங்களையும் பெரிய நகரங்களையும் உருவாக்குவது, என்பதைப் பற்றியெல்லாம் தெரியும்.

எப்படித் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிகச் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள்!

இருந்தும், அவர்களால் நிலைத்திருக்க முடியவில்லை.

இன்றைக்கு நம்மால் அவர்களின் நினைவுச் சின்னங்களை மட்டும்தான் பார்க்க முடிகிறது.

இந்தக் கலாச்சாரங்கள் எல்லாம் இன்று இல்லாமல் போய் விட்டன. இந்திய கலாச்சாரத்திற்கு, இந்திய அமைப்பு முறைக்கு குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான பதிவு செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.

பிரகாஷானந்த ஸரஸ்வதி சுவாமிகளால் எழுதப்பட்ட அருமையான புத்தகம் ஒன்று இருக்கிறது. இது, இந்திய கலாச்சாரத்தில் இருக்கிற மதங்களைப்பற்றிய சுருக்கமான வரலாறுகளைச் சொல்லும் ஒரு அருமையான நூல்.

இந்திய வரலாற்றை அவர் மிக அழகாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதன்படி, இந்திய கலாச்சாரம் என்பது நூறாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

எப்படிப் பார்த்தாலும், நம்மால் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும் - அதாவது, குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான இந்திய கலாச்சாரத்தின் பதிவு செய்யப்பட்ட வரலாறு நம்மிடமிருக்கிறது.