நான் நிலையானவன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

7.10 ஓ பிரிதாவின் மகனே, எல்லா உயிர்களினுடைய நிலையான 'மூல'மாக இருப்பதும் நானே, புத்திசாலிகளிடத்தில் இருக்கும் புத்தியாகவும், திறன்மிக்கவர்களிடத்தில் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன்.
7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய பலமாகவும், உயிர்களிடத்தில் ஆக்க சக்தியாகவும், தர்மத்திற்கு முரண்படாத காமமாகவும் இருக்கிறேன்.
7.12 எல்லா உணர்வு நிலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சிவயப்பட்டவையோ அல்லது அறியாமையோ - என்னிடமிருந்துதான் தோன்றும்! நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.
7.13 இந்த முழு உலகமும் முக்குணங்களால் (நல்லவை, உணர்ச்சிவயப்பட்ட நிலை மற்றும் அறியாமை) மயக்கப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறது. இதனால்தான் அவற்றால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இந்த குணங்களை எல்லாம் கடந்தவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறேன்.
7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்வீக சக்தியை வெற்றிகொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச் சுலபமாக இதைக் கடந்துவிட முடியும்.
7.15 சமயக்கொள்கையில் நம்பிக்கையற்ற மூடர்கள், மனித இனத்திலேயே மிகவும் தாழ்ந்தவர்கள், மாயையால் அபகரிக்கப்பட்ட அறிவுடையவர்கள், அரக்கத்தனமான இயல்புகளில் நிலைகொண்டவர்கள், மூடர்கள் இத்தகையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.
## நீங்கள் என்னைப்போல் இருப்பீர்கள்
"நான்நான் ஆக்க சக்தியாக இருக்கிறேன்" என்று சொல்லும் கிருஷ்ணர், "எல்லா உயிர்களின் விதையாகவும் நானே இருக்கிறேன்," என்கிறார். அவர் எந்த வித சாக்குப்போக்கோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், "நானே ஆக்க சக்தியாக இருக்கிறேன், ஆனால் எனக்குக் கற்பனைகளால் ஆன காமம் கிடையாது."
காமம் இல்லாமல் எப்படி ஒருவர் படைப்பாளியாக இருக்க முடியும்?
| நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை விட வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக உங்கள் கற்பனைகளை விட்டு விடுங்கள். | | --- |
முன்பு வாழ்ந்த நம்முடைய பல தலைசிறந்த ஞானிகள், வஸிஷ்டர், வியாஸர் போன்ற ரிஷிகள் மற்றும் மஹரிஷிகள் க்ரு'ஹஸ்தர்களாக இருந்தவர்கள்தான். அதாவது, இவர்கள் மனைவி, குழந்தைகளோடு குடும்பத் தலைவர்களாக இருந்தார்கள். அதிலிருந்து கொண்டே அவர்கள் ஆன்மாவை உணர்ந்தார்கள், ஞானமடைந்தார்கள்.
அனுமான், விநாயகரைத் தவிர நாம்
வணங்கும் மற்ற எல்லாக் கடவுள்களுக்கும்
திருமணம் ஆகியிருக்கிறது! 16,008
மனைவிகளை மணந்த பெருமை
கிருஷ்ணருக்கு உண்டு !
உருவாக்கமும் இல்லாமல், இனப்பெருக்கமும்
இல்லாமல் எப்படி ஒரு உயிர் உருவாக
முடியும்? அனைவருமே தெய்வீக பிறப்பை
எடுக்க முடியாது.
गुणத்தால்
பாதிக்கப்படாத
எந்த உயிரினமும்,
மனத்தால்
பாதிக்கப்படுவதில்லை.
வயதிற்கு வருவதற்கு முன்பே துறவு மீதான ஆசை ஏற்பட்டிருக்க வேண்டும்; இளமைப் பருவத்திற்கு முன்னரே முதல் ஞான அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் உயிர் சக்தியானது கீழிறங்கும் காம சக்தியாகவோ, இனப்பெருக்க சக்தியாகவோ மாறாமல், உன்னத ஆன்மீக சக்தியாக மேல்நோக்கித் திரும்பும்.
தங்களின் ப்ராரப்த கர்மங்களால் இந்த ஆன்ம தூண்டுதல் பெற்றவர்கள்தான் பரமஹம்ஸர்கள். அது அவர்களின் இயல்பாக இருக்கும். மனத்துறைவு அவர்களுக்குள் இயற்கையாகவே மலர்கிறது.
இளமைப் பருவத்திற்குப் பிறகு துறவு ஏற்பது என்பது கொஞ்சம் கடினம்தான். அதை ஏற்க முடியும்; ஆனால் மிகுந்த எச்சரிக்கையோடும், சிறந்த குருவின் மேற்பார்வையின் கீழ் இருந்துகொண்டும்தான் அதைச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் பற்றுகளை விட்ட ஸந்யாசிகளைப்போல, ப்ரஹ்மச் ரியத்தைக் கடைப்பிடிப்பது போல நடிப்பார்களே தவிர, அவர்களுக்குள் ஆசைகள் நிரம்பி இருக்கும். அவற்றை வெளிப்படுத்தவும் அவர்கள் தயாராகவே இருப்பார்கள்.
ப்ரஹ்மசாரி என்ற வார்த்தை
மனத்துறைவு பூண்டவரைக்
குறிக்காது என்று நான்

அடிக்கடி சொல்லி இருக்கிறேன். ‘உண்மைப் பாதையில் (கற்பனைகளற்ற நிஜத்தில்) சென்றுகொண்டிருப்பவர்கள்’ என்பதையே அது குறிக்கிறது.
அந்தச் சொல்லின் அர்த்தத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அது பல வித்தியாசமான அர்த்தத்தை விளக்கும். இதை விளக்கக்கூடிய ஒரு சின்ன கதை:
ஒருமுறை கிருஷ்ணர், யமுனை நதியின் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு கோபியர்களோடு போய்க் கொண்டிருந்தார். திடீரென்று, நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே கிருஷ்ணர் யமுனையைப் பார்த்து, “நான் உண்மையான ப்ரம்மசாரியாக இருந்தால், நான் நடந்து செல்ல வழி விடு,” என்று சொன்னார்.
யமுனை நதி விலகி வழிவிட்டது, கிருஷ்ணர் அந்தக் கரைக்குக் கடந்து சென்றார்.
இதப் பார்த்த ஒரு ஸந்யாஸிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியில் அவர் வாயடைத்துப்போனார். ‘கிருஷ்ணர் ஒரு ப்ரம்மசாரியா? அவரை நேசிக்கும் இத்தனை பெண்களோடு சேர்ந்து அவர் போய்க் கொண்டிருக்கிறார், தம்மைத்தாமே ப்ரம்மசாரி என்றும் சொல்லிக்கொள்கிறார், இந்த நதியும் அவருக்கு வழி விடுகிறதே! இது எப்படி நடக்க முடியும்?’ என்று யோசித்தார்.
அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார், “நானே படைக்கும் சக்தி, ஆனால் எந்த இச்சையும் இல்லாமல், எந்தப் பற்றும் இல்லாமல், எந்தக் கற்பனையும் இல்லாமல் இருக்கிறேன். நானே இறுதி ஸத்யமாகவும் இருக்கிறேன்!”

கற்பனைதான் நமது எல்லாப்
பிரச்சினைகளுக்கும் ஆணிவேராக
இருக்கிறது. ஒவ்வொரு கற்பனையும்
உண்மையாகும்போது, நமக்குள் மேலும்
மேலும் பல கற்பனைகள் தோன்றும்
நம்மால் ஒருபோதும் நிஜத்தில் வாழ
முடிவதில்லை.
ஸத்யத்தில் வாழ வேண்டும் என்றால்,
நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.
நிகழ்காலத்தில் வாழத் தொடங்கிவிட்டால்,
நீங்களும் கிருஷ்ணராக இருப்பீர்கள்.
நாம் கடந்தகாலத்தைப் பிடித்துக்கொண்டு,
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக்
கொண்டிருப்பதால்தான், கற்பனைகளில்
மாட்டிக் கொள்கிறோம். நாம் ஒருபோதும்
நம் உடலின் எல்லைக்குள் கட்டுப்பட்டு
இருப்பதில்லை. நமது மனம், நமது உடலை
விட்டு எங்கோ வேறு உலகத்திற்கு, கற்பனை
உலகத்திற்குச் சென்று விடுகிறது. இந்த
மாதிரியான வாழ்க்கை, நம்மைத் துக்கத்தை
நோக்கிதான் அழைத்துச் செல்லும்.
நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால்,
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்; அது உங்கள் கற்பனைகளை
விட்டு விடுவதுதான்!
நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை விடவேண்டியதில்லை, அதற்குப் ப பதிலாக இந்தக் கற்பனைகளை விட்டு விடுங்கள்.
உங்கள் செல்வங்களை அனுபவியுங்கள், உங்கள் தொழிலை அனுபவியுங்கள், உங்கள் மனைவி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் சம்பாதித்தவை எல்லாம் உங்களிடமிருக்கின்றன. உங்களுக்குரிய அவற்றை மட்டும் அனுபவியுங்கள்.
உங்களிடம் இல்லாததைப் பற்றிய கற்பனையை மட்டும் விட்டு விடுங்கள்.
மேலும் மேலும் பொருட்களை ஈட்ட ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்; ஓடுவதை நிறுத்திவிட்டு, நீங்கள் சம்பாதித்த பொருட்களை அனுபவிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்,
நிகழ்காலத்திற்கு நகருங்கள், இங்கேயே இப்பொழுதே ஸத்யத்திற்குள் மூழ்குங்கள், நீங்களும் ப்ரஹ்மசாரி ஆவீர்கள்!
குணங்களால் பாதிக்கப்படாதவர்
இந்த ஸ்லோகங்களில் நமக்குள் இருக்கும் இயல்பான குணங்களைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். பிறகு, இதற்காகவே ஓர் அத்தியாயத்தையும் ஒதுக்குகிறார். ப்ரக்ரு'தி என்றழைக்கப்படும் உலகில் வெளிப்படும் சக்தியானது, குணங்கள் என்றழைக்கப்படும் மூன்று இயல்புகளைக் கொண்டிருக்கிறது.
ப்ர்க்ரு'தி சம நிலையில் இருக்கும்போது, அது தூய்மையான சக்தியாக இருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதுதான் குணங்கள் செயலுக்கு வருகின்றன. கட்டிடங்களில் இருக்கும் செங்கல்களைப் போல, அவை பல வழிகளில் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்துகொண்டு, செயல்களையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றன, தாங்கிப் பிடித்து காப்பாற்றுகின்றன, அழிக்கின்றன.
ஒரேயொரு குணம் மட்டும் ஒருவருக்குள் இருப்பது எப்போதாவதுதான். அவை பெரும்பாலும் ஒரு கலவையாகத்தான் இருக்கும். கிருஷ்ணர், ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று வித குணங்களைக் குறிப்பிடுகிறார்.
பொதுவாக இதை நல்ல தன்மை அல்லது அமைதி, உணர்ச்சி அல்லது வெறி, அறியாமை அல்லது மந்தத் தன்மை என்று சொல்வார்கள்.
இந்த குணங்களுக்கு இடையிலான விளையாட்டுதான், மனத்தை இயக்குகிறது.
மன இயக்கத்தின் மூலமாகச் செயல் நடக்கிறது. ஒருவர் இருக்கும் நிலையை எடுத்துக் காட்டுவதல்ல குணம்; ஒருநிலையை அடைவதற்குக் காரணமாக இருப்பதுதான் குணம். ஸத்வம் என்கிற அந்த குணமே நல்ல தன்மையோ அல்லது அமைதியோ கிடையாது. அது நம்மை அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு கட்டமைப்பு.
நீங்கள ஆனந்தமாக
வாழ வேண்டுமானால்,
நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்;
அது உங்கள்
கற்பனைகளை விட்டு
விடுவதுதான்!
குணத்தால் பாதிக்கப்படாத எந்த உயிரினமும், மனத்தால் பாதிக்கப்படுவதில்லை. ஒருவர் மூன்று குணங்களையும் கடந்து சென்றுவிட்டால், அவர் கிருஷ்ணரைப்போல் த்ரிகுணரஹிதர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிாார். அப்படிப்பட்டவர், மனத்தினாலும், வேறுசெயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
வேறோரிடத்திலும் இதை நான் சொல்லி
இருக்கிறேன். ஓர் அவதாரம், அதாவது ஒரு
ஞானமடைந்த சக்தி, இந்தப் பூமியில் ஒரு
நோக்கத்திற்காக பிறப்பு எடுத்தாலும்கூட,
அதுவும் சில குணங்களுடந்தான்
பிறப்பைத் தொடங்க வேண்டியுள்ளது.
இது எப்படியென்றால்: சுத்தமான
தங்கத்தைக்கொண்டு நம்மால் நகைகள்
செய்ய முடிவதில்லை; அதில் கொஞ்சம்
தாமிரத்தைச் சேர்க்க வேண்டியிருப்பதைப்
போன்றதுதான்.
அதேபோலத்தான் மூன்று குணங்களையும்
கடந்து சென்று விட்ட அந்த சக்திகூட
இந்தப் பூமியில் பிறப்பெடுக்கும்போது, சில
ஸத்வ குணங்களுடன் கலக்க வேண்டியுள்ளது.
இதுதான் கிருஷ்ணர் விஷயத்தில் நடந்த
உண்மையும்கூட! வாஸுதேவ கிருஷ்ணராக,
வஸுதேவரின் மகனாக, அவரின் மீது சில
குணங்கள் செயல்பட அனுமதிக்கிறார்.
முக்குணங்களைக்
கடந்தவர்,
மனத்தினாலும்,
வேறுசெயல்களாலும்
பாதிக்கப்படுவதில்லை.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பகவத்கீதை பரப்ரஹ்ம கிருஷ்ணரால், பிரபஞ்ச சக்தி கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது. வாஸுதேவ கிருஷ்ணரால் அல்ல. அதனால்தான் அவர், "நான் குணங்களைக்கடந்தவன்," என்று தைரியமாகச் சொல்கிறார்.
"நானே பரம புருஷன், நானே இந்த ப்ரக்ருதியை ஆட்டுவிக்கும் ஆதியானவன், நான் அதன் பாதிப்புகளை எல்லாம் கடந்தவன்," என்கிறார். ப்ரக்ருதிக்கு அப்பால் இருக்கும் இயற்கையையும் படைத்தவர் கிருஷ்ணர். ஆகவே இயற்கை நிகழ்வுகளுக்கு அப்பால் இருப்பவரும் அவரே.
மாயையை அழிக்கும் அஸ்திரம்
இந்தப் பொருளுலகத்தில் மக்கள் வாழும்போது, அவர்களுக்குள் இந்த குணங்களின் விளையாட்டை நாம் பார்க்கலாம். மக்கள் பெரும்பாலும், ரஜோ மன நிலையில்தான் இருப்பார்கள், அதாவது உணர்ச்சிப்பூர்வமாகவும் வெவ்வேற விகிதாசாரங்களில் கலக்கப்பட்ட ஸத்வ மற்றும் தமோ குணங்களுடனும் இருக்கிறார்கள்.
படைப்புகளை உருவாக்க, செயல்களை நடத்த, ரஜஸ் தேவைப்படுகிறது. இது செயல்களை நடத்துவதற்கான வலிமையான காரண குணமாக இருக்கிறது.
நீங்கள் ஓர் ஆச்ரமத்திற்குள்செல்லும்போது, குறிப்பாக துறவு வாழ்க்கைக்கும், பற்றுகளைத்துறந்த வாழ்க்கைக்கும், பொறுப்பெடுத்துக்கொள்ளும்பொழுது, பெரும்பாலாவனர்கள் ஆழ்ந்த தமஸுக்குள், செயலற்ற நிலைக்கு சென்று விடுவீர்கள்.
அது அறியாமைநிலை அல்ல, அது செயலற்ற நிலை. அந்நிலையில் முந்தைய உங்களின் வாழ்க்கையில் இருந்த அர்த்தமற்ற நடவடிக்கையால் உண்டான எல்லா ஒடுக்கப்பட்ட எதிர்ப்புகளும் மேற்பரப்பிற்கு வருகின்றன. அவ்வாறு வரும்போது அவை உங்களை முழுமையான செயலற்ற நிலைக்குள் தள்ளி விடுகின்றன.
நீங்கள் பொதுவாக தூங்கும் நேரத்தைவிட அதிகமான நேரம் தூங்குவீர்கள். எதையுமே செய்வதற்கு விருப்பமிருக்காது. எது எப்படி இருந்தாலும் சரி, அது கடந்து செல்லும் ஒருநிலைதான். ஒடுக்கப்பட்டவை அனைத்தும் மேல் எழும்பி கரைந்துவிடும். அவற்றை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அதற்குப் பிறகு, நீங்கள் ஸத்வ நிலைக்குச் செல்வீர்கள்.
‘ஸத்வ நிலைக்குச் செல்லும் முன்னர் ஒருவர் தமோ நிலைக்குச் செல்கிறார்’ என்கிற செய்தி பெரும்பாலானவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருந்தாலும் அதுதான் நடக்கிறது. அது ஒருவரின் முந்தைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
மற்றொரு புறம்,ன்னிடம் சரணடையாதவர்களைத்தான் தமோ நிலையிலேயே மூழ்கியிருப்பவர்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இவர்கள் இருட்டிலும், அறியாமையிலுமிருப்பார்கள். அவர்கள் தங்களின் சக்தியை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் விலங்குகளைவிட மேம்பட்டவர்கள் இல்லை; உண்மையில், விலங்குகள்கூட அவர்களைவிட மேம்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. ஏனென்றால் இயற்கையோடு இயைந்து எப்படி வாழ வேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, விலங்குகள் கற்பனைகள் செய்வதில்லை.
துரதிருஷ்டவசமாக, மனிதர்கள் தங்களுடைய
இயல்பான இயற்கை நிலையையே மறுக்கும்
அளவிற்கு, தங்களின் கருத்துகளைத்
திரித்துக்கொள்ள முடிகிறது.
மாயை, அதாவது மயக்கம் என்பதும்
குணங்களின் விளையாட்டுதான். உண்மையில்,
குணங்களிலிருந்து தோன்றிய அடிப்படை
விளையாட்டே இதுதான்!
மாயை என்பது தோற்ற நிலையில்
உண்மையாகவும் நமது கற்பனைகளின்
தொகுப்பாகவுமிருக்கிறது. இருட்டை
அழிக்க வெளிச்சம் தேவைப்படுவது
போல, மாயையை அழிக்க நமக்கு
விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
அப்படி இல்லையென்றால், மாயை நம்மை
அழித்துவிடும்
> நமது வேதகால கலாச்சாரத்தில் இருந்த பாரம்பரிய குருகுல கல்வி முறையானது, இன்றிருக்கும் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது.
பாகவதத்தில் ஒரு சின்ன கதை.
நாரதர், விஷ்ணுவின் தீவிர பக்தர். அவர் எப்போதும் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்பார், வேறு எதைப்பற்றியுமே சிந்திக்க மாட்டார். ஒரு சமயம், தாம்தான் மிகவும் சிறந்த பக்தர் என்ற அஹங்காரம் அவருக்குள் ஏற்பட்டு விடுகிறது. சில சமயங்களில் இது எல்லாப் பக்தர்களுக்குள்ளும் நடக்கும்.
ஓர் உண்மையான குருவான விஷ்ணு இதைப் பார்த்தார். அவர் நாரதரை அழைத்து, "எனக்கு ஒரு குடம் தண்ணீர்கொண்டு வா," என்றார்.
நாரதரும் தண்ணீர்கொண்டு வருகிறேன் என்று மறைந்து விட்டார். ஒரு வீட்டு முன்னால் தோன்றிய நாரதர், அங்குத் தண்ணீர் கேட்டார். அந்த வீட்டிலிருந்து, ஓர் அழகான இளம் பெண் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். பார்த்த உடனேயே, அந்தப் பெண் மீது காதல் வயப்படும் நாரதர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.
ஒருநாள் அங்கு ஒரு பெரிய புயல் வீசியது. அவருடைய வீட்டைச் சுற்றியும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. நாரதரும், அவரது குடும்பத்தார்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லும் வெள்ளம் நாரதரையும் அவர் குடும்பத்தையும் பிரித்து விடுகிறது. குடும்பத்தை இழந்த நாரதர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தார். உதவி கேட்டுக் கத்த ஆரம்பித்தார்.
அப்போது திடீரென்று, "நாரதா, எங்கே நான் கேட்ட தண்ணீர்? உனக்கு என்ன ஆனது?" என்று ஒரு குரல் கேட்டது. அப்போது நாரதர் ஓர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் விழித்துக் கொண்டார். தம் முன்னால் சிரித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவைப் பார்த்தார்.
விஷ்ணு சொல்கிறார், "என்னுடைய தீவிர பக்தர்களும்கூட, மாயையில் இருந்து தப்பிக்க முடியாது!" மனம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை யாருமே மாயையிலிருந்து தப்பிக்க முடியாது.
குருகுலம்: ஜீவனின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கல்விமுறை
கேள்வி: ஸ்வாமிஜி, கிழக்கத்திய பாரம்பரிய கல்விமுறை அல்லது மேற்கத்திய கல்விமுறை என எதுவாக இருந்தாலும் சரி, அது அறிவுக்கு முக்கியத்துவம் தருகிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்தக் கல்வி, மகிழ்ச்சியான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லையே... ஏன்?
நமது வேத காலக் கலாச்சாரத்தில் இருந்த பாரம்பரிய குருகுல கல்வி முறையானது, இன்றிருக்கும் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. அதற்கு எந்த ஒரு வியாபார நோக்கமும் கிடையாது. அதுவொரு ஆன்மீகப் பயணமாக இருந்தது.
புத்தக அறிவை மட்டும் திணிக்கும் வெறும் ஒரு ஆசிரியராக மட்டும் குரு இருக்கவில்லை. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவரே முன் உதாரணமாக, ஓர் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்.

நமது கல்விமுறையின் தரத்தை,
இந்தியாவிலும்கூட, நாம் குறைத்துவிட்டோம்.
விழிப்புணர்வூட்டும் ஒரு கருவியாக இருந்த
குருகுல கல்விமுறையை நீக்குவதன் மூலமாக
மட்டும்தான் இந்த மக்களை ஆள முடியும்
என்பதால், காலனி ஆட்சியின்போது
பிரிட்டிஷ்காரர்கள் இந்த குருகுல
கல்விமுறையை அழித்துவிட்டார்கள்.
அதற்கு மாற்றாக அவர்கள், நமது புத்தியை தற்போது ஆக்கிரமித்திருக்கும் தர்க்க ரீதியான, விஞ்ஞானரீதியான கல்வி முறையைப் புகுத்தினார்கள்.
சந்தோஷம் என்பது நிரந்தரமான
அனுபவமாக இருக்க வேண்டுமானால்,
தார்க்கம் ஒருபோதும் சந்தோஷத்தைத் தராது.
தார்க்கம் மனத்திலிருந்து வருகிறது. நம்முடைய மனம் புலன்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு உணர
முடியாத, நடைமுறைக்கு சாத்தியப்படாத
கருத்தல்ல. மனம், உடல், ஆன்மா இவற்றின்
முழுமையான ஆரோக்கியம்தான் ஆன்மீகம்.
> இதயத்தை
> ஆழமான
> நம்பிக்கையுடன்
> திறந்து வைப்பதன்
> மூலமாக
> நீங்கள்
> ஞானத்தைக்
> கற்றுக்கொள்ளலாம்.
மனத்தால் கட்டுப்படுத்தப்படுபவர்களாக நாமிருக்கும்வரை நம்மால் சந்தோஷத்திற்குள் நுழைய முடியாது. மனத்தைக் கடந்து சென்றால் மட்டும்தான் சந்தோஷத்தை அடைய முடியும். புலன்களைக் கடந்து சென்றால் மட்டும்தான் சந்தோஷத்தை அடைய முடியும்.
மனத்தையும் புலன்களையும் கடந்து செல்ல வேண்டுமானால், ஒருவர் தார்க்கத்தை விட்டுவிட வேண்டும்.
ஆன்மீகம் என்பது ஞானம் சம்பந்தப்பட்டது. ஆனால் தார்க்கம் என்பது அறிவு சம்பந்தப்பட்டது.
ஞானம் அவ்வளவு எளிதில் கிடைக்காது, ஆனால் அறிவுாதாரணமாக கிடைத்துவிடும். அறிவு எல்லா இடத்திலும் கிடைக்கும். புத்தகங்களில் இருந்து, பள்ளிக்கூடத்தில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்று எல்லா இடத்திலிருந்தும் அறிவை நாம் சேர்க்கிறோம். அது வெறுமனே தகவல்களை நமது உயிரி -கம்ப்யூட்டருக்குள், அதாவது மூளைக்குள் தள்ளும் ஒரு சாதாரண செயல்முறையாக மட்டுமே இருக்கிறது.
மூளை அதையெல்லாம் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. மூளை ஒரு சிக்கலான கருவியாக இருக்கிறது. மூளையைப் போன்று சிக்கலான வகையில் செயல்படும் ஒரு கம்ப்யூட்டரை மனிதர்கள் இன்னும் உருவாக்கவில்லை.
உலகம்முழுவதும் உள்ளநூலகங்களில் இருக்கும் அத்தனைதகவல்களையும் ஒரே ஒருவரின் மூளை செல்களில் அடக்கிவிட முடியும். இருந்தாலும்

அந்த அறிவால் அவருக்குள்
எந்தவித உணர்வுமாற்றத்தையும்
ஏற்படுத்திவிட முடியாது. அவர்
அந்த அறிவைப் பெறுவதற்கு முன்
எப்படி இருந்தாரோ அப்படியேதான்
இருப்பார்!
ஆனால் இருப்புத் தன்மைக்குள்
நிகழும் மாற்றத்தால், வளர்ச்சியினால்
ஞானம் நிகழ்கிறது.
மனத்தின் வளர்ச்சியிலிருந்து அறிவு வளர்கிறது.
அதனால் அறிவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், ஆழமாக ஞானத்திற்குள் செல்லுங்கள். அறிவைக் கற்றுக் கொடுப்பது போல, ஞானத்தைக் கற்றுத்தர முடியாது. ஆனால் காற்றுக்கும் மழைக்கும், சூரியனுக்கும் ஒட்டுமொத்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் உங்கள் இதயத்தை ஆழமான நம்பிக்கையுடன் திறந்து வைப்பதன் மூலமாக நீங்கள் அதைக் கற்றுக்கொள்ளலாம்.
அப்படித் திறந்து வைப்பதன் மூலமாக மட்டும்தான், ஞானம் வளரும். அனைத்திடமும் சரணடைந்த நிலையில், முற்றிலுமாக இதயத்தைத் திறந்து வைக்கும் போதுதான், ஒருவரால் அனைத்தையும் பார்க்க முடிகிறது. அவர் தொடர்ந்து இருட்டுக்குள் இருப்பதில்லை.
சேவை மனப்பான்மையை வளர்க்கும் குருகுலம்
பிறருக்கு
நாம்
சேவகர்களாக
மாறும்போதுதான்
நாம் உண்மையான
சந்தோஷத்தை
அனுபவிக்கிறோம்.
மனிதர் ஒரு தலைவராக மாற முயற்சி
செய்கிறார். தொடர்ந்து ஒரு மாணவராகவே
இருக்க அவருக்குப் பிடிக்கவில்லை.
தலைவராக மாற, சக்தி மற்றும், செல்வாக்கு
ஆகியவற்றை அடைய அவர் வாழ்க்கை
முழுவதும் முயற்சி செய்கிறார். பலசாலியாக
மாற, புகழை அடைய அல்லது ஒரு பெரிய
சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் பணத்தைத்
திரட்ட ஓடுகிறார்.
இதுதான் உலக மக்களின் முயற்சியாக இருக்கிறது. இப்படித்தான் மாவீரர் அலெக்ஸாண்டரும் முயற்சி செய்தார்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு வாழ்க்கை அணுகுமுறையும் இருக்கிறது.
புத்தர் அல்லது இயேசுவின் வாழ்க்கையைப்
பாருங்கள். அவர்கள் இந்த உலகத்திற்குத்
தலைவர் ஆக விரும்பவில்லை. அதற்கு
மாறாக அவர்கள் இந்த உலகத்திற்கு
சேவகர்களாக ஆக முயற்சி செய்தார்கள்.
இருப்புத் தன்மைக்குள்
நிகழும் மாற்றத்தால்,
வளர்ச்சியினால்
ஞானம் நிகழ்கிறது.
ஒர் ஆச்சரியம், ஒரு முரண்பாடு என்னவென்றால், அலெக்ஸாண்டர் ஒரு பிச்சைக்காரரைப் போல இறக்கிறார். ஆனால் பிச்சைக்காராக இருந்த புத்தர் ஒரு பேரரசரைப் போல வாழ்ந்து, ஒரு பேரரசரைப் போலவே இறக்கிறார்.
இதிலிருக்கும் முரண்பாடு என்னவென்றால், தலைவர்களாக ஆக விரும்புபவர்கள் சேவகர்களாக ஆகி விடுகிறார்கள். சேவகர்களாக ஆக விரும்புபவர்கள் தலைவர்களாக ஆகி விடுகிறார்கள்.
தர்க்கவாத கல்வி, நாம் தலைவர்களாக வேண்டும் என்பதைப் போதிக்கிறது. ஏனென்றால் அதனால் அப்படித்தான் பார்க்க முடியும். இதை நோக்கித்தான், படிப்படியாக, தர்க்கம் நம்மை அழைத்துச் செல்ல முடியும். புலன்களால் பார்க்கப்படும் வரையறைக்குள்தான் அந்தக் கல்வி இருக்கும்.
இந்த உலகத்தில் பொருள் ரீதியாக நாம் எப்படி வெற்றி அடைவது என்பதைக் கற்றுக் கொடுப்பதுதான் நமது கல்விமுறையாக இருக்கிறது.
நமது மகிழ்ச்சியின் அளவுகோல், நாம் வைத்திருக்கும் உடைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
நாம் எவ்வளவு பொருள் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சி வரையறுக்கப்படுகிறதே ஒழிய, நாம் மகிழ்ச்சியை அனுபவிப்பதைப் பொறுத்தோ அல்லது நாம் பயனடைவதைப் பொறுத்தோ அது வரையறுக்கப்படுவது இல்லை. இதுபோன்ற தர்க்கவாத கல்வியைத் தாண்டிச் சென்றால் மட்டும்தான், நம்மால் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியும். அப்பொழுது மட்டுமே 'துறத்தல்' மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர முடியும். கட்டுப்பாடுகளைத் துறத்தல், பற்றுகளைத் துறத்தல், நமது மனக்கட்களை, உணர்வுப்பூர்வமான கட்டுக்களைத் துறத்தல் - இப்படிப்பட்ட துறத்தல்களினால் மட்டுமே நம்மால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
பிறருக்குச் சேவை செய்வதில்தான் நம்முடைய சந்தோஷமே இருக்கிறது, பிறருக்கு நாம் சேவகர்களாக மாறும்போதுதான் நாம் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கிறோம்.
நம்முடையதற்போதைய கல்விமுறை,இதைக்கற்பிக்க நமக்குஉதவாது.இந்த அமைப்புமுறையை நாம் மாற்ற வேண்டும், அதுதான் நமக்கு உண்மையான சந்தோஷத்திற்கான வழியைக் காட்டும்.
