KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/ஒவ்வொரு நொடியும் கடவுளுடன் வாழ்கிறேன்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

ஒவ்வொரு நொடியும் கடவுளுடன் வாழ்கிறேன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு வெறுங்கருத்து; உங்கள் சிந்தனையில் உதித்த ஒரு எண்ணம். அதுவும் உங்கள் மனத்தின் மற்றொரு விளையாட்டுதான். நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்துத்தான், அவரைப் பற்றி பல்வேறு கருத்துகளை உருவாக்குகிறீர்கள்; அவரை உணர்ந்தோ அல்லது அவரைப் பார்த்தோ கருத்துகளை நீங்கள் உருவாக்குவதில்லை.

உங்களின் ஒரு நண்பரைப் பற்றியோ அல்லது உறவினரைப் பற்றியோ நீங்கள் எப்படிப் பேசுவீர்களோ, அதே போலத்தான் கடவுளைப் பற்றியும் பேசு கிறீர்கள். உண்மையில், அந்த இடத்தில் அந்த நேரத்தில் உங்களின் விருப்பம் என்னவோ, அதைச் சார்ந்துதான் ஆர்வத்துடனோ அல்லது ஆர்வம்யில்லாமலோ பேசுகிறீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை உங்களின் உடல் -மனத்துடனான உங்களின் அடையாளம்தான் உண்மை; உங்களின் தனித்துவம்தான் உண்மை. அதுதான் நீங்கள்! இந்த அடையாளம் இல்லையென்றால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். உங்களை ஒருவர் மதிக்கவில்லை என்றாலும்க்கூட, நீங்கள் துக்கப்படுவீர்கள்.

> ஞானிகளுக்குக்
> கடவுள்தான்
> ஸத்யம்.
> ஒவ்வொரு நொடியும்
> அவர்கள்
> கடவுளுடன்தான்
> வாழ்கிறார்கள்.

உங்களை யாராவது புகழ்ந்தால், உடனே சொர்க்கத்தில் மிதப்பீர்கள். உங்களின் அடையாளம் மட்டும்தான் உங்களுக்கு நிஜமாகத் தெரிகிறது. ‘நான்’ என்ற உணர்வுதான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

எனக்குக் கடவுள்தான் ஸத்யம். ஒவ்வொரு நொடியும் நான் கடவுளுடன் வாழ்கிறேன்.

உடல், மனம், உடல் -மன அடையாளம் எதுவும் எனக்குக் கிடையாது. அது ஒரு கருத்து அவ்வளவுதான்! ஆகவே, என்னை நான் குறிப்பிடும்போது, இந்த உடல் -மனத்தைக் குறிப்பிடும்போது, நீங்கள் அதை எவ்வாறு குறிப்பிடுகிறீர்களோ, அவ்வாறே நானும் குறிப்பிடுகிறேன். நானும் அதை ஸ்வாமி என்றோ அல்லது வேறு எந்தவிதத்திலோ குறிப்பிடுகிறேன்! இறைவனின் அனுமதியில்லாமல், பரப்ரம்ம கிருஷ்ணரிடமிருந்து அனுமதி இல்லாமல் என்னால் ஒரு விரலைக்கூட நகர்த்த முடியாது.

"இது முட்டாள்தனமாக இருக்கிறது. தாம் ஞானமடைந்து விட்டதாகவும் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும், இறைவன் சொல்வதை மட்டும்தான் அவரால் செய்ய முடியும் என்றும் சொல்கிறாரே," என்று நீங்கள் நினைக்கலாம்.

இது முட்டாள்தனமானதோ, இல்லையோ, இதுதான் ஸத்யம். இதை நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் ஸத்யம்.

இறைவனின்
அனுமதியில்லாமல்,
ஞானிகளால்
ஒரு விரலைக்கூட
நகர்த்த முடியாது.

என்னை நகர்த்துவது, பேச வைப்பது, பார்க்க
வைப்பது, நீங்கள் செய்வதை எல்லாம்
என்னையும் செய்ய வைப்பது எது? பிரபஞ்ச
சக்தி என்ன சொல்கிறதோ, அதைத்தான்
நான் செய்கிறேன்.

என் பக்தர்களுக்குத் தெரியும் - என்னை ஆழமாக நம்புபவர்கள் யாராவது பிரச்சினை என்று வந்தால், "நான் பார்த்துக்கொள்கிறேன்," என்று சொல்லுவேன்.

அந்த ஆழ்ந்த நம்பிக்கையை இன்னும் பெறாதவர்கள் வந்தால், நான் உங்களுக்காகத் தியானிக்கிறேன் என்றோ அல்லது உங்களுக்காக ஆனந்தேச்வரரிடம் பிரார்த்திக்கிறேன் என்றோ சொல்லுவேன்! அதைக் கேட்டு அவர்கள் சந்தோஷமாகப் போவார்கள்.

நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும்பொழுது, நான் அதிலொன்றும் சிறப்பாகச் செய்ய வேண்டியதிருக்காது. நான் அதை அப்படியே வெறுமனே பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைத்து விடுவேன்.

அவள்தான் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரபஞ்ச சக்தியிடம் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அவள் கடமையைச் செய்வாள்! மற்றது தானாகவே நடக்கும்.

இந்தச் சக்தியால் செய்ய முடியாது என்ற ஒன்றே இல்லை

ருத்ராக்ஷ மாலை, வெறும் சாதாரண மாலையில்லை என்பது அதை அணியும் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களை நேரடியாக இறைவனோடு இணைக்கும். ஹாட்லைன் (Hot Line) நிறைய பேர், இந்த மாலையினால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

யாருக்காவது, மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், நம்பிக்கை இழந்த நிலையில் உதவி தேவைப்படும்போதுகூட, அவர்கள் இந்த ருத்ராக்ஷ மாலையைப் பிடித்துக்கொண்டு பிரார்த்தித்தாலே போதுமானது. உடனே நேரடியான பலன் அவர்களுக்குக் கிடைக்கிறது.

மாலைப் பிடித்துக்கொண்டு நீங்கள் என்னையே நினைத்தாலும்கூட, இதில் என்னோடு சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றுமே இல்லை. இது இறைவனோடு சம்பந்தப்பட்டது.

எனது தவத்தால்தான் இது எல்லாமே நடந்தது என்று நான் நினைத்தாலும் போதும், உடனே அது நடப்பவற்றை நிறுத்திவிடும்!

‘நான்’ என்ற ஒன்றால் செய்ய முடிந்தது என்று ஒன்றுமே இல்லை! இந்தச் சக்தியால் செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை!

இதைத்தான் இங்கு ஸத்குரு கிருஷ்ணர் சொல்கிறார். "நீ எதைப் பார்க்கிறாயோ, நான் அதுவல்ல. வெளிப்படுத்தப்பட்டுள்ள சக்தி நான் அல்ல,'' என்கிறார்.

இதையெல்லாம் மயிலிறகை வைத்துக்கொண்டு, புல்லாங்குழலோடு இருக்கும் ஆறடி உயர கிருஷ்ணர் செய்வதில்லை. இதையெல்லாம் வஸுதேவனின் மகனாக உடல் தரித்திருக்கும் வாஸுதேவ கிருஷ்ணருக்குப் பின்னால் இருக்கும் வடிவமற்ற சக்திதான் செய்கிறது. இதையெல்லாம் அந்தப் பரப்ரம்ஹ கிருஷ்ணர் (பிரபஞ்ச சக்தியாக உள்ள கிருஷ்ணர்) செய்கிறார்.

நாம் ஒரு நெக்லஸை அல்லது ஒரு நகையைப் பார்க்கும்போது, நாம் அந்த நூலிழையைக் கவனிக்கிறோமா? முத்து அல்லது வைர நெக்லஸ், எதுவாக இருந்தாலும், நாம் அதைத் தங்க நூலிழையில் கோர்க்கிறோம். ஆனால் அந்த நூலிழையை எப்போதாவதுதான் கவனிக்கிறோம்.

A pearl necklace

முத்துக்களையும் வைரங்களையும் கண்டு
சந்தோஷப்படுகிறோம். அவற்றை எல்லாம்
கோர்த்து வைத்திருக்கும் நூலிழையைப் பற்றி
ஒருபோதும் நினைப்பதில்லை. அது அறுந்து,
எல்லா முத்துக்களும், வைரங்களும் தரையில்
சிதறும்போதுதான் அதைக் கவனிக்கிறோம்.
அதற்குப் பின்னர், அந்த நூலிழையைக் குறை
சொல்கிறோம்!

கிருஷ்ணர் சொல்கிறார், "நானே கண்ணுக்குத் தெரியாத நூலிழையாக இருக்கிறேன், அது இல்லாமல் எந்த மாலையுமிருக்க முடியாது."

கிருஷ்ணர், அனைத்திலும் தாமே கண்ணுக்குத் தெரியாத சாரமாக இருப்பதாகவும் அதில்லாமல் எந்தப் பொருளுமே இருக்க முடியாது என்றும் சொல்கிறார். தாமே கண்ணுக்குத் தெரியாத சக்தியாக இருப்பதாகவும், அதில்லாமல் பிரபஞ்சமிருக்க முடியாது என்றும் சொல்கிறார்.

இந்தப் பிரபஞ்சம் இயங்குவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா?

நம்முடைய பூமியைப்போல பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான பூமி உருண்டைகள் இருக்கின்றன; லட்சக்கணக்கான, சூரிய மண்டலங்கள், ஆயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள், பல பிரபஞ்சங்கள் அங்கு இருக்கின்றன.

இந்த மொத்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்று என்று ஒன்றை யாராலும் பார்க்க முடிவதில்லை.

நாம் செல்லும் சாலைகளில் போக்குவரத்தைக்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூட, நமக்கு
சிக்னல் விளக்குகளும், போலீஸ்காரர்களும்
தேவைப்படுகிறார்கள். ஆனால் இந்தப்

இந்தப் பால்வெளி
மண்டலத்தில்,
கோள்களையும்
நட்சத்திரங்களையும்
கட்டுப்பாட்டில்
வைத்திருக்க
எந்தப் போலீஸ்காரரும்
இல்லை. இருந்தும்,
அவை குழப்பமில்லாமல்
இயங்குகின்றன.

பால்வெளி மண்டலத்தில், கோள்களையும்
நட்சத்திரங்களையும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்க எந்தப் போலீஸ்காரரும் இல்லை.
ஆனாலும் அவை எந்தவித குழப்பமும்
இல்லாமல் இயங்குகின்றன!

இந்தப் பல பிரபஞ்சங்களைக்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவை
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

சுதந்திரம் தான்
ஒழுங்கமைப்பைக்
க்கொண்டுவரும்.

பொறுப்பான மனிதர் என்று ஒருவர் இல்லாத, குழப்பமான, கூட்டம் நிறைந்த அந்த இடத்தில், இதுபோன்றதொரு ஒழுங்கமைப்பு அல்லது ஒழுக்கமுறை எப்படி ஏற்பட்டது? யாருமே பொறுப்பெடுக்கவில்லை, யாராவது அங்கு பொறுப்பெடுத்திருக்கிறார்களா, என்ன?

ஆனால் இந்தச் சின்ன உடலில் நடக்கும் ஒவ்வொன்றையுமே கட்டுப்படுத்த நாம் பெரும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.

சாப்பிடும் சாப்பாட்டில் கட்டுப்பாடுகொண்டு வருகிறோம், எவ்வளவோ உடற்பயிற்சி செய்கிறோம், எவ்வளவோ விளையாடுகிறோம், இன்னும் என்னென்னமோ செய்கிறோம்.

இருந்தாலும், நம்மால் இந்த உடலைப் பற்றி எதுவுமே சொல்ல முடிவதில்லை.

எல்லா ஒழுங்கமைப்பையும் நாம் கடைப்பிடித்தாலும்கூட, சில சமயங்களில் அங்கு ஏதோவொரு ஒழுங்கற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கிறது!

கட்டுப்பாடுகள் ஒழுங்கமைப்பைக் கொண்டுவராது; அவற்றால் அதை ஒருபோதும்கொண்டு வரமுடியாது. சுதந்திரம்தான் ஒழுங்கமைப்பைக் க்கொண்டுவரும். ஒழுங்கற்ற தன்மைதான் சுதந்திரம்.

ஒழுங்கற்ற தன்மைதான் தேர்ந்தெடுக்கக்கூடியதாகவும்இருக்கிறது.

பிரபஞ்ச சக்தியான கிருஷ்ணர், இறுதி ஒழுங்கற்ற தன்மையாக இருக்கிறார்; அவரே இறுதி ஒழுங்கமைப்பாகவும் இருக்கிறார்!

குறிப்பிட்ட உதாரணங்களுடன் தாம்
முன்னர் சொன்னதையெல்லாம் கிருஷ்ணர்
விளக்குகிறார். பகவத் கீதையில் கிருஷ்ணர்
உபதேசிப்பதன் அழகே அர்ஜுனனுக்கு
எல்லாவற்றையும் எவ்வளவு ஆழமாக
தெள்ளத்தெளிவாக விளக்கப் போகிறார்
என்பதுதான்.

அவர் எந்த ஊகங்களுக்கும்
இடமளிக்கவில்லை, எதையுமே மனம் போன
போக்கில் பொருள்கொள்ளவும் விடவில்லை.
அர்ஜுனன் ஒரு குழந்தை போலவும்
கிருஷ்ணர் ஒரு பெற்றோராகவும்
ஆசிரியராகவும் இருப்பது போலவும்
தோன்றும்.

அர்ஜுனனுக்கு முழுமையாகப் புரிய வைக்க, இந்த ஜகத்குரு எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர் சந்திக்கும் தொல்லைகள் போன்றவை அவரின் ஆழமான கருணையைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பஞ்சபூதங்களில், ஆகாசத்தின் குணமாக ஒலியும், காற்றின் குணமாக தொடுவுணர்வும், நெருப்பின் குணமாக வடிவமும், வெப்பமும், நீரின் குணமாக சுவையும், நிலத்தின் குணமாக மணமும் இருக்கிறது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.

பஞ்சபூதங்களின் அடிப்படை குணமாக அவரே இருப்பதாக கிருஷ்ணர் விளக்குகிறார், மேலும் ப்ரணவ மந்திரமாகவும் (ஓம் எனும் மூல ஒலி), சூரியன் சந்திரனில் இருந்து வெளிப்படும் ஒளியாகவும் அவரே இருப்பதாக சொல்கிறார்.

எந்தவிதமான வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாழ்க்கை இந்தப் பூமியிலோ அல்லது வேறு எந்தப் பூமியிலோ இருந்தாலும் சரி, கிருஷ்ணரின் இந்தப் பிரபஞ்ச சக்தி இல்லாமல் இருக்க முடியாது.

ஆனால் இந்தச் சக்திக்களத்திற்குள்ளேயே வாழும் நாம், இந்தச் சக்தியை உணர மறந்து விடுகிறோம். நாம் சக்தியைப் பற்றிய விழிப்புணர்வற்றவர்களாக ஆகி விடுகிறோம்.

கடவுளையே பிரித்துக் காட்டும் மனித மனம்

ஞானகவி கபீர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், "நாம் எல்லோரும் மீன்களைப் போல வாழ்கிறோம். உயிர் கொடுக்கும் தண்ணீரில் இருந்து கொண்டே, 'தாகமாக இருக்கிறதே' என்று அழும் மீன்களைப் போல இருக்கிறோம்,"

கபீர் சொல்கிறார்: "முட்டாளே, விழித்துக்கொள்! தண்ணீருக்குள் இருக்கும் மீனாக இருந்துகொண்டு நீ தாகத்தோடு இருக்க முடியாது!"

இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.

இராமகிருஷ்ணர், அவர் சீடர் விவேகானந்தரிடம், "நரேந்திரா, (விவேகானந்தரின் தாய்தந்தையர் வைத்த பெயர்), தேவபானமான அம்ரு'தம் நிரம்பிய ஒரு கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஈயாக நீ இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்டார்.

"நிச்சயமாக, நான் அந்த விளிம்பிலிருந்துகொண்டே அதை உறிஞ்சிக் குடிப்பேன்," என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் விவேகானந்தர் உடனடியாகப் பதில் சொன்னார்.

உடனே இராமகிருஷ்ணர் சொன்னார், "முட்டாளே, நீ அந்த கோப்பைக்குள் விழுந்து மூழ்கிவிட வேண்டியதுதானே! உயிர் காக்கும் அம்ரு'தத்தில் மூழ்குவதற்கு நீ ஏன் பயப்பட வேண்டும்."

நாம் பயப்படுகிறோம், எப்போதும் பயந்து கொண்டே இருக்கிறோம். நமக்கு நம்மீதே நம்பிக்கை இல்லை, அதனால்தான், கடவுள் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. இப்போது நாம் கடவுளை எந்த வடிவத் தில் பார்க்கிறோமோ, அந்த வடிவத்தில் இல்லாமல், வேறு ஏதாவது வடிவத்தில் கடவுள் நமக்கு முன்னால் வந்தாரேயானால், நாம் அவருடைய அடையாள அட்டையைத்தான் கேட்போம்!

கிருஷ்ணரை அவரின் மஞ்சள் உடையில்,
அவருடைய புல்லாங்குழலோடு, தலையில்
சொருகிய ஒரு மயிலிறகோடு கற்பனை
செய்து, செய்து நமது அறிவு குறுகிப் போய்
இருக்கிறது.

> நமக்கு நம்மீதே
> நம்பிக்கை இல்லை,
> அதனால்தான்,
> கடவுள் மீதும் நமக்கு
> நம்பிக்கை இல்லாமல்
> இருக்கிறது.

உடல் முழுக்க சாம்பலைப் பூசிக்கொண்டு, கழுத்தைச் சுற்றிய பாம்போடு கிருஷ்ணர் வந்தால், கிருஷ்ணரைப் பின்பற்றுபவர்கள் என்ன செய்வார்கள்? "இது சிவன். நான் சிவனை வழிபடுவதில்லை," என்று சொல்லி கல்லால் அடிப்பார்கள்.

கீதையை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொண்டதாகச் சொல்லும் நபர்களும்கூட என்னிடம், "கிருஷ்ணரே இறுதியானவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அதையே சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். அப்படியிருக்கும்பொழுது என்னால் எப்படிச் சிவனை வழிபட முடியும்" என்று கேட்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்குத்தான் கிருஷ்ணர் ஆழமாகவும் விளக்கமாகவும் சொல்கிறார், "நானே எல்லாமுமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறேன்," என்கிறார்.

அவரே ஆக்குபவர் - பிரஹ்மா, அவரே காப்பவர் - விஷ்ணு, அவரே புதுப்பிப்பவர் - சிவன். கிருஷ்ணர், அவரோ அல்லது இவரோ அல்ல; அவரே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறார்.

Peather illustration

நான்தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறேன்

கேள்வி: பிரபஞ்ச சக்தியைத்தான் கிருஷ்ணர் நூலிழை என்று குறிப்பிடுகிறாரா?

> கிருஷ்ணர்,
> அவரோ அல்லது
> இவரோ அல்ல;
> அவரே
> எல்லாமுமாகவும்
> எல்லாவற்றிற்கும்
> மேலாகவும்
> இருக்கிறார்.

உருவகமாகச் சொல்வதானால், நிச்சயமாக அதுவேதான். தெரிந்தோ தெரியாமலோ, அணுசக்தி அல்லது குவாண்டம் இயற்பியலின் (Quantam Physics) சமீபத்திய ஆராய்ச்சிகள், ஸ்ட்ரிங் தத்துவம் (StringTheory) என்ற இந்தக் கோட்பாட்டை ஒப்புக்கொள்கின்றன.

துணை அணுத்துகள்களின் (Sub Atomic
Particles) இறுதி வெளிப்பாடுகளில்,
அதாவது நுண்மையிலும், நுண்மையான

துகள்களில், மெல்லிய நூல் போன்ற இழை
காணப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
இதை அவர்கள் அணுக்கள் என்றோ,
அலைகள் என்றோ சொல்லவில்லை, மாறாக
‘ஸ்ட்ரிங்ஸ்’ என்கிறார்கள்.

இந்த ஸ்ட்ரிங்குகள் தொடர்ந்து நகர்ந்து
கொண்டிருக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட
நேரத்திலும் அவை ஒருநிலையான
இடத்தில் இருப்பதில்லை. அவற்றில் பல
சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. அவை
கணக்கில் அடங்காதவையாக இருக்கின்றன.
இந்த ஸ்ட்ரிங்குகள் இந்த எல்லையில்லா
அனைத்து சாத்தியக்கூறுகளின்
இணைப்புப்பாலமாக இருக்கின்றன.

சிலர் இதைப் பத்தாவது பரிமாணம் என்கிறார்கள்.

மேலும் பல பரிமாணங்கள் இருப்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை!

அதுதான் கிருஷ்ணர்.

சாத்தியக்கூறுகளின் தொகுப்பாக அவர் இருக்கிறார். எல்லையில்லாச் சாத்தியக்கூறுகளின் தொகுப்பாகவும் அவரே இருக்கிறார்.

துணை அணுத் துகள்கள் (Sub Atomic Particles) பற்றி விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்களோ, அது அப்படியே பிரபஞ்ச சக்திக்கும் பொருந்தும். ஏனென்றால் சக்தியும் பருப்பொருளும் காலத்தாலும் இடத்தாலும் ஒன்றே என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டோம்.

அலைவரிசை நம் புலன் உணர்வுகளின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் அல்லது பார்வைக்கு உட்பட்டு இருந்தால், அதை நாம் பருப்பொருளாகப் பார்க்கிறோம். ஆனால் அதுவே இந்த எல்லையைவிட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ போகும்போது, நாம் அதை சக்தியாக உணர்கிறோம், அவ்வளவுதான்.

கிருஷ்ணர், அர்ஜுனனால் பார்க்க முடிந்த அலைவரிசைக்கு தம்மைத்தாமேகொண்டு வரும்போது, அர்ஜுனன் அவரைத் தமது ஆத்ம

நண்பராகவும் ஆலோசகராகவும் பார்க்கிறார்.
கிருஷ்ணர் அவரின் பிரபஞ்ச சக்தி
வடிவத்திற்குள் நுழைந்த உடன், கிருஷ்ணரின்
சக்தியை உணர்வதற்கு அர்ஜுனனுக்கு
மூன்றாவது கண் தேவைப்படுகிறது.

அந்த நூலிழை எப்போதும் அங்கு
இருக்கிறது. அந்த நூலிழை இல்லாமல்,
அங்கு எந்த ஒருங்கிணைந்த பருப்பொருளும்
இருக்க முடியாது. அந்த நூலிழை தெரிகிறதா
இல்லையா என்பது அவரவர் அக உணர்வு
மட்டத்தைப் பொறுத்தது.

உணர்வு மலர்ந்த உண்மையான ஒரு யோகி, அந்த நூலிழையைப் பற்றிய விழிப்புணர்வுடன்தான் எப்போதுமே இருக்கிறார். அந்த யோகி தொடர்ந்து அந்த நூலிழையின் மீதுதான் தியானம் செய்கிறார்.

அவருக்கு நூலிழை மட்டுமே தெரியும். நூலிழையைச் சுற்றி இருப்பவற்றைப்பற்றியோ அந்த நூலிழையில் இணைந்திருப்பவற்றைப் பற்றியோ அவர் கவலைப்படுவதில்லை. அவற்றுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நாம் நூலிழையைப் பிடித்துக்கொண்டால், மற்றது எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சில சமயம், பக்தர்களிடம் சொல்வேன், "சரி, நீங்கள் நூலிழையைப் பிடித்து விட்டீர்கள்."

அது ஒரு சாதாரணமான கருத்து என்று எண்ணி விடாதீர்கள். அவர்கள் நிஜமாகவே ஒரு குறிப்பிட்ட கருத்துக்குப் பின்னால் இருக்கும் சக்தியைப் புரிந்துகொண்டு விட்டார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின் ஸத்யத்தை உணர்ந்து விட்டார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். மற்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள்தான், அதற்கு அர்த்தமில்லை.

ஸூத்ரம் எனும் இந்த நூலிழையை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்தான், ஸூத்ரதாரி, கட்டுப்படுத்துபவர். கிருஷ்ணர்தான், இறுதியான ஸூத்ரதாரி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நிஜமாகவே கட்டுப்படுத்துபவர் அவர் ஒருவர் மட்டும்தான்.