நானே நூலிழை!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

7.6 என்னுடைய இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன்.
7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாக எந்த ஸத்யமும் இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல, என்மீதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன.
7.8 ஒ குந்தியின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; சூரியன், சந்திரர்களின் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மந்திரங்களில் புனிதமான ‘ஓம்’ என்ற மந்திரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.
7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பில் வெப்பமாக நானே இருக்கிறேன். எல்லா உயிர்களின்
வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன்.
கிருஷ்ணர், "நான்தான் நூலிழை," என்கிறார். அதாவது ஸூத்ரம் நுட்பம், இதில்நான் எல்லாப் படைப்புகளும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. என்னவொரு அருமையான ஒப்புமை பாருங்கள்! அதனால்தான், அவர் ஸூத்ரதாரியாக இருக்கிறார்.
அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் பிரபஞ்ச நாடகத்தின் இயக்குனராகவுமிருக்கிறார்! அவர் இல்லாமல் எதுவும் அசையாது, எதையும் அசைக்கவும் முடியாது. அவருடைய சக்தி இல்லாமல், எதையும் படைக்கவோ, காக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது.
> கிருஷ்ணர் என்கிற நூலிழையில்தான் எல்லாப் படைப்புகளும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அவர் ஸூத்ரதாரியாக இருக்கிறார்.
நிறைய பேர் என்னிடம், "உங்களை நீங்களே ஏன் ஸ்வாமி என்றழைத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்துகொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் உங்களையே புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்பார்கள்.
நான், இந்த உடலோடு என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. இந்தத் தோல்கூட எனக்கு அன்னியமானதுதான். இந்தத் தோலுக்கும் உடலை மூடியிருக்கும் பிற பொருட்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் இதில் என்ன இருக்கிறது?
நீங்கள் எப்படி என்னைப் பார்க்கிறீர்களோ, அதுபோலத்தான் ஒரு சாட்சியாக இருந்து நான் என்னைப் பார்க்கிறேன்! அல்லது நீங்களும், நானும் ஒரு சிலையை எப்படிப் பார்ப்போமோ அப்படித்தான் பார்க்கிறேன்.
உடலுக்கு அழகாக ஆடை அணிவிக்கப்பட்டால் நீங்கள் எப்படிச் சந்தோஷப்படுவீர்களோ, அதே போலதான் நான் சந்தோஷப்படுகிறேன், அவ்வளவுதான். நான் ஒரு சாட்சி மட்டுமே!