அது தனித்த பாதை... அங்கு நீங்கள் சுயநலவாதிகளாக வேண்டும்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தலைசிறந்த ஞானியான ஆதி சங்கரர், அவரின் பஜ கோவிந்தம் என்ற பாடலில் மிக அழகாகச் சொல்கிறார், கா தே காந்தா கஸ்தே புத்ராம் அதாவது, "நீ மரணம் அடையும்பொழுது உன் மனைவி எங்கே, உன் குழந்தைகள்தான் எங்கே?''
நீ தனியாகத்தான் விடப்படுவாய். நீ தனியாகத்தான் வந்தாய், தனியாகவே போகப் போகிறாய். உன்னை மிகவும் அன்பாக நேசித்த உன் மனைவியும்கூட, உன் உடல் குளிர்ந்து விட்டால் உன்னைக் கண்டு பயப்படுவாள்.
நமக்குத் தெரிந்த எல்லா வகையான அன்பும், கட்டுறுமனப்பாங்கே.
கடவுளின் அன்பும், குரு காட்டும் அன்பும் மட்டுமே உண்மையான அன்பாக இருக்கிறது.
இந்த மாதிரியான அன்பு எல்லையில்லாக் கருணையிலிருந்து வருகிறது. அது பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. கடவுளுக்கும் நம் குருவிற்கும் நாம் எதைக் கொடுக்க முடியும்?
அவனால் நாம் ஸத்யத்தைப் பின்பற்ற நினைப்போமேயானால், நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும். நாம் சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும். 'தன்னை உணர்தல்' என்ற பாதைக்குள் நாம் நுழைய வேண்டுமானால், நாம் சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், இது இயற்கையான பொருள்சார்ந்த தேவையின் காரணமாகப் பிறக்கும் சுயநலம் போன்றதில்லை. 'சுயம்' இல்லாமல் இருக்கவேண்டுமென்கிற துணிச்சலான விருப்பத்திலிருந்து பிறக்கிற 'சுயநலம்' இது!
நாம் நமது மையத்தை அல்லது மூலத்தை எட்டும்போது, நாம் மனித இனத்தோடு ஒன்று கலக்கிறோம். அதற்குப் பின்னர், நம்மிடையே எந்த வித்தியாசமுமிருப்பதில்லை.
மிருகங்களுக்கும்
தாவரங்களுக்கும்கூட
அறிவு இருக்கிறது;
அவற்றுக்கு
உணர்வுகளும்
இருக்கின்றன.
அதனால்தான் நம்மை நாம்
உணர்ந்துகொள்வது, நமது வாழ்க்கைத்
துணைக்குக்கூட பிடிப்பதில்லை, ஏனென்றால்
அதற்குப் பிறகு அவர்களால் நம்மை உரிமை
கொண்டாட முடிவதில்லை.
அந்த நிலையில், அவர்கள் நம்மை
மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள
வேண்டியதிருக்கும். தன்னை உணர்தலினால்
வெளிப்படும் அன்புக்கு எல்லையே
கிடையாது என்பதை அவர்களால்
புரிந்துகொள்ள முடியாது. பகிர்வதனால்
அன்பு குறைவதில்லை, மாறாக பகிர்வதனால்
மட்டுமே அன்பு வளர்கிறது.
தன் னை உணர்தலுக்கான பாதை என்பது தனித்த பாதை. அது ஒரு தனிமையான பாதை அல்ல; அது ஒரு 'தனித்த' பாதை. நாம் தனித்திருக்கும்போது, நாம் தனியாக இருப்பதில்லை. நாம் எல்லாவற்றுடனும் ஒன்றாகும் இருக்கிறோம்; 'தனித்த' என்பது அதைத்தான் குறிக்கிறது.
பகுதியாக இருந்த ஒரு நிலையிலிருந்து, நாம் முழுமையாக மாறுகிறோம். தனித்தனி தீவுகளாக இருந்த ஒருநிலையிலிருந்து, நாம் பிரபஞ்சமாக மாறுகிறோம்.
இந்த அறிவைத்தான் கிருஷ்ணர் மனித இனத்திற்குக் கொடுக்கிறார். அவர் ஆழ்ந்தகருணையோடு சொல்கிறார், "நான் சொல்வதைக் கேள். உன்னை நீயே உணர்ந்துகொண்டு, சுதந்திரம் அடைவாயாக!" கோடிக்கணக்கானவர்களில் யாரோ ஒருவர்தான் அவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவ்வழியில் நடக்கிறார்.

## உங்களிடமிருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம்
"இந்த வழியில் நடக்கத் தொடங்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் மட்டும்தான் முடிவாக தம்முடைய சுயத்தைக் காண்கிறார். இவ்வாறுதான் அவர் என்னைக் காண்கிறார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இந்தப் பாதை அவ்வளவு கடினமானதா? இல்லை, அது மிகவும் கடினமானது இல்லை. பின் ஏன் அது மிகவும் கடினமான பாதையாகத் தெரிகிறது? புற உலகை நாம் மிகவும் கவர்ச்சிகரமாகப் பார்க்கிறோம். நம்மை நாம் கண்டறிவதற்கான நமது உள்முகப் பயணத்தில், எப்போதாவதுதான் நிலைபெறுகிறோம்.
மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டு, மாற்றத்திற்கான பாதையில் அடியெடுத்து வைக்காமல் நாமிருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நமக்குச் சுலபமாக இருக்கிறது.
சாப்பிடுவதில் சுயக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு பல நிறங்களில் மாத்திரைகளை விழுங்குவது நமக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.
புத்தர், நமது மனத்தை எப்போதும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் தாவிக் கொண்டே இருக்கும் குரங்கோடு ஒப்பிடுகிறார்.
ஆனால் விலங்குகளுக்குக் குரங்கு மனம் இல்லை, அவ்வளவு ஏன், குரங்குகளுக்கேகூட குரங்கு மனம் இல்லை! இதில்தான் நாம் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறோம்.
மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட அறிவு இருக்கிறது; அவற்றுக்கு உணர்வுகளும் இருக்கின்றன.விஞ்ஞான பரிசோதனைகள் இதை மிகத் தெளிவாக நிரூபித்திருக்கின்றன.
மிருகங்களும், மற்ற உயிரினங்களும் இயற்கையோடு ஒன்றியிருக்கின்றன. அவற்றுக்குப் பசிக்கும் போதுதான் அவை சாப்பிடுகின்றன! சோர்ந்து போகும் போது தான் அவை தூங்குகின்றன. அதனால்தான், அவற்றுக்கு குளிர்சாதனப்பெட்டியோ, கடிகாரமோ தேவைப்படுவதில்லை!
ஆனால் மனிதர்களிடம் ஒரு சக்தி வாய்ந்த
ஆயுதமிருக்கிறது, அதைக்கொண்டு அவர்கள்
தங்களைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளவும்
முடியும், அழித்துக்கொள்ளவும் முடியும்.
ஆனால் அவர்கள் எல்லோருமே இயற்கைக்கு முரணாகவே செயல்படுகிறார்கள். இதில்
> ஞானியைத்
> தொடர்ந்து செல்ல
> வேண்டும் என்றால்,
> அவரை நாம்
> புரிந்துகொள்ள
> வேண்டிய
> தேவையிருக்கிறது.
அவர்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை.
அதனால்தான், அவர்களுக்கு அலாரம்
அடிக்கும் கடிகாரங்களும், மற்றப்
பொருட்களும் தேவைப்படுகின்றன.
கீதை முழுவதும், கிருஷ்ணர் எவ்வாறு
மனத்தைக் கட்டுப்படுத்துவது என்றுதான்
பேசுகிறார்.
எதைச் செய்ய வேண்டும், எதைச்
செய்யக்கூடாது என்ற திட்டவட்டமான,
ஆழமான செய்திகளைக் கொடுத்துக்
கொண்டே இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்தப் பிரபஞ்ச ஞானியின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது மட்டும்தான். அப்பொழுது மட்டுமே சந்தேகமே இல்லாமல், நிச்சயமாக நாம் அந்த ஆயிரத்தில் ஒருவராகவோ அல்லது கோடிக்கணக்கானவர்களில் ஒருவராகவோ மாற முடியும்.
ஞானியைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பஞ்சபூத சக்திகளிடமிருந்து, நேரடியாகச் சக்தியைப் பெற முடியும்...
கிருஷ்ணர், தாம் யார் என்பதை இந்த ஸ்லோகங்களில் விளக்குகிறார். தம்முடைய சக்தி வெளிப்பாடுகளிலிருந்து தம்மைத்தாமே பிரித்துக் காட்டுகிறார். இந்த ஸ்லோகங்களில் இதை மிகத் தெளிவாக விளக்குகிறார்.
வெளிப்படுத்தப்பட்ட சக்திகளாக நாம் கருதும் எட்டு மூலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும், மனம், அறிவு, அஹங்காரம் என்ற மூன்று உள் மூலகங்களும் கிருஷ்ணருடைய சக்திகள் தான்; அதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவை கிருஷ்ணர் இல்லை! இந்து தத்துவ முறைகளான ஸாங்க்யமும், வேதாந்தமும், புருஷ மற்றும் ப்ரக்ரு'தி என்கிற இந்த இரண்டு தத்துவங்கள்தான் பிரபஞ்சத்தை இயங்கச் செய்யும் கோட்பாடுகள் என்று கருதுகின்றன.
வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், புருஷ மற்றும் ப்ரக்ரு'தி ஆகியவை வெளிப்படாத சக்தி ஆதாரங்கள்; புருஷ என்பது செயல்படாத சக்தியாகவும், ப்ரக்ரு'தி என்பது செயல்படக்கூடிய சக்தியாகவும் இருக்கின்றன.
இவை இரண்டும் சேர்ந்து செயல்படத் தொடங்கும்போது, இந்த இரண்டு மூலகங்களில் இருந்துதான் மற்ற அனைத்தும்தோன்றுகின்றன.
ப்ரக்ரு'திதான் (பிரபஞ்ச சக்தி), தனிநபரின் அறிவுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது.
பிரபஞ்ச சக்திதான், பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி பரவியுள்ள ஆகாச' சக்தியை உருவாக்கியது என்று தைத்த்ரேய உபநிஷத் சொல்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக அளவில் பரவியுள்ள, மிகவும் ஸூக்ஷ்மமான சக்தியாக ஆகாச' சக்தி இருக்கிறது. ஆகாச' சக்தியிலிருந்து காற்று உருவாகிறது. காற்று சக்தி அல்லது வாயுதான், நமது உடல் -மன அமைப்பில் நம்மைத் தாங்கிப் பிடித்திருக்கின்ற ப்ராண ச'க்தியை எடுத்து வருகின்ற ஒரு கருவியாக இருக்கிறது. காற்றிலிருந்து அக்னி எனப்படும் நெருப்பு உருவாகிறது. பஞ்சபூதங்களிலேயே கண்ணுக்குப் புலனான முதல் பூதமாக நெருப்பு இருப்பதால், பண்டைய காலத்தில், அதை மிகச் சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கினார்கள். இந்து புராணங்களில் முதன்முதலாக தோன்றிய ரிக் வேதத்தில் நெருப்பை வணங்கியதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
பெரும்பாலும் எல்லாவித வேத சடங்குகளும்,
நெருப்புக் கடவுளுக்காக நடத்தப்பட்டன.
பண்டைய கலாச்சாரங்கள் பலவற்றிற்கு,
இது ஒரு அடிப்படைகொள்கையாகவே
இருந்திருக்கிறது. நெருப்பு, நமது அன்றாட
வாழ்வில் நமக்குத் தேவையான அடிப்படை
வாழ்வாதாரங்களான வெளிச்சத்தையும்
வெப்பத்தையும் அளிக்கிறது.
நெருப்பு சக்தியிலிருந்து ஆபஸ் எனப்படும் நீர் சக்தியும் நீரிலிருந்து ப்ரு'த்வி எனப்படும்

நில சக்தியும் தோன்றின, இந்த நிலத்திலிருந்துதான் தாவரங்களும், புல் பூண்டுகளும், உண்ண உணவும் தோன்றின, இதிலிருந்துதான் மனித உயிர்கள் உருவாயின என்று தைத்த்ரேய உபநிஷத் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகிறது.
பிரபஞ்ச அறிவின் ஒரு சிறு பகுதிதான். மனிதர்களுக்குள் இருக்கும் 'அறிவாக' இருக்கிறது. இந் நிலையோடு சக்தி சுழற்சி முடிவடைகிறது.
இந்த சக்தி மரம், அதன் மிக நுண்ணிய தொடக்கத்திலிருந்து மிகப்பெரிய தோற்றமாக, மரமாக வளர்வதுவரை நடக்கிற கதைதான் படைப்பின் கதையுங்கூட!
மிகப்பெரியதும்,
நுண்மையான சக்தி
ஆதாரமுமான
ஆகασ சக்தியை,
தியானத்தால்
மட்டுமே உள்வாங்க
முடியும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அன்றைய வேத கலாச்சாரத்தில் வாழ்ந்த நமது ஞானிகள் எந்தவிதமான வெளி சாதனங்களின் உதவியும் இல்லாமலேயே, இந்த ஸத்யங்களை உணர்ந்து சொன்னார்கள். அவர்கள் வெளி உலகத்தைவிட உள் உலகில் வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் அவற்றை எல்லாம் உள்ளுணர்வாக உணர்ந்தார்கள்.
nநமது வேத சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் முழுமையான அர்த்தமிருக்கிறது. அவற்றின் அர்த்தங்களை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதால், இன்று அவற்றை பழைய பாணியென்றும், அர்த்தமற்ற செயலென்றும் குறை கூறி, ஒதுக்கித் தள்ளிவிட்டோம். ஆன்மீகம் என்றால் 'உண்மைப்பொருளால் செறிவூட்டப்பட்ட சடங்குகள்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!
சக்தியை ஆகασத்திலிருந்து நிலத்திற்கும், பிரபஞ்ச சக்தியிடமிருந்து தனிமனிதனுக்கும் மாற்றும் முறைகள்தான் அக்னி சடங்குகள்.
மந்த்ரங்களின் மூலம், தூண்டி விடப்படும் ஆகασ சக்தி, காற்றின் வழியாகக் குண்டத்தில் உள்ள நெருப்புக்கு மாற்றப்படுகிறது. பின்னர் நெருப்பு குண்டங்களைச் சுற்றி வைக்கப்படும் நீர்க்குடங்கள் இந்த சக்தியைச் சேகரித்துக் கொள்கின்றன.
பிறகு, இந்த சக்தியூட்டப்பட்ட தண்ணீர் நிலத்தின் மீதும், கடவுள் உருவங்களின் மீதும், தனிமனிதரின் மேலும் தெளிக்கப்படுவதனால் சக்தி அவர்களுக்கு மாற்றப்படுகிறது. பஞ்சபூதங்களில், நிலம், நீர், நெருப்பு, காற்றிலிருந்து நம்மால் நேரடியாகவே சக்தியைப் பெற முடியும். உண்பது, குடிப்பது, சுவாசிப்பது, உடலை வெப்பப்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலம் நாம் இந்த சக்திகளைப் பெறுகிறோம்.
ஆனால் ஆகாச சக்தியை மட்டும் நம்மால்
நேரடியாகப் பெற முடியாது. நமது
அஹங்காரமும், மனமும் இந்த சக்தியைப்
பெறுவதற்கு நமக்குத் தடைகளாக
இருக்கின்றன.
> அஹங்காரத்திற்கும்
> மமகாரத்திற்கும்
> இடையில் இருக்கும்
> இடைவெளிதான்
> மன அழுத்தத்தையும்,
> நோய்களையும்
> நமக்குள்
> உருவாக்குகிறது.
மிகப்பெரியதும், நுண்ணியதுமான பிரபஞ்சத்தின் ஆகாச சக்தியை தியானத்தால் மட்டுமே உள்வாங்க முடியும்.
வேத கால அக்னி சடங்குகள் என்பது பெருந்திரளாகக் கூடும் பெரிய கூட்டத்திற்கு உதவக்கூடிய தியான முறையாக இருந்தது. இது, பெயரளவுக்கு மட்டுமே செயலைச் செய்பவர்களுக்கான தியானம்!
நம்மால் இந்த தியானத்தைச் செய்ய முடியவில்லை என்றாலும், அந்த இடத்தில் நாமிருந்தால்க்கூட போதும், நம்மால் இந்த சக்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
கடவுளின் நோக்கம் - உங்களைக் கடவுளாக்குவதே!
பிரபஞ்ச அறிவுதான் மனிதர்களில் மனமாக பிரதிபலிக்கிறது. இந்த மனம், அது வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள புலன்களைப் பயன்படுத்துகிறது. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது (ஸ்பரிசம்) ஆகிய ஒவ்வொரு உணர்வும் இயற்கை மூலகங்களோடு (பஞ்ச பூதங்கள்) தொடர்புகொண்டுள்ளன.
ஆகாசத்திற்கு ஒலியோடும், காதுகளோடும்; காற்றுக்குத் தொடுதலோடும், தோலோடும்; நெருப்புக்கு நிறத்தோடும் வடிவத்தோடும் தொடர்பு உண்டு, அதேபோல பார்வையோடும், கண்களோடும் நெருப்புக்குத் தொடர்பு உண்டு; தண்ணீருக்குச் சுவையோடும், நாக்குடனும் தொடர்பு உண்டு; மணத்தோடும் மூக்குடனும் நிலத்திற்குத் தொடர்பு உண்டு.
புலனுணர்வுகளை வைத்துதான் மனம் தகவல்களைப் பெறுகிறது. தன்னுடைய முடிவுகளையும் புலன்களின் செயல்பாடுகளின் மூலம்தான் செயல்படுத்துகிறது. புலன்களுக்குத் தீனி போட்டு, அவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற வெளி உலகத்தோடு இருக்கும் தொடர்பு அறுபடும்போது, மனம் மூடிக்கொள்ளும், எண்ணங்கள் நின்றுவிடும்!
அஹங்காரம் என்பது மனம் உருவாக்கியது. அதுவொரு மாயை. ஏனென்றால் அது நிரந்தரமாக இருப்பதில்லை; அது ஸத்யம் இல்லை. அஹங்காரம் முற்றிலுமாக அறுந்து, மனது நிற்கும்போதுதான், நிஜமாகவே நம்மை நாமே அறிய முடியும்; ‘தன்னை அறிதல்’ நிகழ முடியும் அதற்குப் பிறகுதான், உள் உலக அறிவு தட்டி எழுப்பப்பட்டு, விழிப்பூட்டப்பட்டு பிரபஞ்ச அறிவாகிறது.
இங்கு, கிருஷ்ணர் நாம் எதை வெளிமுகமாக வெளிப்படுத்துகிறோமோ அதைத்தான் அஹங்காரம் என்கிறார். அதுதான் நமது அடையாளம், இதைத்தான் நாம் வெளி உலகத்திற்குக் காட்டுகிறோம்.
இது எப்போதுமே, நம்மைப் பற்றி நாமே வைத்திருக்கும் கருத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாம் பிறரிடம் நம்மைப் பற்றிய ஒரு முத்திரையைப் பதிக்க முயற்சி செய்கிறோம், நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.
நமது அஹங்காரத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு, அதுதான் மமகாரம். இது நம் உள்முக வெளிப்படுத்துதலைக் குறிக்கிறது.
| நம்மைப் பற்றி நாம் நமக்குள் என்ன நினைக்கிறோம் என்பதுதான் மமகாரம். நாம் என்னவாக இருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோமோ அது எப்போதும் நிஜத்தைவிட குறைவாகவே இருக்கும். நமக்குள், நம்மைப் பற்றி ஒரு குறைவான அபிப்ராயமே நாம் வைத்து கொண்டிருக்கிறோம். | |
|---|---|
| நாமே கடவுள் என்ற ஸத்யத்தை நாம் உணர்ந்து விட்டால், நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது. | இந்த வெளி உலக வெளிப்படுத்துதலுக்கும், உள் உலக வெளிப்படுத்துதலுக்கும் இடையில் இருக்கும் ஒரு நிலையான, முடிவில்லாத இடைவெளிதான், நமக்குள் மன அழுத்தத்தையும் துக்கத்தையும் நோய்களையும் உருவாக்குகிறது. |
நம்மை நாமே உணரும்போது, 'நாமே
கடவுள்' என்பதை உணர்கிறோம். இதற்குச்
குறைவாக நம்மைப்பற்றி நாம் நினைக்கும்
அனைத்துமே, குறை மதிப்பீடுகள்தான்.
கிருஷ்ணர் சொல்வது நம் எல்லோருக்குமே
பொருந்தும். நம்மை உருவாக்கிய
சக்திகளைவிடவும் நாம் மேம்பட்டவர்களாக
இருக்கிறோம். நாம், நமது உடல் -மன
அமைப்புமுறைகளை உருவாக்கிய
சக்தியாகவும் இருக்கிறோம்.
இந்த ஸத்யத்தைத்தான் நாம் புரிந்துகொள்ளவில்லை. நம்மை நாம் உணர்வதுதான், நமது இயற்கையான நிலை. நாமே கடவுள் என்ற ஸத்யத்தை நாம் உணர்ந்து விட்டால், நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் எந்த வேறுபாடுமிருக்காது. நாம் ஞானம் அடைந்தவர்களாகி விடுவோம்.
இதை நிரூபிக்கவே கிருஷ்ணர் வந்தார். அவர் கடவுள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. நமக்குத் தெரிய வேண்டும் என்பதைப் பற்றிய கவலையும் அவருக்குக் கிடையாது. அவருடைய நோக்கம் அர்ஜுனனை ஞானமடையச் செய்ய வேண்டும், அர்ஜுனன் மூலமாக மனித இனத்தை ஞானமடையச் செய்ய வேண்டும் என்பதே! நாளும் கடவுள்தான் என்பதை நிரூபிப்பதே அவருடைய நோக்கம்!
உங்கள் தெய்வீகத்திற்கு அழிவில்லை
கேள்வி: இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும் நமது வளர்ப்பு முறையால்தான் அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் சொன்னீர்கள். நமது உண்மை நிலையான அந்த ஆனந்தநிலையைப் பற்றிய விழிப்புணர்வையும், நாம் தெய்வீகத்துடன் ஒன்றிணைந்தவர்கள்தான் என்கிற விழிப்புணர்வையும் திரும்பப் பெறுவது எப்படி?
நாம் வளரும்போதே, நமது குழந்தைத்தன்மையையும் கள்ளங்கபடமில்லாத் தன்மையையும் இழந்து விடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் சரி, தவறு என்று தீர்ப்பளிக்காமல் இருக்கும் திறனையும் சுதந்திரத்தையும்கூட இழந்து விடுகிறோம். மேலும், நமது இயற்கை நிலையான ஆனந்த நிலையையும் இழந்து விடுகிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாம் முற்றிலும்மாக எல்லாவற்றையும் இழந்து விடுவதில்லை. நமது உள் உலகத் தெய்வீகம் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது. அதனால் அதைக் கண்டறிய வேண்டிய அவசியமோ அல்லது அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியமோ நமக்கு ஏற்படுவதில்லை.
நாம் மறந்திருக்கிறோம், அதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது, அவ்வளவுதான். ஸத்யம், கடவுள், ஆனந்தம், அழகு என்று அதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், அது நமது ஆழமான மையத்தில், நமது இருப்பில் இருக்கிறது. இவை எல்லாமே ஒரே விஷயத்தைதான் எடுத்துக் காட்டுகின்றன.
நமக்குள் நிலையான ஏதோவொன்று, அழிவற்ற ஏதோவொன்று, தெய்வீகமான ஏதோவொன்று இருக்கிறது. நமக்குள் ஆழமாக இருக்கும் அதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான், பொருட்கள் மூலமாக எவ்வளவுதான் நாம் சந்தோஷங்கள் அனுபவித்தாலும், நமக்குள் மனத்தை அரிக்கிற ஒரு வெறுமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இது மட்டுமே வாழ்க்கையல்ல என்ற உணர்வு நம்மைத் தொல்லைப்படுத்துகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆழமாக உள்முகமாகத் திரும்பி நம்மிருப்புத் தன்மைக்குள் குதித்து, ஆழ்ந்து பார்க்க வேண்டியதுதான். நம்மை நாமே உணர்ந்து, அடையாளம் காண வேண்டும். எங்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆகவே இந்தப் பயணம் உண்மையில் ஒரு பயணம் இல்லை. நமக்குள் நாம் திரும்பி பார்க்க வேண்டும், அவ்வளவுதான்.

இந்தப் பயணத்தில் பணம் உதவாது. பதவியும் செல்வாக்கும் உதவாது. ஆழமாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், நாம் தேடி அடையவேண்டிய செல்வம் அன்பு மட்டும்தான் என்ற விழிப்புணர்வுடன் நாம் ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும்.
நாம் செல்ல வேண்டிய வீட்டைத்தான் நாம் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை இழக்கிறோம். அது என்னவென்று நமக்கு உறுதியாகத் தெரிவதில்லை. ஆனாலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது.
பணம், பதவி, செல்வாக்கு இவற்றைச்
சேர்ப்பதன் மூலம், அந்தத் தொல்லை தரும்
உணர்வை அழித்துவிட முடியும் என்று நம்பி,
இவற்றைச் சேர்க்க ஓடுகிறோம்.
அந்த இடைவெளி அடைக்கப்படும்,
வெறுமை இனிமேல் இருக்காது என்றுதான்
நினைக்கிறோம். இருந்தாலும், வெளி
உலகத்தில் இருக்கும் எதுவும் அந்த
இடைவெளியை நிரப்புவதில்லை.
ஏனென்றால் நமது இருப்பு நிலைக்குள்
பணமோ, பதவியோ அல்லது செல்வாக்கோ
ஊடுருவ முடியாது.
வெளி உலகில்
உள்ள எதுவுமே
நம்மை முழுமை
அடையச் செய்வதில்லை,
ஏனென்றால்
முழுமை
உள் உலகத்தில்
இருக்கிறது,
ஆழமாகக் கவனியுங்கள், வெளியிலிருந்து எதுவும் இதற்கு உதவ முடியாது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கூ அவ்வளவு நாம் வெறுமை உணர்வால் பாதிக்கப்படுகிறோம்.
இங்கு ஒரு முரண்பாடு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மதத்தில்தான், ஆன்மீகத்தில்தான் அவர்களுக்கான வீடு இருப்பதாகவும், அங்கு அவர்களுக்கான மூலவேர்கள் இருப்பதாகவும் பணக்கார சமுதாயம் தேடுகிறது.
வளமான சமுதாயம், மதத்தில் ஆர்வமாக இருப்பதென்பது ஏதோவொரு விபத்து அல்ல. இது ‘வெற்றியால் ஏற்பட்ட மனச்சோர்வால்’ ஏற்பட்டது.
நாம் விரும்பிய அனைத்தும் நம்மிடமிருந்தும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. நாம் எதை விரும்பினோம், ஏன் விரும்பினோம் என்பதூகூட நமக்குத் தெரிவதில்லை. இதனால்தான் நாம் மதத்தை அதிகமாகச் சார்ந்து இருக்கிறோம்.

அடிப்படையில், பொருள் சார்ந்தவற்றிலிருந்து ஆன்மீகத்தைப் பிரித்தெடுக்க வேண்டியதில்லை. பொருள் உடமைகளோடு அது சண்டை போட வேண்டியதில்லை.
பணம், நல்ல வீடு, குடும்பம்
இவற்றின் மூலமாக ஏழைகள்,
முழுமையைத் தேடுகிறார்கள்.
இதை எல்லாம் அவர்கள் அடைந்து முடிக்கும்போது, திடீரென்று தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். எதையோ இழந்துவிட்ட ஓர் உணர்வுடன், மீண்டும் முன்னர் இருந்த அதே மன நிலையிலேயே தொடர்ந்து அவர்கள் இருக்கிறார்கள்.
பிறகு அவர்களுக்குள் ஒரு பெரும் போராட்டம் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையையே இழந்து விட்டதாக நினைக்கிறார்கள். வெளி உலகத்தில் இருக்கும் எதுவுமே அவர்களுடைய தேடலை முழுமை அடையச் செய்யவில்லை என்பதை உணர்கிறார்கள்.
வெளி உலகில் உள்ள எதுவுமே நம்மை முழுமை அடையச் செய்வதில்லை, ஏனென்றால் முழுமை உள் உலகத்தில் இருக்கிறது. அதற்காக வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்குதான் நாம் கடவுளைக் காண்கிறோம். நாம் இறைவனைக் காணாதவரை நம்மால் முழுமை அடைய முடியாது.
நாம் ஆனந்தத்தில் இருக்கப் பழகவில்லை
என்பதால், ஆனந்தம் என்பது நமக்கு
அன்னியமாகத் தெரிகிறது. நாம் துக்கத்துடன்
இருந்துப் பழகிவிட்டோம் என்பதால், நாம்
துக்கத்திலேயே வாழ்கிறோம், அதிலேயே
புரண்டு கொண்டிருக்கிறோம். யாராவது
ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தாலும்கூட,
அது நமக்கு அசௌகரியமாக இருக்கிறது.
எதையாவது அல்லது யாரையாவது நினைத்துத் துக்கப்படுவதுதான் சரியானது என்று நாம் நினைப்பதால், ஆனந்தமாக இருப்பவரைப் பார்த்தால், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.
பெரும்பாலானவர்கள் துக்கத்திலேயே இருக்கிறார்கள். தம்மைத் தாமே அறிந்து ஆனந்தம் அடையும் ஒருவரை எப்போதாவதுதான் நம்மால் பார்க்க முடிகிறது.
மிக அரிதாக எப்பொழுதாவது ஒரு புத்தரையோ அல்லது கிருஷ்ணரையோ பார்க்கிறோம். ஆனால் அப்பொழுதுகூட, அவர்களைப் பைத்தியக்காரர்களாகத்தான் மக்கள் பார்க்கிறோம். ஆனந்தமாக இருந்த ஒரே காரணத்திற்காக புத்தரை, அவர் காலத்தில், ஒரு பைத்தியக்காரராகத்தான் மக்கள் பார்த்தார்கள். மக்கள் துக்கத்திலேயே வாழ்வதால், அவர்கள் அதை எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். அதுவே அவர்கள் மொழியாகி விடுகிறது. ஆனந்தம் அவர்களின் மொழியாக இருப்பதில்லை.
தற்காலிகமான ஒரு சந்தோஷத்தைப் பெரும்பாலானவர்கள் அனுபவிப்பதுண்டு. அவர்களின் அந்தத் தற்காலிகமான சந்தோஷம் மேலோட்டமானது. அது ஒரு வகையான ஏமாற்றுத்தனமும்கூட! அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதோடு, தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
ஏசுநாதர், ஆனந்தமான வாழ்வை 'இறைவனின் சாம்ராஜ்யியம்' என்கிறார். அது நமக்குள்ளேயே இருக்கிறது. அதை வெல்வதற்கு எந்த இராணுவமும் தேவையில்லை; யாரையும் நாம் வெற்றிகொள்ள வேண்டியதில்லை. அதுவொரு வித்தியாசமான வெற்றியாக இருக்கிறது.
அது நமக்குள் உள்ள நமது இருப்பு
நிலையின் ஆழமான மையத்தில் நிகழ்கிறது.
அங்கு இராணுவம் இல்லை, எதிரிகள்
இல்லை, எந்த ஆயுதங்களும் இல்லை.
ஆனால் நாம் திடீரென வெற்றியாளர்களாக
மாறி விடுகிறோம்! ஒருவர் வாழ்க்கையில்
வெற்றி அடைகிறார். ஏனென்றால் அவர்
வாழ்க்கையை அறிந்து கொள்கிறார்;
அறிந்துகொள்வதே, வாழ்க்கையில் வெற்றி
அடைவதற்காகதான்.
நம்மை நாம் உணரும்போது, எப்போதும் நமக்குள் இருக்கும் இயற்கை நிலையை நம்மால் அடைய முடிகிறது. நாம் நிலையான ஆனந்தத்தை - நித்யானந்தத்தை உணர்கிறோம்.
