போதிக்க எப்போதும் நான் தாயாராகவே இருக்கிறேன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எது எப்படியோ, மனித உயிர்கள் எப்படிக் கடவுளை அணுக முடியும், கடவுளை ஏன் அணுக வேண்டும், கடவுளை அவர்கள் எந்த நிலையிலிருந்து அணுகுகிறார்கள் என்பதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்.
பைபிளில், ''கடவுள் மனிதனை தம்முடைய சொந்த அச்சில் வார்த்துத்தான் படைத்திருக்கிறார்," என்ற ஓர் அழகான வாசகம் உண்டு. ஆனால் "மனிதன்தான் கடவுளை அவனுடைய சொந்த அச்சில் வார்த்து படைத்திருக்கிறான்," என்று நான் சொல்கிறேன். நாம் விரும்புகிற வழியில்தான், கடவுளை அணுகுகிறோம். நமது மனப் பக்குவத்திற்கு ஏற்பவே நாம் கடவுளை அணுகுகிறோம்.
எந்த நிலையில் நாம் கடவுளை அணுகுகிறோம்? பொதுவாக, நாம் எவ்வாறு வழிபாடு செய்கிறோம்? அதன் விளைவாக நாம் எதைப் பெறுகிறோம்? நாம் எப்படிப் பக்குவமடைகிறோம்?
இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைக் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் தருகிறார். கிருஷ்ணர் ஓரிடத்தில் சொல்லும்பொழுது, "ஆயிரக்கணக்கானவர்களில், ஒருவர்தான் பூரணத்துவத்திற்காக முயற்சி செய்கிறார், அப்படிப் பூரணத்துவத்தை அடைந்தவர்களிலும் யாரோ ஒருவர் மட்டும்தான், என்னை உள்ளபடி ஸத்யமாக உணர்கிறார்," என்கிறார்.
அற்புதமான கருத்து!
இங்கே கிருஷ்ணர் "பூரணத்துவத்தை ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர்தான் தேடுகிறார்," என்று சொல்கிறார். அவர் கோடிக்கணக்கானவர்களில் ஒருவர் என்று சொல்லி இருக்க வேண்டும்.
இந்த வரிகளை கிருஷ்ணர் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்ததால், "ஆயிரக்கணக்கானவர்களில்," என்று சொல்கிறார்.
மனுஷ்யாநாம் ஸஹஸ்ரேஷு கச்'சித்யததி ஸித்தயே |
யததாமபி ஸித்தானாம் கச்'சின்மாம் வேத்தி தத்தவத: ||
7.3
ஒருசிலர்
மட்டும்தான் கீதை
வெளிப்படுத்தப்பட்ட
விதத்திலேயே
அதை
உள்வாங்கிக்
கொள்வார்கள்.
"கோடிக்கணக்கானவர்களில் ஒருவர்தான் பூரணத்தைத் தேடுகிறார்," என்றுதான் இப்போது நாம் சொல்ல வேண்டும்.
ஆயிரக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் பூரணத்துவத்திற்காக முயற்சி செய்கிறார். அதில் யாரோ ஒருவர் மட்டுமே பூரணத்துவத்தை அடைகிறார். அவ்வாறு பூரணத்துவத்தை
அடைபவர்களிலும், யாரோ ஒருவர்
மட்டுமே என்னை உள்ளபடி ஸத்யமாக
அறிந்துகொள்கிறார்.
கோடிக்கணக்கானவர்களில், வெகு சிலர்தான்
இந்தத் தேடுதல் பாதைக்குள் விரும்பி
நூழைகிறார்கள். அந்த ஒருசிலருக்குள்ளும்,
ோரிருவர் மட்டுமே அந்த இறுதி
அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
பல இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் சில நூற்றுக்கணக்கானவர்கள்
மட்டும்தான், இன்று கீதை உபதேசத்தைக்
கேட்க இங்கே வந்திருக்கிறீர்கள்.
> நம்மைச் சுற்றி
> நூறு விஷயங்கள்
> நடந்தால்
> அதில் வெறும்
> இரண்டு
> சதவீதத்தை மட்டுமே
> நாம்
> உள் வாங்குகிறோம்.
இந்த நூற்றுக்கணக்கானவர்களிலும், ஒருசிலர் மட்டும்தான் கீதை வெளிப்படுத்தப்பட்ட விதத்திலேயே அதை உள்வாங்கிக்கொள்வீர்கள்.
நாம் இங்கு உட்கார்ந்திருக்கலாம்; கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். உண்மையிலேயே நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நான் உங்களிடம் சொன்ன விஷயத்தை, ஒருபோதும் நீங்கள் மற்றொருவரிடம் போய் சொல்ல வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படிச் சொன்னாலும்கூட, ''இதை ஸ்வாமிஜி சொன்னார்,'' என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்.
ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அந்த விஷயத்தைக் கேட்டீர்கள், அவ்வளவுதான். அதனால் அவர்களிடம், ''நான் இதைக் கேட்டேன்,'' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள், ''ஸ்வாமிஜி சொன்னார்,'' என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
பல நேரங்களில், சொல்லப்படுபவற்றுள் பலவற்றை நாம் விட்டு விடுகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே நாம் கவனிக்கிறோம் என்று தற்கால விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நம்மைச் சுற்றி நூறு விஷயங்கள் நடந்தால், நாம் வெறும் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும்தான் கவனிக்கிறோம்! நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே நாம் உள்வாங்குகிறோம்.
இது எப்படி என்றால், நூறு பக்கங்களைக்கொண்ட ஒரு புத்தகத்தில், ஏதோ இரண்டு பக்கங்களைத் தவிர, மொத்தப் புத்தகத்தையும் தொலைத்து விடுவதைப் போன்றதுதான். மற்ற தொண்ணூற்று எட்டுப் பக்கங்களும் தொலைந்து விட்டன.
இந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த நாவலையும் திரும்ப எழுத முயற்சி செய்தால், அது உண்மையான நாவலோடு ஒத்துப்ப போகுமா?
ஒரு ஞானமடைந்த
உயிரில் நிறைந்திருக்கும்
எல்லையில்லாக்
கருணை,
எப்போதும்
பகிர்ந்துகொள்ளவும்
போதிக்கவும்
வழிகாட்டவும்
தயாராகவே இருக்கும்.
அதே போலத்தான், நான் சொன்னதில் வெறும்
இரண்டு சதவீதத்தை மட்டும் நினைவில்
வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தப்
பேச்சையும் சொல்ல நினைத்தீர்களேயானால்,
நிச்சயமாக அது என்னுடைய பேச்சல்ல, அது
உங்களுடைய பேச்சாகத்தான் இருக்கும்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம், அதனாலேயே நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாகி விடாது.
நான் பேசியதை நீங்கள் யாருக்காவது சொல்ல விரும்பினால், "நித்தியானந்தர் இதைச் சொல்லும்பொழுது நான் கேட்டேன்," என்று சொல்லுங்கள். "நித்தியானந்தர் இதைச் சொன்னார்..." என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
நீங்களாகவே ஒன்றை ஊகித்துக்கொள்வதனால், நீங்களாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவதனால், நீங்களாகவே உங்களுக்குள் பேசிக்கொள்வதனால் உண்மையாக என்ன சொல்லப்பட்டதோ அதை விட்டு விடுகிறீர்கள்.
ஞானி எப்போதுமே அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, தயாராகவே இருக்கிறார்; எப்போதுமே போதிக்கத் தயாராகவே இருக்கிறார். அவர் வாழ்க்கையின் நோக்கமே அதுதான்.
ஒரு ஞானமடைந்த உயிரில் நிறைந்திருக்கும் எல்லையில்லாக் கருணை, எப்போதும் பகிர்ந்துகொள்ளவும் போதிக்கவும் வழிகாட்டவும் தயாராகவே இருக்கும்.
இதனால்தான், "போதிக்க நான் தயாராக இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
கேள்வி என்னவென்றால், அதைக் கவனிக்க அர்ஜூனன் தயாராக இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.
அன்று அர்ஜூனன் கவனிக்கத் தயாராக இருந்து, அதைக் கவனித்து அவர் ஞானம் அடைந்திருந்தாலும், இன்று இப்பொழுது நாம் கவனிக்கத் தயாராக இருக்கிறோமா?
பதிலைக்கண்டுபிடியுங்கள்
ஒருசிலர் மட்டும்தான் முயற்சி செய்கிறார்கள், அப்படி முயற்சி செய்கிறவர்களிலும் மிகச் சிலர்தான் வெற்றியடைகிறார்கள் என்று ஏன் கிருஷ்ணர் சொல்கிறார்?
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,
அவர், 'தன்னை உணர்தலைப்' பற்றிப்
பேசுகிறார். நாம் யார் என்பதை
அறிந்துகொள்வதைப் பற்றிப் பேசுகிறார்.
அதற்காக முயற்சி செய்வதுகூட நமக்கு ஏன்
அவ்வளவு கடினமாக இருக்கிறது?
'தன்னை உணர்தல்'
என்றால்
நாம் எங்கிருந்து
வந்தோமோ
அங்கேயே
திரும்பப்போவது
என்று பொருள்.
நாம் முயற்சி செய்ய விரும்புவதில்லை, ஏனென்றால் நாம் பயப்படுகிறோம். எந்தவிதமான மௌனமாக இருந்தாலும் சரி, நாம் அமைதியில்லாமல்தான் இருக்கிறோம். கூட்டத்தில் வந்து உட்கார்ந்த உடன், ஒருசில நிமிடங்கள் நான் பேசாமல் இருந்தால் போதும், கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் அமைதி இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் படபடக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
நமக்கு ஏன் த்யானம் செய்வது கடினமாக இருக்கிறது? அதிகபட்சம், த்யானத்தில் கண்களை மூடி, மௌனமாகத்தானே உட்கார்ந்து இருக்கிறோம். அது ஏன் நமக்குக் கடினமாக இருக்கிறது?
விரும்பியோ விரும்பாமலோ நாம் நமது வாழ்க்கையில், ஒவ்வொருநாளும் எத்தனையோ நபர்களுக்கு ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கொடுக்கிறோம். ஆனால் நமக்காக ஒருநாளின் அரை மணி நேரத்தை ஒதுக்கிக்கொள்ள ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
டி.வி. பார்ப்பதால் நமக்கு அதிலிருந்து எந்தவிதமான உபயோகமான விஷயமும் கிடைக்கப் போவதில்லை என்று நமக்கு நன்றாகத் தெரிந்தாலும்கூட, நாம் ஏன் அதைப் பார்த்து ரசிக்கிறோம்?
ஏன் மீண்டும் மீண்டும் பழைய பத்திரிகைகளைத் தேடிப் படிக்கிறோம்? ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், இதெல்லாமே நம்மோடு நாமிருப்பதற்குப் பயப்படுவதால்தான் நடக்கிறது.
நம்மோடு நாமிருப்பதற்கு ஏன் பயப்பட வேண்டும்? இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? எதைக் கண்டு நாம் பயப்படுகிறோம்?
நமக்குநாமே இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்; இதற்கான பதில்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
‘தன்னை உணர்தல்’ என்றால் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பப் போவது என்று பொருள். எந்தவொரு ஆனந்தமயமான நிலையிலிருந்து, கடவுள் நிலையிலிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பப் போவதுதான் ‘தன்னை உணர்தல்’. என்றால், நம்மோடு இருப்பதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்? உண்மை என்னவென்றால், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

நாம் வளர்க்கப்பட்டவிதமோ அல்லது கற்பிக்கப்பட்டவிதமோ இதை நமக்கு எடுத்துச் சொல்லவில்லை. நாம் ஆனந்தத்திலிருந்துதான் வந்திருக்கிறோம், நம்மால் அந்த ஆனந்தத்தை மீண்டும் அடைய முடியும் என்று யாரும் நமக்கு எடுத்துச் சொல்லவில்லை.
சமுதாயத்திற்கென்று ஒரு சொந்த சுயநலன் இருக்கிறது. அது இந்த ஸத்யத்தை நாம் புரிந்துகொள்ள நம்மை அனுமதிப்பதில்லை.
மதம், அரசாங்கம் அல்லது குடும்பக்
கட்டமைப்பு என எல்லா வடிவங்களிலும்,
நமது ஆனந்தம் குறித்த இந்த ஸத்யம்
மறைக்கப்படுகிறது.
ஆனந்தமாக இருப்பதும், நமது உண்மையான நிலைக்குத் திரும்புவதும் மிகவும் சுலபமானது தான் என்பதை நாம் உணர்ந்தோமென்றால், நம்மால் மிகச் சுலபமாகத் திரும்ப முடியும்; நம்மை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; அதுதான் விடுதலைக்கான பொருள்.
நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். ஆனால் சமுதாயமானது கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் நடக்கிறது. மதங்கள் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் நடக்கின்றன.
அரசியலும், குடும்பக் கட்டமைப்புகளும்கூட அப்படித்தான் இருக்கின்றன.
நாம் யார் என்பதை நாம் உணர்ந்த நொடியிலேயே, நாம் சுதந்திரம் அடைந்து விடுகிறோம். இந் நிலையில், இந்த அமைப்புகளால் நம்மை ஒன்றும் செய்ய முடிவதில்லை. நம் மூலமாகச் செய்ய விரும்பும் எதையும் அவற்றால் செய்ய முடிவதில்லை.
அதனால் அவை நமக்கு இனிப்புகள் என்ற ஆசையைக் காட்டுகின்றன; மேலும் பயமுறுத்துதல் என்ற கம்பையும் லாவகமாகக் கையாள்கின்றன. நாங்கள் சொல்வதைச் செய்தால் சொர்க்கத்திற்குப் போவாய், நீ தவறாக நடந்தால் நரகத்திற்குப் போவாய் என்று சொல்கின்றன. அதுமட்டுமல்லாமல், சட்டங்கள் என்ற பெயரில் குறிப்புகளையும் தருகின்றன.
சிறுவயது முதலே, நாம் நமக்குள் ஆழ்ந்து செல்ல தடுக்கப்படுகிறோம். ஏனென்றால் அவ்வாறு நாம் செய்தால், நாம் ஸத்யத்தைக் கண்டுபிடித்துவிடுவோம், நாம் விடுதலை அடைந்து விடுவோம். பின்னர் இந்தச் சர்ச்சுகளோ, கோயில்களோ, மதகுருமார்களோ அல்லது அரசியல்வாதிகளோ தேவைப்பட மாட்டார்கள். அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அடிபணியவில்லை என்றால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி அவர்கள் நம்மைப் பயமுறுத்துகிறார்கள்.
நம்மைப்பற்றிய ஸத்யத்தை நாம் உணர்ந்தால், அங்கு எப்படிக் குழப்பம் ஏற்படும்?

நாமே கடவுள் என்பதை நாம் உணரும்போது, அங்கு ஏன் குழப்பம் ஏற்பட வேண்டும்?
ஏனென்றால் நாம் முழுவதுமாக
விழிப்புணர்வால் நிரம்பி இருப்போம்.
விழிப்புணர்வு நிரம்பிய நிலையில் நாம்
என்ன செய்தாலும் அது சரியானதாகவே
இருக்கும்.
மேலும், அதுபோன்ற ஒரு விழிப்புணர்வுநிலை நமது அனைத்து விதமான பயத்தையும் கர்வத்தையும் நீக்கிவிடும். நம்மை ஆனந்தப்படுத்த நமக்கு வெளி உலகத் தூண்டுதல்கள் எதுவும் தேவைப்படாது.
> நமக்குத் தெரிந்த
> எல்லா வகையான
> அன்பும்,
> கட்டுறு மனப்பாங்கே.
> கடவுளின் மீதான அன்பும்,
> குருவின் மீதான அன்பும்
> மட்டுமே
> உண்மையான
> அன்பாக இருக்கின்றன.
யாரும் எதுவும் நம்மைக் கட்டுப்படுத்த
முடியாது. நாம் சுதந்திரமடைந்திருப்போம்.
அதுதான் சமுதாயத்திற்கு ஒரு பெரிய
அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த ஆழ்ந்த ஸத்யங்களைப் பெரும்பாலான
சமுதாயங்கள் அறிந்திருக்கவில்லை. இதைத்
தெரிந்து கொண்டவர்களும்கூட, இது
மிகவும் ஆழ்ந்த ஸத்யம் என்பதால் அதை
நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்
என்று நினைத்து அதைத் தவிர்க்கிறார்கள்.
இப்படித்தான், சமுதாயம் மக்களை தலைமுறை தலைமுறையாக ஆழ்ந்த அறியாமைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அரசாங்கங்கள், கோயில்கள், சமுதாயங்கள், நண்பர்கள், ஏன் நமது குடும்பமும்கூட ஸத்யத்தின் இந்தத் தூய்மையான தன்மையை வெறுத்து ஒதுக்குகின்றன. அதனால் அவர்கள் நம்மை ‘அறியாமை’யிலேயே இருக்கச் செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
