உங்களால் கீதையைத் தவறவிட முடியாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சாதாரண ஞானிகள் அவர்களின் தத்துவத்தை அல்லது அவர்களின் அனுபவத்தை இந்த இரண்டாவது தர்க்க வகையில்தான் வெளிப்படுத்துவார்கள். இதனால்தான் அதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
அவர்கள் சொல்ல நினைக்கிற கருத்துகள் விடுபட்டுப்போவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் கிருஷ்ணர் ஒரு ஜகத் குரு (பிரபஞ்சத்தின் ஞானகுரு).
அவர் ஒரு சாதாரண ஞானி இல்லை. அவர் ஒட்டுமொத்தப் பிரபஞ்ச த்திற்கே ஞானி, எப்படியெல்லாம் மனித மனம் செயல்படும் என்பதையும், எல்லா விதமான மனப்பாங்குகளைப் பற்றியும் ஜகத் குரு அறிவார். தர்க்கத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவருக்குத் தெரியும்.
நாம், நமது தர்க்கத்தின் போக்கிலேயே சென்று முடிவுகளை எடுக்க முடியாதபடியும், எந்தவித அறிக்கையையும் நாமாக ஊகிக்க முடியாத வகையிலும் அவர் இந்த அறிக்கைகளை அளிக்கிறார்.
அவர் மூன்றுவித செய்திகளையுமே வெளிப்படுத்துகிறார். அவர் மிகத் தெளிவாக "அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன. முதல் கதவு திறந்திருக்கிறது, இரண்டாவது கதவு மூடி இருக்கிறது," என்று சொல்கிறார். அவர் மூன்று அறிக்கைகளையும் வெளிப்படுத்துகிறார், அதனால் ஊகிக்க வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படுவதில்லை! அவர் நம்மிடமிருந்தே நம்மைக் காக்கிறார்!.
ஸத்யம்
மீண்டும் மீண்டும்
சொல்லப்படும்போது,
அது நமது
விழிப்புணர்வுக்குள்
ஆழமாக
ஊடுருவுகிறது.
நாம் ஊகிக்க அனுமதிக்கப்
படுவோமேயானால், நாம் முடிவுகளை
எடுக்க அனுமதிக்கப்படுவோமேயானால்
ஸத்யத்தைத் தவற விட்டு விடுவோம். ஸத்யத்தை
மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் செய்தியையுமே
நாம் தவற விட்டு விடுவோம்.
இங்குக் கிருஷ்ணர், நம்மை முடிவெடுக்க
அனுமதிப்பதில்லை. அவர் மூன்று
அறிக்கைகளையுமே வெளிப்படுத்தி
விடுகிறார்.
எது செய்யப்பட வேண்டும், எது தவிர்க்கப்பட
வேண்டும், ஏன் அது செய்யப்பட வேண்டும்,
மற்றது ஏன் தவிர்க்கப்பட வேண்டும், என்று
அனைத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார்.
மொத்த விஷயத்திலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், அவர் ஒரே ஸத்யத்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு தர்க்க மட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் ஒரே செய்தியைத்தான் வெளியிடுகிறார். ஆனால் தார்க்கத்தின் வெவ்வேறு நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார், இதனால் இதைக் கேட்பவர்கள் இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை தவற விடுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.
யோக ஜ்ஞான விஜ்ஞான யோக என்ற இந்த ஒட்டுமொத்த அத்தியாயத்திலும், அவர் ஒரே ஒரு செய்தியை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து விளக்குகிறார்.
நூறு கோடியில் ஒருவர் மட்டுமே என்னை வந்தடைகிறார்
7.1 கிருஷ்ணன் சொல்கிறார், “பிரிதாவின் மைந்தனே! கேள், என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை.”
7.2 புலன்களால் உணரக்கூடியதும், முழுமையான அறிவுையுடையதுமான அதனைப் பற்றி நீ உணர்ந்து கொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்;
இதையும் அறிந்து கொண்டாயானால், மேற்கொண்டு அறிந்துகொள்ள வேண்டியதென்று வேறு எதுவுமே இல்லை.
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர்தான் தம்மை உணர்ந்து கொள்வதற்கு, ஜீவன்முக்தராவதற்கு பெருமுயற்சி
செய்கிறார் அப்படிப் பெருமுயற்சி
செய்பவர்களிலும், யாரோ
ஒருவர் மட்டுமே ஜீவன்முக்தியை
அடைகிறார்.
அவர்களிலும், யாரோ ஒருவர்
மட்டுமே ஸத்யத்தில் என்னைக்
காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று
கலக்கும் நிலையை அடைகிறார்.
7.4 நிலம், நீர், நெருப்பு, காற்று,
ஆகாயம், மனம், அறிவு மற்றும்,
பொய்யான அஹங்காரம் இந்த
எட்டும் என்னிடமிருந்து பிரிந்த
வெளி உலகச் சக்திகளாக இருக்கின்றன.
7.5 இயல்பில் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெளி உலகச் சக்திகளைத்தவிர, ஓ! திரண்ட தோள்களை உடைய அர்ஜூனா, என்னிடம் ஓர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது.
இந்தப்பொருள் சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆத்மாவாக இந்த சக்திதான் இருக்கிறது.
"ஸ்வாமிஜி, நீங்கள் ஏன் அஷ்டவக்ர கீதை, பதஞ்ஜலியின் யோக ஸூத்ரம், ப்ரஹ்ம ஸூத்ரம், அல்லது உபநிஷதங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை? கீதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்பதைத்தான் மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் "கீதை, ஸத்யத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் வெளிப்படுத்துகிறது," என்று சொல்வதுண்டு.
கிருஷ்ணர், எல்லா வகையான
மனித உயிர்களுக்கும் தேவையான
சாவிகளை உருவாக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு விதமான நபருக்கும் அவர் ஒவ்வொரு

கிருஷ்ணரை
அஹங்காரம்
உடையவராக
நினைத்து
அவரை வெறுக்கும்
ஒருவர்
ஸத்யத்தை
இழக்கிறார்.
சாவியைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு மனித உயிரின் ஒவ்வொரு தேவையையும் கிருஷ்ணர் பூர்த்தி செய்கிறார்.
அவர் சொல்கிறார், “கேள், அர்ஜூனா, என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை.”
இந்தச் சொற்றொடரில், கிருஷ்ணர் ‘என்னை’ என்ற பதத்தை மூன்று முறை உபயோகிக்கிறார்.
ஒர் உளவியல் நிபுணர் இதைப் படித்தால், கிருஷ்ணர் ஒரு அஹங்காரம் பிடித்த மனிதர் என்ற தீர்மானத்திற்கு அவர் வந்து விடுவார் .
உளவியலைப் பொறுத்தவரை நாம் ஒரு வாக்கியத்தில் ‘நான்’ அல்லது ‘என்னை’ என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால், நாம் அஹங்காரம் பிடித்தவர்களாகக் கருதப்படுவோம். நமக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது.
யாருக்கு எப்படியோ, ஆனால் ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை அது அஹங்காரமாகவே தோன்றும். கிருஷ்ணரை ஒரு அஹங்காரம் பிடித்தவராக உணரும் ஒருவர், அவரை வெறுக்கவும் ஆரம்பிக்கலாம்.
கிருஷ்ணரோடு கரைந்துவிடுங்கள். மீண்டும் மீண்டும் அவர் சொல்வது, “என்னிடம் சரணடைந்து விடு. நானே அனைத்துமாகி உள்ளேன்,” என்பதுதான். அவர் தம்முடைய சிறப்பை வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் இங்குப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை
அது அஹங்காரமாகத் தோன்றலாம்.
கிருஷ்ணரை அஹங்காரம் உடையவராக
நினைத்து அவரை வெறுக்கும் ஒருவர்
ஸத்யத்தை இழக்கிறார் அல்லது கீதையால்
வெளிப்படுத்தப்படும் சாரத்தை இழக்கிறார்.
அதேபோல, கிருஷ்ணரை நேசிக்கும்
ஒருவரும், அவரின் உருவத்தை மட்டும்
பிடித்துக்கொள்ளும்போது, கீதையின் ரசத்தை
இழக்கிறார்!
> கிருஷ்ணரை
> உள்வாங்கிணால்
> மட்டுமே
> நம்மால்
> கீதையின்
> பலனைப் பெற
> முடியும்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மக்கள் வடிவத்தை மட்டுமே பிடித்துக் கொள்ளும்போது, அவர்கள் கிருஷ்ணருடைய வடிவத்தை மட்டுமே வழிபடும்போது, அவர்கள் மெதுவாக, “கீதை மிகவும் அற்புதமானது; கிருஷ்ணர் கடவுள், அவரால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும்; ஆனால் நிச்சயமாக நம்மால் அதெல்லாம் முடியாது, அதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது,” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் இவ்வாறு சொல்வதன் மூலம், அவர்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் இடைவெளியை மெதுவாக உருவாக்கிக்கொள்கிறார்கள்.
அவர்கள் கீதையின்படி வாழ்வதற்குப் பதிலாக, அதை வழிபடத் தொடங்குகிறார்கள்.

ஒரு குடம் நிறைய பால் இருக்கிறது;
அதை நாம் குடிக்காமல், அதை வழிப்பட்டுக்
கொண்டிருந்தால், அந்தப் பாலில் இருந்து
நமக்கு என்ன கிடைக்கும்?
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
நாம் பாலைக் குடிக்காதவரை அந்தப்
பாலினால் கிடைக்கும் பலனை நாம்
பெறப்போவதில்லை.
கிருஷ்ணரை உள்வாங்கினால் மட்டுமே, நம்மால் கீதையின் பலனைப் பெற முடியும். அதனால்நான் நான் எப்போதும் சொல்கிறேன், ஏசுவைச் சித்ரவதை செய்தும், சிலுவையில் அறைந்தும் யூதர்கள் அவரைப் புறக்கணித்தார்கள்.
அதேபோல இந்துக்களும் கிருஷ்ணருக்கு வழிபாடுகள் செய்தும், சுவரில் தொங்கவிட்டும், அவரைப் புறக்கணிக்கிறார்கள். மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சிலுவையில் அறைவது, சுவரில் ஆணியடித்து மாட்டுவது, இரண்டும் ஒன்றுதான்.
நமது வாழ்க்கையில் நம்மால் கிருஷ்ணரின் போதனைகளை உள்வாங்க முடியாதபோது, கிருஷ்ணரை உணர நாம் முயற்சி செய்யாதபோது, கிருஷ்ணரை வழிபாடு செய்வது என்பது வேறொன்றுமில்லை, அவரைச் சித்ரவதை செய்வது போன்றதுதான். இது ஸத்யத்திலிருந்து நழுவுவதற்கான ஒரு சூழ்ச்சி முறை, அவ்வளவுதான். ஏசுவைச் சித்திரவதை செய்த மக்களுக்குக் குறைந்தபட்சம், தாங்கள் ஒரு தவற்றைச் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியாவது இருக்கிறது, ஆனால் கிருஷ்ணரைச் சுவரில் தொங்க விடுகிறவர்களுக்கு அதுகூட இல்லை.
புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் அவர்கள் கிருஷ்ணரிடமிருந்து நழுவி விடுகிறார்கள், அவ்வளவுதான்.
பின்பற்றாமல் வழிபாடு செய்வதும், உள்வாங்காமல் வழிபாடு செய்வதும் சிலுவையில் அறைவதைப் போன்ற மோசமான முறைகள்தான்.
கிருஷ்ணரை வெறுப்பவர்கள், அவரை அஹங்காரம் உடையவராக நினைக்கிறார்கள். கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துபவர்கள், அவரின் வடிவத்தைப் பிடித்துக்கொண்டு, மனித வடிவில் வந்திருக்கும் ''கிருஷ்ணர்,'' என்றழைக்கப்படும் அந்த உருவத்திடம் சரணடைய நினைக்கிறார்கள்.
கோடிக்கணக்கானவர்களில்
யாரோ ஒருவர்தான்
பூர்ணத்துவத்தை
தேடுகிறார்கள்.
அவர்களிலும்
யாரோ ஒருவர்தான்
அதனை
அடைகிறார்கள்.
கிருஷ்ணரை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.
கிருஷ்ணரை வெறுப்பவர்கள், கிருஷ்ணர்
மீது அன்பு செலுத்துபவர்கள், இருவருமே
கீதையை இழந்து விடுகிறார்கள்.
நாம் கிருஷ்ணரின் வடிவத்தைப் பிடித்துக் கொண்டால், வெறியர்களாகி விடுவோம். வடிவத்தைப் பிடித்துக்கொண்டு, வெறியர்களாகிப் போன பலரை நான் பார்த்திருக்கிறேன்.