உங்கள் இயல்பைப் புரிந்துகொண்டு மலர்போல் மலருங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முதலில், கிருஷ்ணர் ஏன் இந்த அத்தியாயத்தை சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
கிருஷ்ணர், ஒரே ஸத்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அந்த ஒரே ஒரு ஸத்யத்தைத் தவிர வேறு எதையும் பேசவில்லை.
பிறகு எதற்காக இத்தனை அத்தியாயங்கள்?
கிருஷ்ணர், தமக்காகவே இவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறார் என்று மக்கள் சொல்லலாம்.
"ஆன்மா அழிவற்றது; பலனை எதிர்பார்க்காமல் எல்லாக் கடமைகளையும் செய்; முக்தி அடைய வேண்டுமானால், என்னைச் சரணடைந்து விடு," என்றெல்லாம் அவர் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் சொல்வார் என்றும் அவர்கள் கேட்கலாம்.
மக்கள் என்னிடம், "ஸ்வாமிஜி, த்யானம் கற்றுக்கொள்ள எங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்?" என்று கேட்பதுண்டு.
நான் அவர்களிடம், "எது த்யானம் என்பதைக் கற்றுக்கொள்ள, இரண்டு நிமிடங்கள் போதும். எது த்யானம் இல்லை என்பதைக் கற்றுக்கொள்ளத்தான், உங்களுக்குப் பத்து நாட்கள் தேவைப்படும்!" என்று சொல்வதுண்டு.
ஸத்யத்தை ஒருபோதும் தர்க்கத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியாது.
அர்ஜுனனும் நம்மைப் போன்றவர்தான் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும். மொத்த மனித இனத்தையும் அவர் ஒன்று சேர்த்துப் பிரதிபலிக்கிறார். அர்ஜுனன் மனித இனத்தின் சாரம்.
ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும்பொழுது, ஏன் இது சரியான செயல் என்பதை மட்டும் விளக்கினால் போதாது. மற்ற தொண்ணூற்று ஒன்பது விஷயங்கள் ஏன் சரியான செயல்கள் அல்ல என்பதையும் விளக்க வேண்டும்.
'மற்ற தொண்ணூற்று ஒன்பது விஷயங்களும் கூட ஏன் நல்ல விஷயங்களாக இருக்கக்கூடாது' என்று மனித மனம் நூறு காரணங்களைக் கண்டு பிடித்து வாதம் செய்யத் துவங்கிவிடும்.
அதனால்தான் ஒரு ஞானி, ஏன் மற்றைய தொண்ணூற்று ஒன்பது விஷயங்களும் நேரடியான பாதையில்லை என்பதையும், ஏன் குரு சொல்கிற விஷயங்களில் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது.

கிருஷ்ணர் பகவத்கீதையில் இதைத்தான் செய்கிறார். ஏன் அந்த மற்றைய தொண்ணூற்று ஒன்பது வழிகளும் உண்மையான வழிகள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் ஜ்ஞான குரு பொறுமையாக விளக்குகிறார். அவர் மீண்டும் மீண்டும் விளக்குகிற அந்த ஒரே ஒரு கருத்து அர்ஜூனனின் விழிப்புணர்வில் ஆழமாக ஊடுருவும் என்பதை நிரூபிக்கவே கிருஷ்ணர் இப்படிச் செய்கிறார். அதன் விளைவு, பகவத்கீதையைப் படிக்கும் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலுமே இந்த ஸத்யங்கள் ஊடுருவுகின்றன.
குரு சீடர்களை ஊகிக்க அனுமதிப்பதில்லை
இப்போது நம்முடைய வாழ்க்கையில், நாம் படிக்கின்ற மற்றும் செய்கின்ற பல விஷயங்கள் த்யானம் அல்ல. இதையெல்லாம் மறக்க பல காலம் பிடிக்கிறது.
நாம் ஸத்யத்தைத் தர்க்கத்தின்படி விளக்கும்போது, நம் மனம் எப்போதுமே அந்தத் தர்க்கத்தின் மற்றொரு முனைக்குச் சென்றுவிடும். அதனால்தான், ஸத்யத்தை இருமுனைகளில் இருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவில், ந்யாய சாஸ்த்ரம் என்ற தர்க்கத்தைப் பற்றி விளக்குகிற ஒரு அழகான தத்துவ நூல் இருக்கிறது. அதனுடைய கருத்துப்படி, எந்த ஒரு அறிக்கையுமே இரண்டு விதமான தர்க்கங்களைக் கொண்டிருக்கும்.
முதல் வகையான தர்க்கம் வழக்கமான தர்க்கம்; ந்யாய என்றால் ‘வழக்கமான’ என்று பொருள்.
உதாரணமாக, "எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை உண்டு. சாக்ரட்டீஸ் என்ற சொல் ஒரு மனிதரைக் குறிக்கிறது," என்ற கருத்துகளை நான் சொன்னால், சாக்ரட்டீஸுக்கு ஒரு தலை உண்டு என்ற மூன்றாவது கருத்தை உங்களால் மிகச் சுலபமாகத் தீர்மானிக்க முடியும். இது சாதாரண தர்க்கம்.
மற்றொரு வகையான தர்க்கமும் உண்டு. இது உயர்மட்ட தர்க்கம். உதாரணத்திற்கு, முதல் வாக்கியமாக "அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன," என்றும், இரண்டாவது வாக்கியமாக, "அதில் ஒன்று திறந்திருக்கிறது," என்றும் நாம் சொன்னோமேயானால், ஒரு
> ஸத்யம்
> நமக்குள்
> ஊடுருவும்போது
> எந்தவித தடமோ,
> தடையோ இல்லாமல்
> ஊடுருவ வேண்டும்.
சராசரி மனிதர் உடனடியாக, அடுத்த கதவு மூடியிருக்கும் என்ற முடிவுக்கு வந்து விடுவார்.
இருந்தாலும், இந்த வகையான தர்க்கத்தில் முதல் இரண்டு வாக்கியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, நாம் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. இரண்டாவது கதவும் திறந்து இருக்கலாம். அது நமக்குத் தெரியாது. அந்த இரண்டு வாக்கியங்களுமே ஓர் திட்டவட்டமான தீர்மானத்தை அளிக்கவில்லை.
இரண்டாவது கதவு மூடியிருப்பதை நாம் பார்த்தால் ஒழிய அல்லது இரண்டாவது கதவு மூடியிருப்பதாக நமக்குச் சொல்லப்பட்டால் ஒழிய, நம்மால் எந்தவித முடிவுக்கும் வர முடியாது.

பார்ப்பவரோ, படிப்பவரோ மற்றும் சீடரோ இந்தப் புரிதலில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு குருவானவர் நமக்கு எந்தக் கதவு திறந்திருக்கிறது, எந்தக் கதவு மூடி இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் உறுதியாகத் தெரியப்படுத்துகிறார். அவர், சீடர் தமது புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் அதை முடிவுசெய்து கொள்ளட்டும் என்று சீடருடைய யூகத்திற்கு அதை விடுவதில்லை.
குரு அந்தக் காரணத்திற்காக மட்டும் புரிய வைப்பதில்லை.
ஸத்யம் நமக்குள் ஊடுருவும்போது, எந்தவித தடமும் இல்லாமல் ஊடுருவ வேண்டும். அது நமக்குள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவ வேண்டும்.
ஒரு விஷயம் முழுமையாக விளக்கப்படாதபோது, நமது மனம் அந்த இரண்டு கதவுகளில் எந்தக் கதவு திறந்திருக்கும் என்ற சாத்தியக்கூற்றைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது, அதன் சொந்த வழியில் நமது மனம் செல்லத் தொடங்குகிறது.
அப்படிச் செல்லும்பொழுது, என்ன விளக்கப்பட்டதோ அதிலிருந்து மனமானது விலகிச் சென்று விடுகிறது. இதனால், என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலத்தில், அந்தக் கருத்தில் ஒருமுகப்படாமல், மனம் தொடர்ச்சியாக அலைபாய்கிறது, பின் சோர்ந்து விடுகிறது. சோர்ந்து போன மனம் தவறுகளைச் செய்கிறது. இரண்டாவது வகை தர்க்கத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்திருக்க வேண்டிய சமயத்தில்கூட, பொதுவாக நாம் முதல் வகையான தர்க்கத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் தவறுகளைச் செய்கிறோம்.
யாராவது, "உங்களுக்கு இரக்கமே இல்லை," என்று சொன்னால், நாம் உடனடியாக எதிர்க்கும் மன நிலையோடு "அப்படியென்றால், நான் கொடுமைக்காரன் என்கிறாயா? நான் வன்முறையாளன் என்கிறாயா?" என்று கேட்கிறோம்.
நாம் இதுபோன்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியதே இல்லை. "உங்களுக்கு இரக்க சுபாவம் இல்லை," என்ற ஒரு கருத்தை அவர் சொல்கிறார். உடனே நாம், 'என்னைக் கொடுமைக்காரன் என்கிறான், என்னை வன்முறையாளன் என்கிறான்' என்றெல்லாம் சிந்திக்க வேண்டியதே இல்லை.
நாம் இந்த வகையில்
முடிவெடுக்கும்பொழுது நமக்குநாமே
தொல்லைகளை உருவாக்கிக்கொள்வதோடு
மட்டுமல்லாமல், பிறருக்கும் தொல்லைகளை
உருவாக்குகிறோம். இந்தத் தவறுகளை நாம்
பல தடவை செய்கிறோம்.
நாம் நம் மனத்தை விழிப்புணர்வில்லாமல்
கையாளும்பொழுதெல்லாம், நாம் அதே
தவற்றை மீண்டும் மீண்டும் செய்கிறோம்.
நமக்குள் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் நம் முழு வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது மனத்திற்குள், நமக்குநாமே உள்முகமாக மீண்டும் மீண்டும் சொல்லும் மொத்த வார்த்தைகளின் தொகுப்புதான் நமது வாழ்க்கை.
நமது வார்த்தைகள் அல்லது நமது மனத்தின் எண்ண ஓட்டங்கள்தான் நம் வாழ்க்கையே தவிர வேறொன்றுமில்லை. நமது மனம், இதுபோன்ற தர்க்கம் இல்லாத முடிவுகளுக்குத் தாவும்போது, இயற்கையாகவே அந்த முடிவுகள் நேர்மையானதாக, சரியானதாக இருப்பதில்லை. இதனால் நமக்குநாமே சிக்கல்களை உருவாக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் பிரச்சினைகளை உருவாக்குகிறோம்.
நாம் விழிப்புணர்வோடு இல்லாதிருக்கும்பொழுது, நாம் எப்போதுமே இதுபோன்ற முடிவுகளுக்குத்தான் தாவுவோம்.