KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/வினாக்களின் வாசலில்...Sign in
பகவத் கீதை விளக்கவுரை

வினாக்களின் வாசலில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

✍ இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும் நமது வளர்ப்பு முறையால்தான் அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் சொன்னீர்கள்.

நமது உண்மை நிலையான அந்த ஆனந்தநிலையைப் பற்றிய விழிப்புணர்வையும், நாம் தெய்வீகத்துடன் ஒன்றிணைந்தவர்கள்தான் என்கிற விழிப்புணர்வையும் திரும்பப் பெறுவது எப்படி?

✍ 'பிரபஞ்ச சக்தி'யைத்தான் கிருஷ்ணர் 'நூலிழை' என்று குறிப்பிடுகிறாரா?

✍ ஸ்வாமிஜி, பாரம்பரிய கிழக்கத்திய கல்விமுறை அல்லது மேற்கத்திய கல்விமுறை என எதுவாக இருந்தாலும், கல்வி அறிவுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்தக் கல்வி, நம்மை மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லையே, ஏன்?

✍ ஜாதி அமைப்பு, குணங்களின் அடிப்படையில் இருக்கிறது, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அனைத்து ஜாதிகளும் சமம் என்றும், இதுபோல இன்னும் பிற விஷயங்கள் குறித்தும் நீங்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

ஆனாலும் இன்றும் அது அவ்வழியில் செயல்படவில்லை. நம்முடைய கலாச்சாரத்தை விட, ஒருவரையொருவர் நன்றாக மதித்துக்கொள்ளும் பண்புடைய பல கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இங்கு இன்று நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்திற்கும், நீங்கள் குறிப்பிடும் ஸத்யத்திற்கும் எந்த ஒற்றுமையையும் என்னால் காண முடியவில்லை.

  • பல வேத நூல்கள் நம்மை உள்முகமாகப் பார்க்கச் சொல்கின்றன. ஆனால் இந்த உலகில் வெற்றி பெற வேண்டுமானால், நம்மைச் சுற்றி அனைத்தும் எவ்வாறு நடக்கின்றன என்று நாம் வெளிமுகமாகப் பார்க்க வேண்டியுள்ளது. உள்முகமாகப் பார்ப்பதனால் நாம் எவ்வாறு வெற்றி அடைய முடியும்?
  • ஆசிரமத்தில் வாழும் உங்கள் சீடர்களையும், வெளியில் வாழ்ந்துகொண்டே உங்களைப் பின்பற்றுபவர்களையும் பார்க்கும்போது, பொறாமைப்படும் படியான ஓர் அமைதியை அவர்களிடம் நான் பார்க்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் என்று நம்புகிறேன்.
  • நாம் ஆன்மீகவாதியாவதற்கு முன்னால் எல்லாப் பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றன. செல்வச் செழிப்பில் இருப்பது ஞானம் அடையத் தடையாக இருக்குமா?
  • கிருஷ்ணர், இந்த அத்தியாயம் முழுவதிலுமே, அதுமட்டுமல்ல பிற அத்தியாயங்களிலும்கூட முக்திக்காக அவரைச் சென்றடைவதைப் பற்றிச் சொல்கிறார். அவர் பல நுட்பங்களை எடுத்துச் சொல்கிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.
  • அவர் சொல்வதை வெறுமனே அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா? அல்லது அதையும் தாண்டி ஏதேனும் இருக்கிறதா? அவரே ஜகத்குரு, அவர் சிறு தெய்வங்களை எல்லாம் கடந்தவர் என்ற ஸத்யத்தை வெறுமனே ஏற்றுக்கொள்வது எப்படி என்னை விடுதலை அடையச் செய்யும்?