KAILASA Library/பகவத்கீதை/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத்கீதை

அருஞ்சொற் பொருள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அக்நி - தீ

அங்குலீ-மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தாரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.

அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.

அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று ‘த்வைத’ மும் ‘விசிஷ்டாத்வைத’மும் கருதுகிறது.

அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்

அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி

அம்ரு’த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்

அண்ணாமலை ஸ்வாமிகள் } - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்

அஹிம்ஸ - துன்புறுத்தாமை

அபரிக்ரஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை

அஷ்டவக்ர - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.

அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.

ஆகாச’ - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச’க்தி.

ஆசார்ய - ஆசிரியர், ‘உடன் வருபவர்’

ஆதார - அடிப்படை

ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆனந்த- நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரண- அணிகலன்
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்'ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தோஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத்- ஆசீர்வாதம்
ஆஹார- உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சா- ஆசை
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிகாளஸ- ராமாயணம், மகாபாரதம்
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியா- செயல்
க்ரு'ஹஸ்த- கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்- தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மா- ஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்ப- வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு

சிறிய பகுதி

கல்பநா - கற்பனை

கால - நேரம்

காண்டவ - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்

குண்டலினி - மூலச் சக்கரமான ‘மூலாதாரத்தில்’ உள்ள சக்தி

குண - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.

கும்பமேளா - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்

  1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
  1. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
  1. உஜ்ஜைியில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
  1. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்

குரு - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்

குருகுல் - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.

குஷ - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.

கைவல்ய - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்

கோபிகைகள் - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.

கோபுர - கோயில் கோபுரம்

கோயந் - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.

கோவிந்த பாத - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு.

கோச' - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.

  1. அன்னமய அல்லது உடல் அடுக்கு
  1. பிராணமய அல்லது பிராண அடுக்கு
  1. மனோமய அல்லது எண்ண அடுக்கு
  1. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
  1. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு

சக்ரம் - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்

சண்டாள - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.

சந்தந - சந்தனமரம்

சக்ஷு - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்

சித்த - மனம், மேலும் மனஸ், புத்தி

சித்ரகுப்த - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திரம்

சைதன்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி

டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்

த்ரி காலம், - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.

த்ரி கால ஜ்ஞானி - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்

தந்த்ரா - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்

தபஸ் - தீவிர ஆன்மீக முயற்சி.

தமஸ்- மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸமாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு'ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யாந- ஆழ்ந்த சிந்தனை
தர்ச'ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம- நேர்மையான
தக்ஷிணாயன சூரியனின்- ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
தீ- விவேகம்
தீக்ஷை- தீட்சை சமயத்தில் குரு தனது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷ- குறைபாடு
நசிகேத- கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜ- சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்- இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதி- ஆறு
நாக- பாம்பு
நாக ஸாது- உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள்
நாடி- நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நாரீ- பெண்மணி
நாந்த- முடிவில்லாத
நித்தியாஸநா- வெளிப்படுத்தியவை
நிமித்த- காரணம்
நிமித்த தோஷ- காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்வாண, ஸமாதி- விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
நிஸர்கதத்தமகாராஜ்- மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணாயாம- மூச்சை அடக்குவது
ப்ரு'த்வீ- பூமி சக்தி
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகாநந்த- தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.
பரிக்ரம- ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜக- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்'ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பாப- பாவம்
பிంగళ- இட, ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச'நந்த ஸரஸ்வதி- சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை

அடிப்படையாகக் கொண்டவை.

புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்

புத்ர - மகன்

புரோஹித் - அர்ச்சகர்

பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.

பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.

ப்ரம்ஹந் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்

ப்ரம்ஹ - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரம்ஹன்

ப்ரம்ஹசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்

ப்ரம்ஹசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்

பக்தர் - பக்தன்

பக்தி - உணர்வு வழிபாடு

பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி

பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்

பாவந - கற்பனை

பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி

பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.

புத்த - ‘நிர்வாண’ நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு

புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

புத்து - முட்டாள்

மங்கல் - நன்னிமித்தமான

மங்கள ஸூத்ர- திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்- கோயில்
மநந- சிந்தித்தல், தியானம்
மநஸ்- மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹா- மிகப்பெரிய
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயா.
மாலா- மாலை
மீமாம்ஸா- பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம- நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின்

சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்

யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.

யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.

  1. ஸத்ய
  1. த்ரேதா
  1. த்வாபர
  1. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)

ரக்த - இரத்தம்

ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.

ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.

ராத்ரி - இரவு

இராமகிருஷ்ண பரமஹம்ஸ - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.

ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.

ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், இந்தியாவின் இதிகாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.

ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.

ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.

லாவோட்ஸ்ீ - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேனின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.

வர்ண- வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வானப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயு- காற்று
வாஸந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிகாஹஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதி- இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விச்'வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும்,

பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.

விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்

வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்

வேத - ச்'ருதி - உபநிஷத்

  • அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.

ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்

ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஸ்மரண - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.

ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்

ஸ்வதந்த்ர - சுதந்திரமான

ஸ்வப்ந - கனவு

ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்

ஸங்கல்ப்ப - முடிவு

ஸந்யாஸீ - துறவி

ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை

ஸத்வ - ஆன்மீக அமைதி

ஸம்ச'ய - சந்தேகம்

ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு

ஸம்ஸ்கார - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்

ஸமாதி - மனம் கடந்த நிலை, ஞான நிலை ஸஹஸ்ரார - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்

ஸஹஸ்ர நாமா - கடவுளின் 1000 நாமங்கள்

ஸாங்க்ய - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று

ஸாதநா - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி

ஸாது - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி.

ஸித்தி - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.

ஸிம்ஹ - சிங்கம்

ஸிம்ஹ ஸ்வப்நா - பயங்கரக் கனவு

ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம்.

ஸுஷும்நா - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.

ச்'ரவண - கேட்டல்

ச்'ருதி - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது.

ச்'க்தி - சக்தி, அறிவு சக்தி

ச்'ங்கர - கேரளாவின், காலடியைச் சேர்ந்த
ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின்
விரிவுரையாளர்.

சா'ஸ்த்ர - புனித நூல்கள்

சி'வ - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை.

சி'ஷ்ய - சீடன்.

சூ'த்ர - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம்.

சூ'ந்ய - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.

ஜ்யோதிஷ - ஜோதிடம்

ஜோதிஸி - ஜோதிடர்

ஜநக்ராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதீஹாஸமான இராமாயணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.

ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.

ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.

ஜராதுஸ்டரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜொரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.

ஜாக்ரத் - விழிப்பு நிலை

ஜாதி - பிறப்பு

ஜாதி தோஷ - பிறப்பில் உள்ள குறைபாடு

ஜீவ - வாழ்தல்

ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.

ஹடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.

ஹம்மரபி - Hammarabhi's Code
முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம்
மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.

ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.

க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்

க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

ஸ்லோகங்கள்

அத் ஷஷ்டோऽத்யாய: ஆறாவது அத்தியாயம்

ஆத்ம ஸம்யம யோக: ஆத்மஸம்யம யோகம்

ஸ்ரீபகவாநுவாச

அநாச்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: /
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய: // 6.1

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; அநாச்ரித: - சார்ந்திராமல் ; கர்மபலம் - கர்மத்தின் பயனை ; கார்யம்- செய்யவேண்டிய ; கர்ம - கர்மத்தை ; கரோதி - செய்கிறானோ; ய: - எவனொருவன் ; ஸ: - அவன் ; ஸந்ந்யாஸீ - ஸந்யாஸியும் ; ச - மேலும் ; யோகீ ச - யோகியும்; ந

  • இல்லை ; நிரக்நி: - அக்னி காரியங்களைச் செய்யாமல்; ந- இல்லை; ச-கூட; அக்ரிய: - செயல்களைச் செய்யாமல் துறப்பவன்

பகவான் சொன்னது

6.1 யார் ஒருவர் பலன்களைப் பற்றி யோசிக்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே துறவி. அவர் மனத்தை தூய்மைப்படுத்தும் சமயச் சார்புள்ள செயலைச் செய்பவராகிறார்.

கடமையைச் செய்யாமல் இருப்பவரும் யாகங்கள் செய்வதை நிறுத்தியவரும் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் விடுபவரும் ஒரு துறவியாகவோ அல்லது கர்மயோகியாகவோ இருக்க முடியாது.

.........................................................................................................................

யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ /
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கச்'சந // 6.2

யம் - எதை ; ஸந்ந்யாஸம் இதி - ஸந்யாஸம் என்று ; ப்ராஹு: - சொல்கிறார்களோ ; யோகம் - மேலான உணர்வு நிலையான பரம்பொருளோ ளாடு ; தம் - அதையே ; வித்தி, - தெரிந்துகொள் ; பாண்டவ - அர்ஜூனா; ந - இல்லை; ஹி - நிச்சயமாக; அஸந்ந்யஸ்த ஸங்கல்ப்ப: - சொந்த விருப்பங்களைத் துறக்காத ; யோகீ - யோகியாக ; பவதி - தகுதியாவது; கச்'சந - எவனும் 6.2 ஓ பாண்டவா! துறவு ஒன்றே ஒருவரை மேலான பரம்பொருளோடு ஒன்றிப்போகும் யோக நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது.

கடவுள் தன்மையோடு ஒன்றாகும் இந்த நிலை சொந்த விருப்பங்களைத் துறக்கும்பொழுது மட்டும்தான் நிகழ்கிறது.

.........................................................................................................

ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்மகாரணமுச்யதே /
யோகாரூடஸ்ய தஸ்யைவ ச'ம: காரணமுச்யதே // 6.3

ஆருருக்ஷா: - கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கும் ; முநே: - முனிவன்; யோகம் - யோகத்தை ; கர்ம - கர்மங்களைச் செய்வதுதான் ; காரணம் - காரணம் ; உச்யதே - சொல்லப்படுகிறது; யோகாரூடஸ்ய - யோகத்தை அடைந்தவனுக்கு ; தஸ்ய- அந்த ; ஏவ - நிச்சயமாக; ச'ம : எவ்விதமான செயல்களும் இல்லாதிருத்தல்; காரணம் - காரணம் ; உச்யதே - சொல்லப்படுகிறது

6.3 துறவிகளால் வடிவமைக்கப்பட்ட யோக முறைகளைப் பழகவிரும்பும் ஒருவர், முதலில் தம்முடைய எல்லாச் செயல்களையும் யோகா அமைப்பில் சொல்லப்பட்டிருக்கிற வரிசைப்படிதான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது மற்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களும் நின்றுவிடும்.

.........................................................................................................

யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கர்மஸ்வனுஷஜ்ஜதே /
ஸர்வஸங்கல்பஸந்நியாஸீ யோகாரூடஸ்த தோச்யதே // 6.4

யதா - எப்பொழுது ; ஹி - மட்டும்; ந - இல்லை; இந்த்ரியார்த்தேஷு - புலன்களுக்குரிய போகப் பொருள்களில்; ந - இல்லை; கர்மஸு - பலன்களைக் கொடுக்கக்கூடிய கர்மங்கள் ; அனுஷஜ்ஜதே - ஈடுபடுத்திக்கொள்வது; ஸர்வஸங்கல்பஸந்நியாஸீ - எல்லா விருப்பங்களையும் துறந்தவனான அவன் ; யோகாரூட: - யோக நிலையில் நிலைபெற்றவன்; ததா - அப்பொழுது ; உச்யதே - சொல்லப்படுகிறான்

6.4 இவர் யோக நிலையை அடைந்துவிட்டார் என்று ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால், அவர் பொருள் சார்ந்த எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டிருக்க வேண்டும். அதற்குபிறகு அவர் புலன்களின் திருப்திக்காகச் செயல்களைச் செய்வதுமில்லை; பலனை அடிப்படையாகக் கொண்ட செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுமில்லை.

உத்தரேதத்மாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் /
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: // 6.5

உத்தரெத் - உயர்த்திக்கொள்ள வேண்டும்; ஆத்மநா - தானே ; ஆத்மாநம் - பந்தப்பட்டிருக்கும் தம்மை ; ந - இல்லை; ஆத்மாநம் - பந்தப்பட்டிருக்கும் தம்மை ; அவஸாதயேத் - வீழ்த்திக்கொள்ளல் ; ஆத்மா ஏவ - தானேதான்; ஹி - நிச்சயமாக ; ஆத்மந: - தமக்கு ; பந்து: - நண்பன் ; ஆத்மா ஏவ - தானேதான் ; ரிபு: - பகைவன்; ஆத்மந: - பந்தப்பட்டிருக்கும் தமக்கு

6.5 நீங்களே உங்கள் நண்பன்; நீங்களே உங்கள் எதிரி. உங்கள் ஆத்மாவின் (சுயத்தின்) மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள், உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.

பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேனாத்மைவாத்மநா ஜித: /
அனாத்மநஸ்து ச்'த்ருத்வே வர்தேதாத்மைவ ச்'த்ருவத் // 6.6

பந்து: - - நண்பன் ; ஆத்மா - சுயம் ; ஆத்மந: - ஜீவாத்மாவிற்கு ; தஸ்ய

  • அவனுடைய; யேந ஆத்மநா - எந்த ஜீவாத்மாவினால் ; ஆத்மா ஏவ
  • தமக்குத் தானே; ஜித:- அடக்கி ஆளப்பட்டிருக்கிறதோ ; அனாத்மந: - மனம் புலன்களுடன் கூடிய உடலை அடக்கி ஆளாதவன் ; து - ஆனால் ; ச்'த்ருவத் - பகைவனைப் போல ; வர்தேத - இருக்கிறவன்; ஆத்மா ஏவ - தமக்குத் தானே ; ச்'த்ருத்வே - பகைமை செய்வதில்

6.6 தன்னையே வென்ற ஒருவருக்கு, அவரின் நண்பர்களிலேயே மேலான நண்பன் அவருடைய ஆத்மாவே! இதைச் செய்வதில் தோல்வி அடைந்த ஒருவருக்கு, அவருடைய ஆத்மாவே அவரின் மேலான எதிரி!

ஜிதாத்மந: ப்ரசா'ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: /
சீ'தோஷ்ணஸுக து :கேஷு ததா மாநாபமாநயோ: // 6.7

ஜிதாத்மந: - தம்மை அடக்கி வெற்றி கொண்ட மனிதனின் ஞானத்தில் ; ப்ரசா'ந்தஸ்ய - எவனுடைய மன நிலை மிகவும் அமைதியாக இருக்கிறதோ ; பரமாத்மா - பரமாத்மா ; ஸமாஹித: - நன்கு நிலைத்து நிற்கிறார்; சீ'த உஷ்ண ஶீத துஃகேஷு - தட்பவெப்பம் இன்ப துன்பம் ஆகியவற்றில் ; ததா - மேலும்; மாந அபமாநயோஃ - மான அவமானம் இவற்றில்

6.7 யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, யார் ஒருவர் மன அமைதியை அடைந்திருக்கிறாரோ, அவர் ஏற்கனவே மேலான தன்மையை அடைந்துவிட்டவராகிறார்.

இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதை போன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்.

...............................................................................

ஜ்ஞானவிஜ்ஞானத்ரு’ப்தாத்மாகூடஸ்தோ விஜிதேந்த்ரிய: /
யுக்த இத்யுச்யதே யோகீஸமலோஷ்டாச்’மகாஞ்சந: // 6.8

ஜ்ஞான விஜ்ஞானத்ரு’ப்தாத்மா - எவரது உள்ளம் ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் நிறைந்து திருப்தியாக இருக்கிறதோ; கூடஸ்த: - எவர் தம் நிலையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் விகாரமன்றி இருக்கிறாரோ; விஜிதேந்த்ரிய: - எவர் தம் புலன்களை நன்கு அடக்கி வசப்படுத்தியுள்ளாரோ ; யுக்த: - தம்மை உணர்ந்தவர் ; இதி - என்று ; உச்யதே - அழைக்கப்படுகிறார்; யோகீ - அந்த யோகியானவன் ; ஸமலோஷ்ட அச்’ம காஞ்சந: - எவர் மண் கல் பொன் ஆகியவற்றில் ஸமபாவனைகொண்டு உள்ளாரோ

6.8 யார்ஒருவர்ஆன்மீகஅறிவைப் பெற்றிருப்பதனால் மனநிறைவுடன் இருக்கிறாரோ, யார் ஒருவர் தனது புலன்களை வென்றிருக்கிறாரோ, யாருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றுபோல் தோன்றுகிறதோ மேலும் யார் ஒருவர் தம்மிடம் இருப்பதைக் கொண்டு மன திருப்தியுடன் இருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து, தன்னுள் உறுதியாக நிலைபெற்றவர் என்று கருதப்படுகிறார். மேலும் அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்.

...............................................................................

ஸுஹ்ரு’ந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு /
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விசி’ஷ்யதே // 6.9

ஸுஹ்ரு’த் மித்ர அரி உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு - தன்னலம் கருதாது அனைவருக்கும் ஹிதம் செய்பவன், நண்பன், பகைவன், உதாஸீனன், நடு நிலையில் நிற்பவன், வெறுக்கத்தக்கவன், உறவினர் ஆகியவர்களிடம்; ஸாதுஷு - நல்லோர்களிடத்து; அபி - கூட; ச - மேலும்; பாபேஷு - பாவிகளிடத்தும்கூட ; ஸமபுத்தி: - ஸமமான பாவனைகொண்டுள்ளவன் ; விசி’ஷ்யதே - மிகவும் சிறந்தவன் ஆகிறான்

6.9 நேர்மையான நலன் விரும்பிகள், உள்ளன்புள்ள கொடையாளிகள், உதாஸீனர்கள், மத்தியஸ்தர்கள், பொறாமை உள்ளவர்கள், நண்பர்கள், எதிரிகள், பக்தர்கள், பாவிகள் என எல்லோரையும் சமமான மன நிலையோடு, ஆழ்ந்த உணர்வோடு பார்க்கும் ஒருவர்தான் உண்மையிலேயே உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

........................................................................................................

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மானம் રહஸி ஸ்தித: /
ஏகாகீ யதசித்தாத்மா நிராசீ’ரபரிக்ரஹ: // 6.10

யோகீ - யோகி ; யுஞ்ஜீத - ஒருமுகப்படுத்துதல்; ஸததம் - இடைவிடாது ; ஆத்மானம் - ஆத்மாவை ; રહஸி - தனியான இடத்தில்; ஸ்தித: - அமர்ந்துகொண்டு ; ஏகாகீ - தனி ஒருவனாக ; யத சித்தாத்மா - மனத்தை மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி; நிராசீ’: - எதிலும் ஆசையில்லாமல் ; அபரிக்ரஹ: - ‘எனது’ என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு

6.10 ஒரு யோகி எப்போதும் தம் மனத்தை அந்த மஹோன்னதமான ஆத்மாவின் (சுயத்தின்) மேல் ஒருமுகப்படுத்த வேண்டும்.

அவர் தனிமையில் இருந்துகொண்டு,வேறு எதனாலும் ஈர்க்கப்படாத வண்ணம் மனத்தைக் கவனத்துடன் கட்டுப்படுத்தி, ‘எனது’ என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டவராய் இருக்க ே வேண்டும்.

........................................................................................................

சு’சௌ தேசே’ ப்ரதிஷ்டாப்ப்ய ஸ்திரமாஸநமாத்மந: /
நாத்யுச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகுசோ’த்தரம் // 6.11

சு’சௌ - தூய்மையான ; தேசே’ - இடத்தில் ; ப்ரதிஷ்டாப்ப்ய - அமைத்துக்கொண்டு ; ஸ்திரம் - அசைவற்றதாக; ஆஸநம் - இருக்கையை ; ஆத்மந - தம்முடைய ; ந அத்யுச்ரிதம் - மிக உயரமாக இல்லாமலும் ; ந அதிநீசம்- மிகத்தாழ்வாக இல்லாமலும் ; சைல அஜினகுச’உத்தரம்தர்ப்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக விரித்து

6.11 ஒரு சுத்தமான தூய்மையான இடத்தில், குஷ் புல், மான் தோல், அதன் மேல் ஒரு துணி என்று ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி, மிகவும் உயரமாகவும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தம்முடைய இருக்கையை அமைக்க வேண்டும்.

தத்ரைகாக்ரம் மந: க்ரு'த்வா யதசித்தேந்த்ரியக்ரிய: /
உபவிச்'யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிசு'த்தயே // 6.12

தத்ர - அந்த; ஏகாக்ரம் - ஒருமுனைப்படுத்தி; மந: - மனத்தை ; க்ரு'த்வா - செய்ய; யதசித்த இந்த்ரியக்ரிய - மனம் புலன்களின் செயல்களை வசத்தில் வைத்துக்கொண்டு ; உபவிச்'ய - அமர்ந்துகொண்டு ; ஆஸநே - ஆசனத்தில் ; யுஞ்ஜ்யாத் - பயில வேண்டும்; யோகம் - யோகத்தை; ஆத்மவிசு'த்தயே - உள்ளத்தூய்மைக்காக

6.12 அந்தத் தூய்மையான இருக்கையில் நன்றாக அமர்ந்துகொண்டு, தம் மனத்தின் செயல்களையும், புலன்களின் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தும் பயிற்சியை ஒரு யோகி செய்ய வேண்டும்.

ஸமம் காயசி'ரோக்ரீவம் தரயந்நசலம் ஸ்திர: /
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திச'ச்'சாநவலோகயந் // 6.13

ஸமம் - சீராகவும் ;காயசி'ர: க்ரீவம் - உடல், தலை, கழுத்து இவற்றை ; தரயந் - வைத்துக்கொண்டு ; அசலம் - அசைவற்றதாக ; ஸ்திர: - அசையாமல் ஸ்திரமாக இருந்துகொண்டு ; ஸம்ப்ரேக்ஷ்ய - பார்வையை ஒருமுனைப்படுத்தி; நாஸிகாக்ரம் - நாசியின் நுனியின் மீது ; ஸ்வம் - தம்முடைய ; திச':- திசைகளை ; ச-மற்றும்; அநவலோகயந் - பாராமல்

6.13 உடல் தலை மற்றும் கழுத்து ஆகியவற்றை நேராக வைத்து, வேறு எந்தத் திசையிலும் பார்க்காமல், மூக்கின் நுனியின் மீது கவனத்தை வைக்க வேண்டும்.

ப்ரசா'ந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித: /
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: // 6.14

ப்ரசா'ந்தாத்மா - அமைதியான மனம்; விகதபீ: - அச்சமின்றி ; ப்ரஹ்மசாரிவ்ரதே - பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இயைந்து சென்று; ஸ்தித: - நிலைத்து நின்று; மந: - தன்மனத்தை; ஸம்யம்ய - அடக்கி ; மச்சித்த: - என்னையே மனத்தில் நினைத்தவனாக; யுக்த: - விழிப்புணர்வோடுகூடிய யோகி ; ஆஸீத - நிலைபெற்றிருக்க வேண்டும்; மத்பர: - என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக்கொண்டு

6.14 கலக்கமில்லாத அமைதியான மனத்தோடு அமர்ந்து பயமில்லாமல், மனத்தை பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இயைந்து மனத்தைக் கட்டுப்படுத்தி என்மீது ஒருமுகப்படுத்தி, என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொள்!

.........................................................................................................

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமானஸ: /
சா'ந்திம் நிர்வாணபரமாம் மத்சம்ஸ்தாமதிகச்சதி // 6.15

யுஞ்ஜந்- நிலைநிறுத்தி ; ஏவம் - இவ்விதம் ; ஸதா - இடையறாது ; ஆத்மாநம் - ஆத்மாவை ; யோகீ - யோகி; நியதமானஸ: - மனத்தைத் தன்வசப்படுத்திய ; சா'ந்திம் - அமைதியை ; நிர்வாணபரமாம் - பரமானந்தத்தின் பெரு நிலையாகிய; மத்சம்ஸ்தாம் - என்னிடம் விளங்குகிற; அதிகச்சதி - அடைகிறான்

6.15 மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் நிலைபெற்ற யோகியானவர் என் ராஜ்ஜியத்தையும் முக்தியையும் அமைதியையும் பெறுகிறார்.

.........................................................................................................

நாத்யச்'நதஸ்து யோகோ'ஸ்தி ந சைகாந்தமநச்'நத: /
ந சாதி ஸ்வப்நசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந // 6.16

ந - இல்லை ; அத்யச்'நத: து - மிகுதியாக உண்பவனுக்கும் ; யோக:

  • யோகம் ; ந அஸ்தி - கை கூடாது ; ச -கூட; ஏகாந்தம் - அறவே; அநச்'நத: -உண்ணாமல் இருப்பவனுக்கு ; ந - இல்லை; ச -கூட; அதிஸ்வப்நசீலஸ்ய - மிகுதியாக உறங்கும் இயல்புடையவனுக்கு; ஜாக்ரத: ஏவ ச - எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் ; அர்ஜுந - அர்ஜூனா ; ந- அல்ல

6.16 ஓ அர்ஜூனா, யோகா என்பது மிக அதிகமாக உண்பதோ அல்லது மிகவும் குறைவாக உண்பதோ அல்ல.

மிக அதிகமாக உறங்குவதோ அல்லது மிகக் குறைவாக உறங்குவதோ அல்ல.

.........................................................................................................

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு /
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா // 6.17

யுக்த ஆஹார - அளவோடு உண்டு நடமாடுகிறவனுக்கு; விஹாரஸ்ய - ஓய்வு; யுக்தசேஷ்டஸ்ய - உரிய முயற்சி செய்பவனுக்கும் ; கர்மஸு - கர்மங்களில் ; யுக்த ஸ்வப்ந அவபோதஸ்ய - அளவோடு உறங்கி விழித்திருப்பவனுக்கும் மட்டுமே ; யோக: - யோகம் ; பவதி - கை கூடுகிறது; து: கஹா - துக்கத்தைப் போக்குகிற

6.17 உணவு, ஓய்வு,பொழுதுபோக்கு, வேலை, தூக்கம், விழிப்பு-இவற்றை ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கும் ஒருவர் தம் துக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

.......................................................................................................

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே /
நி:ஸ்ப்ரு'ஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா //

யதா- எப்பொழுது ; விநியதம் சித்தம் - முற்றும் தம் வசப்படுத்தப்பட்டுள்ள உள்ளம்; ஆத்மநி ஏவ - பரமாத்மாவினிடமே; அவதிஷ்டதே - நன்கு நிலை பெற்றிருக்கிறதோ ; நி:ஸ்ப்ருஹ: - பற்று நீங்கிய மனிதன் ; ஸர்வகாமேப்ய: - அனைத்து யோகங்களிலிருந்தும்; யுக்த : - யோகத்தில் முதிர்ந்த நிலை பெற்றவன் ; இதி - என்று ; உச்யதே - அழைக்கப்படுகிறான்; ததா - அப்பொழுது

6.18 கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் ஒருவர், தம்முடைய ஆத்மாவிலேயே நிலைபெற்று, எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபடும்பொழுது, அவர் யோகத்தில் நிலைபெற்றவர் என்று சொல்லப்படுகிறார்.

.......................................................................................................

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா /
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: // 6.19

யதா - எப்படி ; தீப: - விளக்கின் சுடர்; நிவாதஸ்த: - காற்று வீசாத இடத் தில் இருக்கும் ; ந இங்கதே - அசையாமல் இருக்குமோ ; ஸா உபமா- அதே உவமை ; ஸ்ம்ரு'தா - கருதப்படுகிறது; யோகிந: - யோகியினுடைய ; யதசித்தஸ்ய - வெற்றிகொள்ளப்பட்ட மனத்திற்கும் ; யுஞ்ஜத: - ஈடுபடுகிற ; யோகம் - தியானத்தில் ; ஆத்மந: - ஆத்மாவில்

6.19 காற்று இல்லாத இடத்தில் விளக்கு அலையாது இருப்பது போல, யோகத்திலும் ஆத்ம தியானத்திலும் ஈடுபடுகிற யோகியின் மனமும் கட்டுப்பாட்டுடன் நிலையாக இருக்கும்.

யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா /
யத்ர சைவாத்மநாத்மாநம் பச்'யந்நாத்மநி துஷ்யதி // 6.20

யத்ர - எந்த நிலையில் ; உபரமதே - ஓய்ந்து நிற்கிறதோ ; சித்தம்- சித்தம் ; நிருத்தம் - கட்டுண்ட ; யோக ஸேவயா - யோகப்பயிற்சியினால் ; யத்ர - எந்த நிலையில் ; ச - மேலும் ; ஆத்மநா - ஆத்மாவினால் ; ஆத்மாநம் - ஆத்மாவை ; பச்'ரந் - நேரில்கண்ட ; ஆத்மநி ஏவ - ஆத்மாவிலேயே ; துஷ்யதி- திருப்தியடைகிறது

6.20 மனம் யோகாவில் அமைதியாகிறது, ஆத்மாவினால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவிலேயே திருப்தியடைகிறது.

........................................................................................

ஸூகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் /
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்'சலதி தத்தவத: // 6.21

ஸுகம் - ஆனந்தம்; ஆத்யந்திகம் - முடிவற்ற ; யத் - எந்த ; தத் - அதை; புத்தி க்ராஹ்யம் - தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் ; அதீந்த்ரியம் - புலன்களுக்கு அப்பாற்பட்ட ; வேத்தி - அறிந்தவன் ; யத்ர- எந்த நிலையில் ; ந - இல்லை ; ச - மேலும்; அயம் - இந்தயோகி ; ஸ்தித: - நிலைபெற்று ; தத்தவத: - சத்யத்திலிருந்து ; சலதி - விலகுவது

6.21 புலன்களைக் கடந்து செல்லும் புத்திசாலித்தனத்தால் உயர்ந்த ஆனந்தம் கிரஹிக்கப்படுகிறது. இதை அறிந்த மனிதர் ஸத்யத்தில் நிலைத்திருப்பார்.

........................................................................................

யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: /
யஸ்மிிஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே // 6.22

யம் - அந்த; லப்த்வா - பெற்றதும்; ச - மேலும் ; அபரம் - வேறொரு பேற்றை ; லாபம் - பலன் ; மந்யதே - கருதுவது; ந - இல்லை; அதிகம் - உயர்வானதென்று ; தத: - அதைக் காட்டிலும் ; யஸ்மிந் - இந் நிலையில் ; ஸ்தித: - நிலைபெற்ற யோகி ; ந - இல்லை; து: கேந - துயரத்தால் ; குருணா - மிகப்பெரிய ; அபி-கூட; ந விசால்யதே - கலக்கமடைதல்

6.22 இந்த உயர்ந்த நிலையை அடைந்ததால், ஒருவர் அதற்குப்பின் எவ்வளவு பெரிய பலனையும் சிறப்பாகக் கருதமாட்டார். இந்த

உச்சத்திலேயே நிலைத்திருப்பதனால், ஒருவர் மிகப்பெரிய துன்பம் வந்தாலுமே அதனால் அசைக்கப்படுவதில்லை.

தம் வித்யாத் துஃகஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம் /
ஸ நிச்'சயேந யோக்தவ்யோ யோகோநிர்விண்ண சேதஸா //

6.23

தம் - அந்த யோகத்தை ; வித்யாத் - அறிய வேண்டும்; துஃகஸம்யோக வியோகம் - துன்பமயமான ஸம்ஸார சேர்க்கையிலிருந்து விடுபடுவதும் ; யோகஸம்ஜ்ஞிதம் - யோகத்தில் நிலைபெற்று ; ஸ: - அவன்; நிச்'சயே ந

  • உறுதியுடன் ; யோக்தவ்ய: - ஆற்றப்பட வேண்டும்; யோக: - யோகம்; அநிர்விண்ணசேதஸா - சோர்வற்ற சித்தத்தோடு

6.23 உறுதியுடனும் தளராத நெஞ்சத்துடனும் யோகம் செய்யப்படும்பொழுது, புலன்களோடு தொடர்புகொள்வதால் ஏற்படும் துன்பங்கள் நீக்கப்படுகின்றன.

ஸங்கல்ப்பப்ரபவான்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநசே'ஷத: /
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: // 6.24

ஸங்கல்ப்பப்ரபவாந் - ஸங்கல்ப்பத்தினால் உண்டாகக்கூடிய ; காமாந் - விருப்பங்களையும் ; த்யக்த்வா - துறந்து ; ஸர்வாந்- எல்லா ; அசே'ஷத:

  • மீதமின்றி; மநஸா - மனத்தினால் ; ஏவ - நிச்சயமாய்; இந்த்ரியக்ராமம்
  • புலன்களின் கூட்டத்தை ; ஸமந்தத: - எல்லாப் புறங்களிலிருந்தும்; விநியம்ய - ஒழுங்குபடுத்தி

6.24 ஒருவர் தம் மனத்திலிருந்து தோன்றும் கற்பனைகளை முழுவதுமாக விட்டு விடுவதன்மூலம் தம் மனத்தைக்கொண்டு, புலன்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் முறைப்படுத்த முடியும்.

ச'நை: ச'நைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா /
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ரு'த்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் // 6.25

ச'நை: ச'நை:- படிப்படியாக ; உபரமேத் - உலகியலிலிருந்து ஒதுங்கச் செய்ய வேண்டும் ; புத்த்யா - புத்தியினால் ; த்ருதிக்ருஹீதயா - உறுதியாகப் பற்றிக்கொண்டு ; ஆத்மஸம்ஸ்தம் - பரமாத்மாவிடம் நிலை பெற; மந: - மனத்தை ; க்ரு'த்வா - செய்து; ந - இல்லை; கிஞ்சித் அபி

  • வேறு எதையும்; சிந்தயேத் - நினைத்தல்

6.25 புத்தியினால் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் நினைய்க்காத மனத்தோடு, மெதுவாகப் படிப்படியாக ஒருவர் ஆத்மாவில் நிலைகொள்ள வேண்டும்.

.........................................................................................................

யதோ யதோ நிச்'சரதி மநச்'சஞ்சலமஸ்திரம் /
ததஸ்ததோ நியம்யேதததாத்மந்யேவ வச'ம் நயேத் // 6.26

யத: யத: - எந்தந்த ஒலி முதலிய விஷயங்களின் காரணமாக உலகில்; நிச்'சரதி - அலைகிறதோ ; மந: - மனம் ; சஞ்சலம் - சஞ்சலமான; அஸ்திரம் - நிலையில்லாத ; தத: தத:- அந்தந்த விஷயங்களிலிருந்து ; நியம்ய - தடுத்து நிறுத்தி ;ஏதத் - இந்த; ஆத்மனி ஏவ - ஆத்மாவினிடமே ; வச'ம் நயேத் - வசப்படுத்த வேண்டும்

6.26 மனம், தனது இயல்பான தன்மைகளான நிலையில்லாமல் இருந்தால், இங்கும் அங்கும் அலை பாய்தல் போன்ற குணங்களால் எப்பொழுதெல்லாம் நிம்மதி இழந்திருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதை அங்கிருந்து மீட்டு, ஆத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும்.

.........................................................................................................

ப்ரசா'ந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம் /
உபைதி சா'ந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம் // 6.27

ப்ரசா'ந்தமநஸம் - மனம் நன்கு அமைதியடைந்தவனும் ; ஹி - நிச்சயமாக ; ஏநம் யோகிநம் - இந்த யோகியை ; ஸுகம் - ஸுகம் ; உத்தமம் - உயரிய; உபைதி - வந்தடைகிறது; சா'ந்தரஜஸம் ; தீவிரமான உணர்ச்சி க் கொந்தளிப்புகள் அடங்கியவனும் ; ப்ரஹ்மபூதம் - மேலான பரம்பொருளால் விடுவிக்கப்பட்ட; அகல்மஷம் - பாவங்கள் அற்றவனும்

6.27 அந்த மேலான பிரபஞ்ச இருப்புத்தன்மையால் அவர் எல்லாவகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுவதால், அமைதியான மன நிலையுடன் இருக்கும் யோகி உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.

.........................................................................................................

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ: /
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ச'மத்யந்தம் ஸுகமச்'நுதே //

6.28

யுஞ்ஜந் - ஈடுபடுத்தி ; ஏவம் - மற்றும் ; ஸதா- எப்போதும் ; ஆத்மாநம்

  • ஆத்மாவை ; யோகீ - யோகி ; விகதகல்மஷ: - பாவமற்ற ; ஸுகே ந - எளிதாக ; ப்ரஹ்மஸம்ஸ்பர்சம் - பரம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு ; அத்யந்தம் - மேலான ; ஸுகம் - ஆனந்தத்தை ; அச்'நுதே - அடைகிறான்

6.28 மனத்தை எப்போதும் ஆன்மாவில் நிலைபெறச்செய்து, வெளி உலகப் பொருட்களால் களங்கப்படாமல் இருக்கும் யோகியானவர் மேலான பரம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு மிக உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.

....................................................................................................

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி /
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ச'ந: // 6.29

ஸர்வபூதஸ்தம் - எல்லா உயிரனங்களிலும் ; ஆத்மாநம் - பரம்பொருள் ; ஸர்வபூதாநி - எல்லா உயிர்களை ; ச - மேலும் ; ஆத்மநி - பரம்பொருளிடத்தில் ; ஈக்ஷதே - காண்கிறான்; யோக யுக்தாத்மா - பரமாத்மாவிடம் மனத்தை ஈடுபடுத்திய; ஸர்வத்ர - எல்லாவற்றிலும் ; ஸமதர்ச'ந: - ஸமநோக்குடையவனுமான யோகி

6.29 யோகத்தில் நிலைப்பெற்று ஆத்ம தரிசனம் பெற்ற யோகி, மேலான பிரஹ்மத்தை எல்லா உயிர்களிலும் எல்லா உயிர்களை பிரஹ்மத்திலும் காண்கிறார்.

அவர், அந்தப் பிரஹ்மத்தை எங்கும் எல்லா இடத்திலும் பார்க்கிறார்.

....................................................................................................

யோ மாம் பச்'யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்'யதி /
தஸ்யாஹம் ந ப்ரணச்'யாமி ஸ ச மே ந ப்ரணச்'யதி // 6.30

ய: - எவன் ; மாம் - என்னை; பச்'யதி - பார்க்கிறானோ ; ஸர்வத்ர - எல்லா சராசரங்களிலும் ; ஸர்வம் ச - எல்லாச் சராசரங்களும் ; மயி - என்னிடம் ; பச்'யதி - பார்க்கிறானோ ; தஸ்ய - அவனுக்கு; அஹம் - நான் ; ந ப்ரணச்'சாமி - மறைவதில்லை ; ஸ: ச - அவனும் ; மே - எனக்கு ; ந ப்ரணச்'யதி - மறைவதில்லை

6.30 எல்லா இடத்திலும், எல்லாப் பொருள்களிலும் என்னைப் பார்க்கும் ஒருவரின் பார்வையிலிருந்து நான் மறைவதில்லை;

அவரும் என் பார்வையிலிருந்து மறைவதில்லை.

.......................................................................................................

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: /
ஸர்வதா வர்த்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்த்ததே // 6.31

ஸர்வபூதஸ்திதம் - அனைத்தும் சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும்; ய: - எவன் ; ஏகத்வம் - ஒன்றிய நிலையில் ; மாம் - என்னை ; பஜதி

  • வழிபடுகிறானோ ; ஆஸ்தித:- நிலைபெற்று ; ஸர்வதா - எல்லா வகையிலும் ; வர்த்தமாந: அபி - என்னுடனேயே; ஸ: யோகீ - அந்த யோகி ; மயி - என்னிடத்திலேயே ; வர்த்ததே - இருக்கிறார்

6.31 எல்லா வகையிலும் என்னோடு ஒருமித்து இணக்கமாய் இருந்துகொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கும் என்னை வழிபடும் ஒருவர் என்னுடனேயே இருக்கிறார். .......................................................................................................

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்'யதி யோऽர்ஜுந /
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: // 6.32

ஆத்ம ஔபம்யேந - தன்னைப்போலவே ; ஸர்வத்ர - எல்லா சராச ரங்களையும் ; ஸமம் - ஸமநோக்கில் ; பச்'யதி - பார்க்கிறானோ ; ய:

  • எந்த யோகி ; அர்ஜுந - அர்ஜுனா! ; ஸுகம் - ஸுகத்தையும்; வா - மேலும் ; யதி வா - அல்லது ; து:கம் - துக்கத்தையும் ; ஸ: யோகீ- அந்த யோகி ; பரம: - உயர்ந்தவன்; மத: - கருத்து

6.32 ஓ அர்ஜுனா! என்னுடைய கருத்தின் படி, தம்முடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைப்போலவே, பிறருடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைச் சமமாகப் பார்ப்பவர்தான் சிறந்த யோகி! .......................................................................................................

அர்ஜுந உவாச

யோ ऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந /
ஏதஸ்யாஹம் ந பச்'யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் // 6.33

அர்ஜுந உவாச - அர்ஜுனர் சொன்னார் ; ய: - இந்த ; அயம் - அமைப்பு; யோக: - யோகம்; த்வயா - உங்களால் ; ப்ரோக்த: - சொல்லப்பட்டதோ; ஸாம்யேந - ஸமபாவனையோடுகூடியதென்று ; மதுஸூதந - மதுஸூதனா ; ஏதஸ்ய - அந்த யோகத்தினுடைய ; அஹம் - நான் ; ந பச்'சாமி - பார்க்கவில்லை; சஞ்சலத்வாத் - சஞ்சலத்தினால் ; ஸ்திதிம் - நிலைமை ; ஸ்திராம் - உறுதியான

அர்ஜூனன் சொன்னது

6.33 ஓ மதுசூதனா! மனம் அமைதியில்லாமலும் நிலையில்லாமலும் இருக்கிற இந்த நிலைமையில், நீர் சொன்ன இந்த யோக அமைப்பை என்னால் பார்க்க முடியவில்லை.

...........................................................................................................

சஞ்சலம் ஹி மந: க்ரு'ஷ்ண ப்ரமாதி பலவத்த்ரு'டம் /
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் //

சஞ்சலம் - அலைகிற ; ஹி - நிச்சயமாக ; மந: - இந்த மனம் ; க்ரு'ஷ்ணா - கிருஷ்ண ; ப்ரமாதி - புலன்களை மிகவும் கலக்கும் தன்மையுடையது ; பலவத் - வலிமை பொருந்தியது ; த்ரு'டம் - திடமானது ; தஸ்ய - அதை ; அஹம் - நான் ; நிக்ரஹம் - அடக்குதல் ; மந்யே - நினைக்கிறேன்; வாயோ: இவ - காற்றைத் தடுத்து நிறுத்துவது போன்று; ஸுதுஷ்கரம் - மிகவும் கடினமானது

6.34 ஓ கிருஷ்ணா! அலைபாயும் மனமானது திடமான, உறுதியான குழப்பத்தில் இருக்கிறது. காற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்.

...........................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

அஸம்ச'யம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் /
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ரு'ஹ்யதே //

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; அஸம்ச'யம் - ஸந்தேகமன்றி; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே ; மந: - மனம் ; துர்நிக்ரஹம் - வசப்படுத்துவதும் கடினம்தான் ; து - ஆனால் ; சலம் - சஞ்சலமானதுதான் ; அப்யாஸேந - பயிற்சியினாலும் ; கௌந்தேய - குந்தியின் மகனான அர்ஜூனா ; வைராக்யேண ச - பற்றற்ற தன்மையாலும்; க்ரு'ஹ்யதே - வசப்படுத்தப்படுகிறது

பகவான் சொன்னது

6.35 ஓ வலிமையான கைகளை உடைய குந்தியின் மகனே! அலையும் மனத்தைக் கட்டுப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் கடினமான விஷயம்தான். ஆனால் பயிற்சியினாலும் பற்றற்ற தன்மையாலும் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: / வச்'யாத்மநா து யததா ச்'க்யோऽவாப்தുമുபாயத: // 6.36

அஸம்யத ஆத்மநா - மனத்தை வசப்படுத்த இயலாதவனால் ; யோக:- யோகம் ; துஷ்ப்ராப: - அடைய முடியாதது ; இதி - என்பது ; மே மதி:

  • என் கருத்து; வச்'ய ஆத்மநா - மனத்தை அடக்கிய ; து - ஆனால் ; யததா - முயற்சியுள்ள மனிதனால்; ச்'க்ய: - ஸாத்யமானது ; அவாப்தும் - யோகத்தை அடைவது ; உபாயத: - பயிற்சியினால்

6.36 என்னுடைய கருத்துப்படி, மனம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவர் யோகத்தை அடைவது கடினமே!

ஆனால் தகுந்த வழிமுறைகள் மூலம் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை அடைவது சாத்தியமே!

அர்ஜுந உவாச

அயதி: ச்'ரத்தயோபேதோ யோகாச்சலிதமானஸ: / அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ரு'ஷ்ண கச்சதி // 6.37

அர்ஜூந உவாச - அர்ஜூனா சொன்னார் ; அயதி :- மன அடக்கம் இல்லாமையினால் ; ச்'ரத்தயா உபேத: - யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும் ; யோகாத் - யோகத்திலிருந்து; சலித மானஸ: - அலைபாய்கிற மனம் உடைய ; அப்ராப்ய - அடையப்பெறாது ; யோக ஸம்ஸித்திம்

  • யோகத்தை அடைதல் ; காம் கதிம் - எந்தக் கதியை ; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; கச்சதி - அடைகிறான்

அர்ஜுனன் சொன்னது

6.37 ஓ கிருஷ்ணா! ஒருவர் யோகாவை நம்பிக்கையுடன் செய்தும் அலையும் மனத்தின் காரணமாக யோகத்தை அடைய முடியவில்லையென்றால் அவர் எந்த இடத்தை அடைவார்?

கச்சிந்நோபயவிப்்ரஷ்டச்'சிந்நாப்்ரமிவ நச்'யதி /
அப்்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்்ரஹ்மண: பதி // 6.38

கச்சித் ந - இரண்டிலும் இல்லாமல்; உபயவிப்்ரஷ்ட: - இரண்டு வழிகளினின்றும் நழுவி; சிந்ந அப்ட்ரம் இவ - சிதறிய மேகம் போல ; நச்'யதி - அழிந்து போதல்; அப்்ரதிஷ்ட: - உறுதியாக நிலைபெறாமல் ; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே ; விமூட: - மயங்கி ; ப்்ரஹ்மண: - பகவானை அடைகிற ; பதி - மார்க்கத்தில்

6.38 ஓ, வலிமையான தோள்களையுடைய கிருஷ்ணா! தெய்வீகத்தை அடையச் செய்யும் பாதையிலிருந்து விலகி நடக்கும் ஒருவர், உறுதியாக நிலைபெறாமல் சிதறிய மேகம்போல் அழிந்து போகிறாரா?

.......................................................................................................

ஏதந்மே ஸம்ஸ'யம் க்்ரு'ஷ்ண சேத்துமர்ஹஸ்யஸே'ஷத: /
த்வதந்ய: ஸம்ஸ'யஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே // 6.39

ஏதத் - இந்த ; ஸம்ஸ'யம்- ஸந்தேகத்தை ; மே - என்னுடைய ; க்்ரு'ஷ்ண - கிருஷ்ணா; சேத்தும் - போக்குவதற்கு; அர்ஹஸி - தகுதியானவர் ; அஸே'ஷத: - முழுவதுமாக ; த்வத் அந்‌ய: - உங்களைத் தவிர வேறொருவர் ; ஸம்ஸ'யஸ்ய - சந்தேகத்தை ; அஸ்ய- இந்த ; சேத்தா - போக்குபவர் ; ந - இல்லை; ஹி - நிச்சயமாக ; உபபத்யதே - கிடைப்பது ஸாத்யம்

6.39 இதுதான் என்னுடைய சந்தேகம். ஓ கிருஷ்ணா ! உன்னை வேண்டிக் கேட்கிறேன். நீர்தான் இதை முழுவதுமாக நீக்க வேண்டும். நிச்சயமாக இந்தச் சந்தேகத்தை நீக்க உம்மைவிட வேறு யாருமே இங்கே இல்லை.

.......................................................................................................

ஸ்ரீபகவானுவாச

பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸ'ஸ்தஸ்ய வித்யதே /
ந ஹி கல்யாணக்்ரு'த் கச்'சித்துர்கதிம் தாத கச்சதி // 6.40

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; பார்த்த - அர்ஜூனா! ; ந - இல்லை ; ஏவ - மட்டும்; இஹ - இவ்வுலகில் ; ந - இல்லை ; அமுத்ர - அடுத்த பிறவியிலும் ; விநாஸ': - அழிவு; தஸ்ய - அந்த மனிதனுக்கு ; வித்யதே - இருக்கிற; ந - இல்லை; ஹி - நிச்சயமாக ; கல்யாணக்்ரு'த்

  • நல்ல செயல்களில் ; கச்'சித் - எந்த மனிதனும் ; துர்கதிம் - தாழ்ந்த நிலையை ; தாத - பிரியமானவனே ; கச்சதி - போவது

பகவான் சொன்னது

6.40 பிரிதாவின் மகனே! நல்ல செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்பவன், இந்த உலகத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் அழிவைச் சந்திக்க மாட்டான்; அவமதிப்பையும் சந்திக்க மாட்டான்.

.........................................................................................................

ப்ராப்ய புண்யக்ரு'தாம் லோகாநுஷித்வா சா'ச்'வதீ: ஸமா: /
சு'சீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்்ரஷ்டோ ऽபிஜாயதே //

ப்ராப்ய - அடைந்த பிறகு ; புண்யக்ரு'தாம்- புண்ணியம் செய்தவர்களுக்குரிய ; லோகாந் - ஸ்வர்கம் முதலிய உயர்ந்த உலகங்களை ; உஷித்வா - வாழ்ந்த பிறகு; சா'ச்'வதீ: ஸமா: - பல்லாண்டுகள்; சு'சீநாம் - நல்லொழுக்கமுள்ள; ஸ்ரீமதாம் - செல்வந்தர்களுடைய ; கேஹே -வீட்டில் ; யோகப்்ரஷ்ட: - யோகத்தினின்றும் வழுவியவன் ; அபிஜாயதே - பிறக்கிறான்

6.41 யோக முறையிலிருந்து வழுவியவர், இந்த உலகில் நீண்ட காலம் வாழ்ந்து பல நல்ல தர்ம செயல்களைச் செய்கிறார். பிறகு, செல்வம் நிறைந்த ஒழுக்க சீலர் வீட்டில் பிறப்பெடுக்கிறார். .........................................................................................................

அதவா யோகிநாமேவ குலே பவ்தி தீமதாம் /
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ரு'ச'ம் //

அதவா - அல்லது ; யோகிநாம் - யோகிகளுடைய; ஏவ - நிச்சயமாக; குலே - குலத்திலே; பவதி - பிறக்கிறான்; தீமதாம் - ஞானிகளான ; ஏதத் - இந்த ; ஹி - ஐயமன்றி ; துர்லபதரம் - மிகவும் அரிதாகவே உள்ளது; லோகே - இந்த உலகில் ; ஜந்ம - பிறப்பு; யத் - எந்த ; ஈத்ரு'ச'ம் - இத்தகைய

6.42 ஒரு யோகி கண்டிப்பாக ஞானமுள்ள மக்கள் உள்ள குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார். உண்மையில், இது போன்ற பிறவி இந்த உலகத்தில் பெறுவதற்கரியது.

தத்ர தம் புத்திஸம்பயோகம் லபதே பௌர்வ தேஹிகம் /
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தன // 6.43

தத்ர - அங்கு ; தம் - அந்த ; புத்திஸம்பயோகம் - புத்திஸம்பயோகத்தை ; லபதே - பெறுகிறான் ; பௌர்வ தேஹிகம் - முற்பிறவியில் சேர்த்து வைக்கப்பட்ட ; யததே - முயற்சி செய்கிறான் ; ச - மேலும் ; தத: - அதனால் ; பூய: - மறுபடியும் ; ஸம்ஸித்தௌ - அடைவதற்காக ; குருநந்தன - குருநந்தனான அர்ஜூனா

6.43 ஓ குருவம்சத்தில் வந்தவனே! இப்படிப்பட்ட பிறவியை எடுப்பதால், அவர் முற்பிறவியின் யோக அறிவை பெற்று மீண்டும் யோகத்தை அடைய முயற்சி செய்கிறார்.

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவசோ'பி ஸ: /
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ச'ப்தப்ரம்ஹாதிவர்ததே // 6.44

பூர்வ அபியாஸேந - முற்பிறப்பின் பயிற்சியினால் ; தேந - அதன் மூலம் ; ஏவ - நிச்சயமாக; ஹ்ரியதே - ஈர்க்கப்படுகிறான் ; ஹி - சந்தேகமின்றி ; அவச': அபி - தானாகவே ; ஸ: - அவன் ; ஜிஜ்ஞாஸி: அபி - அறிய விரும்பபவன்கூட; யோகஸ்ய - யோகத்தை ; ச'ப்தப்ரம்ஹ - வேதங்கள் ; அதிவர்ததே - கடந்து செல்கிறான்

6.44 அவர் முன்ஜன்ம பயிற்சியின் காரணமாக, தானாகவே யோகாவினால் கவரப்பட்டு, யோகத்தை அறிய ஆவல் உடையவராக இருக்கிறார்; அவர் நிச்சயமாக வேதங்களையும் கடக்கிறார்.

ப்ரயத்நாத்யதமானஸ்து யோகீ ஸம்சு'த்தகில்பிஷ: /
அனேகஜன்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் // 6.45

ப்ரயத்நாத் - முழு முயற்சியுடன் ; யதமான: - பெரு முயற்சி செய்யும் ; து - மற்றும் ; யோகீ - யோகியோ ; ஸம்சு'த்த கில்பிஷ: - அனைத்துப் பாவங்களும் நீங்கப்பெற்று ; அநேக ஜன்ம - பல பிறவிகளிலும் ; ஸம்ஸித்த: - அடையப்பட்ட; தத: - அக்கணமே ; யாதி - அடைகிறான்; பராம்கதிம் - உயர்ந்த நிலையை

6.45 ஒரு யோகி, தம்முடைய பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம், பல பிறவிகளுக்குப் பிறகு அவருடைய பாவங்களை எல்லாம் களைந்துவிட்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறார்.

தபஸ்விப்யோதிகோ யோகீ ஜ்ஞானிப்யோபி மதாதிக: /
கர்மிப்யச்'சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந //6.46

தபஸ்விப்ய: - தவம் செய்வோர்களைக் காட்டிலும் ; அதிக: - மேலானவன் ; யோகீ - யோகியானவன் ; ஜ்ஞானிப்ய: அபி - சாஸ்திரங்களை அறிந்தவர்களைக் காட்டிலும் ; மத: - கருதப்படுகிறான் ; அதிக: - மேலானவனாக ; கர்மிப்ய: - பயனில் ஆர்வம்கொண்டு கடமையைச் செய்பவர்களைக் காட்டிலும் ; ச - மேலும் ; அதிக: - உயர்ந்தவன் ; யோகீ - யோகி; தஸ்மாத் - ஆகையால் ; யோகீ பவ - யோகி ஆவாயாக; அர்ஜுந - அர்ஜூனா

6.46 ஒரு துறவியைவிட, ஞானமுடைய வரைவிட, செயலின் பலனுக்காக வேலை செய்பவரைவிட ஒரு யோகியே சிறந்தவர். அதனால் ஓ அர்ஜூனா! நீ யோகியாவாயாக!

...........................................................................................

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா /
ச்'ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:// 6.47

யோகிநாம்அபி - யோகிகளிலும்; ஸர்வேஷாம் - அனைத்து; மத்கதேந - என்னிடம் ஈடுபாடு கொண்ட; அந்தராத்மநா - என்னையே நினைத்து; ச்'ரத்தாவாந் - ச்ரத்தையுடைய யோகியோ; பஜதே - வழிபடுகிறானோ; ய: - எவன்; மாம் - என்னை; ஸ: - அந்த யோகியே; மே - எனக்கு; யுக்ததம: - மிகவும் உயர்ந்த வகை; மத: - கருதப்படுகிறான்

6.47. யார் ஒருவர்,எப்போதும் என்னிலேயே வாழ்ந்து, என்னைப் பற்றியே நினைத்து, என்னையே முழு நம்பிக்கையுடன் பூஜித்து, என்னோடு தொடர்புடையவராக இருக்கிறாரோ, அவரே யோகிகளுள் சிறந்தவர்.

...........................................................................................

ஓம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம்
யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோऽத்யாய: ॥

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘ஆத்மஸம்யமயோகம்’ எனப்பெயர் படைத்த ஆறாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

அத்வா யோகிநாமேவ குலே 6.42 அநாச்’ரித: கர்மபுலம் கார்யம் 6.1 அயதி: ச்’ரத்தயோபேதோ 6.37 அஸம்யதாத்மநா யோகோ 6.36 அஸம்ச’யம் மஹாபாஹோ 6.35 ஆத்மௌபம்யேந ஸர்வத்ர 6.32 ஆருருக்ஷோர்முநேர்யோகம் 6.3 உத்தரேதாத்மநாத்மாநம் 6.5 கச்சிந்நோபயவிப்்ரஷ்டச்’சிந்நாப்்ரமிவ 6.38 சஞ்சலம் ஹி மந: க்ரு’ஷ்ண 6.34 ஜிதாத்மந: ப்ரசா’ந்தஸ்ய 6.7 ஜ்ஞாநவிஜ்ஞாநத்ரு’ப்தாத்மாகூடஸ்தோ 6.8 தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே 6.43 தத்ரைகாக்ரம் மந: க்ரு’த்வா 6.12 அத்வா யோகிநாமேவ குலே 6.42 தம் வித்யாத் து:கஸம்யோகவியோகம் 6.23 நாத்யச்’நதஸ்து யோகோऽஸ்தி 6.16 பார்த நைவேஹ நாமுத்ர 6.40 பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே 6.44 யதோ யதோ நிச்’சரதி 6.26 யோகிநாமபி ஸர்வேஷாம் 6.47 யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் 6.10 யோ மாம் பச்’யதி ஸர்வத்ர 6.30 யோ ऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: 6.33 ச’நை: ச’நைருபரமேத்புத்த்யா 6.25 சு’சௌ தேசே’ ப்ரதிஷ்டாப்ய 6.11 ஸமம் காயசி’ரோக்ரீவம் தாரயந்நசலம் 6.13 ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி 6.29 ஸர்வபூதஸ்திதம் யோ மாம் 6.31 ஸங்கல்ப்பரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா 6.24 ஸர்வபூதஸ்திதம் யோ மாம் 6.31

ஸங்கல்பப்ரபவாங்காமாம்ஸ்த்யக்த்வா6.24
ஸுகமாத்யந்திகம்6.22
ஸுஹ்ரு'ந்மித்ரார்யுதாஸீநமத்6.9