பரமஹம்ஸ நித்யானந்தர்-ஒர் அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவர்களுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் வந்துள்ளேன். என்று சொல்லும் கருணை சக்தி... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தர். ஒரு அவதார புருஷர் வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே!!!
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள்... என்னுடைய வாழ்வு... என்னுடைய ஆசீர்வாதம்...என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பரமஹம்ஸர் எளிமையாக விவரிக்கின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீக்ஷைகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும் சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதர்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் பரமஹம்ஸ நித்யானந்தர்.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு... ஏற்கனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீக்ஷையால் தரும் பரமஹம்ஸ நித்யானந்தரை- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள்...உங்களுக்கு நீங்களே!

தசாப்தத்தில் (10ஆம் வருடத்தில்) நுழைகிறது 'நித்யானந்த தியானபீடம்'
பரமஹம்ஸ நித்யானந்தர் பங்களித்த பரிமாணங்கள்...
மனிதருக்கு...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை
சமுதாயத்திற்கு...

பரிவுடன் பண்பை ஊட்டும் தந்தை

புதுயுகம் படைக்கும் பேரொளி

வேத பாரம்பரியத்தைப் பரவச் செய்பவர்

வேதனைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு...

சத்தியமே வாழ்க்கை

அநீதியை தாங்கும் திண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி...பரமஹம்ஸ நித்யானந்தரைப் பற்றி...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் இருக்கும் 1 கோடி மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்த வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..
பரமஹம்ஸ நித்யானந்தர், நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்த்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை,
உறவுகளிலிருந்து மதம்வரை,
வெற்றியிலிருந்து ஸந்யாஸம்வரை என
எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு
தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும்
ஓர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத்
தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும்
நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே
தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர்
போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும்
மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு
கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான
சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு சாதாரணமான படைப்பாளி..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது, மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்!
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள
எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக
அனுபவங்களின் உண்மைத்தன்மையின்
ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக
முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நுட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு
விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு
தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான
மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக
இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் ‘தீக்ஷை’ மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய ‘தீக்ஷை’யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு பரமஹம்ஸ நித்யானந்தர்.
- நன்றியுடன் நித்யானந்த தியானபீடம்

தியான சிகிச்சை
தீக்ஷையின்அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீக்ஷை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீக்ஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீக்ஷை என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்நதான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற உணர்வுறவுவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்: இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த ‘ஆன்மிக தியான சிகிச்சை’தான். ஒரு சாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் பரமஹம்ஸ நித்யானந்தர், பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேள்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(பரமஹம்ஸர் தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள...
| PLACE | PERSON NAME | CONTACTS | PLACE | PERSON NAME | CONTACTS |
|---|---|---|---|---|---|
| CHENNAI Adayar | Shanmuganathan S.Suryaprakasam | 9840124482 9344102769 | Thambaram | Poomaran S.Muthu Krishnan | 94458 10773 99446 99982 |
| Anna Nagar | Uma Sundar Rajasekar | 9840338386 9940415116 | Tiruvotriyur | Sivasubramanian Arunachalam | 94440 09510 89034 73118 |
| Mylapore | Vishwarupananda Kumarakurubaran | 9003171698 9003198978 | Poonamallee | V.Saravanan | 98401 97706 81248 20990 |
| Porur | Singadurai J.Balakumari | 9566191584 9791058330 | Avadi | Nithyananadan | 90802 85873 |
| Pallakaranai | A.Ravindran R.Vijayakumar | 9710784334 9841584315 | Ponneri | Chandrasekaran | 94446 72021 |
| Madipakkam | Alagar.P Balakumar | 99405 50199 98417 98801 |
தியான சிகிச்சை மையங்கள்: தியான சிகிச்சை, உடல்ரீதியான நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியோடு நாம் ஒரு ஆழமான ஆன்மிகத் தொடர்பை நிலைநாட்டிக் கொள்வதற்கும் உதவுகிறது. நாம் பட்டறிவின் கேள்விகளையும் குழப்பங்களையும் கடந்து செல்வதற்கும் உதவுகிறது. இன்று பரமஹம்ஸருடன் ஆழமான தொடர்புடைய பலரும் பரமஹம்ஸரின் தியான சிகிச்சையால் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டவர்கள்தான். பரமஹம்ஸ நித்யானந்தர், தாம் மட்டும் தியான சிகிச்சை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், தம்மைப் போன்றே தியான சிகிச்சை செய்து மக்களின் வாழ்வில் வளம் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக 3000 நபர்களுக்கு தியான சிகிச்சை தீக்ஷை கொடுத்து, 3000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியிருக்கிறார். உலகம் முழுக்க பரவியிருக்கும் இவர்கள், தியான சிகிச்சை மையங்களை நிறுவி, தினமும் இலவச தியான சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள்.
| kanchipuram | jayaseelan | 8524987160 | | Vellore | Prakasam Ravi Krishnan | 9444271257 8015118364 | | Vanniyambadi | Govindaraj G.Selvamani | 9345936553 9245261260 | | Tirupattur | Siva Shanmugam C.Aravindan | 9443737764 9443039890 | | T.V.Malai | Jaya Kumar R. krishanmurthy | 9443233789 9994976988 | | Chengam | Saravanan | 9894759137 | | Villupuram | Manikandan | 9843942310 | | Anniyur | Shanthi | 9843711977 | | Madurai | Muthu krishnan Vishnu Varadhan | 9843264775 9865362300 | | South Madurai | Saravanan | 9894815588 | | Dindukkal | Kannan Rajesh | 9787736611 8148725394 | | Rajapalayam | Muthukirushnan Murugesa Raja | 9042544941 9894032947 | | kariyapatti | Nithyananda Dasan | 9626236301 | | Arupukottai | Latha Amirtha lakshmi | 9047256915 9942170649 | | Sattur | Senthil Asaithambi | 9952156818 9443160725 | | Sankkaran Kovil | Shaktivel | 9600550390 | | Theni | Maaharajan Paramasivan | 9788430087 9363046559 | | Tirunelveli | Mahendran | 9655239979 | | Thoouthukudi | Arunachalam | 9363313326 | | Tiruchendur | Muniasamy Velmurugan | 7358925651 8056657287 | | Nagerkoil | Kuttalam Pillai Srinivasan | 9442170755 8762944481 | | Trichy | Govindaraj | 9952889598 | | Thanjavur | Kalaiselvan | 9442276441 | | Sirkali | Kannan | 9942633199 | | Pudukottai | Arumugam | 9443229230 | | Ariyalur | Baskaran | 9787816641 | | The Nilgiris | Chandru | 9486363333 | | Coimbatore | Mahendran Suresh | 9994722844 9843423544 | | Tirupur | Venkatesan | 9442510335 9944635550 | | Namakal | Chandran | 9443388437 | | Oorakarai | Chandrasekar | 9443195661 | | Salem | Nithyananda Rishi Mallikarjunan | 9443235262 9363099959 | | Seeragapadi | Chenna Krishnan | 9894733841 | | Mettur | Boopathy | 9442250529 | | Dharmapuri | Rahnam | 9952779752 | | Hosur | Saravanababu | 9486291678 | | Pondicherry | Sathya Devan | 9585577448 | | Embalam | Pandurangan | 9486522190 | | Alangombu | Velliyangiri | 9943621291 | | Katpadi | Selvarajan | 9786333643 | | Thalaivasal | Ponnusamy.M.P | 9865814508 | | Pattanam | Dr.Senguttuvan | 9443217812 | | Cuddalore | Muthukrishnan | 9790114497 | | Madipakam | Subramanian | 9840661248 | | Mayiladuthurai | Manikandan Ramadevi | 9585663156 9360121412 |
நித்ய தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடிடும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உற்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...
தெளிவு கிடைத்தது
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்ற இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துக்களும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீக்ஷையும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி,
திருவண்ணாமலை.
94447 05839
உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கீ ரன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தே தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர். 81242 23545
அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழ்க்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை. 95000 01867
முன்பதிவிற்கு... 072 00 00 33 11 072 00 00 33 22
http://www.nithyananda.org/events
நித்ய க்ரியா யோகா
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகரிப்பு
மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும்
கவலை, சோர்வு மற்றும் கர்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும்
மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள்...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப சமாதி தீக்ஷை வழங்கப்படுகிறது.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...
வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருத்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
- திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை - 98407 02829.
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த கர்ப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சனையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். பரமஹம்சரிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, பரமஹம்ஸர் என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன்.
- திருமதி. ஜெயந்தி, களையூர், 94862 67440.
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது.
- திரு. சேகர், பொன்னேரி, 94446 72021
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிற்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த பரமஹம்ஸருக்கு கோடான கோடி நன்றிகள்.
- திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவளூர் குட்டப்பட்டு, திருச்சி, 94430 22124.
முன்பதிவிற்கு...072 00 00 33 11 072 00 00 33 22
http://www.nithyananda.org/events
Inner Awakening
(அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான பரமஹம்ஸ நித்யானந்தரால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் പങ്കுகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணர்ந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த
அனுபவங்கள்...
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.



IA வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
- உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
- பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
- உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும் தியான முறைகள்
- உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்
- செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
- உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் புகுத்தும் தியான முறைகள்
- தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
- தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
- உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள் http://innerawakening.org/
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. சுவாமிஜி! மிகவும் நன்றி!" -அனுராதா ஆறுமுகம்
ஆனந்த சேவை
அன்னதானம்: ‘அதிதி தேவோ பவ’...நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் 10,000 - த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
நித்யானந்த பரம்பரை: பரமஹம்ஸ நித்யானந்தர் நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நித்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்தர்களாகவும் தீக்ஷை பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் : சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படிந்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழு த்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமுதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் : வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியர் பயிற்சி மையம் : தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் 300 க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
Services:
http://www.nithyananda.org

ஆனந்த யோகம்
ஆனந்த வாழ்க்கை கல்வி
முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - 2 வருடங்கள்
உங்களுடன் ஒரு நிமிடம்...
நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும்
விரம்பியதை அடையும் துணிவும்
சுற்றத்தைக் கவரும் கனிவும்
பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம்.
► ஆனந்த யோகத் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை...
உடல் ஆரோக்கியத்தையும்,
மனத்தெளிவையும்,
உணர்ச்சிச் சமநிலையையும்,
வாழ்வை மேம்படுத்தும் உணர்வையும்
தரும் தியான முறைகளும், வாழ்க்கை
முறைகளும் கற்றுத் தரப்படும்.
அனுமதி இலவசம்
நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
விவரங்களுக்கு...
72 00 00 33 11
72 00 00 33 22
www.nithyananda.org & www.nithyananda.tv
கல்பதரு
உங்கள் எண்ணங்களை நிஜமாக்கும் முழுநாள் தியான முகாம் (ஜீவன் முக்த விஞ்ஞானமும் தியான நுட்பங்களும் கற்றுத் தரப்படுகின்றன.)
வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தரிடமிருந்து பெறும் தீக்ஷை மற்றும் ஆசீர்வாதத்தினால் உங்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த சக்தியை வெளிப்படுத்தி... உங்களின் வாழ்வின் நிலைமைகளை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
முன்பதிவிற்கு
072 00 00 33 11
072 00 00 33 22

Our International Ashrams:
USA Los Angeles NITHYANANDA VEDIC TEMPLE, 9720 Central Avenue, Montclair, CA 91763 Ph.: +1 909 625 1400 E mail: [email protected], [email protected] Web: www.NithyanandaVedicTemple.org
Seattle
NITHYANANDA VEDIC TEMPLE,
2877, 152nd Ave NE, Bldg #13,
Redmond, WA
Ph.: +1 425-749-7073
Web: http://www.vedictempleseattle.org/
Columbus, Ohio
NITHYANANDA VEDIC TEMPLE,
820 Pollock Rd,
Delaware, OH - 43015
Web: http://www.vedictempleohio.org/
San Jose
NITHYANANDA VEDIC TEMPLE,
513, Los Coches Street,
Milpitas, CA – 95035
Ph.: +1 408-263-6375
Email: [email protected]
Web: http://www.vedictemplebayarea.org/
Phoenix
NITHYANANDA VEDIC TEMPLE,
6605 S 39th Ave
Phoenix, AZ 85041
Ph.: +1 602-268-0233
Email: [email protected]
Web: http://vedictemplephoenix.org/
India (Head Quarters)
Bengaluru, Karnataka
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri, Kallugopahalli,
Off Mysore Road, Bidadi - 562109
Ramnagara District, Karnataka, INDIA
Ph.: +91 80 2720 2084 / +91 97422 03311
Email: [email protected]
Web: http://nithyananda.org/ashram
Hyderabad, Andhra Pradesh
Nithyananda Dhyanapeetam
Nithyananda Giri,
Pashambanda Sathamarai Village,
Shamshabad Mandal,
Rangareddy District – 501218
Ph.: +91-9866500350, +91-9396482358
Email: [email protected]
Web: http://www.dhyanapeetam.org/web/ap/
Tiruvannamalai, Tamil Nadu Nithyananda Dhyanapeetam, Nithyanandapuri, Girivala path, Adiannamalai Tiruvannamalai – 606 604 Tamilnadu, INDIA Ph.: +91-4175-237666, 094449 91089 E-mail: [email protected] URL: http://arunachala.nithyananda.org/
MALAYSIA
Nithyananda Dhyanapeetam Malaysia ,
14, Jalan Desa Gombak 5,
Taman Desa Gombak,
53000 Kuala Lumpur, MALAYSIA
Ph.: +601 78861644 / +601 22350567
Email: [email protected]
[email protected]
இணையத்தளம்
www.nithyananda.org

மேலும் தெரிந்துகொள்ளலாம்... இலவசமாக (YOU can Explore in Depth)
நித்யானந்த வித்யாலயா
http://en-education.nithyananda.org/
eN-Education
நித்யானந்த வேத கோவில்கள் http://vedic-temples.nithyananda.org/
நித்யானந்தா டி.வி http://nithyananda.tv/
நித்யானந்தரின் புத்தகங்கள் https://lifeblissprograms.org/books
நித்யானந்தரின் கேலரியா http://www.sacredartsstore.com/
நித்யானந்தரின் வீடியோ http://www.youtube.com/lifeblissfoundation
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல் http://enpregnancycare.nithyananda.org/
உலக அமைதிக்கான கூட்டு முயற்சி http://www.minute4peace.org/
101 நித்ய க்ரியைகள் http://www.nithyananda.org/nithya-kriyas
நித்யானந்தரின் சொற்பொழிவுகள்-ஆடியோ http://nithyananda.tv/online-radio/
இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி http://newgen.nithyananda.org/
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்-வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் http://www.youtube.com/guaranteedsolution
நித்யானந்தம் - ஆங்கில மாத இதழ் http://nithyanandatimes.org/
இன்னர் அவேக்கனிங்-தியான முகாம் http://innerawakening.org/
நித்யானந்தரின் தியான முகாம்கள் http://www.nithyananda.org/programs
நித்யானந்தரின் புகைப்படங்கள் http://www.nithyananda.org/photo-gallery
டிவிட்டரில் நித்யானந்தரிடம் கேட்கலாம் https://twitter.com/@Srinithyananda
நித்யானந்த தியானபீடத்திற்கு நன்கொடை வழங்கலாம் http://www.nithyananda.org/donate


நித்யானந்தம் – மாத இதழ்
http://nithyanandatimes.org/
ஆன்லைனில்...
ஆங்கிலத்திலும்
தமிழிலும் பெறலாம்.

| தங்கள் வீட்டிற்கே புத்தகப்பிரதி வர... | [email protected] 072 00 00 33 11 072 00 00 33 22 088074 34358 |
Sri Nithyananda Swami
பரா பக்தி
வாழும் அவதார சக்தி பரமஹம்ஸ நித்யானந்தரால் உங்களுக்குள் நிகழ்ந்த ஆன்மிக அனுபவங்களையும் நன்மைகளையும் உலகத்தோடு பகிர்ந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு. - Face Book
நீங்கள் எப்பொழுது பரமஹம்ஸரை சந்தித்தீர்கள்? எவ்வாறு உங்களின் பக்தி உணர்வு நிலை பெற்றது? அவதூறு பிரச்சாரங்களின்போது அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? இப்பொழுது உங்களின் ஆன்ம வாழ்க்கை எவ்வாறு உள்ளது? இதை நீங்கள் பரமஹம்ஸரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். பரமஹம்ஸரிடமிருந்து ஆசி பெறலாம்.
தினந்தோறும் தியான சத்சங்கம்
தொலைக்காட்சிகளில்...
Zee Tamil : 6.00 to 6.30 Am
JanaSri Live : 6.15 to 6.30 Am


இணையத்தளத்தில்...
http://nithyananda.tv/

நம்மளுடைய நித்யானந்த டி.வியில் பரமஹம்ஸ நித்யானந்தர் ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தோறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரெஞ்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில்...
20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!
https://lifeblissprograms.org/books

In the True Spirit of Vedic Tradition All the 250+ books of Paramahamsa Nithyananda are NOW available online for FREE
Access FREE Library >>
உங்கள் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்


இணையதளத்தில் உங்கள் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம்.
http://www.nithyananda.org/page/kalpataru-corner
ஹீலிங் டவர்
72 00 00 33 11 72 00 00 33 22
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.


பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம்.)
முன்பதிவிற்கு: 072 00 00 33 11 [ தமிழ்நாடு ]
https://transactions.nithyanandavedictemple.org/services/pratyaksha-pada-puja
நித்யானந்த வேத கோயில்கள்
http://vedic-temples.nithyananda.org/

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்
நித்ய ஹோமங்கள்: சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தீக்ஷை பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி
ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர
ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள்
வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
072 00 00 33 11 [ தமிழ்நாடு ]
097422 03311 [ கர்நாடகா ]
080-280 22100 [ கர்நாடகா ]
பரமஹம்ஸ நித்யானந்தரின் வீடியோ

பரமஹம்ஸ நித்யானந்தர் ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
http://www.youtube.com/lifeblissfoundation
101 நித்ய கிரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
http://www.nithyananda.org/nithya-kriyas
இளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
http://newgen.nithyananda.org/

இன்றைய இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
http://en-education.nithyananda.org/ eN-Education

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஸரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -பரமஹம்ஸ நித்யானந்தர்
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
http://enpregnancycare.nithyananda.org/


உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கர்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
vாலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக பரமஹம்ஸ நித்யானந்தரால் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 072 00 00 33 11 / 22 (தமிழ்நாடு) 080 280 22 100 (கர்நாடகா)
http://www.nithyananda.org/programs
நித்யானந்த தியானபீடத்திற்கு நன்கொடை வழங்கலாம்
http://www.nithyananda.org/donate

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தர் நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.