உங்கள் வாழ்க்கையையே முற்றிலும்மாக மாற்றிவிடலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனால் நாம் நம்மீது வேலை செய்ய எதையுமே முழுமையாக அனுமதிப்பதில்லை. நம்மையே நாம் எதிர்கொள்ளப் பயப்படுகிறோம். தைரியமாகஅதைஎதிர்கொள்வதற்கும், உண்மையை அறிவதற்கும் பதிலாக, நம்முடைய விழிப்புணர்வற் ற நிலையிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு, அது நம்மை ஆட்சிசெய்யும்படியாக விட்டுவிடுகிறோம்.
வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய ஆசிரியர். அது நமக்குக் கற்றுத்தரும் பாடங்களைக் காட்டிலும் சிறந்த பாடங்களை வேறு யாரும் கற்றுத்தர முடியாது. வாழ்க்கை நமக்குத் தொடர்ந்து கற்றுத் தந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் நாம்தான் ஒருபோதும் அந்த முக்கியமான விஷயங்களைக் குறித்துக் கொள்வதும் இல்லை, கற்றுக் கொள்வதும் இல்லை. இந்தப் பிறவியில் நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம் என்பதைக் குறித்துக் கொள்வதே இல்லை.
நம்முடைய பயணம் முடியும் தறுவாயில், "நான் இவ்வளவு தூரத்தைக் கடந்து வந்துள்ளேன். நான் இந்த இந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவியில் நான் எந்த இடத்தில் விட்டேனோ அந்த இடத்திலிருந்து தொடர்வேன்," என்று அந்த இடத்தை நாம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அளவு செய்தாலே போதுமானது. பிறவி என்று சொல்லும்போது ஏதோ நம்முடைய மொத்த வாழ்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நாள் இரவையும் பகலையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.
ஒவ்வொரு பகலும் இரவுமே ஒரு பிறவிதான், ஒரு ஜென்மம்தான். அது ஒரு வாழ்க்கைச் சுழற்சி. ஒவ்வொரு நாளுமே நாம் இறந்தும் பிறப்பெடுத்துக்கொண்டும்தான் இருக்கிறோம்.
‘நான் இன்று ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தினமும் விழிப்புணர்வுடன் தீர்மானியுங்கள் அல்லது ஒரு நாள் என்பது அதிகமாகத் தெரிந்தால் வாரத்திற்கு ஒருமுறை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
“இந்த வாரம் நான் ஒரு கருத்தைப் பற்றித்
தெளிவாகப் புரிந்துகொண்டு, அதை
என்னுடைய விழிப்புணர்வு நிலைக்குள்
செல்ல அனுமதிப்பேன்,” என்று உங்களுக்கு
நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். நீங்கள்
இப்போதிலிருந்தே ஜீவன் முக்தத் தன்மையை
அடைந்துவிட்டீர்கள்.
> ஒருமுறை உங்களுக்குள்
> மன அழுத்தம்
> ஏற்பட அனுமதித்து,
> அதை விழிப்புணர்வுடன்
> கடந்தாலேபோதும்,
> நீங்கள் ஜீவன் முக்தி
> அடைந்துவிடுவீர்கள்.
நான் சொல்கிறேன், இப்படியாக வாரம் ஒரு கருத்தைப் பற்றிய புரிந்துகொள் ளுதலை உங்கள் விழிப்பு நிலைக்குள் நீங்கள் செலுத்தியிருந்தால்கூட, செலுத்த நீங்கள் அனுமதித்திருந்தால்கூட, இப்போது நீங்கள் ஞானமடைந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை எந்தவிதமான கவலையுமில்லாமல், ஆனந்தமாக நித்யானந்தமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வார ஆரம்பத்திலும் ‘இந்த வாரம் முற்றிலும் நான் என்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனிப்பேன், இவ்வளவு தூரம் பயணம் செய்வேன், இந்த இடத்தில் நிறுத்திக்கொள்வேன், அதைத் தெளிவாக குறித்துக் கொள்ளவும் செய்வேன்’ என்று தீர்மானியுங்கள்.
அடுத்த வாரம், நீங்கள் எந்த இடத்தில்விட்டீர்களோ அந்த இடத்தை திரும்பிப் பார்த்து, “ஆம் இந்த வாரம் நான் இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன், தொடங்குகிறேன்,” என்று சொல்லுங்கள். இதை நீங்கள் உண்மையாக கடைப்பிடித்தீர்களானால், அதுவே போதுமானது. உங்களுடைய மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்; உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்.

புதுப்புது தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே!
ஆனால் என்ன ஒரு பிரச்சினை என்றால், நாம் எப்போதுமே தவறான இடங்களிலேயே குறியீடு செய்கிறோம்.
ஒரு சின்ன கதை :
இரண்டு நண்பர்கள் ஒரு படகை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்கள். ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் நூறு மீன்களைப் பிடித்தார்கள். நண்பர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, “இந்த இடத்தை அடையாளம் குறித்து வைத்துக்கொள். அடுத்த முறை நேரடியாக இங்கேயே வந்து மீன் பிடிக்கத் தொடங்கிவிடுவோம்,” என்று சொன்னார்.
அடுத்த முறை மீண்டும் மீன் பிடிப்பதற்குப் போனார்கள். அப்போது மீன் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைக் குறிக்கச் சொன்னவர் மற்றவரைப் பார்த்து, "நீ அந்த இடத்தைக் குறித்து வைத்தாயல்லவா?" என்று கேட்டார். அதற்கு இன்னொருவர், "ஆமாம் நான் அந்த இடத்தின் அடையாளமாக படகில் இரண்டு குறுக்குக் கோடுகள் போட்டு வைத்திருக்கிறேன்," என்று பதில் சொன்னார்.
அதற்கு முதலானவர், "என்ன முட்டாளடா நீ? நல்லவேளை, நாம் இன்றும் அதே படகைக்கொண்டு வந்திருக்கிறோம். இல்லையென்றால், இப்பொழுது நாம் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்.'
நாமும்கூட அடையாளம் வைக்கிறோம்; வாழ்க்கையில் அல்ல, படகில்!
nம்முடைய வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் அடையாளம் குறிக்க வேண்டுமோ, அந்தச் சிறந்த பகுதிகளில் நாம் அடையாளங்களை ஒருபோதும் குறிப்பதில்லை.
நாம், நம் ஆசைகளையும் இலக்குகளையுமே அடையாளங்களாகக் குறித்து வைத்துக் கொள்கிறோம்; அதிலேயே சிக்கிக்கொள்கின்றோம். ஆசைகள் மற்றும் உலகளாவிய நோக்கங்களின் மேல் இடப்படுகிற அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு, புதிய அடையாளங்கள் இடப்படுகின்றன.
அவை, நம்மைச் சுற்றியுள்ள உலகம் தருகிற கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சமுதாயம் எதைச் சொல்கிறதோ அதன் அடிப்படையிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்கள் தற்காலிகமானவை. அவை நம் உள் வளர்ச்சியை ஒன்றும் பிரதிபலிக்காது என்பதை மறந்தேவிடுகிறோம்.
உள்முக மாற்றமே உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அதைப் பற்றிச் சிந்திப்பதற்குக்கூட நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த ஒரு புரிந்துகொள்ளுதலையும் நம்மீது செயல்பட நாம் அனுமதிப்பதே இல்லை.
நம்மைக் கீழே விழச்செய்கிற படுகுழிகளைப் போன்ற குறைபாடுகள் நம்மிடம் எவை எவை இருக்கின்றன, நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பவற்றைப் பற்றிய உணர்ச்சிடனும் விழிப்புணர்வுடனும் இருந்தே
வாரா
ஒரு கருத்தைப் பற்றிய
புரிந்துகொள்ளுதலை
உங்கள்
இருப்பு நிலைக்குள்
செல்ல அனுமதியுங்கள்,
அதுபோதும்,
நீங்கள் ஞானமடைந்து
விடலாம்.
தாமானால், நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். அதன் மூலம் நல்ல தனி மனிதராகவும் வளர்ச்சியடைகிறோம்.
ஆனால் நாம் திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அளவுகோல் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தவறுகள் என்னவோ அவையேதான்!
பெரிய அளவில் தவறுகளைச் செய்யும் ஒருவர் தலைவராகிறார். அதே தவறுகளைக் குறைந்த அளவில் செய்பவர் தொண்டராகிறார். அவ்வளவுதான்.
பெரிய அளவில் தவறுகளைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பவர் தலைவர். அதே தவறுகளைச் சிறிய அளவில் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்துபவர்தான் தொண்டர். ஒரு தலைவருக்கும் தொண்டருக்குமுண்டான வித்தியாசம் இதுதான்.
நான் சொல்கிறேன். ஒரே ஒரு பாடத்தை நீங்கள்
உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய அனுமதித்து,
அது உங்கள் வாழ்க்கைக்குள் ஊடுருவி,
செயல்படத் தொடங்கினாலேபோதும்,
உங்களுடைய முழு வாழ்க்கையுமே
உணர்வுமாற்றம் பெற்றுவிடும்.
"ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தவறுகளைச் செய்யுங்கள்!" என்று எப்போதும் நம்முடைய பிரம்மசாரிகளுக்கும் பிரம்மசாரிணிகளுக்கும் மற்றும் ஆச்ரமவாசிகளுக்கும் நான் சொல்வ துண்டு, உண்மையைச் சொல்லப் போனால், புதிதாகத் தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. புதிய தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் புதுமையாகச் சிந்திப்பவராகவும், புதுமைகளைப் படைக்கும் திறன் பெற்றவராகவும்கூட இல்லை. அதுதான் இங்கே பிரச்சினை.
மீண்டும் ஒருமுறை இதே தவற்றைச் செய்யமாட்டேன் என்று நீங்கள் உறுதி செய்தாலும்கூட, உங்கள் வாழ்வு உணர்வுமாற்றம் பெற்றுவிடும்; ஆனால் மீண்டும் மீண்டும் நாம் ஒரே மாதிரியான தவறுகளை மட்டுமே செய்கிறோம். ஏனென்றால் நம்முடைய மனம் அதே பாதையிலேயே செயல்பட்டுப் பழகிவிட்டது. இந்தப்பாதைதான் ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் கர்ம வாழ்க்கையையோ அல்லது ஸந்யாஸ வாழ்க்கையையோ மேற்கொண்டோமென்றால், நாம் ஆனந்தத்தை, நித்யானந்தத்தை ஒருபோதும் அடைய முடியாது. முடிவில்லா விழிப்புணர்வு நிலையை நாம் ஒருபோதும் அடைய முடியாது.
துணிச்சல், ஸந்யாஸத்தின் அஸ்திவாரம்
கர்மம், ஸந்யாஸம் இந்தப்பாதைகளைப் பற்றி பகுத்துப் பார்ப்போம். கர்மம், ஸந்யாஸம் என்கிற இந்த இரண்டு கருத்துக்களையும் நாம் ஆழமாகப் பார்க்கலாம். பொதுவாக, ஆசையின் காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் செய்யப்படுவது கர்மம். எப்போதும் மாறாமல் நம்முள் நிலைகொண்டிருக்கும் பயத்தின் காரணமாகச் செய்யப்படுவது ஸந்யாஸம்.
நமக்குள் எப்போதுமே வாழ்க்கையைப் பற்றிய பயம் இருக்கிறது. நீங்கள் துணிந்து செயல்படத் தயாராக இல்லையென்றால், எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டியதிருக்கும். காயப்பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் ஸந்யாஸத்திற்கு முதல் காரணம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பாரம்பரியமாக நாம் ஸந்யாஸம் என்று சொல்வது எல்லாமே வாழ்க்கைக்குப் பயந்து ஓடியதைத் தவிர வேறெதுவும் இல்லை.
ஸந்யாஸம் என்பது வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு, தப்பி ஓடுவதாகத்தான் இருக்கிறது. சிலர் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள இயலாமல் அவற்றால் மூழ்கடிக்கப்படும் பொழுது, மேற்கொண்டு வாழ முடியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியாக ஸந்யாஸம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கைச் சுழலில் சிக்கி மூழ்கிவிடுவோமோ என்று பயப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஸந்யாஸம் என்ற பெயரில் தங்களுக்குள்ளிருக்கும் ஆழமான பயங்களை மறைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
அடுத்து கர்ம்-செயல்பாடு என்ற பெயரில்,
மக்கள் பேராசையினால் பொருள் சார்ந்த
செல்வங்களைத் தேடி அதன் பின்னால்
ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒருபுறம் பயத்தைப் பார்த்துப் பயந்து அதை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், மறுபுறம் பேராசை மேல் ஆசைப்பட்டு அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்.
இந்த இரண்டு வகை மக்களுமே
நித்யானந்தத்தை அடையவோ அல்லது
விழிப்புணர்வைப் பெறவோ மாட்டார்கள்.
இரண்டு பிரிவினருமே சரியான பாதையில்
இல்லை.
உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.
- பேராசையிடம் சரணடைந்தவர்கள்.
- பயத்திடம் சரணடைந்தவர்கள்.
- மூன்றாவதாக, மிக உயர்ந்த பிரபஞ்சப் பேரறிவிடம், தெய்வீக விழிப்புணர்விடம், நிலையான முடிவில்லாத விழிப்புணர்விடம் சரணடைந்தவர்கள்.
பேராசையிடம் சரணடைந்தவர் காணாமல் போகிறார். முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மூலாதார சக்ரத்தில் அவர் சிக்கிக் கொள்கிறார். இங்குதான் நமது மொத்தப் பேராசையும் நிலைகொண்டுள்ளது.
இந்த மாதிரியான மனிதர்கள், உலகியல் பொருட்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையின் காரணமாக பல பொருட்களைத் தேடி அவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். அது மீண்டும் மீண்டும் பேராசைக்கே வழி வகுக்கிறது.
அதனால் அவர்கள் மேலும் மேலும் இந்தப் பேராசை என்னும் விஷச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், பேராசைக்கு அவர்கள் அடிமையாகிப் போகிறார்கள்.

எதனிடம் சரணடைகிறீர்களோ அதுவே உங்களை வழி நடத்தும்
ஒரு அழகான உபநிஷத கதை.
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒரு பறவை அமைதியாக அமர்ந்து அதற்குள் இருக்கும் உள் இருப்பின் மௌனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அது முழுமையாகத் திருப்தி அடைந்த பூரணத்துவமான இருப்பு. அதற்குச் சற்று கீழே அமர்ந்துள்ள மற்றொரு பறவை சுறுசுறுப்பாகக் கிளைக்குக் கிளைக்குத்தாவி பழங்களைக் கொத்தித் தின்கிறது.

ஒரு சமயம் அது மரத்தின் வேறு
பக்கமாகச் சென்று பழங்களைத்
தேர்வு செய்து தின்கிறது.
பிறகு எங்கே ஆரம்பித்ததோ அதே பக்கத்திற்குத் திரும்பி வந்து மற்றொரு பழத்தைக் கொத்தித் தின்கிறது. பழங்கள் சுவையாக இருந்தால் அது மகிழ்ச்சி யை அனுபவிக்கிறது. பழங்கள் சுவையாக இல்லாவிட்டால் துக்கத்தை அனுபவிக்கிறது. ஒருபக்கம் சென்று இன்பத்தை அனுபவிக்கிறது. மறுபக்கம் சென்று கஷ்டத்தை அனுபவிக்கிறது. தொடர்ந்து அது இங்கும் அங்குமாகச் சென்றுகொண்டே இருக்கிறது.
பிரபஞ்ச இருப்புத் தன்மை
என்பது
நம்முடைய சொந்த
இருப்புத் தன்மைதானே
தவிர,
வேறு ஒரு தனியான
இருப்பு அல்ல.
திடீரென்று மேலே பார்த்த இந்தப் பறவை
அங்கு அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப்
பறவையைப் பார்த்து, ‘அது மட்டும் எப்படி
இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும்
இருக்கிறது? அதன் அருகில் சென்று பார்க்க
வேண்டும்; அந்தப் பறவையிடம் பேச
வேண்டும்’ என்று நினைத்தது. இவ்வளவு
நேரமும் அமைதியாக இருக்கும் அந்தப்
பெரிய பறவையின் பக்கம் மெது மெதுவாக
அந்தச் சின்ன பறவை சென்றது.
இது அந்தப் பறவையின் அருகில் சென்று கொண்டிருக்கும்பொழுதுகூட, தொடர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டே செல்கிறது. அந்தப் பழங்கள் சுவையாக இருந்தால் மகிழ்ச்சியாகவும், புளிப்பாக இருந்தால் துக்கப்பட்டுக் கொண்டும் இருந்தது.
திடீரென்று அந்தப் பறவையின் மிக அருகில் சென்றபோதுதான், இதுவரை பாதை மாறிச் சென்று புளிப்பான பழங்களைத் தின்று துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்துக்கொண்டு, அமைதியாகவும் அழகாகவும் அமர்ந்திருக்கிற அந்தப் பெரிய பறவையும் தான்தானே தவிர, அது தனியான வேறெதுவோ இல்லை என்று அதற்குத் தெரிய வந்தது. அந்தப் பெரிய பறவையும் தன்னுடைய சொந்த இருப்புதானே தவிர, வேறு ஒரு தனியான இருப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டது. இந்தச் சின்ன பறவை அந்தப் பெரிய பறவையோடு ஐக்கியமாகி விட்டது.
இது ஒரு அழகான கதை.
இதேபோலத்தான், ஒரு சாதாரண ஜீவாத்மாவாக நீங்கள் இருக்கிறவரையில் நீங்கள் பயத்திற்கும் பேராசைக்கும் நடுவில் கிடந்து போராடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்கும் சென்றுகொண்டே இருப்பீர்கள். நீங்கள் இழுக்கப்படுவீர்கள், தள்ளப்படுவீர்கள்.
உங்கள் பேராசையினாலும் பயத்தினாலும் தீண்டப்படாமலும் குழப்பமடையாமலும் உங்களுக்குள் இதுவரை தொடப்படாமல் இருந்து கொண்டிருக்கிற உங்கள் இருப்பு நிலையை உணரத் தொடங்கிய உடனேயே, நீங்கள் அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மேலும் மேலும் அதன் அருகில் செல்லச் செல்ல நீங்கள்தான் அது என்று உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள்தான் அந்த விழிப்புணர்வு.
ஒரு சாதாரண
ஜீவாத்மாவாக
நீங்கள்
இருக்கிறவரையில்,
பயத்திற்கும் பேராசைக்கும்
நடுவில் கிடந்து
போராடிக்
கொண்டிருப்பீர்கள்.
கிருஷ்ணர் இங்கு அதைத்தான் சொல்கிறார்.
பயத்திற்கும் பேராசைக்கும் இடையே நாம்
மாட்டிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து
நாம் ஒன்று பயத்திடம் சரணடைகிறோம்
அல்லது பேராசையிடம் சரணடைகிறோம்.
மிக மிகச் சிலரே, அபூர்வமானவர்களே
புத்திசாலித்தனத்திடம் தெய்வீக
விழிப்புணர்விடம் சரணடைகிறார்கள்.
தங்களை அறிவாளிகள் என்று கருதிக்
கொண்டிருக்கிற சிலர் என்னிடம் வந்து, "ஏன்
நாம் தெய்வத்திடம் சரணடைய வேண்டும்?"
என்று கேட்பார்கள். நீங்கள் தொடர்ந்து
வாழ்க்கையையும் ஒரு கணக்கைப்போலவே
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.
அர்ஜுனன் கேட்கிறார், "எனக்கு மிகுந்த பலனைத் தருவது எது?" வியாபாரத்தைப் பொறுத்தவரை கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் வாழ்க்கையில் அப்படி அல்ல. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் கணக்கு பார்க்கிறவர்கள் மிகவும் மோசமான தோல்வியாளர்களாகவே இருப்பார்கள்.
அவர்களால் வாழவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து கணக்கிடுவதிலேயே குறியாக இருப்பார்கள். கணக்கிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
மக்கள் என்னிடம் வந்து, "நான் ஏன் கடவுளிடம் சரணடைய வேண்டும்? அப்படிச் சரணடைந்தால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்பார்கள்.
தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், அச்சத்திடமோ அல்லது ஆசையிடமோ நீங்கள் சரணடைவீர்கள், அவ்வளவுதான்.
எதையோ பெற வேண்டும் என்பதற்காக இறைவனிடம் சரணடையுங்கள் என்று நான் சொல்லவில்லை. தெய்வத்திடம் சரணாகதி செய்வது பற்றி நான் உங்களுக்கு எந்தச் சத்தியமோ, வாக்குறுதியோ தரவில்லை. ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், நீங்கள் உங்கள் அச்சத்திடமும் ஆசையிடமும் சரணடைவீர்கள்.
