ஜீவன் முக்தியை மலர்த்திடும் அருமையான உபாயம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மீண்டும் மீண்டும் இந்த ஒரே விஷயத்தில்தான் அர்ஜுனன் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். ஏனெனில் அவர் வாழ்க்கையை ஒரு வியாபாரமாகத்தான் பார்த்தார். கிருஷ்ணர் மிகவும் பொறுமையாக இருந்தார். அவர் மிகவும் கருணையுள்ளவர். அன்பின் திருவுருவம்.
மிகச் சரியாக அங்குலம் அங்குலமாக அர்ஜுனனை மேலேகொண்டு வருகிறார். அவர் பொறுமையை இழக்கவில்லை. “நான் உனக்கு முன்பே சொன்னேனே,” என்றும் சொல்லவில்லை.
கிருஷ்ணர், கர்ம ஸந்யாஸ யோகம், கடமை மற்றும் துறவு என்ற பாதைகளின் கோட்பாட்டை விளக்குவதற்காக, இந்த ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காக மட்டும் குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.
நாம் பார்க்கப் போகிற கர்மம், ஸந்யாஸம் என்ற கோட்பாடுகளை விளக்க குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.
ஆனால் எந்த நேரத்திலும் பொறுமையை இழக்காமல் அவர் இதைச் செய்தார். ஒருமுறைகூட அவர் அர்ஜுனனிடம் சத்தம் போட்டுப் பேசியது இல்லை. அவர் கருணையே வடிவானவர்.
அவர் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழே இறங்கி வந்து, ஒரே கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திச் சொல்லி, மெதுவாக அர்ஜுனனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
கர்மமும் ஸந்யாஸமும் அதாவது கடமையும் துறவறமும் பற்றிய கேள்வி, நினைவு தெரிந்த காலம் தொட்டே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் பதில் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் இந்தக் கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கீதை ஏன் இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.ஏனென்றால் அதை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை!
கீதை ஏன் இன்றளவும் நாகரிகமான மக்களுக்கும்கூட பொருத்தமுடையதாக இருக்கிறது? கீதை 5000 ஆண்டுகளுக்கு
5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டாலும் இன்றளவும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறது கீதை!
முன்பே சொல்லப்பட்டாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறதே, அது ஏன்?
அது ஏனென்றால் மனிதன், தான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. சரித்திரம், தானாகவே திரும்புகிறது.
விழிப்புணர்வற் ற நிலையில் நடக்கும் செயல்பாடானது ஒருபோதும் விழிப்புணர்வு சக்திக்குள் வருவதில்லை. மனிதர்கள் பெரும்பாலும் அந்த விழிப்புணர்வற்ற நிலையாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.
பெரும்பான்மையான நேரங்களில், அவர் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதைக்கூட அறியாமல்தான் இருக்கிறார்.
அதனால்தான் அவர் மேலும் மேலும் சென்று கொண்டே இருக்கிறார் எதையும் சாதிக்காமலேயே! அவருக்கு ஏதோ தேவையென்று நினைக்கிறார். அதன் பின்னால் ஓடுகிறார். அதை எட்டிப் பிடித்துவிட்ட உடனேயே, அவர் வேறு ஏதோ ஒன்றைத் தேட ஆரம்பித்துவிடுகிறார். அதனால் அவருக்குள் எப்போதும் ஒரு அமைதியின்மை, ஓய்வின்மை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.
அமைதியின்மை மனிதனுக்குள் நிலையான அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். விழிப்புணர்வை இந்த மன அழுத்தத்திற்குள் பெருக்கெடுக்கச் செய்வதன் மூலம்தான், நீங்கள் இதிலிருந்து விடுபட முடியும்.
நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, உங்களுக்குள் ஒரு மன அழுத்தம் ஏற்பட அனுமதித்து, அதை நீங்கள் விழிப்புணர்வுடன் கடந்து வந்தால், அப்பொழுது உங்களுக்குள் நடக்கும் அந்தச் செயல்முறையில் நீங்கள் ஜீவன்முக்தி அடைந்துவிடுவீர்கள். வேறு ஒன்றும் தேவையில்லை.
ஒரே ஒருமுறை மன அழுத்தம் உண்டானால்போதும், அது உங்களை முழுவதுமாக எரித்துவிடும். நீங்கள் ஜீவன் முக்தராக ஆகிவிடுவீர்கள்.