வெளியுலக சுகத்தின் உச்சிக்கே சென்றாலும் வெற்றியைத் தொட முடியாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பணம், செல்வம் என்று அதே நிலையிலேயே நம்முடைய அளவுகோல் இருந்து கொண்டிருந்தால், நம்முடைய வாழ்க்கையைத் தெளிவாக அளக்க முடியாது என்பது மட்டுமல்ல, அத்துடன் நிச்சயமாக துக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பணத்தையும் மற்ற பொருள் சார்ந்த செல்வங்களையும் சேர்ப்பதற்கு ஒரு முடிவு என்பதே கிடையாது.
முதலிலேயே நாம் ஆடம்பரங்களும் உலகியல் சுகங்களும்தான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்ந்த அளவுகோள்கள் என நிர்ணயம் செய்துவிடுகிறோம். ஆனால் இவற்றை எல்லாம் அடைந்த பிறகும்கூட, நம்மைப் பொறுத்தவரையில், நாம் வெற்றி பெற்றதாக எண்ணுவதே இல்லை.
ஏனென்றால் அதற்குள் நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய இலக்கை பெரிதாக்கியிருப்போம். பேராசையின் காரணமாக அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று கேட்டுக்கொண்டேயிருப்போம். இதற்கு ஒரு முடிவே கிடையாது.
இறுதியில் நம்முடைய வாழ்க்கை முடியும் நிலையில், நாம் போதுமான அளவு சாதிக்க முடியவில்லையே என வருந்துகிறோம். அடுத்து என்ன நிகழ்கிறது?
நாம் ஒரு புது பிறவியெடுத்து, வாழ்க்கை என்னும் மொத்த விளையாட்டையும் நேரடியாக ஒன்றிலிருந்து அதாவது முதல் நாளிலிருந்து ஆரம்பித்து, அதே வரையறுக்கப்பட்ட மனமுதிர்ச்சியுடன் விளையாடத் தொடங்குகின்றோம்.
ஒரு முக்கியமான விஷயம், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பணம் மட்டுமே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், உலகியல் சார்ந்த வசதிகள், இன்பங்கள் மட்டுமே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், வாழ்வில் தவறவிட்ட பொருட்களையும்
> பணம் மட்டுமே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருக்க முடியாது. செய்யாமல்விடுத்த செயல்களையும் நினைத் துப்பார்த்து, நாம் இன்னும் கொஞ்சம் சாதித்திருக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து மீண்டும் மீண்டும் துக்கப்பட்டுப் கொண்டிருப்போம்.எதையுமே போதுமான அளவு சாதிக்காமலேயே நம்முடைய வாழ்வைத் தொலைத்துவிட்டோமோ என்று வருந்துவோம்.
‘வெற்றி’ என்பதை வரையறை செய்வதற்கான
முழுமையான அளவுகோல் எதுவும் இல்லை.
முக்கியமாக பணரீதியான அளவுகோலால்
நீங்கள் வெற்றியை வரையறுக்க முடியாது.
நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, அதற்கு மேல் ஒரு ரூபாய் அதிகமாகக் கிடைத்தாலும்க்கூட நாம் அதிக மகிழ்ச்சி அடைகின்றோம், இல்லையா?
இழந்த நிம்மதியைப் பெற்றிட யக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்!
ஒரு சின்ன கதை.
அரசருக்கு முடிதிருத்தம் செய்யும் நாவிதர் ஒருவர் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அரண்மனைக்குச் சென்று அரசருக்கு முகச் சவரம் செய்து வந்தார்.
அரசர் கொடுக்கும்த்துப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவார்.
அவருடைய வாழ்க்கை மிகவும் அழகானதாகவும் ஆனந்தமானதாகவும் இருந்து வந்தது. அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்பட ஒன்றுமே இல்லை. அவர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் அவர் அரண்மனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபொழுது திடீரென்று ஒரு அசரீரி, "அன்பு மகனே, உனக்கு நாற்பது பொற்காசுகள் வேண்டுமா?" என்று கேட்டது.
அதற்கு அவர், "நாற்பது பொற்காசுகளா? அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என்னுடைய செலவு பத்து பொற்காசுகள்தான். அது கிடைத்தாலே போதுமானது. அதற்கு மேல் எனக்கு வேண்டாம்," என்று சொல்லிவிட்டார்.
உடனே, அந்த அசரீரி மீண்டும் பேசியது,
"நான் உனக்கு இருபத்து நான்கு மணி நேரம்
அவகாசம் தருகிறேன். வீட்டிற்குச் சென்று
நன்றாக யோசனை செய்துவிட்டு, நாளை
வந்து சொல். நீ விரும்பினால் பொற்காசுகள்
நிரம்பிய ஒரு மாய ஜாடியைத் தருவேன்,"
என்றது.
அந்தப் பாவப்பட்ட நாவிதர் இதைப்
பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லாமல்
இருந்திருக்கலாம். ஆனால் அவர் மெதுவாக
மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விட்டார்.
அவர் மனைவியோ அலறியே விட்டார்.
"நீங்கள் என்ன முட்டாளா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா? அந்த ஜாடியை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டாமா?" என்று பைத்தியம் பிடித்தவர்போல உரத்த குரலில் புலம்பினார்.
"எனக்கு என்றைக்காவது இதைச் செய்திருக்கிறீர்களா? அதைச் செய்திருக்கிறீர்களா? வாழ்க்கை முழுவதும் நான் அதே உடுத்தின பழைய புடவைகளோடேயேதானே இருக்கிறேன். எனக்கு எப்பொழுதாவது நகை நட்டு வாங்கிப் போட்டிருக்கிறீர்களா? என்னை எப்பொழுதாவது சந்தோஷமாக வைத்திருக்கிறீர்களா?விடுமுறைக்கு எங்கேயாவது அழைத்துக்கொண்டு போயிருக்கிறீர்களா? உங்களைத் திருமணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?" இப்படிக் கேள்வி மேல் கேள்வியை அடுக்கிக்கொண்டே போனார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணம் என்பது ஒரு மூன்று வளைய சர்க்கஸ். நிச்சயதார்த்தத்தின்போது ஒரு வளையம் (மோதிரம்) (Engagement ring), திருமணத்தின்போது அடுத்த ஒரு வளையம் (Wedding ring), மூன்றாவதாக, கஷ்டம் என்ற வளையம். (Suffer-ring).
அவர் இப்படிக் கத்த ஆரம்பித்தவுடனே, "சரி, சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே. அந்த அசரீரிக் குரல் எனக்கு இருபத்து நான்கு மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறது. யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. அதனிடம் பேசி அந்த ஜாடியை நாளை வாங்கிவந்துவிடுகிறேன்," என்று அந்த நாவிதர் சொன்னார்.
மறுநாள் காலையில் முதல் வேலையாக அவர் அந்த அசரீரி வந்த இடத்திற்குச் சென்று, "தயவு செய்து அந்த ஜாடியை எனக்குக் கொடுங்கள்," என்றார்.
> 'போதும்' என்ற
> திருப்தியுடன்
> வாழ்பவர்களின்
> வாழ்க்கை
> மிகவும்
> அழகானதாகவும்
> ஆனந்தமானதாகவும்
> இருக்கும்.

உடனே அவர் முன்பாக ஒரு யக்ஷன்
தோன்றி "இதோ இந்த ஜாடியை
வாங்கிக்கொள். இதில் 990 பொற்காசுகள்
உள்ளன. அதாவது 1000க்கு 10 பொற்காசு
கள் குறைவாக உள்ளன," என்று சொல்லி
மறைந்துவிட்டது.
அவர் அந்த தங்க நாணயங்கள் உள்ள ஜாடியை வீட்டிற்குக்கொண்டு வந்தார். ஒரு நாளைக்குப் பத்துப்பத்துப் பொற்காசு களாகச் செலவு செய்தாலும் 99 நாட்களுக்கு வரும் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
அந்த ஜாடியை அவர் மனைவி வாங்கிய உடனேயே, "என்ன இது? இந்த ஜாடி நிறையவே இல்லை. ஏதோ குறைகிறதே," என்று கணவனை மேலும் கீழும் பார்த்துக் கேட்டார்.
"எனக்குத் தெரியாது, எனக்கொன்றும் தெரியாது. யக்ஷன் கொடுக்கும்போ தே அப்படித்தான் இருந்தது. நான் ஜாடியை வாங்கிக்கொண்டு அப்படியே நேராக இங்குதான் வருகிறேன். ஆனால் அந்த யக்ஷன் கொஞ்சம் பொற்காசுகள் குறைவாக இருப்பதாகத்தான் சொன்னது," என்றார் அவர்.
"ஜாடி நிரம்பியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்; எவ்வளவு நன்றாக இருக்கும்," என்று அவர் மனைவி கவலைப்படத் தொடங்கினார்.
அடுத்த நாள் நாவிதரின் மனைவி, அந்த நாவிதர் அரண்மனைக்குச் சென்று திரும்பியவுடன் விரைந்து சென்று அரசரிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த பத்துப்பொற்காசுகளையும் வெடுக்கென்று பறித்து அந்த ஜாடியில் போட்டார். அந்த ஜாடி நிரம்பி வழிய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் ஆச்சரியப்படும் படியாக,
அந்த ஜாடியில் பொற்காசுகளின் மட்டம்
விளிம்பிற்குக் கீழேயேதான் இருந்தது. அது
நிறையவேயில்லை.
அந்த நாவிதரின் மனைவி நிம்மதியை
இழக்கத் தொடங்கினார். அந்த ஜாடியை
நிரப்புவதற்காக அடுத்த நாள் ஊதியத்திற்காக
அவர் மிகவும் ஆர்வத்துடன் காத்துக்
கொண்டிருந்தார்.
> பேராசையின் இலக்கணம்:
> அடுத்து என்ன?
> அடுத்து என்ன?
> என்று கேட்டுக்கொண்டே
> இருப்பது!
அடுத்த நாள் மாலையும் அந்த நாவிதரிடமிருந்து பணத்தைப் பிடுங்கி ஜாடியில் போட்டார். அப்போதும் கூட அது நிறையாமல் சிறிது குறைவாகவே இருந்தது. அநேகமாக அது நிறைந்திருந்த போதிலும் முழுமையாக நிறையவில்லை.
இப்படி ஒரு வாரம் தொடர்ந்து நடந்தது. நாவிதரின் மனைவி அவருக்கு உணவு அளிப்பதை நிறுத்தினார். அவரது எல்லாச் செலவுகளையும் நிறுத்தினார்.
அவரிடமிருந்த எல்லாப் பொற்காசுகளையும் பிடுங்கி ஜாடியில் போட்டுவிட்டு, ஜாடி நிரம்பி வழிவதைக் காண மிகுந்த கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்.
ஒரே வாரத்தில் அந்த நாவிதர் மிகவும் களைப்புற்றுச் சோர்ந்துவிட்டார். அவர் எதையோ இழந்தவர்போலாகிவிட்டார் என்பதை அவர் முகம் காட்டியது.
இதைக் கவனித்த அரசர், "என்ன நடந்தது? எப்போதும் உற்சாகத்துடன் இருப்பாயே, உனக்கு என்ன ஆயிற்று? கடந்த ஒரு வாரமாக நான் உன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன், நீ மிகவும் களைத்துவிட்டாய். நீ எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய். நீ கவலைப்பட ஆரம்பித்துவிட்டாய். என்ன நேர்ந்தது உனக்கு? அந்த யக்ஷன் கொடுத்த ஜாடியை வாங்கிக் கொண்டாயா?" என்று விசாரித்தார்.
இதைக் கேட்டவுடனேயே நாவிதர் திடுக்கிட்டுப்போனார். "அரசே, தங்களுக்கு எப்படி இது தெரியும்?" என்று கேட்டார். அதற்கு அரசர், "இந்த நாட்டில் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ, யாரெல்லாம் சந்தோஷமாக இல்லையோ, அவர்களுக்கு எல்லாம் பொதுவாக
எதைப் போட்டாலும்
மேலும் மேலும்
கேட்கிற
சிவனின் கையில்
இருக்கும் பிரம்மகபாலம்
போன்றவை
நம் கவலைகள்.
ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அது அவர்கள் எல்லோரும் யக்ஷனிடமிருந்து அந்த ஜாடியைப் பெற்றிருப்பார்கள்," என்று சொல் லிவிட்டு, "நீ மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் அந்த யக்ஷனுடைய ஜாடியைத் தூக்கி எறிந்துவிடு," என்று சொன்னார்.
அவரும் அவ்வாறே செய்து அன்று முதல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்.
அந்த அரசர் சொன்னது நம் எல்லோருக்குமே பொருந்தும். வீட்டிற்குத் திரும்பிப் போன உடனேயே அந்த யக்ஷனுடைய ஜாடி
உங்களுடைய வீட்டிலும் இருக்கிறதா
இல்லையா என்று பாருங்கள். இருந்தால்
அதைத் தூக்கி எங்காகிலும் தொலைதூரத்தில்
எறிந்துவிடுங்கள்.
நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்,
நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தால்,
உங்கள் வீட்டிலும் அந்த யக்ஷனுடைய ஜாடி
இருக்க அதிக வாய்ப்புள்ளது. யக்ஷனுடைய
ஜாடி ஒருபோதும் நிரம்பப் போவதில்லை.
நான் யக்ஷனுடைய ஜாடி என்று சொன்னதும்
ஏதோ ஒரு ஜாடியே வந்து உங்கள் வீட்டில்
இருக்கும் என்ற அர்த்தம் இல்லை. ஆனால்
அது நிச்சயமாக உங்கள் தலைக்குள்
புகுந்திருக்கும்.
தேடுதல்
ஆனந்தமான,
அழிவில்லாத
ஒன்றைக்
கண்டுபிடிப்பதற்காகச்
செய்கிற முயற்சி.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சில சமயம் யக்ஷன் வங்கி இருப்பு மூலமாகவும் உங்களிடம் அந்த ஜாடியைக் கொடுத்திருப்பான். ஏதோ ஜாடி வடிவத்தில் இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். அது உங்கள் மனத்தில்கூட இருக்கலாம். யக்ஷனுடைய ஜாடியானது பிரம்ம கபாலத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
சிவனின் கையில் இருக்கிற அந்த பிரம்ம கபாலமானது, அதில் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் கேட்கிற இயல்பு கொண்டதாகவே இருக்கிறது.
அதேபோல அந்த யக்ஷனுடைய ஜாடியும் நாம் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, நாம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், நாம் போதுமானவர்களாக இல்லை என்றும் நினைக்கச் செய்து நம்மைக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் படியாகச் செய்யும்.
நம்முடைய மனம், நமக்கு நாமே போதுமானவராக இல்லை என்றும், நாம் முழுமையடையவில்லை என்றும் நம்மைத் தொடர்ந்து வருத்தப்படவைக்கும்.
நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, என்ன பொருள் நமக்கு கிடைத்தாலும் சரி, பத்தே நாளில் அது போதுமானதாக இல்லை என நாம் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம்.
பத்தே நாள்களில் நம்முடைய மனம் எல்லாவற்றையுமே எளிதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடும். நம்மிடமிருக்கும் சிறப்பு வாய்ந்த பொருட்களையும் அதிகமான செல்வத்தையும்கூடாதாரணமாக எடுத்துக் கொண்டு, இன்னும் அதிகமாக பொருள் சம்பாதிக்க வேண்டும் என ஓட ஆரம்பித்துவிடுவோம்.
தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம்
நிறைய செல்வம் வைத்துக்கொண்டு தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிற ஒருவரைத்தான் யக்ஷன் என்று சொல்வோம்.
இந்தியாவில் விவசாய நிலங்களில் இரண்டு அல்லது மூன்று நாய்களை வளர்ப்பார்கள். அந்த நாய்கள் அந்தத் தானியங்களைத் தானும் உண்ணாது, மற்ற விலங்குகளையும் உண்ணவிடாது.
அதேபோல நாமும் நிறைய செல்வத்தை வைத்துக்கொண்டு, நாமும் அனுபவிக்காமல் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்காமலும் இருந்தால், நம்மையும் யக்ஷன் என்றுதான் அழைப்பார்கள்.
பேராசைகொண்டு செல்வங்களைக் குவித்துக்கொண்டிருந்தால், யக்ஷனுடைய ஜாடியைப்போல் அதற்கு ஒருபோதும் முடிவே இல்லை. ஏனென்றால் எப்போதும் பேராசை அதிகரிப்பதற்கான வாய்ப்புதான் உண்டே தவிர, அது நிறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிறைந்திருக்கும்போது அனுபவிப்பது என்பது ஒருபோதும் நடக்காது.
மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையும் நம்முடைய சேமிப்பு கரைந்துவிடுமோ என்ற பயமும் நாம் சேர்த்த செல்வத்தை நாம் அனுபவிக்கத் தடைக் கற்களாக மாறிவிடுகின்றன; அவை பெரும் தடைகளாகிவிடுகின்றன. நாம் சொத்து சேர்ப்பதை நிறுத்திவிட்டு, சேர்த்த சொத்தை அனுபவிக்கவில்லை என்றால், மேலும் மேலும் ஏன் சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும்?
நான் எப்போதும் சொல்வேன், ஒன்று நீங்கள் தானம் செய்யுங்கள் அல்லது நீங்கள் மஹாதானத்தை அதாவது மரணத்தை அடைவீர்கள். நீங்கள் தானம் செய்யும்பொழுது, நீங்கள் அதை மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுடன், நீங்களும் அனுபவிக்கி றீர்கள்.
ஒருமுறை
நீங்கள்
சாதித்துவிட்டால்,
மலைகூட
உங்களுக்கு
ஒரு கடுகாகத் தோன்றும்.
நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதுதான் கடவுள் நிலை. நீங்கள் தானங்களைச் செய்யவில்லை என்றால் மஹாதானத்தை அடைவீர்கள். அதாவது நீங்கள் இறக்கும்போது ஒரேயடியாக எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சென்றுவிடுவீர்கள்.
ரமண மகரிஷி அழகாகச் சொல்வார். "சாதிப்பதற்கு முன்னர் கடுகுகூட ஒரு மலையைப் போன்று தெரியும். அது இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையே நடக்காததுபோல் தோன்றும். அதுதான் உங்கள் வாழ்விற்கு அடிப்படையானது என்றும் மிக மிக முக்கியமானது என்றும் தோன்றும். ஆனால் ஒருமுறை நீங்கள் சாதித்து விட்டால், மலைகூட உங்களுக்கு ஒரு கடுகாகத்தான் தோன்றும்."
கடுகு எப்படி முதலில் ஒரு மலையைப்போல் தோன்றியதோ, அதே போன்று நம்முடைய வாழ்க்கையில் மிக அற்பமானவைகூட நமக்குச் சாதிப்பதற்கு முன்னால் மிக முக்கியமானதாகவும் பெரியதாகவும் தோன்றும். மனமானது அப்படிப்பட்டதுதான். ஒருமுறை நீங்கள் விரும்பியதை அடைந்துவிட்டீர்களென்றால், அதற்குப் பிறகு ஒரு மலைகூட உங்களுக்குக் கடுகைப் போன்று தோன்றும்.
இது ஏன் என்றால் இப்போது சில விஷயங்கள் மலையைப் போன்று தோன்றும். 'சாதனை செய்தல்' என்ற பொறிக்குள் நாம் சிக்கிக்கொண்டுவிட்டால், நாம் என்ன சாதித்தோமோ அதை அனுபவிக்கவும், தளர்வாக இருப்பதற்கான திறனையும் நாம் இழந்துவிடுவோம்.
பலனை எதிர்பாராது செய்யும் செயல் வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும்
அர்ஜுனன் கேட்கிறார்,
"இப்போது உறுதியாக, தீர்மானமாகச் சொல்லுங்கள். செயலைச் செய்வதா அல்லது வாழ்க்கையைத் துறப்பதா? இரண்டில் எது அதிக நன்மையைத் தரும்?"
அதாவது கர்மமா அல்லது ஸந்யாஸமா? எந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுப்பது என்று கேட்கிறார். நாம் எல்லோருமே மீண்டும் மீண்டும் இதே கேள்வியைத்தான் நமக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மனம் என்பது குழப்பமானது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மனம் என்பது குழப்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.
இரண்டு துருவங்களுக்கிடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கும்வரை நம்முடைய மனமும் உயிருடன் இருக்கும். நாம் ஏதாவது ஒரு தீர்மானத்துக்கு வந்த உடனேயே நாம் விடுதலை அடைந்துவிடுகிறோம். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு நாம் சென்று கொண்டிருக்கும்வரை நாம் அறியாமையிலேயேதான் இருக்கிறோம்.
அறியாமையே ஆனந்தம் என்று சொல்லாதீர்கள். அப்படி அறியாமை என்பதே ஆனந்தமாக இருந்தால், ஏன் இந்த உலகில் நிறைய மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அறியாமை என்பது ஆனந்தம் அல்ல. கள்ளங்கபடமற்ற தன்மை என்பதே ஆனந்தம். அதுதான் வித்தியாசம்.
நம்முடைய வாழ்க்கையைத் தொடர்ந்து அளந்து கொண்டிப்பதற்கு எந்தவித அளவுகோலையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதைத்தான் கள்ளங்கபடமற்ற தன்மை என்கிறோம்.
ஒரு அளவுகோலை வைத்திருப்போம். ஆனால் அந்த அளவுகோலை வைத்து நம் வாழ்க்கையை நிறைவுசெய்ய முடியாமல் இருப்பதைத்தான் ‘அறியாமை’ என்று சொல்கின்றோம். நாம் ஒரு அளவுகோலையோ, இலக்கையோ வைத்திருக்கவில்லை என்றால்கூட அதில் ஒன்றும் பிரச்சினையே இல்லை.
கள்ளங்கபடமற்ற
தன்மை
வாழ்க்கையை
அளப்பதற்கு
எந்தவிதமான
அளவுகோலும்
வைத்துக் கொள்ளாமல்
இருப்பதே!
ஆனால் அளவுகோலைத் தீர்மானிக்கத்
தேவையான பட்டறிவு நம்மிடம் இருந்தும்
அதைக் கொண்டு நம்மால் நம்முடைய
விருப்பங்களைப் பூர்த்திச் செய்துகொள்ள
முடியாததைத்தான் அறியாமை என்று
சொல்கிறோம்.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய
விஷயம் என்னவென்றால், நம்முடைய
மனத்தையே நாம் ஒரு நோயாக
ஆக்கி வைத்திருக்கிறோம். மனத்தின்
விளையாட்டாகிய குழப்பம்தான் முதலும்
கடைசியுமான வியாதி. மனிதர்கள் குழப்பம்
என்ற வியாதியோடுதான் வாழ்க்கையைத்
தொடங்குகிறார்கள். அதிலேயே வாழ்க்கையை முடித்தும் கொள்கிறார்கள்.
‘முடித்துக் கொள்கிறார்கள்’ என்றுக்கூட சொல்ல முடியாது! ஏனென்றால் அப்பொழுதுகூட தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில்தான் இருப்பார்கள்!
ஆனால் மரணம் வந்து அவர்களுடைய
வாழ்க்கையை அவர்களிடமிருந்து
முழுமையாக எடுத்துச் சென்றுவிடுகிறது.
வாழ்க்கை, அது முழுமையாக அப்படியே
எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது.
இங்கே அர்ஜூனன் இந்த இரண்டில் எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தார்.
சிலர் சொல்வதைப்போல பலன் ஒன்றையே கருத்தில்கொண்டு, வாழ்க்கை முற்றிலும்மே பலனை எதிர்பார்த்தே வாழ்ந்தோமென்றால், ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கான நரகத்தை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை அந்தளவிற்கு நாம் சுருக்கிக்கொண்டோமென்றால், நாம் நரகத்தில்தான் இருப்போம்.
வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.
உங்களைத் துரத்தும் ஆசையையே துரத்திவிடலாம்
அவர்கள் விரும்பியதைச் சாதித்த மக்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, மேலைநாடுகளில் அப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் தங்களுக்குள் ஒரு வெறுமையையே உணர்கிறார்கள். இதைக்தான் வெற்றியினால் வரும் மன அழுத்தம் என்கிறோம். அவர்கள் தங்களுடைய கனவுகளையும், மற்றவர்களிடமிருந்து தாங்களாகவே கடன் வாங்கிய கனவுகளையும், தங்கள்மீது மற்றவர்களால் திணிக்கப்பட்ட கனவுகளையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் தங்களுக்குள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.
இதுநாள்வரை நாம் என்ன காரணத்திற்காக ஓடிக்கொண்டிருந்தோம், எவற்றை எல்லாம் தேடிக்கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்படத் தொடங்குகிறார்கள். அவர்கள் ஓடியபோது அவர்களுடைய ஆசைகள் அவர்களைத் துரத்தின. சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு செல்வாக்கை, அந்தஸ்தை மட்டுமே தேடி, வேறு எந்தவித கொள்கையுமின்றி ஓடும் எலி ஓட்டப் பந்தயம் போன்ற வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். ஒரு ஆசை இன்னொரு பெரிய ஆசைக்குத்தான் வழி வகுக்கும்.
தங்களுக்கு இன்பம் கொடுக்கும் என்று நினைத்து எதையெல்லாம் அடைந்தார்களோ, அதை இனிமேலும் சம்பாதிக்கத் தேவையில்லை என்பதை ஒரு நாள் திடீரென்று உணர்கிறார்கள்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையே பெற்றுக் கொண்டிருந்தாலும்கூட, வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டிவரும்.
இனிமேல் அடையவேண்டியது ஒன்றும் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்தவுடன் அவர்கள் அதிருப்தியும் அடைந்துவிடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களைப் பற்றி அவர்களே குழப்பம் அடைந்துவிடுகிறார்கள்.
இனிமேல் எதற்கு ஆசைப்படுவதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது என்ற ஒரு குறையை மட்டும் உணர்கிறார்கள். ஆனால் அது என்னவாக இருக்க முடியும் என்பதை மட்டும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தக் குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல், தங்களைப் பற்றிய சுய-ஆராய்தல் இல்லாமல், தங்களைத்தாங்களே நின்று பார்க்கக்கூட நேரம் ஒதுக்கிக் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருப்பதுதான் காரணம். அதனால்தான் அவர்களுக்குள் ஒரு அதிருப்தியை உணர்கிறார்கள், குழப்பத்திற்கும் உள்ளாகிறார்கள். அவர்கள் ஏன் ஓடுகிறார்களென்றால், அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே ஓடிக்கொண்டிருப்பதனால் அவர்களும் ஓடுகிறார்கள்.
அவர்கள் ஒரு நிமிடம் நின்று, "உண்மையில் நாம் எதை முதலிலும் முக்கியமாகவும் அடைய விரும்புகிறோம்? அதை ஏன் முதலில் அடைய விரும்புகிறோம்?," என்று தங்களைத்தாங்களே கேள்விக்கேட்டுக் கொள்வதற்குக்கூட, தங்களுடைய ஓட்டத்தை ஒருபோதும் நிறுத்துவதில்லை. அதனால் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தும்போதோ அல்லது இனிமேல் ஓட முடியாது என்று வரும்போதோ, அவர்கள் தங்களுக்குள்ளேயே விழுகிறார்கள். உடனே, தாங்கள் ஓட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதையும் தங்களால் இனி ஈடுகொடுக்க முடியாது என்பதையும் தங்களுடைய சொந்த இருப்புத் தன்மையுடன்கூட தாங்கள் இதுவரை இணக்கமாக இருந்ததில்லை என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். இதுதான் மன அழுத்தமாகவும் நோயாகவும் மாறுகிறது.
அதனால்தான் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு பலனைப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்பி, அதை அடைய முடியாமல் போகும்பொழுது, வாழ்க்கையைத் தோல்வி என்று உணர்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால்கூட, நீங்கள் வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டி வரும். எப்படியிருந்தாலும் இரண்டு வழிகளிலுமே அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது.
வாழ்க்கையே ஒரு நன்மைதான். நாம் எப்போதும் ஏதாவது இரண்டு பொருட்களில் எது அதிக பயனுள்ளது என்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோமேயானால், அது நாம் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட மனத்துடன்தான் இருக்கிறோம் என்பதையே குறிக்கிறது.
வாழ்க்கையோடு நாம் வியாபாரம் செய்ய முடியாது. நம்முடைய மொத்த வாழ்க்கையையும் ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல நிர்வகிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு வியாபார மனத்திலிருந்தும் நமக்கு ஓய்வு தேவைப் படுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம்

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு,
குறைந்தது அரைமணி நேரமாவது பணத்தை
அடிப்படையாகக்கொள்ளாத, வியாபார
நோக்கம் இல்லாத ஏதோ ஒரு செயலில்
உங்கள் மனத்தை ஈடுபடுத்துங்கள்; ஏதாவது
ஓவியம் வரையுங்கள்; ஏதாவது எழுதுங்கள்;
ஏதாவது கவிதை எழுதுங்கள்.
ஓவியம் வரைய ஆரம்பிக்கும்போதே,
பெரிய ஓவியக் காட்சியில் உங்கள்
ஓவியங்கள் இருப்பது போன்ற கற்பனைக்
காட்சிகளைத் தவிர்த்துவிடுங்கள். "இந்த
ஓவியங்களை எல்லாம் வரைந்து டெல்லியில்
> நம்முடைய வாழ்க்கையை ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல் நிர்வகிக்க முடியாது. ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தி பணம் சம்பாதிப்பேன்," என்பதுபோல் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
கண்காட்சி நடத்துவது பற்றியோ அல்லது உங்கள் திறமையை மக்களுக்கு எப்படி வெளிக்காட்டுவது என்பதைப் பற்றியோ கவலைப்படாமல், குறைந்தது அரைமணி நேரம் ஓவியம் வரையுங்கள் அல்லது ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.
ஓவியம் வரையத் தொடங்கும் முன்பாகவே நாம், 'என் நண்பர் வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைக் காட்டி, இந்த எண்ணத்தை நான் எப்படி வளர்த்துக்கொண்டேன், எப்படி இந்த ஓவியங்களை எல்லாம் வரைய ஆரம்பித்தேன் என்றெல்லாம் விவரிப்பேன்' என்று நினைக்கிறோம்.
எந்தவிதமான விளைவையோ பலனையோ பற்றி யோசிக்காமல், வெறுமனே எதையாவது செய்யுங்கள். அது உங்களை இருப்பு நிலைக்குள் அழைத்துச் செல்லும்.
உங்கள் திட்டங்களை எல்லாம் சொல்லி எப்படி உங்கள் நண்பரைச் சலிப்படையச் செய்யலாம் என்று தீர்மானிக்கிறீர்கள்.
இப்போது என்னுடைய (மோசமான) நிலைமையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு வருடத்தில் பல வீடுகளுக்குச் செல்கிறேன். நான் போகும்போது சில வீடுகளில், அந்த வீட்டைப் பற்றிய முழு விபரங்களையும் என்னிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
வீட்டு வாசலில் இருந்தே தொடங்குவார்கள். "ஸ்வாமிஜி, இந்தப் படம் இந்த ஊரில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து வந்தது. நான் இதை 1962ல் வாங்கினேன்," இது போன்ற விஷயங்களைப் பேசுவதற்கு மக்கள் விரும்பவே செய்கிறார்கள். அதே போன்று கவிதை எழுதத் தொடங்கும்போதே புலிட்சர் பரிசைக் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள்.

சில கவிதைகளை எழுதியவுடன், 'நான் இதைப் பிரசரிப்பேன். புகழ் பெற்ற கீதாஞ்சலிக்குக் கிடைத்ததைப் போன்ற அங்கீகாரம் இதற்கும் கிடைக்கும். நான் நோபல் பரிசு பெறுவேன்' என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள். எந்தவிதமான விளைவையோ பலனையோ பற்றி யோசிக்காமல், வெறுமனே எந்தச் செயலையாவது செய்யுங்கள். அடுத்த விருந்தின்போது இந்தக் கவிதையை நான் சுத்தமாக வாசிப்பேன் என்றெல்லாம் திட்டம் தீட்ட ஆரம்பிக்காதீர்கள்.
எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல், அதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு அரைமணி நேரம் மட்டும் அந்தச் செயலைச் செய்து பாருங்கள்!
அந்த அந்த அரைமணி நேரத்தில், நீங்கள் உங்கள் சொந்திருப்பிற்குள் விழுந்துவிடுவீர்கள்.
ஓவியம் வரைவது அல்லது கவிதை எழுதுவது என்பவற்றிற்குப் பதிலாக ஏதாவது வழிபாடு செய்யும் இடங்களுக்குச் சென்று அந்த இடத்தைச்சுத்தம் செய்யுங்கள், துடையுங்கள்.
'நான் இந்தத் தன்னார்வப் பிரிவிற்குத் தலைவராக இருப்பேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். துடைப்பத்தைக் கையில் எடுத்த உடனேயே, பதிலுக்கு எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், பெருக்கத் தொடங்குங்கள், சுத்தம் செய்யத் தொடங்குங்கள்.
பணம், பெயர், புகழ் என்ற எதுவுமே தராத அரைமணி நேரச் சேவையைச் செய்யுங்கள். அதனால் வாழ்வின் உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.
பொதுச் சேவை நடக்குமிடங்களில் எந்தவிதமான சுயநலமுமின்றி உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். மக்களுக்கு உணவு பரிமாறுங்கள். ஆனால் இதன் மூலம் அதிக அளவு பலனைப் பெறுவது எப்படி என்றோ அல்லது முடிந்த அளவு சிறு அளவிலாவது பலனைப் பெற்றுவிட வேண்டும் என்றோ நினைக்காமல் உணவு பரிமாறுங்கள்.
சேவை செய்வதுகூட நம்மில் பலருக்கு ஆணவத்தைத் தூண்டி விட்டுவிடுகிறது. நம்மில் பல பேர் சேவை செய்வது எதற்காக என்றால், அதைப் பற்றி மற்றவர்களிடம் போய்ச் சொல்லி அவர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டுமென்பதற்காகவே.
அதனால் இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேதான்; அது, உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனைத் தராத, ஏதாவது பலன் வரும் என்று நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத, எதையாவது ஒன்றைக் குறைந்தது அரைமணி நேரம் செய்வதுதான்.
பணம், பெயர், புகழ் என்று எதுவுமே அந்த அரைமணி நேரச் சேவைக்காக
உங்களை வந்து சேரக் கூடாது. உங்கள்
வாழ்வில் இதற்காகக் குறைந்தது 30
நிமிடங்கள் செலவு செய்தால், வாழ்வின்
உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத்
தொடங்குவீர்கள்.
நீங்கள் பட்டறிவுப்பூர்வமாக, மூளை
ரீதியாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும்
வரையில், நீங்கள் தொடர்ந்து
பலன்களைப் பற்றிய கணக்குகளைப்
பார்த்துக்கொண்டிருக்கும்வரையில், "எது
அதிகமான பலனைத் தரும்? அதனால்
சாதிக்கப் போவது என்ன? அதனால்
எனக்கு என்ன கிடைக்கும்?" என்று
உங்கள் வாழ்க்கையுடன் பேரம் பேசத்
தொடங்கிவிடுகிறீர்கள்.
இந்த நுட்பத்தை நீங்கள் பின்பற்றினால் உங்கள் இருப்பைப் புதிய பரிமாணத்தில் பார்ப்பீர்கள்.
சத்தியமாகச் சொல்கிறேன். இந்த 30 நிமிடங்கள் உங்களைக் கிருஷ்ண உணர்ச்சிக்குள் அழைத்துச் செல்லும். உங்கள் வாழ்வில் இந்த 30 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ள நேரமாக அமையும்!
நிறைய பேர் வந்து உட்கார்ந்து ஸத்ஸங்கத்தைக் கேட்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுது மட்டுமே, மற்றவர்களிடம் சென்று தாங்கள் கேட்டவற்றை எல்லாம் அப்படியே திரும்பச் சொல்ல முடியும் என்பதற்கா கவே ஸத்ஸங்கங்களைக் கேட்கவருகிறார்கள்.
தாங்கள் கேட்டவற்றை மற்றவர்களிடம் சென்று அப்படியே சொல்கிறார்கள். இப்படிச் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் முதலில் அதை உங்களுக்குள் ஆழ்ந்து உட்செல்ல அனுமதியுங்கள். அந்தக் கருத்துக்கள் முதலில் உங்கள் இருப்புத் தன்மைக்குள் ஆழ்ந்து செல்லட்டும்.
நீங்கள் பெறப்போகும் பலனைக் கணக்கிட்டுப் பார்ப்பதை நிறுத்தும்போதுதான், நீங்கள் வாழ்க்கையையே அனுபவிக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் உயிர்த் துடிப்போடு இருப்பீர்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரமல்ல. அது அப்படி ஆகவும் முடியாது.