வாழ்க்கை விளையாட்டுதான்! அதற்காக ஒரே மாதிரியாகவே விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒன்று, இவர்கள் இருவருமே கீதை தோன்றுவதற்கென்றே ஒரு விளையாட்டை விளையாடியிருந்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி தெரியாமல் நம்பிக்கை இழந்த நிலையிலும் அர்ஜூனன் இருந்திருக்கலாம்.
கீதையைப்போல, நமக்குத் தெளிவாகவும் நேரடியாகவும் ஸத்யங்களை எடுத்துச் சொல்லக்கூடிய நூல் வேறு எதுவும் இல்லை.
கிருஷ்ணரைப் போல, நேரடியான நுட்பங்களை தரக்கூடிய குரு வேறு ஒருவரும் இல்லை.
கிருஷ்ணர் எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்ன பிறகும்கூட அர்ஜூனன் தொடர்ந்து, "ஓ, கிருஷ்ணா! முதலில் நீங்கள் என்னிடம் செயல்களைத் துறந்துவிடு என்று சொன்னீர்கள். பிறகு பக்தியுடன் பணிகளைச் செய் என்றும் பரிந்துரை செய்கிறீர்கள். இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரக்கூடியது என்று கருணை கூர்ந்து எனக்குச் சொல்வீர்களா?" என்று கேட்கிறார்.
எது அதிகமான பலனைத் தரக்கூடியது என்று யோசிக்கத் தொடங்கினீர்களானால், உங்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு விடை கிடைக்காது; எந்த ஒரு முடிவுக்குமே நீங்கள் வரமுடியாது. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பலனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், நம்மால் ஒருபோதும் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

முதலில், 'பலன்' என்பது மிக முக்கியமானதொரு சொல். ஏனென்றால் இதைக் அளவிடக்கூடிய அளவுகோல் ஒருவருக்கொருவர் வேறுபடுவதாக இருக்கிறது.
ஏதாவதுஒரு பலனை நாம் மதிப்பீடு
செய்வதற்கு முன்னர், பலனை அளப்பதற்குப்
பயன்படுத்தும் அளவுகோலைப் பற்றித்தான்
நாம் முதலில் மிகத் தெளிவாகத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
பலனைப் பற்றி
யோசிக்கத்
தொடங்கினால்,
நம்மால் ஒருபோதும்
எந்த ஒரு
பிரச்சினையையும்
தீர்க்க முடியாது.
ஒருவருக்குப் பலனைத் தரக்கூடியது வேறொருவருக்கு முற்றிலும் பயனற்றதாக இருக்கும். வெற்றியை மதிப்பிட நாம் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் முக்கியமானது.

'நாம் வெற்றி பெற்றவர்கள்' அல்லது 'நாம் தோல்வியடைந்தவர்கள்' என்று நம்மை நாமே முத்திரை குத்திக் கொள்வதற்கு முன்பே, நாம் நம்முடைய வாழ்க்கையை எந்த அளவுகோலைக் கொண்டு அளக்கப் போகின்றோம் என்பதைப் பற்றித் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அளவுகோலைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவரை எதையும் தீர்மானிப்பது என்பது அர்த்தமில்லாததாகிவிடும். தெளிந்த புத்திசாலித்தனத்துடன்தான் எந்த ஒரு தீர்மானத்திற்குள்ளும் குதிக்க வேண்டும்.
புத்திசாலித்தனம் இல்லாமல் தீர்மானத்திற்குள் குதிப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது. நாம் எங்கே சென்று இறங்கப் போகிறோம் என்பதே நமக்குத் தெரியாது.
வாழ்க்கையை வெற்றி அல்லது தோல்வி என்று அளப்பதற்கு முன், அந்த வெற்றியை எப்படி அளப்பது என்பதை ஒருவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையைப் பணத்தைக்கொண்டு அளப்பது என்று தீர்மானித்தோமென்றால், அதற்குப் பிறகு பணத்திற்காக மட்டுமே நாம் உழைக்க வேண்டும்.
இப்பொழுது நாம் காலையிலிருந்து மாலைவரை நம்முடைய இலக்கை அடைவதற்காகவே பாடுபடுகிறோம். பிறகு அந்த நாளின் இறுதியில்,
புத்திசாலித்தனம் இல்லாமல் முடிவு எடுப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது.
"ஆம் இந்த அளவுகோலைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கையை நான் அளக்கப் போகிறேன்," என்று தீர்மானிப்பதன் மூலம் நம்முடைய அளவுகோலைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிறோம்.
இந்த அடிப்படையில் நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறோமா அல்லது தோல்வியைச் சந்தித்திருக்கிறோமா என்பதை முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் பாருங்கள், நாம் மாலை நேரத்தை அடையும்பொழுது, நம்முடைய அளவுகோல் மாறிவிடுகிறது. அதனால் என்ன நடக்கிறது?
முதலில் ஒரு அளவுகோலை
வைத்துக்கொண்டு வாழத் தொடங்கினோம்.
ஆனால் சில ஆண்டுகள் சென்ற பிறகு,
நம்முடைய வாழ்க்கையை முற்றிலும்
வேறான வேறு ஒரு அளவுகோலைக்
கொண்டு அளக்கின்றோம்.
நம்முடைய வெற்றி அல்லது தோல்வியைத்
தீர்மானம் செய்கிற அந்த அளவுகோல் முற்றி
லுமாகவே மாறிவிடுகிறது.
நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்
நல்லவேளை நம் அளவுகோல் மாறுகிறது!
மாறிக்கொண்டே இருக்கிறது! நம்முடைய
மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம்முடைய
அளவுகோலும் மாறுகிறது.
> நம்முடைய
> மன முதிர்ச்சிக்கு
> ஏற்றவாறு
> நம்முடைய
> அளவுகோலும்
> மாறுகிறது.
பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்கிறபோதும் சரி, நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு வளர்ச்சி அடைகிறபோதும் சரி, நம்முடைய வாழ்வின் வெற்றியை அளவீடு செய்யும் அளவுகோலும் மாறியே தீரும்.
அவ்வாறு மாறவில்லை என்றால், ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அடுத்த வாழ்க்கையை நாம் மீண்டும் அடிமட்டத்திலிருந்து, பூஜ்யத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
நம்முடைய முந்தைய வாழ்க்கையை எங்கே விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் முன்னேற்றம் அடையாதவரை இது ஒரு முடிவில்லாத விளையாட்டாகவே தொடர்கிறது.
மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நாம் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்போம். சரியான பாதையில் நம்முடைய அளவுகோலை நாம் மாற்றிக்கொண்டோமென்றால், உண்மையிலேயே நாம் மனமுதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதையே அது காட்டுகிறது.
