KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

என்னிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி “நீங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அதையே கடைப்பிடிப்பது உங்களுக்கு மிகவும் சுலபம். ஏனென்றால் உங்களுக்குக் குடும்பம், பந்தம் என்று எதுவும் இல்லை. நீங்கள் செல்வத்தைத் துறந்துவிட்டீர்கள். நாங்கள் உறவுகளாலும் உடமைகளாலும் பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் எப்படி ஆன்மீகவாதியாக முடியும்?”

நான் தெளிவாகச் சொல்கிறேன், உங்களுடைய இயல்பூக்கம்தான் இவ்வாறு பேசுகிறது. உங்களுடைய இயல்பூக்கம்தான் உங்களை இவ்வாறு பேச வைக்கிறது.

“நீங்கள் ஒரு நேரத்தில் ஒரே வேலையைத்தான் செய்ய முடியும்,” என்று சொல்லி உங்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கும் உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தின் கட்டுறு மனப்பாங்கின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். ஒரே ஒரு பரிமாணம்தான் உங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு அடிமையாகி, அதற்கு உங்களை நீங்களே விற்றுவிட்டீர்கள்.

இயற்கையிலேயே நாம் பல்வேறுவிதமான பரிமாணங்கள் கொண்டவர்கள்தான். இயற்கையிலேயே நாம் உள்ளுணர்வு உடையவர்கள்தான். இயற்கையிலேயே நாம் ஞானமடைந்தவர்கள்தான். நமக்கு எல்லாமே இருக்கின்றன. ஆனால் நமக்கு இல்லாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான்; அது, நமக்கு இருக்கும் ஆற்றலை நாம் உணராமல் இருப்பதுதான்.

இயற்கையிலேயே நாம் ஞானம் அடைந்தவர்கள்தான்.

நாம் இந்தப் பந்தங்களை உடைத்தெறிந்து
விட்டு, பல பரிமாணங்கள் கொண்டவராக
மாறுவது எப்படி என்பது பற்றிப் பின்வரும்
ஸ்லோகங்களிலும், கீதையின் மீதமுள்ள
பகுதியிலும் குருவான கிருஷ்ணர் விளக்கிச்
சொல்கிறார்.

நம்முடைய உண்மையான நிலையை நாம்
அடைவது எப்படி என்பதைப் பற்றி நமக்கு
உபதேசம் செய்கிறார். இதைத்தான் ஸமாதி
என்கிறோம்.

ஸமாதி என்ற சொல், 'உங்களுடைய உண்மையான இயற்கை நிலைக்கே நீங்கள் திரும்பவும் செல்வது' என்பதைக் குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து, "நடந்ததற்கு வருந்துங்கள்," என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த வார்த்தை 'நாம் வருத்தத்தோடும் குற்றவுணர்வோடும் இருப்பதைத்தான் அவர் விரும்புகிறார்' என்று தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதுவல்ல அதன் உண்மையான பொருள்.

அரேபிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வார்த்தைக்கு, 'மீண்டும் உங்கள் பழைய நிலைக்கே செல்லுங்கள்' என்பதுதான் பொருள். அந்தப் பொருளில்தான் கிறிஸ்துவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்.

> நம்முடைய இருப்பு நிலையோடு நாம் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம்.

ஸமாதி என்ற வார்த்தையின் பொருளையே இந்த வார்த்தையும் பெற்றிருக்கிறது. கிருஷ்ணர், கீதை முழுவதும் யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். எல்லா அத்தியாயங்களுமே ஏதேனும் ஒரு யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

யோக என்பது ஸமாதி போன்றதுதான். யோக என்றால் 'இணைதல்'. அதாவது நம்முடைய உண்மையான இயற்கை நிலையுடன் நாம் இணைவதையே யோக என்ற சொல் குறிப்பிடுகிறது.

Portrait

நம்முடைய இருப்பு நிலையோடு நாம் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம். அதற்குப் பிறகு நம்மால் பொருள் சார்ந்த வாழ்க்கையையும் வாழ முடியும்; ஆன்மீக வாழ்க்கையையும் வாழ முடியும். அதற்கு எந்தவித தடைகளோ, எல்லைகளோ கிடையாது. நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

அரசர் ஜனகர் ஞானமடைந்த ஆன்மாவாகவும் செல்வ வளம் மிக்கவராகவும் இருந்தார். ஜனகரைப்போல பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் ஆன்மீகவாதியாக வாழ்வதற்கு பொருள் சார்ந்த செல்வம் தடையாக இருப்பதில்லை. பேராசையால் செல்வத்தின் மீதுள்ள பற்றும் அந்தச் செல்வத்தை எங்கே இழந்துவிடுவோமோ என்ற பயமும்தான் ஒருவர் சுதந்திரமாவதைத் தடுத்து நிறுத்துகிறது.

அர்ஜூனன் சொன்னது,

ஓ, கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு
என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய்
என்றும் சொல்கிறீர்கள்.

எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது
என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்.

கிருஷ்ணர் சொன்னது:

செயலைத் துறந்துவிடுவதும், பக்தியுடன் செயலைச் செய்வதும்
ஆகிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.

ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது,
செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

எவரொருவர் தம்முடைய செயல்களின் பலன்மீது பற்றோ,
வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார்.

ஓ, அர்ஜூனா! அப்படிப்பட்டவர் எல்லா இருமைத்
தன்மைகளிலிருந்தும் விடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற
பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்.

செயல்படும் பாதையானது துறவறப் பாதையிலிருந்து
வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான்
சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே கற்றவர்கள், செயல்படுவதும்
துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச்
செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

முந்தைய நான்கு அத்தியாயங்களிலும் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எல்லாச் சந்தேகங்களையும் போக்குகிற வகையில் கிருஷ்ணர் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறார்.

கிருஷ்ணர் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் இதையே மீண்டும் மீண்டும் விளக்கிச் சொன்ன பிறகும்கூட, அர்ஜூனன் அதே பழைய நிலைக்கே மீண்டும் வந்து கொண்டிருந்தார்.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் அர்ஜூனன் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஒரு அரசராக இருப்பவர் இவ்வளவு மோசமான அறியாமையில் ஒருபோதும் இருக்க முடியாது.

peacock feather