உங்களை நிர்ணயிப்பது யார்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் நம்முடைய வாழ்க்கை முறையை நன்கு ஆழ்ந்து பார்த்தோமென்றால், பொதுவாக நாம் ஏற்றுக்கொண்டிருப்பவை எல்லாமே, உண்மையில், குழப்பங்களாகவும் பைத்தியக்காரத்தனங்களாகவுமே இருக்கும்.
ஆனால் நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே இம்மாதிரியான கட்டுறு மனப்பாங்கிலேயே வளர்ந்துவிட்டதனால், இதைப் பற்றிய விழிப்புணர்வுகூட நம்மிடம் இல்லை.
சிறு வயதிலிருந்தே நம் மனத்தில் சில நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் ஆழமாக வேரூன்றிவிட்டன. மீதமுள்ள நம்முடைய வாழ்நாளிலும் நாம் இந்த எண்ணப் பாதைகளையும், எண்ணப் பாதைகளின் சுவடுகளையுமே பின்பற்றுகிறோம்.
இந்தியக் கிராமங்களில்ன்றும் எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு, எண்ணெய் எடுக்கும் எந்திரமான செக்கை இயக்குவதற்கு மாடுகளையே பயன்படுத்தி வருகிறார்கள். செக்கிலிருந்து எள்ளை நசுக்கி, எண்ணெய் எடுப்பதற்காக வட்ட வடிவமாகப் பாதை அமைத்து, அதைச் சுற்றி வரும் படியாக மாடுகளை அதில் கட்டி இருப்பார்கள்.
நம்முடைய வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால், பெரும்பாலும் இந்தச் செக்கு மாடுகளைப்போலத்தான் நாமும் பழக்கப்பட்ட பாதையிலேயே சிக்கிக் கொள்கிறோம். நம்முடைய புலன்களாலும் நினைவுப் பதிவுகளாலும் தூண்டப்பட்டு, அதே பாதையில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
செக்கு மாடுகள் உணவை அசைபோட்டுக்கொண்டே நடப்பதுபோலத்தான், நாமும் நம்முடைய புலன்கள் வழியாகவும் நினைவுகள் வழியாகவும் பெற்ற கருத்துக்களை அசைபோட்டுக்கொண்டே விழிப்புணர்வற்ற நிலையில் ஒரே நடைமுறையை நாள் கணக்காகவும் வருடக் கணக்காகவும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
எப்போதாவது, "இன்று நாம் வழக்கமாகச் செய்யும் செயல்களை எல்லாம் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாகவும் நியாயமாகவும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றோம்," என்று நினைப்பதுகூட மனத்தின் மாயையாகத்தான் இருக்கும்.
நாம் இப்போதும்கூட, நமது விழிப்புணர்வற்ற மனத்தாலும், அதில் தேக்கிவைக்கப்பட்டுள்ள எண்ணங்களாலும் விரட்டப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆழமான எண்ணப் பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்த விழிப்புணர்வற்ற பகுதியில்தான், நம்முடைய தொண்ணூறு சதவீத மனமும் நிலை கொண்டுள்ளது என்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் சொல்லிவிடுவார். இதுதான் நம்முடைய மனத்தின் ‘ஹார்ட் டிஸ்க்’ (Hard Disc).
நம்முடைய
விழிப்புணர்வுமனம்
மற்றும்
பகுத்தறிவு மனம்
என்று நாம்
நினைப்பதெல்லாம்
ஒரு கணத்தில்
தோன்றி மறையக்கூடிய
எண்ணப் பதிவே!
நம்முடைய விழிப்புணர்வு மனம், நம்முடைய பகுத்தறிவு மனம் என்று நாம் நினைப்பதெல்லாம் கூட, ஒரு கணத்தில் தோன்றி மறையக்கூடிய எண்ணப் பதிவே.
இந்த ஆழ்ந்த விழிப்புணர்வற்ற மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மனப்பதிவுகள்தான், நாம் முற்றிலும் விழிப்பு நிலையில் இல்லாதபோதுகூட, நம்முடைய சார்பில் முடிவுகளை எடுக்கிறது.
உள்ளுணர்வால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று நாம் நினைப்பவைகூட, உண்மையில், விழிப்புணர்வற்ற நிலையிலிருந்தும்
இயல்பூக்கத்திலிருந்தும் (Instinctive) வரக்கூடிய முடிவுகளே!
பெரும்பாலான மக்களுக்கு,
உள்ளுணர்விற்கும் இயல்பூக்கத்திற்கும்
வித்தியாசமே தெரிவதில்லை. இயல்பூக்கம்
என்பது விழிப்புணர்வற்ற நிலை.
அதுதான் விலங்குகளைச் செயல்பட
வைத்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய
மரபணுக்களிலும் அணுக்களிலும் ஆழமாகப்
பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள பழக்க
வழக்கப் பதிவுகளைத்தான் இயல்பூக்கம்
என்கிறோம்.
விழிப்புணர்வற்ற நிலையில் உள்ள மூளைதான், விழிப்புணர்வு நிலையில் உள்ள மூளையைவிட அதி வேகமாகச் செயல்படுகிறது. அதனால்தான் நமது விழிப்புணர்வற்ற நிலையினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயலே, நம்முடைய வாழ்வாதாரத்திற்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
மாறாக, உள்ளுணர்வு என்பது மனத்தின் மேலான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது. இது தியானத்தின் மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மன நிலை.
அது நம்முடைய புலன்களை உள்முகமாகத் திருப்பும்போது அடைகிற நிலை. நிகழ்காலத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலுமே இதனுடைய நிலை.
உள்ளுணர்வு என்பது காலத்தையும் இடத்தையும் கடந்து செல்லக்கூடியது. உள்ளுணர்வு என்பது நம் எல்லாப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், நாம் வெடித்து எல்லாத் திசைகளிலும் பரவுவதற்கும் நம்மை அனுமதிக்கிறது.
ஆனால் இயல்பூக்கம் என்பது நம்மை வழக்கமான கட்டுறுத்தப்பட்ட பாதைகளிலும், விழிப்புணர்வற்ற நினைவுகளிலுமே கட்டுப்படுத்தி வைத்து விடுகின்றன.
