வினாக்களின் வாசலில்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஓர் ஆசிரமத்தில் போய்ச் சேர்ந்து கொள்வதோ அல்லது ஸந்யாசியாகிவிடுவதோ ஓடிப்போவது போன்றதாகாதா?
பலர் இன்று பொருள் சார்ந்த உலகில் தாங்கள் எதிர்கொள்ளும் துயரங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆசிரமத்தில் தஞ்சம் அடைகிறார்கள்.
ஆசிரமத்திலோ அல்லது காட்டிலோ வேறு விதமான துயரத்தை அவர்கள் எதிர்கொள்ளமாட்டார்களா?
ஸ்வாமிஜி ஆனந்தம் என்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. எனக்குத் தெரிந்தவரை அதுவும் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி போன்றதுதான். ஆனால் நீங்கள் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதெல்லாம் வேறு, ஆனந்தம் என்பது வேறு என்று சொல்கிறீர்கள் தயவு செய்து விளக்குங்கள்.
புலனின்பங்களைத் துறப்பது, எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது இவைதான் கிருஷ்ணர் சொல்கிற சத்தியங்கள். இது எனக்குப் புரிகிறது.
ஆனால் இதை எப்படி என்னால் செயல்படுத்த முடியும்?
ஒரு சாதாரண மனிதனான நான், என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள்.
ஸ்வாமிஜி, மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் எல்லாப் பண்புகளுள் தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது?
ஸ்வாமிஜி, எல்லாவற்றையும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் சமமாகப் பார்ப்பது எப்படி?
நாம் அனைவரும் சமமாகப் படைக்கப்படவில்லை.
நாம் அனைவருமே வித்தியாசமானவர்களாகவும்
பல் வேறுபட்டவர்களாகவும் இருக்கிறோம்.
அப்படியிருக்கும்போது, கிருஷ்ணர் சொல்லுவதைப்போல் எப்படி நம்மால் அனை வரையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியும்?
ஸ்வாமிஜி, புலன்களின் அழுத்தத்தை எப்படிஃக் கட்டுப்படுத்துவது? எனக்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் உத்வேகம் உண்டு. ஆனால் அதற்கான சக்தி என்னிடம் இல்லை. எனக்கு உங்கள் உதவி தேவை.
ஒரு குருவானவர் ஞானமடைந்தவரா இல்லையா என்பதைக் கண்டு கொள்வது எப்படி?