KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/முன்னுரைSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துக்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், "கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்குளிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்," என்று சொல்கிறார். "நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்," என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் பகவத்ீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதப் படிப்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

  • நித்யானந்தா பதிப்பகம்

பதினாந்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'இந்தியா' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்," என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்ஷேத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்ஷேத்ரம், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்கீதை.

கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாசரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கெளரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கெளரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருத்ததில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜூனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு ஸத்யத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்குன்றும் ஆழமான ஸத்யமாக உள்ளது.

பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரப்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜூனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அஹங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.' நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஸந்யாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞாநகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஜ்ஞாந ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞாந ஸத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அஹங்காரம், நாம் ஜ்ஞான ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. அவற்றுள் ஞானேந்திரியங்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. ‘தன்னை உணர்தல்’ எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். ‘

மஹாபாரதம் ஒரு இதீஹாஸ கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜ்ஞான ஸத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

பகவத்ஃகீதை

உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

அத்தியாயம் - 5

மேலும் மேலும்
வெளியுலக தேடுதல் என்பது
சந்தோஷத்திற்கு வழி காட்டாது.

அது மன அழுத்தத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

அப்படியென்றால் எது சந்தோஷத்திற்கு வழிகாட்டும்?