பொருளடக்கம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை 12
II. பகவத்கீதை ஒரு பின்னணி 14
III. முன்னுரை 24
IV. உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு
1. வினாக்களின் வாசலில் 28
2. உங்களை நிர்ணயிப்பது யார்?
❖ நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்' 34
❖ வாழ்க்கை விளையாட்டுதான்!
அதற்காக ஒரே மாதிரியாகவே
விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது, 37
❖ வெளியுலக சுகத்தின் உச்சிக்கே சென்றாலும்
வெற்றியைத் தொட முடியாது 40
❖ இழந்த நிம்மதியைப் பெற்றிட
யக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்! 41
❖ தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம் 46
- பலனை எதிர்பாராது செய்யும் செயல் வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும் 47
- உங்களைத் துரத்தும் ஆசையையே துரத்திவிடலாம் 49
- வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம் 51
- ஜீவன் முக்தியை மலர்த்திடும் அருமையான உபாயம் 55
- உங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றிவிடலாம் 57
- புதுப்புது தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே! 58
- துணிச்சல், ஸந்யாஸத்தின் அஸ்திவாரம் 61
- எதனிடம் சரணடைகிறீர்களோ அதுவே உங்களை வழி நடத்தும் 63
- மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம் 66
- உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்திடும் 68
- ஆனந்தம் உங்களுக்கே சொந்தமாகிவிடும் 71
- அனுபவிக்கத் தெரியாதவர் உழைப்பது, அடுத்தவருக்கே சேர்ந்துவிடும் 73
- குழந்தைகளின் நிஜமான தேவை சுதந்திரம்,சொத்தல்ல! 74
- நிஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவதே 78
3. கர்மத்திற்கும் மேலான பக்தி
- உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை 86
- உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு 91
- விரும்பியதை அடைந்துவிடும் சக்தி படைத்தவர்கள் நீங்கள் 96
- சீர்வரிசையோடு பூமிக்கு வந்தவர் நீங்கள் 100
- எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம் 101
- புதிய உணர்விற்குள் குடியேறிவிடுவோம் 103
- இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம் 105 * காரணமில்லா மங்களத்துவத்தோடு உங்களாலும் வாழ முடியும் 107
- ஸந்யாஸம் தப்பியோடுபவருக்கல்ல, தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே! 109
- உள்ளுலக ஒழுக்கமே உங்களை சொர்க்கத்தில் வாழச் செய்யும் 111
- சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும் 113
- ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும் 114
- ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதி 116
- ஒவ்வொருகணமும் கொண்டாட்டமாகிவிடும் 117
- இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம் 119
- கோபம்கூட நம்மை குணப்படுத்துவதற்காகவே! 121
- நிஜத்தில் வாழச் செய்வதே நிஜமான தியானம் 122
4. மனத்தைக் கட்டுப்படுத்துதல்
- உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத நிலை கிருஷ்ண நிலை 128
- உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு 130
- பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம் 131
- வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகிவிடும் 132
- நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகிவிடும் 134
- உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள் 136
- ஆனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும் 138
- அமைதியின் பிறப்பிடமே ஆனந்தம் 140
- செயலை மட்டும் செய்து லக்ஷியத்தை அடையுங்கள் 142
- தெய்வத்தின் பொம்மை விளையாட்டு 143
- மனத்தின் சுறுசுறுப்பு ஓய்வு பெற, உடலைச் சுறுசுறுப்பாக்குங்கள் 145
❖ நீங்கள் ஓய்வெடுங்கள்
பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் 146
❖ உணர்ச்சி உங்களைத் தாக்காது 149
❖ நீங்கள் சாதாரணமானவர் அல்ல 151
❖ உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள் 153
5. அறிவைக்கொண்டு அறியாமையைச் சுத்தம் செய்தல்
❖ வேதத்தின் முதல் வாக்கியமே
விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம் 159
❖ படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே! 160
❖ கடவுளின் பிரதிபலிப்பே மனிதன் 162
❖ விழிப்புணர்வு - உணர்ச்சியையே உரு மாற்றும் 164
❖ உங்களின் முதலாளி நீங்களே...! 166
❖ அனைத்தும் சக்தி மயம் 167
❖ பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள் 170
❖ அஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது 172
❖ அனுமதியுங்கள், உங்களை விடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும் 174
❖ ஆனந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள் 176
❖ அவர் இருக்கும் பேரானந்த நிலையை நாம் அடைவதற்கு உதவுகிறார் 179
❖ அன்பை மட்டுமே சார்ந்திருங்கள் 182
6. நாயும் நாயை உண்ணுபவரும்
❖ ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே 189
❖ பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள்மீது பொழியும்
ஆனந்தத்தை அனுமதியுங்கள் 191
❖ பூமியில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானதே! 192
- மனிதப்பிறவி என்ற வெகுமதிக்குப் பிறகும் வரம் ஏதும் வேண்டுமோ! 194
- பிறப்பைக் கொண்டாடுவதைப்போல இறப்பையும் கொண்டாடலாமே...! 197
- மரணத்தைப் பற்றி தெளிந்து மரண பயத்தை ஒட்டிடுவீர்...! 198
- மரணத்தை வரவேற்று ஞானமடைந்த மகரிஷி 200
- ஆன்மாவின் உற்பத்தி ஆனந்தம் மட்டுமே...! 202
- சத்தியங்கள் தெளிவுற சாட்சியாகப் பாருங்கள்...! 203
- விழிப்புணர்வோடு ஆசையை அனுபவிப்பதே ஒரே வழி 205
- உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை 207
- நிஜமான ஆசைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் 209
- நீங்கள் தேடவேண்டிய சரியான இடம் 210
- இழந்த ஆனந்தத்தை மீட்டுக்கொடுத்திடும் தியான முகாம் 212
7. தன்னை உணர்வதற்கான வழி
- வெளியில் இருந்து பெறப்பட்டது வெளியிலிருந்தே எடுக்கப்பட்டுவிடும் 218
- எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம்...! 220
- உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஜீவன்முக்தர்' 223
- நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? 224
- உங்களுக்குள் புது தெளிவு பிறக்க,புதியதோர் தீர்வு 225
- உள்ளுலகில் நிகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே களைப்பு 226
- பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திடுங்கள் 228
- உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்! 230
- விழிப்புணர்வுக்குள் நுழையவைக்கும் அருமையான நுட்பம் 231
- லட்சியம் தொடுவானம் அல்ல, தொடுமிடத்தில் இருக்கும் ஆனந்தம்! 233
❖ பொறுப்பெடுக்கச் செய்வதே அன்பு! 238
❖ தடுமாற்றத்தையே தடுமாறச் செய்யலாம்! 237
8. என்னை அறிந்து ஆனந்தமாக இருங்கள்!
❖ உள் குருவை விழிப்படையச் செய்யும் வெளி குரு 242
❖ தெய்வீக நிலைக்கே அழைத்துச் செல்லும் தியான நுட்பம் 244
V. பிற்சேர்க்கை
❖ பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி 250
❖ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் 252
❖ குரு வம்சம் 254
❖ அருஞ்சொற்பொருள் 255
❖ ஸ்லோகங்கள் 270
❖ ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் 284
❖ தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு 285
ஸம்ஸ்க்ரு’த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு’தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால்
அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி
விடுகிறோம்.
ஆனால் ஸம்ஸ்க்ரு’த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம்
சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில்
இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு’த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப்
படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு’தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துக்களும் நான்குவிதமான
உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில
எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை எழுத்து | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜாடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | டம்டம் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச’ | ச’ரணாகதி |
ஸம்ஸ்க்ரு’த வார்த்தைகளில் வரும் எழுத்து சாதாரணமாக
அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு’தத்தின் முதல் வகை
எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால்,
அதை ஸம்ஸ்க்ரு’தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக
இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு’தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும்,
தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை
ஸம்ஸ்க்ரு’தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு தத்தில் மூன்று வகை ‘ஸ’ க்கள் உண்டு.
1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான ‘ஸ’க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது ‘ஸ’ வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு ‘ஸ’ வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது.
ச'ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில் ச' மேல் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு’ என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் ‘ரு’ வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு தத்தில் ‘ஜ்ஞானி’, ‘ஆஜ்ஞா’ என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞானி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் s என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு ‘அ’ என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் ‘ந,ன,ண’ என்று மூன்று வகை ‘ந’ க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு தத்தில் ‘ந,ண’ என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் ‘ன’ என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாங்கூட, ஸ்ம்ஸ்க்ரு தத்தில் ‘ந’ என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந̄, வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு ‘ன’ என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகவத்கீதை
ஒரு பின்னணி
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
நமது உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத்கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத்கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ருட்டத்தில் ச்ருதி (Sruti) என்பார்கள். ச்ருதி என்றால் ‘காதால் கேட்பது’ என்று பொருள்.
பகவத்கீதையைப் பொதுவாக ‘கீதை’ என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருத்தில் ‘புனிதப் பாடல்’ என்று பொருள். வேதங்களும் உபநிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகασ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துக்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான ச்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபநிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்
போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட
உபநிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான
வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரத கதையின்
ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி
வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே
விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த
இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை.
கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக்
கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின்
விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது
எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம்
என்று பொருள். தற்பொழுது 'இந்தியா'
என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத
நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த
மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம்
விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது
வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம்
பாரதம். இந்த இதிஹாஸம், கெளரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு
நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை
சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
Hஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக்
கெளரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு.
அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்.
தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல்,
ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு,
அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால்
இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக்
குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் குந்தி. சூரிய தேவனை வேண்டி, அந்த மந்திரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரிய தேவன் தோன்றினார். அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜூனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜூனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜூனனிடம், ''நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.