லட்சியம் தொடுவானம் அல்ல, தொடுமிடத்தில் இருக்கும் ஆனந்தம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஏன் நாம் ஆசையின் பின்னால் ஓடிக்கொண்டும் அல்லது எதற்காகவாவது பயந்துகொண்டும் இருக்கிறோம்? இதை நாம் சற்று ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், வாழ்க்கை என்பதே நம்மால் அடையப்படவேண்டிய சில லட்சியங்களைக் கொண்டதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பதனால்தான், நாம் எதையாவது நோக்கி அல்லது எதிலிருந்தாவது விலகி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கையில் நாம் அடைய வேண்டும் என்று நிர்ணயித்து வைத்துள்ள லட்சியங்களை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தனக்கென்று எந்த லட்சியத்தையும் வைத்துக் கொள்வதில்லை.
வாழ்க்கையே ஒரு இலட்சியம்தான். பாதையே இலட்சியம்தான்! இலட்சியமும் பாதையும் வேறு வேறானவை என்று நாம் நினைத்தால், நாம் இலட்சியத்தை நோக்கி ஓடுவோம். தொடுவானத்தை நோக்கி ஓடுவோம்.
எப்பொழுதுதாவது நாம் தொடுவானத்தைத் தொட்டுவிட முடியுமா? நாம் அதை நோக்கி ஓட ஓட, அது நம்மை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதைப் பார்க்கிறோம் இல்லையா? ஏன்? ஏனென்றால் தொடுவானம் என்பதே ஒரு கற்பனைதான், அது ஒரு மாயேதான்.
வாழ்க்கையில் ஒரு லட்சியத்தின் பின்னால் நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்க்கையின் முடிவில் நாம் ஏமாற்றத்தைத்தான் அடைவோம்.

ஆனால் வாழ்க்கையையே ஒரு
இலட்சியமாக பார்க்கும்பொழுது
மட்டுமே, அந்தப் பாதையையே நாம்
இலட்சியமாக மாற்றிவிடுகிறோம்.
அதனால் நாம் வாழ்க்கைப் பாதையில்
இருக்கிற ஒவ்வொரு கணமும் ஆனந்தம்
என்கிற இலட்சியத்தை அடைந்து
கொண்டிருக்கிறோம்!
நம்முடைய வாழ்க்கையின்
ஒவ்வொரு கணத்திலும் இலட்சியம்
அடையப்படுகிறது.
ஆகவே, ஒவ்வொரு கணத்தையும் நாம் முழு விழிப்புணர்வுடனும் முழு உற்சாகத்தோடும் வாழும்பொழுது, நாம் உண்மையாகவே அந்தக்க கணத்தை அனுபவிக்கிறோம்.
நாம் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, அந்தச் செயலிலேயே முழுமையாக மூழ்கிவிடும்பாழுது அந்தப் பாதையையே நாம் அனுபவிப்பவர்களாகிவிடுகிறோம். பாதையே லட்சியமாக மாறிவிடும்பொழுது, நாம் ஒவ்வொரு கணமும் லட்சியத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறோம்.
தன்னை உணர்ந்த ஒருவர் எப்போதும் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். ஏனென்றால் அவர் முழுமையாக நிகழ்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஸத்யத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இலட்சியம், அது
தொடுவானத்தைப்
போன்றதுதான்.
தொடுவானத்தை
நாம் என்றுமே
தொடமுடிவதில்லை.
தெய்வீக ஆற்றலானது ஆனந்தமயமாக
அவருக்குள் ஊற்றாகப் பாய்ந்துகொண்டே
இருக்கிறது. அந்த ஆனந்த ஆற்றலுடன்
அவர் அவருடைய செயல்களைச்
செய்து கொண்டிருக்கிறார். அவருடைய
செயல்களுக்காக ஆசையிடமிருந்தும்
அச்சத்திடமிருந்தும் சக்தியைப் பெறவேண்டிய
அவசியமே அவருக்கு ஏற்பட்டதில்லை.
பொறுப்பெடுக்கச் செய்வதே அன்பு!
தன்னை உணர்ந்த
ஒருவர்
தம்முடைய
செயல்களுக்காக
ஆசையிடமிருந்தும்
அச்சத்திடமிருந்தும்
சக்தியைப் பெற மாட்டார்.
கிருஷ்ணர், தமக்குள்ளேயே சுறுசுறுப்பாக
இயங்கி கொண்டிருக்கும் ஒரு குருவைக்
குறிப்பிடுகிறார். வெளியே உச்சவேகத்தில்
செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் உள்ளே
மையத்தில் முழுமையான ஓய்வு நிலையில்,
தளர்வு நிலையில் இருக்கிற நிலையையே
அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையும் சாத்தியப்படக்கூடியதே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தநிலையில்தான் நாம் செய்து கொண்டிருக்கும் செயலில் இயல்பாக, முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியும். இந்த ஒருநிலையில்தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் செய்கிற செயலில் முழுமையான திருப்தியை உணர முடியும்; ஆனந்தமாக இருக்க முடியும்.
கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். நாம் முற்றிலும் உள்முகமாகத் திரும்பும்பொழுது, வெளியே நடப்பனவற்றின் மீது எந்தவித பற்றும் இருப்பதில்லை; எல்லாவற்றுடனும் தெய்வீகத்துடனும் ஒன்றாகி எல்லாக் கர்மாக்களையும் பாவங்களையும் கடந்துவிடுகிறோம்.
பிறகு ப்ரஹ்ம நிர்வாணம் என்ற இறுதியான விடுதலையை அடைகிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒன்றாகிறோம். நாம் நிலையான, எல்லை இல்லாத, ஆனந்தமான நித்யானந்தத்தை அடைகிறோம்.
நாம் மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்பாக இருக்கும்பொழுது, நாம் மேலும் மேலும் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்கிறோம். எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக நாம் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம்.
நாம் உள்ளுலகத்தோடு இசைவாக இணைந்து இருக்கும்பொழுது, நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். கடந்தகாலம் என்பதும் எதிர்காலம் என்பதும் நமக்கு இருப்பதில்லை.
நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், தெய்வீகத்துடன் ஒன்றாகிவிடுகிறோம். நான் இதை, 'அனைத்தும் ஒன்றான நிலை' என்று சொல்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாகிறோம். நாம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறோம். நாம் எதையும் வேறுபடுத்துவதில்லை.
இந்த நிலையில், நாம் தன்னிச்சையாக செயல்படுதல் என்ற உயரத்தில் இருக்கிறோம். தன்னிச்சையாக செயல்படுதல் என்பது படைப்பாற்றலைக் குறிக்கவில்லை. படைப்பாற்றல் என்பது ஒரு உப உற்பத்திப் பொருளே.
> தன்னிச்சையாக செயல்படுதல் என்பது நிகழ்காலத்தில் இருத்தலும் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றலுமே!
தன்னிச்சையாக செயல்படுதல் என்பது நிகழ்காலத்தில் இருத்தலும் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றலுமே! எதுவுமே விடுபடுவதும் இல்லை; எதுவுமே நிர்ணயிக்கப்படுவதும் இல்லை. நாமே பாய்ந்து சென்று அடைகிறோம். நாமே விரிவடைந்து, உள்ளடக்கிக் கொள்கிறோம்.
நாம் எந்த அளவு பொறுப்பெடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு விரிவடைகிறோம். பொறுப்புணர்வு என்பது ஏதோ எளிதாகத் தோள்களைக் குலுக்குவதுபோலத்தான். ஆனால் நாம் வெறுமனே அதற்குத் தோள்களைக் குலுக்கிக்கொண்டிருக்காமல், அதற்குத் தோள் கொடுப்போமேயானால், நாமும் விரிவடைவோம். நமக்குள் தானாகவே அந்தத் தெய்வீகச் சக்தி பாயும். நமக்குள் ஆற்றல் நிறைந்து தழும்பிக் கொண்டிருந்தால் மட்டுமே, நாம் மேலும் மேலும் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்.
நாம் முதலில் பொறுப்பு எடுக்கும்பொழுது, எந்தவித சந்தேகமும் இல்லாமல்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மை எதையாவது செய்யச்சொல்லும்பொழுது மட்டும், இடையில் இந்த மனம் வந்துவிடுகிறது. அது ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அது நம்மை நிறைய விஷயங்களைச் சிந்திக்க வைக்கிறது. உடனே நாம் பட்டறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.
நம்முடைய மனம் சாதக, பாதகங்களைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. நாம் விரும்பி தேர்ந்தெடுத்தவற்றைக்கூட எடை போடத் தொடங்கிவிடுகிறோம். ஆனால் முடிவில் நாம் ஆசை அல்லது அச்சத்தின் படியேதான் செயல்படுகிறோம்.