உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஜீவன்முக்தர்'
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
யார் ஒருவர் உடல், மனம் இவற்றைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்தர்' என்று அழைக்கிறோம். உடலும் மனமும் அவருடனேயே இருந்த போதிலும், அவற்றால் அவர் தீண்டப்படுவதும் இல்லை. அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை.
நமக்கு எந்தப் பயன்பாடும் இல்லையென்றால், தேவை இல்லையென்றால், நீங்கள் லாஸ் ஏஞ்சலீஸுக்குப் போவீர்களா? இல்லை, ஏதாவது காரணம் இருந்தாலொழிய நீங்கள் அங்கே செல்லமாட்டீர்கள்.
அதே போன்று, ஏதாவது காரணம் இருந்தாலொழிய, நீங்கள் இந்த உடலை எடுக்க மாட்டீர்கள். உடலும் மனமும் இல்லா ஆனந்தத்தை ஒரு கணமேனும் பெற்றிருந்தால், இந்த உடலாலும் மனத்தாலும் உங்களுக்கு ஒருபோதும் பிரச்சினை இல்லை. அது அங்கே இருந்தாலும்கூட, அதுதான் உங்களைப் பின்பற்றி வந்து கொண்டிருக்கும் நீங்கள் அதைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கமாட்டீர்கள்.
நீங்கள் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அதை நிறுத்துவதற்கான விசையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் இருந்தீர்களானால், நீங்கள் காரை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை, கார்தான் உங்களை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
காரை எப்படி ஓட்டுவது என்ற 'உபயோகிப்பாளர் கையேட்டை'ப், படிக்காமலும், காரை ஓட்டுவதற்குப் பயிற்சி எடுக்காமலும் நீங்கள் காரில் உட்கார்ந்தீர்களென்றால்...! இதே தவற்றைத்தான் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். கையேடு இல்லாமல் காரை ஓட்டினீர்களென்றால், இப்படிப்பட்ட தவறுகளைத்தான் செய்து கொண்டிருப்பீர்கள்.
காரை எப்படிக் கிளம்பச் செய்வது, எப்படி நிறுத்துவது, நிறுத்துவதற்கான முறைகளை எப்படிக் கையாள்வது போன்ற விதிமுறைகளை எல்லாம்
> யார் ஒருவர் உடல், மனத்தைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்தர்' என்று அழைக்கிறோம்.
தெரிந்துகொண்டால்தான் நீங்கள்
காரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இல்லையென்றால், கார்தான் உங்களை ஓட்டிக்
கொண்டிருக்கும். அதனால் வாகனத்தில்
ஏறுவதற்கு முன்பாகவே உபயோகிப்பாளர்
கையேட்டைப் படித்துவிடுங்கள்.
‘பகவத்கீதை’தான், உங்கள் உடலுக்கும்
மனத்திற்குமான ‘உபயோகிப்பாளர்
கையேடு.’
உடலுக்குள்ளும் மனத்திற்குள்ளும் செல்வதற்கு முன்னால், இந்த உபயோகிப்பாளர் கையேட்டைப் படித்துவிடுங்கள், அப்படியானால்தான் நீங்கள் நிறுத்த விரும்பும்பொழுது நிறுத்துவதற்கு இயலும். பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில், வாழ்வு மரணம் என்கிற விபத்தில் திரும்பத் திரும்பச் சிக்கிக் கொள்ளாமல் இருப்பீர்கள்.

## நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார்: "எவரொருவர் எதனாலும் அசைக்கப் படுவதில்லையோ, பொருள் சார்ந்த உணர்ச்சித் தூண்டுதலை யார் வெறுப்பின்றி பொறுத்துக் கொள்கிறாரோ, ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தை யார் தடுக்கிறாரோ, அந்த மனிதர் நன்றாக இருக்கிறார். இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அவர் எங்கே இருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும். அவர், தாம் இருக்கிற இடத்தை அறிந்து கொள்கிறார். அவருடைய இடம் அவருக்குத் தெரியும். உங்களுடைய இடம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், அது மிகவும் கஷ்டம்.
இந்த உலகில், நம்மில் பலருக்கு நம்முடைய இடம் எது என்று தெரிவதில்லை. அதனால்தான் நாம் இந்த உலகிலிருந்து விலக்கப்பட்டவர்களாக, வாழ்வின் மீது பிடிப்பு இல்லாதவர்களாக உணர்கிறோம். நாம் இந்த வாழ்க்கையைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்வதில்லை. நாம் நம்முடைய வீட்டில்தான் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை, ஏனென்றால் நம்முடைய இடம் நமக்குத் தெரிவதில்லை.
ஒரு சின்ன கதை.
ஒரு இருட்டான திரையரங்கில், இடை வேளையின்பொழுது ஒரு மனிதர் வெளியே சென்றுவிட்டு ஒரு கையில் பாப்கார்ன், இன்னொரு கையில் கோகோ கோலாவுடன் திரும்ப வந்தார். அவர் ஒரு பெண்மணியின் அருகில் வந்து கேட்டார் "கொஞ்ச நேரத்திற்கு முன் நான் உங்கள் காலை மிதித்துவிட்டேனா?" என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் "ஆமாம் மிதித்தீர்கள்," என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், "நன்றி, அப்படியானால் இதுதான் என்னுடைய வரிசை," என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்கி
றீர்கள். உங்களுடைய வரிசை உங்களுக்குத்
தெரியவில்லை! உங்களுடைய இடம்
உங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழிகளின்
மூலம்தான் நீங்கள் உங்களுடைய இடத்தை
அடையாளம் காணவேண்டியதிருக்கிறது.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. ஆசை, அச்சம் இவற்றிற்கு அப்பாற்பட்டுச் சென்றவரால் மட்டுமே, அவருடைய இருப்புத் தன்மைக்குள் தளர்வாக இருக்க முடியும். இந்தப் பூமி என்ற கோளில் அவருடைய இடம் என்ன என்பது அவருக்குத் தெரியும்.
உங்களுக்குள் புது தெளிவு பிறக்க, புதியதோர் தீர்வு
ஆசையாலும் அச்சத்தாலும் நம்முடைய உணர்ச்சிகளுக்கு நாம் சக்தி கொடுக்காமலிருந்தால், நாம் ஒரு புதுத் தெளிவைப் பார்ப்போம். நாம் ஞானத்துடனும் தெய்வீக உணர்வுடனும் அளவில்லாத ஆனந்தத்துடனும் செயல்பட ஆரம்பிப்போம். அதனால் தீர்மானம் செய்யுங்கள். “ஆசையின் காரணமாக நான் எதைச் செய்தாலும் அதன் பலனாய் மேலும் மேலும் ஆசைகளே விளைகின்றன. நான் ஓடிக்கொண்டே இருந்தும் எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை ஓடியதுபோதும்!” என்று தீர்மானம் செய்யுங்கள்.
அதேபோல்தான், அச்சத்தால் நீங்கள் எதனிடமிருந்தாவது தப்பித்துக் கொண்டிருந்தால், “சரி எவ்வளவு நாட்களுக்குத் நான் தப்பிக்க முடியும்? எவ்வளவு நாட்கள் என்னால் ஓட முடியும்? இந்த அச்சம், வேறு ஏதோ ஒரு ரூபத்தில் வந்து என்னைத் தாக்கத்தான் போகிறது, இதைப் பார்த்து அஞ்சி நான் ஓடினால், பின்னாளில் வேறு எதையாவது கண்டு அச்சப்படப் போகிறேன். அதனால் அதை இப்போதே எதிர்கொள்வேன்,” என்று தீர்மானம் செய்யுங்கள்.

உங்கள் அச்சத்தைக் கண்டுதான் நீங்கள் அஞ்சுகிறீர்கள், பொருளைப் பற்றி நீங்கள் அச்சப்படுவதே இல்லை. அந்தப் பொருள் உங்களைத் துரத்தப் போவதில்லை, ஆனால் அச்சம்தான் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்கேயாவது தப்பித்து சென்றுவிடலாம், ஆனால் ஆசை, அச்சம் என்னும் மூட்டையைத் தலையில் சுமந்துகொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் எங்கேயாவது ஒரு சுற்றுலா சென்றால்கூட, உங்களுடைய அந்தச் சிறிய மூட்டையை அவிழ்த்துவிடுகிறீர்கள்.
உள்ளுலகில் நிகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே களைப்பு
ஆசை, அச்சத்திலிருந்து தப்பிப்பதற்கு இன்று நிறைய இடங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய வகை வகையான ராட்டினங்களையும், வகை வகையான நீர்வழிப் பயணங்களையும் (Roller coaster rides & water rider)கொண்டுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்தான் (Theme Park), இன்று உலகத்திலேயே மிக மிக மகிழ்ச்சியான இடங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்றன.
மக்கள் என்னையும் இந்த இடங்களைக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். அந்த இடங்களைப் பார்த்த பிறகு என்னுள் நான் மிகவும் வருந்தினேன்.பொழுதுபோக்கு என்ற பெயரில் மக்கள் என்னை இங்கு அழைத்துச் சென்றார்கள்.
மக்கள் தங்களுக்குள் எவ்வளவு மன அழுத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த அளவுக்குப் பொழுதுபோக்கு இவர்களுக்குத் தேவை என்றால், அந்த அளவுக்கு அவர்கள் தங்களுக்குள் மன அழுத்தத்தைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள்.
மனிதருக்கு அவருடைய இயல்புப் படியேவ்வளவு பொழுதுபோக்கு என்பது தேவையே இல்லை.
நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு இத்தனை பொருட்கள் தேவை என்றால், நம்முடைய முழு கட்டமைப்பிலும் ஏதோ மிகப் பெரிய கோளாறு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் ஆழ்ந்து பார்த்து அதைச் சரி செய்ய வேண்டும்.

மீண்டும் மீண்டும் கிருஷ்ணர்
தீர்மானமாகச் சொல்கிறார்,
"ஆனந்தத்துடன் செயல்களில்
ஈடுபடுங்கள்."
நீங்கள் செயல்களில் ஆனந்தத்துடன் ஈடுபட்டீர்களென்றால், உங்களுக்கே நீங்களே ஆனந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறீர்கள்; களைப்பு என்றால் என்ன என்பதே உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால், 'களைப்பு' என்ற வார்த்தைகூட உங்களுக்குத் தெரியாது.
உண்மையாகவே உங்களிடம் நான் சொல்கிறேன், களைப்பு என்ற வார்த்தைக்கான அர்த்தமே இன்னும் எனக்குப் புரியவில்லை. எவ்வாறு நீங்கள் களைப்படைகிறீர்கள்? 'களைப்பு' என்றால் என்ன?
உங்களுடைய இச்சா சக்திக்கும் (ஆசையின் ஆற்றல்), க்ரியா சக்திக்கும் (செயலின் ஆற்றல்), இருப்புத் தன்மைக்கும் செயலுக்கும் இடையே இருக்கிற முரண்பாடே களைப்பு! உங்களுக்குள்ளேயே முரண்பாடு இருக்கிறது. உள்ளே ஒரு ஆழமான பிரச்சினை இருக்கிறது. உங்களுடைய ஆசையும் அச்சமும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன, அவ்வளவுதான்.
நாம் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால்,
நமக்குள்ளே ஒரு மிகப் பெரிய யுத்தம்
ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்றுதான்
அர்த்தம். ஆசைக்கும் அச்சத்துக்கும்
இடையேயான ஒரு மஹாபாரதப் போர்
நமக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எவரொருவருடைய உணர்வு நிலை
தெளிவாக இருக்கிறதோ, அவர் களைப்பு
என்பதை ஒருபோதும் அடைவதும் இல்லை,
உணர்வதும் இல்லை.
நாம் முழுமையாக
இல்லாதபோதும்,
நம்மை நாமே
ஒருங்கிணைத்துக்
கொள்ளாத போதும்தான்
நாம்
சோர்வடைகிறோம்.
பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திடுங்கள்
என்னுடைய இளமைக் காலங்களில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, நான் தியானம் செய்வது வழக்கம். காலையில் நான்கு மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம் என அமர்வது வழக்கம்.ாதாரணமாக, நான் எந்தவிதமான ஆயத்தமும் இல்லாமல் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.
என்னுடைய அறைத் தோழர்கள், "எப்படி உன்னால் இப்படிப் பல மணி நேரங்கள் அமர்ந்திருக்க முடிகிறது?" என்று கேட்பார்கள். நான் சொல்வேன், "இதிலே என்ன இருக்கிறது? நம்முடைய உடல், நம்முடைய மனம். நாம் விரும்பினால் உட்கார முடியாதா? அப்படி நம்முடைய உடல், மனம் இவற்றோடுகூட உட்கார முடியவில்லையென்றால், நாம் என்ன சாதித்துவிட முடியும்?" என்று சொல்வது வழக்கம்.
நாம் ஏன் சோர்வடைகிறோம்? நாம் முழுமையாக இல்லாதபோதும், நாம் நமக்குள்ளேயே நம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளாதபோதும்தான் நாம் சோர்வடைகிறோம்.
நமக்குள்ளேயே நாம் பிரிவினை ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது, ஒரு பாதியானது மற்றொரு பாதியுடன் சண்டையிட்டுக் கொள்கிறது. நம்முடைய இருப்புத் தன்மையின் ஒரு பகுதி, அதனைத் தன்னுடைய இயல்பான தன்மையிலேயே வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் பல்வேறு சமுதாயக் காரணங்களால் அதை நாம் அடக்கி வைக்கிறோம். அப்படி அடக்கி வைக்கப்பட்ட முறையிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பாதிப் பகுதி இருக்கிறது. இவ்வாறு இரு பகுதிகளாக இருப்புத் தன்மை இருக்கும்பொழுது என்ன நிகழ்கிறது? இயல்பாக நாம் எவ்வாறு இருக்கவில்லையோ அவ்வாறு இருப்பதற்காக நாம் இடையறாது முயற்சி செய்து, நம்முடைய சக்தி அனைத்தையும் அம்முயற்சியிலேயே செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஒருநிலையில் நாம் சோர்வடைந்துவிடுகிறோம்.
நாம் சோர்வாக இருக்கும்பொழுது, அடக்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வற்ற பாதிப் பகுதி, நம்முடைய விழிப்புணர்வு உள்ள பாதிப் பகுதியைவிட அதிக சக்தியுடையதாக மாறி, சண்டையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது. சற்றே உங்களை ஒன்றாகச் சேருங்கள். உங்களை நீங்களே அடக்கி வைப்பதைவிட முழுமையான விழிப்புணர்வுடன் இருங்கள். சண்டை போடுவதற்கு விழிப்புணர்வற்ற நிலை அங்கே இல்லாமல் போய்விடும். பிறகு சோர்வடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை.

நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடாமல் இருக்கும்போதும், நம்முடைய புத்திசாலித்தனம் நாம் செய்கிற செயல்களுக்குப் பின்னால் முழுமையாக இல்லாதபோதும்தான் நாம் சோர்வடைகிறோம்.
முழுமையாக மாறுங்கள், ஒன்றாகச் சேருங்கள், பூரணத் தன்மையுடன் இருங்கள். அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் சோர்வடைதல் என்பதே ஒருபோதும் இருக்காது.
இங்கே நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எவ்வளவு நேரம் உங்களால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்! எப்படி இப்படிச் சோர்வடையாமல் உங்களால் இத்தனை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடிகிறது என பாருங்கள்? அது எதனால் என்றால், நான் பேசும்பொழுது, என்னுடைய இருப்புத் தன்மையில் முழுமைத் தன்மையுடன் இருந்துகொண்டு பேசுகிறேன். நான் முழுமைத் தன்மையுடன் பேசும்பொழுது, நீங்கள் என்னையும் என்னுடைய சக்தியையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள்.
ஞானிகள் இருந்து இயங்கக்கூடிய நிலை இதுதான். அதனால்தான், ஒவ்வொரு கணமுமே அவர்கள் செய்கிற செயல்களில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு சோர்வு, களைப்பு என்ற உணர்வே இருப்பதில்லை.
நாம் செய்ய விரும்புவதற்கும், செய்து கொண்டிருப்பதற்கும் இடையே இடைவெளி ஏற்படும் பொழுதுதான் நாம் சோர்வடைகிறோம். எதற்கோ ஆசைப்பட்டு நாம் தூண்டிவிடப்படும்பொழுதுதான், நாம் 'இலக்கு' என்பதில் மாட்டிக் கொள்கிறோம்.
'இலக்கு' என்பது நாம் அடைய விரும்புகிற ஒன்று. ஆனால் வாழ்வு என்பது அடையப்படவேண்டிய இலக்கு அல்ல; அது அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணருங்கள். நாம் நிர்ணயித்த இலக்கை அடையாதபொழுது, நாம் இலக்கை நோக்கி ஓடுவதைப் போன்று உணர்கிறோம் அல்லது இதன் மீதோ நாம் கொண்டுள்ள அச்சத்தால் விரட்டப்படுகிறோம்;
வாழ்வு,
அது
அடையப்படவேண்டிய
இலக்கு அல்ல;
அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று
என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
அதனால் அச்சத்திற்கான அந்தப் பொருளிலிருந்து நாம் தப்பிக்க விரும்புகிறோம். அதனால் இங்கேயும் நாம், நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுவதில்லை.
உண்மையிலேயே இந்த ஒரு விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; ஒரு மனிதர் அவருக்குள்ளாகவே இருப்பதற்கு, அவருடனேயே அவர் அமர்வதற்கு ஏன் முடியாது. இது நம்முடைய உடல், நம்முடைய மனம் அவ்வளவுதான். அப்படியே உட்காருங்கள் முடிந்து விட்டது!
உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்!
உங்களால் உட்கார முடியவில்லை. ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து தவறான சக்தியை உங்கள் கட்டமைப்புக்குள் செலுத்தி வருகிறீர்கள்.
நாம் தொடர்ந்து அதிகாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அந்த அளவுக்கு அதிகாரத்திற்கு நாம் ஆசைப்படுகிறோம். அதிகாரப் பசி நமக்கு மிக அதிகம். அதனால் நாம் எதன் மீதாவது ஆதிக்கம் செலுத்துவதற்காக, அதன் பின்னால் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், முதலில் நம்முடைய உடல் மற்றும் மனத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வருவோம். இப்போதைக்கு, அது ஆசை மற்றும் அச்சத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது முதலில் நம்மால் கட்டுப்படுத்தப்படட்டும் அதன் பிறகு, தானாகவே எந்த விஷயமும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
நம்முடைய உடலும் மனமுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால், நாம் எதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர விரும்பினாலும் அவை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வராது.
ஆசையிலிருந்து ஒரு எண்ணமேபோதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது.
அச்சத்திலிருந்து ஒரு எண்ணம்போதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது. அவை இரண்டும் உங்களுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் வரட்டும்.
விழிப்புணர்வுக்குள் நுழையவைக்கும் அருமையான நுட்பம்
கிருஷ்ணரிடமிருந்து ஒரு அழகான சூத்திரம்; உன்னதமான விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவதற்கான நுட்பம்.
உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியாக இருங்கள். சமூக காரணங்களுக்காக மட்டுமே புன்னகைக்காதீர்கள்.
உங்களுடைய புன்னகையானது உங்களுடைய இருப்புத் தன்மையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.
நாம் எல்லோரும் ஒரு செயற்கையான வாழ்க்கையை, சமூக அழுத்தங்களால் உந்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இருப்புத்
> நாம் எப்போதும் நம்முடைய மகிழ்ச்சியை, நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றுடன் இணைத்தே வைத்திருக்கிறோம். தன்மையின் இயல்பை மறந்துவிட்டோம். இங்கே மகிழ்ச்சி என்பது எவ்வித வெளிக்காரணமும் இல்லாமல் நமக்குள் நிகழ்கிற, ஆனால் நம்முடைய இயல்பினை வெளிப்படுத்துவதற்காகவே நிகழ்கிற ஆனந்தத்தைக் குறிக்கும்.
நாம் நம்முடைய ஆசைகளின் பின்னால் ஓடும்போதும், நம்முடைய அச்சங்களிலிருந்து நம்மை நாமே விலக்கி வைத்துக்கொள்ளும்போதும் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறோம்.
அதனால் ஒவ்வொரு கணமும் நாம் நம் ஆசையின் காரணமாக, நம்முடைய விருப்பங்களின் பின்னால் ஓடிக்கொண்டோ அல்லது பயத்தின் காரணமாக ஏதாவது ஒன்றிலிருந்து விலகி ஓடிக்கொண்டோ இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் நம்முடைய மகிழ்ச்சி என்பது ஒன்று ஆசை அல்லது அச்சத்தால் மட்டுமே அளக்கப்படுகிறது.
நாம் அந்தக் கணத்தை உண்மையிலேயே அனுபவிக்கவில்லை என்பதுதான் இதன் பொருள். நாம் நிகழ்காலத்தில் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நாம் தொடர்ந்து ஆசை அல்லது அச்சத்தின் வலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதே இல்லை. நாம் எதனுள்ளும் பூரணத் தன்மையுடன் இருக்கும்பொழுது மட்டுமே, நாம் அதை முழுமையாக அனுபவிக்கவும் முடியும். முழுமையாக நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே நாம் பூரணத் தன்மை உடையராக முடியும்; அப்பொழுதுதான் நாம் இப்பொழுது, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை முழுமையாக அனுபவிக்க முடியும்.
நிகழ்கால ஆனந்தமயமான கணமானது, இயல்பாகவே எதிர்கால ஆனந்தமயமான கணத்தைத்தான் பிரசவிக்கும்.
நடந்து கொண்டிருக்கிற கணத்தில் இருக்கும்போதும், நிகழ்காலத்தில் முழுமையாகவும் முழு உற்சாகத்துடனும் நீங்கள் இருக்கும்போதும், நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனந்தம் என்பது எந்தவிதமான காரணமும் இல்லாமல், கடந்த மற்றும் நிகழ்காலங்களால் பாதிக்கப்படாமலும் இருக்கிற ஒரு சந்தோஷமான நிலை. அது நம்முடைய ஆசையினாலோ அல்லது நம்முடைய அச்சத்தாலோ பாதிக்கப்படுவதில்லை. அது எப்போதும் இருந்து கொண்டிருப்பது, அவ்வளவுதான்.
நிகழ்கால ஆனந்தமயமான கணமானது,
இயல்பாகவே எதிர்கால ஆனந்தமயமான
கணத்தைத்தான் பிரசவிக்கும். நாம்
இப்பொழுது அகப்பட்டுள்ள ஆசை
அச்சம் என்னும் விஷச் சூழலில் இருந்து
ஒரு ஒழுக்கமான மாசற்ற சூழலுக்குள்
நுழைந்துவிடுவோம்.