KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/அகஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாதுSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

அகஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அறிவின் ஒளியானது அறியாமையை விரட்டிவிடும்பொழுது, நாம் ஏற்கனவே இருந்த நிலையை உணர்கிறோம்.

இருளைப்போல அறியாமை என்பதும் எதிர்மறையான இருத்தலே என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள்,

முன்னால் இருக்கிற இந்த ஒலி വാങ്ങியை (Mike) இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல விரும்பினால், அதை எளிதாக அகற்றிவிட முடியும் அல்லவா? அதை அறையிலிருந்து அகற்ற வேண்டுமானால்

A small lighted clay oil lamp (diya)

அதை எடுத்துச் சென்று அறைக்கு வெளியே வைத்துவிட முடியும்.

ஆனால் இந்த அறைக்குள் இருள் இருக்குமானால், அதை அகற்ற முடியுமா?

ஸ்தூலமாக அந்த இருளை இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியுமா? இல்லை.

இந்த அறைக்குள் வெளிச்சத்தைக்கொண்டு வந்து இருளை மறையச் செய்யலாம். ஆனால் இருளை நேரடியாக எடுத்துச் சென்று அகற்றிவிட முடியாது. இதைத்தான் 'எதிர்மறை இருத்தல்' என்று குறிப்பிடுகிறோம்.

A page curl graphic with text inside

அறிவு என்ற ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதன் மூலம் அறியாமையைக்கூட அகற்றிவிடலாம்! உதிக்கிற கதிரவன் இரவென்னும் இருளை அகற்றுவதைப்போல, அறிவின் ஒளி அறியாமை என்ற இருளை விரட்டிவிடுகிறது.

அறிவு என்ற ஒளியைக்கொண்டு நாம் அகற்ற விரும்புகிற அறியாமை என்பது என்ன? சற்றே யோசியுங்கள்.

வாழ்க்கையில் நாம் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்? எதைச் செய்தாலும் அதன் மூலம் நாம் அடைவது என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்,
நாம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம்
சரியா?

நாம் எதைச் செய்தாலும் அதில்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோம். ஆனால் விசித்திரமான
உண்மையென்னவென்றால் நாம் ஏற்கனவே
பரிசுத்தமான ஆனந்தத்தில்தான் இருக்கிறோம்!

நம்மைக் துயரத்தில்
ஆழ்த்திக் கொள்வதை
நாமேதான்
தேர்ந்தெடுத்துக்
கொண்டிருக்கிறோம்

நான் சொல்வதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'நாம் ஆனந்தத்தை அடைகிறோம்' என்று நான் சொல்லவில்லை. 'நம்மில் ஒவ்வொருவரும் ஆனந்தமாகத்தான் இருக்கிறோம்' என்று சொல்கிறேன். பிரச்சினை என்னவென்றால் இந்த இறுதி உண்மையை நாம் ஒப்புக்கொண்டு, தளர்வாக இருக்கத் தயாராக இல்லை.

ஏனென்றால் இதை ஏற்றுக் கொண்ட அந்தக் கணமே, நமக்குத் தனியான ஆளுமை இருப்பதில்லை; அஹங்காரம் இருப்பதற்கான அடிப்படை இல்லாமல் போய்விடும்; நீங்கள் இறுதியாக என்னவாக ஆக விரும்புகிறீர்களோ, ஏற்கனவே அதுவாகத்தான் நீங்கள் இருக்கி றீர்களென்றால் அதற்கு என்ன அடையாளம்? அங்கே எந்த ஆசையும் இருப்பதில்லை; எந்தப் பயமும் இருப்பதில்லை.

ஆசையும் பயமும் இல்லையென்றால், அஹங்காரம் எங்கே இருந்துகொண்டு உங்களைத் தூண்டிவிட முடியும்?

நாம் முழுமை பெறவில்லை என்பதை உணரச் செய்வதே நம்முடைய அஹங்காரம்தான்! நம்முடைய அஹங்காரம் அது இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் திடமான ஸ்தூலமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

மனமானது எப்போதும் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் எதன் பின்னாலாவது ஓடிக் கொண்டிருப்பதற்குமே ஏங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொழுதுதான் அது தொடர்ந்து இருக்க முடியும்; வாழ முடியும்.

நாம் பரிசுத்தமான ஆனந்தத்தில் இருக்கும்பொழுது, நாம் எதன்

பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கவேண்டிய
அவசியமில்லை. ஏனென்றால் நாமே
நமக்குள் முழுமையாக இருக்கிறோம்.
ஆனால் இந்தப் பகுதியில் ‘நாம்’ என்பது
ஒன்றுமே இல்லை. நமக்கென்று எந்த
அடையாளமும் இல்லை.

ஏனென்றால் நாம் இறுதியும் ஒரே
ஸத்யமுமான அந்தப் பிரபஞ்ச இருப்புத்
தன்மைக்குள் ஒன்றாகக் கலந்துவிடுகிறோம்.
அஹங்காரத்தைப் பொறுத்தமட்டிலும் இது
கடினமான நிலைதான்.

> சரண்ாகதி
> விடுதலைக்கு
> வழிவகுக்கும்.

அதனால்தான் மனமானது, பொருள் சார்ந்த உலகம் அல்லது ஆன்மீகம் என்று எதிலாவது நம்மை ஈடுபடுத்தி, அதன் பின்னால் நம்மை ஓடச்செய்யும் மிகவும் தந்திரமானதும் நுட்பமானதுமான ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமென்றால், நம்மைத் துயரத்தில் ஆழ்த்திக் கொள்வதை நாமேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

நாம், ஆனந்தம் வேண்டும் என்று நினைத்து, அஹங்காரத்தை விட்டுவிட விரும்புகிறோம். ஆனால் நேர்மாறாக நாம் அஹங்காரத்தைத் தக்கவைத்துக் கொள்வதையே தேர்ந்தெடுக்கிறோம்.

அனுமதியுங்கள், உங்களைவிடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும்

கிருஷ்ணர் நம்மைவிடுவிப்பதற்காக இன்னொரு நுட்பத்தையும் வழங்கி இருக்கிறார்.

சரணாகதி விடுதலைக்கு வழி வகுக்கும். ஒருவருடைய புத்திசாலித்தனம் ‘கிருஷ்ணரை’ நோக்கி ஒருமுகப்படுத்தப்படும்பொழுது சரணாகதி நிகழும் என்று சொல்கிறார். இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டும் நம்மையெல்லாம் காத்துக்கொண்டும் இருப்பது ஒரு உயிர் சக்தி என்பதை நாம் நம்பும்பொழுது, நாம் தளர்வாக இருக்கிறோம்.

நம்மை நாம் தளர்த்திக்கொண்டு, மன அழுத்தமில்லாமல் அல்லது கவலையில்லாமல் இருக்கும்பொழுது, நம்மால் அனுகூலமான ஆற்றலுடன் வாழவும் செயல்படவும் முடியும்.

நம்முடைய படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோம். நாம் மிகப் பெரிய அளவிலான விடுதலையையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறோம். இதுதான் சரணாகதி. இதுதான் உண்மையான அறிவும்கூட.

கற்றுக் கொடுக்க முடியாத அல்லது எடுத்துக்கொள்ள முடியாத அறிவுதான் சரணாகதி.

நம்முடைய இருப்பு நிலை இதைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்கும்பொழுது, குருவானவர் நமக்குள் மிகச் சுலபமாக இதைச் செலுத்திவிடுகிறார்.

நமக்குத் தேவையானவை எல்லாம் இரண்டே இரண்டுதான், ஒன்று, அந்த மேலான ஞானசக்தி நம்மை வழி நடத்திச் செல்ல அனுமதிப்பதற்கான ஆழமான நம்பிக்கை; இரண்டு, மாறுபட்ட இரு எல்லைகளுக்குளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் நம்முடைய மனத்தை அந்த ஞான சக்தியிடம் ஒப்படைக்கும் சரணாகதி உணர்வு.

ஆழமான நம்பிக்கை, சரணாகதி உணர்வு இவை இரண்டு மட்டுமே நம்முடைய தேவைகளாக இருக்கின்றன. அறிவு மட்டுமே, நம்முடைய அறியாமையையும் தவறாகப் புரிந்துகொள்ளுதலையும் நீக்குகிறது.

நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும்
காரணம் அறிவுக் குறைபாடும்
அறியாமையும்தான். அது பயமாக
இருந்தாலும் சரி அல்லது ஆசையாக
இருந்தாலும் சரி, எல்லா உணர்ச்சிகளுமே,
நாம் விழிப்புணர்வுடன் இல்லாததால்தான்
நம்மையே அடக்கி ஆள்கின்றன. நாம்
விழிப்புணர்வற் ற நிலையில் இருப்பதால்,
அவை நம்மைக் கட்டுப்படுத்த
அனுமதித்துவிடுகிறோம்.

நாம்
ஆழமான விழிப்புணர்வை
எதன் மீதாவது
செலுத்தும்பொழுது,
தீர்வு
அதுவாகவே
வெளிப்படுகிறது.

நாம் ஆழமான விழிப்புணர்வை இதன் மீதாவது செலுத்தும்பொழுது, தீர்வு அதுவாகவே வெளிப்படுகிறது. ஆழமான விழிப்புணர்வுடன், ஒரு உணர்ச்சிக்குள் ஆழமாக நாம் செல்லும்பொழுது, நாம் அதிலிருந்து மலர்ந்து வெளிவர முடிகிறது. இதுதான் உண்மையான அறிவு.

Peather illustration

ஆனந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள்

உண்மையான சோதனைக் காலங்களில், சந்தேகத்தின் உச்சத்தில், உங்களுடைய அஹங்காரத்தை சந்தேகப்படுங்கள். குருவை ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள். எல்லாமே உங்களை விட்டு விலகிச் செல்லும்பொழுதுகூட, நீங்கள் பிடித்துக்கொள்ளவேண்டிய ஒரே ஸத்யம் குருதான்.

எல்லாமே குழப்பமாயிருக்கும்பொழுது உங்களை வழி நடத்தும் ஒரே ஒருவர் குருதான். போர் ஆரம்பிக்கிற நேரத்தில் அர்ஜுனன் மொத்தமாகக் குழம்பிப் போனார். ஆனாலும்கூட அப்படி அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந்த நேரத்திலும்கூட, கிருஷ்ணரின் உபதேசத்தைக் கவனிக்கிற புத்திசாலித்தனத்தைப் பெற்றவராக இருந்தார்.

சரணாகதி என்பது பல நிலைகளில் நிகழக்கூடும். போதி தர்மர் சொல்கிறார்.

புத்தம் ச்ரணம் கச்சாமி
தம்மம் ச்ரணம் கச்சாமி
ஸங்கம் ச்ரணம் கச்சாமி

இன் பொருள்,
நான் புத்தரின் திரு உருவைச் சரணடைகிறேன்.
நான் புத்தரின் போதனைகளைச்
சரணடைகிறேன்

எல்லாமே
குழப்பமாயிருக்கும்போதும்,
உங்களை வழி நடத்தும்
ஒரே ஒருவர்
குருதான்.

நான் புத்தரின் சங்கத்தைச் சரணடைகிறேன். குரு, அவரது போதனைகள் மற்றும் சங்கம் இவை மூன்றும் வெவ்வேறு ஸ்தூலிருப்புகள் என்று இதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை! குருவானவர், அவருடைய உடல், போதனை மற்றும் சங்கம் என்ற இந்த மூன்றிலுமே வாழ்கிறார். குருவுக்கு எந்தவிதமான சுயநலமும் இல்லை. அவர், தம் வாழ்க்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய ஆசைகளும் இல்லை.

குரு என்பவர் தூய்மையான கருணையின்
வடிவாக மொத்த மனித குலத்திற்காகவும்,
ஆன்மீக சாதகர்களின் அறியாமையை
நீக்கவும், அவர்களுக்கு ஒளி காட்டவும்
அவதரிக்கிறார்.

குருவின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு
மட்டுமே இந்த ஸ்தூல சரீரம்; மற்றொரு பகுதி
அவருடைய போதனைகள்; இன்னுமொரு
பகுதி சங்கம்.

நித்யானந்தம் என்பது நித்ய - த்யான - ஆனந்தம் - எல்லாம் ஒன்றிலேயே! நித்ய - நித்யானந்தராக உடல்தாங்கி இருக்கும் குரு; த்யான - என்னுடைய போதனைகள், தியான ஆசீர்வாதங்கள்; ஆனந்தம் - உங்களுக்குள் உறைந்து மறைந்து கிடக்கிற ஆனந்த ஊற்றை வெளிக்கொண்டு வரும் என்னுடைய சங்கம். இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த சக்திதான் நித்யானந்தம்.

நீங்கள் குருவிடம் சரணாகதி அடைகிறபொழுது, அவருடைய ஸங்கத்தையும் அவருடைய போதனைகளையும் சேர்த்தே சரணடைகிறீர்கள்.

அவருடைய ஸ்தூலமான நிலையைச் சரணடையும்பொழுது, அவருடைய போதனைகளையும் ஸங்கத்தையும் உட்கிரகித்து, அதைப் பரப்புவதற்காக அவரிடம் நீங்கள் உங்களின் ஸ்தூல சரீரத்தையும், உங்கள் வசதிகளையும் சரணாகதி செய்கிறீர்கள்.

உதாரணமாக, சங்கத்தின் வேலைகளில் நீங்கள் உங்களை முழுமையாக

Figure 1

ஈடுபடுத்திக்கொள்ளும்பொழுது, அந்த வேலையைச் செய்வதற்காக நீங்கள் உங்கள் சுகங்களை, உங்கள் தூக்கத்தை, உங்கள் ஆசைகளைத் தியாகம் செய்கிறீர்கள். உண்மையில், இதைத் தியாகம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், உங்கள் இருப்புத் தன்மையிலேயேகூட இதைத்தான் நீங்கள் செய்யும் மிகமிக நல்ல விஷயமாக உணர்கிறீர்கள். வேறு எதையும் செய்வதைவிட, இதைச் செய்வதில்தான் உங்கள் நேரமும் சக்தியும் மிக மிக நல்ல முறையில் பயன்படும் என்று நீங்கள் உணர்கிறீர்கள்.

தானாகவே, உங்களுடைய சுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து, உங்களுடைய மந்தத் தன்மை அழிந்தே போய்விடும். மற்ற எல்லாவற்றுக் குமே முன்னுரிமை அளிப்பதைக் குறைத்துவிடுவீர்கள். சங்கத்தின் வேலைக்குத்தான் உச்ச முன்னுரிமை வழங்குவீர்கள்.

இதற்குமுன் எது உங்களுக்குச் சுமையாகத் தோன்றியதோ, மிகுந்த பொறுப்புணர்வாகத் தோன்றியதோ, அதுவே சங்கத்திற்காகச் செய்யப்படும்பொழுது ஒரு ஆனந்த அனுபவமாக மலர்வதை உணர்வீர்கள்.

> இதற்குமுன் எது உங்களுக்குச் சுமையாகத் தோன்றியதோ, அதுவே சங்கத்திற்காகச் செய்யப்படும்பொழுது ஒரு ஆனந்த அனுபவமாக மலர்வதை உணர்வீர்கள்.

சங்கத்தின் குருவானவர், தூய்மையான ஆனந்தத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும்? நீங்கள் குருவையும் சங்கத்தையும் சரணடைந்து, பொறுப்பெடுக்கத் துணிந்து விட்ட கணத்திலேயே, அந்தத் தெய்வீக உணர்வு உங்களுக்குள் எளிதாகவும் இனிமையாகவும் பாய்வதை உணர்வீர்கள். எந்தவிதமான சிரமமும் இல்லாமலேயே செயல்படுவீர்கள். உங்களை நீங்கள் மிக அழகாக வெளிப்படுத்துவீர்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான், ஸ்திர தன்மையுடனும் எளிதில் அணுகக்கூடியவராகவும் இருப்பது மட்டும்தான் தெய்விக ஆற்றல் உங்களை ஆற்றல் மிக்கவராகவும் திறமைசாலியாகவும் ஆக்கிவிடும்!

மனத்தளவில், சரணாகதி என்பது குருவுக்கும் சங்கத்திற்கும் சேவை செய்யும் படியாக உங்கள் புத்தியைச் சரணடையச் செய்வது. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுநராகவும் ஆர்வம் மிக்கவராகவும் இருக்கலாம். ஆனால் சங்கத்தின் முக்கியத்துவத்துக்காகவும் தேவைகளுக்காகவும் நீங்கள் உங்கள் ஆர்வத்தைத் தியாகம் செய்கிறீர்கள்.

நீங்கள் உங்களுடைய மனத்தின் செயல்திறன்களை எல்லாம் உங்களின் எண்ண ஓட்டங்களை எல்லாம் சங்கத்தின் தேவைகளுக்கு ஏற்றாற்போல், சங்கத்திற்குச் சேவை செய்வதற்காக, சரணாகதி செய்கிறீர்கள். குருவினால் உண்டாக்கப்படும் வடிவங்களுக்குள்ளும் வார்ப்புகளுக்குள்ளும் செல்லக்கூடிய ஒரு திரவமாக உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள்.

Peacock feather icon