அவர் இருக்கும் பேரானந்த நிலையை நாம் அடைவதற்கு உதவுகிறார்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற உயர்ந்த குறிக்கோளை உடைய மார்க்கம் எது என்று குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். நம்முடைய தேவைகளுக்கும் திறமைகளுக்கும் ஏற்றாற்போல் நம் ஒவ்வொருவருக்குமான வார்ப்புகளையும் அவர் உருவாக்குகிறார்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர் மேல் நம்பிக்கை வைத்து, திடமாக இருக்கிற அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும். அப்பொழுது மட்டுமே நமக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் இடத்தை நிரப்புகிற ஒரு திரவமாக நம்மால் மாற முடியும்.
பிறகு, நாம் இந்த அற்புதமான பிரபஞ்ச இருப்புத் தன்மையில் தன்னிகரில்லாத தனித் தன்மை வாய்ந்த ஒரு பகுதியாகவே இருப்பதைப் பார்ப்போம்.
மூன்றாவது நிலை, இருப்பு நிலை சரணாகதி. நம்முடைய இருப்புத் தன்மையை குருவிடம் சரணடையச் செய்வது. இந்த நிலையில், குருவின் அழைப்பை நம்முடைய இருப்புத் தன்மை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டுவிடும். நாம் குருவுடைய பகுதியாக மாறிவிடுகிறோம்.
குருவானவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் உருவாக அவதரித்திருக்கிற ஒருவரானதால், அவரின் பகுதியாக மாறுவதன் மூலம் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இணைந்துவிடுகிறோம். அதன் பிறகு நமக்கென்று தனித்த அடையாளம் எதுவும் இருப்பதில்லை. திரவ வடிவில் இருக்கும் தண்ணீரை உருவம் இல்லாத நீராவியாக உணர்வுமாற்றம் செய்கிற செயல்முறை இங்கேயும் நடைபெறுகிறது.

குரு ஏற்படுத்தியிருக்கிற இடத்தை நிரம்பக்கூடிய திரவமாக நாம் மாற வேண்டுமானால் நம் திடமான அஹங்காரம் கரையவேண்டியது அவசியம்.
நீராவியைப்போல் நாமும் எல்லாத் திசைகளிலும் பொங்கிப் பரவுகிறோம். நமக்கு எல்லை என்பதே இல்லை, ஏனென்றால் எல்லா எல்லைகளும் வரையறைகளும் மனத்திற்கு மட்டுமே இருக்கிறது
நாம் இப்பொழுது மனத்தைக் கடந்து உண்மையில் எல்லை இல்லாததாக இருக்கிற நம்முடைய உள்ளாற்றலை வெளிப்படுத்துகிறோம்.
இந்த உச்ச நிலையிலேயே குருவானவர் ஒவ்வொரு கணமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாமும் அந்த அழிவில்லாத ஆனந்த அனுபவத்தை பெறவும், அதே நிலையில் இருக்கவும் குரு எவ்வித களைப்புமில்லாமல் கருணையோடு நம்மைப் பல வழிகளில் ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நாமும் அதே ஆனந்த நிலையை அனுபவிக்கவும், அதில் தொடர்ந்து நீடித்து இருக்கவும் முடிகிறது.
கேள்வி: ஸ்வாமிஜி! மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் பண்புகளுள், தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது?
அழகான கேள்வி.
கருணை! கருணைதான் தெய்வீகத்தைக் குறிக்கிற ஒரே குணாதிசயம். உங்களுடைய அகராதியில் ‘கருணை’ என்பதற்குப் காணப்படுகிற அர்த்தம் போன்றது அல்ல அது.
ஒரு ஞானியின் கருணை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சென்றடைகிறது. அது யாரையும் குறி வைத்துச் செல்லாதது. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தாலும் ஏற்படுத்த முடியாதது. அது, நான் முன்பே குறிப்பிட்ட அந்த சிவனின் காரணமில்லாத மங்கலத்துவத்தைப் போன்றது.
மனிதனின் உணர்ச்சிகளில் அன்பு மட்டுமே ஒரே நற்பண்பு, ஒரே ஆன்மீகம் ஒரே நன்னெறி. அன்பு என்ற ஒன்றைத் தவிர, மற்ற எல்லா நற்பண்புகளும் ஒருவரிடம் இருப்பினும் அவர் இறந்தவராகவேதான் கருதப்படுவார். இன்னும் ஆழமாகச் சொன்னால் அவர் ஒழுக்கமற்றவராகவே இருப்பார்.
அன்பு இல்லாமல், ஒருவர் மற்ற எல்லா நற்பண்புகளையும் பெற்றிருந்தாலும் அவை ஆழமற்றவையாக இருக்கும். அவை வரையப்பட்ட புன்சிரிப்பைப்போல இருக்கும்; ஒரு முகமூடிபோல, மதிப்புக்குரியவராக மாறுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மேலோட்டமான வழிகளில் கடவுளை ஏமாற்ற முடியாது.
ஒரு அன்பான மனிதர்
ஒருபோதும்
ஒழுக்கமற்றவராக
இருப்பதில்லை.
உண்மையிலேயே, அவரை எந்த வழியிலும் ஒருவர் ஏமாற்ற முடியாது.

அவர் உங்கள் இருப்பின் மையத்தை உற்று நோக்குகிறார். உங்கள் வெளித் தோற்றத்தை அல்ல. அவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பதில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றுதான் பார்க்கிறார்.
அன்பு உங்கள் இருப்புத் தன்மையை உணர்வுரூமாற்றம் செய்கிறது. அதன் பிறகு உங்களுடைய செயல்பாடுகள் தானாகவே உணர்வுரூமாற்றம் பெறுகின்றன. ஒரு அன்பான மனிதர் எப்போதும் ஒழுக்கமற்றவராக இருப்பதில்லை.
அன்புள்ள ஒருவரால் யாரையும் காயப்படுத்த முடியாது; யாரையும் ஏமாற்றவும் முடியாது; பொய் சொல்லவும் முடியாது; கடுமையாக நடந்து கொள்வது என்பது அவரால் முடியாத ஒன்று. கருணை ஒன்றே அவருடைய வாழ்வின் வழி.
சமய குருமார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அன்பு என்பதில் ஆர்வமில்லை. நம்மீது விதிமுறைகளையும் வரையறைகளையும் சுமத்துவதிலேயே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான மனித இனங்களே தேவை இல்லை. போலியான, அடக்கப்பட்ட மக்களே அவர்களுக்குத் தேவை. உண்மையான மக்கள் நிர்வாகத்திற்கு ஆபத்தானவர்கள்.
எதையும் அறிந்து கொள்வதற்கு இரண்டு உபாயங்கள் உள்ளன. ஒன்று, தர்க்கம் மற்றொன்று, அன்பு.
தர்க்கம் மூலமாக நாம் அறிவைப் பெறுகிறோம். அன்பின் மூலமாக நாம் ஞானத்தை அடைகிறோம்.
அறிவு நமக்கு மேம்போக்கான செய்திகளை மட்டுமே தருகிறது.ஞானம் நமக்கு விஷயங்களுக்குள் மிக ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் உள்முகப்பார்வையைத் தருகிறது. அறிவு என்பது சேகரித்து வைக்கப்பட்ட

அன்பின் மூலமாக நாம் ஞானத்தை அடைகிறோம்.
ஒன்று. ஒருவர் அவர் விரும்பிய அளவுக்கு அதைச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
அன்பை மட்டுமே சார்ந்திருங்கள்
மனித மூளை ஒரு கணினியைப் போன்றது. அதற்குள் இந்த உலகத்திலுள்ள எல்லா நூலகங்களையும் அடைத்து, சேர்த்து வைக்க முடியும். ஆனால் இன்னும் நாம் நமக்குள்ளே அப்படியேதான் இருக்கிறோம். இது ஒரு கழுதை, நிறைய வேத புத்தகங்களைச் சுமந்து செல்வதற்குச் சமம். நமக்கு நிறைய தெரிந்திருக்கலாம். ஆனால் நமக்கு நம்மைப் பற்றிய அறிவு இல்லை. நம்முடைய அறிவெல்லாம் கடன் வாங்கப்பட்டவைதான். அவை நம்முடைய அனுபவங்கள் அல்ல.
அன்பு, அது நமக்கு உண்மையான அறிவைத் தருகிறது. அது நம்முடைய வாழ்க்கையையே ஒரு வேதமாக ஆக்கிவிடுகிறது. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகையும், பேராற்றல் வாய்ந்த வாழ்க்கையின் ஞானத்தையும், அதனுள் இருக்கும் எல்லாவற்றையும் நம்மைக் காண வைக்கிறது. தர்க்கத்தால் இதைச் செய்ய முடியாது, அறிவைச் சார்ந்து இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள்.
அன்பைச் சார்ந்திருங்கள், இந்த உலகத்தின் வளங்கள் எல்லாம் உங்களுடையதே. அன்பைச் சார்ந்திருக்கும்பொழுது. கடவுளின் சாம்ராஜ்ஜியமே உங்களுடையது. அன்பு என்ற சொல்லுக்கு மிகச் சரியான பொருள்: அஹங்காரத்தைச் சரணாகதி அடையச் செய்தல்; அதை விட்டுவிடுதல்; அஹங்காரமற்றவர்களாக மாறுதல்.
நாம் அஹங்காரமற்றவர்களாக
இருக்கும்பொழுது, அன்பு நம் மூலமாகப்
பாயத் தொடங்குகிறது. நாம் அந்த அன்பைக்
கடவுள் அல்லது ஒளி அல்லது ஆனந்தம்
அல்லது ஞானம் என்று அழைக்கிறோம்.
வாழ்க்கை என்பது உரைநடையாகவும் இருக்க
முடியும். கவிதையாகவும் இருக்க முடியும்.
விஞ்ஞானம் அதை உரைநடையாக்குகிறது.
ஆன்மீகம் அதைக் கவிதையாக
உணர்வுமாற்றம் செய்கிறது. அன்பைக்
கவிதை மூலமாகத்தான் வெளிப்படுத்த
முடியும்; ஒருபோதும் உரைநடையின்
மூலமாக வெளிப்படுத்த முடியாது!
கருணைதான்
தெய்வீகத்தைக்
குறிக்கிற
ஒரே குணாதிசயம்.
வாழ்க்கையை உரைநடையாக வாழ்வது என்றால், அது பொருள் சார்ந்த உலக வாழ்க்கையைக் குறிக்கிறது. வாழ்க்கையைக் கவிதையாக வாழ்வது என்றால், அது ஒரு புனிதமான வாழ்க்கையைக் குறிக்கிறது.
பொருள் சார்ந்த உலக வாழ்க்கையை வாழும்பொழுது, வாழ்க்கை உரைநடை ஆகிவிடுகிறது. புனிதமான வாழ்க்கையை வாழும்பொழுது, வாழ்க்கை கவிதை ஆக மலர்கிறது.
> உங்களுடைய
> அன்பிற்கு
> ஒருபோதும்
> ஒரு வடிவமும்
> உருவமும்
> கொடுக்காதீர்கள்.
எல்லா மதங்களும் பல்வேறு வழிகளில் வாழ்க்கையை அணுகுகிறார்கள்; தர்க்கத்தின் மூலமாக அல்ல; ஆனால் அன்பின் மூலமாக! பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பயத்துடன் பார்க்காமல், ஆச்சரியத்தால் நிரம்பி இருக்கிற கண்களால் பார்க்கிறார்கள். பயபக்தியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிற கண்களால் மட்டுமே உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும். அது மட்டுமே உண்மையை அறிந்துகொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது.
ஒரு மகா சமுத்திரத்தில் விழுந்து கொண்டிருக்கும் பனித் துளிகள் நாம். இப்பொழுது நம்முள் ஒரு வித பயம் எழும்; தயக்கம் எழும்; ஏனென்றால் நாம் மறைந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால் உண்மையில் மரணம் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மரணத்தின் ஒருபக்கம்தான் வாழ்வு; மறுபக்கம்தான் மரணமில்லாப் பெருவாழ்வு என்கிற ஸத்யம் புரியும்!
மரணத்தின் மூலமாக வாழ்வு மறைகிறது. ஆனால் அது நிலையான, அழிவற்ற, மரணமில்லாப் பெருவாழ்வாக மலர்கிறது. ஒரு பனித்துளி, பனித்துளியாகவே மறைகிறது. ஆனால் அது மீண்டும் தோன்றும்பொழுது மகா சமுத்திரமாகத் தோன்றுகிறது. அதுதான் அதன் மதிப்பு.
ஒருவர் அன்பிலும் ஆனந்தத்திலும் மட்டுமே இருந்தால், அதாவது அன்பையும் ஆனந்தத்தையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் அவர் கடவுளைப் பற்றியே மறந்துவிடலாம். பிறகு கடவுள் தோன்றியே ஆக வேண்டும். அதை அவரால் தவிர்க்க முடியாது. 'போய்ச் சேருமிடம்' என்பது அடிமைத்தனம். போய்ச் சேருமிடம் என்றாலே நாம் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட ஒன்றாகிவிடுகிறது.
ஆனால் அன்புக்குப் போய்ச் சேருமிடம் என்பது கிடையாது. அன்பு, அது ஒரு பயணம், அவ்வளவுதான்; அது ஒரு வேலை அல்ல; அது கடமையும் அல்ல; அது ஒருபோதும் எதையோ அடைவதற்கு ஒரு வழிவகையாக இருப்பதும் இல்லை. அதற்கு அதுவேதான் பலன்.
காற்றுக்கென்று ஒருநிலையான குறிப்பிட்ட வடிவம் கிடையாது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சேர்ந்தாற்போன்ற இரண்டு அடுத்தடுத்த மணித்துளிகள், அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
அன்பும் அதேபோலத்தான். நாம் அதற்குப் குறிப்பிட்ட வடிவங்களையும் உருவங்களையும் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். நாம் முடியாததைச் செய்ய முயற்சி செய்கிறோம். நாம் தோல்வி அடையும்பொழுது முடிவு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.
அன்பு ஒருபோதும் யாரையும் ஏமாற்றுவதில்லை. நம்முடைய எதிர்பார்ப்புகள்தான் அதாவது அன்பைப்பற்றிய நடைமுறைக்குச் சாத்தியப்படாத எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
உங்களுடைய அன்பிற்கு ஒருபோதும் ஒரு வடிவமும் உருவமும் கொடுக்காதீர்கள். அதை வடிவமில்லாததாகவும் உருவமில்லாததாகவும் இருக்கவிடுங்கள். ஏனென்றால் அது ஒரு பொருளல்ல. அது ஒரு அனுபவம். அது விவரிக்க முடியாதது. அது கீழ்த்தரமானது அல்ல. அது மிகவும் நுட்பமானது, வாழ்க்கையின் மிக நுட்பமான அனுபவம் அது.
அன்பு
அது ஒரு
சரணாகதி நிலை!
அது ஒரு
விடுதலை நிலை!
காற்று எப்பொழுதுமே இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் நிலையில் உள்ளது. பிரபஞ்ச இருப்புத் தன்மை, "என்னுடன் வா, நான் வடக்கே போய்க் கொண்டிருக்கிறேன்," என்று சொன்னால், உடனே அதுவும் அதனுடன் கிளம்பிச் சென்றுவிடும். அதனிடம் எதிர்ப்புத் தன்மை இல்லை; தடை சொல்லும் தன்மை இல்லை. அதற்கு, 'மாட்டேன், முடியாது, இல்லை', என்ற வார்த்தைகளைப் பற்றியும் தெரியாது.அது எப்பொழுதுமே "ஆமாம், சரி" என்றுதான் சொல்லும். அது, "ஏன்," என்று கேட்காது. காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதும் இல்லை. "நான் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறேன். நான் தெற்கே செல்ல விரும்புகிறேன் வடக்கே செல்ல விரும்பவில்லை," என்று அது சொல்வதில்லை.
காற்றுக்கென்று எதிர்காலத் திட்டங்களோ, குறிக்கோளோ எதுவும் இல்லை. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்காகவே இருக்கிறது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு முழுமையாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய தன்மையுடன் இருக்கிறது. அப்படி முழுமைத் தன்மையுடன் இருப்பதாலேயே அது உச்ச நிலையான விடுதலைச் சுவையைத் தெரிந்து வைத்திருக்கிறது.
அதே போன்றுதான் அன்பும்.
அன்பு, அது ஒரு விடுதலை நிலை; அது ஒரு சரணாகதி நிலை; அது முழுமையான பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ அதையெல்லாம் செய்யவும் உங்களை எங்கெல்லாம் அழைத்துச் செல்ல விரும்புகிறதோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லவும் அனுமதிக்கிறது.
'விஷயங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற கருத்து எதுவும் அதற்குக் கிடையாது. கணத்திற்குக் கணம் அது ஒரு கருத்துமில்லாமல், பாரபட்சமில்லாமல், அதற்கென்று கோட்பாடுகள் எதுவுமில்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது.

