KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு அழகான கதை:

நரோபா என்ற ஒரு ஞானியிடம் அவர் ஞானமடைந்த கால கட்டத்தில், ஒரு நபர், "தாங்கள் இப்பொழுது விடுதலை அடைந்துவிட்டீர்களா?" என்று கேட்டார்.

"ஆமாம், இல்லை; இரண்டுமேதான்! நான் பந்தங்களில் இல்லை என்பதால் 'ஆமாம்' என்ற பதில் பொருந்தும். ஆனால் விடுதலையும் பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்ற பதிலும் பொருந்தும்."

> மனம் என்பது இயங்கத் தொடங்கிய உடன் விடுதலையும் பந்தமும் தனித்தனியாக இருக்க முடிவதில்லை.

பந்தம் என்றொரு கோட்பாடு இருக்கும்வரை
விடுதலையும் இருக்கும். இரண்டும்
தனித்தனிக் கோட்பாடுகளாக இருந்தாலும்
ஒன்று இருக்கும்வரை மற்றொன்றும்
இருக்கும்.

பந்தத்தின் பிடியிலிருக்கும்பொழுதுதான் நாம் 'விடுதலை' என்பதையே உணர்கிறோம்.

அவை எதிரெதிரானவைகளே! ஆனால் மனம் உள்ளவரையில், அது எதிரெதிரானவற்றில் வாழ்கிறவரையில், பந்தமும் விடுதலையும் இருந்தே தீரும்.

மனம் என்பது இயங்கத் தொடங்கிய உடன் விடுதலையும் பந்தமும் தனித்தனியாக இருக்க முடிவதில்லை. அவை ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன.

உதாரணமாக, உங்களுக்குத் தலைவலியாக இருக்கும்பொழுது, ஏன் அதிலிருந்து நிவாரணம் பெற நினைக்கிறீர்கள்? கொஞ்சம் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். தலைவலி இல்லாமல் இருந்த நிலையை அடைய வேண்டும் என்று மிகுந்த வேட்கை, ஆசை கொள்கிறீர்கள். இது ஏனென்றால் தலைவலி இல்லாத ஒருநிலையை இதற்கு முன் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

தலைவலி என்ற ஒன்று உங்களுக்கு வராமலேயே இருந்திருந்தால், தலைவலி இல்லாத ஒருநிலைக்குச் செல்ல வேண்டும் என்று எப்பொழுதாவது ஏக்கம்கொள்வீர்களா? எப்படி உங்களால் முடியும்? உங்களுக்குத் 'தலைவலி' என்றால் என்னவென்றே தெரியாதே. தலைவலி இருக்கிறதா, இல்லையா என்று உணர்ந்துகொள்ளவோ அறிந்துகொள்ளவோகூட மாட்டீர்கள். ஏனென்றால் தலைவலி என்று ஒரு விஷயம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. மனத்தால் எதையுமே வித்தியாசமாகவும் எதிரெதிராகவும்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

அதனால் தான் நரோபா, "ஆமாம், இல்லை; இரண்டுமேதான்! பந்தங்கள் இல்லாமல் இருப்பதால் 'ஆமாம்' என்றும் விடுதலை என்பதே பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்றும் சொல்கிறேன்," என்று பதில் சொன்னார்.

அறிவின் ஒளியானது அறியாமையை விரட்டிவிடும்.

"பந்தம் விடுதலை இரண்டிற்குமே நான் அப்பாற்பட்டவன். ஏனென்றால் இவற்றை உணர்கிற மனம் அங்கு இல்லை. எதிரிடையான இவற்றைத் தீர்மானிப்பதற்கும் பிரிவினை செய்வதற்கும் மனம் அங்கு இருப்பதில்லை," என்று சொன்னார்.

விடுதலை என்பது ஏதோ நாம் அடையவேண்டிய ஒருநிலை என்று நினைக்கும்பொழுது நாம் அறியாமையில் இருக்கிறோம். நாம் அடையவேண்டிய ஒருநிலை என்று நினைத்த கணத்தில் நாம் அதை நழுவ விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு மணல் அல்லது தண்ணீரை நம்முடைய கைகளில் வைத்துக்கொண்டு, அதைப்பற்றிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து முட்டியை இறுக்கி மூடினால் கையிலுள்ள மணல் அல்லது நீரானது எப்படிக்குகளிலிருந்து நழுவிவிடுமோ, அதேபோல விடுதலை என்பதும் அடையப்படவேண்டிய ஒன்று என்று நினைத்து, அதைப்பிடிக்க முயலும்பொழுது மிகச் சுலபமாக கை நழுவிப் போய்விடுகிறது.

Hands playing flute