KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உங்களின் முதலாளி நீங்களே...!Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உங்களின் முதலாளி நீங்களே...!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புத்தரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சின்ன கதை:

புத்தர் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய போதனைகளை எதிர்ப்பவர்களாகவும், அவரை அவமதிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர் அந்தக் கிராமத்து வழியாகச் செல்லும்பொழுது அவரைத் திட்டி, குற்றம் சாட்டிக் கடுமையாகப் பேசினார்கள்.

புத்தர் சிறிது நேரம் கவனித்துக் கேட்டு விட்டுப் பிறகு "இப்பொழுது நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல இருக்கிறேன். நான் போகலாமா? நீங்கள் என்னிடம் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி முடித்து விட்டீர்களானால் நான் கிளம்பிச் செல்ல வேண்டும் அல்லது இன்னும் சொல்லவேண்டியது ஏதாவது மீதமிருந்தால் சொல்லுங்கள், திரும்பி வரும்பொழுது நான் இதே இடத்தில் நிற்கிறேன். நீங்கள் வந்து உங்கள் பேச்சைத் தொடரலாம்," என்றார்.

புத்தர் கோபப்பட்டு ஏதாவது பேசுவார் அல்லது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முறையில் புத்தர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த கிராம மக்களுக்கு புத்தரின் இந்தச் செய்கை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புத்தர் ஏன் ஏதும் செய்யவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்கள், "நாங்கள் சாதாரண முறையில் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை. உங்களை அவமதித்துக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களே!" என்று கேட்டார்கள்.

விழிப்புணர்வுடன்
வாழும்பொழுது
சொர்க்கத்தில்
வாழ்கிறீர்கள்.

புத்தர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் என்னிடமிருந்து பதிலுக்கு ஏதாவது எதிர்வினையை எதிர்பார்த்தீர்களென்றால், நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் என்னிடம் இதே

போன்று பேசியிருந்தீர்களென்றால், நான்
எதிர்ச்செயல் ஏதேனும் புரிந்திருப்பேன்.
ஆனால் இப்பொழுது நானே எனக்கு
முதலாளியாகிவிட்டேன். நீங்கள் எதையும்
செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்த
முடியாது,'' என்று அமைதியாகச் சொன்னார்.

'மையத்தில் இருங்கள்' என்பதன் பொருள்
இதுதான். 'ஒரு குருவாக மாறுவது' என்பதன்
பொருள் இதுதான்.

புரிந்துணர்வோடும்
விழிப்புணர்வோடும்
வாழுங்கள்.

அதன்பிறகு நீங்கள் உங்கள் உணர்ச்சி களுக்கோ அல்லது வேறு யாருக்கோ அடிமை இல்லை. இல்லையென்றால் உங்களை யாரும் அசைத்துவிடுவார்கள். அவர்கள் உங்களைப் பல வழிகளில் அலைக்கழித்துவிடுவார்கள். அதோடு நீங்கள் ஒருங்கிணைக்கப்பட்டவராகவோ அல்லது முழுமையானவராகவோ ஆக முடியாது.

அனைத்தும் சக்தி மயம்

கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் ஆன்மீகத்திலிருந்து நீதியைப்பிரித்துச் சொல்கிறார்.

சொர்க்கம் நரகம் என்று எதுவும் ஸ்தூலமாக இருப்பதில்லை; அவை உளவியல் ரீதியானவை.

சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடுகள் எல்லாம் நம்முடைய சிந்தனையில்தான் இருக்கின்றன. நீங்கள் பாவம் செய்து விட்டு, அதற்குப் பிறகு நரகத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் பாவம் செய்கி றீர்கள். ஏனென்றால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நரகத்தில் இருப்பதால்தான் பாவம் செய்கிறீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்போதும், உணர்வற்ற நிலையில் நீங்கள் காரியங்களைச் செய்யும்போதும், நீங்கள் குழப்பமடைந்து உங்களுக்குள் அமைதியாக இல்லாதபோதும், நீங்கள் நரகத்தில் இருக்கி றீர்கள்.

நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்களா அல்லது நரகத்தில் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்குள்ளே இருக்கிற உள் வெளியின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

சிலர் புத்தரிடம் “உங்கள் வாழ்க்கையில் கருணை என்பது இல்லாவிட்டால் நீங்கள் எந்த வகையான நரகத்திற்குச் செல்வீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு புத்தர், “கருணையே இல்லாத மனிதர்களுக்குத் தனியாகத் தண்டனை என்று ஏதும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார்,” என்று பதில் சொன்னார்.

மனசாட்சியுடன் வாழாதீர்கள், உணர்வுடன் வாழுங்கள். புரிந்துணர்வோடும் விழிப்புணர்வோடும் வாழுங்கள். நீங்கள் ஒருபோதும் தவறே செய்யமாட்டீர்கள்.

நல்லொழுக்கம் என்று அழைக்கப்படும் நன்னெறிகள் யாவுமே மேம்போக்காகவே இருக்கின்றன.

நன்னெறியாளர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் எல்லாம் அவர்களுடைய விதிகளையும் வரைமுறைகளையும் மொத்த சமுதாயத்திற்கும் ஒரே விதத்தில், எந்தவித மாறுபாடும் இல்லாமல் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் புரிந்துணர்வு என்பது இல்லை.

அவர்கள் நிஜத்தை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள் அல்லது அர்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு நீதியைப் போதித்தவண்ணம் இருக்கிறார்கள். ஏனென்றால் வாழ்க்கையை இயல்பாகவே வாழ்வதற்கான ஞானம் அவர்களிடம் இல்லை.

புரிந்துகொள்ளுங்கள், பாவம் என்றும்
புனிதம் என்றும் இங்கே ஏதும் இல்லை.
எல்லாமே சக்திதான்.

எவை இருக்கின்றனவோ அவை அனைத்துமே சக்திதான்.

ஆற்றலை நல்லது என்றும் கெட்டது
என்றும் பிரிக்க முடியாது. கோபம், காமம்
போன்ற உணர்ச்சிகளும் சக்தியே. இவை

உண்மையிலேயே மிகப் பெரிய சக்திகளே.
ஆனால் நாம் அவற்றைக் கையாள்வதுஎப்படி
என்று தெரியாமலும், அவற்றை மதிப்பது
எப்படி என்று தெரியாமலும் இருக்கிறோம்.
அங்கேதான் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன.

நம்முடைய அறியாமையின் காரணமாகவே
இவ்வகையான அடிப்படை உணர்ச்சிகள்
நம்மிடம் எழுகின்றன.

காமம் என்பது
அன்பாக
உணர்வுரூமாற்றம்
பெறுவதே
இறுதி ரஸவாதம்!

நம்முடைய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அந்த அடிப்படை உணர்ச்சிகளை உணர்வுரூமாற்றம் செய்யும்பொழுது, அவை உயர்ந்த உணர்வுகளாக மாறு்கின்றன. புரிந்துணர்வு வரும்பொழுது காமம் என்பது அன்பாக உணர்வுரூமாற்றம் பெறுவதுபோல, மற்ற உணர்ச்சிகளும் உயர்ந்த உணர்வுகளாக உணர்வுரூமாற்றம் அடைகின்றன. காமம் என்பது அன்பாக உணர்வுரூமாற்றம் பெறுவதே இறுதியான ரஸவாதம்!

ஒவ்வொரு கணமும் ஆனந்தத்திலேயே வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த விழிப்புணர்வுடனும் ஆழ்ந்த பரவசத்துடனும் எதிர்கொள்வேன் என்று உணர்வுப்பூர்வமாகத் தீர்மானம் செய்யுங்கள். இந்தத் தீர்மானமே நம்முடைய வாழ்க்கையை உணர்வுரூமாற்றம்பெற வைக்கும்.

woman looking up

அதன்பிறகு நாம் நம் வாழ்க்கையை ஒரு
முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்குடன்
பார்க்க ஆரம்பிப்போம். நம்மை
முழுமையானவராகவும் பூரணமானவராகவும்
உணர்வதோடு மட்டுமல்லாமல், நம்முள்
உணரும் ஆனந்தத்தை மற்றவர்களுக்கும்
பரவச் செய்வோம்.

hands playing flute