KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கடவுள், தம்முடைய சொந்த வார்ப்பிலேயே மனிதனைப் படைத்தார். ஏனென்றால் அப்பொழுது மட்டுமே கடவுளால் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சுத்தமான சக்தி நிலையில், வெளிப்படா நிலையில், கடவுள் கடவுளாகவே இருக்கும்பொழுது, கடவுளேகூட தெய்வீகத்தைத் தமக்கு வெளியே பார்க்க முடிவதில்லை. அவரே எல்லாமுமாக இருக்கும்பொழுது, அவரே அவரைத் தனியாக எவ்வாறு பார்க்க முடியும்? எல்லாமே அவருடைய பகுதிகளாக, அங்கங்களாக இருக்கின்றன. அதனால் தெய்வீகத்தை அவரால் வெளியே பார்க்க முடியாது.

இது எப்படி என்றால், உங்களுடைய கைகளை உங்கள் உடலின் உட்புறமிருந்து எப்படி உணர்வீர்கள்? உள் பக்கமாக உங்கள் கைகளை எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்களுடைய ஒரு கையால் மற்றொரு கையைத் தொடும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்களால் விவரிக்க முடியும் இல்லையா? உங்களுக்கு ஏதோ ஒரு உணர்வு இருக்கும் இல்லையா?

உங்களுடைய கையால் மற்றொரு கையைத் தொட்டினால்தான், நீங்கள், அந்தத் தொடுதலை உணர முடிந்தது. ஏனென்றால் அது வெளிப்புறத்திலிருந்து தொடப்பட்டது. உங்களுடைய இரண்டு கைகளும் தனித்தனியானவை; நீங்கள் அவற்றை உங்களுடைய வெவ்வேறு உறுப்புகளாக உணர்ந்துகொள்ள முடியும்.

அதே போன்று மனிதன் மூலமாகத்தான் கடவுள் தம்மை அனுபவமாக உணரவும் வெளிப்படுத்தவும் முடியும். இரண்டு கைகளும் ஒரே உடலின் உறுப்புகளாக இருந்து தனித்தனியாக உணரப்படுவதைப்போல, மனிதன் கடவுளின் ஒரு பகுதியாக இருக்கிறான்.

கடவுள் தன்மை அனைத்திலும் பகுதியாகவும் முழுமையாகவும் இருக்கிறது.

தொட்டக் கையினால், தான் தொடுகிற அந்தக் கையுமே அதே உடலின் ஒரு பகுதிதான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாததைப்போல், மனிதனாலும் தான் கடவுளின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

தான் தொட்ட அந்த மற்றொரு கையும்
உண்மையில், அதே உடலின் ஒரு பகுதிதான்
என்ற புரிந்துகொள்ளுதலுக்கு இந்தக் கையை
எது அழைத்துச் செல்லும்?

இந்த முழு உடலும் பல்வேறு உறுப்புகளால்
ஒருங்கிணைக்கப்பட்ட, ஒன்றாகச்
சேர்க்கப்பட்ட ஒரு தனி ஸ்தூல இருப்புதான்
என்று மனத்தால் உணர்வது மட்டுமே, அந்தப்
புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்ல
முடியும்.

> மனிதன்
> தன்ன உள் தெய்வீகத்தை
> அனுபவிக்கவும்
> வெளிப்படுத்தவும்
> முடியும்.

இதைப்போலத்தான், நாம் அந்த முழுமையின் ஒரு பகுதிதான் என்றும், நம் தனி மனித விழிப்புணர்வு என்பது அந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான பகுதிதான் என்றும் நம்முடைய விழிப்புணர்வால் உணர்வது மட்டுமே, நம்மை அந்தப் புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்கிறது.

முழு உடலின் ஒரு பகுதியாகத்தான் அது இருக்கிறது என்ற உண்மையை உங்களுடைய கை ஒருபோதும் உணரமுடியாததுபோல, தனி மனித அஹங்காரமும் அது முழுமையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்ற உண்மையை ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஸத்யம் வெளிப்படுத்தப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டுமானால் அஹங்காரம் கரைந்து போக வேண்டும்.

Baby looking into mirror

நம்முடைய அழகை நாம் பார்க்க வேண்டுமென்றால், கண்ணாடியில் நம்முடைய பிரதிபலிப்பைப் பார்ப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்? கடவுள் தம்மைத்தாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும்பொழுது பிரதிபலிக்குகிற பிரதிபிம்பம்தான் மனிதன். பிம்பத்தை தவிர, பிரதிபிம்பம் ஒரு தனி ஸ்தூல இருப்பாக இருக்க முடியுமா? இல்லை, இருக்க முடியாது.

மனிதன், தன்னொள் தெய்வீகத்தை அனுபவிக்கவும் அதை வெளிப்படுத்தவும் முடியும். வாழ்க்கை என்கிற விளையாட்டே மனிதன் தனக்குள் கடவுளை உணர்வதற்கு முயற்சி செய்வதும், தெய்வம் தன்னை மனிதன் வாயிலாக வெளிப்படுத்த முயற்சி செய்வதும்தான்!

விழிப்புணர்வு - உணர்ச்சியையே உரு மாற்றும்

கிருஷ்ணர், இங்கே உண்மையாக ஒரு நுட்பத்தை, ஸூத்ரத்தைக் கற்பிக்கிறார். மேலைநாட்டு குருவான குர்த்ஜிஃஃப் (Gurdjieff) இந்த நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவார். வெளிச் சம்பவங்களால் கலக்கமடையாமல் இருப்பதற்கான ஆற்றலைச் சீடர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே, இந்த நுட்பத்தில் அவர்களை நுண்திறம் மிக்கவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான சூழ்நிலைகளை அவருடைய ஆச்ரமத்திலேயே உருவாக்குவார்.

மக்கள் குழுவாக அமர்ந்திருக்கும் ஒரு அறைக்குள் நீங்கள் செல்லும்பொழுது, அங்குள்ள சிலர் உங்களுக்குக் கோபம் மூளும் விதத்தில் எதையாவது செய்வார்கள். அந்தச் சூழ்நிலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்பதை நீங்கள் உணர முடியாதபடி மிகவும் இயற்கையாக அது செய்யப்படும். மற்றவர்களும் அந்தத் தொந்தரவை அதிகரிப்பதில் சேர்ந்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் பொறுமையை மீறி வெடிக்கப் போகிற அந்தச் சரியான நேரத்தில், குர்த்ஜிஃஃப், “நினைவிருக்கட்டும் அமைதியாக, நிதானமாக, கலக்கப்படாமல் இரு,” என்று கர்ஜிப்பார்.

> ஆச்ரமம் என்பது
> ஆன்மீக
> சோதனைக் கூடம்.

பொறுமையை மீறி வெடிக்கக் காத்துக்
கொண்டிருக்கும் உங்கள் மனநிலை இந்த
வார்த்தைகளைக் கேட்டவுடன் திடீரென்று
மறைந்துவிட முடியாது! ஏனென்றால் இது
ஒரு உளவியல் நிகழ்வு. உங்களுடைய
உடல் மன அமைப்புக்குள் சுரப்பிகளால்
சுரக்கப்படும் ஹார்மோன்களால் உங்கள்
உடல் விஷமாக்கப்படும்.

கோபத்தை உடனடியாகப் போக்க
முடியாவிட்டாலும்கூட, நீங்கள்
விழிப்புணர்வுடன் இருப்பதால், கோபத்தால்
விளையக்கூடிய மோசமான விளைவுகளை

ஏற்படாமல் தடுத்துவிட முடியும். உங்கள்
மையம் அந்த உள் மையம் எவ்வித
பாதிப்புமில்லாமல் இருக்கிறது.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு
விஷயங்கள் தெரியும்; ஒன்று, உள் மையம்
இன்னொன்று, வெளிப்புற எல்லை. இந்த
இரண்டு வேறுபட்ட அடையாளங்களும்
ஒன்றாகவே இருக்கின்றன.

ஒரு ஆச்ரமம் என்பது ஆன்மீக சோதனைக்கூடம்.

விழிப்புணர்வுடன்
வாழுங்கள்.
வெளிச் சூழல்களால்
பாதிப்படைய மாட்டீர்கள்.

தொடர்ந்து இந்த மாதிரியான சூழ்நிலைகள் எழுந்துகொண்டே இருக்கும். நீங்கள் இந்த பல்வேறுபட்ட சூழ்நிலைகளினால் ஏற்படும் உணர்ச்சிகளையும் அதன் முழுமையான எல்லைவரை சென்று அதாவது உணர்ச்சிகளின் உச்சத்திற்கே சென்று சந்திக்க வேண்டும்.

ஆனால் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். சூழ்நிலைகளைப் பற்றியும், அதனை ஏற்படுத்திய மக்களைப் பற்றியும் மதிப்பீடு செய்யாதிருக்க வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமல் வெறுமனே விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் வெளியில் ஏற்படும் சூழ்நிலைகளால் பாதிப்படைவதில்லை. அது உங்களை நிலைகுலையச் செய்வதில்லை.

விழிப்புணர்வுடன் இவற்றைச் சந்தித்தால், உங்களுக்குள்ளிருக்கும் மிகப் பெரிய, ஆழமான, எதனாலும் பாதிக்கப்படாத, அமைதியான, அனுபவப்பூர்வமான மையம் உங்களுக்கு வெளியே உள்ள எதனாலும் பாதிப்படையாது.

அடுத்த முறை நீங்கள் உணர்ச்சியால் ஊசலாடும்பொழுது, இந்த ஒரு கண நேரப் பார்வை, ஒரு బలமான ஆதரவாக உங்களுக்கு அமைகிறது. நீங்கள் இதை நினைவுபடுத்திக் கொள்ளும்பொழுது, அந்தக் கணம் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகிறது.

நீங்கள் விழிப்புணர்வற் ற நிலையிலும் அறியாமையிலும் இருக்கும்பொழுதுதான் உணர்ச்சிகளால் ஊசலாட்டப்படுகிறீர்கள்.