அறிவைக்கொண்டு அறியாமையைச் சுத்தம் செய்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யுபடி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை.
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.
நிச்சயமாக, யாருடைய பாவங்களையும் புண்ணியங்களையும் பகவான் ஏற்றுக்கொள்வதில்லை. உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.
யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறாரோ, யாருடைய அறிவும் மனமும் நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.
வேதத்தின் முதல் வாக்கியமே விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம்
இந்த ஸ்லோகத்தின் மூலம் கிருஷ்ணர் மிக ஆழமானதொரு கருத்தைப் பதிய வைத்திருக்கிறார். "நான் செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செய்ய வைப்பதும் இல்லை அல்லது செயல்களுக்கான பலன்களுடன் இணைவதும் இல்லை. இவை எல்லாமே வெளி உலக சுகங்களை நாடும் மனித சுபாவத்தாலேயே செய்யப்படுகின்றன."
கிருஷ்ணர் ஒரு தனி மனித பக்தரைப் பற்றியோ, சீடரின் செயல்களைப் பற்றியோ பேசவில்லை. ஆனால் இந்த மொத்த மனிதகுலத்தைப் பற்றிப் பேசுகிறார்.
அவர் இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறார். புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சத்தில் எதையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. நான் ‘எதையும்’ என்று சொல்லும்பொழுது ‘எதையும்’ என்ற பொருளில்தான் சொல்கிறேன். இங்கு இருப்பவை எல்லாமே எப்போதும் இங்கேயே ஏதோ ஒரு வடிவத்திலிருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இனிமேலும் அது ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொரு வடிவத்திலோ தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது உயிரினமாக இருந்தாலும் சரி அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வடிவம் மட்டும் வேண்டுமானால் மாறுபடலாம்.
பட்டறிவு மனத்திற்கு, பொருளும் ஆற்றலும் ஒன்றுக்கொன்று மாற்றத் தகுந்தனவாக இருக்கின்றன. ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாது என்றெல்லாம் விஞ்ஞானம் சொல்கிறது. விஞ்ஞானம் இப்பொழுது புரிந்து கொண்டதை முன்பே சொல்லியதுதான் வேதத்தினுடைய சிறப்பு,
> ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாது என்பதை விஞ்ஞானமும் ஒத்துக்கொள்கிறது. அழகு! விஞ்ஞானத்தின் கடைசி வரிதான் உபநிஷத்தின் முதல் வரி.
ஈசாவாஸ்ய உபநிஷதம், 'ஈசா' வாஸ்யம் இதம் ஸர்வம் என்றுதான் ஆரம்பிக்கிறது. இதன் பொருள், 'இங்கிருப்பவை எல்லாமே ஆற்றலிலிருந்து வெளி வந்தவையே!' என்பதாகும்.
இப்பொழுது உற்பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு குவாண்டம் இயற்பியலும் (Quantum Physics), 'பொருளும் ஆற்றலும் ஒன்றே' என்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறது. இதுதான் தற்காலத்திய விஞ்ஞானத்தின் முன்னேற்றம் அல்லது கண்டுபிடிப்பு. ஆனால் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியமே 'எல்லாமே சக்திதான்; எல்லாமே ஆற்றல்தான்' என்பதுதான்.
படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே!
"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார்?" என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். படைப்பாளன், படைக்கப்பட்டது, படைப்பு இவை அனைத்தும் பிரபஞ்சம் மட்டுமே அன்றி வேறில்லை. படைப்பாளனும் படைப்பும் வேறு வேறாக இருந்திருந்தால், படைப்பைவிட படைத்தவர் மிகுந்த புத்திசாலி என்றாகிவிடும். ஆனால் படைப்பும் படைப்பாளியும் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல. அவை இரண்டுமே தெய்வீகம்தான்.
நம் கண்ணுக்கு முன்னால் தெரிவதைப் பிரபஞ்சம் என்று கருதிக்கொண்டு, இத்தகைய ஒரு வடிவம் கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்று கேட்கிறோம். நாம் பிரபஞ்சமாக புலன்களால் உணர்ந்து கொண்டிருக்கும் இந்தப் படைப்பைப் படைத்தவர் மிகுந்த சக்தியுடையவராகத்தான் இருக்க வேண்டும் என நம்புகிறோம்.
> படைப்பாளன்,
> படைக்கப்பட்டது,
> படைப்பு
> இவை அனைத்தும்
> பிரபஞ்ச இருப்புத்
> தன்மையேயன்றி
> வேறில்லை,
எல்லாமே சக்திதான், பருப்பொருளின் ஒவ்வொரு பகுதியும் சக்திதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். அதனால் எல்லாமே சக்திதான் என்றாகிவிடும்பொழுது படைப்பாளி, படைப்பு என்கிற பேதமெல்லாம் எங்கிருந்து வந்தது? படைப்பாளியும் படைப்பும் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே தெய்வீகமானதுதான்.
நாம் அவற்றைத் தெரிந்து, உணர்ந்துகொள்ளும் வழிமுறைகளில்தான் வித்தியாசம் உள்ளது. படைப்புக்கு என்று ஒரு வடிவத்தை நாம் இணைத்துப் பார்க்கிறோம். அதைத்தான் லீலா, 'தெய்வீக நாடகம்' என்கிறோம். வெளிப்படாத, வடிவமில்லாத ஒரு சக்திதான் படைப்பின் மூலமாகத் தன்னை வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டது. வடிவமற்ற சக்திதான் படைப்பாளி. வடிவத்துடன் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய படைப்பின் மூலமாக அது வெளிப்படுகிறது.
படைத்தலைச் செய்த அதே சக்திதான் படைப்பாகவும் வெளிப்படுகிறது என்பதை நாம் உணரும்பொழுது, இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். பிரபஞ்சமே பிரபஞ்சத்தைப் படைத்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்கிறோம்.
> வடிவமற்ற
> சக்திதான்
> படைப்பாளி.
'ஏன்' என்ற கேள்விக்கு நாம் தர்க்க ரீதியாகப் பதில் சொல்ல முடியாது. ஆரம்பத்திலேயே 'ஏன்' என்ற கேள்வியின் பிடியில் சிக்கிக் கொண்டால், நாம் எப்பொழுதுமே அதனுடனேயேதான் ஒட்டிக்கொண்டிருப்போம். 'ஏன்?' என்று கேட்பதற்கு பதிலாக 'என்ன' என்று ஆராயத் தொடங்குங்கள். உண்மையில், நான் என்பது 'என்ன' இந்தப் பிரபஞ்சம் என்பது 'என்ன' என்பவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
நான் யார், நான் என்னவாக இருக்கிறேன் என்கிற இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்பொழுது, இந்த 'ஏன்' என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும். அது மிகச் சுலபமாகக் கரைந்துவிடும்.
'நான் யார்?' என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பகவான் ரமண மஹரிஷியின் தியான நுட்பம்.
ஜென் கோன்ஸ்ம் (Zen Koans) இதே அடிப்படையில்தான் 'உங்கள் பிறப்பிற்கு முன் இருந்த உங்களுடைய வடிவத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்' அல்லது 'ஒரு கையைத் தட்டி எழுப்பப்படும் ஓசையின் மீது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்' என்கிறது. இந்தக் கேள்விகளுக்கு மனத்தால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்குத் தர்க்க ரீதியாகப் பதில் அளிக்க முடியாது. இதையெல்லாம் நம்முடைய மனத்தால் புரிந்துகொள்ளவே முடியாது.