மனத்தின் சுறுசுறுப்பு ஓய்வு பெற, உடலைச் சுறுசுறுப்பாக்குங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இந்த ஸ்லோகத்தில், ஒன்பது வாயில்களுடன் இருக்கிற உடலைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். வெளி உலகுடன் தொடர்புகொள்ள உதவும் அந்த ஒன்பது வாயில்களாவன: கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புகள் இரண்டு.
நாம் எதுவும் செய்யாமல் இருப்பதும், எதுவும் செய்யப்படுவதற்கு காரணமாக இல்லாமல் இருப்பதும்கூட வித்தியாசமாகவும் அபத்தமாகவும் தெரியும். ஆனால் இங்கே கிருஷ்ணர் 'எதையும் செய்யாமல் இருப்பது' என்று சொல்லும்பொழுது, சோம்பேறித்தனத்தையும் மனம் போனபோக்கில் இருப்பதைப் பற்றியும் குறிப்பிடவில்லை.
உண்மையிலேயே, நாம் மந்த நிலையின் உச்சத்தைத் தொட முடிந்தால்கூட, நம்மால் தியானத்தில் இருக்க முடியும்; விடுதலைபெற முடியும். பொதுவாக நாம் எல்லாம் அனுபவிக்கும் மந்தத் தன்மையில் உடல் மந்தமாக இருக்கும். ஆனால் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு தொடர்பில்லாத எண்ணத்திற்கு ஒரு குரங்கைப்போல் தாவிக்கொண்டே இருக்கும். ஆனால் தியானம் அப்படிப்பட்டது அல்ல.
இங்கே 'மந்தத் தன்மை' என்பது ஆழமான மனத்தில் ஏற்படும், 'மனத்தை உறைய வைக்கிற மந்தத் தன்மையையே' குறிக்கிறது. மனம் எல்லா வகையான செயல்களை நிறுத்திவிட்ட போதிலும் உடல் இறைவனின் அருளாணைப்படி செயல்படுகிறது. ஏராளமான செயல்பாடுகளுக்கு மத்தியில் நாம் இருந்தபோதிலும் நாம் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் மனம் செயல்பாட்டுடனான அடையாளத்தை விட்டுவிட்டது.
மனம் செயலிலிருந்து அதைச் செய்பவரைத்
தனிமைப்படுத்திவிடுகிறது. செய்பவர் யார்,
செயல் என்ன என்பதையெல்லாம் விளக்கிச்
சொல்வதுதான் மனம்.
பொதுவாக நாம் 'மந்தத் தன்மை' என்று சொல்லும்பொழுது, உடல் அளவிலான மந்தத் தன்மையையே குறிப்பிடுகிறோம். உடல் முற் றிலும் மந்தமாக இருக்கிறது. ஆனால் மனம் முற்றிலும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்கிறது.
> மனம்,
> செயலிலிருந்து
> அதைச் செய்பவரைத்
> தனிமைப்படுத்திவிடுகிறது.
அது அதனுடைய வேலையான உருவாக்குதல், தொடர்பில்லாத எண்ணங்களை இணைத்தல் இவற்றை செய்துகொண்டே இருக்கிறது.
உடலுக்குப் பதிலாக மனம் மந்தமாக மாறும்பொழுது, நாம் மனத்தையும் விட்டுவிடுகிறோம். அதனால் அப்பொழுது நம்மிடமிருந்து நம் செயல்களைத் தனியே பிரித்து அடையாளம் காண்பதும் நின்றுவிடுகிறது.
நீங்கள் ஓய்வெடுங்கள் பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும்
கிருஷ்ணர், 'நாம் இந்தச் செயலை செய்கிறோம்' என்ற எண்ணம்கூட இல்லாமல், எதிலுமே முழுமையாக ஈடுபடுவதையும், நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுவதைப் பற்றியும் இங்கே பேசுகிறார்.
முதலில் நாம் அந்தச் செயலுக்குச் சாட்சியாக மாறுகிறோம். அப்பொழுது மட்டுமே நம்மால் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபாடுகொள்ள முடியும். நாம் விலகியிருந்து, சாட்சியாக மாற ஆரம்பிக்கும்பொழுதுதான் நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுகிறோம்.
அதன் பிறகு, செயலைச் செய்பவரும் செயலும் ஒன்றுக்கொன்று இணைந்துவிடுகின்றன. அதன்பிறகு, செயலிலிருந்து செய்பவர் தனித்து இருப்பதில்லை.
உண்மையில், செயல் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை; செயலின் மூலமாக நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை விழிப்புணர்வுடன் உணர்வதுதான் நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது.
ஒரு சின்ன கதை:


'மந்தத் தன்மை' என்பது ஆழமான மனத்தில் ஏற்படும், 'மனத்தை உறைய வைக்கிற மந்தத் தன்மையையே' குறிக்கிறது.
நாய் ஒன்று ஒரு எலும்புத் துண்டைப் பார்த்தது. அது மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த எலும்புத் துண்டைச் சுவைக்க ஆரம்பித்தது. ஆனால் அது உலர்ந்திருந்தது. இருந்தாலும் அது பற்களால் கடித்துக் கடித்துச் சுவைக்க ஆரம்பித்தது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த
உலர்ந்துபோன கடினமான எலும்புத் துண்டின்
உரசலால், நாயினுடைய ஈறுகளிலிருந்தே
இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இந்த
இரத்தத்தைச் சுவைத்த நாய் மிகுந்த
மகிழ்ச்சியடைந்தது.

எலும்பை இன்னும் மேலும்
நக்கிச் சுவைத்தது. அதனால்
அதனுடைய வாயிலிருந்தே
மேலும் மேலும் இரத்தம்
கசியும் படியாகச் செய்து
கொண்டது.
தான் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருப்பது தன்னுடைய சொந்த இரத்தம்தான் என்பது அந்த நாய்க்குத் தெரியாது. அந்த இரத்தத்தின் சுவைக்கும் எலும்புக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் அந்த நாய்க்குத் தெரியாது.
வாழ்க்கையின் ஆனந்தம் என்பது முற்றிலுமாக நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதை, நாம் அனுபவத்தின் மூலமும் புரிந்துகொள்ளுதல் மூலமும் உணரும்பொழுது மட்டுமே, வெளிச் சந்தோஷங்கள்தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்ற தவறான கோட்பாட்டை விட்டு வெளியே வருகிறோம். அதன் பிறகு நாம் எந்த ஒரு செயலையும் செய்வதும் இல்லை; எந்த ஒரு செயல் செய்யப்படுவதற்குச் காரணமாக இருப்பதும் இல்லை.
நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தோமோ அதைக் காட்டிலும் மேலான, உயர்வான நிலையில்தான் ஏற்கனவே இருக்கிறோம் என்பதை உண்மையாகப் புரிந்து கொள்கிறபொழுது, நாம் இறுதி இலக்கை, குறிக்கோளை அடைந்துவிட்டோம்.
பிரபஞ்ச சக்தியின் அன்புக் கரங்களுக்குள் நாம் தளர்வாகவும் அதே சமயத்தில் அதனுடன் இயைந்து அழகாகவும் ஆனந்தத்துடனும் செல்வோம். அதுவரையிலும் நாம் ஏற்கனவே இருக்கிற நிலையை அடைவதற்குக்கூட போராடிக் கொண்டிருப்போம்.
பழம்பெரும் இந்திய தேசத்தின் ஞானியும்
பால யோகியும் ஆகிய அஷ்டவக்ரர்
'ஞானமடைதல்' என்ற விஞ்ஞானத்தை,
மிதிலையின் அரசரும் சீதையின்
தந்தையுமாகிய ஜனகருக்கு உபதேசித்தார்.
அவர் சொல்கிறார், “சரி தவறு, இன்பம் துன்பம் இவை எல்லாம் நம்
> நமக்கு இன்பத்தைத்
> தருவது செயலல்ல,
> செயலின் மூலமாக
> நமக்குள் இருக்கிற
> ஆனந்தத்தை
> உணர்வதுதான்
> இன்பத்தைத் தருகிறது.
சம்பந்தப்பட்டவை அல்ல. முற்றிலும் மனத்தினுடையவை.
நாம் கர்த்தாவும் அல்ல, பலன்களை அறுவடை செய்பவரும் அல்ல. அதனால் நாம் எப்போதும் சுதந்திரமானவர்கள். நாம் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறோம். நாம் எப்போதும் முழுச் சுதந்திரமாய் இருக்கிறோம்.
சாட்சியாக இருக்கிற நாம் அந்த ஸாக்ஷி பாவத்தை விட்டுவிட்டு நம்மையே கர்த்தாவாகப் பார்ப்பதுதான் நம்முடைய பந்தங்களுக்குக் காரணம்,'' என்று நம்முடைய பந்தத்திற்கான காரணத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
இன்பம் துன்பம், மகிழ்ச்சி சந்தோஷம், பாவம் புண்ணியம், சரி தவறு போன்ற எல்லா உணர்ச்சிகளும் நமக்குள்தான் நிகழ்கின்றன என்று அஷ்டவக்ரர் நமக்குச் சொல்கிறார். ஏனென்றால் நாம் செயல்களிலும் அதனுடைய விளைவுகளிலும் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
இந்த விளையாட்டை விளையாடுவது
நம்முடைய மனம்தான். நம்முடைய மனமும்
அஹங்காரமும்தான் நாம் எதைச் செய்தாலும்
அதனுடன் நம்மை இணைத்துவிடுகின்றன.
நாம் ஒவ்வொரு செயலுடனும் ஒரு உணர்ச்சி யைச் சேர்த்துவிடுகிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ, அதைச் செய்வது நாம்தான் என்று அஹங்காரம் சொல்லும். நம்முடைய அஹங்காரம் நம்முடைய பொறுப்பை எடுத்துக் கொள்கிறது.
அதனால் நாம் நம்முடைய செயல்களிலும் அதன் பலன்களிலும் ஈடுபாடு கொள்கிறோம். நாம் எதைச் செய்தாலும் அத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக நம்மைப் பிணைத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாம் நம்முடைய செயல்களுடன் நம்மை இணைத்துக்கொள்ளும்பொழுது, நம்முடைய செயல்களின் முடிவைப் பொறுத்து சந்தோஷம் அல்லது துக்கம், இன்பம் அல்லது துன்பம் என்று ஏதோ ஒன்று நிகழ்கிறது.
நம்முடைய செயல்களுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பந்தத்திலிருந்து நாம் வெளியே வருவதற்கு அஷ்டவக்ரர் மேலும் ஒரு உபாயம் சொல்கிறார். நாம் வெளியே வருவதற்கான ஒரே வழி, நம்முடைய செயல்களுக்கு நாம் சாட்சியாக இருப்பது மட்டுமே! நம் செயலையும் அதன் விளைவையும் ஒரு மூன்றாவது மனிதரைப்போல் பார்க்க வேண்டும். நாம் செய்யும் செயல்களிலிருந்து நம்மை நாம்விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்ச சக்தி பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி நாம் விட்டுவிட வேண்டும். நாம் நம்மை ஒரு கருவியாக மட்டுமே இருக்கும்படி விட்டுவிட வேண்டும்.
நாம் நம்முடைய உடைமை உரிமையை யாருக்காவது விட்டுக் கொடுக்கும்பொழுது, நாம் சுதந்திரமாகிவிடுகிறோம். அந்தச் சுமை நம்மீது இல்லை. அப்பொழுது நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.
நாம்தான் இவற்றிற்கு உரிமைதாரர்கள் என்று நாம் நினைக்கிறவரையில், உரிமையாளர்களுக்கே உரிய எல்லாக் கவலைகளையும் நாமும் எப்போதும் எதிர்கொள்ளவேண்டியது இருக்கிறது. நீங்கள் ஏன் அந்தக்கவலைகளைச் சுமக்க வேண்டும்? இந்தப் பிரபஞ்ச சக்தி அக்கறை எடுத்துக்கொள்ளட்டும் நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள்!
## உணர்ச்சி உங்களைத்தாக்காது
புத்தரின் வாழ்க்கையிலிருந்து அழகான ஒரு கதை:
புத்தரின் சீடர் ஒருவர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்தத் துறவி இன்னும் ஞானமடையவில்லை.
புத்தர் அவரை அழைத்துச் சொன்னார்:
"நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நீ இன்னும் ஞானமடையவில்லை. நீ தெளிவு பெற்றிருக்கிறாய். நீ நன்றாகப் பேசுகிறாய். அதனால் போதனைகளை உன்னால் பரப்ப முடியும். ஆனால் உன்னால் விதைகளை விதைக்க முடியாது. சில பேரை மட்டும் கவர்ந்து என்னிடம் வரும்படி செய்ய முடியும். இந்த வாய்ப்பை உன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்."
"நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?" என்று அந்தத் துறவி கேட்டார்.
புத்தர்சொன்னார், "ஒவ்வொருவாய்ப்பிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரே ஒரு விஷயம்தான் நீ செய்ய முடியும். அது
> நாம் கர்த்தாவும் அல்ல, பலன்களை அறுவடை செய்பவரும் அல்ல. அதனால் நாம் எப்போதும் சுதந்திரமானவர்களே!
'சாட்சியாக இருத்தல்'. சில சமயங்களில்
மக்கள் உன்னால் எரிச்சலடைவதையும்
உன்னுடன் கோபப்படுவதையும்
பார்ப்பாய். ஏனென்றால் அவர்களுடைய
கொள்கைகளையும் அவர்களுடைய
தவறான அபிப்பிராயங்களையும் நீ
காயப்படுத்திவிடுவாய்.
சாட்சி பாவனையை
விட்டுவிட்டு
நம்மையே கர்த்தாவாகப்
பார்ப்பதே
பந்தங்களுக்குக் காரணம்.
அப்படியே அமைதியாக இருந்து விழிப்புடன் இரு. மக்கள் உனக்கு எதிராக இருப்பதால் சில சமயங்களில் பல நாட்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் உனக்குத் தண்ணீர்கூடத் தர மாட்டார்கள். அதற்காக எரிச்சலடையாதே, கோபமடையாதே! உன்னுடைய பசியையும் உன்னுடைய தாகத்தையும் சாட்சியாகப் பார். நீ மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறாய் என்பதைவிட, உன்னுடைய கவனிக்கிற நிலைதான், விழிப்புதான், ஸாக்ஷி பாவம்தான் மிக முக்கியம்."
"நீ விழிப்புடன் என்னிடம் வந்தால், நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பேரை நீ அணுகினாய் என்பது ஒரு பொருட்டல்ல; எத்தனை பேரிடம் நீ பேசினாய் என்பதும் பொருட்டல்ல. நீ சாட்சியாக இருந்து செயல்களைப் பார்ப்பதில் உறுதியாக இருந்ததை, நீயே உணர்ந்து கொண்டாயா என்பதுதான் முக்கியம். மற்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல."
புத்தர் தெளிவாகச் சொல்கிறார்: "உங்களுடைய செயல்களில் முழு விழிப்புடன் இருங்கள். நாம் முழு விழிப்போடு இருக்கும்பொழுதுதான், நாம் நம்முடைய செயல்களுக்கு ஒரு மூன்றாவது மனிதராக, சாட்சியாக இருக்கும்பொழுதுதான், நம்முடைய செயல்களுடனோ அல்லது செயல்களின் விளைவுகளுடனோ நம்முடைய எந்தவிதமான உணர்ச்சி களையும் இணைத்துக்கொள்ள மாட்டோம்.
இப்படிச் செய்வதன் மூலமாக நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோம். வெளிஉலகில் என்ன நடந்தாலும், அது நம்மைப் பாதிப்பதில்லை. ஏனென்றால் நாம் எதனுடனும் எந்தவித உணர்ச்சியையும் இணைக்கவில்லை; தொடர்புபடுத்தவில்லை.
அத்துடன், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் உபதேசிப்பதைத்தான் நாமும் பயிற்சி செய்கிறோம். அதுதான் உண்மையான புரிந்துகொள்ளுதலுக்கும், பட்டறிவு மூலமாக நாம் புரிந்து கொண்டதை உள்வாங்குதலுக்கும் உதவுகிறது. நம்முடைய கொள்கைகளின்படி நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும். நாம் உண்மையென நம்பும் கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும். நாம் பேசுவதைக் கடைப்பிடிக்கும்பொழுது மட்டுமே, மற்றவர்களையும் அவற்றைப் பின்பற்றும்படியாகத் தூண்டுகிறோம். நாம் அதற்காக முயற்சி செய்யக்கூடத் தேவை இல்லை. நாம் மிகச் சுலபமாக மக்களுக்கு ஊக்கமளிக்கலாம். நம்முடைய சொந்த உணர்வுருமாற்றம் என்பது மகிழ்ச்சியான இறுதி விளைவாக இருக்கும்பொழுது நிகழும் துணைப்பலன்தான் ‘ஊக்கமளித்தல்’ என்னும் நிகழ்வு!

நீங்கள் சாதாரணமானவர் அல்ல
கேள்வி : ஸ்வாமிஜி, புலனின்பங்களைத் தவிர்த்தல், எல்லாவற்றையும் சமமாகப் பாவித்தல் என்று கிருஷ்ணர் சொல்வதில் உள்ள உண்மையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் புரிந்துகொள்ளுதலை எவ்வாறு நான் பயிற்சி செய்ய முடியும்? ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், நான் என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தயவு செய்து வழி காட்டுங்கள்.
நீங்களே உங்களைக் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். எந்த ஒரு மனிதப் பிறவியும் சாதாரணமானது இல்லை. நீங்கள் அபூர்வமானவராக ஆவதற்குரிய சாத்தியம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களைச் சாதாரண மனிதருக்கும் கீழானவராகவே நினைத்துக் கொள்கிறீர்கள்; அது மட்டுமல்ல இயற்கைக்கு மாறான ஒழுங்கற்ற மன நிலை கொண்டவராகவும் உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடு செய்து கொள்பவராகவும் இருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு மேலான மனிதர். தயவு செய்து இதை நீங்கள் நம்புங்கள். உங்களை நீங்களே மிகக் குறைவாக மதிப்பிடுவதற்குப் பதிலாக இதை நம்புங்கள்.
நீங்கள் உங்களைச் சாதாரணமானவர்
என்று எடைபோடுவது உங்களுடைய அக
மதிப்பீடே.
நீங்கள் உங்களை எப்படிப் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான்
மமகாரம் என்று அழைக்கிறோம்.
நீங்கள் எப்படி உங்களை மற்றவர்களுக்கு
வெளிக்காட்டுகிறீர்கள் என்பதுதான்
அஹங்காரம். அது, மற்றவர்கள் உங்களை
எப்படிப் பார்க்க வேண்டும் என்று
விரும்புகிறீர்களோ அதனைப் பொறுத்து
அமையும்.

நீங்கள் மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கி ரீர்கள் என்பதைவிட, உங்களுடைய விழிப்புதான் மிக மிக முக்கியம்,
நீங்கள் உங்களைப் பற்றி உங்களுக்குள்ளே
என்ன உணர்கிறீர்களோ, அதைவிட
சற்றுப் பெரியவர்களாகவே உங்களை
வெளிக்காட்டிக்கொள்ள எண்ணுவீர்கள்.
ஆனால் உங்களுக்குள்ளே எப்போதும்
உங்களைப் பற்றிய சந்தேகங்களுடன் தான்
இருப்பீர்கள். அத்துடன் உண்மையிலேயே,
நீங்கள் இருப்பதைவிட குறைவாகவே
உங்களுக்குள் உங்களைப் பற்றி உணர்வீர்கள்.
நிறைய பேர், குழந்தைப் பருவத்திலிருந்தே தங்களைப் பற்றிய தவறான கருத்துக்களால் ஆன சுயமதிப்பீட்டால் மட்டுமே நிரப்பப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். "இல்லை. நீங்கள் சொல்வது தவறு. நான் என்னைப் பற்றி ஒரு உயர்ந்த சுய மதிப்பீட்டையே வைத்திருக்கிறேன். அது என்னுடைய பிரச்சினை அல்ல," என்று நீங்கள் சொல்லலாம்.
ஆனால் இப்போதும் நான் சொல்கிறேன், "நீங்கள் உங்களைப் பற்றி குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் 'நாம் கடவுள்' என்ற கருத்தைத் தவிர, நாம் நம்மைப் பற்றி வேறு எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அது குறைவான மதிப்பீடே!
நாம் தெய்வீகமானவர்கள்! நாம் கடவுள்!
நாம் விழிப்புணர்வுடன் வாழ்ந்துகொண்டு, உண்மையாகவே அதை நம்பும்பொழுது, நாம் ஜீவன் முக்தர் ஆகிறோம்.
ஆனால் அதை நாம் நம்ப மறுக்கிறோம். ஏனெனில் நாம் கடவுளாக முடியாது என்று நமக்குச் சமுதாயம் சொல்லி வைத்திருக்கிறது.
மனிதர் ஊர்ந்து செல்வதற்கும் படர்ந்து செல்வதற்கும் மட்டும் இந்தப் பூமியில் படைக்கப்படவில்லை. உச்சத்தை எட்டுவதற்கு அவரால் பறந்துகூடச் செல்ல முடியும்.

ஒருவர் தீக்ஷை எடுத்துக்கொள்ளும்பொழுது, ஒரு சீடராகும்பொழுது அவருக்கு அது சாத்தியமாகிறது. சிஷ்ய என்ற வார்த்தைக்கு, கற்றுக் கொள்வதற்கான தயார் நிலை, ஆயத்த நிலை, மதிப்பளித்தல், கற்பதற்கு ஏற்ற திறந்த மன நிலை என்றெல்லாம் பொருள்படும்.
இந்த முழுமையான, முடிவில்லாத் தன்மை உடைய பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இந்த அபரிமிதமான அழகான பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமானவை இருக்கின் றன. அன்பு செய்வதற்கும் வாழ்வதற்கும் நிறைய இருக்கின்றன. சாதாரணமானதைக்கொண்டு ஒருவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது.
ஆன்மீகம் என்பது ஆழமான தெய்வீக தன்மை. அந்தத் தெய்வீக தன்மை. சாதாரணமான தன்மையில் திருப்தி அடைவதில்லை.
உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள்
மக்கள் மேம்போக்காகவும் வெளியுலக விஷயங்களில் ஆர்வத்துடனும் சாதாரணமாக வாழ்வதையுமே விரும்புகிறார்கள். ஸத்யத்தைத் தேடுதல் என்பதே வாழ்க்கையின் உண்மையான ஆரம்பம். பிறகு வாழ்க்கை, சிறகைக் கட்டிக்கொண்டு, அதிக உயரம் பறக்க ஆரம்பிக்கும்.
நாம் அஹங்காரத்தைப் பெருக்கிக் கொள்கிறோம். மேலும் இந்தச் சமுதாயம் அஹங்காரத்தின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனையும் அதிகாரத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஆலயத்திற்கும் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பூசாரிகளுக்கும் அடிமையாக்கி, அவர்களைப் பொய்யர்களாக மாற்றி அமைத்துவிடுகிறது.
துக்கத்தில் இருப்பவர் போராட முடியாது. துக்கத்திலிருக்கும் ஒருவர் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கிறார்.
தம்முடைய துக்கங்களைக்கூட பணயமாக வைக்க அவரால் முடியவில்லை. ஏனென்றால் அவர் பயப்படுகிறார், "யாருக்குத் தெரியும்? இதைவிட அதிகமான துக்கத்தை நான் அடையலாம். இந்தத் துக்கமாவது எனக்குத் தெரிந்ததாக இருக்கிறது. நான் இதனுடன் பழக்கப்பட்டுவிட்டேன். நான் அதற்கு ஏற்றாற்போல் என்னைச் சரி செய்து கொள்கிறேன். அதை எதிர்த்துச் சமாளித்துவிட முடியும்.
புதிய துக்கத்தைப் பற்றி யாருக்குத்
தெரியும்? பழைய துக்கத்துடனே அதன்
வரையறைக்குள்ளேயே இருந்துவிடுவதுதான்
நமக்கு மிகவும் நல்லது," என்று
பயந்துவிடுகிறோம்.
> நாம் கடவுள்.
> என்ற விழிப்புணர்வுடன்
> வாழ்ந்துகொண்டு,
> உண்மையாகவே
> அதை
> நம்பும்பொழுது,
> ஜீவன் முக்தர் ஆகிறோம்.
நாம் முதலில் நம்முடைய புலன்களின் உணர்ச்சிகளைப் பற்றிப் புரிந்துகொள்வோம். எல்லாப் புலன் உணர்தல்களுமே மாயைதான். நாம் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது, முகர்வது இவற்றின் மூலம் நம்முள் செலுத்தப்படும் எல்லாமே நிலையற்றனவே.
இவற்றில் 90% நேரடியாக நம்முடைய விழிப்புணர்வற்ற நிலைக்கே சென்றுவிடுகின்றன. இவற்றை நாம் ஒருபோதும் உணர்வதுகூட இல்லை. பத்து விழுக்காடு நம்முடைய விழிப்புணர்வின் நினைவில் பதிந்திருந்தாலும் அவை நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிய இசைவான அல்லது முரண்பாடற்ற ஒரு கருத்தைத் தருவதில்லை.
இது எப்படியென்றால் 1000 பக்கங்கள்கொண்ட ஒரு புத்தகத்தில் 100 பக்கங்களே படித்ததுபோலத்தான். அதுவும்கூட துளித் துளியாக இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதுபோலத்தான்.
இந்த அறிவுடன் நாம் இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் அல்லது ஒரு மதிப்புரை எழுதுவதற்குத் தகுதி அடைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.
தர்க்கச் சங்கிலியை உருவாக்குவதற்காக நாம் சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சம்பந்தப்படுத்துகிறோம் என்று Quantum Physics நிரூபித்துள்ளது. இதைத்தான் நான் க்ளட்ச்சிங் என்று அழைக்கிறேன்.
புலன்கள் வழியாக நாம் உள்கிரகித்த உணர்ச்சிகள், நம்முடைய எண்ணங்கள் இவை எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதவை.
ஆனால் நம்முடைய கடந்தகால விழிப்புணர்வற்ற நினைவுகளின் அடிப்படையில் அவற்றை நாம் இணைத்துக்கொண்டு, இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தொடங்குகிறோம். நம்முடைய துக்கங்களுக்கு எல்லாம் இதுதான் காரணம்.
எல்லாப் புலன்
உணர்தல்களுமே
மாயைதான்.
நாம் கேட்பது, பார்ப்பது,
தொடுவது, சுவைப்பது,
முகர்வது என எல்லாமே
மிகவும் நிலையில்லாத
உள்ளீடுகளே.
நாம் அவற்றிலிருந்து
நம்மைவிடுத்துக்கொண்டு, அன்க்ளட்ச்
செய்துகொண்டு, எண்ணங்களை இங்கேயே,
இப்போதே அனுபவிக்கும்பொழுது மட்டுமே,
நம்முடைய அனுபவங்கள் உண்மையான
அனுபவங்களாகின்றன. அப்பொழுது நமது
துக்கம் மறைந்துவிடுகிறது.
இரண்டாவதாக, நம்முடைய புலன்கள் சில
விஷயங்களை உணர்ந்தறிந்துகொண்டு,
நம்மைச் செயல்படும்படி தூண்டிவிடுகின்றன.
அந்தச் செயலும் நாம் நினைப்பதைப் பெற்றுவிடுவோம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் செய்யப்படுகிறது. எதிர்காலம் எப்பொழுதுமே இன்பமான எதிர்பார்ப்புகளைப் பற்றியதாகவே இருக்கிறது. நாம் எதிர்காலத்திற்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் செல்லும்பொழுது, நாம் ஏமாற்றமடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
கீதையின் மூலமாகக் கிருஷ்ணர் கற்றுக்
கொடுப்பது இதுதான். அவர் நம்மைச் செயல்
புரியாமல் இருக்கும்படி சொல்லவில்லை.
எதிர்பார்ப்பில்லாமல் செயல்களைப்
புரியுமாறுதான் சொல்கிறார்.
தர்க்கச் சங்கிலியை
உருவாக்குவதற்காக
நாம் சம்பந்தமில்லாத
சம்பவங்களைச்
சம்பந்தப்படுத்துகிறோம்
என்று
Quantum Physics
நிரூபித்துள்ளது.
என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுடைய செயல்களின் வெற்றி தோல்விகளைப் பற்றி நீங்கள் முன்னதாகவே முடிவு செய்யாதீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.
மூன்றாவதாக, நம்முடைய புலன் வழியாகப் பெற்று உட்கிரகித்துக் கொண்ட உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இல்லையென்றால் அடக்கி வைக்க முடியும். அது ஆசைக்கு வழி வகுக்கும். அடக்கி வைப்பதன் மூலமாக நாம் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறோம்.
எதை நாம் அடக்கி வைக்கிறோமோ, அதுவே பிறகு வெடித்துச் சிதறும். அது, கற்பனைகளுக்கும் மோசமான உடல் நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
வெளிப்படுத்தும் பொழுது, ஆசை வளர்கிறது. நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு நமக்கு புத்தி சாதுர்யம் கிடையாது. அதனால் அதை நாம் அரைகுறையாகவே நிறைவேற்றுகிறோம். அதனால் அவை பல தலைங்களைக் கொண்ட பாம்பைப்போல மீண்டும் வளர்கின்றன. இதைத்தான் கர்மா என்று சொல்கிறோம்.
இருந்தபோதிலும், நம்முடைய புலன்கள் சொல்பவற்றைப் பின்பற்றாமல் நாம் அவற்றைக் கடந்து செல்லக் கற்றுக்கொள்ள முடியும். நாம் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, புலன் வழியாக அறிந்து உணர்பவற்றைச் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அவற்றில் பெரும்பாலானவை நம்முடைய சொந்தப் படைப்புகளாகவும் கற்பனைகளாகவும் இருப்பதைப் பார்க்க முடியும்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்கிறேன், “உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை அனுபவியுங்கள். ஆனால் உங்களிடம் எது இல்லையோ அதை விட்டுவிடுங்கள்.”
நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே, நம்மிடம் இருப்பவற்றை உண்மையாகவே அனுபவித்துக்கொண்டும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டும் இருக்க முடியும்.
நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, தொலைக்காட்சியைப் பார்க்காமல் அல்லது அரட்டையடிக்காமல் ஒருமுகப்பட்டு சாப்பிட்டோமென்றால், நாம் குறைவாகச் சாப்பிடுவதையும், அதன் மூலம் நாம் நிறைவடைவதையும் உணர முடியும்.
நாம் இதை எப்பொழுது முடிப்போம், மிகவும் சீக்கிரமாக முடிக்க வேண்டுமே, கஷ்டம் இல்லாமல் மிக நன்றாக முடிக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, அந்தக் கணத்தில் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அந்த வேலையில் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஈடுபடுங்கள்.
இதைய செய்யச் சொல்லித்தான் கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்துகிறார். நம்முடைய புலன்கள் நமக்குத் தலைவராக இருப்பதைக் காட்டிலும், நம்முடைய புலன்களுக்கு நாம் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
கழுத்தில் கட்டப்பட்டுள்ள சங்கிலியால் வழிகாட்டப்படுகிற ஒரு நாயைப்போல, நம்முடைய கழுத்தில் கட்டப்பட்டுள்ள புலன் இன்பங்கள் என்னும் சங்கிலியால் நாம் வழிநடத்தப்படுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வுகூட இல்லாமலேயே இப்போதைக்கு இருந்து வருகிறோம். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அந்தச் சங்கிலியை விட்டுவிடுவதுதான்! புலன்களின் கட்டுப்பாட்டையும்கூட நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
