KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/அமைதியின் பிறப்பிடமே ஆனந்தம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

அமைதியின் பிறப்பிடமே ஆனந்தம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு மனிதர் ஞானி ரமண மகரிஷியிடம் சென்று "பகவான், எனக்கு அமைதி தேவை," என்று சொன்னார்.

ரமணர், "உன்னுடைய வாக்கியத்தில் இருக்கிற, 'எனக்கு' என்ற வார்த்தையை அகற்றிவிடு, 'தேவை' என்ற வார்த்தையையும் அகற்றிவிடு, மீதமிருப்பது 'அமைதி' மட்டுமே," என்று பதிலளித்தார்.

அமைதிக்கான நம் விருப்பமெல்லாம்கூட ஒரு 'விருப்பம்'தான். ஆனால் 'விருப்பம்' இல்லாமல் இருப்பது எப்படி, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது எப்படி என்பது நமக்குத் தெரியாது.

ஆழ்ந்து யோசியுங்கள், அமைதி என்பது தன்னியல்பில் விருப்பம் என்பதே இல்லாதது. 'அமைதி' என்பதின் அடிப்படை தத்துவமே 'விருப்பம்' இல்லாமல் இருப்பதுதான். விருப்பமில்லா நிலையே அமைதி!

அப்படிப்பட்ட 'விருப்பமில்லா நிலையான அமைதியை' விருப்பத்தால் அடைய முடியுமா? அப்படிப்பட்ட ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும்? அமைதியை நாம் நாட ஆரம்பிக்கும்பொழுது, நாம் நமக்குள் ஆசையை உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் நமக்குள்ளேயே
இருக்கும்பொழுது,
நம்மைச் சுற்றி
எது இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
நாம் இயல்பாகவே
அமைதியோடுதான்
இருப்போம்.

'அமைதியை' அடைய வேண்டுமென்கிற
ஆசை, நம்மை பல்வேறு வழிகளில்
செயல்புரியத் தூண்டுகிறது; அதன்பிறகு
அந்தச் செயல்களுக்கான பலனை நினைத்து
நம்மைக் கவலைப்படச் செய்கிறது.

இந்தக் கவலைகள் நம்மை அமைதியிலிருந்து
விலக்கி அமைதியின்மைக்கு எடுத்துச்
சென்றுவிடுகின்றன. மீண்டும் நமக்கு அமைதி
தேவைப்படுகிறது. அதனால் மீண்டும் நாம்
அமைதியை விரும்ப ஆரம்பிக்கிறோம். இது
ஒரு விஷச் சுழற்சியாக மாறிவிடுகிறது.

முதலில் நமக்கு அமைதி தேவைப்பட்டது.

அதனால் அதை நிறைவேற்றிக்கொள்ள
எதையோ செய்கிறோம். எதையோ
ஒன்றைச் செய்வது என்பதே கவலையை
உண்டாக்கிவிடுகிறது. அதனால் மீண்டும்
நாம் இந்தக் கவலைகளிலிருந்து விடுபட்டு
அமைதியை அடைய விரும்புகிறோம்.

இது ஒரு விஷச் சுழல். ஏனெனில்,
நாம் அமைதியை 'விரும்புகிறோம்'.
'அமைதி தேவை' என்ற எண்ணத்தை
நாம் விடும் பொழுதுதான், நாம் இருக்கிற
இயல்பிலேயே இருந்துகொண்டு நம்மைக்
கவனித்துக்கொள்ள பிரபஞ்ச இருப்புத்
தன்மையை அனுமதிக்கும்பொழுது, அமைதி
தானாகவே நிகழ்ந்துவிடுகிறது.

அமைதி என்பது
தன்னியல்பில்
விருப்பம் என்பதே
இல்லாமல் இருப்பதுதான்.

அமைதிக்கான தேவை அல்லது ஆசையை விட்டு விட்டு நம்மிடம் இருப்பதைக்கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்வதனால்தான், இப்பொழுது நாம் அமைதியில் இருக்கிறோம். அதனால் அமைதியாக இருப்பதற்கான அடிப்படை தத்துவமே, விருப்பம் இல்லாமல் இருப்பதுதான்!

கவலையில்லாமல் அமைதியாக இருப்பதேயே தாங்கள் விரும்புவதாகச் சிலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கிற அந்த அமைதி உயிரோட்டமானதல்ல; அது இறந்து போன அமைதி.

வாழ்க்கையின் பலவிதமான உணர்ச்சிகளை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாத, உயிரில்லாத, உறக்க நிலையில் இருக்கிற அமைதியாக அது இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு வாழ்க்கை என்பது கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் 'அமைதி' என்பது தேடி அலைந்து அடையக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

வாழ்க்கையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தீர்வுகள் அவர்களிடம் இல்லாததால்தான் அவர்கள், "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்," என்று சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

உண்மையான அமைதி என்பது நமக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது வெளியே நடந்துகொண்டிருக்கும் செயல்களைப் பொறுத்தது அல்ல. நமக்குள் நாமே சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய அமைதி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களையோ, சூழ்நிலையையோ சார்ந்து நிற்பதில்லை.

'அமைதி' என்பது, நாம் நமக்குள்ளே உணர்கிற ஆனந்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனந்தத்தில் பிறந்த அமைதியானது, நம்மையும் நம்மைப்போலவே மற்றவர்களையும் அமைதியானதொரு நிலையில் வைக்கிறது. நமக்குள் நாமே திருப்திப்பட்டுக் கொள்ளும்பொழுது, அமைதிக்காக நாம் வெளியில் இருக்கிற எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

செயலை மட்டும் செய்து லக்ஷ்யத்தை அடையுங்கள்

உண்மையாகவே, ஊடகங்கள் மற்றும் 'இன்டர்நெட்' போன்றவற்றின் பாதிப்பால் இந்த நவீனயுக மனிதர்களுக்குள் ஒரு படிவே ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த ஊடகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மனத்தோற்றம் மற்றும் கற்பனைகளையே சார்ந்து இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் உண்மையுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை.

உண்மை நிலையிலிருந்து
அவர்கள் பிம்பங்களைச் சேகரித்து
வைத்திருந்தார்களேயானால், அது
சிறப்பாக இருந்திருக்கும். ஏனென்றால்
அவை உண்மையில் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் கற்பனைகளுடன்
தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்தக்
கற்பனை உலகத்திலேயே வாழ்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் அவர்களிடம் என்ன
இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.

ஒருமுறை அவர்கள் கற்பனை உலகத்தோடு இணையத் தொடங்கிவிட்டார்களேயானால், அவர்கள் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. அவர்கள் ஏற்கெனவே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கனவு நிறைவேறிவிட்டாலும்கூட, அது நிறைவேறிய கணமே, மனம் ஒரு புதிய விஷயத்தின் பின்னால், ஒரு புதிய கற்பனையின் பின்னால் ஓட ஆரம்பிக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே மனமானது தொடர்ந்து இருக்க முடியும். பின்னால் ஓடுவதற்கு எதுவுமே இல்லையென்றால், மனம் அல்லது அஹங்காரம் உயிர்வாழ முடியாது.

ஒவ்வொரு 'நாளை' என்பதும் 'இன்று' என்றுதான் வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. நாளை என்பது இன்றாக வரும்பொழுது, நாம் அதைத் தொலைத்தே விடுகிறோம். ஏனென்றால் நாம் மீண்டும் நாளை என்பதை எதிர்நோக்கத் தொடங்கிவிடுகிறோம்! விளைவுகளைப் பற்றி அநாவசியமாக நினைக்காமல் நாம் செயல்படும்பொழுது, நம்முடைய சக்தி அனைத்தும் இலக்கை அடைவதை நோக்கியே பயன்படுத்தப்படுகின்றன. பலன்களைப் பற்றிய கற்பனையில் ஆற்றலானது விரயம் செய்யப்படுவதில்லை.

ஆசை எனும் சக்தியே இச்சா சக்தி. அது செயல் எனும் சக்தியாக, க்ரியா சக்தியாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இலக்கை அடைவது என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் எது முக்கியமென்றால், செயலைச் செய்வதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பாதைதான் முக்கியமே தவிர, இறுதியில் வருகிற பலன்கள் அல்ல. குறிக்கோள் என்பது ஒரு உப உற்பத்திப் பொருள் மட்டுமே.

தெய்வத்தின் பொம்மை விளையாட்டு

ஒரு குழந்தை ஏதோவொரு சின்ன பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தக் குழந்தைக்காக பெரிய பொம்மை ஒன்றைப் புதிதாக வாங்கி வருகிறீர்கள்.

குழந்தையின் கைகளிலிருந்து அந்தச் சின்ன பொம்மையை நீங்கள் பிடுங்கி விட்டீர்களானால், அந்தக் குழந்தை என்ன செய்யும்? பெருங் கூச்சலிட்டுக் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிடும்.

குழந்தையிடம் நீங்கள் இதைவிட நல்ல பொம்மை, பெரிய பொம்மை வைத்திருப்பதாக விவரித்துக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தை அதைக் கேட்குமா? இல்லை. நீங்கள் ஒன்றுமே சொல்லாமல், அந்தப் பழைய பொம்மையை கையிலிருந்து பிடுங்காமல், நீங்கள் வாங்கி வந்த புதிய பொம்மையைக் கொஞ்சம் கையில் கொடுங்கள், உடனே அந்தப் பழைய பொம்மையை மறந்து விட்டு, புதிய பொம்மையுடன் விளையாடி மகிழத் தொடங்கிவிடும்.

அதே போன்றுதான் பிரபஞ்ச இருப்புத்
தன்மை நமக்கு ஒரு பெரிய பொம்மையைக்
கொடுக்கவே முயற்சி செய்கிறது. பிரபஞ்ச
இருப்புத் தன்மையானது மிகவும் பரந்து
கிடப்பது, ஆச்சரியமானது, கற்பனைக்கு
எட்டாதது.

பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு
அளித்துள்ள அந்தப் பொம்மையைக்
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அதை
முழுமையாக அப்படியே அனுபவியுங்கள்;

> விளைவுகளைப் பற்றி
> நினைக்காமல் நாம்
> செயல்படும்பொழுது,
> நம்முடைய
> சக்தி அனைத்தும்
> குறிக்கோளை
> அடைவதை நோக்கியே
> பயன்படுத்தப்படுகின்றன.

அதைக் கொண்டாடுங்கள். உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்!

ஆனால் உங்களுடைய மனம், "உன்னுடைய
அஹங்காரம் என்கிற இந்தச் சின்ன
பொம்மைதான், இந்தச் சின்ன கனவுகள்தான்
உன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமான,
முக்கியமான பொருள்," என்று உங்களிடம்
சொல்லிக்கொண்டே இருக்கும்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை
நமக்கு அளித்துள்ள
எளிமையான
அற்புதமான விஷயங்களை
உள்வாங்க
ஆரம்பியுங்கள்.

சில நாட்களுக்கு உங்களுடைய கற்பனைகளையும் உங்களுடைய எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட முயற்சி செய்யுங்கள். சில நாட்களுக்கு உங்களுடைய பயத்தையும் உங்களுடைய அஹங்காரத்தை காப்பாற்றுவதையும் விட்டுவிடத் தீர்மானியுங்கள்.

வாழ்க்கையை எளிய முறையில், இயற்கையின் வைபவங்களுடன் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழுங்கள்.

பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் அனுபவியுங்கள். காலையில் உதிக்கிற சூரியனையும் அசைந்து கொண்டிருக்கும் காலை வானத்தின் நிறங்களையும் வர்ணங்களையும் இவை போன்ற எளிமையான, அற்புதமான விஷயங்களை உள்வாங்க ஆரம்பியுங்கள்.

Sunrise view with boats on water

புதிய காலைப் பொழுதை
அனுபவிக்கத் தயாராகிக்
கொண்டிருக்கும் பறவைகளின்
கீச்சிடும் ஒலியைக் கவனியுங்கள்.

காலைக் கதிரவனின் ஒளியில் மலர்கள் தங்களுடைய எல்லா மகிமையோடு மலர்வதையும் கதிரவனின் இதமான கதிர்கள் பட்டவுடன் பரவசத்துடன் மடல் விரிப்பதையும் பாருங்கள்.

இந்தச் சில கணங்கள்தான் நம்முடைய இருப்பின் முழுமையான புதிய பரிமாணத்தை நமக்குக் காட்டுகின்றன. 'எதன் பின் ஓடாமலும் எதையும் விட்டு விலகியிருக்காமலும் காரணம் ஏதுமில்லாமலேயே வாழ்க்கையை அனுபவிப்பதென்றால் என்ன' என்பதை அவை நமக்குக் காட்டுகின்றன. வரவேற்கிற, தழுவிக் கொள்கிற பிரபஞ்ச சக்தியின் கரங்களுக்குள் நாம் எப்படி இளைப்பாறுவது என்பதை வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது.