KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் இதை அனுபவித்திருப்பீர்கள். எந்தச் செயலிலாவது நீங்கள் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுவீர்கள். அது எந்த ஒரு செயலாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், படித்தல் போன்ற எளிமையான செயலாகக்கூட இருக்கலாம். நீங்கள் அதற்குள் ஆழமாகச் செல்லும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.

நீங்கள் மிகுந்த தலைவலியால் அவதிப்படும்பொழுது, உங்களுக்கு விருப்பமான ஒன்றை மிக ஆழமாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், உங்கள் தலைவலி காணாமல் போய்விடும்.

தலைவலி இருக்கும்பொழுது, உடலின் அந்தப் பகுதிக்குப் போதுமான அளவு சக்தியைப் பாய அனுமதிக்கிற அளவிற்குப் புத்திசாலித்தனம் கொண்டதாகவே உடல் இருக்கிறது. ஆனால் நாம் தலைவலி என்ற விழிப்புணர்வுடன் இருந்துகொண்டு, சக்தி பாய்வதைத் தடைசெய்கிறோம்.

nம்முடைய தலையை நினைக்கும்போதே, உண்மையில் நாம் தலைவலியைத்தான் நினைக்கிறோம். தலையோடு தலைவலியை இணைக்கிறோம். அதனால் நாம் எப்போதெல்லாம் தலையை நினைக்கிறோமோ அப்பொழுதெல்லாம் உண்மையிலேயே தலைவலியைப் பற்றியே விழிப்புணர்வு கொள்கிறோம்.

ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய தலையைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறோம். நம்முடைய தலைவலியும் நமக்குத் தொல்லை தருவதைத் தொடர்கிறது.

நிகழ்காலத்தில் வாழ்வதும்
நிகழ்கிற ஒவ்வொரு
கணப் பொழுதினை
அனுபவித்தலுமே
தியானம்தான்.

நாம் தலையைப் பற்றி மறக்கும்பொழுது, தலைவலிக்குக் காட்டி வந்த எதிர்ப்பை விட்டுவிடுகிறோம். அதனால் சக்தி தடையின்றி பாய்ந்து தலைவலி குணமாகிறது. அல்லது நீங்கள் இன்னொரு முறையையும் முயற்சி செய்யலாம்.

உங்கள் தலைக்குச் சக்தி பாய்ந்து செல்வதையும் அது உங்கள் தலைவலையைக் குணப்படுத்துவதையும் சாட்சியாக மட்டுமே இருந்து ஆழ்ந்து கவனியுங்கள். சக்தி பாய்வதை முழு ஆர்வத்துடன் உற்றுப் பாருங்கள். உங்கள் தலைவலியில் நீங்கள் ஒரு பங்கேற்பாளராக இல்லாமல், முற்றிலும் வெளி நபராகவே இருங்கள். அந்தப் பகுதிக்கு சக்தி பாய்ந்தோடுவதற்கும் தலைவலியின் மேல் அது செயல்படுவதற்கும் அனுமதியுங்கள்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியில் வலி
இருந்தாலும் அதைப் போக்குவதற்கு நீங்கள்
இதை ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும்.

> உடலின்
> நோய்வாய்ப்பட்ட
> பகுதிக்குப்
> போதுமான அளவு
> சக்தியைப் பாய
> அனுமதிக்கிற
> அளவிற்கு உடலுக்குப்
> புத்திசாலித்தனம்
> இருக்கிறது.

வலியைப் பற்றி நினைக்காமல், அந்தப் பகுதியில் உங்கள் எண்ணத்தை ஆர்வத்துடன், உற்சாகத்துடன் குவியுங்கள். முதலில் வலி அதிகரிப்பதைப்போல் தோன்றும். ஆனால் விரைவில் அது குறைந்து, மறைந்துவிடும்.

A person holding their head in pain

எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச்
சென்றோமானால், அந்த உணர்ச்சி
மட்டுமே மிஞ்சி நிற்கும். நாம் இல்லாமல்
போய்விடுவோம். இதைத்தான் நாம்
‘முழுமை’ அதாவது பூரணம் என்கிறோம்.

‘நீங்கள்’ மறைகிற அந்தத் தருணத்தை, உங்களுடைய இப்போதைய நடப்பு வாழ்க்கை முறையிலும் நீங்கள் சில நிமிடங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால் நீங்கள், எல்லாவற்றிலும் ஆழமாக இருப்பதற்கும், பூரணத் தன்மையுடன் இருப்பதற்கும் செயல்பட்டீர்களென்றால் போதும், ‘நீங்கள்’ மறைந்து போகிற இந்த அனுபவம் உங்களுக்குள் அடிக்கடி நிகழ்வதாகவும், அதிகக் காலம் நீடிப்பதாகவும் இருக்கும்.

விரைவில் ‘நீங்கள்’ இல்லாமலேயே உங்களை மறந்து உங்கள் வேலைகளைத் தீவிரமாகச் செய்வதில் நீங்கள் கைத்தேர்ந்தவர்கள் ஆகிவிட முடியும். நாம் வெளி உலக வேலைகளைச் சுதந்திரமாகச் செய்பவர்களாகிவிடுகிறோம்.

ஆனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்

‘நாம் யார்’ என்பதை உணர்ந்து கொள்வதற்காக ஒரு அருமையான நுட்பத்தை இங்கே கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார்.

புலன்களால் உணரப்படுகிற பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்குவதனாலும் நம் உடல், புலன்கள் மற்றும் மனம் இவற்றுடனான நமக்குள்ள தவறான அடையாளங்களைக் கைவிட்டுவிடுவதனாலும் நாம் புத்தி சாதுர்யத்துடன் வாழ்க்கையை வாழ முடியும். அதுவே நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு, நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.

நம்முடைய கடமை, செயல்களைச் செய்வது மட்டுமே! விளைவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஏதாவது ஒன்றை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அந்த அளவிற்கு, மிக அதிகமான அன்பு சக்தியை நம்முள் பெற்றிருக்கிறோம்.

எந்தவித காரணமும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தச் சக்தியை நம்மால் எல்லாத் திசைகளிலும் பரவச் செய்ய முடியும். இந்த அன்பு வழியில், நம் வாழ்க்கையில் செயல்களைச் செய்யும்பொழுது, நாம் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டோம்.

விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்பட மாட்டோம் என்று நான் சொல்லும்பொழுது, இதை ஏமாற்றத்துடனோ அல்லது மனிதரின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலோ சொல்லவில்லை.

விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அந்த நிலையில் நாம் விளைவுகளை எதிர்பார்ப்பதற்குக்கூட தெரியாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய உள் சக்தியான ஆனந்த சக்தியிலிருந்து இயங்கிக்கொண்டும், அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். அவ்வளவுதான்.

> எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச் சென்றோமானால், அந்த உணர்ச்சி மட்டுமே மிஞ்சி நிற்கும். நாம் இல்லாமல் போய்விடுவாம்.

அதனால்தான், "நாங்கள் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை," என்று சொல்லக்கூட முடியாமல் நாம் இருக்கிறோம். நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வழியில் என்ன வருகிறதோ அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

வருவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருக்கிற
செயல்களிலிருந்து விளையும் விளைவுகளைப்
பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க
மாட்டோம். நாம் இன்பமாக ஓடிக்கொண்டே
இருக்கிறோம். அவ்வளவுதான். நாம்
பிரபஞ்ச சக்தியுடன் இயைந்து ஓடிக்
கொண்டிருக்கிறோம். பாய்கிற இந்தச்
சக்திதான் உண்மையான அன்பு.

> நம்முடைய கடமை,
> செயல்களைச் செய்வது
> மட்டுமே!
> விளைவுகளைப் பற்றிக்
> கவலைப்படத்
> தேவை இல்லை!

நாம் நம்முடைய உடல், மனம், அஹங்காரம் இவற்றைக்கொண்டு நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்கிறோம். அதனுடனான நட்பை முறித்துக் கொள்கிறோம்.

இந்தத் தெய்வீக நாடகத்தில் நாம் 'நடிகர்' என்ற கதாபாத்திரத்தைச் செய்வதற்குப் பதிலாக, நாம்தான் அந்த நடிகர் என்று நினைக்க ஆரம்பித்து, நமக்கு நடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உண்டான எல்லா உணர்ச்சிக் குழப்பங்களுக்குள்ளும் நாம் விழுந்துவிடுகிறோம்.

இப்படி நாம் நம்முடைய கதாபாத்திரத்தில் சிக்கித் துன்பப்படும்பொழுது, நாம் அந்த நாடகத்தின் முழு இன்பத்தையும் இழந்து, வாழ்க்கையே ஒரு பேரதிர்ச்சிதான் என்று உணர்கிறோம்.

அதேபோல நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மட்டுமே செயல்களைச் செய்யும்போது, நிகழ்கிற கணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்யும்போது, அதன் விளைவைப் பற்றி நாம் கவலைப்படாதபோதும், நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

ஒரே ஒருமுறை நாம் செய்கிற செயல்களின் விளைவுகளைப் பற்றி நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டால்க்கூட போதும், நாம் அந்தக் கவலையில் நம்மை நாமே சிக்க வைத்துக் கொள்கிறோம். அப்பொழுது, அந்தக் கணத்தில் செய்யும் செயல்களை ஆனந்தத்துடன் செய்யும் மன நிலையையும் இழக்கிறோம்.

நாம் நமக்குள் நிலை கொண்டிருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அமைதியோடு இருப்போம். நாம் நமக்குள்ளே மையம் கொண்டிருக்கும்பொழுது, நம்முடைய செயலின் விளைவைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. நாம் நம்மால் இயன்றவரை நன்றாகச் செயல்பட்டுவிட்டால், அதனுடைய விளைவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.