ஸந்யாஸம் தப்பியோடுபவருக்கல்ல, தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இங்கே துறவறம் என்று குறிப்பிடும்பொழுது நாம் பரம்பரை சம்பிரதாயப்படி புரிந்து வைத்திருக்கிற துறவறம் அல்ல என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். துறவறம் என்றால் பொதுவாக எல்லாவற்றையும் விட்டுவிடுவது, குறிப்பாக பொறுப்புகளை விட்டுவிடுவது என்று நினைக்கிறோம். துறவு என்ற பெயரில் ஹிமாலயத்திற்கே சென்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு முயற்சித்தாலும் நாம் ஒரு ஸந்யாஸி ஆக முடியாது.
‘துறந்துவிடுதல்’ என்ற வார்த்தையை நாம் எந்த முறையில் புரிந்து கொண்டிருக்கிறோமோ, அந்த முறையில்தான் செயல்படவும் செய்கிறோம். ‘துறந்துவிடுதல்’ என்றால் ‘பொறுப்புகளைத் துறந்துவிடுதல்’ என்றே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதனால் நாம் புரிந்து கொண்டதுபோலவே, உலகத்தைத் துறந்துவிட முயலும்போது சில விஷயங்களைத் தவிர்த்துவிடுகிறோம்.
‘தவிர்த்துவிடுதல்’ என்பது ஒருபோதும் தீர்வாகாது.
நான் ‘சில விஷயங்களை நான் விட்டுவிட வேண்டும், தவிர்த்துவிட வேண்டும்’ என்று சொல்லும்போது, பிரபஞ்ச சக்தியின் படைப்புகளையும் தவிர்த்துவிடுகிறோம். உலகத்தைத் துறக்கும்போது, பிரபஞ்ச சக்தியால் படைக்கப்பட்டவற்றைத் துறந்துவிடுகிறோம்.
காரணமில்லாத
மங்கலத்துவ
சக்தியைத்தான்
நாம்
சிவம் என்கிறோம்.
நாம் பிரபஞ்ச சக்தியைக் காட்டிலும் அதிக புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும்கூட அது நம் ஆணவத்தையே காட்டுகிறது. நம்முடைய துறவு என்பது நம்முடைய ஆணவத்தைக் காட்டுவதாகத்தான் அமைந்துவிடுகிறது.
உண்மையிலேயே, சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் துறவுகொள்ள முயற்சி செய்கிறோம். அந்தத் தொந்தரவு எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு, நாம் எதைத் துறக்க வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டும்.
வெளி உலக விஷயங்களான நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளோ, மக்களோ நமக்கு ஒருபோதும் தொந்தரவுதர முடியாது. அவை எப்படி நம்மைக் கட்டுப்படுத்த முடியும்? உண்மையிலேயே பயம் ஆசை இவற்றின் தன்மைகளும் நம்முடைய மனத்தின் வெளிப்பாடு்களும்தான் நமக்குத் தொந்தரவு தந்து கொண்டிருக்கின்றன.
பொருட்கள், மக்கள், நம்முடைய வாழ்க்கை இவை மூன்றும் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நம்முடைய மனமானது தொடர்ந்து ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
> தவிர்த்துவிட வேண்டும் என்றுசொல்லும்போது, நாம் இருப்பதற்காகவே பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட சிலவற்றைக்கூட தவிர்த்துவிடுகிறோம்.
உண்மையை எதிர் கொள்வதற்குப் பயந்துகொண்டு, எதையாவது விட்டு விட்டு ஓடிவிடுதல் என்ற மன அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு அல்லது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட குற்ற மனப்பான்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு பொருள் சார்ந்த உலக இன்பங்களை விட்டு ஓடிவிடுவது என்பது துறவு ஆக முடியாது.
ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து, அந்த ஐந்து நிமிடங்களில் நடக்கும் விஷயங்களையும் அந்தச் சூழ்நிலைகளையும் நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை விழிப்புணர்வுடன் பாருங்கள்.

நீங்கள் நினைப்பது, உணர்வது, செய்வது என எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அப்பொழுது நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கே புரியும்.
நம்மைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும் ஆழமான விழிப்புணர்வும் நமக்குள் ஏற்பட்டு, சூழ்நிலைகளாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களாலும் நாம் எந்தவிதத்திலும் பாதிப்படையாமல், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையுமே ஒரு ஸா க்ஷியா க மட்டுமே இருந்து பார்த்து, வாழ முடிந்தால்தான், நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம். நாம் யார் என்பதை உணர்ந்தவர்களாகிறோம்

உள்ளுலக ஒழுக்கமே உங்களை சொர்க்கத்தில் வாழச் செய்யும்
ஒரு சின்ன கதை.
இளம் ஸந்யாஸி ஒருவர், அழகிய விலைமகள் குடியிருந்த வீட்டிற்கு எதிரே வாழ்ந்து வந்தார். அந்த இளம் ஸந்யாஸி எப்போதும் தியானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தார். மறுபுறம் அந்த விலைமகள் அவருடைய வழியில் சென்று பணம் சம்பாதித்து வந்தார். அவருடைய வீட்டிற்குப் பல ஆண்கள் வருவார்கள், போவார்கள்.
அந்த இளம் ஸந்யாஸி அவருடைய தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய கவனமெல்லாம் பெரும்பாலும் அந்த இளம் பெண்ணைச் சுற்றியே இருந்தது. ஒழுங்கீனமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைச் சபித்துக்கொண்டே இருந்தார்.
அந்த விலைமகளுக்கோ எதிர் வீட்டில் ஸந்யாஸி ஒருவர் இருப்பதே தெரியாது.
அந்த விலைமகள், அவருடைய வாழ்க்கை முறையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாலும்கூட, பகவான் கிருஷ்ணரின் மீது பக்தியில் மூழ்கித் திளைத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவரை வணங்குவதிலும் அவருடைய விக்ரஹங்களுடன் விளையாடுவதிலும் செலவிட்டுக் கொண்டிருந்தார்.
அந்த ஸந்யாஸியும் விலைமகளும் ஒரே நாளில் இறந்து மரணத்தின் கடவுளாகிய எமனின் எமலோக வாயிலை அடைந்தார்கள்.
எமலோகத்தைச் சென்றடைந்தவுடன் அந்த விலைமகள் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டார். ஸந்யாஸிக்கு மிகுந்த அதிர்ச்சி. இருந்தாலும்கூட, ஒரு விலைமகளே சொர்க்கத்திற்கு அனுப்பப்படும்போது, தமக்கு ஒரு அமோகமான இராஜ உபசாரம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவர் நரகத்துக்கு அனுப்பப்பட்டார்.
யமதர்மனின் அநியாயமான இந்த முழுத் தீர்ப்பையும் எதிர்த்து ஸந்யாஸிதமது கோபத்தை வெளியிட்டார். எமன் அந்த ஸந்யாஸிக்கு,
> நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாட்சியாக இருக்கும்போதுதான் நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம். "உன்னுடைய வாழ்க்கை முழுவதும் தியானம் என்ற போர்வையில் அந்த விலைமகளின் செயல்களைப் பற்றிய எண்ணங்களுக்கே மனத்தில் இடமளித்துக் கொண்டிருந்தாய். ஆனால் அவரோ எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் மனத்தை முழுவதுமாக கடவுளிடமே ஒருமுகப்படுத்தி வைத்திருந்தார்," என்று அமைதியாக விளக்கினார்.
கட்டுறு மனப்பாங்குடனும் சமுதாயம் விதித்துள்ள ஒழுக்கங்களின்படியும் நாம் செயல்களைச் செய்ய ஆரம்பித்தோமென்றால் நாம் வேடதாரிகளாகத்தான் இருப்போம்.
துறவு என்பது கேலிக் கூத்தாகிவிடும். இதுவும் உலக இன்பங்களைப்போல, நம்மை துக்கத்திற்குத்தான் அழைத்துச் சென்றுவிடும். அலைக்கழிக்கும்
நாம் கட்டுறு மனப்பாங்குடனும் சமுதாயம் விதித்துள்ள ஒழுக்கங்களின்படியும் செயல்களைச் செய்ய ஆரம்பித்தோமென்றால் நாம் வேடதாரிகளாகத்தான் இருப்போம்.
ஆசைகளின்மூலம்நம்மைதுக்கத்திற்குள்ளாக்கும் உலக இன்பங்களைப்போல், துறவும் துக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.
ப்ரஹ்மசர்யம் என்றால் 'உண்மை நிலையுடன் வாழ்வது' என்று பொருள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறாற்போல் ப்ரஹ்மசர்யம் என்பது திருமணம் ஆகாதவரை குறிப்பது அல்ல. நாம் நம்முள்பரவசமானநிலையிலிருக்கும்போதும் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும்போதும், அற்புதமான பிரபஞ்ச இருப்புத் தன்மையின் இசைக்கேற்றாற்போல் இசைந்து இயல்பாகவே ஓடும்போதும் நாம் உண்மையான ப்ரஹ்மசாரிகள்.
நாம் நிகழ்காலத்தில் முழுமையாக வாழும்போதும், செய்யும் செயல்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும்போதும், நாம் செய்யும் செயலாகவே மாறிவிடுகிறோம்; செயலைச் செய்பவராக இருப்பதில்லை. அப்போதுதான் நாம் உண்மையிலேயே துறவு மேற்கொண்டுள்ளோம். 'நான் செய்கிறேன்' என்ற உணர்ச்சியை, என்ற ஆணவத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான ஸந்யாசிகள்.
ஆனால் நாம் நம் மனத்தைத் துறக்க விரும்புவதில்லை. மனமானது தொடர்ந்து கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அந்தக்கற்பனைகள் நம் இயல்பு நிலையுடன் பொருந்தாதபோதும், நம்மைச் செயல்பட தூண்டிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய மனத்தைத் துறக்க நாம் விரும்பவில்லை.
நாம் அனுபவித்து உணரவேண்டியது இதுதான். அதாவது வெளியிலிருக்கும் அற்பமான உணர்ச்சிகளுக்குப் பின்னால், நம்முடைய இருப்புத் தன்மைக்குள் திடமாக, அமைதியாக இருக்கும் அந்த மையத்தை நாம் உணர வேண்டும். அது இந்த வெளியுலக நிகழ்வுகளால் எள்ளளவும் பாதிப்பு அடையவில்லை என்பதையும் நாம் அனுபவித்து அறிய வேண்டும். நடக்கிற எல்லாவற்றுக்குமே ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிற அது அழிவில்லாதது, நித்யமானது, பரிசுத்தமானது.
இந்த உலகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஹிமாலயத்திற்குச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். உங்களுக்குள் அந்த ஹிமாலயத்தை உருவாக்குங்கள். உங்களுக்குள்ளிருக்கும் அமைதியான மையத்தை உணருங்கள். காரணம் என்ன என்பதை மட்டும் பாருங்கள். காரியத்தைப் பற்றி, அறிகுறிகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிட மூலகாரணத்தை உணர்ந்து செயல்படுவதுதான் மிகவும் சிறந்தது.
> 'நான் செய்கிறேன்'
> என்ற உணர்ச்சியை,
> ஆணவத்தைத்
> துறக்க வேண்டும்.
> அப்போதுதான்
> நாம்
> உண்மையான
> ஸந்யாஸிகளாகிறோம்.
சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும்
துறவு என்பது ஆசைகளுக்கு அப்பாற்பட்டது. ஆசைகள் என்று நான் சொல்லும்போது, எல்லா ஆசைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்; ஆசை இல்லாமல் இருப்பது உட்பட!
ஆசை என்று சொல்லும்போது வழக்கமான பணம், பதவி, அதிகாரம், உறவுகள் மற்றும் எல்லாப் பொருள் சார்ந்த உலகியல் ஆசைகளை மட்டும் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் ஆன்மீகத்தில் இருக்க வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஆசைதான். "நான் விடுதலை அடைய வேண்டும், துறவு மேற்கொள்ள வேண்டும்," என்று நினைப்பதும்கூட ஆசையின் பிடியில் நாம் சிக்கியிருத்தலையே வெளிப்படுத்தும்.
ஒரே விஷயம் என்னவென்றால், இந்த ஆசைகள் பொருள் சார்ந்த ஆசைகளின் பட்டியலில் இல்லை. அவ்வளவுதான் .ஆனால் அதுவும் ஆசைதான்; அதுவும் மனத்தின் மற்றொரு வெளிப்பாடே! மனம் எப்பொழுதுமே
எதிர்காலத்தைப் பிடித்துக்கொண்டுதான்
தொங்கிக் கொண்டிருக்கும். அது ஒருபோதும்
நிகழ்காலத்தில் இருக்காது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம்
எதற்காவது ஆசைப்படும்போது, அது
எந்தவிதமான ஆசையாக இருந்தாலும் சரி,
மனத்தின் தளத்திலிருந்துதான் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறோம்.
எல்லா ஆசைகளையும் விட்டொழித்து,
முற்றிலுமாக சுகமான பரவசமான
நிலையிலிருக்கும் அந்த நேரத்தில்தான் நாம்
மனத்தின் பிடிகளைத்தாண்டிச் செல்கிறோம்.
மனம்
எதிர்காலத்தில் உள்ள
விஷயங்களுக்குத்தான்
எப்போதும் அதிகம்
ஆசைப்படும்.
அது ஒருபோதும்
நிகழ்காலத்தில் இருக்காது.
அப்பொழுது மட்டுமே, நம்மால் இங்கேயே இப்போதே இதிலேயே இருக்கும் ஸத்யத்தைப் பார்க்க முடியும். இல்லையென்றால் அது எந்த ஆசையாக இருந்தாலும் சரி, எப்போதும் நாம் நம்முடைய மாயையான ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம். ஏனென்றால் எதிர்காலம் என்பது உண்மை அல்ல, அது வெறும் மாயைதான்.
நிஜம் மற்றும் நிகழ்காலம் இவற்றை மனத்தால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனென்றால் அது தர்க்க அறிவைத் தாண்டியது. அதனால்தான் பிரபஞ்ச சக்தியை ஒருபோதும் மனத்தால் அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. மனத்தால் தத்துவத்தை பேச மட்டுமே முடியும். அதனை அனுபவிக்க முடியாது. ஆனால் ஸத்யத்தை, அனுபவிக்க மட்டுமே முடியும்.
ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்
கடவுளைப் பற்றி நாம் செய்யும் கற்பனையெல்லாம்கூட, இன்னும் ஒரு கற்பனையாகவே உள்ளது. ‘கடவுள்’ அல்லது ‘பிரபஞ்ச இருப்புத் தன்மை’ என்பது நமக்குத் தெரிந்தவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஏனென்றால் பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது மனத்தின் ஒரு சிறிய அதிகார வரம்பின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப் பரந்த நிலையையும் தேஜஸையும் எல்லைகளுக்குட்பட்டிருக்கும் நம்முடைய மனத்தால் எவ்வாறு புரிந்துகொள்ள இயலும்? தமக்கு, கடவுளைவிட ராமகிருஷ்ணரே மிகவும் உயர்ந்தவர் என்று விவேகானந்தர் சொன்னார். ஏனென்றால் கடவுள் என்பது விவேகானந்தரின் மூளையில் ஒரு கருத்து மட்டுமே.
ஆனால் அவருடைய குருவான இராமகிருஷ்ணர் ஸ்தூலமாக வாழ்ந்த ஒருவர். விவேகானந்தருக்குக் கடவுளைக் காட்டிய குரு. கடவுள் என்ற அனுபவத்தை அவருக்குள் நிகழ்த்தியவர். எனவே குரு என்பவர் கடவுளையும்விட மிகவும் உயர்ந்தவர். ஏனென்றால் குரு என்பவர் மனிதருக்குள் ‘கடவுள்’ அனுபவம் நிகழ்வதற்கு ஒரு பாலமாக இருக்கிறார். நம்மால் இதுவரை அறிந்துகொள்ளப்பட முடியாத ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும்?

ஏனெனில் நமக்கு என்ன தெரியுமோ அதை அடிப்படையாகக்கொண்டோ அல்லது நாம் பார்த்தவற்றை அல்லது அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளைக்கொண்டோதான் நம்முடைய எல்லா ஆசைகளும் அமைய முடியும்.
கடவுளைப்பற்றியே அறிந்திராத நாம் எப்படிஃக் கடவுளின் மீது ஆசைப்பட முடியும்? நாம் ஜீவன் முக்திக்கு எப்படி ஆசைப்பட இயலும்? ஞானிகளைப் பற்றி நாம் படித்ததையும் கேட்டதையும் அடிப்படையாகக்கொண்டு, நமக்கிருக்கும் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட புரிதலுடன் அதைப் பொருத்திப்பார்த்த பிறகுதான் ஜீவன் முக்திக்கு நாம் எப்போதும் ஆசைப்படுகிறோம்.
ஆனால் புரிந்துகொள்ளுங்கள், அதுவும்
நம்முடைய கற்பனையே. ஜீவன் முக்தி என்றால்
எப்படியிருக்கும் என்று நம்முடைய மனம்
அறிந்து வைத்திருக்கும் அடிப்படையில்தான்
அதுவும் இருக்கும். ஜீவன் முக்தியை
உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள
முடியாது. உங்களால் ஜீவன் முக்தியை
அடைய முடியாது. ஜீவன் முக்திதான்
உங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.
நீங்கள் ஆசைகளை விடும்பொழுதுதான் அது
நடக்கும்.
‘கடவுள்
அல்லது
பிரபஞ்ச இருப்புத் தன்மை
என்பது
நமக்குத் தெரிந்தவற்றுக்கு
எல்லாம் அப்பாற்பட்டது.’