கர்மத்திற்கும் மேலான பக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
துறவாலும் கர்மத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்துகொள்ளுகிறாரோ, அவரே ஸத்யத்தை அறிந்தவராகிறார்.
துறவால் அடையப்படுகிற நிலை, கர்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.
வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும்.
பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான ப்ரஹ்மத்தை காலந்தாழ்த்தாமல் அடைகிறார்கள்.
யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் கருத்துக்கள் சரியா தவறா, தூய்மையானதா தூய்மையற்றதா என்பதையெல்லாம் தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கிறாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை
வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார்.
வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்ளமாட்டார்.
5.8, 5.9 சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் செய்யவில்லை என்பதை அறிவார். பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை
யத்ஸாங்க்ஸ்யை: ப்ராப்யதே ஸ்தானம் தத்யோகைரபிகம்யதே |
ஏகம் ஸாங்க்ஸ்யஞ் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி || 5.5
ஸாங்க்ஸ்ய யோகம், கர்ம யோகங்கள் மூலமாக அடையப்பட்ட நிலைகள் ஒன்றேதான் என்பதையும், பக்தியினால் பெறப்பட்டத்தைக் கர்மாவினாலும் பெற முடியும் என்பதையும் தெரிந்து கொண்டவர், இந்த இரண்டையுமே ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறார். விஷயங்களை, அவை எப்படி உள்ளதோ அப்படியே பார்க்கிறார்.
அழகான ஸ்லோகம்.
ஒரு முக்கியமான விஷயம். நாம் எப்போதுமே கர்மயோகியும் அல்ல; எப்போதுமே ஸந்யாஸியும் அல்ல. அதாவது நாம் எப்போதுமே செயலாற்றுபவர்களும் அல்ல; துறந்தவர்களும் அல்ல. எந்த ஒரு ஸந்யாஸியும் 24 மணி நேரமும் ஸந்யாஸியாக இருப்பதில்லை. எப்போது அவர் ஆசையிடம் சரணாகதி அடைகிறாரோ அப்போது அவர் செயலாற்றுபவர் ஆகிறார்.
அதேபோல் கர்மயோகியும் 24 மணி நேரமும் செயலாற்றுபவர் அல்ல. அவர் பயத்திடம் சரணடையும்போது அவர் ஒரு ஸந்யாஸி ஆகிறார். அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதகமற்ற சூழ்நிலையிலும்கூட, நம்பிக்கையோடு முடிவுகளை எடுக்கும்போது நாம் கர்ம யோகிகள். நம்பிக்கை இல்லாமல் சோர்வுடன் தீர்மானங்களை முடிவு செய்யும்போது நாம் ஸந்யாஸிகள். இரண்டு பாத்திரங்களையும் செய்வதும் நாம்தான்.
நம்பிக்கை உடையவர் யார்? நம்பிக்கையில்லாதவர் யார்? ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர் நம்பிக்கை உடையவர்; விமானத்தின் இருக்கைக்கான பெல்ட்டைக் (Seat-belt) கண்டுபிடித்தவர் நம்பிக்கை இல்லாதவர்.
வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் இரண்டு பாத்திரங்களாகவும் இருக்கிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் நம்பிக்கை உடையவராக இருக்கிறீர்கள்; சில நேரங்களில் நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கிறீர்கள்.
இங்கே, மனப்பான்மை தூய்மையாகவும் சரியாகவும் இருந்தால், இரண்டுமே ஒரே இலக்கில்கொண்டு போய்ச்சேர்க்கும்.
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆசையினால் செய்யப்படுகிற எதுவாக
இருந்தாலும் சரி, அது மேலும் மேலும்
ஆசையைத்தான் கொடுக்கும். பயத்தால்
செய்யப்படுகிற எதுவானாலும் அது
மேலும் மேலும் பயத்தைத்தான்
உண்டாக்கும், அவ்வளவுதான். தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள், நாமே நம்முடைய
உடலை அசைக்கும்போதும் சரி, அல்லது
ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியால் நம்முடைய
உடல் அசைக்கப்படும்போதும் சரி, அந்த
உணர்ச்சியானது நம்முடைய அமைப்பிற்குள்
உள்ளேயே உறைந்துவிடுகிறது.
அது நம்முடைய கட்டமைப்பின் ஒரு பாகமாகவே மாறிவிடுகிறது. அதனால் நம்முடைய அமைப்பிற்குள் அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய ஞானி, உடலில் எழக்கூடிய உணர்ச்சிகளைப் பற்றி ஆச்சரியப்படும் படியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.
அவர் அழகாகச் சொல்கிறார். முடிந்தால் நீங்கள் ஏதாவது ஒரு உணர்ச்சி எழும்போது, உங்களை மையப்படுத்திக்கொண்டு, உடலை அசைக்காமல், அமைதியாக அமர்ந்து, அதனுடன் ஒத்துழைக்காமல் இருங்கள். பதினோரு முறை அந்த உணர்ச்சிகளை இந்த முறையில் சமாளித்து விட்டீர்களென்றால், நீங்கள் அந்த உணர்ச்சியிடமிருந்து விடுதலைபெற்றுவிடுவீர்கள்.

மற்றொரு இந்திய ஞானியான விவேகானந்தர், அழகாகச் சொல்கிறார்: "ஞானிகளும் ஜீவன் முக்தியும் இந்தியா இந்தப் பூமிக்குக் கொடுத்த மிகப் பெரிய அன்பளிப்பு, நன்கொடை!"
ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் நன்கொடையாக வெளியே கொடுத்தே விட்டோம். நாம் நமக்காக அதைப் பயன்படுத்துவதே இல்லை; மற்றவர்களுக்கு அதை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு, அதை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் மறந்துவிட்டோம்.
சுவாமி விவேகானந்தரிலிருந்து தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா ஞானிகளையும் இந்த உலகத்திற்கே கொடுத்துவிட்டோம்.
அவர்கள் நன்கொடையாகக் கொடுத்ததைப் பயன்படுத்த இந்தியர்களாகிய நாம் மறந்தேவிட்டோம்.
ஒரு முக்கியமான விஷயம் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தால், உதாரணமாக நீங்கள் இச்சையின் பிடியில் சிக்கியிருந்தால் அல்லது பயத்தின் பிடியில் சிக்கியிருந்தால் பதினோரு முறைகள், எப்பொழுதெல்லாம் அந்த உணர்ச்சி உங்கள் இருப்புக்குள் மேலேழும்பி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்கள் உடலை அதனுடன் ஒத்துழைக்க அனுமதிக்காதீர்கள்;
உடலை, அந்த உணர்ச்சியைத் தொடர அனுமதிக்காதீர்கள்;
உடலை, அந்த உணர்ச்சியுடன் இசைந்து செல்ல அனுமதிக்காதீர்கள்.
பதினோராவது முறைக்குள் நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுதலை அடைந்துவிடுவீர்கள் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
"என்ன இது? பதினோரு முறையிலேயேவா! அவ்வளவு சுலபமா அது?" என்று கேட்பீர்கள். சுலபம்தான், பெரிய விஷயங்கள் அனைத்துமே எளிதானவைதான். நாம்தான் அவற்றைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் எதையுமே எளிதானது என்று நம்புவதே இல்லை.
ஒரு சின்ன கதை.
ஒரு மனிதர் மருத்துவரிடம் போய், "டாக்டர் இந்தப் பல்லைப் பிடுங்குவதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும்?" என்று கேட்டார். மருத்துவர் சொன்னார், "தொண்ணூறு டாலர்."
"இரண்டே இரண்டு நிமிட வேலைக்குப்
போய் தொண்ணூறு டாலரா?" என்று அந்த
மனிதர் கேட்டார்.
மருத்துவர் சொன்னார், "நீங்கள் விரும்பினால் உங்களுக்கு வேண்டுமென்றால் மிகவும் மெதுவாகச் செய்கிறேன்."
எளிமையானதாக இருக்கும் விஷயங்களை
நாம் நம்புவதில்லை. விஷயங்களை நாம்
சிக்கலாக்கவே விரும்புகிறோம்.
உண்மையாக, பதினோரு முறை என்பதே அதிகம். ஒரு பாதுகாப்பு காரணம் கருதித்தான் கிருஷ்ணமூர்த்தி பதினோரு முறை என்று சொல்லி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சட்டம் வழக்கு இவற்றிற்கு பயந்துதானோ என்னவோ, இந்தப் பாதுகாப்பு காரணத்தைச் சேர்த்திருக்கிறார். சிலர் இதை சில முறை மட்டுமே பயிற்சி செய்து பார்த்துவிட்டு எந்தப் பயனும் கிடைக்கவில்லையென்றால் இவர்மீது அவர்கள் வழக்கு தொடரலாம்! அதனால்தான் பதினோரு முறைகள் என்று சொல்லியிருக்கிறார்.
உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். பதினோரு முறை என்பது மிகவும் அதிகம். உங்களுக்குள் அந்த உணர்ச்சி எழும்போது, அதனுடன் ஒத்துழைக்காதீர்கள். அந்த உணர்ச்சியின் பின்னால் உங்கள் உடல் செல்ல வேண்டாம்.
அந்த உணர்வால், அது கோபமாக இருந்தாலும் சரி, எரிச்சலாக இருந்தாலும் சரி, மன அழுத்தமாக இருந்தாலும் சரி, இச்சையாக இருந்தாலும் சரி, பயமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருங்கள்.
'நான் இந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பேன்' என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
மூன்று அல்லது நான்கு முறைகளுக்குள்ளாகவே நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள், ஏனென்றால் நீங்கள் அந்த நுட்பத்தைக் கற்றுக் கொண்டீர்கள். இப்போது சாவி உங்கள் கையில் இருக்கிறது.
அந்த உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படாமல் இருப்பது எப்படி, உங்களுக்குள் மையம் கொள்வது எப்படி, உங்களுக்குள், உங்கள் இருப்புத் தன்மைக்குள் வேரூன்றி இருப்பது எப்படி என்பதற்கான சாவி உங்களிடம்தான் இருக்கிறது.
உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு
அது பயமாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் உடல் அதனோடு ஒருமுறை ஒத்துழைத்து விட்டது என்றால் போதும், அது மிகுந்த சக்தியும் బలமும் பெற்றுவிடும்.
எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்படுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும். அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் வரும்; பல முறைகள் மிக அதிகமாக, தீவிரமாக வரும். அதன் எண்ணிக்கையும் அதன் தீவிரத் தன்மையும் இன்னும் அதிகமாகும்.
What The Bleep Do We Know? - இது ஒரு அழகான திரைப்படம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். அந்தப் படத்தில் நான் இப்போது சொல்லிய அதே கருத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
enக்கும் இந்தப் படத் தயாரிப்பாளருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அதை ஆதரிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
ஒருமுறை நியூயார்க்கில், இரண்டு பக்தர்கள் Bombay Dreams என்றழைக்கப்படும் காட்சிக்கு வரும்படி அழைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள்தான் என்னால் இருக்க முடியும். 15 நிமிடங்களில் முடிவதாக இருந்தால் நான் வருகிறேன்,” என்று சொன்னேன். “இல்லை, காட்சி முடிய மூன்று மணி நேரமாகும்,” என்றார்கள். “அப்படியென்றால் அது எனக்கானது இல்லை,” என்று சொன்னேன்.
அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் எந்தக் காட்சியையும் பார்க்க முடியும் என்று சொன்னேன். அதனால் அதை நான் பார்க்கவில்லை. ஆனால் எப்படியோ What The Bleep Do We Know? என்ற இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.
எப்படி இந்த மக்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எனக்கு
> எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்படுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எதையோ தொலைக்காட்சியில் காண்பிக்கிறார்கள், இவர்களும் உட்கார்ந்து மணிக்கணக்கில் பார்க்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் சில நேரங்களில், அவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதையாவது தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் அந்தத் தின்பண்ட டப்பா நிரம்பி இருக்கும். நிகழ்ச்சி முடியும்போது டப்பா காலியாகி இருக்கும். வயிறு நிரம்பி இருக்கும்! இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். இது உடல் பருமனாவதற்கு வழி வகுக்கும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். இந்திய தத்துவ ஞானி இராமானுஜாச்சாரியா, “ஆஹார சுத்தி - அதாவது உணவின் தூய்மைதான் நம்முடைய குணநலன்களையும் எண்ணங்களையும் நிர்ணயிக்கிறது,” அழகாகச் சொல்கிறார்.
எதையாவது சாப்பிடும்போது, நீங்கள் உணவை மட்டும் ஜீரணிக்கவில்லை, நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்குள் ஏற்படுகிற எண்ணங்களையும் சேர்த்துத்தான் அதனுடன் ஜீரணிக்கிறீர்கள். அதனால் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடுவதைக்கூட ஒரு வழிபாடுபோல்தான் செய்ய வேண்டும். பிரச்சினை என்னவென்றால் இப்போது வழிபாடும்கூட களங்கப்படுத்தப்பட்டுவிட்டது.
சாப்பிடுவது என்பது ஒரு ஆழமான சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது செய்தி்த்தாள்களைப் படித்துக்கொண்டோ ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அது உங்களை மந்தமாக
| உணவு உண்பதை ஒரு ஆழமான சிரத்தையுடன் செய்ய வேண்டும். | | --- |
ஆக்கிவிடும். மந்தம் என்று சொல்லும்போது புரிந்துகொள்ளுங்கள், ஏற்கனவே நம்முடைய அமைப்புக்குள் போதுமான அளவுக்கு மந்தத் தன்மை இருக்கிறது. இந்தப் பழக்கத்தினால் மந்தத் தன்மையின் ஆற்றல் கணிசமான அளவுக்கு அதிகரித்துவிடும்.
எதிர்மறையான எண்ணங்களுடன் ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அதே போன்று, உணவை பரிமாறும் பொழுதும் ஏதாவது புகார்களை, குறைகளைப் பேசிக்கொண்டே பரிமாறாதீர்கள்.
இந்தியாவில்,
உணவைப்
பரிமாறும்போதுதான் வழக்கமாக மனைவி
சொல்ல ஆரம்பிப்பார், “வீட்டில் இது
இல்லை, அது இல்லை. மாதச் செலவுக்குப்
பணம் சரியாகவே கொடுக்கமாட்டேன்
என்கிறீர்கள். அது இன்னும் ஒழுங்காக
வீடு வந்து சேர்ந்தபாடில்லை. அது இங்கே
இல்லை...” என்று முழுக் கதையையும்
ஆரம்பித்துவிடுவார்கள்.
எதிர்மறையான
எண்ணங்களுடன்
ஒருபோதும்
சாப்பிடாதீர்கள்.
சமையல் செய்யும்போதும் சரி, பரிமாறும்போதும் சரி, ஒருபோதும் இந்த வீட்டுக் கதைகளை ஆரம்பிக்காதீர்கள். ஏனென்றால் அந்த எண்ணங்களும் நீங்கள் சமைக்கிற அல்லது பரிமாறும் உணவுக்குள் நுழைந்துவிடும். உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்கள் உள்அமைப்புக்குள் நுழைந்து அங்கே குடியேறிவிடும்.
எப்படி இருந்தாலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் பார்ப்பதில்லை. இருந்தாலும் What The Bleep Do We Know? என்ற ஒரு திரைப்படத்தை முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன். அதை உண்மையிலேயே ரசித்துப் பார்த்தேன்.
அந்தத் திரைப்படத்திலுள்ள ஒரு கருத்தை விளக்கிச் சொல்கிறேன். அது ஸத்யம். அது அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக அல்ல, அது வேதாந்தத்திலிருந்து வந்த ஒரு ஸத்யம். அதை அவர்கள் பார்க்கிற காட்சி களின் வடிவில் மிக அற்புதமான முறையில் விவரித்திருந்தார்கள்.
எப்பொழுதெல்லாம் உங்கள் அமைப்புக்குள் உணர்ச்சி மேலோங்குகிறதோ அது ஒரு தூறல் அல்லது சாரல் மழையைப் போன்றது. அது மழையைப்போல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அது உங்கள் உள் அமைப்புக்குள், உங்களுடைய இருப்புக்குள் நிகழ்கிறது. அங்குள்ள குறிப்பிட்ட அணுக்கள் இந்த உணர்ச்சிகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன.
உதாரணமாக நீங்கள் கோபம் என்ற உணர்ச்சியால் ஆக்ரமிக்கப்படும்பொழுது, கோபம் என்ற அந்த உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய அணுக்கள் இருக்கின்றன. அவை அவற்றைப் பிடித்துவைத்துக் கொள்கின்றன. அவை, அவற்றைப் பிடித்து வைத்துக்கொண்டு மட்டும் சும்மா இருப்பதில்லை. அவை மறு உற்பத்தியையும் தொடங்கிவிடுகின்றன. வாழ்க்கையின் அடிப்படையான தன்மையே மறு உற்பத்தியும் விரிவடைதலும்தான்.
ஒவ்வொரு அணுவும் இந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்தப் புதிய அணுக்களும், அடுத்த முறை கோப மழை பொழியும்போது அந்தக்க கோப உணர்ச்சியைப் பிடித்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றுமே நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்தச் செயல் ஒரு தொடர் சங்கிலிபோல் நீண்டுகொண்டே இருக்கிறது.
வாழ்க்கையின் அடிப்படையான தன்மையே மறு உற்பத்தியும் விரிவடைதலும்தான்! இந்த இரண்டின் அடிப்படைத் தன்மைகளைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமென்கிற ஒரு உள்ளுணர்வுதான்.
தொடர்ந்து வாழ வேண்டுமென்கிற இந்த உள்ளுணர்வு ஸ்வாதிஷ்டான சக்ரத்தால் ஆளப்படுகிறது. இது நம்முடைய உடலின் பயத்திற்கான சக்தி மையம். மறு உற்பத்தி என்பது மூலாதாரமையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது நம்முடைய உடலின் காமம் சார்ந்த சக்தி மையம்.
இந்த இரண்டு மையங்களுமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. பயம் என்பது ஸ்வாதிஷ்டான சக்ரத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. உற்பத்தி என்பது மூலாதார சக்ரத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு சக்ரங்களும் நம்முடைய உடலில் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன.
கோபம் என்ற உணர்ச்சியைப் பற்றிக் கொண்ட அணுக்கள் உற்பத்தியைத் தொடங்கி ஒவ்வொரு அணுவும் மேலும் ஐந்து அல்லது ஆறு அணுக்களை உற்பத்தி செய்கின்றன. அடுத்த முறை கோபம் என்ற சாரல் வரும்போது,

கோபம் என்ற மழை வரும்போது இந்த எல்லா அணுக்களுமே அதே உணர்ச்சியைப் பற்றிக் கொள்கின்றன.
அசல் அணுக்களின் அளவுக்கு இவையும் வளர்ந்துவிடுகின்றன. அதே அளவுக்கு வளர்கின்றன. இப்போது இந்தச் செல்களும் உற்பத்தியைத் தொடங்குகின்றன. மூன்றாவது முறையும் சாரல் அடிக்கும்போது, இந்த எல்லா அணுக்களுமே அந்த உணர்ச்சியைப் பற்றிக்கொண்டு, அதைச் சேர்த்து
வைக்கத் தொடங்கும். அதனால்தான், ஒவ்வொரு முறையும் அதே உணர்ச்சி பெய்யப் பெய்ய, அது மேலும் மேலும் బలமடைகிறது. நாம் அந்த உணர்ச்சிக்கு அடிமையாகிறோம். நம்மால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
முதல் முறை கோப மழை நம்மீது பெய்யும்போது, நாம் பத்து நிமிடங்கள் பாதிப்படைந்தால், அடுத்த முறை அது இருபது நிமிடங்கள் ஆகும். மூன்றாவது முறை அது அரைமணி நேரமாகும்.
உணர்ச்சி இப்படியாகத்தான் மேலும் மேலும் బలமடைகிறது. நம்முடைய இருப்பில் நாம் மீண்டும் மீண்டும் இந்த எதிர்மறையான உணர்ச்சி களுடன் ஒத்துழைக்கும்பொழுது, நாம் அதே மன நிலையைத்தான் உருவாக்கிக்கொள்வோம். அதே மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் உருவாக்கிக்கொள்வோம்.
இன்னொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த உணர்ச்சிகளை நம்முள் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அதே விஷயத்தைத்தான் நாம் மற்றவர்கள்மீதுகூடக் காட்டுகிறோம். நமக்குள் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நாம் மற்றவர்கள்மீது வாந்தி எடுத்துவிடுகிறோம்
நம்முடைய ஆசைகளைப் బలப்படுத்துவதற்காக நாம் செயல்பட்டோமென்றால், நாம் ஆசை எனும் உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, அதையே பரவச் செய்கிறோம். நாம் ஆசை என்ற உணர்ச்சியை மற்றவர்கள்மீது வாந்தி எடுத்து விடுகிறோம்.
அடுத்த படியாக, நம்முடைய பயத்தை நாம் பலப்படுத்தினால், மீண்டும் நாம் அச்சம் என்ற உணர்வின் பிடியில் சிக்கிக்கொள்வோம். அத்துடன் பயம் என்ற உணர்ச்சியைக் காட்டி மற்றவர்களையும் துக்கப்படுத்துகிறோம்.
தெளிவாக இருங்கள். பலம் மிக்க போர்
வீரர்கள் பயத்தில் சிக்கி உள்ளார்கள்.
அதனால்தான் அவர்கள் மற்றவர்களைத்
துக்கப்படுத்துகிறார்கள். அவர்கள்
மற்றவர்களைப் பயமுறுத்துகிறார்கள்.
போர் வீரர்கள் உண்மையில் கோழைகள். யார் ஒருவர் தம்முடைய இருப்பைக்
நம்முடைய ஆசைகளைப்
பலப்படுத்துவதற்காக
நாம்
செயல்பட்டோமானால்,
நாம் ஆசை எனும்
உணர்ச்சியால்
ஆட்கொள்ளப்பட்டு,
அதையே
பரவச் செய்கிறோம்.
கைப்பற்றுகிறாரோ, யார் ஒருவர் தம்முடைய இருப்பை ஜெயிக்கிறாரோ அவர்தான் உண்மையான வீரம் மிக்க போர் வீரராவார். அவர் மட்டுமே உண்மையான போர் வீரர்.
விரும்பியதை அடைந்துவிடும் சக்தி படைத்தவர்கள் நீங்கள்
பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தால், மற்றவர்களிடமும் அதே பயத்தைத்தான் நாம் உற்பத்தி செய்கிறோம்.
இப்போது, சில நிமிடங்கள் உட்கார்ந்து பகுத்து ஆராயுங்கள்.
"இந்த வாழ்க்கை முற்றிலுமாக,
இத்தனை ஆண்டுகளாக,
நான் பயத்தாலும் ஆசையாலும் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அடைந்தது என்ன?
நான் பெற்றது என்ன?
நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன்?
உண்மையில் என்ன நிகழ்ந்திருக்கிறது?"
விழிப்புணர்வுடன் அதைப்பற்றி நினைத்துப் பாருங்கள். விழிப்புணர்வுடன் இந்தக் கருத்து உங்கள்மீது செயல்பட அனுமதியுங்கள். "இன்றிலிருந்து ஆசையினாலோ, பயத்தினாலோ நான் எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டேன்," என்று தீர்மானம் செய்யுங்கள்.
> பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தோமானால், நாம் மற்றவர்களிடமும் அதே பயத்தை உற்பத்தி செய்கிறோம்.
உடனே உங்களுக்குள் ஒரு பயம் எழும். "என்னுடைய பில்கள் என்ன ஆகும்? அவற்றிற்கு யார் பணம் கொடுப்பார்கள். என்னுடைய வீடு என்ன ஆகும்? அடமானத்தை யார் மீட்கப் போகிறார்கள்? என்னுடைய கார் என்ன ஆகும்? என்னுடைய பிள்ளைகளுக்கு என்ன ஆகும்? யார் அவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள்? என்னுடைய சமுதாய அந்தஸ்து, பெயர், புகழ் இவை எல்லாம் என்னவாகும்? அதை யார் பராமரிப்பார்கள்?" என்பது போன்ற பயங்கள் உங்களுக்குள் எழும்.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆசையும் பயமும் இல்லாமல்கூட,
உங்களை பராமரித்துக் கொள்வதற்கான
போதுமான சக்தியும் பலமும் உங்களிடமும்
இருக்கின்றன.
முக்கியமான விஷயம் என்னவென்றால்
உங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு,
உங்களுக்கு ஆசையிடமிருந்தோ,
பயத்திடமிருந்தோ சக்தி தேவையில்லை
என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.
ஆசையும் பயமும்
இல்லாமல்,
உங்களை நீங்களே
பராமரித்துக்
கொள்வதற்குப் போதுமான
சக்தியும் பலமும்
உங்களிடமே இருக்கிறது.
இதைத்தான் முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்குமான சக்தி உங்களிடம் போதுமான அளவு இருக்கிறது.
மற்றொரு பெரிய இந்திய ஜெயின் ஞானி மஹாவீரர் சொல்கிறார், "நீங்கள் இந்தப் பூமிக்கு வரும்போதே, நீங்கள் இந்த மனித உடலெடுத்து வரும்போதே, நீங்கள் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டுமென்று விரும்பினீர்களோ அதை அடைவதற்கும் போதுமான சக்தியைக்கொண்டு வருகிறீர்கள்."
நீங்கள் ஏற்கனவே போதுமான எரிபொருளைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆசையிடமிருந்தோ, பயத்திடமிருந்தோ உங்களுக்கு எரிபொருள் தேவையில்லை.
நீங்கள் எப்போதும் நான் ஆசை அல்லது பயத்தினாலான எரிபொருள் போடுவதை நிறுத்திவிட்டால், நான் செயல்படுவதே நின்று போகும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இல்லை, நீங்கள் அப்படி நினைக்கத் தேவை இல்லை. ஏனென்றால் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்ட எரிபொருள் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
போதுமான எரிபொருள் இருக்கிறது. ஆனால் உளவியலாளர்கள், 'உந்துதல் இல்லாத செயல்பாடு' என்பதை ஒருபோதும் நம்புவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் புத்தரைப் பார்த்ததே இல்லை.

உளவியலில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு முடிவிற்கே வருகிறார்கள். "நோக்கம் இருந்தால் மட்டுமே ஒருவரால் செயல்பட முடியும்," என்ற இந்த ஒரு முடிவிற்குத்தான் வருகிறார்கள்.
பறவைகள் பாடுவதற்கு எந்த நோக்கத்தை பெற்றிருக்கின்றன? இன்றைய நவீன உளவியலாளர்கள், உடல் சார்ந்த தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்குக்கூட ஒரு அர்த்தம் கற்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
பாடுகிற அந்தப் பறவை தன்னுடைய துணையை அழைக்கிறது என்று சொல்கிறார்கள். பறவைகளின் பாடலுக்குக்கூட ஒரு விளக்கம் கற்பிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். எதையுமே அது உள்ளது உள்ளபடியாகவே அவர்கள் பார்ப்பதில்லை.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார்,
ய: பச்யதி ஸா பச்யதி
ஆசை, பயம் இவற்றின் தாக்கங்களைத்தாண்டிய ஒரு மனிதரால்தான், பொருட்களை, விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும். நீங்கள் அச்சம் அல்லது ஆசை இவைகளின் பிடியில் சிக்கிக் கொண்டீர்களானால், விஷயங்களை நீங்கள் விரும்பியவாறுதான் பார்ப்பீர்கள். அவற்றை உள்ளபடியே பார்க்கமாட்டீர்கள்.
உதாரணமாக, அழகான உயரமான கட்டிடம் ஒன்று இருந்தால், அதைப் பார்த்த மாத்திரத்திலேயே ஆசையின் வயப்பட்ட ஒருவர் 'எனக்கும் இதே மாதிரி ஒரே ஒரு கட்டிடம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்.
பயத்தின் வயப்பட்ட மனிதர், 'நான் இவற்றை
எல்லாம் பார்க்கவே கூடாது. அவை எனக்குள்
உள்ள ஆசைகளைத் தூண்டிவிட்டுவிடும்.
அதனால் நான் எங்கேயாவது காட்டில்
போய்த்தான் தங்கவேண்டும்' என்று
நினைப்பார்.
பயத்தின் வயப்பட்ட மனிதன் ஒரு தனிப்பட்ட
> நோக்கம் இருந்தால்
> மட்டுமே
> செயல்பட முடியும்!
> - உளவியல்வல்லுநர்கள்.
> நோக்கம் இல்லாமல்
> செயல்படுவதுதான்
> உண்மையான
> செயல்பாடு!
> - கீதை.
முறையிலே யோசனை செய்கிறார்.
ஆசையின் வயப்பட்ட மனிதர் வேறொரு
வழியில் சிந்தனை செய்கிறார். இந்த இரண்டு
உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு
நபராலேயே, விஷயங்களை அவை உள்ளது
உள்ளவாறே பார்க்க முடியும்.
ய: பச்'யதி ஸா பச்'யதி
என்ன ‘இருக்கிறதோ’ அதை மட்டுமே அவர் பார்ப்பார்.
இப்போதே உறுதியாகத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள், "என்னுடைய வாழ்க்கை முற்றிலும் பயத்தால் தள்ளப்பட்டோ அல்லது ஆசையால் ஈர்க்கப்பட்டோதான் வாழ்ந்தேன். இனிமேலும் அதையே தொடர்ந்து செய்ய விரும்புகிறேனா?"
“உங்களுக்கு பயத்திலிருந்தோ ஆசையிலிருந்தோ சக்தி தேவையில்லை,” என்று மஹாவீரரும் அழகாகச் சொல்லியிருக்கிறார். சமுதாயத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட, சமுதாயத்தால் கட்டுறுத்தப்பட்ட ஒரு நபருக்கு, ஆசையிலிருந்தும் பயத்திலிருந்தும் சக்தி தேவைப்படாது என்ற உண்மையை நம்புவதற்குக்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.
நீங்கள் எல்லோரும் இங்கே அமைதியாக அமர்ந்துகொண்டு, "அவர் பேசிக் கொண்டிருக்கட்டும், நாம் கேட்டுக் கொண்டிருப்போம். நாம் வேறு என்ன செய்ய முடியும்?” என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறுமனே இங்கே உட்கார்ந்திருப்பதாலேயே, நான் சொல்லுவதை நீங்கள் நம்ப முடிந்து விடுவதில்லை அல்லது என்னுடைய வார்த்தைகளை உண்மையென்று உங்களால் நம்பிவிட முடிவதில்லை.
உங்களுடைய மனத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுகின்றன என்பதும் தெரியும்.
உங்கள் வயது 30 அல்லது 40 அல்லது 50 அல்லது 60 என்னவாக இருந்தாலும் சரி, உங்கள் கடந்தகாலம் முழுவதிலுமே நீங்கள் ஆசையினாலும் பயத்தினாலும் சக்தியூட்டப்பட்டுதான் வாழ்ந்தீர்கள்.
ஒரு பத்து நாட்கள், பத்தே பத்து நாட்கள் மஹாவீரருக்காகக் கொடுத்துப் பாருங்கள். ‘அடுத்த பத்து நாட்களுக்கு நான் மஹாவீரரின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்வேன்’ என்று முடிவெடுங்கள்.
"உங்களுக்குப் பயத்திடம் இருந்தும் ஆசையிடம் இருந்தும் சக்தி தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் நிறைய சக்தியைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இறைவன் உங்களைப் பூமிக்கு அனுப்பும்போதே, நீங்கள் பிறக்கும்போதே, உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் கொடுத்துத்தான் அனுப்பியிருக்கிறார்," என்று மஹாவீரர் சொல்கிறார்.

சீர்வரிசையோடு பூமிக்கு வந்தவர் நீங்கள்
இந்தியாவில், மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் துடைப்பத்திலிருந்து கார் வரை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாவற்றையும் மகளுடன் அனுப்பி வைக்கிறார்கள். அத்துடன் ஒரு வரதட்சணையும் சேர்த்தே கொடுக்கிறார்கள்.
இறைவன்
உங்களைப் பூமிக்கு
அனுப்பும்போதே
உங்களுக்கு
என்னவெல்லாம்
தேவையோ,
அவற்றை எல்லாம்
உங்களுடனேயே
அனுப்பியிருக்கிறார்.
இந்தியா எப்போது இதைப் புரிந்துகொண்டு
வரதட்சணை என்ற கருத்திலிருந்து வெளியே
வரப்போகிறதென்று தெரியவில்லை.
உங்களில் யாராவது வரதட்சணை பெற்றுக்
கொண்டிருந்தால், நீங்கள் உண்மையிலேயே
ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால்,
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
என்னவென்றால், நாளையே அதைத் திருப்பிக்
கொடுத்துவிடுங்கள்.
என்னவெல்லாம் உங்கள் மாமனார் மாமியார் வீட்டிலிருந்து பெற்றுக் கொண்டீர்களோ, அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்படி உங்கள் மாமனார் மாமியார் யாரும் உயிருடன் இல்லையென்றால், அதை உங்கள் மனைவியிடமே கொடுத்துவிடுங்கள். உண்மையாகவே சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் வரதட்சணையை வைத்திருந்தால், செல்வத் திருமகள் லக்ஷ்மி, உங்களுடைய வீட்டைத் தம்முடைய முழு ஆசிகளால் ஒருபோதும் நிரப்பமாட்டாள்.
இரண்டு விஷயம் இருக்கிறது. லக்ஷ்மி உங்கள் வாழ்வில் இரண்டு விதமான வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிறார். ஒன்று வெளியுலக வசதிகள், மற்றொன்று உள்ளுலக ஆனந்தம்.
உறுதியாகச் சொல்லுகிறேன். வரதட்சணையை வைத்திருக்கிறவர் வீட்டில் உள்ளுலக லக்ஷ்மியை வைத்திருக்கமாட்டார். வெளியுலக லக்ஷ்மி தனக்கிருப்பதாக அவர் நினைக்கிறார், அவ்வளவுதான்!
ஏழைக்கும் பணக்காரனுக்கும் என்ன வித்தியாசம்? ஏழை தரையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பணக்காரர் மெத்தையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை. அந்த சோபாவின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்கிறது, வேறு ஒன்றும் இல்லை.
எப்படியிருந்தாலும் ஒரு மகளை எல்லாச் சீர் வரிசைகளுடனும் அவருடைய மாமனார் மாமியார் வீட்டிற்கு அனுப்புவதைப்போலத்தான், கடவுள் எல்லாவற்றுடனும் உங்களை இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்கிறார். வேதாந்தத்தில் இதை நாம் ப்ராாப்த கர்மா என்று சொல்கிறோம்.
எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்
நீங்கள் கீழே வரும்போதே, உங்கள் உடலும் புலன்களும் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலையும், அவை விரும்பிய அனைத்தையும் தேடி அடைவதற்கான சக்தியையும், அடைந்ததை அனுபவிப்பதற்கான சக்தியையும், வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குப் போதுமான ஆற்றலையும் சக்தியும்கொண்டு வருகிறீர்கள்.
நீங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஒரே பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்புவதில்லை. அதுதான் பிரச்சினை. இன்னொரு விஷயம் கீழே வந்த பிறகு, நீங்கள் மற்றவர்களிடமிருந்தும் மேலும் மேலும் ஆசைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
> லட்சுமி
> உங்கள் வாழ்வில்
> இரண்டு வெளிப்பாடுகளை
> எடுக்கிறாள்.
> ஒன்று
> வெளியுலக வசதிகள்,
> மற்றொன்று
> உள்ளுலக ஆனந்தம்.
நீங்கள் ஒரு பத்து ஆசைகளுடன் கீழே வந்திருந்தால், அந்தப் பத்து ஆசைகளை நிறைவேற்றப் போதுமான சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கே கீழே வந்த பிறகு, உங்களுடைய நண்பர்கள், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் இப்படி எல்லோருடைய ஆசைகளையும் மேலும் மேலும் சேர்த்து வைத்துக் கொள்கிறீர்கள். பிறகு அந்த எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.
மற்றவர்களுடைய ஆசைகளை நீங்கள் நிறைவேற்ற முயற்சி செய்யும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்வையே வீணடித்துக் கொள்கிறீர்கள். ஆசைகளைப் பற்றிய அத்தியாயத்தைப் பார்க்கும்போது, அவை எவ்வாறு உருவாக்கப்படுகின் றன; அவற்றின் பின்னால் நாம் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் ஆழமாகப் பார்ப்போம். இப்பொழுது இந்த அளவுக்குப் புரிந்து கொண்டால்போதும்.
‘பயத்தாலும் ஆசையினாலும் நான்
தூண்டப்படமாட்டேன்’ என்று தெளிவாக
முடிவு எடுங்கள்.
இந்த ஒரு கருத்துக்குப் பத்தே பத்து நாள்கள்போதும். ‘அடுத்த பத்து நாள்களுக்கு நான் சந்தோஷத்துடனும் ஆனந்தத்துடனும் செயல்படுவேன். நான் மகிழ்ச்சியான மன நிலையுடனும் சந்தோஷத்துடனும்தான் எல்லாவற்றையும் செய்வேன்’ என்று முடிவு செய்யுங்கள். நான் உறுதி அளிக்கிறேன், அது உங்களுடைய வாழ்க்கையையே உணர்வுமாற்றம் செய்துவிடும்.
எப்படியிருந்தாலும் பத்து நாள்களுக்குப் பிறகும் இங்கேதான் நான் இருக்கப் போகிறேன். இது எதுவும் வேலை செய்யவில்லை என்றால், வந்து என்னை பிடித்துக்கொள்ளுங்கள்.
ஆசையிலும் பயத்திலும் வாழ்வதைவிட, சந்தோஷத்திலும் ஆனந்தத்திலும் இந்தப் பத்து நாள்கள் நீங்கள் வாழ்ந்தீர்களென்றாலே போதும் அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றி அமைத்துவிடும். இந்த ஒரு கருத்தே உங்களை நேரடியாகவே, உங்களுடைய எல்லாத் தளங்களிலிருந்தும், கட்டுக்களிலிருந்தும் உங்களை விடுவித்துவிடும்.
புதிய உணர்விற்குள் குடியேறிவிடுவோம்
நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்பொழுது முதல் சில நாட்களுக்கு உங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.தாவது ஆசை மேலே வரும்பொழுதெல்லாம் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். ஏதாவது பயம் வரும்போதும், 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள்.
முதல் சில நாட்கள் கொஞ்சம் குழப்பமாகவே
தெரியும்; ஏனென்றால் உள்ளே ஒரு புதிய
வெற்றிடம் உருவாக்கப்பட்டுவிடுகிறது.
நீங்கள் உங்களுக்குள் ஏதோ காலியாக
இருப்பதை, ஒரு வெறுமையை,
ஒரு வெற்றிடத்தை உணர்வீர்கள்.
கவலைப்படாதீர்கள்.
சில நாட்களில், நீங்கள் அழகாக அந்தப்
புதிய அமைப்பில் நிலைபெற்றுவிடுவீர்கள்.
அந்த வெறுமைத் தன்மையுடன் இணக்கமாக
இருக்கத் தொடங்கிவிடுவீர்கள். இந்த
வெறுமையைத்தான் புத்தர் சூந்யம் அல்லது
நிர்வாணம் என்று அழைக்கிறார்.
'நான் சந்தோஷத்துடன்
செயல்படுவேன்.
ஆசையையும்
அச்சத்தையும்
என் மனத்திற்குள் நுழைய
அனுமதிக்க மாட்டேன்'
என்று
பத்தே பத்து நாட்களுக்கு
முடிவு எடுங்கள்.
விழிப்புணர்வு நிலையிலிருந்து செயல்படுதல், ஆனந்த உணர்விலிருந்து செயல்படுதல், ஆசை அச்சத்தால் விரட்டப்படாமலும் இழுக்கப்படாமலும் தள்ளப்படாமலும் வாழ்தல் இவற்றைத்தான் புத்தர் சூந்யம் என்று குறிப்பிடுகிறார்.
"நான் சந்தோஷத்துடன் செயல்படுவேன். நான் ஆசையையும் அச்ச த்தையும் என் மனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்," என்று பத்தே பத்து நாட்களுக்கு முடிவு எடுங்கள்.
ஒரு வேளை, இந்தப் பத்து நாட்களில் நீங்கள் சில முறை தோல்வியடைய நேரலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்த வழியை முயற்சி செய்வது என்பது பயத்தினால் ஏற்படும் தோல்வியைவிட மிக உயர்ந்தது.
தோல்வியைப் பற்றிய பயமிருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் ஆரம்பிக்கவே மாட்டீர்கள். ஆரம்பியுங்கள், தோற்றாலும்கூட பரவாயில்லை!
இதனுடைய சூட்சமத்தை நீங்கள்
தெரிந்துகொள்வீர்கள். குறைந்தது அந்த
நுட்பத்தைத் தெரிந்துகொள்வீர்கள்.
எங்கே தோல்வியடைந்தோம் என்பதைத்
தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆரம்பிக்கவே
இல்லையென்றால், நீங்கள் எங்கே
தோல்வியடைந்தீர்கள் என்பதைக்கூட
உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல்
போய்விடும்.
உண்மையாகச் சொல்கிறேன், நீங்கள் ஆரம்பித்து தொடர்ந்து செய்தீர்களென்றால், அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றிவிடும். நீங்கள் விடுதலை பெறுவதற்குத் தேவையான அளவு பெரிய பலத்தையும் தைரியத்தையும் உங்களுக்குத் தந்துவிடும். முதலில் வெறுமையாக உணர்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
ஒருவர், தம்முடைய மாமியார் இறந்துவிட்டாரென்றால் சில நாட்களுக்கு ஒரு வெறுமையை உணர்வார் அல்லவா! அதுபோலத்தான் இதுவும். நம்முடன் வாழ்ந்து வந்த ஒருவர் இறந்துவிட்டால், நாம் சில நாட்களுக்கு ஏதோ இழந்து விட்டதைப்போல உணர்வோம்.
குற்றம் கண்டுபிடித்து, நம்மைக் குத்திக் காட்ட யாருமே இல்லையென்றால், எதையோ இழந்துவிட்டதைப்போலத்தான் நாம் உணர்வோம்!
இந்த ஆசையும் பயமும் நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் அடுத்த பத்து நாட்கள் நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது, நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த யாரையோ இழந்து விட்டதைப்போலத் தோன்றும். கவலைப்படாதீர்கள். அந்தப் புதிய உணர்விற்குள் விரைவில் நிலைபெற்றுவிடுவீர்கள். உங்களுடைய முழு இருப்புமே புதியதாக மாறிவிடும். நாம் புதிய தனித் தன்மையுடன் இருப்போம்.
இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்
இது ஒரு முக்கியமான விஷயம். அதாவது பயமும் ஆசையும் இல்லாமலேயே நீங்கள் வாழ்வதற்குத் தேவையான சக்தி உங்களிடம் இருப்பதை நீங்கள் நம்ப வேண்டும்.
சிறுவர்களுக்குத்தான் மிட்டாய் வேண்டும். ஆனால் உங்களுக்கு நம்பிக்கையே போதுமானது. சிறுவர்களிடம் நீங்கள் மிட்டாயைக் காண்பித்தால் மட்டுமே செயல்படுவார்கள். நீங்கள் அவர்களை நெறிப்படுத்துவதாக நினைத்து மிரட்டினீர்களென்றால் அவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

நீங்களும் சிறு குழந்தையாக
இருந்தபோது, உங்களைச் செயல்படச்
செய்வதற்கு ஆசை அல்லது பயம்
தேவைப்பட்டது.
இப்போது நீங்கள் எல்லாம் வளர்ந்து
விட்டீர்கள். இன்னும் உங்களுக்கு
ஏன் ஆசையும் பயமும் தேவை?
இன்னும் ஆசையும் பயமும்
உங்களுக்குத் தேவை என்று
சொன்னீர்களென்றால், நீங்கள்
மனவளர்ச்சி குன்றியவர்கள்தான்!
teளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்
உடலளவில் வளர்ந்து இருக்கிறீர்களே தவிர
மனத்தளவில் வளரவே இல்லை.
மற்றொரு விஷயம். பத்து நாட்களில்
உங்கள் சொத்து எதையும் நீங்கள்
இழந்துவிடப்போவதில்லை.
உங்களில் யாராவது, “இதைய் பத்து
நாள்கள் பயிற்சி செய்தால், என்னுடைய
சொத்தையெல்லாம் இழந்துவிடுவேன்,”
என்று நினைக்கிறீர்களா? அப்படி
நினைத்தீர்களென்றால், நான் உங்களுக்கு
ஒன்று சொல்கிறேன், “அந்தச் செல்வத்தை
வைத்திருப்பதில் எந்தவித பயனும் இல்லை.
> ஆழமான அமைதியுடனும்
> ஆனந்தத்துடனும்
> செயல்படும்பொழுது
> உங்களுக்குள்
> மறைந்திருக்கிற ‘
> நிலையான எரிச்சல்’
> மறைந்தே போய்விடும்.
பேசாமல் அதைத் தொலைத்தே விடுங்கள்.''
பத்து நாட்களில் உங்களால் அதைச் தொலைத்துவிட முடியுமென்றால், அந்தச் சொத்தை வைத்திருப்பதால் உங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு எளிதாகத் தொலைத்துவிட முடியுமென்றால், அதை நீங்கள் வைத்திருக்கவேண்டிய அவசியமே இல்லை.
எவ்வளவு சீக்கிரமாக அதைத் தொலைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய இருப்பு நிலைக்கு மிகவும் நல்லது.
வளர்ந்த பிறகும்
ஆசையும் அச்சமும்
தேவைப்பட்டால்,
நீங்கள்
உடலளவில் வளர்ந்து
இருக்கிறீர்களே தவிர
மனதளவில் வளரவே
இல்லை.
உங்களின் உள்வெளியிலிருந்து அந்த அபரிமிதமான அழுத்தத்தை, அந்தப் பாரத்தை, அந்தப் பளுவை அகற்றிவிடுங்கள். "நான் பத்து நாட்களுக்கு என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் ஆழமான ஆனந்தத்துடனும் அமைதியான மன நிலையுடனும் செய்வேன்,'' என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் பயிற்சி செய்தீர்களானால் உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிற ஒரு 'நிலையான எரிச்சல்' மறைந்தே போய்விடும். தெரிந்தே தெரியாமலோ, உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் நாம் எல்லாம் வெடிப்பதற்கும் வெடித்துச் சிதறுவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு சின்ன விஷயமானால்கூட நாம் உரக்கச் சத்தமிட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம்.
நாம் உரக்கச் சத்தமிடுவதற்கான காரணத்திற்காகக் காத்துக் கொண்டிருப்போம். ஒரு சிறிய விஷயம் நடந்தால்கூட, உடனே நாம் எரிச்சல் அடைகிறோம். "உனக்குத் தெரியாதா? உனக்கு அறிவிருக்கிறதா? நீ ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறாய்,'' என்று சத்தமிடுகிறோம்.
காலையிலிருந்து இரவுவரை தொடர்ந்து சிறிய விஷயங்களுக்காகக்கூட சத்தமிடுகிறோம் வெடிக்கிறோம்.
உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். உங்களில் எத்தனை பேர் உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருக்கிறது என்பதை நேர்மையாகப் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்கிறீர்கள்? கையைத் தூக்கியவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள். கையைத் தூக்காதவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லை. அதனால் உங்களுக்குள் எரிச்சல் இல்லை என்று நினைக்காதீர்கள். எல்லோருக்குள்ளும் அது இருக்கிறது. பயம் மற்றும் ஆசையின் காரணமாகத்தான் நாம் இந்த எரிச்சலை நம்முடைய உள் தளத்திற்குள், உள்வெளிக்குள் வைத்திருக்கிறோம்.
இன்று முதல் இந்த ‘நிலையான எரிச்ச’லில் இருந்து விடுதலை அடையுங்கள்.
காரணமில்லா மங்கலத்துவத்தோடு உங்களாலும் வாழ முடியும்
உங்களுக்கும் உங்கள் இருப்புக்கும் இடையே ஒரு அமைதியின்மை இருந்து வருகிறது. இந்த அமைதியின்மைதான் தொடர்ந்து மற்றவர்கள்மீது வெளிப்படுகிறது. இந்த அமைதியின்மையைத்தான் ‘இணக்கமற்ற தன்மை’ என்கிறோம். உங்களுக்கும் உங்கள் இருப்புக்கும் இடையேயுள்ள அந்த இணக்கமற்ற தன்மையைத்தான் வியாதி அல்லது நோய் என்று சொல்கிறோம்.
நாம் நம்முடைய இயந்திரத்திற்குத் தவறான எரிபொருளைப் போடுவதன் மூலம் இந்த இணக்கமற்ற தன்மையை நமக்குள்ளேயே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
tவறான எரிபொருளை நம்முடைய இயந்திரத்திற்குப் பயன்படுத்தினோமானால், ஒரு வித்தியாசமான சத்தம் வெளி வருவதுடன், வித்தியாசமான புகையையும் கக்கும் என்பது நமக்குத் தெரியும். எரிபொருள் சுத்தமானதாக இல்லாவிட்டால் இயந்திரம் வித்தியாசமான சத்தத்தைத்தான் எழுப்பும்.
ஒரு சின்ன கதை.
கணவனும் மனைவியும் ஒரு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிக்னலில் நின்றார்கள். திடீரென்று அவர்களுக்கு அடுத்தாற்போல ஒரு மெர்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பார்த்தார்கள். “நேற்று இரவு என்னுடைய கனவில் இதே போன்று ஒரு அழகான மெர்ஸிடஸ் பென்ஸ் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன்,” என்று கணவன் சொன்னார்.
“ஆமாம் ஆமாம், நானும் எஞ்சின் சத்தத்தைக் கேட்டேன்,” என்று மனைவி சொன்னார்.
உங்களுக்கும் உங்களுடைய இருப்புத் தன்மைக்கும் இடையேயுள்ள இணக்கமற்ற தன்மைதான் நோயாக வெளிப்படுகிறது. ஆழ்ந்த தூக்கம்: அவர்களுக்குத் தூக்கம்; மற்றவர்களுக்குத் துக்கம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எரிபொருள் சுத்தமானதாக இல்லாவிட்டால், சத்தம் வித்தியாசமானதாக இருக்கும். புகை வித்தியாசமானதாக இருக்கும். தொடர்ந்து நம்முள் எரிச்சல் இருந்துகொண்டே இருந்தால், எரிபொருள் சுத்தமானதாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
அதனால் உங்களுடைய வாகனத்திற்கு ஆசை, பயம் என்ற எரிசக்தியைப் பயன்படுத்தமாட்டேன் என்று ஒரு பத்தே பத்து நாட்களுக்குத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
திடீரென்று நீங்கள், உங்கள் இருப்பில் இருந்து ஒரு புதிய சக்தியும் சுத்தமான உற்சாகமும் காரணமில்லாத மங்கலத்துவ சக்தியும் மேலேழும்பி வருவதை உணர்வீர்கள். காரணமில்லாத மங்கலத்துவ சக்தியைத்தான் நாம் சிவம் என்கிறோம். ஸம்ஸ்க்ருதத்தில் சிவம் என்றால் 'காரணமில்லாத மங்கலத்துவம்' காரணமில்லாத சக்தி என்று பொருள்.
அந்தக் காரணமில்லாத சக்தியுடன், நோக்கம் இல்லாத சக்தியுடன் மட்டுமே நம்மால் வாழ முடியும். இரண்டே இரண்டு விஷயங்கள்தான் அதற்குத் தேவைப்படுகின்றன.
முதலாவதாக, நீங்கள் உங்களிடம் அந்தச் சக்தி இருப்பதை நம்புங்கள். அடுத்தது, அதை வாழ ஆரம்பியுங்கள். நாம் தெய்வீக உணர்வை அடைவதற்கு இந்த இரண்டே இரண்டு விஷயங்கள்தான் தேவைப்படுகின்றன.
காரணமில்லாத மங்கலத்துவ சக்தியுடன் நாம் செயல்படத் தொடங்கும்போது நாம் சிவமாக மாறுகிறோம். அப்படி இல்லையென்றால் நாம் சவம் (உயிரற்ற உடல்) ஆகிறோம்.
