ஆனந்தத்தை நோக்கி அழைத்துப்செல்லும் நம் சாரதி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உள்ளபடியாகவே, நம்முடைய உண்மையான இயல்பானது சுத்தமானதும் அல்ல; அசுத்தமானதும் அல்ல. அது சுத்தம் அசுத்தம் இந்த இரண்டிற்குமே அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. அதைத்தான் நாம் விசுத்தி என்கிறோம். விசுத்தி சுத்தம் அசுத்தம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது என்று பொருள்.
தொண்டையில் அமைந்து உள்ள உங்களுடைய விசுத்தி சக்தி மையம் விழிப்படையும்பொழுது, நாம் நம்முடைய உண்மை இயல்பை நெருங்கத் தொடங்குகிறோம்.
நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் ஆனந்தமானவர்களே! நம்முடைய இயல்பே ஆனந்தம்தான்.
நம்முடைய உண்மையான இயல்பே சுயக் கட்டுப்பாடுதான். நம்முடைய இருப்புத் தன்மை தூய்மையான ஆனந்தம் என்பதை நாம் உணர்ந்துகொண்டு அனுபவிக்கும்பொழுது, மற்ற உணர்ச்சிகள் தானாகவே காணாமல் போய்விடும். அதுவரை நம்முடைய உண்மையான இயல்பை மற்ற உணர்ச்சிகள் முகமூடியிட்டு மறைத்துவிடும்.
நம்முடைய உண்மையான இயல்புடன், ஆனந்தத்துடன் இருக்க முயலும்பொழுதுதான் நாம் இயல்பாக தன்னிச்சையாக வாழ்கிறோம். ஏற்கெனவே திட்டமிட்டு வைத்துள்ள உணர்வற்ற நிலையிலிருந்து பதிலளிப்பதற்குப் பதிலாக, நாம் புத்திசாலித்தனத்துடன் பதிலளிக்கிறோம்.
> ஜீவன் முக்தியை, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. ஜீவன் முக்திதான் உங்களை சொந்தமாக்கிக் கொள்ளும்.
புலன்களைக் கட்டுப்படுத்துவது என்பது அப்பொழுது பிரச்சினையாகவே இருக்காது. அவை ஆதாரமாக இருக்கிற இருப்புத் தன்மையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. அவற்றை அடக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.
மகாபாரதத்தில் அர்ஜுனனுடைய தேரைக் கிருஷ்ணர் செலுத்தினார். தேரினில் பூட்டபட்டிருக்கும் குதிரைகள் புலன்களைக் குறிக்கின்றன. அவை, தெய்வீகச் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டு, அழகாக அவர் பிடிக்குள் இருக்கும் புலன்களையே குறிக்கின்றன.
இங்கு இருப்புத் தன்மை போர் வீரராக சித்திரிக்கப்பட்டு உள்ளது.
அந்த இருப்புத் தன்மையை ஊக்கமளித்து அழைத்துச் செல்லும் சாரதியாக கிருஷ்ணர் இருக்கிறார். இருப்பை அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
வெற்றியை நோக்கியும் ஆனந்தத்தை நோக்கியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரதமாக உடல் சித்திரிக்கப்பட்டு உள்ளது.
தனி மனிதரின் உணர்வு (ஜீவாத்மா) இறைவனைச் சரணடையும்பொழுது, இறைவன் அந்த மனிதரின் உடல், மனம், ஆன்மா இவற்றைக் கட்டுப்படுத்தி, அவருடைய உண்மை இயல்பை நோக்கி, ஆனந்தத்தை நோக்கி செலுத்தத் தொடங்குகிறார்.
ஒவ்வொருக்கணமும் கொண்டாட்டமாகிவிடும்
மிகவும் இளவயதிலிருந்தே, சமுதாயம் எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்து வந்துள்ளது. அதனால் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் எப்படி எதிர்ச்செயல் புரிவது என்பதைப் பற்றி ஏற்கனவே நாம் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். அதேபோல் எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒருநிலையான கருத்தை நம்முள் பதித்துவைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒரு சூழ்நிலையைப் பார்த்த மாத்திரத்திலேயே, நமக்கு ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ளதைப்போலவே அதற்கு எதிர்ச்செயல் புரிகிறோம். நாம் பதில் அளிக்கவில்லை, எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம். மனசாட்சியின் படி, நாம் எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம்.
மனச்சாட்சியின்படி நாம் செயல்படும்பொழுது, நம்மால் எதிர்ச்செயல் புரிய மட்டுமே முடியும். கடந்தகாலத்தில் இதே போன்ற சூழ்நிலையைச் சந்திக்கும்பொழுது நாம் என்ன செயல் செய்தோம், அப்பொழுது மற்றவர்களின் எதிர்ச்செயல் எப்படி இருந்தது என்பது போன்ற கடந்தகாலத்தைப் பற்றிப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்து நாம் எதிர்ச்செயல் புரிகிறோம். கடந்தகாலத்தில் நமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாம் புகழப்பட்டிருந்தால், நாம் முன்பு செயல்பட்ட அதே முறையிலேயே எதிர்ச்செயல் புரிவோம். அப்பொழுது நமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளபடாமல், நாம் இகழப்பட்டிருந்தால், இப்பொழுது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலே, வேறு ஒரு எதிர்ச்செயலைப் புரிவோம்.
நாம் செய்வது சுற்றியுள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் சற்று அசௌகரியமாக உணர்வோம். அந்த அசௌகரியத்தை நீக்குவதற்காக, மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதை நாம் நினைக்கிறோமோ, அந்த முறையிலே இப்பொழுது எதிர்ச்செயல் புரிவோம். இதுதான் எல்லாக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
நமக்கு இது வெளிப்படையாகத் தெரியாது. ஏனென்றால் இதே மாதிரி எதிர்வினை புரிவது என்பது, நம்முடைய வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. புத்திசாலித்தனமாக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே நமக்கு மறந்தே போய்விட்டது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எந்த ஒரு சூழ்நிலையும் முன்னர் நிகழ்ந்ததுபோலவே மிகச் சரியாக இருப்பதில்லை. அது எப்படி முடியும்? ஒரு நதியானது இரண்டு வித்தியாசமான இடங்களில் மிகச் சரியாக ஒரே மாதிரியாகப் பாய்வது என்பது முடியுமா? முடியாது. இரண்டு இடங்களும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட, அதே தண்ணீர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாயும்போதே மாறியிருக்கும்.
வாழ்க்கையும் நதி போன்றதுதான். அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கும்.

பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் சக்தி. அது செய்ததையே திரும்பவும் ஒருபோதும் செய்யாது. அது ஒவ்வொரு கணமும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.
நாம் நம்முடைய மனத்தின் குறுகிய கண்ணோட்டத்தைக்கொண்டுதான்பார்க்கிறோம்.
ஏனென்றால் மனம் எப்பொழுதுமே வாழ்க்கையை பல கூறுகளாக்கிப் பகுத்தும் பிரித்தும் பார்க்கும் தன்மையுடையது. “இவை எல்லாம் சந்தோஷமான சூழ்நிலைகள், இவை எல்லாம் சந்தோஷமில்லாத சூழ்நிலைகள், இது நல்லது, இது மோசமானது, இது சரியானது, அது தவறானது, இது நடக்க வேண்டும், இது நடக்கக் கூடாது,” என்றெல்லாம் சொல்லுகிறோம். இவ்வாறு வித்தியாசப்படுத்திப் பார்ப்பதைப் பிரபஞ்சம் செய்வதில்லை. நாம்தான் செய்கிறோம்.
இதை இந்த அளவிற்குப் புரிந்துகொண்டு, அவ்வாறு புரிந்து கொண்டதை நமக்குள் ஆழமாகச் செல்ல அனுமதித்தாலே போதும், நம்மை எளிமையாகத் தளர்வாக இருக்கச் செய்து கொள்ளலாம். அதன் பிறகு நம்முடைய விழிப்புணர்வின் வழிகாட்டுதலின்படிதான் நாம் பதில் செயல் புரிவோம்.
மனசாட்சி என்பது விழிப்புணர்வுக்கு மிக மோசமான மாற்றுப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,
வாழ்க்கையை புத்திசாலித்தனத்துடனும் விழிப்புணர்வுடனும் தன்னிச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
அது உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் என்ன அற்புதமான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதென்று பாருங்கள். உங்கள் மனப்பான்மையில் நீங்கள் கொண்டு வரும் இந்தச் சிறு மாற்றமானது, பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பிறகு, ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமே!
இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம்
புத்திசாலித்தனம் ஏற்படும்பொழுது, கருணையும் சேர்ந்தே வந்துவிடும். உங்களுக்குள் இந்த முழு உலகத்தின் மீது தானாகவே கருணை பிறக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரிடத்திலும் நீங்கள் உங்களையே பார்ப்பீர்கள்.
கருணையைத் தவிர வேறு எதை நீங்கள் உணர முடியும்? அதனால்தான் குருவாக இருப்பவர்கள் எல்லோரிடத்திலும் கருணையோடு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த முழு உலகத்திற்கும் அவர்கள் பொறுப்பு ஏற்கிறார்கள்.
நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவு பெற்று அதனோடு இயைந்து பாயும்பொழுது, நம்முள் தெய்வீக ஆற்றல் பாய்வதற்கு நாம் ஒரு கால்வாயாக மாறிவிடுகிறோம்.

மூங்கில் தன்னொள் வெற்றிடத்தை வைத்துக் கொண்டால் மட்டுமே, அது ஒரு அழகான புல்லாங்குழலாக மாறி, தெய்வத்தின் உதடுகளிலிருந்து வரும் அருமையான காற்றினை உள்வாங்கி, அதனை ஒரு தெய்வீக இசையாக, அழகான இன்னிசைச் சரங்களாக வெளிவிட முடியும்.
மாறாக அந்த மூங்கில் அழுக்கடைந்து அடைபட்டிருந்தால், அது அப்படியே இறந்து போன மாதிரியேிருப்பதுடன், இறந்து போனவர்களின் உடலை எடுத்துச் செல்லப் பயன்படும் மூங்கிலாகவே இருக்கும்.
கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.
பலர், தங்களுடைய செயல்களை தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல், சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நீங்களாகவே ஒரு கொலையைச் செய்து விட்டு, "நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை, என்னுடைய கைகள்தான் அதைச் செய்தன," என்று சொல்லுவதைப் போன்றது.
வாழ்க்கையை, புத்திசாலித்தனத்துடனும் விழிப்புணர்வுடனும் தன்னிச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எதையும் செய்யவில்லை என்று சொல்வதால், நம்முடைய செயல்களுக்கு நாம் பொறுப்பேற்கவில்லை என்றாகிவிடாது. அது மிகவும் சரியான எதிர்மறையான பொருளைத்தான் கொடுக்கும். எந்த ஒரு செயலிலும் நாம் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது, நாம் முழுமையாகவும் தளர்வாகவும் ஓய்வாகவும் இருப்போம். அப்பொழுது நாம் அன்பினாலும் கருணையினாலும் நிரம்பி வழிவதுடன், நாம் நமக்குள் இருக்கும் ஆனந்த சக்தியால் மட்டுமே இவற்றை எல்லாம் செய்வோம்.