KAILASA Library/பகவத்‌கீதை/செயலில் ஈடுபடுவது மனிதனின் இயல்புSign in
பகவத்‌கீதை

செயலில் ஈடுபடுவது மனிதனின் இயல்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

3.5 நிச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இருக்க யாராலும் முடியாது. செயலில் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பதினால், தம்மையும் மீறி அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்.

3.6 எவர் ஒருவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை நினைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருக்கிறாரோ, அவரைப் பொய்யான ஒழுக்கமுடையவர் என்று சொல்கிறோம்.

3.7 எவரொருவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, தன்னலமற்ற செயல்களைக் கர்மேந்திரியங்களின் (புலன்களின்) மூலம் செய்கிறாரோ அவர் உயர்ந்தவர், ஓ அர்ஜூனா!

உனக்கென்று விதிக்கப்பட்ட செயலைச் செய்!
சோம்பேறித்தனமாக வீணாகக் காலம் கழிப்பதைவிட
செயலைச் செய்வது சிறந்தது. செயல் இல்லாமல் உன் சொந்த
உடலைக்கூடப் பராமரிக்க முடியாது.

பிழைகளைப் பொறுத்துக்கொள்வதே தவம்

பொதுவாக எல்லோரும் என்னிடம், "வாழ்க்கை நோக்கமற்றது என்கிறீர்கள், அப்படியானால் நான் ஒன்றும் செய்யாமல் வெறுமனே படுத்துக்கொண்டு தளர்வாக இருக்க நினைக்கிறேன். அப்படி இருந்தால் எனக்கு யார் உணவு தருவார்கள்? நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் பில்களுக்கு யார் பணம் கட்டுவார்கள்?" என்று கேட்பதுண்டு.

நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், என்றைக்கும் நிரந்தரமாக எப்போதும் உங்களால் படுத்துக்கொண்டு இருக்க முடியாது. அடுத்த ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீங்கள் படுக்கலாம். நீங்கள் ஒரு கடிகார பெண்டுலம்போல், இந்த முனைக்கும் அந்த முனைக்கும் கடைசிவரை செல்வது உங்கள் இயல்பு. இப்போது அந்தப் பெண்டுலம் ஒரு முனையின் கடைசி எல்லைவரை சென்று இருக்கிறது. ஒரு முனையின் எல்லையில் அது இருக்கிறது.

உங்கள் கைகளை எடுத்துவிட்டால், அது எதிர் முனைக்கு ஓடும். அதிக பட்சமாக ஒருவாரம்தான் உங்களால் வெறுமனே ஒன்றும் செய்யாமல் படுத்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குப் பிறகு உங்களால் அப்படிப்

> "உங்கள் உள் உலக அமைதியை குலைக்காமல் உங்கள் உடலும் மனமும் செயல்படட்டும்,"

படுத்துக்கொண்டிருக்க முடியாது. உங்கள் இயல்பின்படி ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

வாழ்க்கை நோக்கமற்றது என்று நான் சொல்லும்போது, உங்களை வீட்டில் படுத்துத் தளர்வாக ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி நான் சொல்லவில்லை. நான் சொல்வது எல்லாம் "உங்கள் உள் உலக அமைதியை குலைக்காமல் உங்கள் உடலும் மனமும் செயல்படட்டும்," என்பதே. வெளி உலகத்தை அனுபவிக்க உங்கள் உள் உலகத்தை விற்க வேண்டியதில்லை. வெளி சுகங்களுக்காக உங்கள் உள் உலக ஆனந்தத்தை விற்க வேண்டியதில்லை.

கிருஷ்ணர் இங்கு உறுதி அளிக்கிறார்,
"உங்கள் இயல்பினாலேயே, உங்களுடைய
உடலும் மனமும் செயலாற்றும்
இயல்புடையது.

உங்கள் உடலும் மனமும் தாங்களாகவே
வேலை செய்யும். நீங்கள் அமைதியாக
இருந்தீர்கள் என்றாலே போதுமானது,
அவை மிக அழகாகச் செயல்படும்."

உங்கள் மன அமைப்பை
விட்டு வெளியில்
வந்தீர்களானால்,
அதுவே போதும்.
தெய்வீக தன்மை
உள்ளே நுழைந்துவிடும்.

யாரோ என்னிடம் கேட்டார்கள், "ஸ்வாமிஜி, நான் எப்படியிருந்தால் சரியான செயல்களைச் செய்ய முடியும்? சரியான செயல்களையே செய்யும்படி என் மனத்திற்கு நான் எப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டும்?"

Illustration

"வெறுமனே அமைதியாக இருங்கள். சும்மா இருங்கள் போதும். தாங்களாகவே உங்கள் உடலும் மனமும் சரியானவற்றைச் செய்யும். நீங்கள் உங்கள் மன அமைப்பை விட்டு வெளியில் வந்தீர்களானால், அதுவே போதும். தெய்வீக தன்மை உள்ளே நுழைந்துவிடும்.

நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான்,
இறைத் தன்மை உள்ளே நுழைவதற்கு நாம்
வெளியேற வேண்டும்.

Illustration

கிருஷ்ணர் சொல்கிறார், ப்ரக்ரு'தி - தைஜர் - குணை: அதன் இயல்பினாலேயே, உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் சரியான செயலைச் செய்யத் தெரியும். பிரச்சி னை என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை. மனத்தையும் உடலையும் முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் எப்போதும் அஹங்காரத்தையே நம்புகிறீர்கள். அது முடிவில் உங்களை மனச்சோர்வில் போட்டு விடுகிறது! இருந்தும் நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை.

நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் உடலும் மனமும் இயல்பாகவே அதனதன் வேலையைச் செய்யும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அமைதியாக இருந்து, அஹங்காரத்திலிருந்து விலகி ஓய்வாக இருப்பதே! வெளி உலக செயலைச் செய்வதற்கு உள் உலகம் தேவை என்று நினைக்காதீர்கள்.

நித்யம் என்றால் என்ன, அநித்யம் என்றால் என்ன என்று புரிந்துகொண்ட ஒரு மனிதர் அதாவது எது நிலையானது, எது நிலையற்றது என்பதைப் புரிந்து கொண்ட ஒருவர், அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குள் தளர்வாக இருக்கிறார். அவர் எப்போதும் நிலையான, அழிவற்ற ப்ரபஞ்ச விழிப்புணர்வு நிலையில் தளர்வாக இருக்கிறார். நித்யானந்த நிலையில் இருக்கிறார். நித்யானந்த நிலையில் வாழ்கிறார்!

உங்கள்
உள் உலகத்தில்
வெறுமனே தளர்வாக
இருங்கள்.
தானாகவே நீங்கள்
வழிநடத்தப்படுவீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், “ஒரு கர்ம யோகி என்பவர் எவரென்றால், தளர்வாக நித்யானந்த நிலையிலிருந்து தம் வேலையைச் செய்பவரே.”

உங்கள் உள் உலகத்தில் வெறுமனே
தளர்வாக இருங்கள். தானாகவே
நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.

“வாழ்க்கை நோக்கமற்றது என்று மனதளவில் நினைத்துக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் தளர்வாக இருந்தேன் என்றால், சரியானது எது, தவறானது எது என்று எப்படி நான் தெரிந்துகொள்வேன்? என் வேலையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படிச் செய்து முடிப்பேன்?” என்றுதான் நீங்கள் எப்பொழுதும் எண்ணுகிறீர்கள். தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சரி எது, தவறு எது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படும்போது நீங்கள் சின்ன சின்ன தவறுகள் செய்யமாட்டீர்கள், மிகப்பெரிய முட்டாள்தனங்களைத்தான் செய்வீர்கள். எவர் கவலைப்படாமல் இருக்கிறாரோ, அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரோ, அவர் சின்ன தவறுகளைச் செய்யலாம்.

ஆனால் தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர், சின்ன சின்ன தவறுகளைச் செய்யமாட்டார், அவர் பெரிய பெரிய முட்டாள்தனங்களைத்தான் செய்வார். நான் சொல்கிறேன், எது சரி, எது தவறு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் நம்பிக்கை என்ற பெரும்

தாவலை எடுப்பதற்குத் தைரியம் வேண்டும்.
அப்படியே ஒன்றிரண்டு பிழைகள்
செய்தால்தான் என்ன? அதில் என்ன தவறு
இருக்கிறது?

இந்தப் பெரும் தாவலை ஒரு சவாலாக
ஏற்றுக்கொண்டு, அதில் இறங்கி துணிந்து
செயலாற்றிக்கொண்டே கவலைகளற்ற
நிலையில் வாழ்வதைத்தான் நான் தைரியம்
என்கிறேன். ஆன்மீக வாழ்க்கைக்குள்
நுழைவதற்கான தைரியம் என்கிறேன்.
நீங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு, அதில்
இறங்கும்போது, இயல்பாகவே நீங்கள்
சில பிழைகள் செய்வீர்கள். அதைப்பற்றிக்
கவலைப்படாதீர்கள்.

> எது சரி, எது தவறு
> என்பதைப் பற்றிக்
> கவலைப்படாமல்
> நம்பிக்கை என்ற
> பெரும் தாவலை
> எடுப்பதற்குத்
> தைரியம் வேண்டும்.

பிழைகளைப் பொறுத்துக்கொள்வதைத்தான் நான் தவம் என்கிறேன். உங்கள் இருப்புத் தன்மையில் விழிப்புணர்வு மாற்றங்கள் நிகழும்போது, நீங்கள் செய்கிற சிறு சிறு தவறுகளை ஏற்றுக்கொள்ளவதே தவம்.

நீங்கள் விரைவில் மறைகிற நிலையில்லாத விழிப்புணர்வு நிலையிலிருந்து, நிலையான விழிப்புணர்வு நிலைக்குச் செல்லும்பொழுதும் கவலையிலிருந்து ஆனந்தத்திற்குச்செல்லும்பொழுதும், பொய்மையிலிருந்து ஸத்யத்திற்குச் செல்லும்பொழுதும், நீங்கள் சில பிழைகளைச் செய்வீர்கள்.

சிறு குழந்தை நடக்க கற்றுக்கொள்வதைப்போல் கீழே விழுந்து எழுந்து செல்வீர்கள். குழந்தைகள் நடக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, முதலில் சில முறைகள் கீழே விழத்தான் செய்வார்கள்.

அதனால் நீங்கள் அவர்களை எப்போதும் நடக்கவே கூடாது என்று சொல்ல முடியுமா? இல்லை! ஓரிரண்டு சின்ன பிழைகள் அவர்கள் செய்தாலும்கூட, அவர்கள் எழுந்து நடக்கத்தான் வேண்டும். கீழே விழுவதும், பின் எழ முயற்சி செய்துமான இந்தச் சின்ன சின்ன தவறுகள்தான், நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கான தவம்.

அதேபோல் அஹங்காரத்தை விட்டு வாழ முயற்சி செய்யும் போதும், தொடக்கத்தில் சில பிழைகளைச் செய்வீர்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதுவே தவம்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
அகந்தையற்ற நிலைக்குள் நுழையுங்கள்.
நித்யானந்த நிலைக்குள் நுழையுங்கள்.
அப்படியே எளிய முறையில் வாழ
ஆரம்பியுங்கள். பிரபஞ்ச இருப்புத்
தன்மையின் நோக்கமற்ற தன்மையை
உணருங்கள்.

இன்றே தீர்மானம் செய்யுங்கள். "இன்று
முதல் நான் கவலையே படாமல்
வாழ்வேன். வாழ்க்கை என்பது மிகவும்
சிறியது. வாழ்க்கை என்பது கவலைப்பட்டுக்
கழிப்பதற்கு அல்ல," என்று இன்றே முடிவு
எடுங்கள்.

நோக்கமற்றதின் அழகை
நீங்கள்
புரிந்துகொள்ளும் கணமே,
உங்கள்
உள் உலகத்தில்
நீங்களே
உருவாக்கிக் கொண்ட
எல்லாக் காயங்களும்
குணமாக்கப்பட்டுவிடும்.

இலக்குகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இலக்குகளை விட்டு விடுங்கள். நோக்கமற்றதின் அழகை நீங்கள் புரிந்துகொள்ளும் கணமே, உங்கள் உள் உலகத்தில் நீங்களே உருவாக்கிக் கொண்ட எல்லாக் காயங்களும் குணமாக்கப்பட்டுவிடும். நீங்கள் ஆனந்த பரவசத்தில் நித்யானந்த நிலைக்குள் மூழ்கி விடுவீர்கள்.

உள் உலகின் தரமே உங்கள் வாழ்க்கையின் தரம்

தம் புலன்களை மட்டும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, ஆனால் தம் உள் உலகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாமல் இருக்கும் ஒருவர்தான் போலியானவர், பாசாங்கு செய்பவர் என்று அழைக்கப்படுகிறார் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் உள் உலக தன்மையின் அடிப்படையில் மட்டுமே, உங்கள் வாழ்க்கையின் தரம் தெரிந்துகொள்ளப்படுகிறது, வெளி உலக தன்மையின் தரத்தைப் பொறுத்து அல்ல.

நீங்கள் இந்த உடலைவிட்டு மறுபிறவி எடுக்கும்போது, அங்கே யாரும் நீங்கள் போன பிறவியில் எந்தவகை காரை ஓட்டினீர்கள், எந்த வீட்டில் வசித்தீர்கள், உங்கள் வங்கி இருப்பு எவ்வளவு வைத்திருந்தீர்கள் என்று கணக்கு எடுக்கப் போவதில்லை. இந்த விவரங்கள் உங்களுடன் வரப்போவதில்லை. நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள், உங்கள் உள் உலகம் எப்படி இருந்தது, வாழும்போது உங்கள் உள் உலகத்தின் தன்மை எவ்வாறு இருந்தது என்கிற இவற்றைத்தான் உங்களுடன் எடுத்துச் செல்லப் போகிறீர்கள். அதனால்தான் "நீங்கள் உங்களுடன் எடுத்து செல்லப்போதெல்லாம் உங்கள் உள் உலகத்தின் ஸம்ஸ்காரங்கள் (நினைவுப் பதிவுகள்), கர்மங்கள் (நிறைவேற்றப்படாத ஆசைகள்), வாஸனாக்கள் (மன அமைப்பு) என்கிற இந்த மூன்றையும்தானே தவிர வெளி உலகத்தை அல்ல," என்று வேதங்கள் சொல்கின்றன.

இந்தியாவைச் சேர்ந்த ஞானகுரு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்கள் சொன்ன மிக அழகான கதை:

ஒரு கோயிலில் துறவி ஒருவர் இருந்தார், அவர் த்யானம்செய்துகொண்டும், கடவுளின் மகிமைகளை மற்றவர்களுக்குப் போதித்துகொண்டும் வாழ்ந்து வந்தார்.

அவர் இடத்திற்கு எதிராக ஒரு தாசி வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் மீது ஆழமான பக்தி கொண்டிருந்தார். அவர், தான் எப்படிப்பட்ட தொழிலைச் செய்து கொண்டிருந்தாலும் அமைதியாக, கடவுளின் மகிமையை மனதில் நினைத்துக்கொண்டு, அதிலேயே ஆழமாக மூழ்கி இருந்தார்.

அந்தக் கால வழக்கப்படி, அவரும் அவருடைய தோழிகளும் விக்ரஹத்தின் முன் பாட்டுப்பாடி, நடனமாடி தங்கள் கோயில் சேவையைச் செய்து வந்தார்கள்.

தினமும் தாசியின் வீட்டுக்குள் நுழையும் அனை வரையும் இந்தத் துறவி கவனித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு பேர் வந்தார்கள், எப்போது வந்தார்கள், எத்தனை மணிக்குத் திரும்பச் செல்கிறார்கள் என்பது போன்ற புள்ளி விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். வேறு வேலை எதுவும் இல்லாததால் இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு வேலை எதுவும் இல்லையென்றால் அடுத்தவர் வேலையில் ஆர்வத்தைக் காட்டுவீர்கள்.

யார் வருகின்றார், யார் போகிறார், வழக்கமாக வருகிறவர் யார், எப்போதாவது வருவது யார் என்பவை போன்ற முழுக் குறிப்பேட்டையும்

> உங்கள்
> உள் உலக தன்மையின்
> அடிப்படையில் மட்டுமே,
> உங்கள்
> வாழ்க்கையின் தரம்
> தெரிந்துகொள்ளப்படுகிறது.

நிர்வகித்தார். அந்தத் தாசியின் தினசரி குறிப்பேட்டை நிர்வகிப்பவரைப் போன்று அந்தத் துறவி இருந்தார்! நாள் பூராவும் அங்கே என்ன நடக்கிறது என்கிற சிந்தனையிலேயே கழித்தார்.

தாசியோ வேறு ஒரு வித்தியாசமான நிலையில் வாழ்ந்து வந்தார். "என்னுடைய வாழ்க்கை, என்னுடைய இயல்பான கடமை இதுதான். இந்தப் பிறவியில் இது எனக்குத் தரப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு தொழில் எனக்குத் தெரியாது.

நான் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும். என் உணவிற்காக நான் இப்படி வாழ வேண்டியுள்ளது. ஆனால் கடவுளே என்னைக் கரையேற்றுங்கள், என் மனமும் இதயமும் உங்கள் காலடியிலேயே இருக்கட்டும்," எனப் பிரார்த்திப்பார். அவர் கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பக்தியுடன் இருந்தார். அவருடைய உள் உலகம் தெய்வீகத்தினால் நிரப்பப்பட்டிருந்தது. அவருடைய உள் உலகம் கடவுளின் நாமத்தாலும் தெய்வீக அன்பாலும் நிறைந்திருந்தது.

இவ்வாறே வாழ்க்கை சென்றது. சில வருடங்கள் கழிந்தன. திடீரென்று துறவியும் தாசியும் ஒரேநாளில் மரணம் அடைந்தார்கள்.

இது ஒரு மிக அழகான கதை!

இருவரும் யமதர்மருடைய நீதிமன்றத்திற்குத் தீர்ப்புக்காகச் செல்கிறார்கள். முதலில், தாசி வந்தார். யமதர்மர் அவருடைய பாப புண்ணிய தொகுப்புகளைப் பார்த்தார் "சரி சரி! கவலைப்படாதே! உன் வாழ்நாள்முழுவதும் இறைவனையே நினைத்து வாழ்ந்ததால் நீ சொர்க்கத்திற்குப் போகலாம்," என்றார்.

> உங்களுக்கு
> வேலை எதுவும்
> இல்லையென்றால்
> அடுத்தவர் வேலையில்
> ார்வத்தைக்
> காட்டுவீர்கள்.

அவர் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.
இப்போது துறவியின் முறை. துறவி
வந்தவுடனேயே யமதர்மர் சொல்ல
ஆரம்பித்தார். "இது உன் பாவ
புண்ணியங்களின் கணக்கு. உன் வாழ்நாள்
முழுவதும் நீ எதிர்மறை எண்ணங்களையே,
தவறான விஷயங்களையே நினைத்து
வாழ்ந்ததால் நரகத்துக்குப் போ!" என்றார்.

துறவி சத்தம் போட ஆரம்பித்தார், அவர் ஒரு திகேதேர்ந்த சமய சொற்பொழிவாளர்.

அதனால் அவருக்கு எப்படி ஆவேசமாகச்
சத்தம் போட வேண்டும் என்று நன்றாகவே
தெரியும்! அவர் சத்தம் போடத்
தொடங்கினார், “என்னை நரகத்திற்கு அனுப்ப
எவ்வளவு தைரியம். உனக்கு எதிராக வழக்கு
தொடுப்பேன்,” என்று வேகமாகப் பேசினார்.

யமதர்மர் சொன்னார், “தயவு செய்து கொஞ்சம் அமைதியாக இரு. சொர்க்கத்தில் நாங்கள், நீ வாழும்போது என்ன செய்தாய் என்பத்தைக் கருத்தில்கொள்வதில்லை. எவ்வாறு வாழ்ந்தாய் என்பதுதான் முக்கியம். உன் உடலால் நீ தூய்மையாகத்தான் இருந்திருக்கிறாய். அங்கே பார் பூமியில் உன் உடலுக்கு எவ்வளவு மரியாதை கிடைத்திருக்கிறது.”

துறவி கீழே பூமியைப் பார்த்தார். அங்கே அவருடைய உடலுக்கு மிகவும் ஆடம்பரமான முறையில் மரியாதை அளிக்கப்பட்டு இருந்தது. மக்கள் இறந்த அந்த உடலின் காலடியில் விழுந்து வணங்கினார்கள்.

பெரிய மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. அவர் உடலுக்கு ஆடம்பரமான பூஜை செய்யப்பட்டது. அந்த உடல் புனிதமானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சமாதியில் மரியாதையுடன் வைக்கப்பட்டது.

யமதர்மர் மேலும் தொடர்கிறார்.

“உன் உடலால் நீ தூய்மையாக வாழ்ந்ததால் உன் உடலுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. ஆனால் உன் மனத்தால் தூய்மையற்ற வாழ்க்கையை, வாழ்ந்தாய். அதனால் நீ நரகம் போக வேண்டும்.”

யமதர்மர் மேலும் சொன்னார், “அதேபோல் தாசி உடலால் தூய்மையற்று வாழ்ந்தாள். அவளின் உடலைப்பார்.”

அங்கே பூமியில் தாசியின் உடலைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தாசியானதால் அவளுக்குக் கணவரோ, மகனோ இல்லை. ஈமச்சடங்குகள் செய்யக்கூட யாரும் இல்லை. உடல் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. சுத்தம் செய்யும் ஆட்கள், உடலை இழுத்துச் சென்று குப்பையோடு குப்பையாகப் போட்டு விடுகிறார்கள். யமதர்மர் மேலும் தொடர்கிறார், "பார்! உடலால் தூய்மையற்று வாழ்ந்ததால் அவள் உடல் துன்பப்படுகிறது. ஆனால் மனத்தால் தூய்மையாகவும் தெய்வீக தன்மையுடனும் வாழ்ந்ததால், தெய்வத்திடம் செல்கிறாள்."

உங்கள் உள் உலகத்தில் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். உங்கள் 'உள் வெளி'தான் உண்மையில், வாஸ்தவத்தில் மிக முக்கியமானது.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரன் /
இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார: ஸா உச்யதே // 3.6

உங்கள் உள் உலகத்தைச் சுத்தமாக வைத்திருக்காமல், உங்கள் உடலையும் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட நீங்கள் போலியானவர்களே. உங்கள் வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்காது. உங்கள் வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாக இருக்காது. அது ஆன்மீக வாழ்க்கையாக இருக்காதது மட்டுமல்ல, அது வாழ்க்கையாகவே இருக்காது!

வாழ்வதன் அர்த்தம் ஆனந்தமே, ஆனால் அதற்கு நோக்கம் கிடையாது. நோக்கங்களைப் பற்றி நினைக்க நினைக்க, அதிக கவலைகளைத்தான் உருவாக்குவீர்கள். வாழ்க்கையைப் பிழிந்து அதிலிருந்து எவ்வளவு அதிகமான பலன்களைப் பெறமுடியுமோ, அவ்வளவு பலன்களைப் பெறவே முயற்சி செய்வீர்கள். ஆனால் வாழ்க்கை உங்களைவிட புத்திசாலித்தனமானது.

உங்கள்
'உள் வெளி'தான்
உண்மையில்,
வாஸ்தவத்தில்
மிக முக்கியமானது.

நீங்கள் வாழ்க்கையை அதிகமாக, அழுத்தமாகப் பிழிய முயற்சி செய்யும்பொழுது, அது உங்கள் விரல்களின் இடுக்கு வழியாக நழுவிவிடும்.

வாழ்க்கை ஒரு ஆறு போன்றது. உங்கள்
கைகளை ஆற்றில் விட்டு திறந்து வைத்து
இருந்தீர்கள் என்றால் ஆறு எப்போதும்
உங்கள் கைகளில் இருக்கும். ஆனால்
அதைப் பிடித்து வைக்க கைகளை மூடினால்,
காலியான வெறும் கைகள்தான் இருக்கும்!

வாழ்க்கை, ஓடும் ஆறு போன்றது. அதை நிகழ அனுமதித்தால் அது தொடர்ந்து உங்கள் மூலம் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதை உரிமைகொள்ள நினைக்கும் கணமே நீங்கள் வெறும் கைகளுடந்தான் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையையேகூட நீங்கள் பிடித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை.

எதுவுமே நிரந்தரமாக உங்களுடன்
இருக்கப்போவதில்லை என்பதை உங்கள் உள்
வெளியில் உணர்ந்த கணமே, ஒரு ஆழ்ந்த
குணமளிக்கும் தன்மை, ஒரு இனிமையான
தென்றல் உங்கள் விழிப்புணர்வுக்குள்
நுழையும். உங்கள் மொத்த உள் உலகமும்
குணம் பெற்றிடும்.

நீங்கள் உங்கள் உள்வெளியில் பல காயங்களை வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஆசையால் உருவாக்கப்பட்ட காயங்கள், தோல்விகளால் உருவாக்கப்பட்ட காயங்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களால் உருவாக்கப்பட்ட காயங்கள் எனப் பல காயங்கள் உங்களுக்குள் இருக்கும். இந்த ஒரே மருந்தாலேயே, எல்லாக் காயங்களும் குணமாகிவிடும்.

இந்த ஒரு புரிதல் போதுமானது. வாழ்க்கை நோக்கமற்றது, எதை அடைந்தாலும் அது ஒன்றுமில்லாதது, எதுவுமே உங்களுடன் இருக்கப் போவதில்லை. இவற்றைப் புரிந்து கொண்டால் போதும்.

மரணத்தின் முன் சிரிப்பவரே ஞானி

அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சின்ன கதை :

மாவீரர் அலெக்ஸாண்டர், பல கொலைகளைப் புரிந்த அவரை ஒருபோதும் மாவீரர் என்று அழைக்க முடியும். தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அலெக்ஸாண்டர் 'பெரிய வீரர்' என்று கற்றுக்கொடுக்காதீர்கள். அப்படிச் சொல்வதால் அவர்களைக் கொலை புரியத் தூண்டுகிறீர்கள்! போர் புரியத் தூண்டுகிறீர்கள். உணர்வற் நிலையில் இந்தக் கருத்தை அவர்கள் தலைக்குள் திணிக்கிறீர்கள். ஒருபோதும் அதைச் செய்யாதீர்கள். நல்லது, ஆமாம் அவர் ஒரு நல்ல காரியம் செய்தார். அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ, அவர் இந்தியாவில் ஒரு ஞான குருவைச் சந்தித்தார். க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த அவருடைய ஆசிரியர், "இந்தியாவில் இருந்து ஞானமடைந்த குரு ஒருவரையும் வேதங்களையும் கொண்டுவா. மொத்தச் சமுதாயத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

அதனால் அலெக்ஸாண்டர் குறைந்த பட்சம் ஒரு ஞானியையாவது இந்தியாவிலிருந்து அழைத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்தார். எப்படியோ ஒரு ஞானியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரை“தயவு செய்து எங்கள் நாட்டிற்கு வாருங்கள்,” என்று அழைத்தார்.

அந்த குரு உடனே சிரித்துவிட்டு சொன்னார்.
"இல்லை! எனக்கு எங்கும் வர விருப்பம்
இல்லை. நான் இங்கே சந்தோஷமாக
இருக்கிறேன்."

அலெக்ஸாண்டர் சொன்னார். "இல்லை! தயவு
செய்து வர வேண்டும் நான் உங்களுக்குப்
பெரிய மாளிகையையே தருகிறேன். இங்கே
நீங்கள் போதுமான துணியும் உணவும்
இல்லாமல் பிச்சைக்காரனைப்போல்
இருக்கிறீர்கள். என்னுடன் வாருங்கள். நான்
உங்களுக்கு எல்லா வசதிகளுடன் கூடிய
பெரிய மாளிகையைத் தருகிறேன்."

எதுவுமே நிரந்தரமாக
உங்களுடன்
இருக்கப்போவதில்லை
என்பதை
உங்கள் உள் வெளியில்
உணர்ந்த கணமே,
ஒரு ஆழ்ந்த
குணமளிக்கும் தன்மை,
உங்கள்
விழிப்புணர்வுக்குள்
நுழையும்.

குரு சிரித்துவிட்டு, "இல்லை. நான் இங்கே சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் உன்னுடன் வர விரும்பவில்லை," என்று தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்.

ஒரு அரசர் அடுத்து என்ன செய்வார் என்பது உங்களுக்குத் தெரியும். முதலில், அவர் குருவிற்குப் பேராசையைக் காட்டி தம் வசப்படுத்த முயற்சி செய்தார். அது வேலை செய்யவில்லை என்றவுடன், அடுத்தபடியாக, பயத்தின் மூலம் அவரை வழிக்குக்கொண்டு வரப் பார்த்தார்.

அலெக்ஸாண்டர் தம் வாளை வெளியில் எடுத்தார். குருவை நோக்கி நீட்டி, "நீங்கள் வரத் தயாராக இல்லையென்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்," என்று சொன்னார். உறையற்ற கத்தியைப் பார்த்தவுடன் குரு சிரித்தார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதாரண சமயங்களில் சிரிப்பது என்பது மிகச் சுலபம், ஆனால் கூர்மையான வாளின் முன் அதைச் செய்வது மிகக் கடினம். முக்கியமாக அதைப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அரசர். ஏனென்றால் அவர் கொலை செய்தால், அவரைக் கேள்வி கேட்கக்கூட அங்கே யாரும் இல்லை.

ஆனால் அந்தக் கூர்மையான வாளுக்கு முன் குரு சிரித்துவிட்டுச் சொன்னார். "முட்டாளே! நீ ஒரு பொய்‌யன்!" அலெக்ஸாண்டரின் கண்களை நேரடியாக ஊடுருவிப் பார்த்துவிட்டு, "முட்டாளே! நீ ஒரு பொய்‌யன்," என்று சொன்னார்.

முதல் முறையாக அலெக்ஸாண்டர் ஆடிவிட்டார். முதல் முறையாக அவர் அச்சம் கொண்டார்! அலெக்ஸாண்டர் குருவைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் பயப்படவில்லையா?"

குரு பதில் சொன்னார் "எதைப்பார்த்து பயம். உன்னால் என்னை ஒருபோதும் கொல்ல முடியாது. நீ வேண்டுமானால் இந்த உடலை அழிக்கலாம். ஆனால் என்னைக் கொல்ல முடியாது."

கீதையில் படித்த ஸத்ய கருத்துக்களை, நம்முடைய ஆன்மீக அனுபூதியாக்கும்போது, இந்தத் துணிவும் தன்னம்பிக்கையும்தான் நமக்குக் கிடைக்கும்.

நைநம் சிந்தந்தி ச'ஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: |
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந சோ'ஷயதி மாருத: // 2.23

ஆத்மா

அதன் பொருள் என்னவென்றால், ஆத்மாவைக் கொல்ல முடியாது. அதை அழிக்க முடியாது. அதை எரிக்க முடியாது.

இந்த வாக்கியங்கள் அந்த குருவிற்கு அனுபவமாக ஆகியிருந்தது. அதனால்தான் அவருக்கு இத்தகைய மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தது. அவர் வெறுமனே சிரித்தார். மெதுவாக, அலெக்ஸாண்டர் யோசிக்கத் தொடங்கினார். "என் கூர்மையான வாளின் முன் அவரால் சிரிக்கமுடிகிறது என்றால் எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் அவருக்கு!" முதல் முறையாக ஆடிப்போனார்.

ஏனென்றால் கூர்மையான ஊடுருவிய வாளின் முன் சிரிக்க முடிகிற ஒருவரை அவர் இதுவரை பார்த்தில்லை. சாகும் நிலையில் யார்தான் சிரிக்க முடியும்? அலெக்ஸாண்டரேகூட பயப்படும் நிலை அது!

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மிகப்பெரிய வீரர்கள் என்றழைக்கப்பட்ட அனைவரும் கோழைகள்தான். தாங்கள் கொல்லப்படுவதற்கு முன் இவர்கள் மற்றவர்களைக் கொன்று விடுகிறார்கள், அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து மரணபயத்திலேயே வாழ்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் மற்றவர்களைக் கொல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய கோழைத்தனத்தை மறைக்கவும் அல்லது மரணபயத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் மற்றவர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அலெக்ஸாண்டர் முழுவதுமாக ஆடிப்போனார். குருவின்துணிவைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். "தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள் நீங்கள் எப்படி இவ்வளவு மன தைரியத்துடனும் துணிவுடனும் இருக்கிறீர்கள்?"

குரு அவரிடம் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார், "நீ ஏன் இந்தியாவிற்கு வந்தாய்?"

"இந்தியாவை வெற்றிகொள்ள வந்தேன்," என்று அலெக்ஸாண்டர் பதில் சொன்னார்.

குரு தொடர்ந்தார், "அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாய்!"

அலெக்ஸாண்டர் தன்னம்பிக்கையுடன்
பதில் சொன்னார், "அடுத்த
தேசத்தை வெற்றிகொள்வேன்."

குரு விடவில்லை "அதற்குப் பிறகு?"

"உலகம் முழுவதையும் வெற்றிகொள்வேன்," என்று அலெக்ஸாண்டார் பதில் சொன்னார்.

sidebar background

கீதையில் படித்த
ஸத்ய கருத்துகளை,
நம்முடைய ஆன்மீக
அனுபூதியாக்கும்போது,
துணிவும்
தன்னம்பிக்கையும்தான்
நமக்குக் கிடைக்கும்.

குரு மேலும் கேள்வியைத் தொடர்ந்தார் "அதற்குப் பிறகு?"

அலெக்ஸாண்டர் பதில் தந்தார்! "நான்
அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மீதி
நாள்களைக் கழிப்பேன்."

குரு சொன்னார், "முட்டாளே! அதைத்தானே நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்!"

மேலும் குரு தொடர்ந்தார், "அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீ பார்க்கவில்லையா? நீ அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உலகம் முழுவதும் சென்று வெற்றிகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இப்போது உன் கண்களுக்கு எதிரிலேயே அதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன்!"

வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டவரால் மட்டுமே, சாகும் தருணத்தில்கூட பரபரப்பின்றி அமைதியாகவும் முழுமையான சர்டாணகதி உணர்வுடனும் இருக்க முடியும். அந்த குரு, அலெக்ஸாண்டருக்கு ஸத்யத்தின் ஒரு துளியைக் காட்டினார்.

அதனால்தான் அலெக்ஸாண்டர் தம் அமைச்சர்களிடம் சொன்னார், "என் மரணத்திற்குப் பின் சவ ஊர்வலத்தின்போது, தயவு செய்து என் கைகளை மற்றவர்கள் பார்க்கும்படி சவப்பெட்டிக்கு வெளியில் விரித்து வையுங்கள். மக்கள் தெரிந்துகொள்ளட்டும், மாவீரர் அலெக்ஸாண்டரால்கூட சாகும்போது தன்னுடன் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புரியட்டும்."

அலெக்ஸாண்டர்கூட தன்னுடன் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.

இது மிக அழகான கதை.

மூன்று விஷயங்களை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் விஷயம், அந்த ஞானியால் வெளிப்படுத்தப்பட்ட துணிவும் தன்னம்பிக்கையும்.

> மிகப்பெரிய வீரர்கள்
> என்றழைக்கப்பட்ட
> அனைவரும்
> கோழைகள்தான்.

இரண்டாவது விஷயம், நம்முடைய ஓட்டத்தின் நோக்கமற்ற தன்மை. எதற்காக அலெக்ஸாண்டார் ஓடிக்கொண்டிருந்தார்? தளர்வாக இருந்து அனுபவிப்பதற்குத்தானே. குரு ஏற்கெனவே அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்!

மூன்றாவது விஷயம், நாம் உலகைவிட்டுப் போகும்போது எதையும் கையில் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதுதான். உலகமே உங்களை அரசர் என்று வழிபட்டாலும் நீங்கள் அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது! மரணம் வரும்போது நீங்கள் வெறும் கைகளுடன்தான் செல்ல வேண்டும்.

மரணம் வரும்போது நீங்கள் வெறும் கைகளுடன்தான் செல்ல வேண்டும்.

தலைவர், தொண்டர் என்கிற வேறுபாடு எல்லாம் பிரபஞ்சத்திற்குக் கிடையாது.

பைத்தியக்காரர்கள்கூடத் தங்களை அரசன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதே சமயம், சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களும் தங்களை அரசர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஏன் முதலாமவர்கள் மன நல விடுதியில் வைக்கப்படுகிறார்கள், இரண்டாமவர்கள் மதிக்கப்படுகிறார்கள்?

எந்த மனிதர் அவர் சொல்லுகிற விஷயங்களை மற்றவர்களைத் தந்திரமாக நம்பவைத்து, அவர் சொல்வதைக் கேட்க வைக்கிறாரோ அவருக்கு மரியாதை தரப்பட்டு, சிம்மாசனம் அளிக்கப்படுகிறது.

களங்கமற்ற மனிதர்கள், தந்திரமாக இருக்க இயலாதவர்கள், மற்றவர்களை பயமுறுத்தியாவது, தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள செய்ய முடியாதவர்கள், இப்படிப்பட்டவர்கள் மன நல விடுதியில் சேர்க்கப்படுகிறார்கள், அவ்வளவுதான்.

பிரபஞ்சத்தில், பைத்தியக்கார மனிதர் என்றோ அரசர் என்றோ ஒருவரும் இல்லை. இருவரும் ஒன்றுதான். தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்பச் செய்பவர் சிம்மாசனத்தில் அமர்கிறார். அந்த அளவு கபடத் தன்மை இல்லாதவர் மன நல விடுதியில் அமர்கிறார்.

ஒரு சின்ன கதை :

இந்தியாவில் ஒரு மனிதர் திடீரென்று தம்மை ஜவஹர்லால் நேரு என்று நினைத்துக்கொண்டு, அதை மற்றவர்களிடமும் வலியுறுத்தத் தொடங்கினார். அந்த நேரத்தில், ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

அவர் வெறுமனே வலியுறுத்தி மட்டுமே இருந்தால் பரவாயில்லை. நேருவைப்போல உடையணிய ஆரம்பித்தார். அதுவும்கூட பரவாயில்லையாக இருந்தது. அவர் அரசாங்க அலுவலர்களுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்து, ‘ஜவஹர்லால் நேரு’ எனக் கையெழுத்திட ஆரம்பித்தார். இதனாலேயே, அவர் மன நல விடுதிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஆறு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

quote frame

அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் எப்பொழுதும்போல் சாதாணமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். "உன்னை வீட்டிற்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன்," என்று டாக்டர் சொன்னார். அவரை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நாளில் துரதிஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ ஜவஹர்லால் நேரு அந்த மன நல விடுதிக்கு வருகை தந்தார்.

அங்குள்ளவர்கள் இந்த மனிதரை அழைத்து வந்து நேருவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். "ஐயா, நான்தான் ஜவஹர்லால் நேரு என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இவர்தான்," என்றார்கள்.

அறிமுகத்திற்குப் பின் அந்த மனிதர் நேருவிடம் கேட்டார், "நீங்கள் யார்?"

"நான் ஜவஹர்லால் நேரு," என்று நேரு சொன்னார்.

உடனே அந்த நோயாளி சொன்னார், "நீங்கள் ஜவஹர்லால் நேருவா? நானும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். தயவு செய்து இங்கு ஒரு ஆறுமாதங்கள் தங்குங்கள். அவர்கள் உங்களுக்குச் சிகிச்சை செய்து சரிசெய்து விடுவார்கள்!"

புரிந்துகொள்ளுங்கள், இவ்விருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எப்படியோ ஒருவர்தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்ப வைத்துவிட்டார். மற்றவரால் அது முடியவில்லை அவ்வளவுதான்! வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம், எல்லைகள் கிடையாது, பதவி கிடையாது.

வெளி உலகத்தில் வசதிகள் வைத்திருப்பது நமக்கு உள் உலகத்தில் பூரண தன்மையைக் கொடுக்கும் என்று நினைக்காதீர்கள். ஒருபோதும் அது முடியாது! எல்லா வளர்ந்த நாடுகளும் மன அழுத்தத்தில் இருக்கின்றன.

வளர்ந்த நாடுகள் எல்லாமே சிறந்த போக்குவரத்து சாலைகள், சிறந்த அணைகள், சிறந்த பாலங்கள் என அனைத்துச் சிறந்த கட்டமைப்புகளையும்கொண்டுள்ளன. ஆனால் அந்த நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் வெளி உலக சுகங்கள் உங்களுக்கு உள் உலக ஆனந்தத்தைத் தந்துவிடும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

உங்களுக்கு உள் உலகம் வேண்டுமானால், அதற்காக முயற்சி எடுத்து வேலை செய்ய வேண்டும். உள் உலகினுடைய இயக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே கிருஷ்ணர், உங்களுக்கு உள் உலகத்தைப் பெறுவதற்கான நுட்பத்தை அளிக்கிறார். நாம் எவ்வாறு செயல்படுகிறோம் அல்லது நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கீழே உள்ள வரைபடம் உங்கள் இருப்புத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.

வரைபடம்

உலக வாழ்வு ஆான்மீக வாழ்வு

பொருள் சார்ந்த வாழ்க்கையைப் படுக்கைக்
கோடும், ஆன்மீக வாழ்வைச் செங்குத்துக்
கோடும் குறிக்கின்றன. இந்த இரண்டில்
எதைத் தேர்வு செய்வது என நீங்கள்
தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள். படுக்கைக்
கோடா, அல்லது செங்குத்துக் கோடா,
இந்தப் பாதையா அல்லது அந்தப்பாதையா,
பொருள் சார்ந்த வாழ்வா அல்லது ஆன்மீக
வாழ்வா எனத் தேர்வு செய்ய தொடர்ந்து
கவலைப்படுகிறீர்கள்.

உங்களுக்கு
உள் உலகம்
வேண்டுமானால்,
அதற்காக
முயற்சி எடுத்து
வேலை செய்ய
வேண்டும்.

அதனால் நீங்கள் படுக்கைக் கோட்டிலோ, செங்குத்துக் கோட்டிலோ எங்கேயோ சிக்கி விடுகிறீர்கள். நீங்கள் போக முயற்சி செய்கிறீர்கள். ஆனால் இந்த வழியா அல்லது அந்த வழியா என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள்.

மனம் என்பதே ‘தடுமாற்ற நிலை’ கொண்டதுதான். மனம் என்பதே தடுமாற்ற நிலை தவிர, வேறொன்றும் இல்லை. பொருள் சார்ந்த வாழ்வோ, ஆன்மீக வாழ்வோ, இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றொன்றை இழந்துவிட்டதைப் போன்ற உணர்வு தோன்றும். ஏதோ ஒன்றை இழந்துவிட்ட மன நிலையிலேயே தொடர்ந்து இருப்பீர்கள்.

மனம்தான் ‘நீங்கள்’ என்று நீங்கள் எண்ணும்வரை மனத்துடன் நீங்கள் வாழும்வரை லௌகீக வாழ்வா அல்லது ஆன்மீக வாழ்வா என்கிற பிரச்சினையும் உங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

பொருள் சார்ந்த வெளி உலக வாழ்வில் எப்படி இலக்குகள் வைத்திருக்கிறீர்களோ, அதைப்போலவே ஆன்மீக வாழ்விலும் இலக்குகள் வைத்திருப்பீர்கள். "நான் ஏழு மணி நேரம் த்யானம் செய்ய வேண்டும். நான் முக்தி அடைய வேண்டும். நான் இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும், நான் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்," என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நன்கு தெளிவாகப் பாருங்கள், பொருள்சார்ந்த வெளி உலக இலக்காக இருந்தாலும் சரி, ஆன்மீக வாழ்வின் இலக்காக இருந்தாலும் சரி, இரண்டுமே உங்களைப் பைத்தியமாக்குகிறது. நீங்கள் பைத்தியமாக வேண்டும் என்றால் தொடர்ந்து ஏதோ ஒரு இலக்கைப் பற்றி யோசித்துக் கொண்டிருங்கள். இதுதான் பைத்தியமாவதற்கான சுலபமான வழி!

ஆனால் நீங்கள் உங்களை உணர்வு மையத்தின் ஆழத்துக்குள் இழுத்துக்கொண்டுவிட்டீர்கள் என்றால், இலக்குகளை மறந்து விடுவீர்கள். ஆனாலும் நீங்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்க முடியும். இருப்புத் தன்மைக்குள் உங்களை இழுத்துக்கொள்வதன் மூலம், எப்போதும் எங்கேயாவது ஒரு நோக்கத்தைத் தேடிப்பிடித்து, அதை நோக்கி ஓடும் முயற்சியை நீங்கள் நிறுத்தி விடுவீர்கள்.

பொருள் சார்ந்த இலக்குகளுக்குப் பின் ஓடும் ஒரு மனிதர், எப்போதுமே தாம் ஆன்மீக இலக்கை இழந்து கொண்டிருப்பதாக உணர்வார். இந்தக் காரணத்தினாலேயே எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பணக்கார சமுதாயமும் ஆன்மீக குருக்களைப் பின்பற்றுகிறார்கள். எல்லாப் பணக்கார சமுதாயத்திடமும், தாங்கள் ஆன்மீகத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் பய உணர்வும் இருக்கின்றன.

இந்த நிலையை, நாம் ஒவ்வொரு பணக்கார சமுதாய அமைப்புகளிலும் காணலாம். ஒரு சமுதாய அமைப்பு மிகச் செல்வச் செழிப்பாக இருந்தது என்றால், அந்தச் சமுதாய மக்கள் மிகவும் வலுவான குருவை வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தாங்கள் ஆன்மீகத்தை இழந்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஆழ்ந்த குற்ற உணர்ச்சி வைத்திருப்பதே இதற்குக் காரணம்.

நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அதனால்தான் மதவாதிகள் என்று அழைக்கப்படுகிறவர்களும், செல்வந்தர்களும் எப்போதும் ஒன்றாக இருக்க முயற்சி செய்கிறார்கள். இந்த இரண்டு வகையினரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் பணக்காரருக்கு

நீங்கள் உங்களை
உணர்வு மையத்தின்
ஆழத்துக்குள்
இழுத்துக்
கொண்டுவிட்டீர்கள்
என்றால்,
இலக்குகளை
மறந்து விடுவீர்கள்.

மதவாதியும் மதவாதிக்குச் பணக்காரரும்
தேவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின்
மற்றொரு பகுதியை இழந்துவிட்டதாக
நினைக்கிறார்கள்.

படுக்கைக்கோட்டில் பயணம்
செய்பவர், ஆன்மீக வாழ்வை இழந்து
கொண்டிருப்பதாகவும் செங்குத்துக் கோட்டில்
செல்பவர் பொருள் சார்ந்த வாழ்வை இழந்து
கொண்டிருப்பதாகவும் நினைக்கிறார்கள்.
இருவருமே மன ரீதியாக ஒருவரை
ஒருவர் திருப்திபடுத்த முயற்சி செய்து
கொண்டிருக்கிறார்கள்.

பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள்
ஆன்மீகவாதியின் கருத்துக்களைப் பூர்த்தி
செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள் பொருள்
சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்களின்
கொள்கைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.
ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்
மனிதர் தம்மைச் சுற்றி பணக்காரர்கள்
இருந்தார்கள் என்றால், அவர் எதை
இழந்து கொண்டிருக்கிறாரோ அது பூர்த்தி
செய்யப்படும் என்று நினைக்கிறார்.

எல்லாப் பணக்கார
சமுதாயத்திலும்,
தாங்கள் ஆன்மீகத்தை
இழந்து
கொண்டிருக்கிறோம்
என்ற
குற்ற உணர்ச்சியும்
பய உணர்வும்
இருக்கின்றன.

அதேபோல் உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மனிதர், அவர் ஒரு ஆன்மீகவாதியிடமோ அல்லது மதவாதியிடமோ சென்றால், தாம் நிறைவு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்.

இருவருமே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்கிறார்கள்.

இருப்பின் விழிப்பு, பரிமாணத்தின் வெடிப்பு.

இந்த இருவகை இலக்குகளுமே நோக்கமற்றவைதான் என்பதையும் அதற்குப் பின்னால் ஓடும் நோக்கமற்ற தன்மையையும் உணர்ந்து கொண்ட மனிதர், தம் இருப்புத் தன்மையில் திரும்பவும் ஆழ்ந்து விழுந்து விடுவார்.

வாழ்வின் நோக்கம், இலக்கு என்று நீங்கள் எதைக் கருதினாலும் சரி, அவற்றுக்கு எல்லாம் இறுதியில் அர்த்தமே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வாழ்வின் மேல் உள்ள கவர்ச்சி போய்விடும். இலக்கை நோக்கி வியர்வை சிந்தி ஓடவேண்டிய தேவையும் போய் விடுகிற அந்தக் கணமே, நீங்கள் ஓடுவதை நிறுத்தி விடுவீர்கள். நன்றாகக் கவனியுங்கள், நீங்கள் விடுவது உத்சாகத்தை அல்ல; வெறுமனே எதன் பின்னாலேயோ ஓடி, பதட்டப்பட்டு வியர்வை சிந்துவதைத்தான் விடுவீர்கள்!

உங்கள் வாழ்க்கையிலிருந்து நோக்கத்தின் மீது இருக்கிற மரியாதை சென்றுவிட்ட அந்தக் கணமே, நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் விழுந்து விடுவீர்கள்.

ஒரு முக்கியமான விஷயம்;

Firework burst

உங்கள் உள் இருப்புத் தன்மைக்குள் நீங்கள் விழுந்த கணமே, நீங்கள் வெடித்துப் பல பரிமாணங்களில் வெளிப்படுவீர்கள்! நீங்கள் செங்குத்துக் கோடு, படுக்கைக்கோடு ஆகிய இருதிசையில் மட்டுமே வெளிப்படத் தொடங்கமாட்டீர்கள். நீங்கள் எல்லாத் திசைகளிலும் 360ᵒ கோணத்தில் எல்லாப் பரிமாணங்களிலும் வெடிக்க ஆரம்பிப்பீர்கள்.

உங்களால் கற்பனை செய்ய முடிந்த மற்றும் உங்களால் கற்பனை செய்ய முடியாதது எல்லாம் நிகழ ஆரம்பித்துவிடும். உங்கள் கற்பனைக்கு எட்டாத பரிமாணங்களில் வெடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அப்போது மட்டுமே, நீங்கள் உண்மையான பல பரிமாணங்களுடைய மனிதராக மாறுகிறீர்கள்.

தம் இருப்புத் தன்மையில் ஆழ்ந்து மூழ்கிவிட்ட ஒருவர், தம்முடைய இலக்குகளை விட்ட ஒருவர், பிரபஞ்ச இருப்புத் தன்மையினுடைய நோக்கமற்ற தன்மையின் அழகைச் சுவைத்த ஒருவர், தம்மை உணர்ந்த மனிதர், தம் ஆத்மாவில் மூழ்கிவிட்ட மனிதர் 360ᵒ கோணத்தில் எல்லாப் பரிமாணங்களிலும் வெடித்து வெளிப்படுகிறார். அதை மிக எளிமையாக எல்லாத் திசைகளிலும் பரப்புகிறார்!

ஆன்மீக வாழ்வின் உச்சக்கட்ட ஆனந்தத்தையும், பொருள் சார்ந்த வாழ்வின் உச்சக்கட்ட சந்தோஷங்களையும் மற்றும் அதற்கு மேலும் அனுபவமாக உணரத் தொடங்குகிறார்!

நோக்கத்தின் மீது இருக்கிற மரியாதை சென்றுவிட்ட அந்தக் கணமே, நீங்கள், உங்கள் இருப்புத் தன்மைக்குள் விழுந்து விடுவீர்கள்.

இதைய அனுபவமாக பெற்ற ஒருவரே நித்தியமாக இருக்கிற ஆனந்தத்திற்குள், நித்யானந்தத்திற்குள், கிருஷ்ண நிலைக்குள், கிருஷ்ணரின் உணர்வு நிலைக்குள் நுழைகிறார்.

நீங்கள் பொருள் சார்ந்த இலக்குகளிலோ அல்லது ஆன்மீக இலக்குகளிலோ சிக்கியுள்ளவரை நீங்கள் ஒரே ஒரு திசையில்தான் செல்வீர்கள். ஏனென்றால் நீங்கள் உடல் அல்லது மனம் என்றே உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நோக்கங்களில் நீங்கள் அதிகம் சிக்கியுள்ளவரை நீங்கள் உடல் அல்லது மனம் என்ற எண்ணத்திலேயே அதிகமாக இருப்பீர்கள்.

இவை எல்லாவற்றினுடைய நோக்கமற்ற தன்மையை நீங்கள் உணரும்போது, நீங்கள் நேரடியாக உங்கள் இருப்புத் தன்மையின் ஆழத்தில் விழுந்து விடுவீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

உங்கள் உடல், மனம் - நீங்களல்ல!

உங்களை நீங்களே இந்த உடலாகவும்
மனமாகவும் நினைத்துக்கொள்வதுதான்
முதல் பாவம். ஆதாம் ஆப்பிளை
சாப்பிட்டதுதான் முதல் பாவம் என்று
நினைக்காதீர்கள், இல்லை! ஆதாம் செய்த
பாவத்திற்காக நாம் ஏன் வேதனைபட
வேண்டும்? முதல் பாவமானது ஆதாம்
ஆப்பிளைச் சாப்பிட்டது அல்ல. நீங்கள்தான்!
உங்களை நீங்கள் உடல் அல்லது மனம் என்று
நினைப்பதுதான்.

தம் ஆத்மாவில்
மூழ்கிவிட்ட மனிதர்
360° கோணத்தில்
எல்லாப்
பரிமாணங்களிலும்
வெடித்து வெளிப்படுகிறார்.
அதை மிக எளிமையாக
எல்லாத் திசைகளிலும்
பரப்புகிறார்!

உண்மையில், ஒருவர் ஞானமடைய, கீதை முழுவதும் தேவை இல்லை. இந்த ஒரு ஸ்லோகமே போதும். இந்த ஒரு ஸ்லோகமே ஒரு தனிமனிதனை ஞானமடையச் செய்யப் போதுமானது.

பின் ஏன் நான் எல்லா ஸ்லோகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்? ஏனென்றால் இங்குப் பல வகைப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த ஸ்லோகங்கள் எல்லாம் வெவ்வேறு சாவிகள், வெவ்வேறு நுட்பங்கள். இந்த எல்லா ஸ்லோகங்களை விளக்குவதற்கு இதுதான் காரணம்.

இந்த ஒரு ஸ்லோகத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, உங்களுக்குள்ளே விழுந்தீர்களானால், வெறுமனே உங்களுக்குள்ளே பார்த்து, இந்த ஸ்லோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே போதும். வீட்டிற்குச் சென்று இதை உங்கள் துணைவிக்கு விளக்குவதற்கோ, மாமியாருக்காகவோ அல்லது நண்பருக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ இல்லாமல்,

உங்களுக்காக, உங்கள் சுயத்திற்காக மட்டுமே இதைச் செய்யுங்கள்.

நான் எப்பொழுது பேசினாலும் நான்
உங்களிடம்தான் பேசுகிறேன் என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள், அதை யாரிடமாவது
திரும்பச் சொல்வதற்காக நீங்கள் உங்கள்
மனத்தில் விளக்க உரையைத் தயார்
செய்யாதீர்கள். நீங்கள் விளக்க உரை
தயார் செய்யும்போது, "நான் சென்று என்
கணவரிடம் இதைச் சொல்ல வேண்டும்.
இது அவருக்கு உண்மையில் தேவை,"
என்ற நீங்கள் எண்ணுகிறீர்கள். இப்படி
எண்ணும்போது, நீங்கள் நிச்சயமாக உங்கள்
சுயத்திற்கான அனுபவத்தை இழப்பீர்கள்!

தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்,
உங்கள் உடல், மனம் -
நீங்களல்ல!

இந்த ஒரு கருத்து உங்களுக்குள் வேலை செய்ய அனுமதியுங்கள். வாழ்க்கை குறிக்கோளற்றது என்கிற ஸத்யம்வேலை செய்ய அனுமதியுங்கள். கண்களை மூடி இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் இந்த ஸத்யத்தைத் தியானியுங்கள்.

'உண்மையில் என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? நான் என்ன செய்கிறேன்? என்ன செய்கிறேன்? நான் எங்குச் செல்கிறேன்? என்ன நடக்கிறது?' என்று மனத்தில் யோசித்து தியானியுங்கள்.

உங்கள் அகக்கண் திறந்ததானால், குறிக்கோளற்ற தன்மையின் அழகை உங்கள் உள் உலகம் அனுபவித்ததானால், அது போதும். நீங்கள் உங்கள் ஆத்மாவிற்குள் ஆழ்ந்து மூழ்கி விடுவீர்கள்.

இப்போது இருக்கிற நிலையில் நீங்கள் பொருள் சார்ந்த வெளி உலகம் அல்லது ஆன்மீக வாழ்வு இரண்டையுமே உங்களால் உணரமுடிவதில்லை. ஏனென்றால் நீங்கள் இங்கே இருக்கும்பொழுது அங்கே பார்க்கிறீர்கள். அங்கே இருக்கும்பொழுது இங்கே பார்க்கிறீர்கள். இரண்டையுமே திடமான விதத்தில் உணர்வதில்லை.

உங்கள் உடல் இருக்கும் இடத்தில் உங்கள் மனம் இருப்பதில்லை. உங்கள் எல்லைக்குள் நீங்கள் வாழ்வதில்லை. ஆற்றின் எதிர்க்கரை எப்போதுமே பசுமையாகத் தெரியும். வேறு ஏதோ ஒன்று உங்களை எப்போதும் அழைத்துக் கொண்டே இருக்கிறது. நோக்கமற்றதின் அழகை உணர்ந்து அனுபவிக்கும்போது மட்டுமே, கர்மயோகம் என்கிற இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

தளர்வாக இருங்கள்! இந்த ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஒரே ஒரு கருத்தை நீங்கள் புரிந்துகொள்வதாலேயே, உங்களின் யோசிக்கும் விதம் முழுவதையும் செயல்படும் விதம் முழுவதையும், வாழும் விதம் முழுவதையும், உருமாற்ற முடியும்.

வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை என்று நீங்கள் புரிந்துகொள்ளும்பொழுது, ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கத் தொடங்குவீர்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீங்கள் ஆழமாகத் தீவிரமாக வாழ ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொரு கணமும் அர்த்தமுள்ளதாகிறது.

வாழ்வு என்பதே நோக்கமுடையதுதான் என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணமே, அது அதன் அர்த்தத்தை இழந்து விடுகிறது. ஒரு மாத உழைப்பிற்கு சம்பளம் ஐம்பதினாயிரம் டாலர்கள் என்று நினைப்பீர்களானால், உங்கள் மதிப்பில் அந்த ஒரு மாதத்தினுடைய விலை வெறும் ஐம்பதினாயிரம் டாலர்கள்தான் என்று தீர்மானிப்பீர்கள்.

‘வாழ்க்கை குறிக்கோளற்றது’ என்கிற இந்த ஸத்யத்தைத் தியானியுங்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களின் ஒருமாத வாழ்க்கை ஐம்பாதாயிரம் டாலர்களைவிட உயர்ந்தது! உங்கள் வாழ்க்கையின் மதிப்பு ஒரு மாதத்திற்கு ஐம்பதினாயிரம் டாலர் என்று நீங்கள் மதிப்பிட்டுக் கணக்கிட்டால், அது பத்து மில்லியன் டாலராகவோ, இருபது மில்லியன் டாலராகவோ அல்லது நூறு மில்லியன் டாலராகவோகூட ஆகலாம். திடீரென்று, யாராவது உங்களிடம் வந்து 'நான் உங்களுக்குத் ஐம்பது மில்லியன் டாலர்கள் தருகிறேன், உங்கள் வாழ்க்கையை எனக்குக் கொடுத்து விடுங்கள்,'' என்று கேட்டால், உங்களால் உங்கள் வாழ்க்கையைக் கொடுத்துவிட முடியுமா? இல்லை! ஆனால் என்ன செய்வது, இப்படித்தான் நீங்கள் கணக்கிட்டு உழைக்கிறீர்கள்!

நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை இதுபோல் தவறாகக் கணிப்பதன் மூலம் நம்முடைய மனம், நம்முடைய நேரம், நம்முடைய உள் உலகம் இவற்றையெல்லாம் விற்கத் தயாராக இருக்கிறோம்.

தர்க்க ரீதியாக, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு விலையை நிர்ணயிக்கிறீர்கள். ஒருமுறை விலையை நிர்ணயித்துவிட்டால், உங்கள் மனத்தில் அந்த விலைதான் நிற்கிறது. நீங்கள் வேலையையே மறந்து விடுகிறீர்கள், மிகவும் அழகான வாழ்வையே மறந்து விடுகிறீர்கள். அதனால் அதை நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.

வாழும் ஒவ்வொரு கணமும் ஆனந்தமே

இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு, இந்த முழுமைக்கு ஒரு நோக்கம் உண்டு என்று நீங்கள் நினைத்தீர்களானால், பிறகு அந்தப் பகுதி, அந்தப் பாகம் அதன் அர்த்தத்தை இழக்கிறது. முழுமைக்கு ஒரு நோக்கம் இல்லை என்று உணரும்போது, அந்தப் பகுதியானது, அந்தப் பாகமானது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகி விடுகிறது. நீங்கள் வாழ்கிற, ஒவ்வொரு நாளுமே, அழகாக மாறிவிடும்.

உங்கள் அன்றாட வாழ்க்கையே, நீங்கள் நிற்பது, உட்காருவது, நடப்பது, வாழ்வது என்று எல்லாமே ஆனந்தமயமான அனுபவமாக மாறிவிடும்.

அதனால்தான் ஸத் சித் ஆனந்தம் என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம், 'இருப்பு நிலையின் ஆனந்தம். உங்கள் இருப்புத் தன்மையே ஆனந்தமயமானது. உங்கள் வாழ்க்கையின் முடிவில்தான் உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டியது இல்லை!

> வாழ்வு என்பதே
> நோக்கமுடையதுதான்
> என்று
> நீங்கள் நினைக்கும்
> அந்தக் கணமே,
> அது
> அதன் அர்த்தத்தை
> இழந்து விடுகிறது.

உங்கள் இருப்பு நிலையே ஆனந்தமயமானது.
இருப்பு என்பதன் பொருளே ஆனந்தம்,
நிலையான ஆனந்தம், நித்யானந்த என்பதுதான்.
இதுதான் நித்யானந்த நிலை. ஆனால் நீங்கள்
அந்த ஆனந்தத்தை நோக்கி அடி எடுத்து
வைக்க வேண்டியுள்ளது.

மனிதன், தம்முடைய சுபாவத்தினாலேயே,
செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
'தம்முடைய சுவாத்தினாலேயே' என்று

நான் சொல்லும்போது, புலன்களை
ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தியே ஆக
வேண்டுமென்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

நீங்கள் முயற்சி செய்து புலன்களைக்
கட்டுப்படுத்தி, வெளி உலகில் எந்தச்
செயலையும் செய்யாமல் இருந்தால்க்கூட,
அந்தக் கட்டுப்படுத்துதல் என்ற செயலே
கூட, தன்னளவில் ஒரு செயலாகிவிடுகிறது.
அதுவும் ஒரு செயலே.

உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுக்க
வேண்டியது, எப்படிச் செயலைச் செய்வது
என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கிறது.

முழுமைக்கு
ஒரு நோக்கம் இல்லை
என்று உணரும்போது,
நீங்கள் நிற்பது,
உட்காருவது, நடப்பது,
வாழ்வது என்று
எல்லாமே
ஆனந்தமயமான
அனுபவமாக மாறிவிடும்.

இங்கே கிருஷ்ணர், இதற்குப் பதில் அளிக்கிறார். நாம் செயலை ச்ரத்தையுடனும் செயலின் பலனில் பற்று வைக்காமலும் செயலாற்ற வேண்டும் என்று சொல்லுகிறார்.

நீங்கள் எதிர்பார்ப்பதைப் போன்ற பலனை அது தருமா அல்லது தராதா என்பதைப் பற்றிய தேவையற்ற கவலைகள் இல்லாமல், நீங்கள் செயலில் ஈடுபடுங்கள்.

நாம் வேலை செய்யும்போது, நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் இருந்ததானால், இப்போது நாம் நிகழ்கால நிமிடத்தில் இருக்க மாட்டோம். நான் சொல்வது சரிதானே? பிறகு எப்படி நாம் நம் முழு ஆற்றலுடன் செயலாற்ற முடியும்?

என்னுடைய மனம் முழு ஆற்றலுடன் நான் செய்து கொண்டிருக்கிற வேலையில் மூழ்காமல் இருக்கும்போது, என்னுடைய வேலையை நான் ச்ரத்தையுடன் செய்கிறேன் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்? இது சாத்தியம் இல்லை.

நான் என்னுடைய முழு ஆற்றலுடன் செயல்படாமல் இருந்தேன் என்றால், நான் விரும்பிய பலனை எப்படி அடைய முடியும்?

எப்போது நீங்கள் கவலைப்படுவீர்கள் அல்லது பயப்படுவீர்கள்? ஒரு பலனை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, எழுதப்படாத எதிர்பார்ப்புகள் இருக்கும்போது, ஒரு செயலின் பலனாக ஏதோ ஒன்றை அடைய உங்களுள் விழிப்புணர்வற்ற ஆசை உண்டாகும்போது பயப்படுவீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், "ஆசையை விட்டு விடு, எதிர்பார்ப்பை விட்டு விடு!"

"நாம் எதிர்பார்ப்புகளை விட்டு விட்டோம் என்றால், எப்படி நம்மால் செயல்பட முடியும்?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

நான் திட்டமிட வேண்டாம் என்றோ அல்லது ஏதோ ஒன்றை யோசிக்காமல் செய்ய வேண்டும் என்றோ சொல்லவில்லை.

நான் சொல்கிறேன்,

வேலை செய்யும்போது, நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் இருந்ததானால், பிறகு எப்படி நாம் நம் முழு ஆற்றலுடன் செயலாற்ற முடியும்?

"திட்டமிடுங்கள், ஆனால் மன ரீதியாக அல்லாமல் கால வரிசைப்படி திட்டமிடுங்கள்."

இரண்டு விஷயங்கள் இருக்கின்றன: ஒன்று, கால வரிசைப்படி திட்டமிடுவது, மற்றொன்று, மன ரீதியாகத் திட்டமிடுவது. காலவரிசைப்படி திட்டமிடுவது என்பது நேர அளவை வைத்துத் திட்டமிடுதல், நீங்கள் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும், உங்கள் காலை வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது, அலுவலகத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது என்பதைப்போல பல செயல்களை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். இது உங்கள் வேலைகளைச் செய்வதற்கான நடைமுறை வழி. நடைமுறையில் செயல்களைச் செய்ய, இந்த வகையில் திட்டமிட்டு நீங்கள் செயல்களை ஒருங்கிணைக்கும்போது அது மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இதோடு நாம் நிற்பதில்லை, நாம் திட்டங்களை நம்முடைய தலைக்குள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறோம். இதை நம்மால் செய்ய முடியுமா என்பதைப் பற்றி பல்வேறு வழியில் யோசிக்கத் தொடங்குகிறோம். 'இப்படி ஆனால் என்னாகும்? அப்படி ஆனால் என்னாகும்' என்று ஊகித்துக்கொண்டே இருக்கிறோம். எதிர்பாராமல் நிகழ்கிற பின் நிகழ்வைத் திட்டமிடுகிறேன் என்ற பெயரில் நாம் கவலைப்பட மட்டுமே செய்கிறோம். இதன் மூலம் எந்த ஒரு மாற்றுத் தீர்வையும் நாம் பெற முடியாது. எதிர்பாராமல் நிகழ்கிற நிகழ்வுகளைத் திட்டமிடுதல் என்பது மாற்றுத் தீர்வுகளை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மாற்றுத் தீர்வுகள் உருவாவதற்கு அது உதவி புரியக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது நம்முடைய சக்தியை உறிஞ்சாது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அந்தத் திட்டம் நாம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால் என்ன செய்வது, நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற சிந்தனையில் இருக்கிறோம். அதற்குப் பதிலாக, மனத்தைக் கடந்த விழிப்புணர்வைச் செலுத்தி பாரபட்சமற்ற முறையில் அந்தப் பிரச்சினையை அணுகும்பொழுது, பிரச்சினைக்குரிய தீர்வு தானாகவே கிடைத்துவிடும்.

> “திட்டமிடுங்கள், ஆனால்
> மன ரீதியாக அல்லாமல்
> கால வரிசைப்படி
> திட்டமிடுங்கள்.”

ஆனால் நாம் மொத்த விஷயத்தையுமே,
மொத்த நிகழ்வையுமே சிக்கலாக்கி
விடுகிறோம். நாம் எதிர்பாராத பின்
நிகழ்வு சூழ்நிலைகளைப் பற்றி நினைத்து,
நம்முடைய யோசிக்கும் திறனில் எதிர்மறை
எண்ணங்களைக்கொண்டு வருகிறோம்.
ஆனால் நமது விழிப்புணர்வற்ற மனத்தில்,
“அது போன்ற ஒரு சூழ்நிலை நம்
வாழ்வில் உருவாகாது என்றே நம்பத்
தொடங்குகிறோம்.

எதிர்பாராத பின்நிகழ்வுகளைப் பற்றி நாம் திட்டமிடும்போது நாம் மற்றொரு விஷயத்திற்காகவும் தேவையில்லாமல் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம். அதாவது, நாம் திட்டமிடும்போது நிகழ்வதற்கு சாத்தியமான எல்லா எதிர்பாராத பின் நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டோமா அல்லது எதையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம்.

மன ரீதியான திட்டமிடுதல் உங்கள் அஹங்காரத்தை அதிகமாக்குகிறது. நீங்கள் மிக உயர்ந்தவர், சிறந்தவர் என உங்களை நினைக்க வைக்கிறது. அது உங்களை மிகவும் அக்கறை மிக்கவராகவும் பெரிய விஷயங்களைக் கையாள்பவராகவும் நினைக்க வைக்கிறது.

Peacock feather

ஸந்யாஸம் - அது ஒரு பெயரல்ல, ஒரு முத்திரையல்ல, ஒருநிலை!

கிருஷ்ணர் சொல்கிறார்,

"எவர் ஒருவர் பக்திபூர்வமான காரியங்களை எந்தவிதமான பற்றும் இல்லாமல் செய்கிறாரோ, தம் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாரோ அவர், துறந்துவிட்டதாக நடித்துக்கொண்டும், புலன்களைக் கட்டுப்படுத்தியதாகப் பாசாங்குக் காட்டி நடிப் ப வரையும்விட உயர்ந்தவர்.''

பல வகை ஆன்மீக நூல்களைக் கற்றுத் தேர்ந்த, மூளை ரீதியாகச் செயல்படும் தத்துவ ரீதியான, பட்டறிவு பூர்வமான மக்கள் இருக்கிறார்கள். இவர்கள், பக்திபூர்வமான, உணர்வுபூர்வமான வழியில் செயல்படும் சாதகர்களைக் குறைத்து மதிப்பிடுவார்கள்!

தங்களது சுயம் இரட்டையில்லாதது என்கிற வறண்ட புரிதலைக் கொண்ட பட்டறிவாளர்கள், தெய்வத்தின் கால்களில் விழுந்து வணங்குபவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நம்புவார்கள்.

கிருஷ்ணர் இதை உறுதியாக மறுக்கிறார் "இல்லை! அது அப்படி இல்லை!'' என்கிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், உங்களுடைய எதிர்பார்ப்பற்ற தன்மையும் நோக்கமற்ற தன்மையுமே உங்களின் 'உணர்வு நிலையை' வேறுபடுத்திக் காட்டுகிறது.

> மனத்தைக் கடந்த
> விழிப்புணர்வைச் செலுத்தி
> பாரபட்சமற்ற முறையில்
> பிரச்சினையை
> அணுகும்பொழுது,
> பிரச்சினைக்குரிய தீர்வு
> தானாகவே கிடைத்துவிடும்.

ஸந்யாஸம் என்பது ஒருநிலை! இது ஒரு பெயரல்ல! இது ஒரு முத்திரை அல்ல!

எதுவுமே செய்யாமல் இருக்கும் நிலை துறவு நிலை அல்ல. எதுவும் செய்யாமல் உங்களால் ஏது போதும் உட்கார முடியாது. ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தாலும்கூட, நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள், நீங்கள் சுவாசிக்கிறீர்கள், உங்கள் உடலுக்குள்ளே உள் செயல்பாடுகள் நடக்கின்றன, இல்லையா? இந்த உடலைப் பராமரிக்க அவை வேலை செய்ய வேண்டியுள்ளது.

நீங்கள் உள்ளே இழுக்கும் உங்கள் சுவாசமானது ப்ராண சக்தியை உள்ளே எடுத்துச் செல்கிறது, ப்ராண சக்தி, அது உங்களை வாழச் செய்யும் உயிர் சக்தி. சுவாசக் காற்றானது ப்ராணனை உள் எடுத்துச் செல்கிறது, அது அந்த ப்ராணனை உள்ளே விட்டுவிட்டு வெளி வருகிறது. இந்நிகழ்ச்சி இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எதிர்பார்ப்பற்ற தன்மையும்
நோக்கமற்ற தன்மையுமே
உங்களின்
‘உணர்வு நிலையை’
வேறுபடுத்திக்
காட்டுகிறது.

ப்ராணனை, பிரபஞ்சத்திடமிருந்து காற்று மூலமாக உள் வாங்குகிறோம். இந்தச் செயலும் உங்கள் உடலைத் தாங்கி நிறுத்துவதற்காக மட்டுமே நடைபெறுகிறது அதனால் நீங்கள் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

எந்த வேலை செய்வது, எப்படிச் செய்வது, நமக்கு இது சரிபடுமா என்றெல்லாம் சிந்தித்து ஆய்வுசெய்வதைவிட, ஒன்றும் செய்யாமல் இருப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் சோம்பேறித் தனத்திற்கு ஒரு சாக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய தமஸாக எடுத்துக்கொள்ளலாம். தமஸ் என்றால் சோம்பேறித்தனம், மந்தத் தன்மை.

"நான் செய்பவன் இல்லை, புலன்கள்தான் தங்கள் இயல்பின்படி செயல்களைச் செய்கின்றன," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, "பிறகு ஏன் நான் எதையாவது கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டும்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

teளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் இயல்பினாலேயே, நீங்கள் செயல்புரிவீர்கள். உங்கள் பரு உடல், ஸூக்ஷ்ம மனம், காரண சரீரம் இவை அனைத்தும் இயற்கையாகவே செயல்புரிந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

உங்கள் மனத்திடம் எந்த வேலையும் செய்ய வேண்டாம், எதைப் பற்றியும் நினைக்க வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முயற்சி செய்துபாருங்கள். முழுவதும் ஒன்றுமே இல்லாத மனத்துடனும் எந்த விதமான மன ரீதியான செயல்பாடுகளும் செய்யாமல், எதைப் பற்றியும்

நினைக்காமல் உட்கார முயற்சி செய்து
பாருங்கள். வெறுமனே தளர்வாக இருங்கள்.
இந்த எளிய பயிற்சியைச் செய்ய முயற்சி
செய்யுங்கள்.

ஆரம்பத்தில் எதைப் பற்றியும்
நினைக்காமல் இருக்க முயற்சி செய்வீர்கள்.
ஏதாவது எண்ணங்கள் உள்ளே வந்தால்
விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.

ஆனால் சில நிமிடங்களுக்குப் பின், ஏதோ
ஏதோ எண்ணங்கள் வருவதைக் காண்பீர்கள்,
அந்த எண்ணம் கடந்தகாலத்தைப் பற்றியோ
அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ
இருப்பதைப் பார்ப்பீர்கள்.

உங்கள் பரு உடல்,
ஸூக்ஷ்ம மனம்,
காரண சரீரம்
இவை அனைத்தும்
இயற்கையாகவே
செயல்புரிந்தே
ஆகவேண்டிய
கட்டாயம் இருக்கிறது.

ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத, எதையெதையோ பற்றிய எண்ணங்கள் உங்கள் மனத்தில் சென்றுகொண்டே இருப்பதைப் பார்ப்பீர்கள்.

இயல்பாகவே உங்கள் மனம், இது அல்லது அது என்று எதைப் பற்றியாவது நினைக்கும் தன்மை கொண்டது. நீங்கள் வலுக்கட்டாயமாக மனத்தை அமைதிப்படுத்த முயற்சி செய்தால், அடக்கப்பட்ட அமைதியை, அரவமற்ற அமைதியை, ஒரு மரண அமைதியை மனத்தின் மீது நீங்கள் கட்டாயத்தோடு திணிப்பீர்கள். எவ்வளவு நேரம் இப்படி அழுத்தி அடக்கி வைக்க முடியும்? நீங்கள் காவல் காப்பதை நிறுத்திய அடுத்த கணமே, உங்கள் மனம் தன் இயல்புப்படி அலைபாயத் தொடங்கிவிடும்.

illustration

அதனால் வெளிப்படுத்துதலோ
அல்லது அடக்குதலோ தீர்வாகாது.
புலன்கள், மனம் இவற்றின் இயல்பை
விழிப்புணர்வுடன் புரிந்துகொண்டு,
ச்'ரத்தையுடனும் பிக்தியுணர்வுடனும்
வேலையில் ஈடுபடுவது நல்லது.

அதன் இயல்தைத் தெரிந்துகொண்டு ஒரு செயலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, புலன்கள்தான் செயல்படுகின்றன என்கிற விழிப்புணர்வுடன் இருங்கள். விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது செயலிலோ அல்லது பலனிலோ உங்களுக்குப் பற்று வராது. அப்போது நீங்கள் விடுதலை பெற்றவர் ஆவீர்கள். அச்செயலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்.

‘செயலைச் செய்பவன் நான்தான்’ என்று உங்களை நீங்கள் கருதும்போது மட்டுமே, விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்திலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது மட்டுமே அச்செயல் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.

வெற்றியோ, தோல்வியோ - அது

உங்களைப் பாதிக்காது.

கேள்வி: ஸ்வாமிஜி, த்யானத்தால் எங்களைச் செயலற்ற தன்மைக்கு அழைத்துச் செல்ல முடியுமா? த்யானம் மூலம் சஃக்தி பெற வேண்டும் என்பது என்னுடைய உத்தேசமாக இருந்தாலும்கூட, த்யானத்திற்குப் பின் விஷயங்களின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே! அது ஏன்?

இது எல்லோரையும் கவலைகொள்ளச் செய்யும் ஒரு உண்மையான பிரச்சினை.

சாதாரணமாக, நீங்கள் செயல்படும் நிலையில் இருக்கிறீர்கள். அதுதான் ரஜஸ் என்ற நிலை. சீற்றத் தன்மையுடனும் முரட்டுத் தன்மையுள்ள பேரார்வத்துடனும் இருக்கும் நிலை என்று விவரிக்கப்படும் ரஜஸில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் வெளி உலக விஷயங்களைச் சார்ந்திருப்பீர்கள்.

விழிப்புணர்வுடன்
இருக்கும்பொழுது
செயலிலோ அல்லது
பலனிலோ
உங்களுக்குப்
பற்று வராது.

ஏதோ ஒருவகை செயலில், பொதுவாக
உங்கள் மனத்தில் இருக்கிற இலக்கின்
மீதுதான் உங்கள் எண்ணங்கள்
செலுத்தப்படுகின்றன. அந்த இலக்கானது
வியாபாரமாகவோ, கல்வியாகவோ,
வீட்டைப் பராமரிப்பதாகவோ இருக்கலாம்.
பெரும்பாலான மனிதர்களின் நிலை
இதுதான்.

நீங்கள்
தியானத்திற்குள்
சென்று
தீவிரமாகப் பயிற்சி
செய்யும்பொழுது,
இலக்கின் அடிப்படையில்
செய்யப்படுகிற செயலின்
பயனற்ற தன்மையை
நீங்கள் உணர்வீர்கள்.

உங்கள் செயல்களையும் இலக்குகளையும் திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறீர்கள். நீங்கள் தியானத்திற்குள் சென்று தீவிரமாகப் பயிற்சி செய்யும்பொழுது, இலக்கின் அடிப்படையில் செய்யப்படுகிற செயலின் பயனற்ற தன்மையை நீங்கள் உணர்வீர்கள். (முக்கியமாக ஆச்ரம சூழ்நிலையில் நீங்கள் இருக்கும்பொழுது அது நிகழ்கிறது.)

திடீரென்று நீங்கள் செய்யும் அனைத்து வகை செயல்களையும் ஒருவித எதிர்மறை மனப்பாங்கில் பார்ப்பீர்கள். உங்களுக்குள் அதிகமான எதிர்மறை தன்மைகள் மேல் எழுந்து, நீங்கள் செய்யும் செயல்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்று உங்களிடம் சொல்கின்றன.

நீங்கள் இந்த எதிர்மறை தன்மைகளை விடவேண்டும், அவற்றை விடுவதற்கு ஏதாவது வேண்டுமென்று விரும்பும்போது, நீங்கள் தமஸ் என்ற நிலைக்கு, சோம்பேறித்தனமான செயலற்ற நிலைக்குச் செல்கிறீர்கள். அப்பொழுது திடீரென்று, எந்தச் செயலைச் செய்வதற்குமே உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதைக் காண்பீர்கள்.

நீங்கள் வெறுமனே தூங்குவதற்கு விரும்புவீர்கள். அவ்வளவுதான். இது மனச்சோர்வு அல்ல. இது செயல் செய்ய விருப்பமற்ற தன்மை. ஏனென்றால் எல்லாச் செயல்களுமே உங்களுக்கு அர்த்தமற்றதாய்த் தெரிகிறது.

இந்த நிலை சில நாட்களுக்கு நீடிக்கலாம்; ஆனால் அதிக காலம் இருக்காது. அதை நிகழ அனுமதியுங்கள். இந்த நிகழ்விற்குள் செல்ல உங்களை அனுமதியுங்கள். இந்த எதிர்மறை தன்மைகள் அனைத்தும் தங்களுக்குள்ளேயே வேலை செய்து உங்களுக்குள்ளிருந்து வெளியேறட்டும்.

பிறகு மெல்ல மெல்ல நீங்கள் திரும்பவும் விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்குவீர்கள், உங்கள் ஸத்வத்திலிருந்து செயல்படுவீர்கள். உங்கள் சுபாவத்தினாலேயே உங்களால் செயல்படாமல் இருக்க முடியாது என்று கிருஷ்ணர் சொல்வதைப்போல், நீங்கள் மீண்டும் செயல்படுவீர்கள், ஆனால் இப்போது எந்த நோக்கமும் இல்லாமல் செயல்படுவீர்கள்! உங்கள் செயல்களின் பலன்களுக்கு நீங்கள் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க மாட்டீர்கள். செயலின் விளைவுகள் மீது இனி உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இருக்காது; வெற்றியும் தோல்வியும் இனி உங்களைப் பாதிக்காது.

அதனால் த்யானத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் எதை மந்தத் தன்மை என்று நினைக்கிறீர்களோ, அந்த மந்தத் தன்மையில் விழுந்து விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். இது நடக்கக்கூடிய ஒன்றுதான். இது ஒரு வழக்கமான நிகழ்வு. வெறுமனே தொடருங்கள். நீங்கள் நோக்கமற்ற செயலுக்குள் செல்லத் தொடங்குவீர்கள்.

நேரடியாக ரஜஸிலிருந்து, தீவிரத் தன்மையிலிருந்து ஸத்வத்திற்கு, அமைதிக்குச் செல்வதுதான் இயல்பான வளர்ச்சி என்று மக்கள் நினைக்கிறார்கள்.

> சோம்பேறித்தனமான செயலற்ற நிலைக்குச் செல்ல உங்களை அனுமதியுங்கள். இந்த எதிர்மறை தன்மைகள் தங்களுக்குள்ளேயே வேலை செய்து உங்களுக்குள்ளிருந்து வெளியேறட்டும்.

இது அந்த விதத்தில் செயல்படாது. நீங்கள் உங்களுடைய இயல்பான நடவடிக்கையான பரபரப்புத் தன்மையிலிருந்து, தீவிரத் தன்மையிலிருந்து விலகும்போது நீங்கள் முதலில் செயலற்ற நிலையான தமஸில் விழுந்து விடுகிறீர்கள். இதுதான் மனத்தின் செயல்பாடு. மனமானது தீவிரத் தன்மையிலிருந்து, ரஜஸிலிருந்து விலகும்போது, செயலற்ற தன்மையில், தமஸிற்குள் விழுந்து விடுகிறது.

த்யானத்தின் மூலம் இந்த நிலைமாற்றம் நிகழும்போது, செயலற்ற நிலை அதிக காலம் நீடிக்காது. மனம் விரைவில் தளர்வான, அமைதியான நிலையை அடைந்துவிடும். மனம் இடைவிடாது புலன்கள் மூலம் வெளி உலகை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கவனம் வெளிப்புறமே உள்ளது. அது வெளிப்புற எல்லையிலேயே தங்கி விடுகிறது. இருப்பினும் ஆழ்ந்து உள்முகமாக செல்வதற்கான ஒரு ஏக்கமும் அதத்துள்ளே ஆழமாக இருக்கிறது. அதனால் அது வெளிப்புற எல்லையிலிருந்து மையத்தை நோக்கி இடைவிடாமல் தொடர்ந்து இழுக்கப்படுகிறது. அது, இந்தப் பொருள் சார்ந்த உலகிலிருந்து ஆன்மீகத்திற்குவிடாமல் தொடர்ந்து இழுக்கப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல், அது இந்த இரண்டிற்கும் நடுவில் எங்காவது ஓரிடத்தில் தங்கி விடுகிறது. அதனாலேதான் எல்லா மனிதர்களுமே விசித்திரமானவர்கள்தான் என்று நான் சொல்கிறேன்! புலன்கள், அவர்களை வெளிப்புற எல்லைக்கும், இருப்புத் தன்மை, அவர்களை உள் மையத்திற்கும் இழுக்கிறது. ஆனால் மனமானது விசித்திரமான நிலையில், இந்த இரண்டிற்கும் இடையில் தங்கி விடுகிறது.

த்யானம் உள்முகமாகச் செல்ல உதவுகிறது. த்யானத்தின் போது கவனம் புற எல்லையிலிருந்து மையத்திற்கு மாறும்போது, புற எல்லையில் இதுவரை அனுபவித்து வந்த உணர்ச்சிகளுக்கு எதிர்ப்பு எழுகிறது. இது, நம்மைத் தற்காலிகமான செயலற்ற தன்மைக்கும், புற எல்லை அனுபவத்தில் பற்று இல்லாத தன்மைக்கும் அழைத்துச் செல்கிறது.

> மனமானது தீவிரத்தன்மையிலிருந்து, ரஜஸிலிருந்து, விலகும்போது, செயலற்ற தன்மையில், தமஸிற்குள் விழுந்து விடுகிறது.

மையத்தின் ஒரு துளியை, நாம் ஒருமுறை அடைந்துவிட்டால் போதும், அதன் ஒரு துளியை நாம் அனுபவித்துவிட்டால் போதும், இங்கே விருப்பம் என்பதோ, பற்று என்பதோ இருக்காது. எதனிடமும் ஒட்டுதலோ, எதிலும் பெரிய ஆர்வமோ, பெரிய ஈர்ப்போ, பற்றுதலோ இருக்காது. எல்லா அனுபவங்களும், எந்த ஒரு மதிப்பீடும் செய்யப்படாமலும் பற்று இல்லாமலும் பார்க்கப்படும். மையத்தில் எப்போதும் ஆனந்தமே இருக்கும். இதுதான் நித்யானந்த நிலை, எல்லையற்ற பேரானந்த நிலை!

Illustration of hands playing a flute
Krishna playing flute