KAILASA Library/பகவத்‌கீதை/சுயநலமற்ற சேவை நம்மை விடுவிக்கும்Sign in
பகவத்‌கீதை

சுயநலமற்ற சேவை நம்மை விடுவிக்கும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியாக மனப்பான்மையுடன் சுயநலமில்லாமல் செயல்கள்
செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் அவை ஒருவனை
உலகத்துடன் பந்தப்படுத்திவிடும்.

ஓ குந்தியின் மைந்தனே! உன்னுடைய வேலைகளை எனக்காகச்
செய்; அப்போது அவற்றை மிகச்சரியாகச் சிறப்பாகச்
செய்வாய்; விடுதலை பெற்று பற்றற்று இருப்பாய்.

படைக்கும் கடவுளான பிரம்மா, மனித குலத்தைச் சுயநலமற்ற
தியாக உணர்வுடன் படைக்கும் முன்பு, "இந்தச் சுயநலமற்ற
சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப்
பெற்று வாழுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு
விருப்பத்தக்க இயல்பான தனித் திறன்களை அளிக்கட்டும்,"
என்று சொன்னார்.

இத்தகைய சுயநலமற்ற யாகங்களால் மகிழ்ச்சியடையும்

விண்ணுலக வாசிகளும் உன்னை ஆதரிப்பார்கள். ஒருவருக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேன்மையான நன்மையை அடைவீர்களாக.

3.12 சுயநலமற்ற சேவையால் திருப்திபெற்ற விண்ணுலகவாசி கள், நீ விரும்பிய வாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாசிகளுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறானோ அவன் நிச்சயமாகத் திருடன்.

3.13 சுயநலமற்ற சேவை செய்தபின்
உணவை உண்பவர்கள், எல்லாப்
பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
புலன் இன்பத்திற்காகவே உணவு
சமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம்
செய்தவர்களாகிறார்கள்.

வேலையின் மீது இருக்கும் பற்றிலிருந்து
விடுதலை பெற இரண்டு நுட்பங்கள்
இருக்கின்றன. ஒன்று என்னவென்றால் "நான்
செய்பவன் இல்லை," என்று நமக்கு நாமே
சொல்லிக்கொள்வது.

புலன்கள்தான் செயலைச் செய்கிறது, நீங்கள் அல்ல என்று இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே ஞாபகப்படுத்திக்கொள்வதன் மூலம், நீங்கள் செயலிலிருந்து தூர விலகி, 'செயலைச் செய்பவர் நீங்கள் அல்ல' என்கிற விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.

இதைத்தான் கிருஷ்ணர் இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் விளக்கினார்.

மற்றொரு வழியானது, செயலின் பலனைத் தெய்வீகத்திடம் சரணாகதி செய்து விடுவது. பிரபஞ்சத்தை இயக்குகிற முடிவான உயிர் சக்தியிடம் சரணாகதி செய்வது. இந்த நுட்பத்தைத்தான் கிருஷ்ணர் இங்கு அளிக்கிறார். "உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய், அப்போது அவற்றை மிகச் சரியாகத் துல்லியமாகச் செய்வாய்; விடுதலை பெற்று, பற்றற்று இருப்பாய்."

வேலையின் மீது இருக்கும் பற்றிலிருந்து விடுதலை பெற செயலின் பலனைத் தெய்வீகத்திடம் சரணாகதி செய்து விடுங்கள்.

சிரத்தை, சிவனையே கட்டியிழுக்கும் பாசக்கயிறு

ஒரு செயலை சிரத்தையாகவும் தெய்வத்திற்குத் தரும் எளிய காணிக்கையாகவும் நினைத்துச் செய்யும்போது, இந்த சரணாகதி மனப்பான்மை உங்கள் வேலையை முழுமையாகச் செய்ய வைக்கிறது. நீங்கள் விடுதலையும் அடைவீர்கள்.

உங்கள் சொந்த வாழ்க்கையில், இது நடப்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு செயலின் முடிவைப்பற்றி நீங்கள் அளவுக்குளதிகமாகக் கவலைப்படும்போது, அந்த நேரத்தில் அச்செயலைச் செய்பவர் நீங்கள்தான் என்று உண்மையில் நினைக்கிறீர்கள்! அதனால்தான் அந்தச் செயலிலும் பலனிலும் பற்று வைக்கிறீர்கள்.

இப்போதுதான் முடிவைப்பற்றிய பதட்டமும், அழுத்தமும் ஏற்பட ஆரம்பிக்கிறது. நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, இயல்பாகவே, உங்களுடைய உச்சக்கட்ட திறமையில் நீங்கள் செயல்படுவதில்லை. உங்களுடைய அதிகபட்ச திறமையைப் பயன்படுத்தி, செயல்பட முடியாமல் போவதற்கான் காரணம், மதிப்பு மிகுந்த உயர்ந்த உங்களுடைய சக்தியானது பதற்றத்தினால் விரயமாகி விடுகிறது. பிறகு எப்படி உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும்?

> சின்ன தவறுகள்
> செய்ய பயப்பட்டு,
> நீங்கள் அதிக கவனம்
> செலுத்தும்போதுதான்,
> நீங்கள் பெரிய பெரிய
> முட்டாள்தனங்களைச்
> செய்கிறீர்கள்.

நான் எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு, “சின்ன தவறுகள் செய்ய பயப்பட்டு, நீங்கள் அதிக கவனம் செலுத்தும்போதுதான், நீங்கள் பெரிய பெரிய முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள்.”

உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தவறுகள் செய்யாமல் தவிர்க்க முயற்சி செய்வதிலும், மிகச் சரியாக இருக்க முயற்சி செய்வதிலுமே வீணாக்குகிறீர்கள். உங்கள் வாழ்க்கையே முட்டாள்தனமாகி விடுகிறது.

நீங்கள் உங்கள் வேலையைப் பற்றிய பொறுப்போ, கவனமோ இல்லாமல் இருக்கலாம் என்பது இதன் அர்த்தம் அல்ல; தவறுகள் செய்ய உங்களுக்குப் போதுமான தைரியம் இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.

நீங்கள் தவறுகள் செய்யும்பொழுது மட்டுமே,
உங்களால் அதிலிருந்து கற்றுக்கொள்ள
முடியும். அப்போது மட்டுமே நாணயத்தின்
இரண்டு பக்கங்களையும் நீங்கள் பார்க்க
முடியும்.

பிறகு, உங்கள் அனுபவங்களின் மூலமாகவும்,
தவறிலிருந்து கற்றுக்கொண்டதன்
மூலமாகவும் உங்களுக்கு விஷயத்தின்
இரண்டு பக்கங்களைப் பற்றியும் தெளிவான
பார்வை கிடைக்கும். இல்லையென்றால்,
சரியாக இக்கட்டான நேரத்தில் தவறுகள்
செய்வீர்கள்? செய்கிற வேலைகளின்
மீதும், முடிவின் மீதும் பற்றுவைக்காமல்
இருக்கும்போதுதான் இந்தத் தைரியம் வரும்.

பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நோக்கம் இல்லை என்பதையும் அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பான கரங்கில்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, தளர்வடைகிறீர்கள்; அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமே சரணடைகிறீர்கள்.

நீங்கள் இதுபோல் தளர்வான மன நிலையில் இருக்கும்போது, மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள். 'நான் செய்பவன்' என்கிற உணர்வில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உற்சாகமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். சின்ன தவறுகள் செய்வதைப் பற்றிய கவலைகள் உங்களுக்குள் இருக்காது. இந்தப் புரிதல் உங்களுக்குள் அனுபவமாக மாறும்போது உண்மையான சரணாகதி நிகழும்.

ஒரு அழகான கதை :

தம் வாழ்க்கையில் பல कष्टங்களை
அனுபவித்த ஒருவர், தம் வாழ்க்கையில்
இனியும் அனுபவிக்க எதுவும் இல்லை,
போதுமான அளவு அனுபவித்து ஆயிற்று
என்ற முடிவுக்கு வந்தார். ஒரு ஞான
குருவைக் கண்டு விடுதலை அடைய
வேண்டும் என்ற விருப்பத்தில் காட்டிற்கு

ஓடிச் சென்றார். அவர் இரவு பகல் பாராமல் ஒரு ஞான குருவைத் தேடினார். ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு அவர் முடிவிற்கு வந்தார். "இந்தச் சாலையில் முதலில் யார் வருகிறார்களோ, யாரை நான் முதலில் சந்திக்கிறேனோ, அவரை என் குருவாக ஏற்றுக்கொள்வேன், அவ்வளவுதான். நான் அவர் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன். கடவுளே! நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். சரியானவரை அனுப்பி என்னை வழி நடத்துங்கள், அதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்!" என்று பிரார்த்தனை செய்துவிட்டு, கீழே அமர்ந்து பொறுமையாகக் காத்து இருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாலை நேரம் அந்த வழியாக ஒருவன் ஓடி வந்தான்.

இந்த மனிதர் சென்று அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். "குருவே, என்னைக் காப்பாற்றுங்கள். நீங்கள்தான் என் கடவுள்! ஞானத்தை அடைவது எப்படி என்று எனக்குப் போதியுங்கள்."

அதற்கு அவன் "என்ன இது? என்னை விடு! நான் ஒரு திருடன். அரண்மனையிலிருந்து இப்போதுதான் திருடிவிட்டு வருகிறேன். அரண்மனைக் காவல்காரர்கள் என்னைத் துரத்துகிறார்கள்," என்று சொன்னான்.

அந்த மனிதர், "இல்லை இல்லை, நீங்கள்தான் என்னுடைய கடவுள்! நீங்கள்தான் என்னுடைய குரு! நீங்கள்தான் எனக்கு ஞானத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும்," என்றார்.

திருடனோ, "முட்டாளே! திருடிய பொருட்கள்
என்னிடம் இருப்பதை நீ பார்க்கவில்லையா?
அரண்மனையை இப்போதுதான் சூறையாடி
விட்டு வருகிறேன். என்னைப் போகவிடு,
இல்லையென்றால் உன்னைக் கொன்று
விடுவேன்," என்று சொன்னான்.

அந்த மனிதர் சொன்னார், "அது எல்லாம்
எனக்குத் தெரியாது. நீங்கள்தான் என் குரு.
எனக்கு ஞானத்தைக் கொடுங்கள்."

> சரணாகதிக்கு
> அபரிமிதமான
> சக்தியும் ஆற்றலும்
> உண்டு.

இவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்த திருடன் சிறிது நேரம் யோசித்து விட்டுப் பிறகு சொன்னான் "சரி, நான்தான் உன் குரு என்கிறாய். நான் என்ன சொன்னாலும் நீ செய்வாயா?"

அந்த மனிதர் "ஆமாம், நான் நிச்சயமாகச் செய்வேன்," என்றார்.

திருடன் சொன்னான், "கீழே உட்கார்." அந்த மனிதர் உட்கார்ந்தார். திருடன் சொன்னான், "உன் கண்களை மூடு." அவரும் கண்களை மூடினார். "நான் திரும்ப வந்து திறக்கச் சொல்லும்வரை உன் கண்களைத் திறக்காதே," என்று சொல்லிவிட்டுத் திருடன் ஓடிவிட்டான்.

> பிரார்த்தனையானது உங்களுடைய உள் ஆற்றலை விழிப்படையச் செய்து உங்கள் மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது.

அந்த மனிதர் ச்ரத்தையுடன் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். அந்த மனிதர் பலமணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருந்தார். மெதுவாக நாட்கள் நகர்ந்தன. ஒரு வாரம் சென்றது; ஒருமாதம் சென்றது. அந்த மனிதர் உணவு, நீர் இல்லாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்தார்.

கதை என்ன சொல்கிறது என்றால், அந்த மனிதரின் ச்ரத்தையின் ஆழத்தைப் பார்த்த சிவன், அவர் முன் வந்து அவருக்கு ஞானத்தை அளித்தார்!

இது ஒரு கதைபோல் தோன்றலாம். ஆனால் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அதற்குப் பின் ஒரு அழகான கருத்தும் ஸத்யமும் உள்ளது. அது, ச்ரத்தை இருந்தாலே போதுமானது, வேறு எதுவும் தேவை இல்லை என்பதுதான்.

சரணாகதியே புத்திசாலித்தனம்

சரணாகதிக்கு அபரிமிதமான சக்தியும் ஆற்றலும் உண்டு. நீங்கள் ஒரு விக்ரஹத்தினிடமோ, ஒரு மனிதரிடமோ, ஒரு குருவிடமோ அல்லது பாறையிடமோ சரணாகதி செய்தாலும் பரவாயில்லை. அது முக்கியமல்ல. எது முக்கியம் என்றால் சரணாகதி என்ற அந்த செயல்தான் முக்கியம்.

விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது, உங்கள் பிரார்த்தனையானது உங்களுடைய சொந்த உள் ஆற்றலை விழிப்படையச் செய்து உங்கள் மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது."

நீங்கள், இதைத் தர்க்க ரீதியாகப் பார்த்தாலும், சரணாகதி உங்களைத் தளர்வாக வைக்க உதவுகிறது. நீங்கள் தளர்வாக இருக்கும்போது, முன்பே தீர்மானித்த பட்டறிவுப்பூர்வமான செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதைவிட, மிக அழகாகப் புத்திசாலித்தனத்துடன் நீங்கள் செயல்பட முடியும். இது உங்களை மிகவும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

ஒரு சின்ன கதை:

ஒருமுறை, வங்கியின் காசாளர் ஒருவரிடம்
அந்த வங்கிப் பணத்தைப் பாதுகாக்கும்
பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர்
பணத்தைத் தினமும் வீட்டிற்கு எடுத்துச்
சென்று விட்டு, மறுநாள் காலை திரும்ப
எடுத்து வருவார். ஒரு மாதம்வரை அவர்
இதைச் செய்து வந்தார். அதற்கு மேலும்
இப்படிச் செய்ய அவரால் முடியவில்லை.

வங்கிக்குச் சொந்தமான பணத்தை எடுத்து வரும்பொழுது, தாம் நடுக்கத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதை அவர் உணர்ந்தார். பணம் முழுவதும் தம் பாதுகாப்பில் வைத்திருந்ததால் இரவில் அவரால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை என்பதையும் உணர்ந்தார். அவர், தம் மேலதிகாரியிடம் இனியும் தம்மால் இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாது என்றும், இந்த வேலையிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அந்த மேலதிகாரி சொன்னார், "அந்தப் பணம் தொலைந்து போனாலும்கூட, உங்களை யாரும் பழி சொல்லமாட்டார்கள், அதனால் கவலையோ, பயமோ இல்லாமல் நீங்கள் இந்த வேலையைத் தொடரலாம்," என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையைத் தந்தார். அன்றிலிருந்து அந்தக் காசாளர் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

அவர் எப்படி மாறினார்? அவருள் என்ன மாற்றம் ஏற்பட்டது? அதே வேலையைத்தான் எப்போதும் செய்கிறார். ஆனால் பயமும், பதற்றமும் ஏன் இல்லாமல் போனது! என்ன காரணம்? ஏனென்றால்

அவருடைய பொறுப்பு மேலிடத்திற்கு
மாற்றப்பட்டுவிட்டது. காரணம்
அவ்வளவுதான். இதுதான் சரணாகதி!

நீங்கள் கடமையைச் செய்யுங்கள். பலனின் பொறுப்பைப் பிரபஞ்ச சக்தியிடம் விட்டு விடுங்கள். புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச சக்தி உங்கள் மேல் அன்பு செலுத்துகிறது. நீங்கள் உங்களைப் புரிந்து கொண்டதைவிட, அது உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. உதாரணத்திற்கு, அர்ஜூனனையே எடுத்துக்கொள்ளுங்கள், அர்ஜூனன் தம்மைப்பற்றி தெரிந்து வைத்திருப்பதைவிட, கிருஷ்ணர் அவரைப்பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்துள்ளார்.

நீங்கள் உங்களைப்
புரிந்து கொண்டதைவிட,
இருப்புத் தன்மை
உங்களை நன்றாகவே
புரிந்து வைத்துள்ளது.

அர்ஜூனனுக்கு இருந்த மிக உயர்ந்த நம்பிக்கையும் இணக்கமான உணர்வுத் தன்மையும்தான் கிருஷ்ணருடன் உறவாடும் நிலையைத் தந்தது. கிருஷ்ணர், அவரை முடிவான விழிப்புணர்விற்கு அழைத்துச் சென்றார்.

பிரபஞ்ச சக்தியின் மீதும், உயிர் சக்தியின் புத்திசாலித்தனத்தின் மீதும் எளிமையான நம்பிக்கை வையுங்கள். இதுதான், உங்கள் வாழ்க்கையின் உயிர் சக்தி; இந்த சக்திதான் உங்களை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே, உங்களை உயிர்ப்புடன் வைப்பதற்குத் காரணமான சக்தி; உங்கள் மூளையின் அற்புத செயல்பாடுகளுக்குப் பின் உள்ள சக்தி; உங்கள் ஜீரண அமைப்பிற்கும், நரம்புமண்டல இயக்கத்திற்குமான சக்தி.

இந்த சக்திதான் சூரியமண்டலத்தையும் விண்ணில் உள்ள பால் வெளி மண்டலங்களையும் மொத்தப் பிரபஞ்சத்தையும் ஒரே சீராக நடத்துகிறது. கற்பனை செய்து பாருங்கள், இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரஹங்களும் எவ்வளவு ஒரு அழகான இயக்கமுறையில் இயங்குகின்றன. அதிநவீனப் போக்குவரத்து நிர்வாகத்தினால்கூட, இவ்வளவு ஒழுங்கு முறையுடன் இயக்கமுடியுமா? இந்த அழகான ஒழுங்கு முறையை மேலோட்டமாகப் பார்த்தால் குழப்பம் நிறைந்ததுபோல் தோன்றும்!

வாழ்க்கை என்பதை முன்பே கணித்துச் சொல்ல முடியும். அடுத்த கணம் என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே கணித்துச் சொல்ல முடியும்!

கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன; அத்தனை விதமான வேற்றுமைகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன!

தா்க்க ரீதியாகப் பார்த்தால், இது நிர்வகிக்கமுடியாத அளவு குழப்பம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்தக்க் குழப்பத்தினிடையேயும் அங்கு ஒரு அழகான ஒழுங்கு முறை இருக்கிறது. மற்றும் அந்த ஒழுங்கு முறையில், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையும் குழப்பத் தன்மையும் மிக அழகாகப் பொருந்தி இருக்கிறது!

தியாகம், எதிர்பார்ப்பு எனும் குப்பையை எரித்துவிடும்

ஒரு அழகான கதை:

இது இந்தியாவின் பெருங்காவியமான மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

மகாபாரதப் போர் முடிந்தவுடன் மன்னன் யுதிஷ்டிரன் பெரிய யாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகம் முடிந்தவுடன் ஏராளமான தானதர்மங்களைச் செய்தார். பண்டிதர்களுக்கும் ஏழைகளுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அளித்தார்.

மன்னனின் மனமார்ந்த தானதர்மங்களால் திருப்தியடைந்த அவர்கள் அவரை மிகவும் புகழ்ந்தார்கள். "எங்கள் வாழ் நாளிலேயே இப்படிப்பட்ட தான தர்மங்களூடன்கூடிய இவ்வளவு பெரிய யாகத்தை நாங்கள் பார்த்ததில்லை," என்றார்கள்.

அப்போது அங்கு ஒரு சிறிய கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடலின் பாதிபாகம் தங்கமாகவும் மறுபாதி பழுப்பு நிறத்திலும் இருந்தது. அது யாகம் நடந்த இடத்தில் விழுந்து புரண்டது. பிறகு அது மிகவும் சோகத்துடனும் ஆச்சரியத்துடனும் "இது ஒரு யாகமே அல்ல. இந்த யாகத்தை ஒரு பெரிய யாகம் என்று ஏன் புகழ்கிறீர்கள்?!" என்றது. பண்டிதர்கள் திகைப்பும் கோபமும்

வாழ்க்கை என்பதை
முன்பே கணித்துச்
சொல்ல முடியும்.

அடைந்தார்கள். “என்ன! மூட்தாள் கீரியே! நீ இங்கு நிகழ்ந்த யாகத்தைப் பார்க்கவில்லையா? ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பணக்காரராக மாறி இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கானவர்களுக்கு வயிறார
உணவு படைக்கப்பட்டுள்ளது. பல
ஆபரணங்களும் துணிமணிகளும்
விநியோகிக்கப்பட்டுள்ளன.”

அந்தக் கீரிப்பிள்ளையும் பதிலுக்கு,
“உங்களுக்கு வேண்டுமானால் இது பெரிய
யாகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த
ஏழை ப்ராஹ்மணர் செய்த யாகமே பெரியது.
அதுதான் மிகப்பெரிய யாகம்,” என்றது.

கோடிக்கணக்கான
உயிரினங்கள்
இந்தப் பூமியில்
இருக்கின்றன;
அத்தனை விதமான
வேற்றுமைகளும்,
மாறுபாடுகளும்
இருக்கின்றன!

“எந்த ப்ராஹ்மணர்? நீ எந்த யாகத்தைப் பற்றி சொல்கிறாய்? நாங்கள் இதைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லையே!” என்றார்கள் பண்டிதர்கள்.

கீரிப்பிள்ளை சொல்ல ஆரம்பித்தது.

யாகம்

ஒரு கிராமத்தில் ஏழை மனிதர் ஒருவர்
இருந்தார். ஒரு சிறிய குடிசையில் தம்
மனைவி, மகன், மருமகள் இவர்களுடன்
வாழ்ந்து வந்தார். அந்த நாட்டில்
ஒருமுறை மோசமான வறட்சி ஏற்பட்டது.
அதனால் மொத்தக் குடும்பமும் நாள்
க்கணக்கில் பட்டினியாய் இருக்க நேர்ந்தது.

ஒரு நாள், அந்த ஏழை மனிதர் எங்கோ தமக்குக் கிடைத்த கொஞ்ச உணவை வீட்டிற்கு எடுத்துவந்தார். அவர்கள் அதைச் சாப்பிடத் தயாராய் இருந்தார்கள். உணவைச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு குரல் கேட்டது. அவர் கதவைத் திறந்து பார்த்தார். அங்கு ஒரு விருந்தாளி வாயிற்படி அருகில் நின்றிருந்தார்.

இந்தியாவில் விருந்தினரை அதிதி தேவொ பவ என்பார்கள். அப்படி என்றால் ‘விருந்தாளியே கடவுள்’ என்று அர்த்தம்.

உடனே அந்த ஏழை மனிதர் அவரை வீட்டிற்குள் அழைத்தார். "ஐயா! உள்ளே வாருங்கள், அமருங்கள், ஏதாவது கொஞ்சம் உணவு சாப்பிடுங்கள்," என்றார். அந்த ஏழைமனிதர் முதலில் தம் பங்கை எடுத்துக் கொடுத்தார். வந்தவர் அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் "ஐயா! எனக்கு இன்னமும் பசிக்கிறது, பத்து பதினைந்து நாட்களாக நான் சாப்பிடவேயில்லை!" என்றார்.

உடனே மனைவி தம் கணவனிடம், "என்னுடைய பங்கையும் கொடுத்து விடுங்கள்," என்று சொல்லி தம்முடைய பங்கான உணவை எடுத்துக் கொடுத்தார். விருந்தாளி அந்தப் பங்கையும் சாப்பிட்டுவிட்டு "இன்னமும் தமக்குப் பசிக்கிறது," என்றார்.

உடனே மகன், "தந்தையே! என் பங்கையும் தந்து விடுங்கள்," என்று தந்தார். அதைச் சாப்பிட்டு முடித்தபின்பும் விருந்தாளிக்குத் திருப்தி வரவில்லை. உடனே மகனின் மனைவி சொன்னார், "ஐயா என் பங்கையும் எடுத்துக்கொள்ளுங்கள்." என்று கொடுத்தார். விருந்தாளி அந்தப் பங்கையும் சாப்பிட்டு முடித்த பிறகுதான் முழுத் திருப்தி அடைந்தார். அந்தக் குடும்பத்தினரை ஆசீர்வாதம் செய்துவிட்டுச் சந்தோஷத்துடன் சென்றார்.

கீரிப்பிள்ளை மேலும் சொன்னது, "நான் அவர்கள் குடிசைக்கு அன்று சென்றிருந்தேன். பசியால் வாடி அவர்கள் நான்கு பேரும் இறந்து கிடப்பதைப் பார்த்தேன். விருந்தாளி சாப்பிட்ட இடத்தில் சில பருக்கைகள் கிடப்பதைப் பார்த்தேன். நான் அந்தப் பருக்கைகளின் மேல் புரண்டேன் என் உடலின் பாதி தங்கமாக மாறிவிட்டது.

என்னுடைய உடலின் மறு பாதியையும் தங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, அன்றிலிருந்து அதே போன்ற மற்றொரு யாகத்தைக் காண்பதற்காக உலகம் முழுவதும் தேடிச் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் எங்குமே அதைப் போன்ற யாகதைப் பார்க்கவில்லை. யுதிஷ்டிரரின் யாகம் என் உடலின் மறுபாதியைத் தங்கமாக மாற்றவில்லை. அதனால்தான் நான் 'இது ஒரு யாகமே அல்ல' என்று சொல்கிறேன். தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலே யாகம்; தியாகத்தை அடிப்படையாகக்கொள்ளாமல்

தியாகத்தின் அடிப்படையில்
செய்யப்படும் செயலே
யாகம்;
தியாகத்தை
அடிப்படையாகக்
கொள்ளாமல்
செய்யப்படுவது
யாகமே ஆனாலும்கூட,
அதுவொரு
சாதாரண செயலே!

செய்யப்படுவது யாகமே ஆனாலும்கூட, அது எவ்வளவு பெரிய அளவில் இருந்தாலும்கூட அதுவொரு சாதாரண செயலே! இது யாகம் அல்ல என்று நான் சொன்னதற்கான காரணம் அதுதான்,” என்று சொல்லிவிட்டு அந்தக் கீரிப்பிள்ளை ஓடிவிட்டது.

கிருஷ்ணர், யாகம் என்று சொல்லும்போது, உண்மையான உணர்விலிருந்து பிரபஞ்ச சக்திக்கு சரணாகதி செய்ததைத்தான் சொல்கிறார்.

நாம் மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்க முடிவதைக் கொடுப்பது தியாகம் அல்ல. நமக்கென்று எதுவும் இல்லாமல் இருக்கும் போதும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் மட்டுமே, அது தியாகம்.

அதனால்தான் மக்களால் நடத்தப்படும் பல தர்மஸ்தாபனங்கள் நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்டாலும், இங்கே கிருஷ்ணர் சொல்லும் சாரத்திற்குள் அவை பொருந்துவதில்லை. ஆனாலும் ஒருவிதத்தில் நீங்கள் உங்களிடமே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுப்பது நல்லதுதான். இல்லையென்றால், முட்டாள்தனமாக எல்லாவற்றையும் நீங்களே உண்டுவிட்டு அஜீரணத்திற்குள்ளாகி நோய்வாய்ப்படுவீர்கள்!

நீங்கள் பட்டினியாக இருக்க நேர்ந்தாலும், உங்களுக்கென்று வைத்திருப்பதை நீங்கள் உண்ணாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நீங்கள் பிரபஞ்ச சக்தி நிலையில் செயல்படுவீர்கள். நீங்கள் வஸுதைவ குடும்பகம் என்ற கொள்கையின் பாகமாகச் செயல்படுவீர்கள். வஸுதைவ குடும்பகம் என்பதன் அர்த்தம் "உலகம் முழுவதும் என்னுடைய குடும்பம்.”

> நாம் மற்றவர்களுக்கு
> நம்மால்
> கொடுக்க முடிவதைக்
> கொடுப்பது தியாகம் அல்ல.
> நமக்கென்று எதுவும்
> இல்லாமல் இருக்கும்
> போதும்
> மற்றவர்களுக்குக்
> கொடுத்தால் மட்டுமே,
> அது தியாகம்.

கிருஷ்ணர் சொன்னதுபோல, இந்த
‘உலகம் முழுவதும் என் குடும்பம்’ என்ற
நிலையில், கருணையின் வெளிப்பாட்டில்
நீங்கள் செயல்படும்போது, அங்கே
கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
எதுவும் இருப்பதில்லை. கொடுக்க
வேண்டுமென்பதற்கான எந்தவிதமான
நீதிநெறி உத்தரவும் அங்கே இல்லை.
மற்றவர்களுக்குக் கொடுத்தால்
நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்கள்,
இல்லையென்றால் நரகத்திற்குச் செல்வீர்கள்
என்கிற எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.

அதனால்தான் அவ்வப்போது, மீண்டும்
மீண்டும் பலமுறை மக்களிடம் சொல்வதுண்டு,
"சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு நான்
உதவுவேன் என்று நினைத்து ஸங்கத்திற்கு
எதையும் தானம் செய்யாதீர்கள்."

முதலில், சொர்க்கம் என்று ஒன்று இல்லை,
இரண்டாவது, நான் சொர்க்கத்தின் வாசலுக்கு
காவல்காரனும் அல்ல!

நீங்கள் தன்னலமற்று,
தியாக
மனப்பான்மையினால்
செயல்படும்போது,
உங்கள்
இருப்புத் தன்மைக்குள்
உற்சாகம்,
முடிவற்ற சந்தோஷம்,
ஆனந்தம் நுழைகிறது.

சங்கத்தின் கொள்கைகளில் உங்களை முழுவதுமாக இணைத்துக்கொண்டு, நீங்கள் தானம் செய்யும்போது சொர்க்கத்தில் இருப்பீர்கள். மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் என்று நீங்கள் அதைப்பற்றி நினைக்கத் தேவையில்லை. அதுதான் உங்களுடைய மனப்பான்மையாக இருக்கிறதென்றால், நீங்கள் பூமியில் இருக்கும் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.

நீங்கள் தன்னலமற்று, தியாக மனப்பான்மையினால் செயல்படும்போது, உங்கள் இருப்புத் தன்மைக்குள் உற்சாகம், முடிவற்ற சந்தோஷம், ஆனந்தம் நுழைகிறது.

அங்கு எப்போதுமே ஆனந்தம் இருக்கிறது. ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த ஆனந்தத்தை உங்களை உணரவிடாமல் தடுக்கிற அஹங்காரம் மற்றும் மனம் இவற்றிலிருந்து நீங்கள் விடுபடும்போது மட்டுமே, அந்த ஆனந்தத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறீர்கள். நமக்குள் இருக்கிற எதிர்பார்ப்புகள் எனும் குப்பை மறைந்து ஆனந்தம் அனுபவிக்கப்படுகிறது.

இந்தக்கொள் கையின் அடிப்படையில்தான் பல்வேறு தான தர்ம சடங்குகள் வேத கலாச்சாரத்தில் தோன்ற ஆரம்பித்தன. இவை, கூட்டு தியானம் செய்வதற்கான கருவிகளாகவும் இருந்தன.

மந்திர உச்சாடனத்தின் மூலம் உருவாகும் காற்றின் அதிர்வுகளின் மூலம் பிரபஞ்ச வெளியின் சஃக்தியானது (ஆகாச' சஃக்தி) பெறப்படுகிறது. இப்படி சஃக்தியூட்டப்பட்ட காற்றானது ஹோம குண்டத்தில் உள்ள புனித அக்னியை சஃக்தியூட்டுகிறது. ஹோமகுண்டத்தின் அருகில் நூலிழையால் இணைக்கப்பட்டிருக்கும் கலச தண்ணீருக்குள் அந்த சஃக்தி செலுத்தப்படுகிறது. சக்தியோட்ட சுழற்சி முழுமை பெறுவதற்கு, இந்தச் சக்தியூட்டப்பட்ட புனித நீர், பூமி தத்துவமான உடல்களின் மீதும், விக்ரஹங்களின் மீதும், நிலத்தின் மீதும் தெளிக்கப்படுகிறது.

பஞ்சபூத சக்திகளான ஆகாயம், காற்று,
நெருப்பு, நீர், நிலம் ஆகியவை இது போன்ற
சடங்குகளின் மூலம் மனித குல நன்மைக்காக
இணைக்கப்படுகின்றன.

வாழ்க்கை
ஆனந்தமயமானது,
ஆனந்தமாக
வாழ்வதற்கே
வாழ்க்கை உள்ளது.

எல்லாவற்றையும் நெருப்புக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்பது வெறும் உருவகமே. இந்தச் சடங்கைச் செய்யும் பெரும் மன்னர்களும், உயர் குடி மக்களும் தங்கள் செல்வங்களை செல்வம் இல்லாதவர்களுக்குத் தானம் செய்வார்கள். இந்தச் சடங்குகள் பொருளாதார சம நிலையை நிர்வகிக்க உதவின.

ஆனால் மன்னன் யுதிஷ்டிரன் தம் வெற்றியைக் கொண்டாட செய்த ராஜஸூய த்யாகத்தில்கூட, அந்தக் கீரிப்பிள்ளை சொன்னதைப்போல ஏழை ப்ராஹ்மணர் குடும்பம் செய்த யாகத்திற்கு ஈடான உயிர்ப்பு இல்லை. அந்த யாகத்தில் உயிர் இல்லை என்பதே உண்மை. அதனால் உங்களுக்கு வேண்டாததை மட்டும் தானம் செய்யாதீர்கள். வேண்டியவற்றையும் கொடுங்கள்!

peacock feather

தேவையான துக்கம்

கேள்வி: துக்கம் என்றால் என்ன? நாம் ஏன் துக்கப்படுகிறோம்? துக்கம் என்பது அவசியம்தானா?

புத்த பாரம்பரியத்தில், வாழ்க்கையே துக்கமயமானது என்று கருதப்படுகிறது. இது, நான் சொல்வதிலிருந்து வேறுபட்டு இருக்கிறது. வாழ்க்கை ஆனந்தமயமானது, ஆனந்தமாக வாழ்வதற்கே வாழ்க்கை உள்ளது என்று நான் சொல்கிறேன்.

நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி புத்தர் பேசுகிறார்.

நாம் வாழ்க்கையை எப்படி வாழ முடியும் என்பதைப் பற்றி நான் பேசுகிறேன். புத்தர் பாவ புண்ணியங்களைப் பற்றி பேசவில்லை. அவருடைய கருத்துப்படி நடத்தைக்கான குறியீடு என்பது ‘நடு நிலைப் பாதையே’. சம நிலையில் நீங்கள் வாழ்க்கை நடத்தும்போது ‘சரி’ என்றோ, ‘தவறு’ என்றோ எதுவும் இல்லை. நீங்கள் சம நிலையில் வாழ்க்கை நடத்தும்வரை எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

மேலும் புத்தர் சொல்கிறார், “ஆசைகளே துக்கத்திற்கான மூலகாரணம்.” நான் இதில் மேலும் ஒரு விதியைச் சேர்க்க விரும்புகிறேன், “நிறைவேறாத ஆசைகளே எல்லாத் துக்கங்களுக்குமான மூலகாரணம்,” என்கிறேன்.

ஒரு ஆசை, தன்னை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தன்னுடன் சக்தியைக் கொண்டுவந்து கொள்கிறது; அதைக் கொண்டு, தன்னை நிறைவேற்றியும் கொள்கிறது. ஒரு ஆசை முழுமையாக நிறைவேற்றப்படும்போது, அந்த ஆசை முழுமை அடைந்து விடுகிறது. அதனால் அது எந்தச் சுவடுகளையுமே விட்டுச் செல்வதில்லை. அந்த ஆசைகளைப் பொறுத்தவரையில், அளவில் எதுவுமே மிச்சம் வைக்கப்படுவதில்லை, எந்தவித பின் விளைவுகளும் இல்லை.

நம் சக்தி உடலானது, இது போன்ற ஆசைகளையே தான் பிறக்கப்போகிற உடலுக்குத் தன்னுடன் எடுத்து வருகிறது. இந்த வகை ஆசைகள் நாம் பிறக்கும்போதே கொண்டுவந்தவை. இந்த ஆசைகள் தங்களைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்வதற்கான சக்தியுடன்தான் வருகின்றன. அதைத்தான் நாம் ப்ராரப்த கர்மம் என்று சொல்கிறோம்.

ப்ராரப்த கர்மம் என்பது, நாம் பிறக்கும்போதே நம்முடன் எடுத்து வந்த உண்மையான தேவைகள். ப்ராரப்த ஆசைகள் என்பது நாம் பிறக்கும்போது, நம் உடலில் இருக்கிற சக்தியின் ‘ஆரம்பக் கையிருப்பு நிலை’.

அவை நம் மன அமைப்பால், வாஸனாவினால் (Vasana) எழுபவை.

இந்த ஆத்மாவானது, சக்தியானது முற்பிறப்பில் எந்த மனப்பான்மையில் உடல் - மன அமைப்பை விட்டதோ, அந்த மன அமைப்பிலிருந்துதான் இந்த ஆசைகள் எழுகின்றன.

இந்த ஆரம்ப நிலை கையிருப்போடு, நாம்

ப்ராரப்த கர்மம் என்பது, நாம் பிறக்கும்போதே நம்முடன் எடுத்து வந்த உண்மையான தேவைகள்.

நம் மையத்திலிருந்து எழாத, ஆனால் நாம்
வெளியிலிருந்து புதிதாகப் பெற்றுக்கொண்ட
ஆசைகளை மேலும் மேலும் சேர்க்கிறோம்.
மற்றவர்களிடம் உள்ளதைப் பார்த்தும்,
இண்டர்நெட், தொலைக்காட்சி, வானொலி,
விளம்பரப்பலகைகள் இன்னும் இது போன்ற
பலவிதமான ஊடகங்களால் (மீடியா)
ஈர்க்கப்பட்டும் நம் ஆசைகளின் அளவு
அதிகமாகிறது.

> உங்கள் வாழ்க்கையில்
> நிகழும் ஒரு நிகழ்வு
> உங்களுக்குத்
> துக்கத்தைத்
> தருவதில்லை
> அந்த நிகழ்விற்கான
> உங்களுடைய
> எதிர்செயல்தான்
> துக்கத்தைத்
> தருகிறது.

நாம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம். நம்முடைய வாழ்க்கையில் மேலும் மேலும் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், எந்த வகையிலாவது நாம் சந்தோஷத்தை அடைந்துவிட முடியும் என்று நினைக்கிறோம்.

ஆனால் நம்மிடம் இருக்கும் சஃக்தியின் இருப்பு, நம்முடைய இயல்பான ஆசைகளை நம்முடைய ப்ாராரப்த கர்மாங்களை மட்டுமே நிறைவேற்றப் போதுமானதாக இருக்கிறது; நம்மால் சேர்க்கப்பட்ட புதிய ஆசைகளான, ஆகாம்ய கர்மாங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இல்லை. இந்த ஆகாம்ய கர்மாங்களைத்தான் நமக்குத் துக்கத்தையே தருகிற நம்முடைய விழிப்புணர்வற்ற ஆசைகள், நம்முடைய ஸம்ஸ்காரங்கள் என்று சொல்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில், நம்மைத் துக்கத்திற்கு அழைத்துச் செல்கிற ஆசைகள் என்று புத்தர் குறிப்பிடுகிற ஆசைகள் இவைதான். இந்த ஆசைகள், அவை நிறைவேறிவிடும் என்ற எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகின்றன.

ஆனால் அவை நிறைவேறாமல் போகும்போது, நமக்குள் துக்கத்தை உருவாக்கி, நம்முடைய உடல்மன அமைப்பிலேயே தங்கி விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்வு உங்களுக்குத் துக்கத்தைத் தருவதில்லை என்பதையும், அந்த நிகழ்விற்கான உங்களுடைய எதிர்ச் செயல்தான் துக்கம் என்பதையும் நீங்கள் உணர்வதற்கு அது உங்களுக்கு உதவுகிறது.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நீங்கள் துக்கப்படுகிறீர்களா, இல்லையா என்பது, அந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் எவ்வாறு எதிர்செயல் புரிகிறீர்கள் என்பதை மட்டுமே சார்ந்துள்ளது.

Person sitting on a chair with head down

நீங்கள் எப்போது துக்கத்திற்கு ஆட்படுகிறீர்கள்? நீங்கள் எப்போது நோய்வாய்ப்படுகிறீர்கள்? உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் சூழ்நிலை முன்னேற்றம் அடையும் போதா? உங்கள் வாழ்க்கைத் துணைவர் வேறு ஒருவருக்காக உங்களை விட்டுவிட்டுப் போகும்போதா?

நல்லது, இந்தச் சூழ்நிலைகளை எந்தவிதமான கோபமும் ஆத்திரமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தீர்களானால், அது இருப்பதுபோலவே இருக்கட்டும் என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டீர்களானால் இப்போது நீங்கள் அந்த அளவிற்குத் துக்கப்படுவீர்களா?

Tவிர்க்க முடியாத சூழ்நிலைகளை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு நிகழ்வுக்கான உங்களது எதிர்மறையான பதில் செயல் மட்டுமே, உங்களைக் காயப்படுத்த அனுமதிக்கிறது.

உங்களுடைய அமைதியான அனுமதியில்லாமல் எதனாலும் அல்லது யாராலும் உங்களை துக்கப்படுத்த முடியாது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? நமக்குள் இருக்கிற ஒரு குறிப்பிட்ட கற்பனையோ அல்லது எதிர்பார்ப்போ நிறைவேறாமல் இருக்கும்போது மட்டுமே, நாம் துக்கப்படுகிறோம்.

அந்தச் சூழ்நிலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமலும், நம்முடைய எதிர்பார்ப்புகளை விட்டுவிடாமலும் இருந்தோமேயானால், நாம் துக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்போம்.

உங்கள் தனிப்பட்ட தீர்மானங்களைக்
கழித்து விட்டு, சாட்சியாக மட்டுமே
இருந்து உங்கள் அனுபவங்களைப் பார்க்க
உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்,
தெளிவுடன் உங்களுடைய துக்கத்திற்கான
காரணங்களைக் கண்டறியக்
கற்றுக்கொள்ளுங்கள், வெளியில்
தெரிகிற துக்கம் மற்றும் ஸூக்ஷ்மமான
துக்கம் இரண்டையுமே கண்டறிய

> தவிர்க்க முடியாத
> சூழ்நிலைகளை
> எதிர்ப்பில்லாமல்
> ஏற்றுக்கொள்ள
> முயற்சி செய்யுங்கள்.

கற்றுக்கொள்ளுங்கள், இதைச் செய்யும் ஆற்றல் ஒரு நாளில் வந்துவிடாது. ஆனால் பயிற்சி செய்யப் பயிற்சி செய்ய நிச்சயமாக அந்த ஆற்றல் வந்துவிடும்.

நீங்கள் துக்கப்படுவதற்கான காரணங்களில், இன்னும் சொல்லப்போனால் மிகவும் ஆழமாக மறைந்திருக்கும் காரணங்களில் ஒன்று என்னவென்றால், நீங்கள் அந்தத் துக்கத்தைச் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்!

நீங்கள் ஏங்கிக் கொண்டிருந்த கவனத்தையும் கவனிப்பையும் உங்களுடைய நோய் உங்களுக்குக்கொண்டுவந்தது என்றால், நோய்கூட உங்களுடைய சந்தோஷத்தின் மூலகாரணம் ஆகிவிட முடியும். உங்களுக்கு விருப்பம் இல்லாத சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள அது வழியாகவும் இருக்கும்.

சில நேரங்களில் உங்கள் மீதோ, மற்றவர்கள் மீதோ வலியை ஏற்படுத்தும்போது, அது ஏன் சந்தோஷத்தைத் தருகிறது என்று பரிசோதியுங்கள்.

துக்கப்படாமல் அதே சந்தோஷத்தை நீங்கள் பெறுவதற்கு வேறு ஏதேனும் நல்ல வழி இருக்கிறதா? இருக்கிறது! விழிப்பாக மாறி விடுவதுதான் முதல் படி. இரண்டாவது, இங்கே, இப்போது என்ன இருக்கிறதோ அதை எந்தக் கேள்வியும் எந்த எதிர்ச்செயலும் இல்லாமல் முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்வது.

விழிப்புணர்வோடு ஏற்றுக்கொள்ளுதல் - துக்கத்திலிருந்து வெளியில் வருவதற்கு ஒரே வழி இதுதான்.

கேள்வியின் இரண்டாவது பகுதி, துக்கப்படுவது அவசியமா?

ஆமாம்! ஒரு வழியில் பார்த்தால் அப்படித்தான்.

விழிப்புணர்வோடு
ஏற்றுக்கொள்ளுதல் –
துக்கத்திலிருந்து
வெளியில் வருவதற்கு
ஒரே வழி இதுதான்.

நாம் வளர்வதை ஊக்குவிக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த ஒரு சக்தியாக ‘துக்கப்படுதல்’ இருக்க முடியும். ஒரு செடி வளர்ந்து மலர்வதற்கு முன், விதையானது முதலில் வெடித்து, உடைந்தே ஆக வேண்டும் என்பதைப்போல்,

அஹங்காரத்தின் தற்காப்புகளை
உடைக்க துக்கம் தேவைப்படுகிறது.
உங்களுடைய அஹங்காரத்தை ஆழமான
துக்கம் உடைத்துவிட முடியும். திறந்த,
எதிர்பார்ப்பில்லாத தன்மையுடன் நீங்கள்
பிரபஞ்ச இருப்புத் தன்மையை நெருங்க இது
உதவுகிறது.

உங்கள் வழக்கமான எண்ண ஓட்டங்கள் தகர்த்தெறியப்பட்டவுடன், நீங்கள் விஷயங்களை அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களுக்கும் வலிக்கும் இடையிலான ஒரு நுட்பமான இடைவெளியையும், அது உங்களுடைய வலி இல்லை என்பதையும், அது உங்களின் உள்ளார்ந்த நிலையில் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த 'எதிர்ச்செயல்'தான் வலி. ஒருமுறை அதை நீங்கள் தெரிந்து கொண்ட பின்பும், நீங்கள் எப்படித் துக்கப்பட முடியும்?

விழிப்புணர்வுடன் உங்களுடைய வலியை ஏற்றுக்கொள்ளும்போது, உண்மையிலேயே நீங்கள் அந்த வலியை உங்களை விட்டுப் போக விடுகிறீர்கள்.

ஆனந்தத்திற்கான திறவுகோலாகத் துக்கப்படுவது என்பது இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் துக்கங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டால், துக்கங்களையே தேர்ந்தெடுக்கும் மன அமைப்பிலிருந்து உங்களை அது விடுவித்துவிடும். அது உங்கள் கண்களைத் திறந்துவிடும். நீங்கள் துக்கத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள். வேதனைப்படுவது எவ்வளவு தேவையற்றது என்பதையும் அதிலிருந்து நீங்கள் எப்படி வெளியே வர முடியும் என்பதையும் அது உங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட முடியும்.

அதனால்தான் அதை நான் ‘அவசியமான துக்கம்’ என்கிறேன். துக்கப்படத் தேவையில்லை என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிற துக்கங்களைத்தான் ‘அவசியமான துக்கங்கள்’ என்று நான் அழைக்கிறேன்.