புலன்களும் பாவங்களும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லா உயிரினங்களும் உணவு தானியவகைகளால் வளர்கின்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் கிடைப்பது சாத்தியமாகிறது. தன்னலமற்ற த்யாகத்தால் மழை பொழிகிறது.
படைத்தவனிடமிருந்து கர்மம் பிறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்! படைத்தவர் அந்த மேலான பரம்பொருளிடமிருந்து பிறக்கிறார். எங்கும் நிறைந்துள்ள அந்தப் பரம்பொருள் யாகங்களில் நிலைபெற்றுள்ளது.
பார்த்தனே! எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையானதுமான இந்த வாழ்க்கைச் சுழற்சி முறையை பின்பற்றவில்லையோ அவர் பாவங்கள் சூழும் வாழ்க்கையை வாழ்கிறார். புலன் இன்பங்களிலிலேயே மகிழ்வு பெறுகிறவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்.
உருவகமாக விளக்கப்ப்ட்டிருக்கும் இந்தக்கருத்துகள் மிகவும் அழகான கருத்துகள். நம்முடைய காவியங்களில் பெரிய ஸத்யங்கள் சில வார்த்தைகளைக்கொண்டே சொல்லப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நம் குருமார்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதற்கும் விளக்கம் தருவதற்கும் வார்த்தைகளைச் சார்ந்து இருக்கவில்லை. தம் சீடர்களுடன் இருப்புத்தன்மையின் மூலம் தொடர்புகொண்டு கற்றுத்தந்தார்கள், அறிவைக் கொடுத்தார்கள்.
அதனால் சில ஸ்லோகங்களில் விளக்கப்பட்ட இந்த உருவக விளக்கங்கள் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அர்த்தங்களையும், வாழ்க்கையுடன் நாம் எப்படித் தொடர்பு பெற்று இணைந்திருக்கிறோம், நாம் எந்த அளவு இந்தப் பிரபஞ்சத்தைச் சார்ந்து உள்ளோம், இந்த முழுப் பிரபஞ்சத்தையும் நாம் எப்படிப் பாதிக்கிறோம் என்பன போன்ற ஆழமான ஸத்யங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. கிருஷ்ணர் இங்கே சில ஸ்லோகங்களில் விளக்கிய இந்தக் கருத்தானது மேலும் விரிவாக சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளி உலகத்துடன், இயற்கையின் செயல்பாடுகளுடன் நமக்கு இருக்கும் உறவானது ஆழும் மிக்கதாக இருக்கிறது. நமது செயல்கள் யாவும் வேள்வித்தீயில் சமர்ப்பிக்கப்படும் புனிமான ஆஹுதிகளுக்குச் சமமானது. நம்முடைய செயல்கள் எல்லாமுமே வெறுமனே நம் கைகளை அசைப்பது மட்டுமே இல்லை.
நம் வீதியை நாமே விதைக்கிறோம், அதையே அறுவடை செய்கிறோம்
நாம் ஒரு யஜ்ஞம் செய்யும்போது, பலவிதமான காணிக்கைகளைத் தீயில் போடுகிறோம். பிரபஞ்ச சக்தியிடம் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும், இயற்கையுடனும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் நம்மை இணைத்துக்கொண்டு ஒருங்கிணைந்து செல்வதற்காகவும் இதைச் செய்கிறோம்.
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எங்கும் நீக்கமற பரவி நிறைந்திருக்கிற மிகவும் ஸூக்ஷ்மமான, பிரபஞ்ச சக்தியை, ஆகாச'சக்தியை அதைவிட குறைந்த ஸூக்ஷ்மமான வாயு சக்தியின் வாயிலாக அதாவது மந்த்ரங்களின் மூலம் விழிப்படையச் செய்கிறோம்.
நெருப்பின் மூலம் செய்யப்படுகிற சடங்குகளின் வாயிலாக அதைவிட குறைந்த ஸூக்ஷ்ம சக்தியான நெருப்புடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். இந்த சக்தியானது, ஸ்தூல சக்தியான நீருக்கு மாற்றப்படுகிறது. கலசத்தில் உள்ள அந்த நீரானது, ஸ்தூல வடிவங்கொண்ட செடிகொடிகளுக்கும் விக்கிரஹங்களுக்கும் மனிதர்களுக்கும் நிலத்திற்கும் தெளிக்கப்படுகிறது.
ஸ்தூல சரீரத்தால், இந்த உடலால் செய்யப்படுகிற செயலானது வெளிப்படையானது. இது ஸ்தூல தளத்தில், நம் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்களும், மனச் செயல்களும் ஸூக்ஷ்மமானவை. இவை ஸ்தூல தளத்தில், கண்களால் பார்க்க முடியாதவையாக இருக்கின்றன.
நாம் யாகங்கள் செய்யும்போது, உயர்ந்த சக்திகளிடம் சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வைக்கிறோம். அதனால் நாம் செய்யும் செயலுக்குத் தகுந்தாற் போன்ற பலனை வசீகரிக்கிறோம். நம்முடைய செயல்கள் யாகத்தில் அர்ப்பணிக்கப்படுகிற ஆஹுதிகளைப் போன்றது. நம் செயல்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒருங்கிணைந்து இருக்கும்பொழுது, தீயில் சமர்ப்பிக்கப்படும் நெய்யைப் போன்று அவை செயல்படுகின்றன.
அதேபோல் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன்
இயைந்து செல்லவில்லையென்றால்,
அது தீயில் போடும் சேற்றைப் போன்று
செயல்படுகிறது. தீயில் நெய்விடும்போது
நெருப்பிலிருந்து வரும் புகை எப்படி
இருக்கும் என்பதும், அதேபோல் சேற்றைப்
போடும்போது வரும் புகை எப்படி இருக்கும்
என்பதும் உங்களுக்கே தெரியும்.
எவ்வாறு நெருப்பிலிருந்து வெளிப்படும்
புகையின் தன்மையை வைத்து, தீயில்
அர்ப்பணித்த பொருளின் தன்மையை
உங்களால் மதிப்பிட முடிகிறதோ,
நம்முடைய செயல்கள்
யாகத்தில்
அர்ப்பணிக்கப்படுகிற
ஆஹுதிகளைப்
போன்றது.
அதைப்போல் செயலின் விளைவை வைத்தே, உங்கள் செயலின் தன்மையை மதிப்பிட்டுவிட முடியும்.
நம்முடைய பங்களிப்பையும், நாம் அர்ப்பணிக்கிற பொருட்களின் தன்மையையும் அடிப்படையாக வைத்தே, இறுதிப் பலனின் தன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. கிருஷ்ணர் சொல்கிறார், யாகத்தினால் மழை கிடைப்பதற்கான சாத்தியம் உண்டு. சஃக்தியின் ஸ்தூல வடிவமான மழையானது, ஸூக்ஷ்ம சஃக்திகளான நம் செயல்கள், எண்ணங்கள், அதிர்வுகள் மூலம் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உணவு தானியங்கள் வளர்வதற்கு மழை மூலகாரணமாக இருக்கிறது. நம் உடலும் மனமும் உயிருடன் நிலைபெற்றிருப்பதற்கு உணவு தேவைப்படுகிறது. நாம் மேலும் செயல்களைச் செய்ய அது உதவுகிறது.
அதனால் நீங்கள் பார்க்கும் இந்தச் சுழற்சியின் மூலம், ஸூக்ஷ்ம சஃக்தி தன்னைத்தானே இந்தப் பொருள் சார்ந்த உலகில் எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறது என்பதையும், பொருள் சார்ந்த உலகின் செயல்கள் ஸூக்ஷ்ம பூதங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள்.
இதை நாம் புரிந்துகொண்டால் போதும். நாம் செய்வது, அனுபவிப்பது எல்லாமே, நம்முடைய சொந்த செயல்களால் உண்டாக்கப்பட்டவைதான் என்பதை நாம் உணர்ந்து விடுவோம். நம் விதியை நாமே அழைக்கிறோம். எதை நாம் விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்கிறோம்.

## ஆனந்தம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்
நம்முடைய எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் நம்முடைய உடல் - மன அமைப்பானது பெருமளவு தாக்கத்திற்குள்ளாகிறது.
ஆனந்தம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. அதிர்ஷ்டம் வேண்டுமானால் ஆனந்தத்தைத் தரலாம், ஆனந்தம் எப்படி அதிர்ஷ்டத்தைக்கொண்டு வர முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்?
இந்தியாவில், எந்த ஒரு புதிய செயலும்
தொடங்கப்படும்முன், அது வியாபாரமாக
இருந்தாலும் சரி அல்லது கட்டுமானப்
பணியாக இருந்தாலும் சரி அல்லது
கல்வி சம்பந்தமானதாக இருந்தாலும் சரி
நாங்கள் செய்யும் முதல் விஷயம், சற்று
நேரம் கண்களை மூடி த்யான நிலையில்
அமர்வதுதான்.
நாங்கள் ஏதோ ஒரு வகையான
சக்தி விளையாட்டையோ அல்லது
உருமாற்றத்தையோ உள்ளுக்குள்கொண்டு
வர முயற்சி செய்வோம்.
> இந்தியாவில்,
> எந்த ஒரு புதிய செயலும்
> தொடங்கப்படும்முன்,
> நாங்கள் செய்யும்
> முதல் விஷயம்,
> சற்று நேரம்
> கண்களை மூடி
> த்யான நிலையில்
> அமர்வதுதான்.
ஆமாம், காலப்போக்கில் இது பிரார்த்தனையாகவும் சடங்காகவும் மாறி விட்டது. அது வேறு விஷயம். ஆனால் முதலில் நாங்கள் செய்வது என்னவென்றால், அமைதியாக அமர்ந்து எங்களுக்குள் சக்தி ஓட்டத்தைத் தூண்டி உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறோம்.
உள்ளுக்குள் இருக்கிற சக்தியோட்டம் இணக்கமுள்ளதாக மாறும்போது, அது வெளிச் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மையைப் பெற்று இருக்கும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இருப்புத் தன்மையுடன் ஆழமாக இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒருங்கிணைந்த பகுதி. நீங்கள் நினைப்பதைப்போல தனித்தீவு அல்ல.
இந்தப் பிரபஞ்சத்தின் ஒருபகுதியில் நிகழும் ஒவ்வொரு ஸூக்ஷ்ம இயக்கமும், ஒவ்வொரு ஸூக்ஷ்ம எண்ணமும், அதே கணத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் இன்னொரு இடத்தில் ஓர் எதிர் விளைவை உண்டாக்குகிறது.

மனித எண்ணங்களே, பிரபஞ்சத்தின் அதிர்வுகள்
நமது எண்ணங்களும், சக்தி ஓட்டமும் அதே இயல்புடைய சூழ்நிலைகளையும் மனிதர்களையும் உருவாக்கவும் கவர்ந்திழுக்கவும்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றவை.
உபநிஷதங்களில், வேதங்களில் நம்முடைய முனிவர்களும், ரிஷிகளும் வெளிப்படுத்திய பழம்பெரும் ஸத்யங்களுள் ஒன்றைத்தான் நான் இங்கு சொல்லியிருக்கிறேன். நவீன விஞ்ஞானம் இப்போது இந்த ஸத்யங்களுள் சிலவற்றைப் பற்றி எதிர்பாராத சான்றுகளை வெளிப்படுத்துவது, உண்மையில் ஆர்வத்தைத் தருகிறது.
> நீங்கள்,
> பிரபஞ்ச
> இருப்புத் தன்மையின்
> ஒருங்கிணைந்த பகுதி.
> நீங்கள்
> நினைப்பதைப்போல
> நீங்கள் ஒரு
> தனித்தீவு அல்ல.
டாக்டர் மஸரு இமாட்டோ என்னும் ஜப்பானிய டாக்டரின் ஆராய்ச்சியைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் ஒரு ஆய்வு விஞ்ஞானியும்கூட. அவருடைய புத்தகமான 'The Hidden messages in water' என்பதில் தம் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பலவகை தண்ணீரின் மாதிரிகளைச் சேகரித்து, அவர் பெரிய அளவில் சோதனைகளைச் செய்துள்ளார்.
ஒரே மாதிரியான தண்ணீரை வெவ்வேறு டம்ளர்களில் எடுத்து, அவற்றை வெவ்வேறு விதமான தாக்கத்திற்கு உட்படுத்தினார்.
அவர், ஒரு டம்ளர் தண்ணீர் முன் நின்றுகொண்டு அன்பு, நன்றியுணர்வு போன்ற நேர்மறை வார்த்தைகளைச் சொன்னார். இன்னொரு டம்ளர் தண்ணீர் முன் புத்தமத உச்சாடனங்களைச் சொன்னார்.
மற்றொரு டம்ளர் தண்ணீர் முன், எதிர்மறை வார்த்தைகளான கோபம், சண்டை போர் பற்றிய வார்த்தைகளைச் சொன்னார்.
பின்னர் அவற்றைப் பனிக்கட்டிகளாக உறையவைத்தார். அவற்றைப் புகைப்படம் எடுத்தார்.

நேர்மறை சக்தி வெளிப்படுத்தப்பட்ட தண்ணீரின் பனிக்கட்டிகள் அழகான, தெளிவான வைரங்கள்போல ஸ்படிகங்களாய் உருவாகியிருந்தன! எதிர்மறை சக்தி வெளிப்படுத்தப்பட்ட தண்ணீரின் பனிக்கட்டிகள் கருப்பாகவும் மேகமூட்டத்துடனும் குறிப்பிட்ட எந்த வடிவம் இல்லாமலும் காணப்பட்டன.
பொருட்களின் மேல், நம் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுகிற அதிர்வுகளின் விளைவுகளை நிரூபிக்க பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
நம் உடலில் உள்ள மூலக்கூறுகளில் தண்ணீர் பிரதானமானது.
நம் எண்ணங்களானது, நம் மீதும், மற்றவர்கள் மீதும் ஏற்படுத்தும் வியப்புக்குரிய வெளிப்படையான பாதிப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது. அவை இப்படியே இங்கேயே நின்று விடுவது இல்லை. நம்முடைய எண்ணங்களானது நிலத்தையும் பெருங்கடல்களையும் பாதிக்கிற அளவிற்கு ஆற்றல் உடையதாக இருக்கின்றன.
ருஷிய விஞ்ஞானிகள் நமது டி.என்.ஏ.க்களைப் பற்றி ஒரு புதுக் கருத்தைச் சொல்கிறார்கள். வார்த்தைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகளின் அதிர்வுகளின் மூலம் நம்முடைய மரபு அணுக்களைத் தாக்கத்திற்கு உட்படுத்தி, அதை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் அது.
அவர்கள் லேசர் கதிரின் மேல் சில வகை அதிர்வுகளை அடுத்தடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக ஆழமாகப் பதியவைத்தார்கள். மரபணுவின் அதிர்வைப் பாதிப்பிற்கு உட்படுத்தி அதன் மூலம் மரபணு தகவல்களையே மாற்றிக் காட்டினார்கள்!
பிரபஞ்சவெளி - காலம் இவற்றில் ஒரு குறுக்கு வழியைப்போல இருக்கும் ‘புழுத்துவாரம்’ பற்றிய ஒரு முக்கியமான கொள்கையை குவாண்டம் இயற்பியல் கண்டுபிடித்திருக்கிறது. இந்தப் புழுத்துவாரம்,
> நம்முடைய
> எண்ணங்களானது
> நிலத்தையும்
> பெருங்கடல்களையும்
> பாதிக்கிற அளவிற்கு
> ஆற்றல் உடையதாக
> இருக்கின்றன.
பிரபஞ்சவெளி - காலம் இவற்றை ஒரு
குழாய்போல் இருந்து இணைக்கிறது. இதன்
மூலம், பிரபஞ்சத்திலுள்ள இரண்டு தூரமான
இடங்களை இணைக்க முடியும். பிரபஞ்சத்தின்
ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு
இந்தத் துவாரத்தின் வழியாகச் செல்வதின்
மூலம், ஒருவர் வழக்கமான பிரபஞ்சவெளி
- காலம் என்கிற வரையறை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்ய முடியும்.
இந்தப் புழுத்துவாரத்தின் இரண்டு முனைகள் இரண்டு வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருக்குமேயானால், இந்தப் புழுத்துவாரம் வழியாகவே அந்த இரண்டு பிரபஞ்சங்களுடனும் நாம் தொடர்புகொள்ள முடியும்.
ரஷ்ய விஞ்ஞானிகள் இந்தப் புழுத்துவாரத்தை நம் மரபணுவிலும் வைக்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம் இடம் - காலத்திற்கு அப்பாற்பட்டும் தகவல்களை அனுப்ப முடியும்.
நம்முடைய மரபணுக்கள் இந்தத் தகவல் துளிகளைக் கவர்ந்திழுத்து நம் விழிப்புணர்விற்குக் கொடுக்க முடியும். இந்த இயற்கையைத் தாண்டிய தகவல் தொடர்பு நிகழ்விற்கு, நம்மால் 'உள்ளுணர்வு' என்றழைக்கப்படும் ஒரு நிகழ்விற்கு அவர்கள் சொல்லும் விளக்கங்கள் இவை.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வேத கால முனிவர்கள் அறிவித்த 'கூட்டு விழிப்புணர்வு நிலை' பற்றிய ஆய்வை விஞ்ஞானம் இப்போதுதான் தொட ஆரம்பித்து உள்ளது.
நாம் எந்தத் தளத்தில் எதைச் செய்தாலும் சரி, அதை உடல் தளத்தில் செய்தாலும் சரி, மன தளத்தில் செய்தாலும் சரி அது நம் விழிப்புணர்வைப் பாதிக்கிறது.
நாம் எல்லோருமே பிரபஞ்ச இருப்புத் தன்மை என்கிற ஆடையில் ஒரு நூலிழையாக, ஒரு பகுதியாக இருப்பதினால், நம்முடைய விழிப்புணர்வு அந்தக் கூட்டு உணர்வின் ஒரு பாகமாக இருப்பதினால், நம் எண்ணங்களாலும் செயல்களாலும் அது பாதிக்கப்படுகிறது. பூமியில் அடுத்தடுத்து நிகழும் அதிர்வு அலை வரிசையானது வானிலையை, பருவ நிலையை மிகவும் பாதிக்கிறது. அதே அலைவரிசை நம் மூளைக்குள்ளும் உருவாக்கப்படுகிறது. பல மக்கள் தங்கள் எண்ணங்களை ஒருங்கிணைக்கும்போது, தனிமனித விழிப்புணர்வு நிலை ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு விழிப்புணர்வு நிலையைப் பாதிக்கிறது.
உண்மையில், நம் எண்ணங்கள் மூலம் பருவ நிலையில்கூட நம்மால் தாக்கத்தை நிகழ்த்த முடியும். யாகத்தினால் மழை உண்டாகிறது என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார். இது ஒரு உருவகமான கூற்று.
பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி, பிரபஞ்சத்தின் அபரிமிதமான ஆற்றலின் மேல் முழு நம்பிக்கை வைத்து, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தங்கள் எண்ணங்களை ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தும்போது, பிரபஞ்சம் அவர்களுக்குப் பதிலளிக்கிறது. மழை பொழியும்! பயிர்கள் விளையும்! அபரிமிதமான பயன்கள் நிகழும்!
உண்மையில், பல ஆய்வுகளின் மூலம் தெரிவது என்னவென்றால், பெரும்பான்மையான மக்கள் தங்கள் எண்ணங்களை ஒரே மாதிரியான ஏதோ ஒன்றில் ஒருமுகப்படுத்தும்போது, அதாவது சமுதாய விழாக்கள் அல்லது உலக கால்பந்து பந்தயம் போன்றவை நடக்கும்போது கணிப்பொறிகளில் உள்ள ஒழுங்கற்ற தொடர்பற்ற எண்களை உருவாக்கும் ஜெனரேட்டர்கள்கூட ஒழுங்கற்ற எண்களைக் கொடுப்பதற்குப் பதிலாக ஒழுங்கான வரிசையில் எண்களைக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றன!
மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் வேறு ஒன்றுமே இல்லை; உலகளாவிய எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள்தான்!
சிறு வயது முதலே நாம் கணக்கியல் ரீதியான தர்க்கத்திற்குத்தான் (Mathematical Logic) பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் இருப்பு ரீதியான தர்க்கத்திற்கு (Existential Logic) அல்ல. கணக்கியல் தர்க்கம் மிகவும் நேரான வழி, அது எங்குப் பொருத்தமாக இருக்குமோ அங்குதான் அதைப் பயன்படுத்த வேண்டும். நடைமுறை வாழ்க்கை மற்றும் உறவு போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை கணக்கியல் தர்க்கம் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும். அதைப் வைத்துக்கொண்டு, நாம் எப்பொழுதுமே, 'இது நல்லது அல்லது இது கெட்டது' என்ற தீர்மானத்திற்குத்தான் வருவோம். விஷயங்களை இவ்வாறு முடிக்கவே முயற்சி செய்வோம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, மிக அதிக ஆழத்திலும் இன்னும் ஏதோ ஒன்று இருக்கிறது. அதுதான் இருப்பு ரீதியான தர்க்கம். அது மிக முதிர்ந்த புரிதலாலும் உள்ளுக்குள் மலருவதாலும் வருவதாகும்.
உங்கள் உடல், உங்கள் செல்களின் கட்டமைப்பு, உங்களுடைய தீர்மானங்கள், அந்தத் தீர்மானங்களைத் திருப்தியாக செயல்படுத்தும் திறன், வெளி உலக நிகழ்வுகள், அவ்வளவு ஏன், உங்களுக்கு நடக்கும் விபத்துகள் எல்லாம்கூட உங்களுடைய எண்ணங்களாலும் சக்தி யாலும்தான் பாதிக்கப்படுகின்றன.
இப்போது நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் எந்த நேரத்திலும் ஒன்று பேராசையினாலோ அல்லது பயத்திலோதான் மையம் கொண்டுள்ளீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆசை அல்லது பயத்திலிருந்து உருவாவதுதான். இதன் காரணமாகவே மற்றவர்கள் மிக எளிதாக உங்கள் மனத்தைக் கெடுத்து அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட நிகழ்ச்சி கள் நிகழ்வதற்கேற்ற மாதிரியான ஒரு மனோ நிலையை நீங்களே உருவாக்குகிறீர்கள். இப்படித்தான் உங்கள் சக்தி ஓட்டத்தை நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்.
நடைமுறை வாழ்க்கை
மற்றும் உறவு போன்ற
விஷயங்களைப்
பொறுத்தவரை
கணக்கியல் தர்க்கம்
(Mathematical Logic)
குழப்பத்தைத்தான்
உண்டு பண்ணும்.
நீங்கள் உங்கள் மன அமைப்பை இந்த
வகையிலிருந்து ஆனந்தமான வழிக்கு மாற்றிக்
கொண்டீர்களானால், பின்பு உங்களுடைய
சக்தி ஓட்டம் பொங்கி வழியும்; அதனால்
உங்களுடைய எண்ணங்கள் எல்லாம்
மிகத் தெளிவாக ஆகிவிடும்; நீங்களும்
நிகழ்காலத்திலேயே நீடித்திருப்பீர்கள்.
நீங்கள் இதைச் செய்யும்போது, வெளி உலக
நிகழ்வுகளை எல்லாம் கட்டுப்படுத்தும்
ஆற்றலைப் பெறுகிறீர்கள். ஏனெனில் சக்தி
தளத்தில் நீங்களும், இருப்பு நிலையும் ஒரு
ஆழமான தொடர்பு கொண்டிருக்கிறீர்கள்.
ஆனந்தம்தான் செல்வத்தை ஈர்க்கும் என்பதைப்
புரிந்துகொள்வதற்கு, நீங்கள் இந்த ஒரு
நுட்பத்தைத்தான் பிடித்துக்கொள்ள
வேண்டும். நீங்கள் ஆனந்தமயமாக
இருக்கும்பொழுதும், உங்கள் மன
அமைப்பு கவலை, பயம், பேராசையால்
பாதிக்கப்படாமல் நிகழ்காலத்திலேயே
எப்போதும் நீடித்திருக்கும்பொழுதும்,
நீங்கள், இயல்பாகவே எல்லா நல்ல
விஷயங்களையும் உங்கள் பக்கமாக ஈர்த்துக்
கொள்வீர்கள்.
நீங்கள்
விரும்பும் விளைவை
மனக்காட்சியாகக்
காண்பதின் மூலம்
அதை
அப்படியே உருவாக்கலாம்
என்று நான் சொல்கிறேன்.
நீங்கள் ஒரு குளத்தில், ஒரு சிறு கல்லை எடுத்துப் போடும்பொழுது, கல் விழுந்த மையத்திலிருந்து குளத்தின் கரைவரை தொடர்ந்து அலைகள் பரவுவதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோலத்தான், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம்கூட இந்தப் பிரபஞ்சத்தினுள் பரவி, நிலையாகப் பதிந்து விடுகின்றன. இப்பொழுது அந்தக் குளமே ஒரு எல்லையற்றதாகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த அலைகளின் அளவுகள் மாறுபட்டிருந்தாலும்கூட அந்த அலைகள் ஒரு தொடர் பாதிப்பை அங்கே ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கும்.
அதேபோலத்தான், ஒவ்வொரு செயலும் ஒரு விளைவைப் கொண்டிருக்கிறது. இதே விதியைக்கொண்டு, நீங்கள் விரும்பும் விளைவை மனக்காட்சியாகக் காண்பதின் மூலம் அதை அப்படியே உருவாக்கலாம் என்று நான் சொல்கிறேன். உதாரணமாக, நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் ஆனந்தமயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் மனக்காட்சியாகப் பார்த்தீர்கள் என்றால், அதன் விளைவாக ஆனந்தம் உங்களுக்குள்ளேயும், உங்களைச் சுற்றிலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். காரணம்தான் அந்தக் காரியத்தை, அந்த விளைவை ஏற்படுத்தியதுபோல் தெரியலாம். ஆனால் வாழ்க்கையில் காரணமும் விளைவும் ஒரு சுழற்சிதான்; ஒன்றையொன்று உருவாக்கிக்கொண்டும், ஒன்று மற்றொன்றினால் உருவாக்கப்பட்டுக் கொண்டுமாக, அது ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.
இது ஒரு முடிவற்ற சுழல் என்று கிருஷ்ணர் கூறுகிறார். செயல், படைப்புக் கடவுளிடமிருந்து தோன்றுகிறது, அவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து தோன்றுகிறார். அதனால் எல்லா த்யாகங்களுமே ப்ரஹ்மத்திலிருந்து பரப்ரம்ஹத்திற்கேதான். நாம் சரணடையும் மனோ நிலையில் இருக்கும்போது நம்முடைய அடையாளங்களைப் பிடித்து வைத்துக்கொள்வதில்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றான நிலையில் இருக்கிறோம்.
நாம் எதைச் செய்தாலும், பிரபஞ்ச இருப்பின் மூலமாக பிரபஞ்ச இருப்பிற்காகவே செய்கிறோம். வேறுபாடே இருப்பதில்லை. அங்கே பிரிவு என்பதே இல்லை.
அகங்காரம் என்பதே கற்பனையான ஒன்றுதான்
கேள்வி: ஸ்வாமிஜி! எங்கள் அகங்காரத்தை எப்படி சரணாகதி செய்வது? சரணாகதி செய்ய வேண்டும் என்கிற விருப்பமே அகங்காரத்தின் வெளிப்பாடுதானே?
உங்களிடம் ஒரு கேள்வி: அகங்காரத்திற்கென்று என்று ஒரு தனி இருப்பு இல்லாதபோது, அதை எப்படி நீங்கள் சரணாகதி செய்வீர்கள்?
நீங்கள் ஒரு இருண்ட அறையில் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த இருட்டை வெளியில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள், அதை வெளியில் தள்ள முடியுமா? முடியாது.
இருட்டுடன் சண்டையிட்டு அதை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி வெளியில்

அனுப்ப முடியுமா? இல்லை! எவ்வளவு நேரம் நீங்கள் முயற்சி செய்தாலும் முடிவில் நீங்கள் தோல்வியையே அடைவீர்கள். அதுவும்கூட தனக்கென்று ஒரு தனி இருப்பே இல்லாத ஒன்றிடம் தோற்பீர்கள்!
அகங்காரம் என்பது இருட்டைப்
போன்றது. அதற்கு நேர்மறையான
இருப்பு என்பது கிடையாது. வெளிச்சம்
இல்லாமல் இருப்பதுதான் இருட்டு,
அதேபோல் விழிப்புணர்வு இல்லாமல்
இருப்பதுதான் அகங்காரம், அவ்வளவுதான்.
அகங்காரத்தைக் கொல்ல போராடுவது
என்பது இருட்டை வெளியில் தள்ள போராடுவதைப் போன்றது.
உண்மையில், இருட்டை நீக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதனுடன் போராடுவதை விட்டுவிட்டு, வெளிச்சத்தின் மேல் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். ஒரு சிறிய விளக்கை அறைக்குள்கொண்டு வாருங்கள், இருட்டு தானாகவே மறைந்து விடுவதை நீங்களே பார்ப்பீர்கள். அதனால்தான் நான் அஹங்காரத்தைப் பற்றி மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன்.
வெளிச்சம் இல்லாமல் இருப்பதுதான் இருட்டு, அதேபோல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான் அஹங்காரம், அவ்வளவுதான்.
அதற்குப் பதிலாக, விழிப்புணர்வு என்கிற விளக்கை உங்கள் இருப்புத் தன்மைக்குள்கொண்டு வருவதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். விழிப்புணர்வு என்ற விளக்கை விழிப்புணர்வற்ற பகுதிக்குக்கொண்டு வாருங்கள். உங்கள் மொத்த விழிப்புணர்வும் ஒளிச்சுடரான பிறகு அஹங்காரம் என்ற இருள் அங்கு இல்லாமல் மறைந்து விட்டதைக் காண்பீர்கள்.
அஹங்காரம் என்பதே கற்பனையான ஒன்று. அது ஒரு மாயை. விழிப்புணர்வில்லாத நிலையில் அதை நீங்கள் சரணாகதி செய்ய முடியாது. ஏனென்றால் அதைச் செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையில், நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக மாறிவிட்ட பிறகும் அதை சரணாகதி செய்ய முடியாது. ஏனென்றால் சரணாகதி செய்வதற்கென்று அங்கு எதுவும் மிச்சம் மீதி இல்லை என்பதும் அப்பொழுதுதான் புரியும்!
இதுவரை நீங்கள் கேட்டது, படித்தது, கற்றுக்கொண்டது எல்லாமே ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்ய வேண்டும் என்பதே! ஆனால் இது முற்றிலும் அறிவுக்குப் புறம்பான கருத்து. இது வேறு விதத்தில் மாறாக மட்டுமே நடக்கக்கூடியது.

ஆத்ம ஞானம் உங்களுக்குள் இறங்கிய அந்தக் கணமே நீங்கள் அங்கு அஹங்காரத்தைப் பார்க்க முடியாது. அஹங்காரம் அங்கிருக்காது. ஏற்கனவே அங்கே சரணாகதி நிகழ்ந்திருக்கும்.
எப்படியானாலும் இந்தக் கேள்வி உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து எழுந்துள்ளதால் எனக்குச் சந்தோஷமே.
உங்களின் ஆவல், கவலைகள், பதற்றங்கள் எல்லாவற்றிற்கும் அஹங்காரம்தான் மூலகாரணம். உங்களின் நரகத்திற்கான வாயிற்கதவு அதுதான்.
அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆர்வமாக நீங்கள் உணர்வது என்பதே, அந்தச் சுமையை இறக்க வேண்டும் என்கிற உணர்வு உங்களுக்கு இருப்பதினால்தான். இதுவே விழிப்புணர்வை நோக்கி நீங்கள் வைக்கும் ஒரு முதல் படிதான்.
நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது!

