உன்னதமானதிலிருந்து, உன்னதமானதற்கே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எவர் ஒருவர் தம் ஆன்மாவிலேயே ஆனந்தம் பெறுகிறாரோ, தம் ஆன்மாவிலேயே திருப்தியுறுகிறாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனநிறைவுடன் இருக்கிறாரோ, நிச்சயமாக அவருக்குச் செயல் என்பதே இருப்பதில்லை.
நிச்சயமாக, இந்த உலகில் அவர் தம் கடமையைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ அவருக்கு எந்தவிதமான காரணமும் இருப்பதில்லை. எந்த உயிரினத்தையும் அவர் சார்ந்து இருப்பதில்லை.
அதனால் ஒருவர் எப்பொழுதும் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். பற்றில்லாமல் செயல் புரியும்போது, நிச்சயமாக, அந்த மனிதர் உயர்ந்த நிலையை அடைகிறார்.
தன்னலமற்ற சேவையினாலேயே ஜனக மஹாராஜாவும் மற்றவர்களும் முழுநிறைவு அடைந்தார்கள். மற்றவர்களுக்கு
வழிகாட்ட, நீயும் தன்னலமற்று செயல்பட வேண்டும்.
கிழக்கில் உள்ள ஞானிகள் நமக்கு மீண்டும், மீண்டும் இதையேதான் வலியுறுத்திச் சொல்கிறார்கள், "நீயே ஆனந்தம், நீயே அன்பு, நிலையான ஆனந்தமே நீதான்," என்கிறார்கள். அந்த ஆனந்தமே நீங்கள்தான் என்று இருக்கும்போது, வேறு எதை நீங்கள் கேட்டுப்பெற முடியும்?!
இந்த ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொண்ட பின், உணர்ந்து கொண்டபின், நீங்கள் உங்களுக்குள்ளேயே முழுமை பெறுகிறீர்கள்! நீங்கள் உங்களுக்குள்ளேயே மூழ்கி, ஆழ்ந்து, முழுமையான நிறைவுடையவர்களாக உணர்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே உங்களை நீங்களே அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு அடைவதற்கென்று எதுவும் இருப்பதில்லை. ஏனென்றால் அடையவேண்டிய பூரணத்துவமே நீங்கள்தான்! அதை நீங்கள் அடைந்து விட்டீர்கள்!
தற்பொழுது, பேராசைகொண்டு ஏதோ ஒன்றின் பின் ஓடுகிறீர்கள். அதை நீங்கள் அடைந்தீர்களானால், அது உங்கள் உடைமையாகுமானால், உங்களுக்கு அது ஆனந்தத்தைத் தரும் என்று நினைத்து ஓடுகிறீர்கள். ஒன்று பேராசைகொண்டு எதன் பின்னரோ ஓடுகிறீர்கள் இல்லை அச்சம்கொண்டு எதையோ விட்டு விலகி ஓடுகிறீர்கள்.
## பிரபஞ்ச சக்தியே ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொறுப்பு
ஏதோ ஒன்று, உங்கள் சந்தோஷத்தை, உங்கள் வாழ்க்கையை உங்களிடமிருந்து எடுத்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்.
ஒவ்வொரு கணமும் நம்மைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்கிற, இந்த அன்பான பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் நாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, இதன் பின்னாலோ ஓடுவதும், எதையோ விட்டு விலகுவதும் இரண்டுமே அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வொரு கணமும் தன்னுடைய அரவணைப்பில், பிரபஞ்ச இருப்பே பொறுப்பெடுத்து உங்களைக் கவனித்துகொள்கிறது.
இருப்புத் தன்மை ஒவ்வொரு நொடியும் உங்கள் மேல் தன் அன்பைப் பொழிகிறது. உங்களைக் கவனித்துக்கொள்கிறது. இருப்புத் தன்மை நீங்கள் உயிருடன் இருப்பதை விரும்பவில்லை என்றால், உங்களால் ஒரு நொடிக்கூட உயிருடன் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்கிற இந்த நிதர்சனமான உண்மையே, இருப்புத் தன்மை இப்போது நீங்கள் இங்கே, இந்த வடிவில், இந்த இடத்தில் இருக்க வேண்டுமென விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.
வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு இதுவே உறுதியான காரணமாகிறது! இதைவிட மேலாக உங்களுக்கு என்ன வேண்டும்?
பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் ஒவ்வொருவருடைய தேவைகளையும் இதற்கு முன்னும் தந்திருக்கிறது, இப்பொழுதும் தந்து கொண்டிருக்கிறது. இனியும் அது தரப்போகிறது. உங்களுடைய வேதனைகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணம், உங்களுக்குத் தேவையானவை எல்லாமே தரப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாததுதான்! ஏனென்றால் இருப்புத் தன்மையை உங்கள் எதிரியாக நினைத்துக்கொண்டு, பிரபஞ்ச இருப்பைக் காட்டிலும் நீங்கள் தனியானவர் என்று உங்களை நீங்களே கருதிக்கொண்டும் இருக்கிறீர்கள்.
என்னுடைய கால்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கின்றன என்று அடிக்கடி மக்கள் என்னிடம் சொல்வதுண்டு. பல ஆயிரக்கணக்கான மைல்கள், வடக்கில் இமயமலையிலிருந்து, தெற்கில் கன்னியாகுமரிவரை, மேற்கில் துவாரகாவிலிருந்து, கிழக்கில் கங்காசாகர்வரை எல்லாவித நிலப்பரப்பிலும் நான் காலணிகள் அணியாமலேயே நடந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது.
புரிந்துகொள்ளுங்கள், அன்னை பூமியின்
மேல் நீங்கள் பெரும் மரியாதையுடனும்
மிகுந்த அன்புடனும் நடந்தால் அவள்
உங்களைச் சீராட்டுவாள்.
> உங்களுடைய
> வேதனைகளுக்கும்
> போராட்டங்களுக்கும்
> காரணம்,
> உங்களுக்குத்
> தேவையானவை
> எல்லாமே
> தரப்பட்டிருக்கிறது என்ற
> நம்பிக்கை உங்களுக்கு
> இல்லாததுதான்!
நான் என் சிறுவயதில்கூட காலணிகளை அணிந்தது கிடையாது. இப்போதும்கூட நான் பிறந்து வளர்ந்த இடமான திருவண்ணாமலைக்குச் செல்லும்போது காலணிகளை நான் அணிவது கிடையாது.
குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த ஊருக்குள் நான் காலணிகளை அணிந்தது கிடையாது. நான் கல்லூரிக்குப் பஸ் மூலம் செல்லும்போது, திருவண்ணாமலை நகரத்தைத் தாண்டியபிறகுதான் காலணிகளை அணிவேன். பின் ஊருக்குள் திரும்பும்போது அவற்றைக் கழற்றி விடுவேன்.
அது ஒரு புனிதமான நிலப்பகுதி. அங்கு ஒருவர் அதனோடு இசைவுடன் இருக்க வேண்டும். என்னைப் பின்பற்றுபவர்கள் பலர், இந்த ஊருக்குள் இருக்கும்போது தங்கள் காலணிகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
ஒருமுறை காட்டுப்பகுதியில் யானைமேல் சவாரி சென்றேன். வழிகாட்டி எனக்கு ஒரு பாதையைச் சுட்டிக் காட்டினார். அது மனிதர்கள் பயன்படுத்தும் பாதை. அதற்குப் பக்கத்தில் ஒரு யானை நடந்து கொண்டிருந்தது. மனிதர்கள் நடக்கும் பாதையில் பசும்புற்கள் காணப்படவில்லை. அப்போது அந்த வழிகாட்டி சொன்னார், "எங்கு மனிதர்கள் நடக்கிறார்களோ அங்குச் செடிகளோ, புற்களோ வளர்வதில்லை, ஆனால் எங்கு யானைகள் நடக்கின்றனவோ, அங்குப் புற்கள் சாவதில்லை!"
மனிதர்களாகிய நாம், இயற்கையுடனான, இருப்புத் தன்மையுடனான தொடர்பை இழந்துவிட்டோம். நாம் நம்முடனான ஒத்திசைவையும் இழந்து விட்டோம்; இயற்கையுடனான ஒத்திசைவையும் இழந்து விட்டோம். அதனால்தான் இயற்கையை இனிமையற்று அனுபவிக்கிறோம். நம்முடைய பிரார்த்தனைகளில்கூட நன்றியுணர்வு இருப்பதில்லை. அங்கே யாசிப்பது மட்டுமே உள்ளது. நாம் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டோம்.
அதுமட்டும் இல்லாமல், இருப்புத் தன்மை
உங்கள் தேவைகளைத் தேர்ந்தெடுத்து,
அவற்றைப் பூர்த்தி செய்வதின் மூலம்
உங்களை அது எந்த அளவிற்குப்
கவனித்துக்கொள்கிறது என்பதில்
உங்களுக்குத் திருப்தி இல்லை. நீங்கள்
மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் என்ன
வைத்திருக்கிறார்களோ அதன் அடிப்படையில்
உங்களுக்குத் தேவையானவற்றைப்
பற்றிய ஒரு பெரிய பட்டியலையே
வைத்திருக்கிறீர்கள்.
நாம் எல்லோருமே ஒப்புயர்வற்றவர்கள், தனித்துவம் வாய்ந்தவர்கள், நமக்குத் தேவையான அனைத்தையுமே நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறீர்கள். அதற்குப் பதிலாக, மற்றவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்று அவற்றைப் பார்க்க ஆரம்பித்து, அதையும் கேட்கிறீர்கள். விளைவு, பேராசை உங்கள் உள்ளே நிலைபெற்று விடுகிறது.
இப்படித்தான் ஸத்யத்திலிருந்து விலகி ஓடியும், ஆசைகளின் பின்னால் ஓடியும் உங்கள் மொத்த வாழ்க்கையையும் வீணாக்குகிறீர்கள். வெளி உலகத்தின் மீது மட்டுமே நம்முடைய பார்வை இருக்கிறது.
நம் சந்தோஷங்களும் துக்கங்களும் இதன் விளைவுகளே. வெளி உலகத்தைப் பொறுத்தே நம்முடைய சந்தோஷங்கள் இருக்கிறது என்ற நிலை இருக்கும்வரை அங்கு நிரந்தர சந்தோஷம் எப்படி இருக்க முடியும்?
தம் உள்மையத்தில் நிலைகொண்டு இருக்கும் ஒருவர், தம்முடைய மகிழ்ச்சிக்காக வெளிக்காரணங்களைச் சார்ந்து இருக்கமாட்டார். ஆனந்தமயமாக உணர்வதற்கு அவர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கமாட்டார். அவர் சந்தோஷத்தை உணர்வதற்கு, ஏதோ ஒரு நிகழ்வு நிகழ வேண்டும் என்று விரும்புவதில்லை. ஏதோ ஒரு நிகழ்விற்காக அவர் காத்திருப்பதும் இல்லை. இடைவிடாமல் அவருள் ஆனந்த ஊற்று பொங்கிக்கொண்டே இருக்கும். அவர் தம்மைத் தமக்குள்ளேயே ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பார். அவர் உற்சாகமாகவே மாறி விடுவார். அவரே ஆனந்தம்! ஆனந்தமே அவர்!
உண்மையில், அந்த ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது என்று நான் சொல்லும்போது, எந்தக் காரணமும் இல்லாமல் அது நிகழ்கிறது என்பதையே குறிப்பிடுகிறேன். நாம் எப்போதுமே, ஏதோ காரணம் இருந்தால்தான் உற்சாகம், மகிழ்ச்சி நிகழ முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் மற்றொரு புறத்தில், காரணமேயில்லாமல் சோகமாக இருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குக் காரணம் தேவைப்படுகிறது, ஆனால் சோகமாக இருப்பதற்கு மட்டும் காரணம் தேவைப்படுவதில்லை!
எந்தக் காரணமும் இல்லாமல், "இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது?" என்று சிடுசிடுப்புடன், மகிழ்ச்சியற்றவராக, துக்கத்துடன் எப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் சந்தோஷமாக இருக்க ஏதோ காரணம் வேண்டும் என்று மட்டும் எப்போதும் நினைக்கிறீர்கள்.
உங்கள் இருப்புத் தன்மையில் ஒவ்வொரு கணமும் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
> நாம் மகிழ்ச்சியாக
> இருக்க வேண்டுமானால்,
> நமக்குக் காரணம்
> தேவைப்படுகிறது,
> ஆனால் சோகமாக
> இருப்பதற்கு மட்டும்
> காரணம்
> தேவைப்படுவதில்லை!
முதல் நிலை த்யான முகாமான் ஆனந்த
ஸ்பூரண த்யான முகாமில் நம் உடலில்
உள்ள ஏழு சக்த மையங்களைப் பற்றியும்
நமக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும்
ஆனந்த ஊற்றைத் தடுத்து நிறுத்துவதை
நிறுத்தத்திற்குக் கொண்டுவருவது எப்படி
என்பதைப் பற்றியும் கற்றுத்தரப்படுகிறது.
இரண்டாம் நிலை முகாம் நித்யானந்த ஸ்பூரண முகாம் இதைத் திரும்ப உறுதிப்படுத்துகிறது. இந்த முகாமில், உங்களுக்குள் நிலையாகப் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆனந்த ஊற்றை தக்க வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும், நிலையாக எப்போதும் நித்யானந்த நிலையில் இருப்பது எப்படி என்பது பற்றியும் உணர்த்தப்படுகிறது.
செயலின் பற்றற்ற தன்மை, வெற்றியின் நிதர்சனம்.
இங்கே கிருஷ்ணர் ஒரு அழகான செய்தியைச் சொல்கிறார்.
அரசர் ஜனகர், ஒரு உண்மையான கர்மயோகிக்கு, அதாவது தொடர்ந்து தன்னலமில்லாமல் செயல்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு செயல்வீரருக்கு உதாரண புருஷராக இருக்கிறார். அவர் ஒரு பெரும் நாட்டையே ஆட்சி செய்தார், இருந்தும் பற்றில்லாமல், சுதந்திரமாக இருந்தார். கிருஷ்ணர் பெரும் ராஜ்ஜியத்தை ஆண்டார். ஆனாலும் ஸந்யாஸி என்ற வார்த்தைக்கான பொருளாகவே, வடிவமாகவே உதாரண புருஷராகவே வாழ்ந்தார்.
அதுபோலவே ஜனகரும் வெளி உலகத்தால் தொடப்படாமல் பாதிக்கப்படாமல், ஒரு அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரண புருஷராகவே வாழ்ந்தார்.
ஒருமுறை, ஒரு துறவி ஜனகரின் அரசவைக்குச் சென்றார். அரசர் ஜனகர் அளவுக்கு அதிகமான இராஜ்ஜிய காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு, ஒரு ராஜாவைப்போல் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
அந்தத் துறவி, ‘ஜனகர் பொருள் சார்ந்த உலகில் அதிகம் கவனம் செலுத்துபவராக இருக்கிறாரே, அவர் பல உலக விஷயங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறாரே’ என்று தமக்குத்தாமே நினைத்துக் கொண்டார். ஜனகருக்குத் துறவி என்ன நினைக்கிறார் என்பது புரிந்தது.
உங்கள் இருப்புத் தன்மையில் ஒவ்வொரு கணமும் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
ஜனகர் அவரை அழைத்துக் கேட்டார், "என்ன மாதிரியான துறவி நீங்கள்? உங்களுக்குள்ளேயே சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு மற்றவர்கள் மேல் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றீர்களே? அதிலும் கண்டிப்பாக இதைப்பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய துறவியாகிய உங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பாவம். இதற்காகவே உங்களுக்குக் கடுந்தண்டனை கொடுக்கப்பட வேண்டும், நீங்கள் அடுத்த வாரம் தூக்கிலிடப்படுவீர்கள்," என்றார்.
இதைக் கேட்டவுடன் இந்தத் துறவி அதிகமான பயத்திற்குள்ளானார். அவரால் அமைதியாக உட்காரமுடியவில்லை. அவர் தூக்கமில்லாமல் இரவு முழுவதும் தூக்கு மரத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தார்.
அப்படியே சிறிது நேரம் தூங்கினாலும், கயிற்றினால் அவரது கழுத்து இருக்கப்படுவதாகக் கனவு கண்டு பயத்தினால் விழித்துக் கொண்டார். அவர் மெலிந்தும், வெளுத்தும் போனார். தூக்குத்தண்டனையை nிறைவேற்றும் அன்று ஜனகர் ஒரு வேலையாளை அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்னார். துறவியால் மன்னனின் முன் நிற்கக்கூட முடியவில்லை. நடுநடுங்கியபடியே தரையில் விழுந்தார்.

ஜனகர் அவருக்குக் கொஞ்சம் பழங்களையும் சிறிது பாலையும் கொடுத்தார். அவர் அந்த உணவை உண்டார். அவர் மனம் தூக்குத் தண்டனையிலேயே இருந்தது. ஜனகர், அந்த துறவியிடம் "இப்போது இந்தச் சுவை எப்படி இருந்தது? நன்றாக இருந்ததா? ஒருவாரமாக நீங்கள் உணவை ரசித்து உண்டீர்களா?" என்று கேட்டார்.

துறவி தளர்ந்த குரலில், "மன்னா! நான் இப்போது நீங்கள் கொடுத்த உணவிலோ, பாலிலோ எந்த வகை சுவையையும் உணரவில்லை. என் மனம் எனக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனையில் மட்டுமே உள்ளது. நான் எல்லா இடங்களிலும் தூக்குக் கயிற்றை மட்டுமே பார்க்கிறேன்," என்றார்.
அதற்கு ஜனகர், "எப்படி உங்கள் மனம் எப்போதும் தூக்குத்தண்டனையிலேயே இருக்கிறதோ, அதைப்போலவே என் மனம் எப்போதும் கடவுளிடமே இருக்கிறது.
உலகத்திற்காகக் கருமம் செய்யுங்கள்! என்னைப்போல் பற்றற்று இருங்கள்! -ஜனகர்.
நான் உலக விஷயங்களில் ஈடுபட்டு அரசுக்கு உரிய கடமைகளைச் செய்தாலும் என் மனம் தெய்வீகத்திடமே இருக்கிறது. நான் இந்த உலகத்தில் இருந்தாலும்கூட, இந்த உலகை விட்டு வெளியில்தான் இருக்கிறேன். உலகத்திற்காகக் கர்மம் செய்யுங்கள்! என்னைப்போல் பற்றற்று இருங்கள்!" என்றார் ஜனகர்.
ஜனகர் அளவுக்கதிகமான செயல்களைச் செய்துவந்தாலும் இராஜ்ஜிய நிர்வாகங்களில் ஆழமாக ஈடுபட்டு இருந்தாலும் பற்றற்றும் சுதந்திரமாகவும் இருந்தார்.
ஒருமுறை மிதிலை நகரில் தீப்பிடித்துவிட்டது. இந்தத் தகவலை காவலர்கள் ஜனக மன்னரிடம் தெரிவித்தனர். பொதுவாக ஒரு அரசர் தம் ராஜ்ஜியத்தின் பகுதி தீப்பிடித்து எரிந்துகொண்டு ஆபத்தில் இருந்தால், பதற்றம் அடைவார். ஆனால் ஜனகரோ, "என்செல்வம் எல்லையற்றது, இருந்தும் என்னிடம் ஒன்றும் இல்லை. என் தலைநகரம் மிதிலை முழுவதும் எரிந்தாலும் பரவாயில்லை, எதையும் நான் இழக்கவில்லை," என்றார் தெளிவாக!
> என்னுடன் நீங்கள்
> இருக்கும்போது,
> உங்களுடைய மனம்
> உங்கள் கட்டுப்பாட்டில்
> இருப்பதில்லை.
> அதனால் நீங்கள்
> த்யானத்தில் ஆழ்ந்து
> செல்கிறீர்கள்.
ஜனகர் தம் நாடு தீப்பற்றி எரிவதைப்பற்றிக் கவலைப்படாமல், அதை அணைப்பதற்காக எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தார் என்று அர்த்தம் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் முழு ஈடுபாடுடன்தான் இருந்தார். அதே நேரம் அந்தச் சம்பவத்தில் பற்றற்றும் இருந்தார். ஜனகர் தம் இருப்புத் தன்மையில் மையம் கொண்டிருந்தார்; உலகில் அல்ல.
நான் உங்களுக்குச் சொல்கிறேன். செயலில் நீங்கள் முழுவதும் பற்று இல்லாமல் இருக்கும்போது மட்டுமே, உங்களால் அதில் முழுமையாக ஈடுபட முடியும். இல்லையென்றால், சொந்தம் கொண்டாடும் மன நிலையும் உணர்வு ரீதியான பற்றும் உங்களை எந்தவிதமான திட்டவட்டமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் தடை செய்யும் ஒரு தடைக்கல்லாகி விடுகின்றன.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளைவைப்பற்றிய கவலையும் இல்லாமல், அந்த நிகழ்வோடு உங்களை இணைத்துக்கொள்ளாமல் வெறுமனே இருக்கும்போது மட்டுமே, நீங்கள் சிறப்பான முறையில், நல்ல முறையில் செயலாற்ற முடியும்.
நீங்கள் மனத்தையும் தாண்டியவர்கள்
கேள்வி: ஸ்வாமிஜி நான் உங்கள் ஸாந்நித்யத்தில் இருக்கும்போது, என் கேள்விகள் மறைந்து, எல்லாமே சாத்தியம் என்பதுபோல் தெரிகிறது. ஆனால் நான் உங்களை விட்டுத் தள்ளி இருக்கும்போது, முன்பு இருந்த எல்லா சந்தேகங்களும் மீண்டும் என்னுள் எழுகின்றன. இது ஏன் நடக்கிறது? இதற்கு நான் என்ன செய்வது? என்னுடைய ஸாந்நித்யத்தில் ஒரு கேள்வி தானாகவே மறைகிறது என்றால் அது உண்மையான கேள்வி அல்ல என்று நீங்கள் உணர வேண்டும். இது வெறுமனே மனத்தின் ஒரு விளையாட்டு மட்டுமே.
என்னுடன் நீங்கள் இருக்கும்போது, உங்களுடைய மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதனால் நீங்கள் த்யானத்தில் ஆழ்ந்து செல்கிறீர்கள். நீங்கள் அன்பானவராகவும் தெளிந்த அமைதியுடையவராகவும் ஆகிறீர்கள். இந்த நிலையில், கேள்வியானது உங்களுடைய உண்மையான கேள்வியாக இருந்தால் மட்டுமே, அது முற்றிலும் உங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தால் மட்டுமே, அது உங்களுக்குள் இருக்கும்.
என்னுடைய ஸாந்நித்யத்தில், நீங்கள் மிகவும் ஆழமான விழிப்புணர்வில் இருக்கிறீர்கள், முழுமையாக நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், அதனால் அங்கே கேள்விகள் எழ இடம் இருப்பதில்லை.
என் ஸாந்நித்யத்தை விட்டு விலகும்போது, மனம் விடுதலைப் பெற்று கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் உங்கள் நிகழ்காலத்தில் பதிக்கிறது. உங்கள் நிகழ்காலத்தின் மீது கடந்தகால எண்ணங்களும் எதிர்கால எண்ணங்களும் விளையாடும் விளையாட்டுத்தான் உங்களுடைய கேள்விகள். அதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
அஹங்காரத்துடன் சண்டையிடுவதால் எப்படிப் பயன் எதுவும் ஏற்படாதோ, அதேபோல் மனத்துடன் சண்டையிடுவதாலோ அல்லது அதைக் குறை சொல்வதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை. இதில் எந்தப் பயனும் இல்லை, இது ஒரு குறிக்கோளற்ற போராட்டம், நீங்கள்
உங்கள்
நிகழ்காலத்தின் மீது
கடந்தகால
எண்ணங்களும்
எதிர்கால
எண்ணங்களும்
விளையாடும்
விளையாட்டுதான்
உங்களுடைய
கேள்விகள்.
நிச்சயமாகத் தோற்று விடுவீர்கள். அதற்குப் பதிலாக, இதுதான் மனத்தின் இயல்பு என்கிற விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் போதும். மனம் வேறு எந்த வழியிலும் செயல்பட முடியாது. மனச்சோர்வு, சந்தேகம், குழப்பம், பயம், பதற்றம் போன்றவற்றைக் க்கொண்டுவருகிற தன்மை கொண்டதுதான் மனம் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
இதத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தாலே போதுமானது. மனத்தைப்பற்றி எவ்வித தீர்ப்புகளையும் உருவாக்காதீர்கள். மனத்திடம் கோபம்கொள்ளாதீர்கள். அது உங்கள் சக்தியை விரயமாக்கிவிடும்.
நீங்கள் மனத்தின் செயல்பாடுகளைச் சாட்சியாய் நின்று பார்க்கும்போது, நீங்கள் மனம் அல்ல என்கிற விழிப்புணர்வை மெல்ல மெல்ல அடைகிறீர்கள். அப்போது நீங்கள் மனத்தையும் தாண்டியவர்கள், நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டுமே என்பதும் புரியும்.
நீங்கள் 'மனம்' என்ற பெயரால் குறிப்பிடும் அந்தப் பகுதியில், ஒழுங்கற்ற எண்ண ஓட்டங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் மெதுமெதுவாக ஒரு தெளிவான, ஆழமான விழிப்புணர்வு எழுகிறது.
அந்தக் கணத்தில் உங்களுடைய எல்லாக் கேள்விகளும் கரைந்து விடுகின்றன, மனமும் இல்லாமல் போய் விடுகிறது. என் ஸாந்நித்யத்தில், நீங்கள் இந்த நிலையைத்தான் அனுபவமாக உணர்கிறீர்கள்.
இந்த அனுபவத்தை நீங்கள் உங்களுடனேயே தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறையைத்தான் நான் இதுவரை உங்களுக்கு விளக்கினேன் - நீங்கள் என் அருகில் இல்லாத போதும்!
இது மெதுவாக நடைபெறும் ஒரு செயல்முறை; அதற்கான அவகாசம் கொடுங்கள்; நிச்சயம் இது உங்களுக்குள் நிகழும்.
