KAILASA Library/பகவத்‌கீதை/தலைமைப் பண்பு - விழிப்புணர்வுSign in
பகவத்‌கீதை

தலைமைப் பண்பு - விழிப்புணர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna

ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும்போது, மற்றவர்கள்
அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையில்
செல்கிறார்கள்.

ஓ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று
காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை;
செயல் மூலம் அடையப்படவேண்டிய பலன்களும் இல்லை;
இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் செயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால்,
ஓ பார்த்தா, நிச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என்
பாதையைப் பின்பற்றுவார்கள்.

நான் செயலாற்றவில்லை என்றால் பிறகு இந்த மூன்று
உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும், சர்வநாசமும்
உருவாக நான் காரணமாகி விடுவேன்.

அறியாமையில் உள்ளவர்கள் விளைவில் பற்று வைத்தே செயலைச் செய்கிறார்கள். ஓ பாரதா, விவேகமானவர்கள் செயல்களை மக்கள் நலனுக்காகப் பற்றில்லாமல் செய்கிறார்கள்.

கிருஷ்ணர் இங்கு ஒரு தலைவரானவர் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டியதின் தேவை என்ன என்பதைப் பற்றிய நடைமுறைக் கருத்துகளைப் பற்றி பேசுகிறார். ஒரு தலைவரின் நிலைக்கும் தலைவரின் பதவிக்கும் வித்தியாசம் உண்டு. நம்மில் பலபேர் தலைவருக்கான பதவியை அடைய விரும்புகிறார்கள், ஆனால் தலைவருக்குரிய நிலையை அல்ல.

நீங்கள் தலைமைப் பதவியை அடையும்போது, அது உங்களுடைய அஹங்காரத்திற்குத் திருப்தியைத் தருவதால், அதைப் பெருமையாக உணர்கிறீர்கள். அரசியல்வாதிகள் பலரும் தலைமைப் பதவியால் பெருமைப்படும் குணத்திற்கு உதாரணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பதவியின் மூலம் பெற்ற பலத்தை, மற்றவர்கள் மேல் கடும் முயற்சி செய்து நிலைநாட்டுகிறார்கள்.

முதலில் அவர்கள் அந்த ஆதிக்க பலத்தை எப்படிப் பெற்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

தாங்கள் யாரை ஆதிக்கம் செய்ய நினைக்கிறார்களோ, அவர்களைவிட சற்று அதிக அதிகாரத் தோரணை கொண்டவர்களாகவும் தாங்கள் சொல்வதை மற்றவர்களை நம்பச் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

நம்மில் பலபேர் தலைவருக்கான பதவியை அடைய விரும்புகிறார்கள், ஆனால் தலைவருக்குரிய நிலையை அல்ல.

இதனால் அவர்கள் அதிக அறிவு நிறைந்தவர்கள் என்றோ அல்லது அதிக செயல்திறன் கொண்டவர்கள் என்றோ அர்த்தம் கிடையாது.

அவர்கள் தங்கள்கொள்கையில், அக்கொள்கை எதைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அந்த நம்பிக்கையை மற்றவர்களையும் நம்பச் செய்வதில் அதிக சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது ஒருவேளை,

அந்த இடத்தை நிரப்ப வேறு ஒருவரும்
இல்லாததால், அவர்கள் தலைவர் ஆக
வந்திருக்கலாம்!

'தலைமைப் பண்பு' என்பது முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் தலைவரின் 'தலைமைப் பதவி' மக்களைப் பாதிக்கிறது. அது அரசியல் தலைவரின் கீழே உள்ள மக்களாக இருந்தாலும் சரி, அல்லது கூட்டுக்குழு நிறுவனத்தில், ஒரு தலைமை அதிகாரியின் (CEO) கீழ்ப்பணிபுரிபவராக இருந்தாலும் சரி எல்லோரையும் தலைமைப் பதவி பாதிக்கிறது. மன அழுத்தத்திலிருந்து, திருப்தியற்ற தன்மை மற்றும் வன்முறைவரை எல்லாவகையான பிரச்சினைகளுமே அந்தத் தலைமைப் பதவியால்தான் நிகழ்கிறது. ஏனென்றால் அந்த நபர் தலைமைப் பதவியைப் பெற்றாரே தவிர, தலைவருக்குரிய தன்மையை, தலைவருக்குரிய பண்பைப் பெறவில்லை.

ஆழமான புரிதல், அனுபவத்தின் எதிரொலி

நான் என்னுடைய பக்தர்களிடம் சொல்வதுண்டு, “நான் கற்றுத்தந்ததை நீங்கள் பயிற்சி செய்யுங்கள். நான் கற்றுத்தந்ததை போதனை செய்யாதீர்கள். நீங்கள் ஒரு முன்உதாரணமாக இருக்கும்போது மட்டுமே, நீங்கள் மற்றவர்களை உத்வேகப்படுத்தி உங்களைப் பின்பற்ற வைக்க முடியும்.”

நான் கற்றுத் தந்தவற்றிலிருந்து, நீங்கள் பட்டறிவு ரீதியாக எதைப்புரிந்து கொண்டீர்களோ, அதைப்பற்றி பேசுவதும் சொல்வதும் சுலபம். ஆனால் அந்தப் புரிதல் மேலோட்டமானது, ஆழமற்றது.

ஆழமான புரிதலானது அனுபவத்தால் மட்டுமே நிகழக்கூடியது. அந்தப் புரிதல் உங்களின் அனுபவமாக மாறும்போதுதான் முழுமை பெறுகிறது. அப்போது உங்கள் நம்பிக்கையில் நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறீர்கள்.

அப்படி இல்லாமல், உங்களின் புரிதல் வெறும் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே இருந்தால், அது மற்றவர்களின் அனுபவத்தின்

அடிப்படையில் மட்டுமே இருக்குமே தவிர,
அது உங்களுடைய சொந்த அனுபவமாக
இருக்காது. அப்போது உங்கள் நம்பிக்கையை
யார் வேண்டுமானாலும் அசைத்துவிட
முடியும். அதற்கான சாத்தியம் இருக்கிறது.

இந்த விஷயத்தில், உங்கள் நம்பிக்கையின்
வேர், எல்லா வகை கேள்விகளையுமே
எதிர்கொள்ளும் அளவிற்கு ஆழமாகவும்
உறுதியாகவும் இருக்காது.

மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.

சீடர்கள் (பின்பற்றுபவர்கள்),

குருமார்கள்

தலைவர்கள் (வழிகாட்டிகள்).

சீடர் என்பவர், குருவின் பாடங்களை இன்னும் அனுபவமாகப் பெற்றிருக்க மாட்டார். ஆனால் அவர் காட்டும் பாதையின் பயணத்தில் செல்ல ார்வமாக இருப்பர். அந்தப் பாதையில் செல்ல அவருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. குருவிடமிருந்து தாம் கற்றுக் கொண்டதை எப்படிப் பயிற்சி செய்வது என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பவர்தான் சீடர்.

குரு என்பவர், அந்த முடிவான அனுபவத்தை அடைந்து இறுதி நிலையிலேயே நிலைபெற்று இருப்பவர். அவர் ஏற்கனவே அந்த இறுதி நிலையில் இருப்பவர். யாரெல்லாம் அந்த நிலையை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்குத் தம்முடைய கருணையின் காரணத்தினால், அந்தப் பாதையைக் காட்டுகிறார்.

தம்முடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை குருவிற்கு இல்லை. ஏனென்றால் அவர் சாதாரண விதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

ஒரு சின்ன கதை:

ஒரு ஜென்குரு எப்போதும் மக்களைப் புகைப் பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திக் கொண்டிருப்பார். ஆனால் அவரே தினமும் புகைபிடித்துக் கொண்டிருப்பார். ஒரு நாள், ஒரு சீடர் குருவைப் பார்த்து, "குருவே, நீங்களே புகைபிடித்துக் கொண்டிருக்கும்போது, மற்றவர்களைப் புகைபிடிக்க வேண்டாம் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?" என்று கேட்டார்.

குரு மிக அழகாகப் பதில் தந்தார்.
"புரிந்துகொள், நான் யாருக்குச் சொல்லி
தந்து கொண்டிருக்கிறேனோ, அந்த நபரின்
நிலையிலோ, தளத்திலோ நான் இல்லை."

தலைவர்களும், பின்பற்றுபவர்களும் இருக்கும் அதே தளத்தில் குருமார்கள் இருப்பதில்லை. அவர்கள் நிலையை நீங்கள் அடைய வேண்டுமென்பதற்காக, அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தருபவற்றை எல்லாம் அவர்கள் பின்பற்ற தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் முழுவதுமாக வேறு தளத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள், உடல் - மன அமைப்பு இயங்கும் இந்த ஸ்தூல உலகின் மாயையைப் புரிந்து கொண்டவர்கள். அவர்கள் உடல் ரீதியாக எதைச் செய்தாலும் முழு விழிப்புணர்வு நிலையிலேயே செய்வார்கள்.

ஞானிகள் அவதரிப்பது

மக்களுக்கு வழிகாட்டுவதற்கே!

நான் எப்போதும் மக்களிடம், அவர்கள் உண்ணும்போது, முழு விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் இருந்தே உண்ண வேண்டும் என்று சொல்வதுண்டு.

ஆனால் நீங்கள் என்னைச் சுற்றி இருந்திருந்தீர்கள் என்றால், நான் உண்ணும்போது, என் உணவில் கவனம் செலுத்தாததை நீங்கள் பார்ப்பீர்கள். நான் சாப்பிடும்போது, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோதான் சாப்பிடுவேன்.

உங்களுக்கு, நீங்கள் உண்ணும்போது நீங்கள் உண்ணுகிற உணவின் மீது தியான நிலையில் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அப்பொழுதுதான் நீங்கள் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்பீர்கள். நீங்கள் வழக்கமாக உண்பதைப்போல் அதிகமாக உண்ண மாட்டீர்கள்!

ஆனால் எனக்கோ, நான் விழிப்புணர்வோடு இருந்தால், என் உடலுக்குத் தேவையான அளவு உணவை என்னால் உண்ண முடியாது. நான் என்னையே திசை திருப்ப வேண்டியிருக்கிறது, கவனத்தைத் திருப்பி விழிப்புணர்விலிருந்து வெளியில் வரும்போது மட்டுமே, உணவை உள்ளே அனுப்ப முடியும்!

ஞானமடைந்தவர்களின் உடல் - அமைப்பு சாதாரணமானவர்களின் உடல் - மன அமைப்பைவிட முற்றிலும் மாறுபட்டு உள்ளது. அதனால்தான் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கிற சில விஷயங்கள், ஞானமடைந்தவர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

ஞானமடைந்தவர்களின் உடல் - மன அமைப்பு சாதாரணமானவர்களின் உடல் - மன அமைப்பைவிட முற்றிலும் மாறுபட்டு உள்ளது.

ஒரு தலைவர் அல்லது வழிகாட்டி என்பவர் குருவுக்கும் சிஷ்யருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர். அவர் குருவின் உச்ச நிலையை அடையவில்லை. ஆனால் அந்த நிலையின் சில துளிகளை உணர்ந்தவர்.

அதே சமயத்தில், அவர், பின்பற்றுபவர்களின் அளவிற்கு அனுபவமற்றவராகவும் இருப்பதில்லை. குருவிற்கும் சிஷ்யருக்கும் இடையில் பாலமாக இருக்கிறார். அவர் பின்பற்றுபவரை குருவிடம் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக இருக்கிறார்.

நான் தியானபீட சங்கத்தின் ஆச்சாரியர்களிடம் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் இது: அவர்கள் மற்றவர்களுக்கு என்ன சொல்லித் தருகிறார்களோ, அதை அவர்களும் பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அது அவர்களுடைய பொறுப்பு என்றும் சொல்வதுண்டு. ஏனென்றால் அவர்கள் கற்பிக்கும் மக்கள் என்னிடம் வருவதற்கு அவர்களே பாலமாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. இது மற்றவர்களை உத்வேகப்படுத்த வேண்டுமென்பதற்காக, நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. புரிந்துகொள்ளுங்கள், அதைப் பயிற்சி செய்வது ஒன்றுதான் உங்களுக்கு ஒரு ஆழமான புரிதலைக் கொடுக்கும். ‘ஆழமான புரிதல்’ என்பதுதான் உங்களுக்குக் கிடைக்கும் முதல் பலன்; அதன் உண்மையான விளைவு அதுதான். மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு உத்வேக சஃக்தியாக, உந்து சஃக்தியாக இருப்பது என்பது உபவிளைவுதான்.

மற்றவர்களுக்குக் கற்றுத் தரும்போது, உங்கள் உறுதியான நம்பிக்கையின் விளைவாக எழுந்த தன்னம்பிக்கையை உங்கள் உடல் மொழியிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுத்தும்போது, இயற்கையாகவே நீங்கள் மற்றவர்களை உத்வேகப்படுத்துபவராகவும் மற்றவர்களுக்கு ஒரு உந்து சஃக்தியாகவும் ஆகிறீர்கள்.

‘தாம் சொல்வதைப்போல் நடப்பது’ என்றால் என்ன என்பதை தம்மையே ஒரு உதாரணமாகக்கொண்டு இந்த வரிகளில் கிருஷ்ணர் விளக்குகிறார்.

இந்தப் பூமண்டலம், விண்ணுலகமான
சொர்க்கம் மற்றும் பாதாள உலகம் ஆகிய
இம்மூன்று உலகங்களிலும் அவர் அடைய
வேண்டியது என்று எதுவும் இல்லை
என்றும், அவரைக் கட்டுப்படுத்தும் கடமை
என்று ஒன்று இல்லை என்றும் கிருஷ்ணர்
சொல்கிறார். இதில் அவருக்கு லாபமோ,
நஷ்டமோ அல்லது ஏதோ ஒரு செயலைச்
செய்ய வேண்டும் என்றோ என்று எதுவும்
இல்லை என்றாலும்கூட அவர் தொடர்ந்து
செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஏன்?

உங்கள்
உறுதியான நம்பிக்கையின்
விளைவாக எழுந்த
தன்னம்பிக்கையை
உங்கள்
உடல் மொழியிலும்
வார்த்தைகளிலும்
வெளிப்படுத்துங்கள்.

காரணம், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அவர் வடிவமைத்த பாதையை நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவார்கள். அவர் எதைச் செய்கிறாரோ, அதை அப்படியே பின்பற்றுவார்கள். இப்போது அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பு அவருடையதாகிறது.

அதனால் அவர் தமக்காக வேலை செய்ய வேண்டிய காரணம் எதுவும் இல்லையென்றாலும்கூட, அவரைப் பின்பற்றும் மக்களின் நலனுக்காகச் செயல்களைச் செய்கிறார்.

அவர் அவ்வாறு செயல்படாவிட்டால், மக்கள் அவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு செயலற்ற தன்மையில், தமஸில் விழுந்து விடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும், நான் மக்களை
இமயமலைக்கு அழைத்துச் செல்வது
வழக்கம். இமயமலை ஒரு பெரும் சக்திதளம்;
ஒரு உயிரோட்டமுள்ள சக்தி. இயற்கையின்
மடியில் இருப்பதும், வியப்புக்குரிய அந்த
சக்தி தளத்தில் இருப்பதும் வாழ்நாளில்
நாம் அனுபவிக்க வேண்டிய மிகப்பெரிய
பாக்கியம்.

15 நாட்கள் வெறுமனே இமயமலையைப்
பார்ப்பதும், அதன் மடியில் வாழ்வதுமே
நமக்குள் அபரிமிதமான உற்சாகத்தையும்
உத்வேகத்தையும் சக்திவாய்ந்த
உருமாற்றத்தையும் ஏற்படுத்தும்.

இமயமலையில் இருக்கிற சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களிலும் பல்வேறு வகை சடங்குகளைப் பல்வேறு இடங்களில் செய்தோம்.

இமயமலை

இந்தச் சடங்குகள் எல்லாம்
செய்வதில் எனக்கு என்ன
பயன்? என்னுடன் அழைத்துச்
சென்றவர்களுக்காகச் செய்தேன்.

அதன் மூலம் அதன் புனிதத்தைப்
புரிந்துகொண்டு, ஆர்வம்கொண்டு
நீங்களும் அதைச் செய்து,
அதிலிருந்து பயன் பெறுவீர்கள்
என்பதற்காகச் செய்தேன்.

ஞானமடைந்த பிறகு மக்களுடன் இருப்பதற்காகத்தான் நான் இமயமலையிலிருந்து வந்தேன். நான் அங்கு மலையிலேயே ஆனந்தமாகவும் அமைதியாகவும் தங்கி இருந்திருக்கலாம். ஆனால் மக்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால்தான் வந்தேன். ஞானமடைந்தவர்கள் பூமிக்கு வருவதன் காரணம் மக்களுக்கு வழிகாட்டவே.

நான் தொடர்ந்து வேலை செய்வதையும் ஆழமான ஈடுபாட்டுடன் செயலில் ஈடுபடுவதையும் மக்கள் பார்க்கிறார்கள். அது நிர்வாகமானாலும் சரி அல்லது உரையாற்றுதல் என்றாலும் சரி, எதிர்காலத்தில் வரப்போகிற நிகழ்வுகளைத் திட்டமிடுவதானலும் சரி, தியான சிகிச்சையானாலும் சரி, கற்றுத் தரும் போதும் சரி, அது எந்தச் செயலாக இருந்தாலும் சரி, அதைப் பார்த்து மக்கள் உத்வேகம் அடைந்து தொடர்ந்து வேலை செய்து, ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இடைவிடாமல் செயல் புரியத் தொடங்குகிறார்கள்.

நான் என்னுடைய வார்த்தைகளின் மூலமாகத்தான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதில்லை. நீங்கள் என்னுடைய வார்த்தைகளிலிருந்து கற்றுக்கொள்வதைவிட, என்னுடைய உடல் மொழி மூலம்தான் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

நான் உங்களுக்கு வார்த்தைகளைக் கொடுப்பது உங்கள் மனத்தை அமைதிப்படுத்துவதற்கே, அப்போதுதான் என்னுடைய சக்தியை நீங்கள் உள்வாங்க முடியும். நான் பேசவில்லையென்றால், நீங்கள் உங்களுக்குள்ளேயே உள் பேச்சில் ஈடுபடுவீர்கள்; என்னுடைய செய்திகளைத் தவற விட்டுவிடுவீர்கள்.

கிருஷ்ணர் சொன்னதைப்போல, நானும் என்னைப் பின்பற்றுபவர்களுக்காக, நான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்களைச் செய்ய வேண்டி உள்ளது.

பிரச்சினை என்னவென்றால், நான் எதைச் செய்கிறேனோ, அது என்னுடைய சொந்த அனுபவம். அது என்னுடைய சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு மட்டுமே. உங்களுக்குள்ளே அது அனுபவமாக மாறாவிட்டால், அது உங்களுடைய ஸத்யமாக மாற முடியும். அதனால் குரு செய்யும் அதே செயலை ஒரு சீடர் செய்யும்போது, அது முற்றிலும் வேறுபட்ட பொருளையும் விளைவையும் தரும்.

ஆனால் நீங்கள் குருவின் போதனைகளைப்
பின்பற்றி, குருவின் உடல் மொழியைக்
கவனித்தால், ஞானத்தையே, ஜீவன் முக்த
தன்மையையே உள்வாங்குவீர்கள்.

உதாரணத்திற்கு, “உங்கள் மூச்சைக்
கவனியுங்கள்,” என்று புத்தர் சொன்ன
எளிமையான நுட்பத்தைப் பாருங்கள். இந்த
எளிமையான தியான நுட்பமான விபாஸந
ஆயிரக்கணக்கானவர்களை ஞானத்திற்கு
அழைத்துச் சென்றது.

குருவின்
போதனைகளைப்
பின்பற்றி,
குருவின்
உடல் மொழியைக்
கவனித்தால்,
ஞானத்தையே,
ஜீவன் முக்த
தன்மையையே
உள்வாங்குவீர்கள்.

ஆனால் வெளித்தோற்ற அளவில் ஒரு ஆற்றல் மிக்க கண்டுபிடிப்பான அணுகுண்டு தயாரிக்கும் நுட்பத்தைப் பாருங்கள், அது மிகப்பெரிய ஸத்யம்தான். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்துகொள்ளாத மனிதர்களின் கைகளுக்குக் கிடைத்ததால் என்ன ஆனது? அதன் விளைவாக இன்று பல நாடுகள், பல வகையான ஆயுதங்களைச் சேகரித்து வைத்துள்ளனர். இப்போது அதைக்கொண்டு இந்த உலகை நம்மால் அழித்துவிட முடியும்

  • பலப்பல முறைகளுக்கு!

ஒரு செயலுக்குப் பின்னால் இருக்கும் இருப்புத் தன்மையின் சக்திதான், அந்தச் செயலின் தன்மையையும் விளைவையும் தீர்மானிக்கிறது. அந்தச் செயலே அதன் தன்மையைத் தீர்மானிப்பதில்லை.

தண்டனைக்குப் பயந்து தவறுகளைச் செய்துவிடும் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் செய்யும் சில செயல்கள் பார்ப்பதற்கு அவமரியாதையான செயலாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அது மற்றவர்களுக்குத் துக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் அந்தச் செயலில் எந்தவிதமான எதிர்மறை நோக்கமோ, வஞ்சமோ இல்லை.

குழந்தைகள் இதே போன்ற செயல்களைச் செய்யும்போது, உதாரணத்திற்கு, அவர்கள் உங்களை அடித்தாலும் உங்களுக்கு ரசிக்கத்தான் தோன்றும். காயப்பட்டதாகவோ, அவமானப்பட்டதாகவோ இருக்காது. சற்று கற்பனை செய்து பாருங்கள். வளர்ந்த ஒருவர் இப்படிச் செய்தால் உங்களால் அதை ரசிக்க முடியுமா?

குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையும் எளிமையும் நேர்மையும்தான் குழந்தையினுடைய அடிக்கும் செயலைக்கூட அழகுள்ளதாக்குகிறது. அந்தச் செயலுக்குப் பின்னால் முற்றிலும் குழந்தையின் சக்தியும் அதனுடைய புத்திசாலித்தனமும் இருக்கிறது.

வளர்ந்தவரின் செயலுக்குப் பின்னால்
அவரின் பட்டறிவு இருக்கலாம்; மனம்
இருக்கலாம், ஆனால் புத்திசாலித்தனம்
இருக்காது. ஏனென்றால் விழிப்புணர்வற்
பழி உணர்ச்சி மட்டுமே அந்தச் செயலில்
இருக்கும்.

குருமார்கள் எதைச் செய்தாலும் அது தூய கருணையிலிருந்து எழுந்த ஒரு செயலாகவே

> செயலுக்குப் பின்னால்
> இருக்கும்
> இருப்புத் தன்மையின்
> சக்திதான்,
> அந்தச் செயலின்
> தன்மையையும்
> விளைவையும்
> தீர்மானிக்கிறது.

இருக்கும்; அது கருணையின் வெளிப்பாடாக
இருக்கும். அதனால்தான் நான் அடிக்கடி
யாரையாவது திட்டினாலும் அவர் என்மேல்
வஞ்சம் வைப்பதில்லை. திட்டுவதுகூட
உங்களுடைய நன்மைக்காகவே;
உங்களுடைய அஹங்காரத்தை
வேரறுப்பதற்காகவே!

குருமார்கள்
எதைச் செய்தாலும்
அது
தூய கருணையிலிருந்து
எழுந்த ஒரு செயலாகவே
இருக்கும்;
அது கருணையின்
வெளிப்பாடாகவே
இருக்கும்.

இது உங்களுக்கு வேதனையாகத்தான் தெரியும். ஏனென்றால் நீங்கள், எந்த அஹங்காரத்தை 'நீங்கள்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, 'அது' பிடுங்கி எறியப்படுகிறது. நீங்கள் என்று 'எது' இல்லையோ, 'அது'தான் வெளியில் எடுக்கப்படுகிறது. இது உங்கள் நன்மைக்காகவே என்பது உங்கள் இருப்புத் தன்மைக்குப் புரியும். திட்டுவதில்கூட தூய கருணை மட்டுமே இருக்கும்.

அதனால்தான் திட்டி முடித்த அடுத்த கணம், முற்றிலுமாக மாறி என்னால் அன்பைப் பொழிய முடிகிறது. திட்டுதலில் எந்தவிதமான பழிவாங்குதலும் இல்லை. அந்தக் கணத்தில் அது முழுமையான ஸத்யம். அது தூய கருணையின் சக்தி. அதனால்தான் அடுத்த கணமே அது அன்புமயமான உணர்வுக்கு மாற முடிகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதனதன் விதத்தில் அது தூய்மையாக உள்ளது.

ஆனால் நீங்கள் யார் மீதோ கோபப்பட்டுத் திட்டும்போது என்ன நடக்கிறது? உதாரணத்திற்கு உங்கள் குழந்தையைத் திட்டுகிறீர்கள் என்றால், என்ன நடக்கிறது?

கோபம் உங்களைப் பிடித்துக்கொள்கிறது. அது உங்களை ஆட்கொள்கிறது. நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தக் கோபம்தான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்தச் செயலின்போது நீங்கள் விழிப்புணர்வற்று இருப்பதால் நீங்கள் கோபத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்.

உங்கள் குழந்தை நீங்கள் எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளவில்லையானால், உடனேநீங்கள், உங்களுடையகடந்தகாலகருத்துகளாலும்இதைப்போலவே வேறுசமயத்தில் நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களின் நினைவுகளாலும் விரட்டப்பட்டு, அவனுடைய இன்றைய செயலுக்குத் தகுந்த அளவில் கோபப்படாமல், அளவுக்கு அதிகமான கோபத்துடன் அவனிடம் எதிர்ச்செயல் புரிகிறீர்கள். அவர்கள் இப்போது செய்த தவறு சிறியதாகவே இருந்தாலும் அந்த தவற்றுக்கு ஏற்ற தண்டனையைக் காட்டிலும், அதிக அளவு கோபப்பட்டு, அதிக தண்டனையைக் கொடுக்கிறீர்கள்.

கோபம்கூட ஒரு சக்திதான், ஆனால் அதை நீங்கள் மரியாதையுடன் கையாள வேண்டியுள்ளது. நீங்கள் பணத்தை மிகவும் மதித்து, யாருக்கும் அதைத் தேவைக்கதிகமாக கொடுக்காமல் இருக்கிறீர்கள். அதைப்போல, கோப சக்தியின் ஆற்றலை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, நீங்கள் அதை மதிக்க ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்களுக்குத் தேவையான அளவு கோபத்தையே கொடுப்பீர்கள், தேவைக்கதிகமான கோபத்தைக் கொடுக்க மாட்டீர்கள்.

| | நீங்கள் சரியான கோப சக்தியை
கொடுத்தீர்களானால், அது உருமாற்றம்
செய்யும் சக்தியாக ஆக முடியும். ஆனால்
செயலுக்குப் பின்னால் உள்ள உங்கள்
எதிர்மறை மனப்பாங்குதான் விரும்பத்தகாத
விளைவுகளை உருவாக்கி விடுகிறது.
அதனால் அந்த நபர் உங்கள் மேல் பழி
உணர்ச்சியை வைத்துக்கொள்கிறார்,
அவருக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு
இல்லாமலேயேகூட இருக்கலாம். |

|---|---|

| கோபம்கூட ஒரு சக்திதான்,
ஆனால் அதை நீங்கள்
மரியாதையுடன்
கையாள
வேண்டியுள்ளது. |

தெளிவாகப் பாருங்கள்: உங்கள் பழி உணர்வின் விளைவுதான் அவரின் பழி உணர்ச்சி! அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அது உங்களுடைய சொந்த செயலினால்தான் உண்டானது என்று உங்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நீங்கள் திட்டும்போது முற்றிலும் விழிப்புணர்வோடு இருக்கவில்லை.

நான் எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு, "நான் உங்களிடம் கருணையோடு இருக்கும்போது, உங்களை ஏமாற்றுகிறேன்; நான் உங்களைத் திட்டும்போது, உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்," இவ்விரு வழிகளில் எதுவாக இருந்தாலும் நீங்கள் வளர்கிறீர்கள்.

நான் உங்களைத் திட்டும்போது, நீங்கள் திடீரென்று உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப்படுகிறீர்கள். உடனே நீங்கள் தவறவிட்டுக் கொண்டிருந்த விழிப்புணர்வை மின்னல் வேகத்தில் பெற்று விடுகிறீர்கள். என் வார்த்தைகளின் பின் உள்ள சக்தி முழுவதும் உங்களின் உருமாற்றத்திற்கே! அங்கே தூய கருணைதான் உள்ளது. அங்கு யாருக்கு எதிராகவும் எந்தவகை பழிவாங்கலும் வன்முறையும் இருப்பதில்லை! அதில் எனக்கு எந்தவித சுய ஆதாயமோ அல்லது மறைமுகமான நோக்கமோ இருப்பதில்லை.

அமைதியான தியான நிலை, தெய்வீக சக்தி உள் செல்லும் வழி

கேள்வி: ஸ்வாமிஜி! இந்தியாவில் நாங்கள் சடங்குகள், விக்ரஹ வழிபாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றும் முறையிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறோம். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?

முதலில், நான் சடங்குகளையோ, விக்ரஹ வழிபாடுகளையோ அல்லது வேறு எதனையோ அந்தக் கருத்துக்காக ஒத்துக்கொள்ளவோ அல்லது எதிர்க்கவோ இல்லை!

இந்தியாவிலும் மற்ற கிழக்கு நாடுகளிலும் விக்ரஹ வழிபாடு சர்வசாதாரணமாக இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஆன்மீகப் பயணத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, தெய்வத்தை அருவமாக கருத்தில்கொள்வது கடினம்.

அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்படும்போதுதான், அந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளவும் அதனுடன் தம்மை இணைத்துக்கொள்ளவும் அவர்களால் முடிகிறது.

அவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியைக் கொண்டு விக்ரஹத்தின் மூலமாக, தெய்வீகத்துடன் தொடர்புகொள்ள முடிகிறது. நம்முடைய ஆயிரக்கணக்கான விக்ரஹங்கள் எல்லாமமே தெய்வீகத்தின் வெளிப்பாடுகள்தான், அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் நம்மால் பேச முடியும்; அவற்றோடு நம்மால் விளையாட முடியும்; அதனைப் பிரார்த்திக்கவும் முடியும். அதனிடமிருந்து

> நான் உங்களிடம் கருணையோடு இருக்கும்போது, உங்களை ஏமாற்றுகிறேன்; நான் உங்களைத் திட்டும்போது, உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். ஆறுதலைப் பெறவோ அல்லது அதனிடம் நம் நன்றியுணர்வைக் காட்டவோ முடியும்.

அச்சமூட்டுகிற, விவரிக்க முடியாத முழுமையான தெய்வீகத்தின் தன்மையானது அளவு விகிதத்தில் சிறிதாக்கப்பட்டு, சாதாரண மனிதனாலும் அணுகுவதற்கு ஏற்ற முறையில், எளிமையாக விக்ரஹமாக வடிக்கப்படுகிறது. இது இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது; ஏனென்றால் சாதாரண மனித மனத்திற்கு அருவ தெய்வம் என்பது மிகுந்த பயத்தைத் தரும் கருத்தாக இருக்கிறது.

> உங்கள் முன் உள்ள
> விக்ரஹம்
> உங்களைப் போன்ற
> வடிவிலேயே இருக்கிறது,
> அது உங்களைப் பற்றி
> என்ன சொல்கிறது?
> அது நீங்களும்
> தெய்வீக தன்மை
> உடையவர்கள்
> என்பதையே சொல்கிறது!

ஆழமாக, ஸூக்ஷ்ம நிலையில், இதில் மேலும் ஒரு வலுவான கருத்து இருக்கிறது. அதாவது உங்கள் முன் உள்ள விக்ரஹம் உங்களைப் போன்ற வடிவிலேயே இருக்கிறது, இருந்தும் தெய்வமாக இருக்கிறது. அது உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? சற்று யோசித்து பாருங்கள்! அது நீங்களும் தெய்வீக தன்மை உடையவர்கள் என்பதையே சொல்கிறது!

நீங்கள் உருவவழிபாடு செய்யக்கூடியவராக இருந்தீர்கள் என்றால், அதற்காக உங்களை நீங்களே நிந்தித்து குறைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆன்மீகத்தில் வளர வளர, விக்ரஹம் இல்லாமலேயே உங்களால் தெய்வீகத்திடம் ஆத்மார்த்தமாக தொடர்புகொள்ள முடிவதைப் பார்ப்பீர்கள். குழந்தைகள் வளர்ந்தவுடன் பொம்மைகளுடன் விளையாடுவதை விட்டு விடுவதைப்போலத்தான் இதுவும்.

நேரம் வரும் போது, நீங்களே உங்கள் சொந்த விருப்பத்தில் விக்ரஹ வழிபாட்டை விட்டு விடுவீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கு விருப்பமான விக்ரஹத்தை நீங்கள் வழிபடும்போது, அது உங்களுக்கு உயர்ந்த உணர்வைத் தந்தால், ஆனந்தமான உணர்வைத் தந்தால் தொடர்ந்து வழிபடுங்கள். நீங்கள் விக்ரஹங்களைத் தாராளமாக வழிபடலாம்.

ஆன்மீகம் என்பது பரந்த, கரை இல்லாத ஒரு கடல் போன்று இருக்கிறது. அதில் இறங்கி முதன் முதலாக நீந்த கற்றுக்கொள்ளும்போது, உங்களுக்குத் தன்னம்பிக்கையைத் தர ஒரு மிதவைக் காப்பமைப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்வது நல்லதே. ஏனென்றால் நிச்சயமாக அது உங்களை மூழ்கவிடாது என்கிற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். நீங்கள் நன்றாகவும் உறுதியாகவும் வளர்ந்த பின், இயற்கையாகவே அதன் பிடிப்பை உதறிவிட்டு, கடலின் ஆழமான பகுதிக்குள் நுழைந்து பயமில்லாமல், சுதந்திரமாக நீந்துவீர்கள்.

சடங்குகளைப் பொறுத்தவரை சில வண்ணங்கள், ஒலிகள், செயல்கள் இவை உங்களுடைய மன நிலையில் ஆழமான தாக்கங்களையும் விளைவுகளையும் உருவாக்கி, உங்கள் மூளையின் தேவையான பகுதியைச் செயல்பட வைத்து, உங்களது விழிப்புணர்வை விரிவடையச் செய்ய முடியும் என்பது விஞ்ஞானப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில், அதன் உண்மையான பொருள் மறைந்துவிட்டதால், சடங்குகளின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் தொலைந்துவிட்டது. சடங்குகளின் ஓடு மட்டுமே மீதம் உள்ளது, அதன் சாரம் அதனை விட்டு நீங்கிவிட்டது.

இன்றைய காலகட்டத்தில் சடங்குகள் அர்த்தமற்றதாகவும் அவசியமற்றதாகவும் தெரிந்தாலும் கூட, சடங்குகளின் மேன்மை மிக்க ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். பல நூற்றாண்டுகளாகத் தூய்மைப்படுத்தப்பட்ட நுண்ணறிவை அடித்தளமாகக்கொண்டு உருவாக்கப்பட்டவையே சடங்குகள்! எண்ணிலடங்காத ஞான குருமார்களின் தவம்தான் சடங்குகள்.

சடங்குகளை முழுமையாகவும் சரியாகவும் செய்யும்பொழுது, அவை நம் விழிப்புணர்வு நிலையைக் கற்பனைக்கெட்டாத அளவிற்கு மேம்படுத்தி, நமக்குள் உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவற்ற சக்தியாய்ந்தவையாக இருக்கின்றன.

ஆச்ரமத்தில் நான் அடிக்கடி பூஜை, யாகங்கள்
செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மை
என்னவென்றால், இவற்றால் எனக்கு ஒன்றும்
ஆகப்போவதில்லை. தெய்வீகத்திடம்
இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள எனக்குப்
பாதை தேவை இல்லை. இவை எல்லாம்
மக்களுக்காகவே. மக்கள் தங்களை எந்த ஒரு
இடத்தில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும்
உணர்கிறார்களோ அந்த ஒரு இடத்தில்,
அவர்களுக்கு தெரிந்த அந்த ஒரு எல்லைக்குள்
அவர்களைக்கொண்டு வருவதற்காகவே
இந்தச் சடங்குகள் நடத்தப்படுகிறது.

> இன்றைய காலகட்டத்தில்
> சடங்குகள்
> அர்த்தமற்றதாகவும்
> அவசியமற்றதாகவும்
> தெரிந்தாலும் கூட,
> சடங்குகளின் மேன்மை
> மிக்க ஆற்றலை
> ஒருபோதும்
> குறைத்து
> மதிப்பு இடாதீர்கள்.

பல நூற்றாண்டுகாலமாக வழிபாடுகள் செய்யப்பட்டு, புனிதப்படுத்தப்பட்ட அந்தச் சூழலில், நீங்கள் உங்களுக்கு விருப்பமான விக்ரஹத்தின் முன் சென்று வணங்குவதும், மந்திர உச்சாடனங்களைக் கேட்பதும் இயல்பாகவே உங்களுக்குள் அமைதியான த்யான நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இந்தச் சூழல் இயற்கையாகவே உங்களை த்யான நிலைக்கு எடுத்துச் சொல்கிறது.

அந்த நேரத்தில், நீங்கள் முழுமையான சரணாகதியுடனும் முற்றிலும் திறந்த தன்மையுடனும் என்னுடைய சக்தியை உள்வாங்கும் நிலையிலும் இருப்பீர்கள். உங்களுடைய எதிர்ப்பும், பட்டறிவின் இடையூறும் இல்லாமல் இருக்கும். இந்த நேரத்தில் மட்டுமே என்னால் உங்களுக்குள் உண்மையில் வேலை செய்ய முடியும். இப்போது என்னைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நல்லது. நான் குழந்தைத்தனத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அதனால் நான் இன்னும் இந்த விக்ரங்களுடன் பொம்மைகளுடனுமான இந்த விளையாட்டை ஆனந்தத்துடன் அனுபவிக்கிறேன் - ஆனால் அது வேறு விஷயம்!

Hands playing a flute
Lord Krishna