புத்திசாலித்தனத்தின் பங்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பலன்களின் மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்கிக்
கிடக்கும் அந்த மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்குவது
நல்லதல்ல. ஞானிகள், தாங்களே எல்லாக் கர்மங்களையும் பற்றற்று
செய்வதன் மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச்
செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும்.
அஹங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள் இயற்கையின்
சக்தியால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்களே
செய்வதாக நினைக்கிறார்கள்.
திரண்ட தோள்களை உடையவனே, ஸத்யத்தை அறிந்த ஒருவர்,
இயற்கையின் இயல்பிலும் கர்மங்களின் இயல்பிலும் இருக்கிற
வேறுபாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்!
இயல்புகளைப் பற்றியும், புலன் இன்பங்களைப் பற்றியும்
நன்கு அறிந்து கொண்டதால், அவர் அதில் எப்போதும்
பற்றுகொள்வதில்லை.
பொருள் சார்ந்த இயற்கையின் இயல்புகளால் மூடாளக்கப்பட்டவர்கள், குறைவான அறிவு கொண்டவர்கள் அல்லது சோம்பேறிகளாக இருக்கும் இவர்கள் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் விவேகமுள்ளவர்கள் இவர்களைக் கண்டிப்பாகக் குழப்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
முன் ஜென்ம செயலே, இந்த ஜென்மத்தின் மன அமைப்பு
அறியாமையில் உள்ள மனிதர் தமக்குள், 'நான் இந்தச் செயலைச் செய்கிறேன், அதனால் அதன் பலனைச் சந்தோஷமாக அனுபவிப்பேன்' என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் ஒரு விவேகமான மனிதர், அறியாமையில் இருப்பவரின் இந்த நம்பிக்கைக்கு கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது.
அதற்குப் பதிலாக, அந்த விவேகமான மனிதர் தம் கடமைகளைத் தளராமல், செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றில்லாமல் செய்வதின் மூலம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
விவேகியானவர், பற்றுடன் செய்யப்படும் செயல்களைப் பற்றிக் குற்றம் சொல்வாரேயானால், அறியாமையில் இருக்கும் மனிதர், இதைத் தவறாகப் புரிந்துகொண்டு தம்முடைய நடைமுறை கடமைகளையே கூட விட்டுவிட முடிவு செய்து விடுவார்.
விவேகமான மனிதர்
தம் கடமைகளைத்
தளராமல்,
பற்றில்லாமல்
செய்வதின் மூலம்,
மற்றவர்களுக்கு
ஒரு முன்னுதாரணமாக
இருக்க வேண்டும்.
ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறேன். ஒரு குழந்தையிடம் அதன் பொம்மைகள் சாதாரணமானவைதான், அவை ஒன்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் அல்ல, மிக உயர்ந்தது அல்ல என்று விளக்க முடியுமா? முடியாது! நிச்சயமாக குழந்தையால் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள குழந்தை வளரவேண்டியிருக்கிறது. குழந்தை வளர்ந்து
மனமுதிர்ச்சி அடையும்போது, தானாகவே
பொம்மைமேல் உள்ள பிடிப்பை
விட்டுவிடும்.
அதைப்போலவே, அறியாமையில் இருக்கும் நபரும் முதலில் செயல்களைப் பற்றுதலோடுதான் செய்வார். ஆனால் நாளைடைவில், விவேகியானவர் தம்முடைய செயல்களால் பாதிக்கப்படாமல் எப்போதும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, தாமும் அதேபோல் ஆனந்தமாக இருந்திட ஆார்வம்கொள்வார். அந்த உற்சாகத்திற்குப் பின்னால் உள்ள ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். விவேகியின் முன்னுதாரணத்தால், அறியாமையில் இருப்பவர் தாமாகவே பற்றற்று வேலைசெய்யும் தன்மையை நோக்கி ஈர்க்கப்படுவார்.
கடவுளிடம் நாம் தொடர்புகொள்ளும் முறையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், நம்மில் பெரும்பாலானோர் கடவுளிடம் ஏதாவது பெற வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறோம். நம்முடைய எல்லாப் பிரார்த்தனைகளுமே கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பதாகத்தான் இருக்கும். நம்முடைய சில ஆசைகளை நிறைவேற்றும்படியும், நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படியும்தான் கடவுளிடம் வேண்டுகிறோம்.
ஆரம்பத்தில் கடவுளிடம் நாம் இது போன்று உறவுகொள்வது மிகவும் சரியே. நீங்கள் பிரார்த்தனை செய்து விரும்பிக் கேட்டவை எல்லாம், உங்களுக்குக் கிடைத்துவிடும்போது உங்கள் நம்பிக்கை வளர்ந்து, கடவுளிடம் நன்றி உணர்வை உணரத் தொடங்குகிறீர்கள். இதுதான் மிகவும் முக்கியமான திருப்பம்.
ஆரம்பத்தில், கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருப்பதென்பது மிகக் கடினம். மூன்று நாட்களுக்கு ஒன்றுமே சாப்பிடாத ஒருவரை நீங்கள் தியானம் செய்யச் சொன்னால், அவரால் அது முடியுமா? முடியாது!
அவருடைய தேவைகள் வேறு வகையானது. அவரை நீங்கள் தியானம் செய்யச் சொன்னீர்கள் என்றால், நீங்கள் முட்டாளாவீர்கள், விவேகியாக மாட்டீர்கள். இப்படிப்பட்டவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான். அது சாப்பாட்டிற்கான ஏதோ
ஒரு வழி. அதற்குப் பிறகுதான் அவருக்குத்
த்யானத்தைப் பற்றிச் சொல்ல முடியும்.
அதற்குப் பிறகுதான் அவரும் த்யானத்தைப்
பற்றிக் கேட்கக்கூடிய நிலையில் இருப்பார்.
நிறைய பேர் என்னிடம், "கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே? பிறகு நாம் கோயில்களுக்கு ஏன் செல்ல வேண்டும்? ஏன் அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்? சடங்குகளை ஏன் செய்ய வேண்டும்?" என்று கேட்பார்கள். கடவுள் எங்கும் உள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையை நீங்கள் அடைவதற்கு, நீங்கள் வேறு எதுவுமே செய்யாமல், இதை மட்டும் வெறுமனே சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால், உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வதுதான் நடக்கும்; நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக்கொள்கிறீர்கள்!
மூன்று நாட்களுக்கு
ஒன்றுமே சாப்பிடாத
ஒருவரை த்யானம்
செய்யச் சொன்னால்,
நீங்கள் முட்டாளாவீர்கள்,
இப்படிப்பட்டவருக்கு
இப்போது
வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்.
அது சாப்பாட்டிற்கான
ஏதோ ஒரு வழி.
உலகையே விரும்புவது சுலபம். அருகில் இருக்கும் உங்கள் மனைவியை விரும்புவதுதான் கடினம்! உலகம் முழுவதையும் நேசிக்கிறேன் என்று சொல்வது சுலபம். ஏனென்றால் அதை நிரூபணம் செய்வதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மனைவி மீது அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லும்பொழுது, நீங்கள் எதையாவது செய்து உங்கள் அன்பை நிரூபித்தாக வேண்டியிருக்கிறது.
அதனால் நீங்கள் வெறுமனே உட்கார்ந்துகொண்டு, நீங்கள் இறுதி ஸத்யத்தை அடைந்துவிட்டதாக உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்வதனால், உண்மையில் நீங்கள் அதை அடையவேண்டிய முயற்சியில் இருந்து தப்பி நழுவுகிறீர்கள். அதை உணர்வதற்குத் தேவையான படிகளிலிருந்து, வழிமுறைகளிலிருந்து தப்ப முயற்சி செய்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துச் செயலைச் செய்து கொண்டிருக்கும்போது, விவேகியானவர் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். அந்தச் செயலானது பற்று இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது விவேகிக்குத் தெரிந்திருந்தாலும்கூட, அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். மந்தமாக உட்காராமல், அந்த நபர் ஏதோ ஒரு வேலையாவது செய்கிறாரே அது போதும்! அவர் ரஜஸீல் தீவிரமாகச் செயல்பரியும் தன்மையில் இருக்கிறார். இது, சோம்பேறித்தனமான தமஸை விட நல்லது.
ஆமாம்! அவரை ரஜஸிலிருந்து நிலையான ஸத்வ நிலைக்கு, பற்றற்று, எதிர்பார்ப்பற்று செய்யும் செயலால் பிறக்கும் அமைதி நிலைக்கு அழைத்துச் செல்ல, அவருக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது குருவின் வேலை.
நாம் எல்லோரும் நம் அடிப்படை இயல்பினால், இயற்கையினால், குணங்களால் ஆளப்படுகிறோம். இது குண என்று ஸம்ஸ்க்ரு தத்தில் சொல்லப்படுகிறது.முன் ஜென்மங்களில் நாம் வாழ்ந்த முறையும் இந்த ஜென்மத்தில் இதுவரை நாம் வாழ்ந்த முறையும்தான் நம் குணங்களை வரையறுக்கிறது; நிர்ணயிக்கிறது.
பிறவிகள் தோறும் நம்மோடு கொண்டுவரப்பட்ட வாஸனைகள் என்றழைக்கப்படும் நம்முடைய மன அமைப்பு அல்லது நம்முடைய மனத்தின் சாரம்தான், நாம் யார் என்பதையும் இந்தப் பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்கிறது.
நமது முன் ஜென்ம செயல்களால், நாம் இந்த மன அமைப்பை உருவாக்குகிறோம்.
அந்த வகையில் பார்க்கும்போது, நாம், நம்முடைய அடுத்த பிறவியில் நடக்கப்போகிற நிகழ்வுகளை இந்தப் பிறவியிலேயே தீர்மானம் செய்து விடுகிறோம். நமது மன அமைப்புதான் நம்முடைய இயல்பையும் தன்மையையும் தீர்மானம் செய்கிறது.
வாஸனாவில் இருந்து பிறக்கும் ஆசைகள்,
அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும்
தங்களுடனேயே எடுத்துக்கொண்டு
வருகின்றன. உங்கள் வாஸனாவைப் பற்றிய
விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தீர்கள்
என்றால், அவற்றை நீங்கள் நிறைவேற்றிவிட
முடியும். இந்த வாஸனாவும் கர்மாவும்
முழுமையாக நிறைவேற்றப்படும்பொழுது,
அவை எந்தவித தடயங்களையும் வைக்காமல்
கரைந்து மறைந்து விடுகின்றன.
ஒருவருக்கு தம்மை
ரஜஸிலிருந்து
நிலையான
ஸத்வ நிலைக்கு
அழைத்துச் செல்ல,
ஒரு வழிகாட்டுதல்
தேவைப்படுகிறது.
அது
குருவின் வேலை.
ஆசைகள் பூர்த்தியடைந்த விழிப்புணர்வு நிலையை அடைந்த ஒருவர் தம்மைச் செயலைச் செய்பவராகக் கருதுவதில்லை, செயல்களைச் செய்வது அவர் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்கிறார்.
தேர்வு செய்வது நீங்கள்தான்
குயவர்கள் பானையை செய்து முடிந்த பின், சக்கரத்தைச் சுழற்றுவதை நிறுத்திய பிறகும்கூட, சில நிமிடங்கள் அது அப்படியே சுழன்று கொண்டிருக்கும். மின்விசிறியை நிறுத்திய பின்பும்கூட அது சில நிமிடங்கள் சுழன்றுகொண்டே இருக்கும். அதேபோல் இந்த உடல் மன அமைப்பை எடுப்பதற்குக் காரணமாக இருந்த வாஸனாக்கள், உங்கள் உடல்
- மன அமைப்பை, அது எந்தச் செயலுக்காக உருவாக்கப்பட்டதோ, அந்தச் செயல்களிலேயே ஈடுபடுத்திச் சுழலவிடும்.
ஆனால் விவேகமுடையவர், இந்தச் செயல்பாடுகளைச் செய்பவர் தாம் இல்லை என்கிற கருத்தில்தான் இந்த எல்லாச் செயல்களையுமே செய்து கொண்டிருப்பார்.
உண்மையில், வாழ்க்கையை இந்தக் குறிப்பிட்ட வழியில்தான் வாழ வேண்டும் என்கிற உங்கள் ஆசைதான் அதற்கு ஏற்ற மன அமைப்பை உருவாக்கிக்கொள்கிறது. இந்தக் குறிப்பிட்ட வழியில் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேர்வு செய்வது நீங்கள்தான். நீங்கள்தான் தேர்ந்து எடுக்கிறீர்கள்.
ஒருமுறை நீங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டீர்களானால், உங்கள்

உடல் உங்கள் முடிவுக்கு ஆதரவு தந்து, அதற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளும். நீங்கள் ஆசைப்பட்ட விதத்தில் எல்லாம் வாழ, உங்களுக்கு உதவி செய்கிற ஒரு மன அமைப்பைத்தான் நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வகையில்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் உருவாக்கிய மன அமைப்புதான் உங்களுடைய வாஸனா அதாவது கர்மங்களின் விதை.
நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.
ஆனால் எந்த ஒருர்வுமே,
அதனதன் பின் விளைவுகளோடும்
பக்க விளைவுகளோடும்தான் உங்களை வந்தடைகின்றன.
சில நேரங்களில், நீங்கள் பக்க விளைவுகளைப் பார்த்து இந்த மாதிரியான வாழ்க்கை வேண்டாம் என்று எண்ணுகிறீர்கள். அதற்கு நீங்கள் அதிக விலை கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அது நீங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை எல்லாம் உருவாக்குகிறது. பிறகு நீங்கள் உங்களுக்கு வருவதெல்லாம், விதியின் காரணமாகவே வருகிறது என்று சொல்கிறீர்கள். உண்மையில், இதை முதலில் தேர்ந்தெடுத்தது நீங்கள்தான்.
எந்த ஒரு தேர்வுமே, அதன் பின் விளைவுகளோடும் பக்கவிளைவுகளோடும்தான் உங்களை வந்தடைகின்றன.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் ஒரு உணவு விடுதிக்கு சென்று பலவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்தார். ஹம்பர்கர், ஸ்டீக், பாஸ்டா, குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் என்று பல வகைகளைச் சொன்னார். அவர் அவற்றை மிகவும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார். பின் சற்றுத் தளர்வாக உட்கார்ந்திருக்கும்போது, வெயிட்டர் பில்லைக்கொண்டு வந்து தந்தார்.
அவர் அந்த நீளமான பில்லைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சியுடன் சொன்னார், "நான் பில்லை ஆர்டர் செய்யவில்லையே!"
நீங்கள் சாப்பிடும்போது பில்லைப் பற்றி நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் அந்த உணவு விடுதியில் சாப்பிட்டதின் விளைவாகத்தான் அந்தப் பில் வந்தது. நீங்கள் சாப்பிட்டதற்கான பில்தான் அது. நீங்கள் பில்லைத் தனியாக ஆர்டர் செய்ய வேண்டிய தேவை இல்லை.

அதைப்போலத்தான், வாழ்க்கையிலும் நீங்கள் அனுபவிக்கிற விளைவுகள் எல்லாமே உங்களின் சொந்த செயல்களினால்தான் வருகின்றன. எந்தவிதமான பின்விளைவுகள் வர முடியும் என்பதைப் பற்றிய முன்னுணர்வு உங்களுக்கு
இல்லாததினால்தான்,
செயல்களை
விழிப்புணர்வில்லாமல் செய்கிறீர்கள்.
‘செய்பவன் நான் இல்லை’ என்கிற கருத்தைப்
புரிந்துகொள்ள, ‘நான்’ ‘எனது’ என்கிற
இந்த இரண்டு கருத்துகளைப் பற்றியும்
நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
‘நான்’ என்கிற கருத்தே ‘எனது’ என்ற
கருத்திலிருந்துதான் வருகிறது என்று
சிவன் சொல்கிறார். இதை நாம் எப்போதும்
வேறு வழியில்தான் மாற்றி நினைக்கிறோம்.
‘நான்’ என்கிற உணர்வு நிகழும்போதுதான்
‘எனது’ என்கிற உணர்வு நிகழ்கிறது என்று
நாம் நினைக்கிறோம்.
> ‘செய்பவன் நான் இல்லை’
> என்கிற கருத்தைப்
> புரிந்துகொள்ள,
> ‘நான்’ ‘எனது’ என்கிற
> இந்த இரண்டு
> கருத்துகளைப் பற்றியும்
> நாம் புரிந்துகொள்ள
> வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆழமாகப் பார்த்தோம் என்றால் ‘என்னுடையது’ என்கிற கருத்துதான், ‘நான்’ என்பதையே வரையறுக்கிறது. கற்பனை செய்து பாருங்கள், உங்கள் அந்தஸ்து, சொத்துகள், செல்வங்கள், உறவுகள் எல்லாம் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால், பிறகு நீங்கள், ‘நீங்கள்’ என்று எதை நினைப்பீர்கள்? எப்படி உங்களை விளக்குவீர்கள்? ‘நான்’ என்கிற கருத்தே சார்புடையதுதான், இல்லையா?

சமீபத்திய குவாண்டம் இயற்பியல்
கோட்பாட்டில், ‘இழை தத்துவம்’
(String Theory) என்று அழைக்கப்படும்
கோட்பாடு ஒன்று உள்ளது. அது, இந்தப்
பிரபஞ்சமானது, ஒரு குறிப்பிட்ட
அலைவரிசையில் அதிர்சிற, மிக நுண்ணிய
இழைகளால் ஆன மூலக்கூறுகளால்
ஆக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறது.
அதனால் ஒரு பொருள் என்பது ஒரு ‘துகள்’ இல்லை, அது ஒரு ‘அதிர்வுதான்’; சக்தி பல்வேறு வகையில் அதிர்கிறது. பல்வேறு வகையான அதிர்வுகள் பல்வேறு துகள்களாகத் தெரிகின்றன.
சக்தி தரிசனத்தின்போது, நான் பக்தர்களைத் தழுவும்போது, அவர்கள் ஒரு மிருதுவான தலையணையைத் தொடுவதுபோல் உணர்வார்கள். சில நேரங்களில் ஒன்றும் உணரமாட்டார்கள். அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அடிப்படையில், ஞானமடைந்தவர்கள் வெறும் சக்திதான், உடல் அல்ல.
இந்தத் தளத்தில், இந்த இடம் - காலம் என்ற பரிமாணங்களில் நீங்கள் அவர்களை வடிவமாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் அவர்களை இந்த ஆறடி வடிவத்திற்குள் பார்த்து நித்யானந்தா என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த நித்யானந்தா அங்கு இல்லவே இல்லை. அது வெறும் சக்தி. அங்கு 'நான்' என்று ஒன்றும் இல்லை.
நீங்கள் எதன் மீதாவது பற்று வைக்கும் போதும், வெளி நிகழ்வை உங்களுக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் போதும் உங்களுக்கு நீங்களே துன்பத்தை உருவாக்கத் தொடங்கி விடுகிறீர்கள்.
உங்கள் மனமும், புலன்களும் அதன்
இயல்பின் படியே செயல்படுகின்றன
என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
நீங்கள் உடல் மனம் இவற்றின் பற்றிலிருந்து
விடுபட்டு விடுவீர்கள்; என்ன நிகழ்கிற
தா அவற்றை இந்த உடல், மனம் மற்றும்
புலன்கள்தான் செய்கின்றன என்ற தெளிவான
புரிதலுடன்தான் செயல்களைச் செய்வீர்கள்.
அடிப்படையில்,
ஞானமடைந்தவர்கள்
வெறும் சக்திதான்,
உடல் அல்ல.
இதை நீங்கள் புரிந்துகொள்ளாதபோது, நீங்கள் செய்யும் செயலில் சிக்கிக்கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளிலும் மக்களிடமும் உணர்ச்சி ரீதியாகப் பற்றிக்கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நிகழும் விஷயங்களினால் நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழுவதாலும் உணர்ச்சிகளினால் கஷ்டப்படுவதாலும் உங்கள் சக்தி வீணாக்கப்பட்டு விடுவதால் நீங்கள் விழிப்புணர்வற்று வாழத் தொடங்குவீர்கள்.

பூரணத்துவம் அடைய... கர்மா!
கேள்வி: ஸ்வாமிஜி, கர்மா என்பதைப் பற்றி எங்களுக்கு விளக்க முடியுமா?
உங்களுக்கு நான் கர்மாவைப் பற்றி ஒரு விளக்கம் சொல்கிறேன். ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயல் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போகும் போதெல்லாம், அதை நிறைவேற்ற, அதை முழுமைக்குக்கொண்டு வர, அங்கு ஒரு ஆற்றல் இருந்துகொண்டு, உங்களை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த ஆற்றல்தான் கர்மா.
உங்களால் விரும்பப்பட்ட, அனுபவிக்கப்பட்ட ஆனால் முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகள், மீண்டும் அதே அனுபவத்திற்காக உங்களைத் தொடர்ந்து இழுத்துக்கொண்டேஇருக்கும், நீங்கள் முழுமையை உணரும் வரை!
முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகள், மீண்டும் அதே அனுபவத்திற்காக உங்களைத் தொடர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும், நீங்கள் முழுமையை உணரும் வரை!
நீங்களே அந்த அனுபவமாக மாறும்வரை நீங்கள் அந்தச் செயலை, மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் பூரணமானவர்கள். இந்தச் செயலை பூரணமாக்கவே, நீங்கள் உடல் எடுத்துள்ளீர்கள். இந்தப் பூரணத்துவத்தை நோக்கிய பாதையில்தான், நீங்கள் இந்த விஷயங்களை, கஷ்டங்களை எல்லாம் சந்திக்கிறீர்கள்.
நான் இதைத்தான் கர்மாவிற்கான விளக்கமாகத் தருகிறேன். என்னுடைய பாவ கர்மாவினால், இந்த நோய் எனக்கு வந்தது, "என்னுடைய புண்ணிய கர்மாவால் நான் ஸ்வாமிஜியைச் சந்தித்தேன்," என்று சொல்கிற இந்த வார்த்தைகள் எல்லாம் அந்தச் சம்பவம் நடந்தவுடன் நாம் சொல்லும் வெறும் வார்த்தைகள்தான்.
எது நிகழ்ந்தாலும் அதற்கு நாம் கர்மா என்று பெயரிட்டு விடுகிறோம். கர்மா என்ற வார்த்தையே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. நான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் கர்மாவிற்கான இந்த விளக்கமானது, வழக்கமாக ஒருவர் கர்மாவைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பதைவிட முற்றிலும் வேறானது. மக்கள் அதை விதி என்று அழைக்கிறார்கள். நான் கர்மா என்பதை, விதிக்கப்பட்ட விதி என்று குறிப்பிடவில்லை.
நான் அதற்கு, ‘காரணம்’ என்றோ அல்லது ‘விளைவு’ என்றோ பொருள் தரவில்லை.
என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தமட்டில், ‘விதி’ என்றோ, ‘வினை’ என்றோ எதுவும் இல்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்காக எதிர்காலத்தை முழுமையாகத் திறந்து விட்டிருக்கிறது. நாம்தான் நம் எதிர்காலத்தை முடிவு செய்கிறோம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு அழகான கதையைச் சொல்கிறார். இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிவு ரீதியான தெளிவை, அது உங்களுக்குத் தரும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், யாருமே கர்மாவைப் பற்றிய உண்மை நிலையை, உள்ளது உள்ள படியான அனுபவ நிலையைத் தெளிவாகச் சொல்ல முடியாது. உங்களுக்கு உள்ளதை உள்ளதுபோல் தர முடியாது. அந்தத் தெளிவு ஞானத்துடன் மட்டுமே வரும். ஆனால் ஞானமடைந்தபின், அதை நீங்கள் வெளிப்படுத்த முடியும்!
இராமகிருஷ்ணர் கர்மாவைப் பற்றி இப்படி விளக்குகிறார்.
உதாரணத்திற்கு, ஒரு பசு, ஐந்து மீட்டர் நீளமுள்ள கயிற்றால் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த வட்டத்திற்குள் அதனால் தம் விருப்பப்படி உட்கார, நிற்க, சாப்பிட முடியும். அதற்குப் பிடித்ததைச் செய்ய முடியும். ஆனால் அதன் எல்லையை அதாவது அந்த ஐந்து மீட்டர் எல்லையைத் தாண்ட அதற்குச் சுதந்திரம் இல்லை.
நம் வாழ்க்கையும் அதைப்போல்தான் உள்ளது. நமக்குக் குறைவான சுதந்திரமே உள்ளது. மற்றதெல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கையில் உள்ளது. ஆனால் இராமகிருஷ்ணர் மேலும் ஒரு ஸத்யத்தைச் சொல்கிறார். நாம் அந்த ஐந்து மீட்டர் தூர சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், பிரபஞ்ச சக்தி அந்தக் கயிற்றின் நீளத்தை அதிகப்படுத்தலாம்
> உண்மையைச்
சொல்ல வேண்டுமானால்,
யாருமே
கர்மாவைப் பற்றிய
உண்மை நிலையை,
உள்ளது உள்ளபடியான
அனுபவ நிலையைத்
தெளிவாகச்
சொல்ல முடியாது.
அல்லது முற்றிலும்மாக நீக்கி நம்மை சுதந்திரமடையச் செய்யலாம். அது நடப்பது நம்மையும் நம் குருவையும் பொறுத்தது. பந்தத்தில் கட்டுப்பட்டு இருப்பதா அல்லது விடுதலையை நோக்கி வேலை செய்வதா? என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய முடியும்.
யாரோ ஒருமுறை என்னிடம் கேட்டார்கள் "ஒரு வேளை அந்தப் பசு கயிற்றை அறுக்கவோ, கடிக்கவோ கற்றுக் கொண்டால் என்ன ஆகும்?"
முதலில், கயிறு எங்கே உள்ளது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? எந்தக் காலில் கட்டப்பட்டுள்ளது? அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கே அறுப்பது? இப்படிக் கடிப்பது? என்று ஏதாவது தெரியுமா?
சாதாரண ‘பசு, கயிறு’ விஷயத்தில் பசுவால் கயிற்றைப் பார்க்க முடியும். ஆனால் உங்களுக்குக் கயிறு என்றால் என்ன? எங்கே உள்ளது என்பதுகூடத் தெரியாது!
அதனால்தான் நான் உங்களுக்கு என்ன தர முடியும் என்றால், அந்த அனுபவத்தின் ஒரு துளியை மட்டுமே, அதே அனுபவத்திற்குள் நீங்களும் நுழைய ஒரு உத்வேகத்தை மட்டுமே தர முடியும். மற்றவற்றை அந்த அனுபவம் நிகழும்போது, நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.
