KAILASA Library/பகவத்‌கீதை/நான் சொல்வதைப் போல் செய்யுங்கள்Sign in
பகவத்‌கீதை

நான் சொல்வதைப் போல் செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing flute

ஆதாயத்தைப் பற்றிய ஆசையோ, பொருட்களைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல், சோம்பேறித்தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்ம ஞானத்தால் நிரப்பப்பட்ட விழிப்புணர்வுடன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.

என்னுடைய ஆணையின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், என் வார்த்தைகளை நம்பிக்கையுடன் பொறாமையின்றி பின்பற்றுபவர்களும், செயலின் பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

என் சொற்களின்படி தம் கடமைகளைச் சீராக, நியமத்துடன் செய்யாதவர்கள், அறிவற்றவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமையால் அழிவார்கள்.

அஹங்காரமற்ற காலியான மூங்கில், கிருஷ்ணரின் கையில் புல்லாங்குழல்

அடுத்து கிருஷ்ணர் முக்கியமான கருத்தைப் பற்றிச் சொல்கிறார். அவர் மேலும் ஒரு கருத்தைத் தெளிவு படுத்துகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார் : பொறாமை மனப்பான்மையின்றி என்னுடைய கட்டளையின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், இந்தப் போதனைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களும், செயலின் பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நுழையும்போது, உங்கள் இருப்புத் தன்மை, ஆத்மா என்ன சொல்கிறதோ, அவைதான் கிருஷ்ணரின் வார்த்தைகள்.

இங்கே, நீங்கள் இரண்டு விஷயங்களைப்
புரிந்துகொள்ள வேண்டும். "என் கட்டளைப்
படி," என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதன்
பொருள் என்னவென்றால், நீங்கள் உங்கள்
இருப்புத் தன்மைக்குள் நுழையும்போது,
உங்கள் இருப்புத் தன்மை, ஆத்மா என்ன
சொல்கிறதோ, அவைதான் கிருஷ்ணரின்
வார்த்தைகள்.

'என்னுடைய கட்டளைப் படி' என்று அவர்
சொல்லும்போது, ஆத்மாவிலிருந்து, இருப்புத்
தன்மையிலிருந்து வரும் கட்டளைகளைத்தான்
குறிப்பிடுகிறார்.

நீங்கள் இலக்கை விட்டு உங்கள் இருப்புத் தன்மைக்குள் விழும்போது, தெய்வீகம் உங்களை வழி நடத்தும். இயற்கையால் நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள். கடவுளே உங்களுக்கு வழிகாட்டுவார். அவருடைய கைகளில் நீங்கள் கருவியாகி விடுவீர்கள்.

உள்ளே எந்தவித தடையும் இல்லாத ஒரு காலியான மூங்கிலாக நீங்கள் மாறும்போது, நீங்கள் கிருஷ்ணரின் கையில் ஒரு புல்லாங்குழலாக மாறி இருப்பீர்கள்.

உங்கள் நோக்கங்களை விட்டு விடுவதைத்தான் அல்லது உங்கள் அஹங்காரத்தை விட்டு விடுவதைத்தான், காலியான மூங்கிலாக மாறுவது என்று குறிப்பிடுகிறேன். நீங்கள் காலியான மூங்கிலாக மாறினீர்களானால், கிருஷ்ணரின் கையில் நீங்கள் புல்லாங்குழலாக மாறி விடுவீர்கள்.

Illustration of a bamboo flute

கனத்த மூங்கிலாக நீங்கள் இருந்தால்,
பிணம் தூக்கத்தான் பயன்படுவீர்கள்.
இந்தியாவில் இறந்தவர்களின்
உடல்களை எடுத்துச் செல்ல மூங்கில்
கம்புகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.

ஆனால் அஹங்காரத்தை விட்டுவிட்டு இருப்புத் தன்மைக்குள் விழும்போது, தெய்வத்தின் கைகளில் கருவியாக மாறி விடுவீர்கள். நீங்கள் தெய்வீக புல்லாங்குழலாக மாறி இருப்பீர்கள்.

புல்லாங்குழலாக நீங்கள் மாறிய பின், உங்களுக்குள் நுழையும் காற்றானது இசையாக வெளிவரும். தெய்வத்தின் கைகளில் கருவியாக நீங்கள் மாறியபின், உங்களுக்குள் செல்லும் காற்று சாஸ்த்ரமாக, மந்த்ரமாக, இசையாக வெளிவருகிறது. உங்களிடமிருந்து வருவது எல்லாமே தெய்வீகமாக மாறி விடுகிறது. உங்கள் வார்த்தைகள் மந்த்ரம் (புனித வார்த்தை), உங்கள் வார்த்தைகள் தந்த்ரம் (புனித நுட்பங்கள்), உங்கள் வடிவம் யந்த்ரம் ஆகும் (புனித வடிவம்).

அஹங்காரத்தை விட்டுவிட்டு
இருப்புத் தன்மைக்குள்
விழும்போது,
தெய்வத்தின் கைகளில்
கருவியாக
மாறி விடுவீர்கள்.
நீங்கள் தெய்வீக
புல்லாங்குழலாக மாறி
இருப்பீர்கள்.

நீங்கள் உங்கள் அஹங்காரத்தை விட்ட கணமே, உங்கள் வார்த்தைகள் மந்த்ரங்களாக மாறி மக்களுக்கு வழிகாட்டும். உங்கள் வடிவம் யந்த்ரமாக வழிபாடு செய்யப்படும் மூர்த்தியாகிவிடும். உங்கள் செயல்கள் தந்த்ரமாக, தெய்வீகத்தை உணரும் நுட்பமாக மாறும். நீங்கள் தெய்வீகமயமாகி விடுவீர்கள்.

உங்கள் அஹங்காரத்தை, நீங்கள் ஒரு கனத்த மூங்கிலாக சுமந்தீர்களானால், அதைப் பிணத்தைத் தூக்கத்தான் உபயோகிக்க முடியும். காலி மூங்கிலாக மாறி கிருஷ்ணர் கையில் புல்லாங்குழலாக மாறுவதா அல்லது கனத்த மூங்கிலாக மாறி சுடுகாட்டிற்குப் பிணத்தைச் சுமப்பதா? இது இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இங்கே கிருஷ்ணர், "தங்கள் கடமைகளை என் கட்டளைப்படி செய்பவர்கள், உங்கள் உள் விழிப்புணர்வின் படி..." என்று சொல்லும்போது, தயவு

செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
நீங்கள் எது வரையில், சமுதாயத்தால்
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக
வாழ்கிறீர்களோ, அதுவரை ஒரு சமுதாயம்
உருவாக்கிய மனச்சாட்சியைச் சுமந்து
கொண்டிருப்பீர்கள். சமுதாயத்தின்
கட்டுறு மனப்பாங்கை விட்ட அந்தக்
கணமே, சமுதாயம் உங்களுக்குக் கற்றுக்
கொடுத்த நோக்கங்களை விட்ட அந்தக்
கணமே, சமுதாய மனச்சாட்சியைக் கீழே
போட்டுவிட்டு, விழிப்புணர்வுடன் வாழத்
தொடங்குவீர்கள்.

சமுதாய மனச்சாட்சி என்பது வேறு. ஆன்மீக விழிப்புணர்வு என்பது வேறு. நீங்கள் இலக்குகளுடன் வாழ்ந்தீர்களானால், உங்கள் வாழ்க்கையில் சமுதாய மனச்சாட்சி யைத்தான் நீங்கள் சுமப்பீர்கள். அதுதான் உங்களுடன் இருக்கும் நீங்கள் நோக்கமற்றதின் அழகை உணர்ந்து கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வைச் சுமப்பீர்கள்.

"தன் விழிப்புணர்வின்படி வாழும் ஒரு மனிதர், இந்தப் போதனைகளில் ச்'ரத்தா, நம்பிக்கை இருக்கிற ஒரு மனிதர்," என்று சொல்கிற கிருஷ்ணர் இங்கு ச்'ரத்தாவைப் பற்றி ஏன் கேட்கிறார்? ச்'ரத்தாவைப் பற்றி இங்கே கிருஷ்ணர் முதல் முறையாகச் சொல்கிறார். ஏன்?

உண்மையில், ச்'ரத்தா என்னும் வார்த்தையை நம்பிக்கை என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாது. ச்'ரத்தா என்ற வார்த்தைக்கு பொருள் 'நம்பிக்கை' என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ச்'ரத்தா என்பதற்கு நம்பிக்கை என்ற வார்த்தை வெறும் சாதாரண வார்த்தை. ஆங்கிலத்தில் ச்'ரத்தா என்ற வார்த்தைக்குச் சமமான வார்த்தை கிடையாது.

ச்'ரத்தா என்பது வெறும் நம்பிக்கையை மட்டும் குறிக்கவில்லை. அது நம்பிக்கைகயையும், அந்தக் கருத்தைச் செயல்படுத்துவதற்கான துணிவையும் சேர்த்தே குறிக்கிறது.

அந்தக் கருத்தைப் பரிசோதனை செய்வதற்கான பயிற்சியில் இறங்குகிற துணிவைத்தான் ச்'ரத்தா என்கிறோம். கிருஷ்ணர் இங்கு ச்'ரத்தா வந்தோ அஸூயைந்தோ என்று சொல்லும்போது, தாம் பின்பற்றுகிற போதனைகளை ஶ்ரத்தா மற்றும் துணிவுடனும் செயல்படுத்தும் ஒருவரைப் பற்றியே குறிப்பிடுகிறார். பின்பற்றுவதற்குத் துணிவு ஏன் தேவை?

ஒரு சின்ன கதை:

பிறவியிலேயே குருடராகப் பிறந்த ஒருவர் மருத்துவரிடம் சென்று "டாக்டர் என் கண்பார்வையைத் திருப்பி வர வைக்க உங்களால் உதவ முடியுமா," என்று கேட்டார். அதற்கு அந்த டாக்டர் சொன்னார், "கவலைப்படாதீர்கள்! நான் ஒரு அறுவை சிகிச்சை செய்கிறேன். உங்களுக்குப் பார்வை வந்துவிடும், அதற்குப் பிறகு நீங்கள் ஊன்று கோல் இல்லாமல் நடந்து செல்வீர்கள்."

அந்தப் பார்வையற்றவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஆச்சரியத்துடன் டாக்டரிடம், கேட்டார், "டாக்டர், நீங்கள் அறுவை சிகிச்சை செய்வீர்கள் என்பது புரிகிறது. ஆனால் ஊன்று கோல் இல்லாமல் என்னால் எப்படி நடந்து செல்ல முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கோல் இல்லாமல் நான் எப்படி நடப்பேன்."

நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்க்குருடர், அவர் கோல் வைத்திருப்பது வெறும் உதவிக்காக என்பதை மறந்துவிட்டார். கோல் என்பது வெறுமனே நடப்பதற்குக்கூட அவசியமான ஒன்று என்று அவர் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து, அவருக்குப் பார்வை கிடைத்து, வெறுமனே நடப்பதற்குக் கோல் தேவையில்லை என்கிற உண்மையை அனுபவப்பூர்வமாக அவர் உணரும்வரை டாக்டரின் வார்த்தைகளில் அவருக்கு ஶ்ரத்தா இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவருடைய வார்த்தைகளை ஏற்று ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

அதேபோலவே, உங்களிடம் நான், "மனம்
இல்லாமல் வாழுங்கள்," என்று சொல்கிறேன்.
நீங்கள் இலக்குகள், நோக்கங்கள் இல்லாமல்
வெறுமனே வாழுங்கள், கோல் இல்லாமல்
உங்களால் நடக்க முடியும். கோல் என்பது
வேறு ஒன்றும் இல்லை உங்களுடைய
திட்டங்களும், கவலைப்படுதலும்தான்.

ஶ்ரத்தா என்பது
வெறும் நம்பிக்கையை
மட்டும் குறிக்கவில்லை.

அது
நம்பிக்கைகயையும்
அந்தக் கருத்தைச்
செயல்படுத்துவதற்கான
துணிவையும்
சேர்த்தே குறிக்கிறது.

ஆனால் உங்களால் கவலைப்படாமல் வாழ முடியும் என்பதை நீங்கள் ஒருபோதும் நம்புவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, கவலை உங்களின் பாகமாகி விட்டது. அதனால் நீங்கள் கவலை இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று உங்களால் ஒருபோதும் கற்பனை செய்துகூட பார்க்க முடிவதில்லை.

கவலை இல்லாமல் உங்களால் வாழ முடியும் என்று நான் சொல்லும்போது, "இல்லை, இது எப்படி முடியும்? என் குழந்தைகளைப் பற்றி நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? கவலைப்படாவிட்டால் என் வீடு என்ன ஆகும்? என் மனைவிக்கு என்ன ஆகும்? என் குடும்பம் என்ன ஆகும்? என் சொத்து என்ன ஆகும்? என் வழக்குகள் என்ன ஆகும்?" என்று அடுக்கடுக்காக மூச்சுவிடாமல் கேள்விகளைக் கேட்கிறீர்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை உங்களால்தான் சீராகவும் நன்றாகவும் செல்கிறது என்ற நினைக்காதீர்கள். ஒரு ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் இருந்தும் அது நன்றாகச் செல்கிறது. உங்கள் வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருப்பது உங்களால் அல்ல; நீங்கள் இருந்தும் அது சீராகச் சென்று கொண்டிருக்கிறது!

உங்களுக்குத் துணிவு இருக்கும்போதும், இந்தப் போதனைகளில் ச்ரத்தா இருக்கும்போதும், நோக்கமற்ற தன்மையில் வாழத் தொடங்கும் போதும் மட்டுமே நீங்கள் நடப்பதற்குக் 'கோல்' தேவை இல்லை என்பதை உங்களால் உணர முடியும்.

உங்கள் இருப்புத் தன்மையின் ஆழத்திற்குள் ஒருமுறை நுழைந்து விட்டாலே போதும், நீங்கள் ஒரு முழுமையான வேறுபட்ட பரிமாணத்திற்குள் செல்வீர்கள்.

உரை பெட்டி

இப்போது நீங்கள் எதையெல்லாம் ஆன்மீக வாழ்வாக அல்லது அந்தப் பொருள் சார்ந்த வாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த இரண்டுமே அதன் அர்த்தத்தை இழந்துவிடும். வாழ்வின் புது பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைவீர்கள்.

உதாரணமாக நான்கு வயதுடைய
குழந்தைக்கு வாழ்க்கையைப் பற்றி
நீங்கள் விவரிக்க முடியுமா? உங்களால்
அது முடியாது. ஏனென்றால் அந்தக்

குழந்தையால் அதைப் புரிந்துகொள்ள
முடியாது. அவனால் பொம்மைகளைத்தான்
புரிந்துகொள்ள முடியும். அவன்
பெரியவனாக வளர்ந்தவுடன், இயல்பாகவே
வாழ்க்கை என்றால் என்னவென்று அவனால்
புரிந்துகொள்ள முடியும். பொம்மைகளும்,
விளையாட்டுப் பொருட்களும் தானாகவே
அவனை விட்டுச் சென்றுவிடும்.

நீங்கள் புகைபிடிப்பதை
விடுவது முக்கியம் அல்ல,
புகை
உங்களை விடுவதுதான்
முக்கியம்.

நீங்கள் உங்கள் விளையாட்டுப் பொருட்களை இழந்து விட்டீர்களா? நீங்கள் உங்கள் விளையாட்டுச் சாமான்களைத் துறந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, நீங்கள் வளர்ந்தபிறகு, வாழ்க்கையில் வேறுபட்ட ஒரு பரிமாணத்தை உணரத் தொடங்குகிறீர்கள். அப்போது இந்த விளையாட்டுப் பொருட்கள் உங்களை விட்டுத் தானாகவே செல்கிறது.

நீங்கள் புகைபிடிப்பதை விடுவது முக்கியம் அல்ல, புகை உங்களை விடுவதுதான் முக்கியம்.

நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நுழையும்போது, வாழ்வின் நோக்கமற்ற தன்மையை உணரும்போது, பொருள்சார்ந்த உலகம் மற்றும் ஆன்மீக உலகம் என்று சொல்லப்படும் இந்த இரண்டு உலகங்களும் உங்களை விட்டுவிடும். பிறகு நீங்கள் நான் சொல்லும் 'அதீத ஆன்மீகம்' அல்லது 'நித்யானந்த நிலைக்குள் நுழைவீர்கள். நீங்கள் நித்யானந்தமாகி, நித்யானந்த நிலையில் வாழத் தொடங்குகிறீர்கள்.

நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையை அடையும்போதுதான், நீங்கள் வாழ்வதற்கு கவலைகள் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். உங்கள் மனத்தின் தேவை, உங்களுக்கு இருக்காது. நீங்கள் வாழ, எந்தக் கவலையையும் நீங்கள் வளர்க்கத் தேவையில்லை. எந்தக் கவலையிடமும் நீங்கள் தஞ்சம் புகவேண்டிய தேவையில்லை.

உங்கள் இருப்புத் தன்மையை அடையும்வரை உங்களுக்கு ச்ரத்தா தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் பார்வையைப் பெறும்வரை நீங்கள் ச்ரத்தாவுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நீங்கள் ஆபரேஷன் மேஜை மேல் படுக்க வேண்டும். உங்கள் மேல் வேலை செய்ய டாக்டரை அனுமதிக்க வேண்டி உள்ளது. இந்தக் காரணத்திற்காகத்தான் கிருஷ்ணர், ச்ரத்தாவந்தோ அநஸூயந்தோ என்று சொல்கிறார்.

Feather Icon

மாயை எனும் குரங்காட்டி

அடுத்த வார்த்தை மிகவும் அழகானது அநஸூயந்தோ என்றால் பொறாமையில்லாமல் வாழ்வது என்று பொருள். இது ஒரு முக்கியமான விஷயம். இதுவரை சொன்னவை எல்லாவற்றையும் எல்லோராலும் புரிந்துகொள்ளவும் முடியும்; ஒப்புக்கொள்ளவும் முடியும்.ஆனால் உங்களுக்குள் பொறாமை அல்லது போட்டிமனப்பாங்கு இருப்பதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாது.

‘என் சகோதரன் இரண்டு வீடுகள் வாங்கி இருக்கிறான். என் சகோதரி பெரிய கார் வைத்திருக்கிறாள். நான் மட்டும் எப்படி இதைப்போல் வாழ்வது, அவரிடம் அது உள்ளது. இவரிடம் இது உள்ளது’ என்ற எண்ணங்கள் உங்கள் மனத்தில் வரும்போது, என்ன நிகழ்கிறது? உங்கள் ஆன்மீகம், உங்கள் நோக்கமற்ற தன்மை, உங்கள் வேதாந்தங்கள் எல்லாமே மறைந்து விடுகிறது.

> உங்கள் இருப்புக் தன்மையை அடையும்வரை உங்களுக்கு ச்ரத்தா தேவைப்படுகிறது.

நீங்கள் மறுபடியும் அதே எலிப்பந்தயத்திற்கே அதாவது உங்களுடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்யும் அதே வாழ்க்கைப் பந்தயத்திற்கு வந்து விடுகிறீர்கள். உங்கள் அண்டை வீட்டுக்காரர் புது ஏர்கண்டிஷனர் வாங்கிய மறுகணமே, உங்கள் வீட்டின் வெப்பம் அதிகமாகி விடுகிறது.

“பொறாமை இல்லாமல்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். பொறாமை என்பது உங்களை அந்தப் பழைய மதம்பிடித்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் வைப்பது. எலிப் பந்தயத்தில் அதாவது வாழ்க்கைப் பந்தயத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், நீங்கள் வெற்றி பெற்றாலும்கூட அதே எலியாகத்தான், நீங்கள் வெறுமனே அதே எலியாகத்தான் (அதே மனிதராகத்தான்) இருக்கிறீர்கள். அதைவிட மேலாக வேறு ஒன்றும் இல்லை!

பொறாமை அல்லது போட்டிமனப்பாங்கு, உங்கள் இருப்புக் தன்மைக்குள் நுழைந்த மறுகணமே, நோக்கமற்ற தன்மை மறைந்து விடுகிறது. மீண்டும் சமுதாய கட்டுறு மனப்பாங்கிற்குள் விழுந்து, இலக்குகள் பின் ஓடத்தொடங்குகிறீர்கள். இந்தப் பொறாமை அல்லது போட்டியிடுதல்தான் உங்களை ஒரு எலியைப்போல் ஓட வைக்கிறது.

தந்த்ராவில் மாயா சக்தியைப் பற்றி, பொய் தோற்றத்தின் ஆற்றலைப் பற்றி ஒரு அழகான கருத்து இருக்கிறது. மாயை வெறுமனே இந்த ஒரு கோலை வைத்துக்கொண்டே நம்மை நடனம் ஆடவைக்கிறது, அந்தக் கோல்தான் - பொறாமை! பொறாமை என்கிற கோலை வைத்தே, மாயை நம்மை ஆட வைக்கிறது.

இந்தியாவில் குரங்குகளை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்கள் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு குரங்குகளை வைத்து வித்தைக் காட்டுவார்கள். அவர்கள் கையில் எப்போதும் ஒரு கோலை வைத்திருப்பார்கள். கோலைச் சுழற்றிக்கொண்டே "ஆடுடா ராமா! ஆடுடா ராமா," என்று சொல்வார்கள்.

அவர்கள் சொற்படி குரங்கு நடந்துகொள்ளும்.
சின்னகோலை கைகளில் வைத்துக்கொண்டு
குரங்கைத் தாங்கள் விரும்பியபடியெல்லாம்
ஆட வைப்பார்கள். அது அப்படியே
அவர்கள் சொல்லிற்குக் கீழ்படியும்.

அதேபோல் மாயா சக்தியானது ஒப்பிட்டுப் பார்த்தல் அல்லது பொறாமை என்கிற இந்த ஒரு கோலை வைத்துக்கொண்டே அது விரும்பிய படியெல்லாம் உங்களை ஆடவைக்கிறது. நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிய அந்தக் கணமே, நீங்கள் அதே தடத்திற்குள், அதே பாதைக்குள், அதே செயல்பாட்டிற்குள், நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை என்று நான் எதைச் சொல்கிறேனோ அந்த வாழ்க்கைக்குள் குதிக்கிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் கர்மி ஆகி விடுகிறீர்கள். கர்மயோகி இல்லை.

எவர் ஒருவர் நிலையான விழிப்புணர்வில், நித்ய ஆனந்த நிலையில் வாழ்கிறாரோ, தம்முடைய உடல் மனத்தை அதன் இயல்பின்படி செயல்பட அனுமதிக்கிறாரோ அவர் நிலையான விழிப்புணர்வில் மையம்கொள்கிறார். அவரே கர்மயோகி; யார் ஒருவர், துறத்தலின் உச்ச நிலையாக, பற்றல்லாமல் செயல்களில் ஈடுபடுகிறாரோ அவரையே கர்மயோகி என்று சொல்கிறோம்.

> பொறாமை
> மாயை
> வெறுமனே இந்த
> ஒரு கோலை
> வைத்துக்கொண்டே
> நம்மை நடனம்
> ஆடவைக்கிறது.

பொறாமையால்
தூண்டப்பட்டுச்
செயல்களைச் செய்பவர்
கர்மி;
நிலையான
விழிப்புணர்வால்
தூண்டப்பட்டுச்
செயல்களைச் செயல்பவர்.
கர்மயோகி.

ஆனால் யார் ஒருவர் பொறாமையின்
காரணமாகவோ அல்லது மற்றவர்களின் மேல்
உள்ள எரிச்சலின் காரணமாகவோ அல்லது
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தலின்
காரணமாகவோ செயல்களைச் செய்கிறாரோ
அவர் சமுதாயக் கட்டுறு மனப்பான்மைக்குள்
சென்று விடுகிறார். அவர் வாழ்க்கைப்
பந்தயத்தில் சிக்கிக்கொள்கிறார்.
பேராசையிலிருந்து எழுகிற செயலை
நோக்கியே தம் கவனத்தைச் செலுத்துகிற
அவரைக் கர்மி என்று சொல்கிறோம்.

ஒரு கர்மிக்கும் கர்மயோகிக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான்: பொறாமையால் தூண்டப்பட்டுச் செயல்களைச் செய்பவர் கர்மி; நிலையான விழிப்புணர்வால் தூண்டப்பட்டுச் செயல்களைச் செயல்படுபவர். அதாவது தம்மை உத்வேகப்படுத்த விழிப்புணர்வை அனுமதிக்கும் ஒருவர் கர்மயோகி.

நம் வாழ்க்கையையே விழுங்கும் மலைப்பாம்பு...

இன்னொரு முக்கியமான விஷயம் : நாம் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு செயலைச் செய்யும்போது, முட்டாள்தனமான விஷயங்களை மட்டுமே செய்கிறோம்.

நம் புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. நம் செயல், நமது செயல்திறனைவிட, நம்முடைய செயலாற்றலைவிட குறைந்தே இருக்கும்.

ஏனென்றால் இப்போது நாம் மற்றவர்களுடைய உற்பத்தித் திறனையே நம்முடைய உற்பத்தித் திறனுக்கும் ‘அளவு கோலாக’ உபயோகப் படுத்துகிறோம்.

நாம் ஒப்பிட்டுக் கொண்டிருப்பவரைவிட, சிறப்பாகச் செயல்படும் திறமை நம்மிடம் இருந்தாலும் இப்போது நாம் அவருடைய சாதனைகளில்தான் நம்முடைய பார்வையைப் பதித்திருக்கிறோம்!

ஒரு சின்ன கதை:

ஒரு கிறிஸ்துவரும் ஒரு யூதரும் எதிர் எதிராக வசித்து வந்தார்கள். அவர்கள் எதிர் எதிர் வீட்டில் தங்குபவர்களாக மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகளாகவே இருந்தார்கள்!

கிறிஸ்துவர் தம் வீட்டின் முன் ஒரு ரோஜா தோட்டத்தை அமைத்தால், யூதர் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், தமது வீட்டிற்குப் புது ரோஜா தோட்டத்தையேகொண்டு வந்து விடுவார்.

யூதர் தம் வீட்டிற்கு வெள்ளை வண்ணம் அடித்தாரேயானால் உடனே கிறிஸ்துவரும் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தம் வீட்டிற்கும் வெள்ளை வண்ணம் அடித்து விடுவார். ஒரு நாள், திடீரென்று ஒரு புது மெர்சிடெஸ் பென்ஸ் கார் யூதரின் வீட்டிற்கு முன் நின்றது. இதைக் கிறிஸ்துவரால் தாங்க முடியவில்லை.

எப்படியோ பணம் தயார் செய்து, இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி வீட்டின் முன் நிறுத்தி, அதன் மேல் புனித நீரையும் தெளித்தார்.

யூதர் தம் வீட்டிலிருந்து இதைப் பார்த்துவிட்டு, "என்ன ஆயிற்று உங்களுக்கு? நேற்றுவரை நீங்கள் நன்றாகத்தானே இருந்தீர்கள். நீங்கள் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி இருக்கிறீர்கள், அது சரிதான், ஆனால் அந்தக் காரின் மேல் ஏன் தண்ணீரை தெளிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"நான் ஞானஸ்தானம் அளிக்கிறேன்," என்று கிறிஸ்துவர் சொன்னார். இப்போது யூதருக்கு என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினையாகிப் போனது! அன்று மாலையே அவர் தம் காரின் புகை வெளியேற்றும் குழாயைப் பிளேடினால் அறுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது! நீங்கள் புரிந்துகொண்டர்களானால் சரி, புரியவில்லை என்றால் சிரித்துக்கொண்டு இருப்பவர்களைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் மற்றவர்களுடைய
உற்பத்தித் திறனையே
நம்முடைய
உற்பத்தித் திறனுக்கும்
'அளவு கோலாக'
உபயோகப்படுத்துகிறோம்.

நீங்கள் பொறாமையின் காரணமாகவோ அல்லது ஒப்பிட்டுப் பார்ப்பதன் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் மீதுள்ள எரிச்சலின் காரணமாகவோ செயல்களைச் செய்தீர்களானால், நீங்கள் இந்த மாதிரியான செயல்களைத்தான் செய்வீர்கள். உங்களுடைய செயல்கள் இப்படித்தான் முடியும். உங்கள் புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்திவிடும். நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிய உடனேயே, உங்களுடைய புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் ஒவ்வொருவரும் ஒப்பிட முடியாதவர்கள், தனித்துவம் வாய்ந்தவர்கள். இங்கு நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஒருவருடன்தான், ஒரு ஐந்து அங்குலம் மேலேயோ அல்லது கீழேயோ உள்ள ஒருவரிடம்தான் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். பில்கேட்ஸுடன், நீங்கள் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதில்லை. நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்களா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரருடந்தான் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்களுடன் வேலை செய்பவருடன், சகோதரி அல்லது சகோதரர் இவர்களுடன் மட்டுமே உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறீர்கள்.

தோல்விகூட உங்களுக்குப் பிரச்சினை இல்லை. தோல்வியைப் பற்றிய உங்களது கவலையே பிரச்சினையைத் தருகிறது. அதனால்தான் அடையமுடியாத இலக்குகளுக்குக் குறிவைப்பதில்லை; அடையக்கூடிய இலக்குகளுக்கே குறிவைக்கிறீர்கள். உங்களுக்கு மிக அருகில் இருக்கும் மக்களுடன் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்.

இந்த ஒப்பிட்டுப் பார்த்தல்தான் உங்களைப் பித்துப் பிடித்தவர்களாக்குகிறது. அது மீண்டும் மீண்டும் உங்களுக்குள் சமுதாயக் கட்டுறு மனப்பான்மையைத் திணித்து, உங்கள் மொத்த வாழ்க்கையையுமே தின்று விடுகிறது. உங்கள் முழு வாழ்க்கையுமே இந்த ஒரு மாயையால், ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தால் விழுங்கப்பட்டு விடுகிறது.

உங்கள் முழுமையான உற்சாகம், இன்பம்,
உண்மையான ஆனந்தம், மகிழ்ச்சியான வாழ்வு,
இவை எல்லாமே ஒப்பிடுதல் என்னும் இந்த
ஒரே மாயையால் விழுங்கப்பட்டு விடுகிறது.

> நீங்கள்
> ஒப்பிட்டுப் பார்க்கத்
> தொடங்கிய உடனேயே,
> உங்களுடைய
> புத்திசாலித்தனம்
> வேலை செய்வதை
> நிறுத்திவிடும்.

பிரளயகாலத்தில் இந்த மொத்த உலகமும்
கடலால் எப்படி விழுங்கப்படுமோ,
அதேபோல் உங்கள் முழு வாழ்க்கையும்
ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இந்த ஒரு
கருத்தால் விழுங்கப்பட்டுவிடும்.

பொறாமை மற்றும் ஒப்பிடுதல் இந்த இரண்டிற்கும் உண்மையான இருப்பு கிடையாது. உண்மை நிலைக்கு இரண்டுவித நிலைகள் உண்டு. ஒன்று, ஒப்புமை உண்மை, மற்றொன்று, இருப்பு நிலை உண்மை. இருப்பு நிலை உண்மையின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டீர்களானால், நீங்கள் ஒருபோதும் துன்பப்பட மாட்டீர்கள். ஒப்புமை உண்மையின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டீர்களானால் சாகும்வரை தொடர்ந்து துன்பப்படுவீர்கள். மரண சமயத்தில் மட்டும் இல்லை; மரணமடைந்த பிறகும்கூட துன்பப்படுவீர்கள்.

உங்கள் உள் உலகத்தை ஒப்புமை உண்மையை வைத்துக் கட்டாதீர்கள். உங்கள் உள் உலகத்தை இருப்பு நிலை உண்மையை வைத்துக் கட்டுங்கள். உங்கள் உள் உலகம், இருப்பு நிலை உண்மையைக்கொண்டு கட்டப்பட்டதாக இருக்கட்டும்!

வாழ்க்கையை இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கையை இருப்பு நிலை உண்மையைக்கொண்டு கட்டி இருந்தீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை நிலையான விழிப்புணர்வில் இருந்து, ஆனந்தமாக ஒரு கர்மயோகியைப்போல் வாழ்வீர்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு மனிதர் முகத்தில் அசட்டு சிரிப்புடன் மதுக்கடைக்கு வந்தார். "எல்லோருக்கும் மதுவை ஊற்று, நான் பணம் தருகிறேன்," என்று அந்த மதுக்கடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்குமே மதுவைத் தரும்படி மது விற்பவரிடம் சொன்னார்.

மது விற்பவர் எல்லோருக்கும் மதுவை ஊற்றிவிட்டு, "இது மிகவும் நல்ல செயல். நீங்கள் எல்லோருக்கும் நல்லது செய்வதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஏனென்றால் இன்று நான் என் இளைய சகோதரனைவிட உயரமானவனாக ஆகிவிட்டேன். அவன் என்னைவிட உயரமாக இருப்பான். அதனால் எல்லோரும் ‘அவன் பெரியவனா அல்லது நீ பெரியவனா?’ என்று கேட்டு என்னைக் கேலி செய்வார்கள். அது எனக்குப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இன்று நான் அவனைவிட உயரமானவனாக ஆகி விட்டேன்,” என்று சொன்னார்

உங்கள் இளைய சகோதரர் உங்களைவிட உயரமாக இருந்தால், அது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகி விடுகிறது!

அந்த மதுக்கடைக்காரர், “இந்த வயதில், திடீரென்று அவரைவிட நீங்கள் எப்படி வளர்ந்தீர்கள் ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவர் பதில் சொன்னார், “இல்லை, நான் வளரவில்லை. அவன் ஒரு விபத்தில் சிக்கி தம் இரு கால்களையும் இழந்துவிட்டான்.”

சமுதாய ரீதியில், இந்த வகை ரசனை மிகவும் மோசமானதாகத் தெரியலாம். இருப்பினும் அடுத்த மனிதர் தம்மைவிட நன்றாக இருக்கும்போதோ அல்லது தம்மைவிட சிறப்பாகச் செயல்படும்போதோ இதைப்போலத்தான் நிறைய பேர் செயல்படுகிறார்கள்.

Peacock feather icon

## விழிப்புணர்வே திறவுகோல்

நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதும், நாம் பொறாமையோடு வாழும் போதும், ஒப்புமை உண்மையின் அடிப்படையில் நாம் வாழும் போதும், தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இது போன்ற செயல்களைத்தான் செய்கிறோம். ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் நம்மைக் குருடராக்கி விடுகிறது, நம்முடைய இயல்பு அபாயகரமானதாக மாறி விடுகிறது. உங்களுடைய உள் உலகத்தை இருப்பு நிலை உண்மையின் அடிப்படையில் கட்டுங்கள்; ஒப்புமை உண்மையின் அடிப்படையில் அல்ல.

> உங்களுடைய
> உள் உலகம்
> இருப்பு நிலை
> உண்மையின்
> அடிப்படையில்
> கட்டப்படட்டும்;
> ஒப்புமை உண்மையின்
> அடிப்படையில் அல்ல.

நீங்கள்
தளர்வாக இருக்கும்போது,
நீங்கள்
ஆனந்தமாக
இருக்கும்போது,
நீங்கள் உங்களையே
மிக அழகாக
வெளிப்படுத்துகிறீர்கள்.

உடல், மனம் கொண்ட மனிதர் ஒருவர்,
தம்முடைய இயல்பினாலேயே, ஏதோ ஒரு
வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ
செயல்களைச் செய்ய வேண்டியதாய்
இருக்கிறது. உங்கள் இயல்பைப்
பின்பற்றும்போது, நீங்கள் சுகமாகவும்
பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இணைந்தும்,
ஒருங்கிணைந்தும் செல்கிறீர்கள். நீங்கள்
தளர்வாக இருக்கும்போது, நீங்கள் ஆனந்தமாக
இருக்கும்போது, நீங்கள் உங்களையே மிக
அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் பேராசையாலும் அச்சத்தாலும் ஆட்கொள்ளப்படும் போதும், நீங்கள் எதுவாக இல்லையோ, அதுவாக இருக்க நீங்கள் முயற்சி செய்யும் போதும், உங்களை நீங்களே அழுத்தி அடக்கிக்கொள்கிறீர்கள். அடக்குதல் என்ன செய்யும்? உங்களால் சக்தியை அடக்க முடியும். அதை உருமாற்றம் செய்ய மட்டுமே முடியும். அதை ஒருபோதும் அழிக்கவோ, அடக்கவோ முடியாது. அது அழிக்கப்படவோ, அடக்கப்படவோ முடியாதது.

உதாரணமாக, பொதுவாக உங்களை யாராவது எரிச்சல் படுத்தினார்களானால், உங்கள் எதிர்ச்செயல் எப்படி இருக்கும்? உங்களுடைய எரிச்சலைக் காட்டக்கூடிய நிலையில், அதாவது அவரைவிட உயர்ந்த நிலையில் இருந்தீர்களானால், நீங்கள் அதைக் காட்டுவீர்கள். ஒரு வேளை அந்த நபர் உங்கள் பணத்தையோ, பதவியையோ பாதிக்க முடியாதவராக இருந்தாரேயானால், அப்போது அவரிடம் உங்கள் எரிச்சலைக் காட்டுவீர்கள். ஏனென்றால் எதையாவது இழந்து விடுவோம் என்கிற பயம் உங்களுக்கு அவரிடம் இல்லை.

அவர் உங்களுக்கு எதுவும் தீங்கு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால் அந்த மனிதர் உங்கள் முதலாளியாக இருந்த இப்போது நீங்கள் உங்கள் எரிச்சலைக் காட்ட பயப்படுவீர்கள்.

Illustration of angry boss and employee

ஏனென்றால் உங்கள் பதவியை,
உங்களின் வருமானத்தை பாதிக்கக்கூடிய
அந்தஸ்தில் அவர் இருக்கின்றார். அந்த
அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார்.
அதனால் உங்கள் உணர்ச்சியை
அழுத்திக்கொள்கிறீர்கள்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துதலோ அல்லது
உள்ளே அழுத்திக்கொள்வதோ தீர்வாக
முடியாது. நம்முடைய விழிப்புணர்வையும்
புரிந்துகொள்ளுதலையும் இந்தச்
செயல்முறைக்குள் பாய்ச்சவதே தீர்வைத்
தரும்.

உங்களுடைய எரிச்சல் என்னும் எதிர்ச்செயல் அந்த நபர் ஏதோ ஒன்றைச் செய்துவிட்டார் என்பதற்காக அல்ல. நீங்கள் உங்களுக்குள் சற்று ஆழமாகப் பார்த்தீர்களானால், நீங்கள் அந்த நபருக்கு எதிரான எதிர்ச்செயலை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியும். அந்த நபரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, அந்தக் கருத்துதான். அந்த நபருக்கான எதிர்ச்செயலையும் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எப்படிப்பட்ட எதிர்ச்செயலைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதுதான், நீங்கள் அந்த நபரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதையே தீர்மானிக்கிறது என்பதையும் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். அவர் எந்தச் செயலைச் செய்தாலும் சரி, நீங்கள் எரிச்சல் அடைய வேண்டும் என்பதையே தேர்வு செய்கிறீர்கள்.

அடுத்த நபரின் செயல்கள் உங்கள் மேல் வேலை செய்ய நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? மேலும் நீங்கள் எரிச்சல் என்று நினைக்கும் ஒன்றை அந்த நபர் செய்யாமல்கூட இருந்திருக்கலாம். இதற்கு முன்பு வேண்டுமானால் இதைப்போல் இரண்டு மூன்று முறைகள் செய்திருக்கலாம்.

ஆனால் இந்த முறை, அவர் முற்றிலும் வேறு நோக்கத்துடன் வந்திருக்கலாம். இருந்தாலும் நீங்கள் முதலிலேயே அவரைப் பற்றித் dவறாகத் தீர்மானித்து விடுகிறீர்கள். அவரைப் பற்றிய உங்கள் கடந்தகால கருத்துகளின் படி, இவ்வகை தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள்.

அவர் இப்படித்தான் செய்யப்போகிறார் என்று உங்கள் விழிப்புணர்வற் நிலையில் தீர்மானித்துக்கொண்டு, அவர் உங்கள் அருகில் வருவதற்கு முன்பே எரிச்சல்கொள்கிறீர்கள். அதனால்தான் சொல்கிறேன், 'விழிப்புணர்வு'தான் திறவுகோல்.'

உங்களின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன் இருந்தீர்களானால், உங்களுடைய விழிப்புணர்வற்ற தன்மையால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்.

உங்களுக்குள் ஒருதலைபட்சமான உணர்வுகளோ, விழிப்புணர்வற்ற எதிர்ச் செயல்களோ எழும்போது உங்களால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அந்த விழிப்புணர்வே போதுமானது. உங்கள் உணர்ச்சிகளை அடக்கவோ, வெளிக்காட்டவோ தேவை இருக்காது. விழிப்புணர்வே அந்த உணர்ச்சிகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும்.

உங்களை உருமாற்றி, மற்றவர்களை உருமாற்றம் செய்ய வைக்கும் மருந்து

கேள்வி: இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவு நிலை சரியாக இல்லையென்றால், எப்போது அதைச் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும், எப்போது அதை முறித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையைத் தொடர வேண்டும்?

உறவுமுறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, ஒருவர் எந்த அளவிற்குப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் ‘நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வி என்று நினைக்கிறேன். சரியா?’

அன்பு என்பதுதான் இருப்பவற்றிலேயே மிகவும் அபாயகரமான பாதை! துணிவுடன் இருப்பவர்கள் மட்டுமே இதில் தைரியமாக நடக்க முடியும். இந்தப் பாதையின் எந்தத் திருப்பத்தில் வேண்டுமானாலும் ஒரு பெரிய சந்தோஷமோ, பெரிய துக்கமோ, சிறப்பான அழகோ, பெரிய போராட்டமோ, ஒரு ஆழமான புரிந்துகொள்ளுதலோ நிகழ நேரிடலாம். அவற்றை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

விழிப்புணர்வே
பொறாமை
உணர்ச்சிகளை
உங்கள்
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்துவிடும்.

ஒவ்வொரு உறவுமுறையிலும் முரண்பாடுகள் இருப்பது சகஜம். ஏனெனில் ஒவ்வொரு நபருமே தனித் தன்மை கொண்டவர்கள். இரண்டு தனித் தன்மைகள், சுயதோற்றங்கள் துல்லியமாக மேடுபள்ளங்கள் இல்லாமல் சரியாகப் பொருந்த முடியாது. அங்கு முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், அது உறவு நிலையையே முறித்துவிடும் என்கிற பயத்தினால் அதை விரிப்பின் கீழே பெருக்கித் தள்ளாதீர்கள். மூடி மறைக்காதீர்கள். அதற்கு எதிர்மறையாக, அதைப் பெரிதாக நினைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள்.

முரண்பாட்டை அனுமதியுங்கள். அதை ஆராயுங்கள். அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்றிலிருந்து கொதித்துக் கொண்டிருக்கும் அதை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லாமல், நீங்கள் இரகசியமாக வைத்திருக்கிறீர்களா என்பதை ஆராயுங்கள்.

> அன்பு என்பதுதான்
இருப்பவற்றிலேயே
மிகவும்
அபாயகரமான பாதை!
துணிவுடன் இருப்பவர்கள்
மட்டுமே
இதில் தைரியமாக
நடக்க முடியும்.

உள்ளார்ந்த நெருங்கிய உறவு நிலையில்தான்,
நீங்கள் உங்களையே கண்டுபிடிக்கிறீர்கள்.
உங்கள் துணைவர் ஒரு கண்ணாடியைப்போல்
உங்களின் உண்மை இயல்பைப்
பிரதிபலிப்பவராக இருக்கிறார். உங்களின்
மோசமான குறைகளை வேறு யாரால்தான்
தைரியமாக இவ்வளவு தெளிவாக
எடுத்துக்காட்ட முடியும்! அதனால்
உங்களின் முரண்பாடுகளின் இயல்பைப்
பரிசோதியுங்கள். மற்றொன்றையும் ஞாபகம்
வைத்துக்கொள்ளுங்கள், எல்லா உறவு
நிலையிலுமே, அங்கு ஒன்றாக இருக்கவும்
ஒரு நேரம் உண்டு, பிரிந்து செல்லவும் ஒரு
நேரம் உண்டு.

எந்த வகையான அன்பை நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள்? நீங்கள் உண்மையான, நிச்சயமான, நேர்மையான அன்பைத்தான் செலுத்துகிறீர்களா? ஒருவருக்கொருவர் ஆழமான தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இருவருடைய இருப்புத் தன்மையும் இயைந்து இருக்கிறதா? காரணங்களையும் வாதங்களையும் தேடிக்கொண்டிருக்காதீர்கள். இந்தச் செயல்முறையை பட்டறிவைக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்.

இந்தக் கேள்விகளை நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் வெறுமனே உங்களுக்குள் திருப்பி விடுங்கள். பதில்கள் தானாகவே எழும்.

உங்கள் விடை 'ஆம்' என்று இருந்தால், இந்த முரண்பாடுகள் எல்லாம் உறவு முறையில் இருக்கும் வெறும் மேலோட்டமான சலனங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அன்புடன் இணைந்து வரும் குணங்களான 'நான் இல்லை' (எனக்கென்று தனி எண்ணம் இல்லை), மற்றும் சரணாகதி மனப்பான்மை ஆகியவற்றுக்கு எதிர்மறை குணமான அஹங்காரம்தான் இந்தச் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இந்தச் சூழ்நிலையை அன்படனும் பொறுப்புடனும் சரிசெய்யுங்கள். உள்ளிருந்து வரும் பதில் 'இல்லை' என்று இருந்தால் இது விட்டுசெல்ல வேண்டிய நேரமாக இருக்கலாம்.

உண்மையான அன்பு இல்லாமல் அந்த உறவுமுறையில் நீடிப்பதும், இருவருடையிருப்பும் தொடர்பற்று இருக்கும் நிலையில் அந்த உறவு முறையை தொடர்வதும் இருவருக்குமே நல்லதல்ல. அது ஒரு அவச்செயல். உங்களின் உண்மை அன்பு ஒருவேளை வேறு எங்கோ இருக்கலாம். அதற்காகத் தேடிக்கொண்டு இருக்காதீர்கள். சாத்தியங்களுக்காகத் திறந்த மனப்பான்மையுடன் இருங்கள்.

அதே நேரம் முரண்பாடுகள் உங்கள் உறவை அழித்துவிட அனுமதிக்காதீர்கள். உங்கள் இருவரையும் அழித்துவிட அனுமதிக்காதீர்கள். இந்த நபர் உங்களுக்கானவர் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டு, கசப்புணர்வோ வன்மமோ இல்லாமல் அவரைவிட்டுச் செல்லுங்கள். அன்பு செலுத்தும் உங்கள் தன்மையை, ஆற்றலைச் சிதைத்துவிடாதீர்கள். கசப்புணர்வு உள்ளவராக மாறுவது உங்களுக்கு மேலும் மேலும் துன்பத்தையே தரும். அன்பின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே சாகடித்துவிடும். யாருக்கும் நிகழக்கூடிய மிகவும் ஆபத்தான விஷயம் இதுதான். ஒருவருக்கு நிகழக்கூடிய ஆபத்துகளிலேயே மிகவும் அபாயமான ஆபத்து இதுதான். இப்போது நான் சொல்லப்போகும் இந்த நுட்பமானது மிகவும் சிறந்தது.

எல்லா
உறவுநிலையிலுமே,
அங்கு
ஒன்றாக இருக்கவும்
ஒரு நேரம் உண்டு,
பிரிந்து செல்லவும்
ஒரு நேரம் உண்டு.

பலர் இந்த நுட்பங்களைப் பின்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் உறவு நிலையில் அது அபரிமிதமான குணமளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முதல் நிலை த்யான வகுப்பான ஆனந்த ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தால் உபயோகமாக இருக்கும்.

நம் உடல் - மன அமைப்பில் ஏழு சஃக்தி மையங்கள் உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றைச் சக்ரங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மையமும் ஒரு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. சக்ரத்தின் சஃக்தி ஓட்டம் தடைப்படும்போது உங்களுக்கு எதிர்மறையான உணர்வு தோன்றும். அவை சஃக்தியூட்டப்படும்போது, நேர்மறையான எண்ணம் உண்டாகி, நீங்கள் உங்களுக்குள் அமைதியை உணர்கிறீர்கள்.

peacock feather

பூட்டப்பட்ட சக்கரத்தாலேயே நோய்கள் வருகின்றன

மூலாதார மையம் பேராசை, காமம், கோபம் முதலியவற்றாலும், மண்ணீரல் மையம் பயத்தாலும், தொப்புள் மையம் கவலையாலும், இதய மையம் கவனத்தேவையாலும், தொண்டைக்குழி மையம் பொறாமையாலும், புருவ மையம் அஹங்காரத்தாலும், உச்சந்தலையில் உள்ள மையம் நன்றியுணர்வு இல்லாத் தன்மையாலும் அடைக்கப்படுகிறது.

முதல் நிலை த்யான முகாமில் கலந்து கொண்ட ஒருவர், அவரிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிகளின் அடிப்படையில், அந்த மனிதருக்கு எந்தச் சக்கரம் அடைபட்டிருக்கிறது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அந்த மனிதர், எந்த அடைப்பட்ட சக்கரத்திலிருந்து செயல்படுகிறார் என்பதை அடையாளம் காண முடியும்.

மற்றொரு மனிதரிடம் பழகும்போது பொதுவாக ஒருவர், அதே சஃக்தி மையத்திலிருந்தோ அல்லது மற்றொரு பூட்டப்பட்ட மையத்திலிருந்தோ பதிலளிப்பார்.

முரண்பாடுகள்
உங்கள் உறவை
அழித்துவிட
அனுமதிக்காதீர்கள்.
அன்பு செலுத்தும்
உங்கள் தன்மையை,
ஆற்றலைச்
சிதைத்துவிடாதீர்கள்.

கோபப்படுபவர்களிடம், நாமும்
கோபத்துடனோ அல்ல பயத்துடன்தான்
பதில் செயல்பரிய வேண்டுமென
நினைக்கிறோம். ஆனால் த்யான முகாம் மூலம்
பயிற்சி பெற்றவர்கள், இந்த மாதிரியான
செயல்களுக்குத் திறந்த இருதய சக்ரத்தில்
இருந்து பதில் செயல்பரிகிறார்கள்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்,
நிபந்தனையற்ற அன்புடன் பதில் அளிக்க
வேண்டும்.

ஒரு நபர் நம்மிடம் வரும்போது கோபம், பயம், கவலை அல்லது அஹங்காரம் என எந்த உணர்வுடன் வந்தாலும் சரி, நாம் அவரிடம் அன்படனும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியும் செயல்பட முடிகிறது.

அன்பு தன்னிச்சையாகவும் நிபந்தனையற்றும் செலுத்தப்படும்போது, அது மற்ற எல்லா உணர்ச்சிகளையும் வெற்றி கொண்டுவிடுகிறது.

இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. இதை நீங்கள் முயற்சி செய்தீர்களானால் உங்கள் உறவுமுறைகள் அதிசயத் தக்க முறையில் முன்னேற்றம் அடையும். நெருங்கியவருடன் குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். அதனால் இதை அவரிடம் நடைமுறைப்படுத்துவதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும்!

உலகின் மீதே அன்பு செலுத்துவதாக பலர் சொல்கிறார்கள். அவர்கள் இதைச் சொல்லும்போது, இதை நம்பவும் செய்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் அவர்களுடைய வாழ்க்கைத் துணையிடம் அவர்கள் செலுத்துகிற அன்பை நிரூபிக்கச் சொல்லும்படி கேட்டீர்களானால், அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார்கள்.

மக்கள் தொழில்முறை நடவடிக்கையில் உள்ள கூறுபாடுகளைப் பற்றியும் இன்னும் இது போன்ற பல நுட்பங்களைப் பற்றியும் பேசுவார்கள். பெற்றோர் குழந்தைகள் இடையே உள்ள தொடர்பைப் பற்றிப் பேசுவார்கள். எல்லாவகை தொடர்புகளுமே உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இந்த உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சஃக்தி மையங்களுடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. அன்பு மிகவும் சஃக்திவாய்ந்த உணர்ச்சி! அன்பு தன்னிச்சையாகவும் நிபந்தனையற்றும் செலுத்தப்படும்போது, அது மற்ற எல்லா உணர்ச்சிகளையும் வெற்றி கொண்டுவிடுகிறது.

அதனால்தான் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மதத்திலும் அன்பு தெய்வீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதயம் அன்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயத்தைத் திறங்கள். உங்கள் இதய மையத்திற்குச் சஃக்தியூட்டுங்கள் உங்களிடமிருந்து நிபந்தனையற்ற அன்பைப் பாயவிடுங்கள். அது உங்களை உருமாற்றும்; மற்றவர்களையும் உருமாற்றம் பெறச் செய்யும்.

Lord Krishna