KAILASA Library/பகவத்‌கீதை/உங்கள் கடமையைச் செய்யுங்கள்Sign in
பகவத்‌கீதை

உங்கள் கடமையைச் செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் எல்லா உயிரினங்களும் அதனதன் இயற்கை சுபாவப் படியே செல்கின்றன. புத்திசாலித்தனமான ஒருவர்கூட தம் இயல்பான சுபாவப் படியே செயல்களைச் செய்கிறார். புலன்களின் செயல்களை எது தடுத்து நிறுத்த முடியும்?

புலனின்ப பொருட்கள் மீது பற்றுகொள்ளுதலையோ அல்லது வெறுப்புகொள்ளுதலையோ செய்யும் இந்தப் புலன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆன்ம ஞானப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அவற்றின் ஆட்சிக்குள் ஒருவர் எப்போதும் இருக்கக் கூடாது.

வேறு யாரோ ஒருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைவிட, சொந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது சிறந்ததே. மற்றவர்கள் கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வதில் மரணமே அடைந்தாலும்கூட சிறந்தது. ஏனென்றால் மற்றவர்களுடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.

அர்ஜுனன் சொன்னார், “ஓ விருஷ்ணி குலத்தில் அவதரித்தவரே, ஏதோ ஒரு ஆற்றலால் ஆட்டுவிக்கப்பட்டதுபோல, மனிதன் அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச் செயல்கள் செய்ய வலுக்கட்டாயமாக ஏன் தூண்டப்படுகிறான்?”

பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருப்பவை பேரார்வத்திலிருந்து பிறக்கும் காமமும், கோபமும்தான் .

இவை, எல்லாவற்றையும் விழுங்கக்கூடியதாகவும் பாபத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது.

கடமை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டியது இங்கு முக்கியம். நான் என் கடமையைச் செய்ய வேண்டுமானால், என் கடமையை அடையாளம் കണ്ടுகொள்வது எப்படி என்பதையும் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

கடமை என்பதற்கான கருத்து, பல்வேறு மக்கள், பல்வேறு நாடுகள், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மதம் இவற்றைப் பொறுத்து வேறுபட்டிருக்கிறது.

அதனால் கடமை என்ற கருத்தைத் தெளிவாக விளக்க முடியாது. குறிப்பிட்ட செயல்களைக் கடமை என்றும், சிலவற்றை நல்லவை என்றும், சிலவற்றை கெட்டவை என்றும் சொல்லி நமது சமுதாயமும், நமது மனச்சாட்சியும் நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் அவ்வாறே பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம்.

கடமையில் சிரத்தையே விடுதலையின் இரகசியம்

கடமையைப் பற்றிய சில கருத்துகளுடன் நாம் வளர்க்கப்பட்டு உள்ளோம். உதாரணமாக, வயதான பெரியவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. ஸத்யம், அஹிம்ஸை, திருடாமை மற்றும் இது போன்ற கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது நம் கடமை. இத்தகைய ஒழுக்க விதிகளைப் பற்றிய கருத்துகளுடன் நாம் வளர்க்கப்பட்டு உள்ளோம். ஆனால் எத்தனை பேர் அவற்றை நிறைவேற்றும் அழகை உணர்ந்து இருக்கிறோம்?

நாம் பின்பற்றும் மதத்தைச் சார்ந்தும், சில குறிப்பிட்ட கோட்பாடுகள்

Measuring tape, ruler and measuring pitcher

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, பட்டினியால்
வாழும் ஒரு மனிதருக்கு, ஒரு
மாமிசத்துண்டு கிடைத்தால், அவர்
அசைவமாக இருந்தால் அதை
உண்ணலாம், பிரச்சினை எதுவும்
இல்லை.

ஆனால் சைவமாக இருக்கும் ஒருவர், தம் உயிரே போனாலும்கூட, அந்த மாமிசத் துண்டைத் தொடாமல் இருக்க வேண்டியது தம் கடமை என்று உணர்கிறார். சில மதங்களின் கருத்துப் படி, நீங்கள் ஒரே ஒருமுறைதான் திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால் வேறு சில மதங்களில் ஒருவர் பல திருமணங்கள் செய்துகொள்ள முடியும். இவை எல்லாமே சமுதாயத்தால் விளக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட கடமைகள். ஒன்றை நாம் நினைவில்கொள்ள வேண்டும், மற்ற மக்களின் பழக்க வழக்கங்களை, ஐதீகங்களை நம்முடைய அளவுகோலின்படி தீர்மானம் செய்யக் கூடாது.

பிரபஞ்சத்திற்கு என்று எந்த ஒரு பொதுவான அளவுகோலும் இல்லை. நீங்கள், மக்களையும் அவர்களின் செயல்களையும் அளக்கக்கூடிய எந்த ஒரு உலக அளவுகோலும் இங்கு இல்லை.

இங்கே கிருஷ்ணர் பேசுவது சமுதாயம் வரையறுத்த உடமைகளையோ, அல்லது மனச்சாட்சியைப் பற்றியோ அல்ல. அவர் விழிப்புணர்வைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

விவேகானந்தர், இந்தியாவைச் சேர்ந்த
ஒரு யோகியைப் பற்றிச் சொல்லி உள்ளார்.
அவர் மிகவும் வித்தியாசமான மனிதர்.
அவர் யாருக்கும் சொல்லித் தர மாட்டார்.
நீங்கள் அவரிடம் கேள்வி கேட்டீர்களானால்,
அவர் அதற்குப் பதில் சொல்ல மாட்டார்.
இருப்பினும் கேள்விகள் கேட்டு விட்டு, சில
நாட்கள் காத்திருந்தீர்களானால், உங்களிடம்
சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்
போதே, முன்பு நீங்கள் கேள்வி கேட்ட
விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதன் மேல்

> பிரபஞ்சத்திற்கு என்று
> எந்த ஒரு பொதுவான
> அளவுகோலும் இல்லை.

தெளிவு என்னும் அற்புதமான ஒளியைப் பாய்ச்சி விடுவார்.

ஒருமுறை அவர் விவேகானந்தரிடம்,
செயலின் ரகசியத்தைப் பற்றிச்
சொன்னார்: “முடிவும் வழியும் ஒன்றாக
இணையட்டும்!”

அடுத்ததாக நீங்கள் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போது, அதைத் தாண்டி எதையுமே நினைக்காதீர்கள். அதை ஒரு வழிபாடாகச் செய்யுங்கள். மிக உயர்ந்த வழிபாடாக நினைத்து அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் முழு சக்தியையும் அர்ப்பணம் செய்யுங்கள். உங்களுடைய முழுக் கவனத்தையும் அதற்குச் கொடுங்கள்.

வாழ்வின் எந்த நிலையிலும் விளைவுகளின் மீது பற்றப்பில்லாமல் கடமையைச் சரியாகச் செய்வது, நம்மை மிக உயர்ந்த ஞானத்திற்கு வழி நடத்திச் செல்லும்.

செயலின் விளைவில் பற்றுள்ள ஒருவர், கடமைகளின் இயல்பைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருப்பார். ஆனால் பற்றப்பில்லாமல் செயல்களைச் செய்யும் ஒருவருக்கு எல்லாக் கடமைகளும் சமமாக நல்லதாகவே தெரியும். வேலையின் வெளித்தோற்றத்தை அவர் பார்ப்பதில்லை. தாம் செய்ய வேண்டிய செயலை மட்டுமே உற்சாகத்துடன் பார்க்கிறார். ஒவ்வொரு செயலையும் அதே உற்சாகத்துடனும் உயிரோட்டத்துடனும் அணுகுகிறார். செய்கிற வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அவர் அந்தச் செயலாகவே மாறி விடுகிறார்.

மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தில் மூன்று வகையான கீதைகள் இருக்கின்றன. பகவத்கீதை, அனுகீதை இந்த இரண்டும் கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. மூன்றாவது, ‘வியாதகீதை’ - இறைச்சிக் கடைக்காரனின் பாடல் என்று பொருள். அதுவும் முக்கியம் வாய்ந்ததுதான்.

ஒரு மாமிசக் கடைக்காரர் இந்த வியாத கீதையைக் கொடுத்துள்ளார். பாபம் செய்பவர் அல்லது சண்டாள, தாழ்ந்த ஜாதி மனிதர் என்று மற்றவர்களால் கருதப்படும் ஒரு மாமிசக் கடைக்காரர் இந்த உயர்ந்த வேத நூலைக் கொடுத்துள்ளார்.

பல சக்திகள் கொண்ட தவசி ஒருவர் காட்டில் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் ஞானமடைந்திருக்கவில்லை. அவர் மிகுந்த அஹங்காரத்தைக் கொண்டவராக இருந்தார். அவர் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து த்யானம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு பறவை இட்ட எச்சம் அவர் மேல் விழுந்துவிட்டது. அவர் அமைதி குலைந்து, கோபமாக தம் கண்களைத் திறந்து அந்தப் பறவையைப் பார்த்தார். அவர் பார்வையின் சக்தியால் அந்தப் பறவை இறந்து விழுந்தது. அந்த யோகி, தாம் செய்ததை மிகவும் பெருமையாக நினைத்தார்.

பிறகு, தம் உணவுக்காகப் பிச்சை எடுக்கச் சென்றார். ஒரு வீட்டின் முன் நின்று உணவுக்காகப் பிச்சை கேட்டார்.

அவர் குரலைக் கேட்ட அந்த வீட்டின் பெண்மணி "என் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருகிறேன், அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்," என்று குரல் கொடுத்தார். அந்த யோகிக்கு இது பிடிக்கவில்லை.

'முட்டாள் பெண்மணி சாதாரண மனிதரான தம் கணவருக்குப் பரிமாறுவதற்காக, என்னைப் போன்ற உயர்ந்த யோகியைக் காக்க வைக்கிறாளா?' என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.

உடனே அந்தப் பெண்மணியின் குரல், "நான் காட்டில் உள்ள பறவையைப்போல சுலபமாகக் கொல்லப்படக்கூடியவள் அல்ல. உங்கள் சக்தியைப் பறவைகள் மேல் வேண்டுமானால் பிரயோகிக்கலாம், எனக்கு எதிராக முடியாது. அதனால் கொஞ்சம் அமைதியாகத் தளர்வாக இருங்கள்!" என்று அவர் நினைத்துக் கொண்டிருந்ததற்குப் பதில் சொல்வதுபோல் கேட்டது.

அந்த யோகி அதிர்ச்சி அடைந்தார்! அவர்
என்ன நினைக்கிறார் என்பதை மட்டுமல்ல,
காட்டில் என்ன நடந்தது என்பதையும்
தெரிந்து வைத்திருக்கிறாரே! அந்தப்
பெண்மணி உணவு தருவதற்காக வெளியே
வந்தபோது, அந்த யோகி அவரிடம் மன்னிப்பு
கேட்டார்.

பற்றப்பில்லாமல்
செயல்களைச் செய்யும்
ஒருவருக்கு
எல்லாக் கடமைகளும்
சமமாக
நல்லதாகவே தெரியும்.
வேலையின்
வெளித்தோற்றத்தை
அவர் பார்ப்பதில்லை.

அவர் அந்தப் பெண்மணியிடம் கேட்டார் "அம்மா நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? காட்டில் நடந்ததை எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? நானும் இந்த நிலையை அடைவது எப்படி என்று எனக்குத் தயவு செய்து கற்றுக் கொடுங்கள்," என்றார்.

அதற்கு அந்தப் பெண்மணி, "நீங்கள் சக்திகளை அடைந்து விட்டீர்கள் ஆனால் புத்திசாலித்தனத்தை அடையவில்லை. இந்தச் சாலை முடியும் இடத்தில் உள்ள மாமிசக் கடைக்காரரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்குச் சொல்லித் தருவார்," என்றார்.

இப்போது யோகிக்கு மேலும் வியப்பு ஏற்பட்டது. 'சாதாரண மாமிச கடைக்காரர் எனக்கு எப்படிப் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்லித் தர முடியும்?' என்று யோசித்தார். ஆனால் அந்தப் பெண்மணி ஏற்கனவே தந்த அதிர்ச்சியிலிருந்தே அவரால் இன்னும் மீள முடியவில்லை. இப்போது மறுபடியும் புதிதாக அவரிடம் ஒரு கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதனால் அமைதியாக அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மாமிசக் கடைக்கு விரைந்தார்.

மாமிசக் கடையை அடைந்தபோது கடைக்காரர் இப்போதுதான் வெட்டிய விலங்கின் உடல்களைச் சுறுசுறுப்பாகத் துண்டுகளாக்கிக்கொண்டு இருந்தார். அந்த மாமிசக் கடைக்காரரிடம் எப்படி க் கற்றுக் கொள்ள முடியும் என்று அவரால் கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை.

ஆனால் அவருக்குப் 'புத்திசாலித்தனம்' தேவையாக இருந்தது. அதனால் அவர் அந்த மாமிசக்கடைக்காரரின் அருகில் சென்று, "உங்களிடம்

கர்மயோகி
ஒவ்வொரு செயலையும்
உற்சாகத்துடனும்
உயிரோட்டத்துடனும்
அணுகுகிறார்.
செய்கிற வேலையில்
முழுமையாக ஈடுபட்டு,
அவர் அந்தச் செயலாகவே
மாறிவிடுகிறார்.

புத்திசாலித்தனத்தைப் பற்றிய விளக்கத்தைக்
கேட்டுக்கொள்ளும்படி அருகில் வாழும்
பெண்மணி சொன்னார். அதனால் நான்
உங்களிடம் வந்துள்ளேன். புத்தியை
அடைவது எப்படி என்று நீங்கள் எனக்கு
விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று
கேட்டார்.

உடனே அந்த மாமிசக் கடைக்காரரும் அவர்
எப்படிப் புத்திசாலித்தனத்தைத் தானாகவே
அடைந்தார் என்பதை, அந்த இறுதி
அனுபவத்தை விளக்கத் தொடங்கினார்.

புத்திசாலித்தனத்தை அடைய அவர்
செய்தது இதுதான், தம் வேலையை முழு
விழிப்புணர்வுடனும் ஈடுபாட்டுடனும்
செய்தார். முழு உத்வேகத்துடன் தனது
வேலையைச் செய்து, அதில் சம்பாதித்த
பணத்தைத் தம் வயதான பெற்றோர்களைக்
கவனத்துடன் பாதுகாப்பதற்காகவே
செலவிட்டார். அதையும் அதே பக்தியுடனும்
ஈடுபாட்டுடனும் செய்தார்.

> செயலுக்குப்
> பின்னால்
> உள்ள சஃக்தி
> நேர்மறையாக இல்லாமல்
> எதிர்மறையாக இருந்தால்,
> அந்தச் செயல்
> பாசாங்காகவும்
> வஞ்சகமானதாகவும்
> இருக்கும்.

வெறுமனே செய்த அவருடைய கடமையே, அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. அவர் வேலையின் இயல்பு, விலங்குகளை வெட்டுவது. அது முக்கியமல்ல. அதை எந்த மனப்பாங்குடன் செய்தாரோ, ச்'ரத்தா அதுதான் அங்கு முக்கியம்.

நீங்கள் மிகப்பெரிய சமுதாய சேவைகளைச் செய்திருந்தால், சமுதாயத்தின் கண்களுக்கு வேண்டுமானால் நீங்கள் மிகப்பெரிய மனிதராகத் தெரியலாம். ஆனால் அந்த மனப்பாங்கு, செயலுக்குப் பின்னால் உள்ள ச'க்தி நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக இருந்தால், அந்தச் செயல் பாசாங்காகவும் வஞ்சகமானதாகவும் இருக்கும்.

நம்முடைய செயல்திறனில், ஆற்றலில், ஆர்வத்தில், நாம் ஒவ்வொருவருமே தனித் தன்மை கொண்டவர்களாக இருக்கிறோம். அதைப்போலவே, நம்முடைய கடமைகளும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. நீங்கள் மற்றவர்களைப் பார்த்து, அவர்களுடைய கடமை நன்றாக இருப்பதாக நினைத்து அதேபோல் செய்தால், உங்களுக்குரிய இயல்பான பாதையை விட்டு விட்டு, வேறு யாரோ ஒருவரின் பாதையைப் பின்பற்றும் தவறைச் செய்வீர்கள்.

ஒரு சின்ன கதை:

"பக்கத்து வீட்டுப் பெண்மணி என்னுடையதுபோலவே புடவை வைத்திருக்கிறாள்" என்று புது மனைவி தம் கணவரிடம் சொன்னார்.

அதற்கு இந்தக் கணவர், "அப்படியானால் அதே போன்ற புதிய புடவை ஒன்றை என்னை வாங்கித் தரச் சொல்கிறாயா?" என்று கேட்டார்.

> மற்றவர்களுடன் நம்மை
> ஒப்பிட்டுப் பார்த்துக்
> கொண்டிருக்காமல்,
> நம்முடைய சக்தியை
> நமக்காகச்
> செலவிடும்போது மட்டுமே,
> நமக்கென்று
> இயல்பாக அமைந்த
> கடமைகளைச்
> செய்கிறோம்.

"ஆமாம் புதுவீடு மாற்றிச் செல்வதைவிட,
புதுப் புடவை வாங்குவது எளிது," என்றார்
அந்தப் புது மனைவி.

பாருங்கள்! ஒப்பிடுதல் உண்மையில் இப்படித்தான் நம் வாழ்வை ஆட்சி செய்கிறது. மற்றவர்களுடைய வளர்ச்சியை ஆய்வு செய்வதிலேயே நம் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறோம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், நம்முடைய சக்தியை நமக்காகச் செலவிடும்போது மட்டுமே, நாம் மற்றவர்களுடைய செயல்களை ஒப்பிடாமலும் நம்முடைய செயல்களிலிருந்து சில குறிப்பிட்ட பலன்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமலும் நமக்கென்று இயல்பாக அமைந்த கடமைகளைச் செய்கிறோம்.

குற்ற உணர்ச்சியின் இரஸவாதம்!

கிருஷ்ணரின் கர்ம யோக ஸ்லோகங்கள், இந்து பாரம்பரியத்தின் ஜாதி அல்லது வர்ண முறையைக் காப்பாற்றுவதற்காகச் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்ண தர்மத்தை ஒருவர் மீறக் கூடாது அதாவது ஒருவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவரோ, அதற்கான கடமையைத்தான் அவர் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் குறிப்பிடுவதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஜாதி அமைப்பின் மூலத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

வேத கலாச்சாரத்தில், குழந்தையை மிகச்சிறிய வயதிலேயே, ஏழு வயதிற்கு முன்பே குருகுலத்திற்கு (குருவின் கீழ் வாழ்ந்து கற்றுக்கொள்ளும் பழங்கால கல்விமுறை) அனுப்பி விடுவார்கள். அந்தக் குழந்தைப் பருவத்திற்கு வரும்வரை குரு அந்தக் குழந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். குழந்தையின் திறமையை அடிப்படையாகக்கொண்டு, குரு அதற்குக் கற்றுத் தருவார்.

ஒரு குழந்தைக்கு அறிஞனாகும் திறமை அதாவது கல்வி கற்கும் திறமை இருந்தால், வேத நூல்கள் பயிற்றுவிக்கப்பட்டு, அந்தக் குழந்தையை ஒரு கற்றறிந்த அறிஞனாக ஆக்குவார். அந்த அறிஞன் ப்ராஹ்மணர் என்று அழைக்கப்படுவார். ஒரு குழந்தை துணிவோடும், ஆக்கிரமிக்கும் ஆற்றல் நிரம்பியவனாகவும் இருந்தால், அவனுக்குத் தற்காப்பு கலையைக் கற்றுத் தந்து அவனைப் போர் வீரராக ஆக்குவார். இவர்களை க்ஷத்ரியர்கள் என்று அழைத்தனர்.

வர்ண அல்லது ஜாதி வேறுபாடுகள் இவ்வாறு ஒருவரின் இயல்பான தகுதியை வைத்துப் பிரிக்கப்பட்டதே தவிர, பிறப்பை வைத்து அல்ல. அது ஒரு நிலையைக் குறிக்கிறது, அந்தஸ்தை அல்ல. காலப்போக்கில் இந்தப் பழக்கம் அழிந்துவிட்டது. இயல்பான தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமலேயே பரம்பரையின் வழியில் பிரிக்கப்பட்டது.

“எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. புலன்களின் செயல்களை எது தடை செய்ய முடியும்?” என்று கிருஷ்ணர் கேட்கிறார். அடுத்த ஸ்லோகத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத புலன்கள் ஆத்மஞானத்திற்குத் தடைக் கற்களாக மாறி விடுகின்றன என்றும் சொல்கிறார். வேத கால கல்வி முறையில் இருக்கும் வர்ணமுறையைப் புரிந்து கொண்டால் மட்டுமே, இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்லும் ‘தடை’ என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரியும்.

> வர்ண அல்லது ஜாதி
> வேறுபாடுகள்
> ஒருவரின் இயல்பான
> தகுதியை வைத்துப்
> பிரிக்கப்பட்டதே தவிர,
> பிறப்பை வைத்து அல்ல.
> அது, ஒரு நிலையைக்
> குறிக்கிறது,
> அந்தஸ்தை அல்ல.

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறார். இருப்பு நிலையில், சுயத்தில் இருக்கும் நபர்கூட, ஏதோ ஒரு தெரியாத ஆற்றலால் தூண்டப்படுவதுபோல், ஏன் பாவச் செயல்களைச் செய்கிறார்? அர்ஜூனனுடைய வெளிப்படுத்தப்பட்ட அல்லது அடக்கப்பட்ட செயல்களினால் அவருக்குள் ஏற்பட்ட நிலையான தடுமாற்றமே அவருடைய கேள்வியாக மாறுகிறது.

உதாரணமாக, ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது, நீங்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் சமுதாயம் உங்களுக்கு இது தவறு என்று கற்றுக் கொடுத்திருப்பதால், நீங்களும் இது தவறு என்று நினைத்து, உங்கள் உணர்வுகளை உள்ளே அடக்குகிறீர்கள். ஆனால் இது வேலை செய்யுமா? நீங்கள் எதையாவது அடக்க முயற்சி செய்தீர்களானால், அது மேலும் உத்வேகத்துடன்தான் மேலே வரும்.

சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கினால்தான் நாம் எப்போதும் கட்டுப்படுத்தப்படுகிறோம். இச்சை உணர்ச்சிகள் உள்ள மனிதர் மட்டமானவர் என்றும், காமம் உள்ளவர் கீழ்த்தரமானவர் என்றும் அது நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கீழ்த்தரமான மனிதர் என்றோ, மேல் தரமான மனிதர் என்றோ யாரும் இல்லை. சக்தியின் உருமாற்றம் மட்டுமே அங்கு நிகழ வேண்டியிருக்கிறது.

> கீழ்த்தரமான
> மனிதர் என்றோ,
> மேல் தரமான
> மனிதர் என்றோ
> யாரும் இல்லை.
> சக்தி உருமாற்றம்
> மட்டுமே அங்கு
> நிகழ வேண்டியிருக்கிறது.

ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகப் பாசாங்கு செய்யும் ஒரு மனிதர், ஒன்று, தம்முடைய காமத்தை வெளிப்படுத்தப் பயப்படுகிறார் அல்லது காமத்தை வெளிப்படுத்தியதற்காகக் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். அதனால் அவர், காமமுடன் இருப்பவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்று போதனைகள் செய்யத் தொடங்குகிறார்.

நீங்கள் கீழ்த்தரமானவர் என்று நினைக்கத் தொடங்கும் போதே, அந்த உணர்வோடு சண்டையிடத் தொடங்குகிறீர்கள். பிறகு அதை விட்டு வெளியே வருவதென்பது கடினமாகி விடுகிறது. அதை விட்டு வெளியே வருவது ஒன்றே உருமாற்றம் நிகழ்வதற்கான ஒரே வழி. ஆனால் இப்போது அந்தப் பாதையும் தடைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம், எதை edிர்த்தாலும் சரி, அது நிலையாக நிலைகொண்டு விடுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் விழிப்புணர்வை உள்ளேகொண்டு வந்து, உருமாற்றம் நிகழ அனுமதிக்க வேண்டியது மட்டுமே; புரிந்துகொள்ளுதலையும் விழிப்புணர்வையும் பெறுவது மட்டுமே! அதற்குப் பிறகு அடிப்படை சக்தியான ‘காமம்’ உயர்ந்த ‘அன்பு’ என்னும் சக்தியாக உருமாற்றம் பெறும். அது ஒரு ரஸவாத செயல்முறை. ரஸவாதம் என்பதே ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவதுதான். அதைப்போலவே, கீழ் நிலையான காம உணர்ச்சியை உயர்ந்த அன்புணர்வாக மாற்றும் திறனே ரஸவாதம்.

ரஸவாதம்தில் முதல் படியாக அசுத்தங்கள் உலோகத்திலிருந்து நீக்கப்படுகின்றன. அதனுடன் ஏதோ ஒன்று சேர்க்கப்படுகிறது. முடிவில் அடிப்படையான தாழ்ந்த உலோகத்தில் உருமாற்ற செயல்முறை நிகழ்ந்து, அது உயர்ந்த உலோகமாக மாறுகிறது.

முதலில் காமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட வேண்டும். நாம் எல்லோருமே காமம் உள்ளவர்கள்தான், அது மிருக உணர்ச்சி. மேலும் ஒரு விஷயம்: விலங்குகளாவது தூய்மையான காமம் கொள்கிறது. அவை உறவில் இருக்கும்போது, உலகையே மறந்து உறவில் மட்டுமே இருக்கும்.

ஆனால் நமக்கு நம்முடைய காமம்கூட சுத்தமானதாக இல்லை. அது, மீடியாக்கள் மூலம் நாம் பெற்ற எல்லாவகை கட்டுக்கடங்காத கற்பனைகளாலும் கவர்ச்சிகளாலும் மாசுபட்டு உள்ளது.

தொலைக்காட்சி, இன்டர்நெட், புத்தகங்கள் மூலம் பார்த்தவை மற்றும் படித்தவையால், நம்முடைய மூளை கற்பனையிலேயே வாழ்கிறது. நீங்கள் உறவில் இருக்கும்போதுகூட, கற்பனையில் இருந்துதான் உறவுகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் துணைவருடன் உறவாடுவதில்லை. உங்களுடைய மனத்தில் இருக்கிற உருவத்திற்கு மலிவாக கிடைத்த ஒரு பதில் ஆளாகத்தான் உங்கள் துணைவர் இருக்கிறார்.

உங்கள் காமம், ஆசையாலும் குற்ற உணர்ச்சியினாலும் மாசுபட்டு இருக்கிறது. நம் கடந்தகால கட்டுறு மனப்பாங்கு ஒன்று நம்முள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகச் செய்கிறது. அல்லது தொடர்ந்து அதிலேயே ஈடுபட வேண்டும் என்ற தீவிரமான ஆசையை ஏற்படுத்தி, அதில் அளவுக்கதிகமாக நம்மை ஈடுபட வைக்கிறது, இது மீண்டும் நம்மிடம் குற்ற உணர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகிறது. இது மீண்டும் நம்மை குற்றவாளியாக மட்டுமே உணரச் செய்கிறது. இந்த இடைவிடாத தள்ளுவதும், இழுப்பதுமான நச்சுச் சுழற்சியின் விளைவு : காமம் மாசுப்படுத்தப்பட்டு விடுகிறது.

நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்கள் கற்பனைகளைத் திருப்திபடுத்திய அந்தக் கணமே நீங்கள் குற்ற உணர்ச்சியினால் விழுங்கப்படுகிறீர்கள். அதனாலேயே காமம் உங்களைக் குற்றவாளியாக உணரச் செய்கிறது.

நீங்கள் குழந்தையாக இருக்கும்
போதே, முதலில் உங்கள் குடும்பமும்,
சமுதாயமும்தான் உங்களுக்குள் குற்ற
உணர்ச்சியை விதைக்கிறது. பிறகு
நீங்கள் உங்களுக்குள் குற்ற உணர்ச்சியை
உண்டாக்கிக்கொள்ளும் கலையில் தேர்ந்து
விடுகிறீர்கள்!

> ரஸவாதம் என்பதே
> ஒரு தாழ்ந்த
> உலோகத்தை
> உயர்ந்த உலோகமாக
> மாற்றுவதுதான்.
> அதைப்போலவே,
> கீழ் நிலையான
> காம உணர்ச்சியை
> உயர்ந்த அன்புணர்வாக
> மாற்றும் திறனே ரஸவாதம்.

புரிந்துகொள்ளுங்கள், யார் உங்களைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்று
எண்ணுகிறார்களோ, அவர்கள் முதலில்
உங்களுக்குள் குற்ற உணர்ச்சியைத்தான்
ஏற்படுத்துவார்கள்.

யார் உங்களைக்
கட்டுப்படுத்த வேண்டும்
என்று எண்ணுகிறார்களோ,
அவர்கள் முதலில்
உங்களுக்குள்
குற்ற உணர்ச்சியைத்தான்
ஏற்படுத்துவார்கள்.

நீங்கள் ஏதோ வகையில் தாழ்வானவர்தான் என்று உங்களை உணர வைக்கிறார்கள். அதற்குப் பிறகு, தானாகவே அவர்கள் சொல்வதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். மனிதனுக்குக் குற்ற உணர்ச்சியின் மூலம்தான் மற்றவர்களைக் கட்டுப்படுத்தத் தெரியும். விதிகள் குழந்தைகளுக்குத்தான் நல்லது. ஆரம்பத்தில் சில கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் வளர்ந்த பின், அவரவர் சொந்த புத்திசாலித்தனத்தின் வழிகாட்டுதலின்படி செல்ல வேண்டியது முக்கியம்.

ஆசையைத் திருப்திப்படுத்தும்போது, நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள்ளாகி, நச்சுச் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறீர்கள்.

அதனால்தான் நீங்கள் உங்களுடைய ஆசைகளுக்குள் ஆழமாகச் சென்று, அவற்றைத் திருப்தி செய்து அதிலிருந்து விடுதலை அடையாமல், மேலும் மேலும் அதிகமான ஏக்கத்துடன் திரும்புவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதனுள் ஆழமாக சென்றீர்களானால், அதிலிருந்து திரும்பும்போது நீங்கள் மலர்ந்து இருப்பீர்கள்!

முன் காலங்களில், மக்களால் தங்களின் நாற்பதாவது வயதில் காமத்தைவிட முடிந்தது. அவர்கள் மனத்தில் அப்போது இப்படிப்பட்ட சிக்கலான காமக் கற்பனைகள் இல்லை. அவர்கள் தங்களின் கணவன் அல்லது மனைவியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் காமத்திற்குள் ஆழமாகச் சென்று, அதிலிருந்து வெளியில் வந்துவிடக்கூடியவர்களாக இருந்தார்கள். காமம் அவர்களிடமிருந்து உதிர்ந்துவிடும், விலகிவிடும். அவர்கள் அதனை விலக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்திய திருமணங்களில், புரோகிதர்கள் திருமண தம்பதியினரைச் சொல்லச் சொல்கிற ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், ‘திருமணமாகிய பதினோராவது வருடம், மனைவி ஒரு தாயாக மாறட்டும், கணவன் ஒரு மகனாக மாறட்டும்’ என்பது.

Hands of a bride and groom during a marriage ceremony

இது மிகவும் வேடிக்கையாகத்
தெரியும். எப்படி மனைவி
கணவனுக்குத் தாயாக முடியும்?
இதன் பொருள் என்னவென்றால்
உறவு நிலை இறுதியான
பூர்ணத்துவத்தை அடையட்டும்
என்பதே!

பெண்ணின் முழுமையான பூர்ணத்துவம் என்பது அவளுக்குள் படைக்கும் சக்தியாக இருக்கிற தாய்மைத்தன்மையை வெளிப்படுத்துவதே! ஆணின் முழுமையான பூர்ணத்துவம் என்பது அவர் மீண்டும் குழந்தையின் கபடமற்ற தன்மைக்குத் திரும்புவதே!

அதனால் பதினோராவது வருடத்தில், அவர்களுடைய உறவு நிலை அந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்து, கணவன் மனைவி இருவரும் முழுமையான பூர்ணத்துவத்தை அடையட்டும் என்பதே, அந்த ஸ்லோகத்தின் கருத்து.

முதலில் காமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டாக வேண்டும். ரஸவாதத்தில் எப்படி மூல உலோகத்திலிருந்து அழுக்குகள் நீக்கப்படுகிறதோ அதேபோலதான்.

பின்னர் நட்புத் தன்மை என்கிற மூலப்பொருள் சேர்க்கப்பட வேண்டியிருக்கிறது; அது ஆழ்ந்த நட்பாக, இருப்புத் தன்மை அளவில் அமைந்த உறவாக இருக்க வேண்டும், மேலோட்டமான உடல் மன ரீதியான உறவாக அல்ல.

ஆசைகளுக்குள்
ஆழமாக
சென்றீர்களானால்,
அதிலிருந்து
திரும்பும்போது
நீங்கள்
மலர்ந்து இருப்பீர்கள்!

ஒருவருடன் உங்களுக்கு ஆழமான
தொடர்பு இருப்பதாக உணரும்போது,
அந்த நபருடன் உங்களுக்கு
உடலளவிலான நேரடியான தொடர்பு
இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவருடன் இணைந்திருப்பதாக உணரும்
வெறும் உணர்வே உங்களுக்குச்
சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும்.
இந்த உணர்வு ரீதியான தொடர்பு, பிரிவாலோ
அல்லது மற்ற எந்தக் காரணங்களாலோ
துண்டப்படுவதில்லை.

காமம், அன்பாக மாறுவதற்கான இறுதி உருமாற்றத்தின்போது, அந்த உறவு பொறுமை மற்றும் விடாமுயற்சி என்கிற செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் இன்னொரு விஷயத்திற்காகவும் பெறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது; அது, உங்கள் வாழ்க்கைத் துணையின் ஒப்புதல்! நீங்கள் சென்று கொண்டிருக்கிற இந்த உருமாற்ற செயல்முறையை உங்களுடைய வாழ்க்கைத் துணைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய ஒப்புதலுக்காக நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

> காமம்,
> அன்பாக மாறுவதற்கான
> இறுதி
> உருமாற்றத்தின்போது,
> அந்த உறவு
> பொறுமை மற்றும்
> விடாமுயற்சி என்கிற
> செயல்முறையைக் கடக்க
> வேண்டியிருக்கிறது.

இது உண்மையான மாற்றம்தான்,
மேலோட்டமான தற்காலிக மாற்றம்
அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு,
அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும்.
அதற்குப் பிறகு அவர்களும் தாங்களாகவே
உருமாற்றம் அடைவார்கள். உங்கள்
உருமாற்ற சக்தி நிச்சயமாக அவரையும்
தொடும்.

இங்கே கிருஷ்ணர், காமமும், கோபமும்
பேரார்வ உணர்ச்சிகளிலிருந்து பிறந்தவை
என்றார். கோபம் என்கிற உணர்ச்சியும்
காமத்திலிருந்து பிறந்ததுதான்.

மற்றவர் உங்கள் காமத்தை வேண்டாமென்று ஒதுக்கும்போது, அது அவர் மேல் கோபமாக மாறுகிறது.

கோபம் ஒரு அபரிமிதமான சக்தி. அதை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நாம் அதைப் புரிந்துகொள்ளவும் இல்லை; மதிக்கவும் இல்லை.

பேராசை, கோபம், காமம் எல்லாமே ரஜோ குணங்கள்தான். அவை காமத்திலிருந்தும், ஆக்கிரமிப்பு மனப்பான்மையிலிருந்தும் எழுகின்றன. அவை அடைபட்ட மூலாதார சக்ரத்திலிருந்து வருகிறது.

இவை எல்லாம் இயற்கையான உணர்ச்சிகள், நம் விலங்கின மூதாதையரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டவை. மூலாதார சக்ரம் மிருகத்திற்கும் மனிதனுக்கும் ஒன்றே; அது விலங்கினத்தின் சக்தி

மையங்களிலேயே உயர்ந்த சக்தி மையம்,
மனிதனின் சக்தி மையங்களிலேயே தாழ்ந்த
சக்தி மையம்.

இந்த அடிப்படை உணர்ச்சிகளைத்
திருப்திப்படுத்தும் செயலானது, அந்த
மனிதரைப் புலன்களுடனும் இயல்புணர்ச்சி
களுடனும் பந்தப்படுத்துகிறது. அதனால்தான்
கிருஷ்ணர், பாவத்திற்கு அடிப்படை
காரணமாக இவற்றைக் குறிப்பிட்டுக்
காட்டுகிறார்.

மனிதன் இயற்கையாகவே அமைந்துள்ள
விழிப்புணர்வின் மூலம் இந்த இயல்புணர்ச்சி
களைக் கடந்து மேலே உயர்கிறான்.

மனிதனின் வாழ்க்கை என்பது, வெறுமனே வாழ்வதற்கு மட்டும் அல்ல; தமது உயர்ந்த விழிப்புணர்வை உணர்த்துவதற்காகவே!

ஆத்ம ஞானம் அடையும் பாதையில் தடையாய் இருக்கும் அனைத்துமே பாவங்கள்தான்.

## இருமைத் தன்மையிலிருந்து விடுபடுங்கள்

கேள்வி : ஸ்வாமிஜி! எங்களுடைய இயல்பான ஆசை உணர்ச்சிகளை அடக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இத்தகைய உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்துவது சரியா?

எதை நீங்கள் சரியான பாதை என்று நினைக்கிறீர்களோ அதைத் தேர்ந்தெடுப்பதா அல்லது எதை நீங்கள் தவறான பாதை என்று உணர்கிறீர்களோ அதைத் தேர்ந்தெடுப்பதா என்று நீங்கள் இந்த இரண்டு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும்போது, இந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. செல்வம், பெயர், புகழ், பொருள்சார்ந்தவை எதுவானாலும் சரி இதற்காக முயற்சி செய்வது ஆன்மீகம் அல்ல என்ற கட்டுறு மனப்பாங்கில் பலர் இருக்கிறார்கள்.

ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமானால், அவர் பொருள் சம்பந்தப்பட்டவற்றை விட்டுவிட வேண்டும் என்கிற தவறான கருத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பொருள்சார்ந்த பாதையை விட்டு விட்டு, ஆன்மீகத் தேடல் என்று நீங்கள் நினைக்கும் பாதைக்குச் செல்லும்போது, எதையெல்லாம் துறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவை புதுப்பிக்கப்பட்ட தீவிரத்துடன் உங்கள் முன் வருவதைத் தவிர்க்க முடியாது. அப்போது இந்தக் கேள்வி எழுகிறது, ‘நான் அடக்க வேண்டுமா அல்லது அனுமதிக்க வேண்டுமா’.

இந்தப் பாதையில் செல்லும்போது, நீங்கள் இந்தப் பாதையா அல்லது அந்தப் பாதையா என்று தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும்போது, வெளிப்படையான இருமைகளை நீங்கள் மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. நல்லது கெட்டது, சரி தவறு, பற்று வெறுப்பு, அடக்குதல் திருப்திப்படுத்துதல் என்பவை இரட்டைகள். உண்மையில், உங்கள் இருப்புத் தன்மை எப்போதும் இந்த எதிரெதிரான இருமைகளின் முரண்பாடுகளால் ஒருவித இரைச்சலுடனேயே இருக்கிறது.

எப்போதெல்லாம் இருமைத் தன்மை உங்களுக்குள் தானாக உறுதியுடன் எழுகிறதோ, அப்போது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செயல்முறை விதியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை இரட்டை தன்மை அற்றது. இருப்பு நிலையில் எதிர் எதிரானவை என்று எதுவும் இல்லை. அடக்குதல் அல்லது திருப்திப்படுத்துதல் இவற்றைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது அறியாமையே.

கோபத்தை அடையாளம் காணுங்கள், பொறாமையைப் புரிந்துகொள்ளுங்கள், காமம், பேராசை இவற்றை விழிப்போடு பாருங்கள். அவை என்ன என்று தெரிந்துகொள்ள மட்டும் முயற்சி செய்யுங்கள்.

அடக்குதல் என்பது வேறு ஒன்றும் இல்லை. திருப்திப்படுத்துதலின் எதிர்ச்செயல்தான். நம் இயல்பான குணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.

கோபத்தை அடையாளம் காணுங்கள், பொறாமையைப் புரிந்துகொள்ளுங்கள், காமம், பேராசை இவற்றை விழிப்போடு பாருங்கள். அவற்றை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். அவற்றை அடக்கவும் செய்யாதீர்கள். அவை என்ன என்று தெரிந்துகொள்ள மட்டும் முயற்சி செய்யுங்கள். அதனை விட்டு விலகி நில்லுங்கள், உங்கள் உணர்ச்சிகளை வேறு மனிதர்களைப்போல பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் உங்கள் ஆதரவு இல்லாமல் அவை இயங்க முடியாது என்பதைக் கண்டுகொள்வீர்கள். அவை உங்களை விட்டு விலகிவிடும்! மற்றவரின் அனுபவமாக மட்டுமே இது இருக்கும்போது, உங்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இந்த உண்மையை நீங்களே உணரத் தொடங்கி விடுவீர்கள். இந்த விழிப்புணர்வுதான் மெய்ஞானத்தை விழிப்பிக்கும். அப்போது திருப்திப்படுத்துதல் அல்லது அடக்குதல் என்ற கருத்திலிருந்தும் மற்ற இருமைத் தன்மைகளிலிருந்தும் நீங்கள் விடுபட்டு விடுவீர்கள்!

Hands playing flute illustration