KAILASA Library/பகவத்‌கீதை/புலன்களைக் கட்டுப்படுத்துதல் என்பது அவசியமாகிறதுSign in
பகவத்‌கீதை

புலன்களைக் கட்டுப்படுத்துதல் என்பது அவசியமாகிறது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing the flute

நெருப்பு, புகையால் மறைக்கப்படுவதுபோல், கண்ணாடி,
தூசுகளால் மறைக்கப்படுவதுபோல், கரு, பனிக்குடத்தால்
(கருப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிரினங்கள்,
காமத்தால் மறைக்கப்படுகின்றன.

ஓ குந்திமைந்தனே! நெருப்பைப்போல் எரிந்து கொண்டிருக்கும்
ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத காமம் என்கிற வடிவம்
கொண்ட இந்த அழிவற்ற எதிரியால், அறிபவருடைய ஞானம்
மறைக்கப்பட்டுள்ளது.

புலன்கள், மனம், புத்தி இவையே காமத்தின் இருப்பிடங்கள்.
அவை உள்ளே உள்ள இருப்புத் தன்மையைக் குழப்பி ஞானத்தை
மறைக்கிறது.

பரத வம்சவழிவந்தவர்களின் தலைவனே! அதனால்
ஆரம்பத்திலேயே, பாவத்தின் அடையாளமாகிய புலன்களை

அடக்கி அதற்குக்க கடிவாளம் இடு. பாவம் நிச்சயமாக ஞானத்தையும் விழிப்புணர்வையும் அழிக்கிறது.

புலன்கள் உடலைவிட உயர்ந்தது என்று சொல்கிறார்கள். மனம் புலன்களைவிட உயர்ந்தது. புத்தி மனத்தைவிட உயர்ந்தது. விழிப்புணர்வு புத்தியைவிட உயர்ந்தது.

மனம் மற்றும் புத்தியைக் காட்டிலும் ஆத்மாவே உயர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, திரண்ட தோள்களை கொண்டவனே, மனநிறைவு பெறாத எதிரியான காமத்தை வெற்றிகொள்.

நிகழ்கால வாழ்வே மூலாதார பூட்டைத் திறக்கும் சாவி

நெருப்பு புகையால் மறைக்கப்படும்போது, உங்களால் நெருப்பைத் தெளிவாகப் பார்க்க முடியாததைப்போல், கண்ணாடியின் மேல் தூசு இருந்தால், அதில் பிரதிபலிக்கும் பிரதிபிம்பத்தை உங்களால் சரியாகப் பார்க்க முடியாததைப்போல், கருப்பைக்குள் உள்ள கருவானது பனிக்குடத்தால் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் அந்தக் கருவைப் பார்க்க முடியாததைப்போல், நாம் கீழ் உணர்ச்சிகளான காமம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய உண்மை இயல்பான ஆனந்தத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.

மிகச்சிறந்த மெய்ஞானியான ஆதி சங்கராச்சாரியார் பஜகோவிந்தம் என்னும் நூலில், மிக அழகாகச் சொல்கிறார்: "பெண்ணின் ஸ்தனங்களையும் தொப்புளையும் பார்த்து உணர்ச்சி வயப்படாதீர்கள். காமத்தின் வயப்படாதீர்கள். இவை எல்லாம் சதைப்பிண்டங்கள்தான், காலத்தால் அழியக்கூடியவை என்பதை மீண்டும் மீண்டும் நினையுங்கள்."

காமம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய உண்மை இயல்பான ஆனந்தத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.

காமம், உயிரினங்களுடைய வாழ்க்கைத் தொடர்ச்சியோடு, அவற்றின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. உயிரினங்களின் வாழ்க்கை தொடர்வதற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காமம் இல்லையென்றால், ஆண்

  • பெண் கவர்ச்சி இருக்காது. உயிரினங்கள் பெருகாது. மனித இனம் தழைக்க முடியாது.

> இந்த மூலாதார சக்ரம்
> சக்தியூட்டப்பட்டும்,
> தடைபடாமலும்
> இருந்தால்,
> உண்மையில் நாம்
> புத்திசாலித்தனத்துடன்
> வாழக்
> கற்றுக்கொள்வோம்.

தொடர்ந்து வாழ வேண்டும் என்கிற இந்த அடிப்படையான உந்துதல் உணர்ச்சி, நம் அடிப்படை சக்தீ மையமான மூலாதார சக்ரத்தில் நிலை கொண்டிருக்கிறது. காமம், கோபம் மற்றும் பேராசை போன்ற தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா இயல்புணர்ச்சிகளும் மூலாதார சக்ரத்திலிருந்து எழுகின்றன. நம்முடைய எண்பது சதவீத ஆன்மீக சக்தீ இந்த மையத்திலேயே அடைப்பட்டிருக்கிறது. இந்த மூலாதாரமையம் தடைபடும்போது, நாம் தாழ்வான இயல்புணர்ச்சியால் தூண்டப்பட்டு மிருகம்போல் செயல்படுகிறோம்.

மிருகங்களின் விஷயத்தில் அவற்றின் உயர்ந்த மையமே மூலாதார சக்ரம்தான். ஏறத்தாழ எல்லா விலங்குகளும், சில வீட்டுப் பிராணிகளைத் தவிர, மற்றவை உச்சகட்ட சக்தியுடன் இந்த மையத்தை அடைகின்றன.

ஆனால் மனிதனுக்கு இந்தச் சக்ரம் ஆரம்ப நிலை மையமாக இருக்கிறது. இந்த மூலாதார சக்ரம் சக்தியூட்டப்பட்டும், தடைபடாமலும் உச்சகட்ட சக்தி வெளிபடுத்தப்பட்டும் இருந்தால், உண்மையில் நாம் எப்படி வாழ வேண்டுமோ, அந்த முறையில், புத்திசாலித்தனத்துடன் வாழ கற்றுக்கொள்வோம்.

ஒரு நபர் உடல் ரீதியாகவும் காம ரீதியாகவும் முதிர்ச்சி பெறும் அந்த இளமைப் பருவத்தை அடையும்போது, மூலாதார சக்தீ மையத்தில் எழும் காம உணர்ச்சியின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.

அதனால் ஒருவர் உடல் முதிர்ச்சி அடையும் முன்பே, 12 வயதிற்குள் ஆன்மீக விழிப்புணர்வை அடைவது தேவைப்படுகிறது. அப்போதுதான் அந்தச் சக்தி கீழ்நோக்கிப் பாய்ந்து வழக்கமான காமக் கற்பனைகளை வளர்க்காமல், மேல்நோக்கி உச்சந்தலை சக்தி மையமான ஸஹஸ்ரார சக்ரத்திற்குப் பாய முடியும்.

Clouds over a landscape

மூலாதார சக்ரம் கட்டுப்பாடற்ற
கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும்
இருப்பிடமாக இருக்கிறது.
முக்கியமாகக் காமக் கனவுகளுக்கு
இருப்பிடமாக இருக்கிறது.
இந்தக் கனவுகளைத்தான்
கிருஷ்ணர் கண்ணாடியின்
மேல் உள்ள தூசுகள் என்கிறார்.
அவை மேகத்தைப்போல் நம்
தீர்மானங்களை முழுவதுமாக
மறைத்து விடுகின்றன.

நாம் இத்தகைய கற்பனைகளை அடிப்படையாகக்கொண்டு, நம் மனத்தில் செதுக்கி வைத்திருக்கிற மாதிரி உருவங்களைக்கொண்டுதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு மாறாக அந்தக் கற்பனைகளைத் திருப்தி செய்வதை நோக்கியே உங்கள் வாழ்க்கையை விரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்திய புராணக் கதையில், வானுலகில் இருந்து மேனகா என்ற கந்தர்வ பெண் கீழே இறங்கி வந்து மாபெரும் முனிவர் விச்வாமித்திரரின் தவத்தைக் கலைத்தாள் என்று சொல்லப்படுகிறது.

இதன் உருவகமான விளக்கம் என்னவென்றால், விச்வாமித்திரர் பெரிய முனிவராக இருந்தாலும் அவரின் மூலாதாரம் பூட்டப்பட்டு இருந்தது. அதனால் அது காமக் கற்பனைகள் எழுவதற்குக் காரணமாக இருந்தது. என்பதே அதன் பொருள். அவ்வளவுதான்.

நிகழ்கால விழிப்புணர்வே
மூலாதார பூட்டைத்
திறக்கும் சாவி.
அதுவே காமத்தைக்
கரைத்துவிடும்.

தேவலோகப் பெண்கள் கீழே இறங்கி வந்து தவம் செய்யும் முனிவர்களின் தவத்தைக் கலைப்பார்கள் என்பது உண்மையானால் என்னவாகும்? ஆயிரக்கணக்கானவர்கள், இங்கிருக்கும் எல்லோரையும் சேர்த்துத்தான், தவம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். அப்போதுதானே மேனகாவைச் சந்திக்க முடியும்!

நிகழ்கால விழிப்புணர்வே மூலாதார பூட்டைத் திறக்கும் சாவி. அதுவே

காமத்தைக் கரைத்துவிடும். நிகழ்கால
விழிப்புணர்வு உங்களை நிஜத்தில் இருக்க
வைக்கிறது. அப்போது உங்கள் கவர்ச்சிகள்
கரைக்கப்படுகின்றன.

சிவ சூத்திரத்தில் சிவன் தேவியிடம்
சொல்கிறார் "திருமணத்தில் நான்கு பேர்கள்
இணைந்து இருக்கிறார்கள்." அதைக் கேட்ட
தேவி அதிர்ச்சி அடைந்தார். "அங்கே கணவன்
மனைவி இருவர்தானே உள்ளார்கள். நான்கு
பேர் எப்படி?" என்று கேட்டார்.

சிவன் விளக்கமளித்தார் : "அங்கே கணவர், மனைவி, கணவரின் கற்பனை மனைவி, மனைவியின் கற்பனை கணவர் என்று நான்கு பேர் இருக்கிறார்கள்."

திருமண வாழ்க்கையில் நான்கு பேர் இருந்தால், அது கூத்தாகதான் இருக்கும். உண்மையான அன்பு பரிமாற்றமாக இருக்காது. விழிப்புணர்வு உள்ளே வந்தால், அதற்கு முன் கட்டுக் கடங்காத கற்பனைகள் மறைந்தே ஆக வேண்டும்.

உங்களை, நீங்களே நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து கொண்டீர்களானால், கடந்தகாலக் கனவுகளும், கற்பனைகளும் மறைந்துவிடும். அவை யாவும் நடந்து முடிந்தவை, அவற்றிற்கு இனிமேலும் மதிப்பு இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களும் யூகங்களும் மறைந்து விடுகின்றன. அவை நடக்கவும் இல்லை; அவை உண்மையும் இல்லை. நிகழ்கால ஸத்யத்திற்கு நீங்கள் வெளிப்படுத்தப்படுகிறீர்கள்.

நிகழ்கால நிலையில்தான் காமம் அன்பாக உருமாற்றம் பெற முடியும்.

இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜூனுடனான உரையாடலை, இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறார், "உனக்கு உயர்ந்த புத்திசாலித்தனம் உண்டு என்பதை உணர்ந்துகொள். உன் புத்தியைப் பயன்படுத்தி புலன்களை அடக்கி, விழிப்புணர்விற்குப் போகிற பாதையில் உன்னுடைய ஆபத்தான எதிரியாக இருக்கும் காமத்திற்குக் கடிவாளமிடு."

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் அர்ஜூனனிடம், "அர்ஜூனா என்னிடம் வா, நான் உனக்கு உதவுகிறேன். காமத்தை உன்னுடைய உடல்

மனத்திலிருந்து கரைக்க நான் உதவுகிறேன்.
அதற்குப் பிறகு நீ அமைதியாக இருக்கலாம்!”
என்று சொல்லவில்லை.

காமம் என்பது இங்கு உடல் சார்ந்த ஆசைகளை மட்டுமல்லாமல், எல்லா ஆசைகளையும் வெளி உலகம் சார்ந்த ஆசைகளையும்கூடக் குறிக்கிறது.

அர்ஜுனன் அவர் மிகவும் குழப்படைந்திருப்பதாகச் சொல்லி இந்த அத்தியாயத்தின் உரையாடலை ஆரம்பிக்கிறார். முந்தைய அத்தியாயத்தில், செயல் மற்றும் செயலற்ற தன்மையைப் பற்றிக் கிருஷ்ணர் பேசும்போது, அர்ஜுனன் கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்டுக் குழப்பமடைந்தார். அப்போது கிருஷ்ணர், ‘உடல் அழியக்கூடியது. ஆனால் ஆத்மா என்றும் வாழக்கூடியது, அதனால் அர்ஜுனன் தம்முடைய உறவினர்களையும், தம்முடைய பெரியோர்களையும் கொல்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்! மேலும் அர்ஜுனன் எதைச் செய்ய வேண்டுமோ அதை, அதன் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.

அர்ஜுனன் உச்சக்கட்ட குழப்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அதனால் அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு, “நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,” என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறார். நோக்கமற்ற வாழ்க்கையை வாழும்படியும், இறுதி இலக்கின் மேல் மனம் கொண்டிருக்கும் வெறியிலிருந்து விடுபடும்படியும், செயல்களினால் விளையும் பலன்களின் மேல் இருக்கும் பற்றைவிடும்வடியும் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்.

“செயல் செய்வது நம் இயல்பு, செயலற்று இருப்பது நம்முடைய இயல்பு அல்ல. செயல்களைச் செய், ஆனால் செயலின் விளைவை எனக்கு அர்ப்பணித்து விடு,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். இப்போது கிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். “உன் புலன்களை அடக்கு, விழிப்போடு இரு, நிகழ்காலத்தில் இரு, காமத்தை விட்டு விடு.”

காமம் என்பது இங்கு உடல் சார்ந்த ஆசைகளை மட்டுமல்லாமல், எல்லா ஆசைகளையும் வெளி உலகம் சார்ந்த ஆசைகளையும்கூடக் குறிக்கிறது. நம்முடைய தனித் தன்மை உணர்வும், எதையும் தன்னுடையமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வும்தான் நம்மைப் பொருட்களைத் தேடி அடையும்படியும், அதை அனுபவிக்கும்படியும் விரட்டிக் கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், நாம் ஒன்றைத் தேடி அடையும்போது, அது மேலும் மேலும் பொருட்களை டைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசைக்குத்தான் அழைத்து செல்கிறதே தவிர, சந்தோஷத்திற்கோ, பூர்ணத்துவத்திற்கோ நம்மை அழைத்துச் செல்வதில்லை.

ஆனந்தமாக இருக்க வேண்டுமானால், நம் உள் உலகத்தைத் தூய்மையாகவும் காலியாகவும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆனந்தம் அந்த இடத்தை நிரப்பமுடியும்; வெளி உலகமும் நிரப்பப்படமுடியும்; அது ஒரு முரண்பட்ட விஷயமே இல்லை. பொருள் சார்ந்த வெளி உலகம் பற்றுக்களால் நிரப்பப்படாதவரை உள் உலகம் வெற்றிடமாகவே இருக்கும்.

இது நிகழ வேண்டுமானால், புலன்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அவற்றை அடக்க முடியாது. அடக்கி வைக்கப்படும் எதுவானாலும் அவை வெடிப்பதற்கான தருணத்திற்காகக் காத்திருக்கும். மனம், புலன்கள் இவற்றை அழுத்தி வைக்க முடியாது. ஆனால் அவற்றை உருமாற்றம் பெறச் செய்ய முடியும்.

வாழ்க்கைக்கு நோக்கமில்லை என்பதையும் வாழ்க்கையின் அர்த்தமே அதன் பாதையை, பயணத்தை உற்சாகமாக வாழ்வதே என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது, இறுதி விளைவில், இறுதி பலனில் உள்ள பற்றை விட்டுவிடக் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய எதிர்பார்ப்புகளை நாம் விட்டு விடுவோம். நாம் நிகழ்காலத்திற்குள் நுழைந்து விடுவோம். நாம் விழிப்புணர்வுள்ளவர்களாக ஆகி விடுகிறோம்.

கர்மயோகத்தின் முழுச் சாரம் இதுவே.
இலக்கின் மேல் கொண்ட பற்றை விட்டு
சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள்.
ஆனந்த வாழ்வு வாழுங்கள். நீங்கள் மிக
மஹோன்னதமானதை அடைவீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நீ
மஹோன்னதமானதை அடைவாய்,
நிலையான விழிப்புணர்வு நிலையை, நீ
எல்லையில்லா ஆனந்த நிலையை நித்யானந்த
நிலையை அடைவாய்.”

> மனம், புலன்கள்
> இவற்றை
> அழுத்திவைக்க
> முடியாது.
> ஆனால் அவற்றை
> உருமாற்றம்
> பெறச்செய்ய முடியும்.

அதனால் மேலான தெய்வீகத்திடம், பரப்ரம்ஹ கிருஷ்ணரிடம் அவருடைய செய்தியைப் புரிந்துகொள்ள உதவுமாறு, அவரை நாம் ஆன்மாவிற்குள் உள்வாங்கிக்கொள்ள உதவுமாறு வேண்டிக்கொள்வோம். அவர் நமக்கு வழி காட்டட்டும். நாம் நித்யானந்த உணர்வை உணர அவர் நமக்கு உதவட்டும்.

அன்பு-கொடுக்கல் வாங்கல் அல்ல

கேள்வி : ஸ்வாமிஜி! நீங்கள் முழுமையாக அன்பு செலுத்தச் சொல்கிறீர்கள். அந்த அன்பு மதிக்கப்படாமலோ, திரும்ப செலுத்தப்படாமலோ இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் உண்மையான அன்பில் இருந்தால், இயல்பாகவே உங்களுடைய எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, பதிலுக்கு எதையும் கேட்கமாட்டீர்கள்.

அன்பு, நிபந்தனையற்ற வெளிபொங்கும் தன்மை கொண்டது. உண்மையான அன்பில், உங்களுடைய அன்பிற்கு அந்த நபர் தகுதியானவர்தானா என்று உங்களை நீங்களே கேட்பதற்குக்கூட நிற்க மாட்டீர்கள். உண்மையில், அங்கே தகுதியைப் பற்றிய எந்தக் கேள்விக்கும் இடமில்லை. அன்பு என்பதே பரிசுதான்.

அடுத்த நபரின் மதிப்பை அளந்து அதற்குச் சமமான, சரியான அளவு அன்பைப் பதிலுக்குக் கொடுத்தீர்களானால், அது வெறுமனே கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒரு ஒப்பந்தமாகத்தான் இருக்க முடியும். அது ஒரு வியாபாரமாகத்தான் இருக்கும்; அன்பாக இருக்க முடியாது. உண்மை அன்பில் "நான் முழுமையான அன்பைக் கொடுக்க வேண்டுமா?" என்ற இந்தக் கேள்வி எழுவதற்கான சாத்தியமே இல்லை!

நீங்கள்
உண்மையான அன்பில்
இருந்தால்,
இயல்பாகவே
உங்களுடைய
எல்லாவற்றையும்
கொடுத்துவிட்டு,
பதிலுக்கு எதையும்
கேட்கமாட்டீர்கள்.

இப்போது உங்கள் அன்பு காட்டுதல்
பாராட்டப்பட்டு விட்டதாக
வைத்துக்கொள்ளுங்கள். சொல்லுங்கள்,
நீங்கள் அன்பைச் செலுத்தியதற்கான
நோக்கம் என்ன? அன்பு என்பது ஒரு
நிகழ்ச்சியா அல்லது அது ஒரு செயற்கரிய
செயலா, அதற்காக நீங்கள் பாராட்டப்பட
வேண்டுமா? நீங்கள் அன்பைச் செலுத்துவதே
போதுமானது. வேறு ஒரு பரிசை எதிர்பார்க்க

வேண்டிய அவசியம் இங்கு எங்கிருந்து வந்தது?

பதில் அன்பைக் கேட்பதன் மூலம், உங்கள் காதலர் மேல் ஒரு விதமான அடக்குமுறையைச் செலுத்த விரும்புகிறீர்கள். உங்களிடம் பதிலுக்கு அன்பு செலுத்தாமல் இருக்க விரும்புகிற அவருடைய சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.

இதுவும் ஒரு வகையான
உரிமைகொள்ளுதல்தான். அவரை உங்களின்
எதிர்பார்ப்பு என்னும் சிறைக்குள் அடைத்து
வைக்கிறீர்கள்.

> சிறைப்பட்ட நிலையில்
> அன்பு என்பது
> ஒருபோதும் மலராது.

நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்கிற ஒரு கருத்து: சிறைப்பட்ட நிலையில் அன்பு என்பது ஒருபோதும் மலராது.

கவனமாகக் கேளுங்கள், இரண்டு வகை அன்பு இருக்கிறது. ஒன்று அன்பின் அளவைக் குறிப்பது, மற்றொன்று அன்பின் தன்மையைக் குறிப்பது.

அளவை வைத்துப் பார்க்கும்போது, அன்பு சுயநலம் கொண்டதாய், சின்ன சின்ன பரிமாற்றங்கள் கொண்டதாய் இருக்கும். பெரும்பாலான மக்கள், தங்கள் வாழ்க்கையை இதைப்போல்தான் அமைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம், இறுக்கக் கட்டப்பட்ட அன்பு என்கிற பார்சலைக் கொடுக்கிறீர்கள், அதோடு விட்டுவிடாமல், அவரும் சரியாக அதே அளவு பார்சலை உங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் தம்முடைய பார்சலை வேறு ஒருவருக்குக் கொடுக்க நினைத்தாலோ அல்லது அதைத் திறந்து, அன்பைச் சுற்றிலும் பரவச் செய்தால்கூட உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, கோபம்கொள்கிறீர்கள்.

நீங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கல் என்னும் ஒரு பரிவர்த்தனை ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் உருவாக்கப்பட்டதுபோல் இருந்ததாக வேண்டும். வெகு சீக்கிரத்திலோ அல்லது சில காலம் கழித்தோ இந்த வகை ஒப்பந்தம் உங்களை ஒரு இறுக்கமான வலியிலும் எரிச்சலிலும் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது. உடனே கோபத்தில் உங்கள் பார்சலைத் திரும்ப பெற்றுக்கொண்டு, அதைக் கொடுக்க வேறு ஒருவரைத் தேடத் தொடங்குகிறீர்கள். இல்லையென்றால் உங்கள் துணைவர் அதைச் செய்கிறார்.

peacock feather decoration

வாழ்வின் ஜீவ நாடி

இப்போது மற்றொரு வகையான அன்பு, உங்களுடைய இருப்புத் தன்மையின் சிறப்புத் தன்மையாகவே அனுபவிக்கப்படும் அன்பு. இந்த வகையான அன்பு வெறுமனே ஒருவரின் அன்பு மற்றும் நன்றியுணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும், அது உயிரோட்டமான வாழ்தலுக்காக மட்டுமே இருக்கும்.

> அஹங்காரமற்ற
> நிலையில் மட்டுமே
> அன்பு
> உதிக்க முடியும்.
> இது சுலபமல்ல,
> ஆனால் நீங்கள்
> இதற்கான
> ஒரு தொடக்கத்திற்கு
> முயற்சி செய்யலாம்.

இதுவே மகிழ்ச்சியின் மணம். இது தன்னைச் சுற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி தன்னைத்தானே பரவச் செய்துகொள்கிறது. இதற்கு எந்த ஒரு பொருளும் தேவை இல்லை; இது பதில் பரிசுகளுக்காகக் காத்திருப்பதில்லை; இதற்குப் பதில் பரிசு தேவைப்படுவதும் இல்லை. இந்த வகையான அன்பு, சூரிய ஒளி அல்லது மழையைப் போன்று இருக்கிறது. இது தன்னை எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் முழுமையாகக் கொடுக்கும். அந்த வட்டத்திற்குள் யார் நின்றாலும் சரி, அவர்கள் அன்பின் கதகதப்பையும் புத்துணர்ச்சியையும் அனுபவிக்க முடியும். இதில் எந்தவித சந்தேகத்திற்கோ, கேள்விக்கோ இடமில்லை. இந்த அன்பு எப்போதும் மேன்மைப்படுத்துவதாகவே இருக்கிறது; இந்த வகை அன்பு மட்டுமே பயமோ அல்லது குற்ற உணர்வோ இல்லாததாக இருக்க முடியும்.

அன்பு உங்களுடைய பண்பாக, இயல்பாக, சிறப்புத் தன்மையாக மாற வேண்டுமானால், உங்களை நீங்களே முழுமையாக அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அஹங்காரமற்ற நிலையில் மட்டுமே இத்தகைய அன்பு உதிக்க முடியும். இது சுலபமல்ல, ஆனால் நீங்கள் இதற்கான ஒரு தொடக்கத்திற்கு முயற்சி செய்யலாம். அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலம் மட்டுமே, நீங்கள் உங்கள் அஹங்காரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விடத்தொடங்குகிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். கொஞ்சம் அன்பு உள்ளே வந்தால் போதும், கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரம் வெளியேற்றப்பட, வெளியேற்றப்பட, மேலும் மேலும் அதிக அளவு அன்பு அந்த இடத்திற்குள் நுழையும்.

உங்கள் உறவு நிலையில் இதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். அன்பு காட்டுவதில் நடிப்புத் தேவை இல்லை, உங்கள் அன்பில் நீங்கள் மிகத் தீவிரமாகவும் இருக்க வேண்டாம் - மனமார்ந்த நேர்மையுடன் இருங்கள், அது போதும்!

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
கர்மயோகோ நாம த்ரு'தீயோ'த்யாய: ||

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றியளவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்ம யோகம் எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம்.

Hands holding a flute

பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்கீதையின் பின்புலமாக இருக்கும் ஸத்யத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மஹரிஷி வேத விஜ்ஞான விச்வ வித்யாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்கீதையின் ஸ்லோகங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஸத்யங்களை அடிப்படையாகக்கொண்ட த்யான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. த்யானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

த்யானம் செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

த்யானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

த்யானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. மூளை செயல்பாட்டோடு இணைந்து ஒருமுகப்படும்பொழுது ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. மேலும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

த்யானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

7000 மக்கள் (ஆராய்ச்சியின்பொழுது உலக மக்கள் தொகையில் √1 சதவீதத்தின் அடுக்கு) இணைந்து கூட்டு த்யானம் செய்ததால், உலக அளவில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் பெருமளவில் குறைந்தன.

த்யானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், ‘பகவத்கீதை மிக உயர்ந்த ஸத்யத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது’ என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வேத நூலின் ஸத்யத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் சேவையை மிகுந்த நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்

  • வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை
  1. பரிபூரண ஞானம்.
  1. பரிபூரண வைராக்கியம்.
  1. பரிபூரண பலம்
  1. பரிபூரண கீர்த்தி
  1. பரிபூரண தேஜஸ்
  1. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேஷ்வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸுதேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன்: ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜனார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ருஷீகேசன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜூனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜூனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீடி: கிரீடம் தரித்தவர்
குடாகேசன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கெளந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்தன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

குரு வம்சம்

மாற்றாந்தாயின் பிள்ளைகள்

குரு வம்சம் - மாற்றாந்தாயின் பிள்ளைகள் வம்சாவளி வரைபடம்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜூனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசர் த்ருபதனின் மகன்
சி'கண்டி: சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர்
யுயுதாநன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போரவீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை'ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரர், பீமன், அர்ஜூனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரர்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜூனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்: ஜோதிடக் கலையில் வல்லவர்.

கெளரவர் சேனை: -

ஸஞ்ஜயன்:அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மர்:கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்:கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்:கெளரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்:பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்:துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்'ருபர்:கெளரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்:அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.)
ஸௌமாதத்தி:பகிாகர்களின் அரசர்
துச்'சாதனன்:கெளரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்:கதாயுத சண்டையில் வல்லவர், கெளரவ சகோதரர்களில் மூத்தவர்