KAILASA Library/பகவத்‌கீதை/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத்‌கீதை

அருஞ்சொற் பொருள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அக்நி- தீ
அங்குலீ-மால்- நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜந- கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.
அத்வைத- இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத'மும் கருதுகிறது.
அநாஹத- உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்
அப்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள்- ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸ- துன்புறுத்தாமை
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.
அஷ்டாங்கயோக- பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'- வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதார- அடிப்படை
ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆனந்த- நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரண- அணிகலன்
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்'ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தோஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத்- ஆசீர்வாதம்
ஆஹார- உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சா- ஆசை
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிகாளஸ- ராமாயணம், மஹாபாரதம்
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியா- செயல்
க்ரு'ஹஸ்த- கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்- தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மா- ஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்ப- வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி
கல்பநா- கற்பனை
கால- நேரம்
காண்டவ- மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜூனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்வீக வில்
குண்டலினி- மூலச் சக்கரமான ‘மூலாதாரத்தில்’ உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்பமேளா- பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். 3. உஜ்ஜை யில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள்- இடை யர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட

தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.

கோபுர - கோயில் கோபுரம்

கோயந் - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.

கோவிந்த பாத - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு.

கோச' - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.

  1. அன்னமய அல்லது உடல் அடுக்கு
  1. பிராணமய அல்லது பிராண அடுக்கு
  1. மனோமய அல்லது எண்ண அடுக்கு
  1. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
  1. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு

சக்ரம் - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்

சண்டாள - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.

சந்தந - சந்தனமரம்

சக்ஷு - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்

சித்த - மனம், மேலும் மனஸ், புத்தி

சித்ரகுப்த - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திராம்

சைதன்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி

டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்

த்ரி காலம், - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.

த்ரி கால ஜ்ஞானி - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்

தந்திரா - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்

தபஸ் - தீவிர ஆன்மீக முயற்சி.

தமஸ் - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற

குணம்
தீர்த-நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம
துரீய, ஸமாதி-சமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு’ஷ்டி-பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யான-ஆழ்ந்த சிந்தனை
தர்ச’ந்-காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம-நேர்மையான
தக்ஷிணாயன சூரியனின்-ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
தீ-விவேகம்
தீக்ஷை-தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷ-குறைபாடு
நசிகேத-கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜ-சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்-இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரைஸாக வரவேற்கும் முறை
நதி-ஆறு
நாக-பாம்பு
நாக ஸாது-ஆடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள்
நாடி-நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச’க்தி பாதை
நாரீ-பெண்மணி
நாந்த-முடிவில்லாத
நிதித்யாஸநா-வெளிப்படுத்தியவை
நிமித்த-காரணம்
நிமித்த தோஷ-காரணத்தை அடிப்படையாகக்

கொண்டகுறைபாடு

நியம - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.

நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது

நிஸர்கத்தமஹராஜ் - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்

ப்ரத்யாஹார - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.

ப்ராண - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்

ப்ராணாயாம - மூச்சை அடக்குவது

ப்ரு'த்வீ - பூமி சக்தி

பதஞ்ஜலி - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்

பரமஹம்ஸ - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்

பரமஹம்ஸ யோகாநந்த } - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.

பரிக்ரம - ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு

பரிவ்ராஜக - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)

Pல - Pல ச்'ருதி - பழம், இறை வழிபாட்டின் பலன்கள்

பாப - பாவம்

பிங்கள - இட,ஸுஷ்ும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை

பிரகாச'நந்த ஸரஸ்வதி } - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டவை. புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்

புத்ர - மகன்

புரோஹித் - அர்ச்சகர்

பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.

பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.

ப்ரம்ஹந் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்

ப்ரம்ஹம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரம்ஹமன்

ப்ரம்ஹசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்

ப்ரம்ஹசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்

பக்தர் - பக்தன்

பக்தி - உணர்வு வழிபாடு

பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி

பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்

பாவந - கற்பனை

பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி

பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.

புத்த - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு

புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

புத்து - முட்டாள்

மங்கல - நன்னிமித்தமான

மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு

மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸ்ஸோத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்- கோயில்
மநந- சிந்தித்தல், தியானம்
மநஸ்- மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹா- மிகப்பெரிய
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய ‘திருவாசகம்’ இயற்றியவர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயாம்.
மாலா- மாலை
மீமாம்ஸா- பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம- நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நிதித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நிதித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்

யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.

யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.

  1. ஸத்ய
  1. த்ரேதா
  1. த்வாபர
  1. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)

ரக்த - இரத்தம்

ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.

ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.

ராத்ரி - இரவு

இராமகிருஷ்ண பரமஹம்ஸ - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.

ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.

ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், இந்தியாவின் இதிகாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.

ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.

ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.

லாவோட்ஸ்ஸு - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.

வர்ண- வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வானப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயு- காற்று
வாஸந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதி- இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விச்'வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.

விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்

வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்

வேத - ச்'ருதி - உபநிஷத்

  • அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.

ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்

ஸ்ம்ரு'தி - ‘எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது’ என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஸ்மரண - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.

ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்

ஸ்வதந்த்ர - சுதந்திரமான

ஸ்வப்ந - கனவு

ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்

ஸங்கல்ப - முடிவு

ஸந்யாஸீ - துறவி

ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை

ஸத்வ - ஆன்மீக அமைதி

ஸம்ச'ய - சந்தேகம்

ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு

ஸம்ஸ்கார - கர்மச் சக்ரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்

ஸமாதி - மனம் கடந்த நிலை, ஞான நிலை

ஸஹஸ்ரார - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் ஸஹஸ்ர நாமா - கடவுளின் 1000 நாமங்கள்

ஸாங்க்ய - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று

ஸாதநா - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி

ஸாது - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி.

ஸித்தி - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.

ஸிம்ஹ - சிங்கம்

ஸிம்ஹ ஸ்வப்நா - பயங்கரக் கனவு

ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம்.

ஸுஷும்நா - ‘இருப்புத் தன்மை’ நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.

ச்'ரவண - கேட்டல்

ச்'ருதி - ‘கேட்டது எதுவோ அது’ என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது.

ச’க்தி - சக்தி, அறிவு சக்தி

ச’ங்கர - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.

சா’ஸ்த்ர - புனித நூல்கள்

சி’வ - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை.

சி’ஷ்ய - சீடன்.

சூ’த்ர - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம்.

சூ’ந்ய - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.

ஜ்யோதிஷ் - ஜோதிடம்

ஜோதிஸி - ஜோதிடர்

ஜநக்ராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிகாசமான இராமாயணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.

ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.

ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.

ஜராதுஸ்ட்ரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.

ஜாக்ரத் - விழிப்பு நிலை

ஜாதி - பிறப்பு

ஜாதி தோஷ் - பிறப்பில் உள்ள குறைபாடு

ஜீவ - வாழ்தல்

ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.

Hடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.

ஹம்மரபீ - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.

ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.

க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்

க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

ஸ்லோகங்கள்

அத த்ரு'தீயோऽத்யாய:

மூன்றாவது அத்தியாயம்

கர்மயோக: கர்மயோகம்

அர்ஜுந உவாச

ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந /
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேச'வ // 3.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஜ்யாயஸீ - சிறந்தது எனச் சொல்கிறீர்கள்; சேத் - இருந்தாலும்; கர்மண: - கர்மங்கள்; தே - உங்களால்; மதா - கருத்து; புத்தி: - ஞானம்; ஜநார்தந - ஜனார்தன; தத் - பின்னர்; கிம் - ஏன்; கர்மணி - கர்மத்தில்; கோரே - பயங்கரமான; மாம் - என்னை; நியோஜயஸி - ஈடுபடுத்துகிறீர்கள்; கேச'வ- கேசவா (கேசி என்ற அரக்கனைக் கொன்றவரே)

அர்ஜுனன் சொன்னது

3.1 அர்ஜுனன் சொன்னார், ஓ ஜனார்த்தனா, ஓ கேசவா, செயலைவிட அறிவாற்றல்தான் மேலானது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், என்னை ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான போரில் ஈடுபடுத்துகிறீர்கள்?

.......................................................................................

வ்யாமிச்'ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே /
ததேகம் வத நிச்'சித்ய யேந ச'ரேயோऽஹமாப்நுயாம் // 3.2

வ்யாமிச்'ரேணேவ இவ - குழம்பியது போன்ற; வாக்யேந- பேச்சினால்; புத்திம் - என் புத்தியை; மோஹயஸி இவ- கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே; மே - என்னை; தத் ஏகம் - அந்த ஒன்றை; வத - சொல்லுங்கள்; நிச்'சித்ய - தீர்மானித்து; யேந- எதனால்; ச'ரேய: - மேன்மையை; அஹம் - நான்; ஆப்நுயாம் - அடைவேனோ

3.2 உங்களுடைய முரண்பாடான வார்த்தைகளால், என்னுடைய அறிவு குழம்பிப்போய் உள்ளது. எனக்கு எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்லுங்கள்.

..........................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

லோகேऽஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக /
ஜ்ஞானயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம் // 3.3

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; லோகே - உலகில்; அஸ்மிந் - இந்த; த்விவிதாநிஷ்டா - இருவகைகள் கொண்ட நிஷ்டை; புரா - முன்பே; ப்ரோக்தா - சொல்லப்பட்டது; மயா - என்னால்; அனக - பாவமற்றவனே; ஜ்ஞானயோகேந - ஞான யோகத்தினாலும்; ஸாங்க்யாநாம் - ஸாங்கிய யோகிகளுக்கு நிஷ்டை; கர்மயோகேந- கர்மயோகத்தினாலும்; யோகிநாம் - யோகிகளுக்கு நிஷ்டை

ஸ்ரீ பகவான் சொன்னது

3.3 கிருஷ்ணர் சொன்னார், பாவமற்ற அர்ஜூனா, நான் முன் சொன்னதைப்போல், இந்த உலகில் இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூளை ரீதியாக செயல்படுபவர்களுக்கான 'தன்னிலை அறியும் நுண்ணறிவு பாதை' (ஞான யோகம்), மற்றும் யோகிகளுக்கான 'செயல்படும் பாதை' (கர்ம யோகம்).

..........................................................................................................

ந கர்மணாஅநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோऽச்நுதே /
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி // 3.4

ந - இல்லை; கர்மணாம் அநாரம்பாத் - கர்மங்களைச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே; நைஷ்கர்ம்யம் - நிஷ்கர்ம நிலையை; புருஷ: - மனிதன்; அச்நுதே - அடைவது; ந - இல்லை; ச - மேலும்; ஸந்ந்யஸநாத் ஏவ - துறப்பதாலேயே; ஸித்திம் - ஸித்தியை; ஸமதிகச்சதி - பெறுவது

3.4 செயலைச் செய்யாமல் விலகி இருப்பதால் ஒருவர் செயலிலிருந்து விடுதலை (நிஷ்கர்ம நிலை) அடைந்து விடுவதும் இல்லை; செயல்களை விட்டு விடுவதால், அவர் பூர்ண தன்மையை அடையப் போவதும் இல்லை.

..........................................................................................................

ந ஹி கச்'சித்க்ஷணமபி ஜாது திஷ்ட்_யகர்மக்ரு'த் /
கார்யதே ஹ்யவச': கர்ம ஸர்வ: ப்ரக்ரு'திஜைர்குணை: // 3.5

ந - இல்லை; ஹி - நிச்சயமாக; கச்'சித் - எந்த ஒருவனும்; க்ஷணம் அபி - ஒரு கணம்கூட; ஜாது - எக்காலத்திலும்; திஷ்டதி - தொடர்ந்து இருப்பது; அகர்மக்ரு'த் - செயல்பரியாமல்; கார்யதே - செய்யத் தூண்டப்படுகிறது; ஹி - நிச்சயமாக; அவச': - தம் வசமிழந்து; கர்ம - செயல்; ஸர்வ - மனித சமுதாயம் அனைத்தும்; ப்ரக்ரு'திஜை:குணை: - உலகியல் இயல்பிலிருந்து உண்டான குணங்களால்

3.5 நிச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இருக்க யாராலும் முடியாது. செயலில் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பதினால், தம்மையும் மீறி அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்.

.......................................................................................................

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரன் /
இந்த்ரியார்த்தாந்விமூடத்மா மித்யாசார: ஸ உச்யதே // 3.6

கர்மேந்த்ரியாணி - செயல் புரியும் புலன்கள் அனைத்தையும் வலுவில்; ஸம்யம்ய- அடக்கிவிட்டு; ய: - யார்; ஆஸ்தே - கொண்டிருக்கிறானோ; மநஸா - மனத்தினால்; ஸ்மரன் - மீண்டும் நினைத்தல்; இந்த்ரியார்த்தாந் - புலன்நுகர் பொருட்களை; விமூடத்மா - அறிவிலியான; மித்யாசார: - பொய் நடத்தையுள்ளவன்; ஸ:- அவன்; உச்யதே - சொல்லப்படுகிறான்

3.6 எவர் ஒருவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை நினைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருக்கும் அவரைப் பொய்யான ஒழுக்கமுடையவர் என்று சொல்கிறோம்.

.......................................................................................................

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யார_பதோர்ஜுந /
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விசிஷ்யதே // 3.7

ய: - எவனொருவன்; து - ஆனால்; இந்த்ரியாணி - புலன்களை; மநஸாமனத்தினால்; நியம்ய - வசப்படுத்தி; ஆர_பதே - ஆரம்பிக்கிறானோ; அர்ஜுந - அர்ஜுனா; கர்மேந்த்ரியை: - செயல்புரியும் எல்லாப் புலன்களாலும்; கர்மயோகம் - கர்மயோகத்தை; அஸக்த: - பற்றில்லாமல்; ஸ:- அவனே; விசிஷ்யதே - சிறந்தவன்

3.7 எவரொருவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, தன்னலமற்ற செயல்களைக் கர்மேந்திரியங்களின் (புலன்கள்) மூலம் செய்கிறாரோ அவர் உயர்ந்தவர், ஓ அர்ஜூனா!

...........................................................................................

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: /
ச'ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்யே தகர்மண: // 3.8

நியதம் - விதிக்கப்பட்ட ; குரு - ஆற்றுவாயாக; கர்ம - கர்மங்களை; த்வம் - நீ; கர்ம - கர்மங்கள்; ஜ்யாய: - சிறந்தது; ஹி - இருப்பதைக் காட்டிலும்; அகர்மண: - கர்மம் செய்யாமல் இருப்பதால்; ச'ரீரயாத்ரா அபி

  • உடலைப் பேணுவதுகூட; ச - மேலும்; தே- உனக்கு; ந ப்ரஸித்யேத் - ஸாத்யமாகாது; அகர்மண :- கர்மங்கள் செய்யாமல்

3.8 உனக்கென்று விதிக்கப்பட்ட செயலைச் செய்! சோம்பேறித்தனமாக வீணாகக் காலம் கழிப்பதைவிட செயலைச் செய்வது சிறந்தது. செயல் இல்லாமல் உன் சொந்த உடலைக்கூடப் பராமரிக்க முடியாது.

...........................................................................................

யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந: /
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர // 3.9

யஜ்ஞார்தாத் - தியாக மனப்பான்மையுடன் செய்யப்படுகிற; கர்மண:

  • கர்மம் தவிர; அந்ந்யத்ர - வேறுசெயல்களில்; லோக: - உலகம்; அயம்
  • இந்த; கர்மபந்தந: - கர்மங்களால் பந்தப்படுகிறது; தத் அர்தம் - அவருக்காக; கர்ம - கடமையை; கௌந்தேய - அர்ஜூனா; முக்தஸங்க: - பற்றுதல் இல்லாமல்; ஸமாசர - நன்கு ஆற்றுவாயாக

3.9 தியாக மனப்பான்மையுடன் சுயநலமில்லாமல் செயல்கள் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் அவை ஒருவனை உலகத்துடன் பந்தப்படுத்திவிடும்.

ஓ குந்தியின் மைந்தனே! உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய்; அப்போது அவற்றை மிகச்சரியாகச் சிறப்பாகச்

செய்வாய்; விடுதலை பெற்று பற்றற்று இருப்பாய்.

...........................................................................................

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ரு'ஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: /
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக் //

3.10

ஸஹயஜ்ஞா: - யாகங்களுடன்; ப்ரஜா: - மக்களை; ஸ்ரு'ஷ்ட்வா - படைத்து;புரா - கல்பத்தின் ஆரம்பத்தில்; உவாச - சொன்னார்; ப்ரஜாபதி: - பிரஜைகளின் தலைவரான ப்ரஹ்ம தேவன்; அநேந - இந்த வேள்வியின் மூலம்; ப்ரஸவிஷ்யத்வம் - மேலும் மேலும் செல்வத்தை அடையுங்கள்; ஏஷ: - இந்த வேள்வி; வ: - உங்களுடைய; அஸ்து- ஆகட்டும் இஷ்டகாமதுக் - விருப்பத்தக்க தனித் திறன்களை அளிப்பதாக

3.10 படைக்கும் கடவுளான பிரம்மா, மனித குலத்தைச் சுயநலமற்ற தியாக உணர்வுடன் படைக்கும் முன்பு, “இந்தச் சுயநலமற்ற சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப் பெற்று வாழுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு விருப்பத்தக்க இயல்பான தனித் திறன்களை அளிக்கட்டும்,” என்று சொன்னார்.

...........................................................................................

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ: /
பரஸ்பரம் பாவயந்த: ச்'ரேய: பரமவாப்ஸ்யத // 3.11

தேவாந் - தேவதைகளை; பாவயத - வளரச் செய்யுங்கள்; அநேந - இந்த வேள்வியினால்; தே தேவா: - அந்த தேவதைகள்; பாவயந்து - வளரச் செய்யட்டும்; வ: - உங்களை; பரஸ்பரம் - பரஸ்பரம்; பாவயந்த: - ஒருவர் மற்றொருவரை வளரச் செய்து; ச்'ரேய: - மேன்மையான நன்மையை; பரம் - சிறந்த; அவாப்ஸ்யத - அடைவீர்களாக

3.11 இத்தகைய சுயநலமற்ற யாகங்களால் மகிழ்ச்சியடையும் விண்ணுலக வாசிகளும் உன்னை ஆதரிப்பார்கள். ஒருவருக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேன்மையான நன்மையை அடைவீர்களாக.

...........................................................................................

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா: /
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: // 3.12

இஷ்டான்போகாந் - வாழ்வதற்குத் தேவையான விரும்பத்தக்க செல்வங்களை; ஹி - நிச்சயமாக; வ :- உங்களுக்கு; தேவா - தேவதைகள்; தாஸ்யந்தே - கொடுப்பார்கள்; யஜ்ஞபாவிதா - வேள்வியினால் திருப்தியடைந்த; தை: தத்தாந் - அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை; அப்ரதாய - அர்ப்பணம் செய்யாமல்; எப்ய: - அவர்களுக்கு; ய: - எவன் ஒருவன்; புங்க்தே - அனுபவிக்கிறானோ; ஸ்தேந : ஏவ: - திருடனே ஸ:

  • அவன்

3.12 சுயநலமற்ற சேவையால் திருப்திபெற்ற விண்ணுலவாசிகள், நீ விரும்பிய வாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாசிகளுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறா னோ அவன் நிச்சயமாகத் திருடன்.

...........................................................................................

யஜ்ஞசி'ஷ்டாசி'ந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகிவ்பிஷை: /
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் //

யஜ்ஞசி'ஷ்டாசி'ந: - தியாகம், உணவு, உணவை உண்கிறவர்கள்; ஸந்த:- சான்றோர்கள்; முச்யந்தே - விடுபடுகிறார்கள்; ஸர்வகிவ்பிஷை: - எல்லாப் பாவங்களிலிருந்தும்; புஞ்ஜதே- உண்கிறார்கள்; தே - அவர்கள்; து - ஆனால்; அதம் - பாவத்தையே; பாபா: - பாவிகள்; யே - எந்த; பசந்தி - உணவைச் சமைக்கிறார்கள்; ஆத்மகாரணாத் - புலன் இன்பங்களுக்காகவே

3.13 சுயநலமற்ற சேவை செய்தபின் உணவை உண்பவர்கள், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். புலன் இன்பத்திற்காகவே உணவு சமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம் செய்தவர்களாகிறார்கள்.

...........................................................................................

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ: /
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: //

அந்நாத்- உணவிலிருந்து; பவந்தி - உண்டாகின்றன; பூதாநி - உயிரினங்களனைத்தும்; பர்ஜந்யாத்- மழையிலிருந்து; அந்நஸம்பவ: - உணவின் உற்பத்தி ஏற்படுகிறது; யஜ்ஞாத் - வேள்வியிலிருந்து; பவதி

  • உண்டாகிறது; பர்ஜந்ய: - மழை; யஜ்ஞ: - வேள்வி; கர்மஸமுத்பவ - விதிக்கப்பட்ட கர்மங்களில் இருந்து உண்டாகிறது

3.14 எல்லா உயிரினங்களும் உணவு தானியங்களால் வளர்கின்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் கிடைப்பது சாத்தியமாகிறது. தன்னலமற்ற யாகத்தால் மழை பொழிகிறது.

......................................................................................................

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்_ப_வம்/
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்//

கர்ம - கர்மங்களின் தொகுப்பு; ப்ரஹ்மோத்பவம் - படைத்தவரிடமிருந்து உண்டாகிறது; வித்தி - தெரிந்துகொள்; ப்ரஹ்ம - படைப்புக் கடவுள்; அக்ஷரஸமுத்_ப_வம் - அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றியது; தஸ்மாத் - ஆகவே; ஸர்வகதம் - எங்கும் நிறைந்த; ப்ரஹ்ம - மேலான; நித்யம் - எப்பொழுதும்; யஜ்ஞே - வேள்வியில்; ப்ரதிஷ்டிதம்- நிலை பெற்றிருக்கிறது

3.15 படைத்தவனிடமிருந்து கர்மம் பிறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்! படைத்தவர் அந்த மேலான பரம்பொருளிடமிருந்து பிறக்கிறார். எங்கும் நிறைந்துள்ள அந்தப் பரம்பொருள் யாகங்களில் நிலைபெற்றுள்ளது.

......................................................................................................

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய: /
அகா_யுரிந்த்ரியாராமோ மோக_ம் பார்த ஸ ஜீவதி//

ப்ரவர்திதம் சக்ரம் - பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாக; நா நுவர்தயதி- பின்பற்றி நடக்கவில்லையோ; இஹ - இவ்வுலகில் - ஏவம் - இவ்வாறு ய:- எவனொருவன்; அகா_யு: - அந்தப் பாவ வாழ்க்கையுடையவன்; இந்ந்த்ரியாராம :- புலன் இன்பங்களில் திருப்பதியடைந்திருக்கும்; மோக_ம் - வீணே; பார்த - பார்த்தா; ஸ: - அவன்; ஜீவதி - வாழ்கிறான்

3.16 பார்த்தனே! எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையானதுமான இந்த வாழ்க்கைச் சுழற்சி முறையை பின்பற்றவில்லையோ அவர் பாவங்கள் சூழும் வாழ்க்கையை வாழ்கிறார். புலன் இன்பங்களிலேயே மகிழ்வு பெறுகிறவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்.

........................................................................................................

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ரு'ப்தச் மானவ: /
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே // 3.17

ய: - எந்த; து - ஆனால்; ஆத்மரதி: ஏவ - ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும்; ஸ்யாத் - இருக்கிறானோ; ஆத்மத்ருப்த:

  • ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாக; ச - மேலும்; மானவ: மனிதன்; ஆத்மநி ஏவ - ஆத்மாவிலேயே; ச - மேலும்; ஸந்துஷ்ட: - மகிழ்பவனாக; தஸ்ய - அவனுக்கு; கார்யம் - செய்ய வேண்டிய செயல் எதுவும்; ந வித்யதே - இல்லை

3.17 எவர் ஒருவர் தம் ஆன்மாவிலேயே ஆனந்தம் பெறுகிறாரோ, தம் ஆன்மாவிலேயே திருப்தியுறுகிறாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனநிறைவுடன் இருக்கிறாரோ, நிச்சயமாக அவருக்குச் செயல் என்பதே இருப்பதில்லை.

........................................................................................................

நைவ தஸ்ய க்ரு'தேநார்தோ நாக்ரு'தேநேஹ கச்'சன /
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கச்'சிதர்தவ்யபாச்'ரய: // 3.18

ந- இல்லை; ஏவ - நிச்சயமாக; தஸ்ய - அந்த; க்ரு'தேந - கர்மங்களைச் செய்வதாலும்; அர்து: ந - பயனும் இல்லை; அக்ரு'தேந - கர்மங்களைச் செய்யாவிட்டாலும்; இஹ - இவ்வுலகில்; கச்'சன - எந்த விதமான; ந - இல்லை; ச - அவ்வாறே; அஸ்ய - அவனுக்கு; ஸர்வ பூதேஷு - உயிரினங்கள்அனைத்திலும்; கச்'சித் - சிறிதுகூட; அர்தவ்யபாச்'ரய: - பாதுகாப்பு காரணத்திற்காக

3.18 நிச்சயமாக, இந்த உலகில் அவர் தம் கடமையைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ, அவருக்கு எந்தவிதமான காரணமும் இருப்பதில்லை. எந்த உயிரினத்தையும் அவர் சார்ந்து இருப்பதில்லை.

........................................................................................................

தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர /
அஸக்தோ ஹ்யாசரன்கர்ம பரமாப்நோதி பூருஷ: // 3.19

தஸ்மாத் - அதனால்; அஸக்த: - பற்றின்றி; ஸததம் - எப்பொழுதும்; கார்யம்கர்ம - ஆற்ற வேண்டிய கடமையை; ஸமாசர - நிறைவேற்றிக் கொண்டிரு; அஸக்த :- பற்றின்றி; ஹி - நிச்சயமாக; ஆசரந் - செய்கிற; கர்ம - கர்மங்களை; பரம் - பரமாத்மாவை; ஆப்நோதி - அடைகிறான் பூருஷ: - மனிதன்

3.19 அதனால் ஒருவர் எப்பொழுதும் பற்றல்லாமல் செயல்பட வேண்டும். பற்றல்லாமல் செயல் புரியும்போது, நிச்சயமாக, அந்த மனிதர் உயர்ந்த நிலையை அடைகிறார்.

..........................................................................................................

கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய: /
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யங்கர்துமர்ஹஸி // 3.20

கர்மணா ஏவ - பற்றின்றிக் கர்மங்களைச் செய்ததன் மூலமே; ஹி - நிச்சயமாக; ஸம்ஸித்திம் - சிறந்த பேற்றை; ஆஸ்திதா: - அடைந்தனர்; ஜனகாதய: - ஜனகர் முதலிய ஞானிகளும்; லோகஸங்க்ரஹம் - மக்களுக்கு வழிகாட்டுவது; ஏவ - கூட; அபி - நீயும்; ஸம்பச்யந் - நன்கு மனத் தில்கொண்டு; கர்தும் ஏவ - கர்மங்களைச் செய்வது; அர்ஹஸி - உனக்கு உரிய செயலாகும்

3.20 தன்னலமற்ற சேவையினாலேயே ஜனக மஹாராஜாவும் மற்றவர்களும் முழுநிறைவு அடைந்தார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட நீயும் தன்னலமற்று செயல்பட வேண்டும்.

..........................................................................................................

யத்யதாசரதி ச்'ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜன: /
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே // 3.21

யத்யத் - எதை எதை; ஆசரதி - செய்கிறானோ; ச்'ரேஷ்ட: - உயர்ந்த மனிதன்; தத்தத் ஏவ - அதை அதையே; ஏவ - மட்டுமே; இதர: ஜன: - ஏனையோரும்; ஸ: - அவன்; யத் - எதை; ப்ரமாணம் - சான்றாக; குருதே

  • எடுத்துக் காட்டுகிறானோ; லோக: - மனித சமுதாயம் அனைத்தும்; தத்
  • அதையே; அநுவர்ததே - பின்பற்றி நடக்கிறது

3.21 ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையில் செல்கிறார்கள்.

..........................................................................................................

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந /
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி // 3.22

ந - இல்லை; மே - எனக்கு; பார்த - அர்ஜூனா; அஸ்தி - இருக்கிறது; கர்தவ்யம் - செய்ய வேண்டிய கடமை; த்ரிஷுலோகேஷு - மூவுலகங்களிலும்; கிஞ்சந ந - ஒன்றுமில்லை; அநவாப்தம் - அடையப்படாமல்;அவாப்தவ்யம் - அடைய வேண்டியது எதுவும்; வர்தே- ஈடுபட்டுள்ளேன்; ஏவ - மட்டுமே; ச - மேலும்; கர்மணி - கர்மத்திலேயே

3.22 ஓ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்படவேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

....................................................................................................

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித: /
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வச': // 3.23

யதி - என்று வைத்துக் கொண்டால்; ஹி - நிச்சயமாக; அஹம் - நான்; ந வர்தேயம் - ஈடுபடாமல்; ஜாது - எப்போதும்; கர்மணி - கர்மங்களில்; அதந்த்ரித - கவனத்துடன்; மம - என்னுடைய; வர்த்ம - வழியையே; அநுவர்தந்தே- பின்பற்றுகிறார்கள்; மநுஷ்யா : - மனிதர்கள்; பார்த - பார்த்தா; ஸர்வச' : - எல்லா விதங்களிலும்

3.23 நான் செயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால், ஓ பார்த்தா, நிச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.

....................................................................................................

உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் /
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: // 3.24

உத்ஸீதேயு: - சீர்குலைந்து போவார்கள்; இமே லோகா - இம்மனிதர்கள் அனைவருமே; ந குர்யாம் - செய்யாமல் விட்டால்; கர்ம - கர்மங்களை; சேத் - என்ற நிலையில்;அஹம் - நான்; ஸங்கரஸ்ய - சீர் குலைவு; ச - மேலும்; கர்தா - செய்கிறவனாகவும்; ஸ்யாம் - ஆவேன்; உபஹந்யாம் - அழிப்பவனாகவும்; இமா: ப்ரஜ:- இந்த மக்கள் அனைவரையும்

3.24 நான் கர்மங்களைச் செய்யவில்லை என்றால் பிறகு இந்த மூன்று உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும்,

சர்வ்நாசமும் உருவாக நான் காரணமாகி விடுவேன். .........................................................................................

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பா ரத /
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்த'சிகீர்ஷுர்லோகஸங்க்ரஹம் //

ஸக்தா: - பற்றுக் கொண்ட; கர்மணி - கர்மங்களில்; அவித்வாம்ஸ: - அஞ்ஞானிகள்; யதாகுர்வந்தி - எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ; பாரத - பரதகுலத் தோன்றலே; குர்யாத் - செய்ய வேண்டும்; வித்வாந் - தத்வஞானியும்; ததா - அவ்விதமே; அஸக்த - பற்றில்லாத; சிகீர்ஷு: - செய்ய விரும்பி; லோகஸங்க்ரஹம் -உலகத்திற்கு வழி காட்டுதலை

3.25 அறியாமையில் உள்ளவர்கள் விளைவில் பற்று வைத்தே செயலைச் செய்கிறார்கள். ஓ பாரதா, விவேகமானவர்கள் செயல்களை மக்கள் நலனுக்காகப் பற்றில்லாமல் செய்கிறார்கள். .........................................................................................

ந புத்திபேதம் ஜனயேஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்/
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந் //

ந - கூடாது; புத்திபேதம் - புத்தியில் குழப்பத்தை; ஜனயேத் - செய்; அஜ்ஞாநாம் - அஞ்ஞானிகளின்; கர்மஸங்கிநாம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும்; ஜோஷயேத் - உத்வேகப்படுத்துதல்; ஸர்வகர்மாணி - எல்லாக் கர்மங்களை; வித்வாந் - ஞானிகள்; யுக்த: - நிலைத்து நிற்கிற ஞானி; ஸமாசரந் - சிறப்பாகச் செய்து

3.26 பலன்களின் மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அந்த மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்குவது நல்லதல்ல. ஞானிகள், தாங்களே எல்லாக் கர்மங்களையும் பற்றற்று செய்வதன் மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச் செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும். .........................................................................................

ப்ரக்ரு'தே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஶ' : /
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே // 3.27

ப்ரக்ரு'தே: - உலகியல் இயல்புகளின்; க்ரியமாணாநி- செய்யப்படுகின்றன; குணை: - குணங்களால்; கர்மாணி - எல்லாச் செயல்களும்; ஸர்வஸ':

  • எல்லா விதங்களிலும்; அஹங்காரவிமூடாத்மா - அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி; கர்தா - கர்த்தா; அஹம் - நான்; இதி மந்யதே - என்று நினைத்துக்கொள்கிறான்

3.27 அஹங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள், இயற்கையின் சக்தியால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்களே செய்வதாக நினைக்கிறார்கள்.

.................................................................................................

தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ: /
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே // 3.28

தத்த்வவித் - ஸத்யத்தை அறிந்த ஒருவர்; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே; குணகர்மவிபாகயோ: - குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு இவற்றின்; து - ஆனால்; குணா: - குணங்கள் அனைத்தும்; குணேஷு - புலன்களைத் திருப்திபடுத்துவதில்; வர்தந்தே

  • செயல்படுகின்றன; இதி - என்று; மத்வா - அறிந்து; ந ஸஜ்ஜதே - பற்றுக்கொள்ளாதிருக்கிறான்

3.28 திரண்ட தோள்களை உடையவனே, ஸத்யத்தை அறிந்த ஒருவர், இயற்கையின் இயல்பிலும் கர்மங்களின் இயல்பிலும் இருக்கிற வேறுபாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்!

இயல்புகளைப் பற்றியும், புலன் இன்பங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டதால், அவர் அதில் எப்போதும் பற்றுகொள்வதில்லை.

.................................................................................................

ப்ரக்ரு'தேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு /
தாநக்ரு'த்ஸ்நவிதோ மந்தாந் க்ரு'த்ஸ்நவிந்ந விசாலயேத் // 3.29

ப்ரக்ரு'தே: - பொருள் சார்ந்த இயல்புகளால்; குணஸம்மூடா: - குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள்; ஸஜ்ஜந்தே - ஈடுபடுகிறார்கள்; குணகர்மஸு - குணங்களிலும் கர்மங்களிலும்; தாந் - அந்த; அக்ரு'த்ஸ்நவித: - முற்றும் அறிந்திராத; மந்தாந் - குறைமதியுடைய அஞ்ஞானிகளை; க்ரு'த்ஸ்நவித் - முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி; ந விசாலயேத் - தடுமாறச் செய்யலாகாது;

3.29 பொருள் சார்ந்த இயற்கையின் இயல்புகளால் முட்டாளாக்கப்பட்டவர்கள், குறைவான அறிவு கொண்டவர்கள் அல்லது சோம்பேறிகளாக இருக்கும் இவர்கள் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் விவேகமுள்ளவர்கள் நிச்சயமாக இவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது.

...........................................................................................

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா/
நிராசீ'ர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: // 3.30

மயி - என்னிடம்; ஸர்வாணி கர்மாணி - எல்லாக் கர்மங்களையும்; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு; அத்யாத்மசேதஸா - ஆன்மீக அறிவுடன் கூடிய விழிப்புணர்வுடன்; நிராசீ': ஆசையற்றவனாக; நிர்மம - என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாக; பூத்வா - ஆகி; யுத்யஸ்வ - யுத்தம் செய்; விகதஜ்வர: - சோம்பலற்றவனாக

3.30 ஆதாயத்தைப் பற்றிய ஆசையோ, பொருட்களைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல், சோம்பேறித்தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்ம ஞானத்தால் நிரப்பப்பட்ட விழிப்புணர்வுடன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.

...........................................................................................

யே மே மதமிதம் நித்யமநுதிஷ்ட'ந்தி மாநவா: /
ச்'ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி':
//3.31

யே - எந்த; மே - என்னுடைய; மதம் - போதனையை; இதம் - இந்த; நித்யம் - எப்பொழுதும்; அநுதிஷ்ட'ந்தி - பின்பற்றுகிறார்களோ; மாநவா

  • மனிதர்கள்; ச்'ரத்தாவந்த: - சிரத்தை உடையவர்களாக; அநஸூயந்த: - குற்றங்குறை காணாதவர்களாக; முச்யந்தே - விடுபடுகிறார்கள்; தே அபி
  • அவர்களும்; கர்மபி' - பலனை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் கர்மங்களிலிருந்தும்

3.31 என்னுடைய போதனைகளின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், என் வார்த்தைகளை நம்பிக்கையுடன் பொறாமையின்றி பின்பற்றுபவர்களும் செயலின் பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

...........................................................................................................

யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம் /
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தானவித்தி நஷ்டாநசேதஸ: // 3.32

யே - எந்த மனிதர்கள்; து - ஆனால்; ஏதத் - இந்த; அப்யஸூயந்த: - பொறாமையினால் குறை காண்பவர்களாக; ந அனுதிஷ்டந்தி - முறையாகக் கடைப்பிடிப்பதில்லையோ; மே - என்னுடைய; மதம் - போதனையை; ஸர்வஜ்ஞாநவிமூடந் - எல்லா வகையான அறிவைப் பெற்றிருந்தாலும் மூடர்கள் என்றும்; தாந் - அந்த; வித்தி - அறிந்துகொள்; நஷ்டாந்-சீரழிந்து போனவர்கள் என்றும்; அசேதஸ: - விழிப்புணர்வற்வர்கள்

3.32 என் சொற்களின்படி தம் கடமைகளைச் சீராக, நியமத்துடன் செய்யாதவர்கள், அறிவற்றவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமையால் அழிவார்கள்.

...........................................................................................................

ஸத்ரு'ச'ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ரு'தேர்ஜ்ஞாநவாநபி/
ப்ரக்ரு'திம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி // 3.33

ஸத்ரு'ச'ம் - ஏற்றவாறு; சேஷ்டதே - முயற்சி செய்கிறார்; ஸ்வஸ்யா: - தமது; ப்ரக்ரு'தே : - இயல்புகள்; ஜ்ஞாநவாந் அபி- ஞானியும்; ப்ரக்ரு'திம் - இயல்பை; யாந்தி- அடைகின்றன; பூதாநி - எல்லா உயிரினங்களும்; நிக்ரஹ: - பலவந்தமான பிடிவாதம்; கிம் - என்ன; கரிஷ்யதி - செய்யும்

3.33 வாழும் எல்லா உயிரினங்களும் அதனதன் இயற்கை சுபாவப் படியே செல்கின்றன. புத்திசாலித்தனமான ஒருவர்கூட தம் இயல்பான சுபாவப் படியே செயல்களைச் செய்கிறார். புலன்களின் செயல்களை எது தடுத்து நிறுத்த முடியும்?

...........................................................................................................

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ
வ்யவஸ்திதௌ/
தயோர்ந வச'மாகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ // 3.34

இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே - ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும்; ராகத்வேஷௌ- விருப்பு வெறுப்புகள்; வ்யவஸ்திதௌ- கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்; தயோ: - அவ்விரண்டின்; ந - கூடாது; வச'ம் ஆகச்சேத் - கட்டுப்பாட்டிற்குள் வருதல்; தௌ - அவ்விரண்டும்தான்; ஹி - நிச்சயமாக; அஸ்ய - இவனுடைய; பரிபந்திநௌ - இடையூறு விளைவிக்கும் பெரும் தடைகள்

3.34 புலனின்ப பொருட்கள் மீது பற்றுகொள்ளுதலையோ அல்லது வெறுப்புகொள்ளுதலையோ செய்யும் இந்தப் புலன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆன்ம ஞானப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அவற்றின் ஆட்சிக்குள் ஒருவர் எப்போதும் இருக்கக் கூடாது.

...................................................................................

ச்’ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் /
ஸ்வதர்மே நிதநம் ச்’ரேய: பரதர்மோ பாயாவஹ://

ச்’ரேயாந் - மிகவும் உயர்ந்தது; ஸ்வதர்ம:- தம்முடைய தர்மம்; விகுண:

  • குணக் குறைவிருப்பினும்; பரதர்மாத் - பிறருடைய கடமைகளை காட்டிலும்; ஸ்வநுஷ்டிதாத் - முழுமையாகச் செய்யப்படும்; ஸ்வதர்மே
  • சொந்த கடமை; நிதநம் - இறப்பதும்; ச்’ரேய: - மேலான; பரதர்ம: - பிறருடைய தர்மம்; பாயாவஹ: - ஆபத்தை விளைவிக்கும்

3.35 வேறு யாரோ ஒருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைவிட, சொந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது சிறந்ததே. மற்றவர் கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வதில் மரணமே அடைந்தாலும்கூட சிறந்தது. ஏனென்றால் மற்றவர்களுடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.

...................................................................................

அர்ஜுந உவாச

அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ: /
அநிச்ச’ந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: //

அர்ஜுந உவாச :- அர்ஜுனன் சொன்னார்; அத - பின்; கேந - எதனால்; ப்ரயுக்த: - ஏவப்பட்டு; அயம் - இந்த; பாபம் - பாவத்தை; சரதி - செய்கிறான்; பூருஷ: - மனிதன்; அநிச்சந் அபி -தான் விரும்பாவிட்டாலும்; வார்ஷ்ணேய - கிருஷ்ணா; பலாத் - பலவந்தமாக; இவ - போல; நியோஜித: - தூண்டப்பட்டவன்

அர்ஜுனன் சொன்னது

3.36 அர்ஜுனன் சொன்னார், "ஓ விருஷ்ணி குலத்தில் அவதரித்தவரே, ஏதோ ஒரு ஆற்றலால் ஆட்டுவிக்கப்பட்டதுபோல, மனிதன்

அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச் செயல்கள் செய்ய வலுக்கட்டாயமாக ஏன் தூண்டப்படுகிறான்?"

..................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்ப்வ: /
மஹாஸ’நோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம் // 3.37

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; காம: - காமம்; ஏஷ: - இந்த; க்ரோத: - கோபம்; ஏஷ: - இது; ரஜோகுணஸமுத்ப்வ: - ரஜோ குணத்திலிருந்து உண்டாகிய; மஹாஸ’ந: - பெருந்தீனிக்காரன்; மஹாபாப்மா - பெரிய பாவி; வித்தி - அறிந்துகொள்; ஏநம் - இதையே; இஹ - இந்த விஷயத்தில்; வைரிணம்- பகைவனாக

ஸ்ரீபகவான் சொன்னது

3.37 பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருப்பவை பேரார்வத்திலிருந்து பிறக்கும் காமமும், கோபமும்தான் .

இவை, எல்லாவற்றையும் விழுங்கக்கூடியதாகவும் பாபத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது.

..................................................................................................

தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்சோ’ மலேந ச /
யதோல்பேநாவ்ரு’தோ கர்பஸ்ததா தேநேதமாவ்ரு’தம் // 3.38

தூமேந - புகையால்; ஆவ்ரியதே - மறைக்கப்படுகிறதோ; வஹ்நி: - நெருப்பும்; யதா - எவ்விதம்; ஆதர்ச’ : - கண்ணாடி; மலேந - அழுக்கினால்; ச - கூட; யதா - எவ்விதம்; உல்பே ந - கருப்பையினால்; ஆவ்ரு’த: - மறைக்கப்படுகிறதோ; கர்ப: - கரு; ததா - அவ்விதமே; தேந - அந்தக் காமத்தினால்; இதம் - இந்த; ஆவ்ரு’தம் - மறைக்கப்பட்டிருக்கிறது

3.38 நெருப்பு, புகையால் மறைக்கப்படுவதுபோல், கண்ணாடி, தூசுக்களால் மறைக்கப்படுவதுபோல், கரு, பனிக்குடத்தால் (கருப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிரினங்கள், காமத்தால் மறைக்கப்படுகின்றன.

..................................................................................................

ஆவ்ரு’தம் ஜ்ஞானமேதேந ஜ்ஞானிநோ நித்யவைரிணா/
காமரூபேண கெளந்தேய துஷ்பூரேணாநலேந ச // 3.39

ஆவ்ரு'தம் - மறைக்கப்பட்டிருக்கிறது; ஜ்ஞானம் - ஞானம்; ஏதேந - இதனால்; ஜ்ஞாநிந: - ஞானிகளுக்கு; நித்ய வைரிணா - என்றுமே பகைவனுமாகிய; காமரூபேண - காமம் என்ற வடிவத்தில் உள்ளதும்; கெளந்தேய - அர்ஜூனா; துஷ்பூரேண - திருப்தி அடையாத; அநலேந - நெருப்பைப் போன்றதும்; ச - மேலும்

3.39 ஓ குந்திமைந்தனே! நெருப்பைப்போல் எரிந்து கொண்டிருக்கும் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத காமம் என்கிற வடிவம் கொண்ட இந்த அழிவற்ற எதிரியால், அறிபவருடைய ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.

.......................................................................................................

இந்த்ரியாணி மநோ புத்திர்ஸ்யாதிஷ்டாநமுச்யதே /
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞானமாவ்ரு'த்ய தேஹிநம் // 3.40

இந்த்ரியாணி - புலன்கள்; மந: - மனம்; புத்தி: - புத்தி; அஸ்ய - உடைய; அதிஷ்டாநம் - இருப்பிடம்; உச்யதே - சொல்லப்படுகிறது; ஏதை: - இவற்றால்; விமோஹயதி - மோஹத்திற்கு உட்படுத்துகிறது; ஏஷ : இந்த (காமம்); ஜ்ஞானம் - ஞானத்தை; ஆவ்ரு'த்ய - மறைத்து; தேஹிநம் - ஜீவாத்மாவை

3.40 புலன்கள், மனம், புத்தி இவையே காமத்தின் இருப்பிடங்கள். அவை உள்ளே உள்ள இருப்புத் தன்மையைக் குழப்பி ஞானத்தை மறைக்கிறது.

.......................................................................................................

தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப /
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞானவிஜ்ஞானநாச'நம் // 3.41

தஸ்மாத் - ஆகவே; த்வம் - நீ; இந்த்ரியாணி - புலன்களை; ஆதௌ - முதலில்; நியம்ய - வசப்படுத்தி; பரதர்ஷப - அர்ஜூனா; பாப்மாநம் - பாபத்தின் சின்னமான; ப்ரஜஹி - வீாுடன் ஒழித்துவிடு; ஹி - நிச்சயமாக; ஏநம் - இந்த; ஜ்ஞான விஜ்ஞான நாச'நம் - ஞானத்தையும் விழிப்புணர்வையும் அழிக்கிற

3.41 பரத வம்சவழிவந்தவர்களின் தலைவனே! அதனால் ஆரம்பத்திலேயே, பாவத்தின் அடையாளமாகிய புலன்களை அடக்கி அதற்குக் கடிவாளம் இடு. பாவம் நிச்சயமாக ஞானத்தையும் விழிப்புணர்வையும் அழிக்கிறது.

.......................................................................................

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந: /
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ: // 3.42

இந்த்ரியாணி - புலன்களை; பராணி - மேலானவை என்று; ஆஹு: - சொல்கிறார்கள்; இந்த்ரியேப்ய: - இந்தப் புலன்களைக் காட்டிலும்; பரம் - மேலானது; மந: - மனம்;மநஸ : மனம்; து - மேலும்; பரா - மேலானது; புத்தி: - புத்தி; ய: - எது; புத்தே: - புத்தியைக் காட்டிலும்; பரத: - மிகவும் மேலானதோ; து - ஆனால்; ஸ: - அதுவே

3.42 புலன்கள் உடலைவிட உயர்ந்தது என்று சொல்கிறார்கள். மனம் புலன்களைவிட உயர்ந்தது. புத்தி மனத்தைவிட உயர்ந்தது. விழிப்புணர்வு புத்தியைவிட உயர்ந்தது. .......................................................................................

ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா /
ஜஹி ச'த்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம் // 3.43

ஏவம் - இவ்விதம்; புத்தே: பரம் - புத்தியைக் காட்டிலும் மிகவும் மேலானவனாக; புத்த்வா - அறிந்து; ஸம்ஸ்தப்ய - வசப்படுத்தி; ஆத்மநா

  • புத்தியினால்; ஆத்மாநம் - மனத்தை; ஜஹி - வெற்றி கொள்; ச'த்ரும்
  • எதிரியை; மஹாபாஹோ - வலிமையான தோள்களை உடையவனே; காமரூபம்- காமம் என்ற; துராஸதம் - மனநிறைவு பெறாத

3.43 மனம் மற்றும் புத்தியைக் காட்டிலும் ஆத்மாவே உயர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, திரண்ட தோள் கொண்டவனே, மனநிறைவு பெறாத எதிரியான காமத்தை வெற்றிகொள். .......................................................................................

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மயோகோ நாம த்ரு'தீயோऽத்யாய: // ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்ஃகீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்மயோகம் எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம் .

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

அத கேந ப்ரயுக்தோ3-36யதிஹ்யஹம் ந3-23
அந்நாத்பவந்தி3-14யஸ்த்வாத்மரதிரேவ3-17
ஆவ்ரு'தம் ஜ்ஞாந3-39யஸ்த்விந்த்ரியாணி3-7
இந்ந்த்ரியஸ்யேந்த்ரி3-34யஜ்ஞசி'ஷ்டாசி'ந:3-13
இந்ந்த்ரியாணி சராண்3-42யஜ்ஞார்தாத்கர்ம3-9
இந்ந்த்ரியாணி மநோ3-40யே த்வேததப்யஸூ3-32
இஷ்டாந்போகாந்3-12யே மே மதமிதம்3-31
உத்ஸீதேயுரிமே3-24லோகேऽஸ்மிந்3-3
ஏவம் ப்ரவர்திதம்3-16வ்யாமிச்'ரேணேவ3-2
ஏவம் புத்தேச: பரம்3-43ச்'ரேயாந்ஸ்வதர்மோ3-35
கர்மணைவ ஹி3-20ஸக்தா: கர்மண்ய3-25
கர்ம ப்ரஹ்மோத்பவ3-15ஸத்ரு'ச'ம் சேஷ்டதே3-33
கர்மேந்த்ரியாணி3-6ஸஹயஜ்ஞா: ப்ரஜா:3-10
காம ஏஷ க்ரோத3-37
ஜ்யாயஸீ சேத்கர்ம3-1
தத்த்வவித்து மஹா3-28
தஸ்மாத்தவமிந்த்ரி3-41
தஸ்மாதஸக்த: ஸத3-19
தேவாந்பாவயதா3-11
தூமேநாவ்ரியதே3-38
ந கர்மணாமாநாரம்பாந்3-4
ந புத்திபேதம் ஜந3-26
ந மே பார்தாஸ்தி3-22
ந ஹி கச்'சித்க்ஷண3-5
நியதம் குரு கர்ம3-8
நைவ தஸ்ய க்ரு'தேநா3-18
ப்ரக்ரு'தே: க்ரிய3-27
ப்ரக்ரு'தேர்குண3-29
மயி ஸர்வாணி3-30
யத்யதாசரதி ச்'ரேஷ்ட3-21