KAILASA Library/பகவத்கீதை/நேரம், மனோ ரீதியானது; கால ரீதியானது இல்லைSign in
பகவத்கீதை

நேரம், மனோ ரீதியானது; கால ரீதியானது இல்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna illustration

2.9 அதற்குப் பிறகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் “கோவிந்தா, நான் போரிடமாட்டேன்,” என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

2.10 இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்த வண்ணம் பேசத் தொடங்கினார்.

2.11 பகவான் சொன்னார், “யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப் பேசுகிறாய். கற்றறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்.”

கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று
இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும், இங்குிருப்பவர்களும்
எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறோம். இனி வரும்
எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.

எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம்,
முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைக் கடந்து செல்கிறதோ,
அதே போல்தான் அது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலிற்குக்
கடந்து செல்கிறது. தமக்குள் மையத்தில் நிலை பெற்றிருக்கும்
மனிதர் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.

நம்மையே புரிந்துகொள்ளாத நமக்கு, கடவுளைப் பற்றி என்ன தெரியும்?

peacock feather

இங்கே சொல்லப்படும் ஸ்லோகங்களை “கிருஷ்ணர் சொன்னார்,” என்று கடந்தகாலத்தைப் (Past Tense) பயன்படுத்தியே எழுதுகிறோம். ஆனால் உண்மையில் கிருஷ்ணரை நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து.ன்றும் நம் ஒவ்வொருவருக்கும் அவர் தேவைப்படுகிறார். அதனால் “கிருஷ்ணர் சொன்னார்,” என்று நம்மால் சொல்ல முடியாது; “கிருஷ்ணர் சொல்கிறார்,” என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் அர்ஜுனன் தமக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யும்படி கிருஷ்ணர் தம்மை வற்புறுத்துவதைப் பற்றிக் குறைப்பட்டுக்கொள்கிறார். அதனால் அடம் பிடிக்கும் குழந்தையைப்போல் கீழே அமர்ந்துகொண்டு, “நான் போரிட மாட்டேன்,” என்கிறார்.

> ஞானிகள்
> உயிருடன்
> இருப்பவர்களுக்காகவும்
> இறந்தவர்களுக்காகவும்
> கவலைப்பட
> மாட்டார்கள்.

அர்ஜுனனுடைய இந்தச் செயல், கிருஷ்ணர்
அவரை வற்புறுத்தி இணங்க வைக்க
வேண்டுமென்று எதிர்பார்ப்பதுபோல
இருந்தது. அவர் கிருஷ்ணரிடமிருந்து
விளக்கங்களை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்.

கிருஷ்ணர் புன்னகையோடும், கனிவோடும்
சொல்கிறார், “உயர்ந்த கருத்துகளைப்
பேசிக் கொண்டிருக்கும்பொழுது, எதற்காகத்
துக்கப்படவேண்டிய தேவை இல்லையோ,
அதற்காகத் துக்கப்படுகிறாய்.

ஞானிகள் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் கவலைப் படுவதில்லை, இறந்தவர்களுக்காகவும் கவலைப்படுவதில்லை.''

மீண்டும், கிருஷ்ணர் நேரடியாக விஷயத்திற்கு வருகிறார், ''ஓ அர்ஜூனா, நீ ஞானம் அடைந்தவன்போலவும் புத்திசாலிபோலவும் பேசுகிறாய். நீ உயர்ந்த கருத்துகளைப் பேசினாலும் அவற்றை அனுபவிக்காமலேயே பேசுகிறாய். அதனால் உன்னுடைய வார்த்தைகள் மேலோட்டமானவையாகவும் தீர்மானிக்கப்படாதவையாகவும் இருக்கின்றன.

உன்னுடைய உணர்ச்சிகள், நீ ஞானமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. உனக்குப் புரியவில்லை என்பதையும் உனக்கு அனுபவம் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. உண்மையான ஞானி இறந்தவர்களுக்காகவும் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்.''

நீ இறந்தவர்களுக்காகவோ, உயிருடன்
இருப்பவர்களுக்காகவோ துக்கப்பட்டால்
அதிலிருந்தே நீ புத்திசாலி இல்லை
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மரணமோ அல்லது வாழ்க்கையோ இதில்
வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? பல
கோடிக்கணக்கானவர்கள் இங்கு வாழ்ந்து
விட்டு, இறந்துபோயிருக்கிறார்கள்!

> மரணம் அல்லது வாழ்க்கை, அதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? கோடிக்கணக்கானவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு, இறந்து போயிருக்கிறார்கள்!

ஒருவர் என்னிடம், ''ஏன் உலகத்தில் இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன? ஏன் இவ்வளவு உயிர்கள் போர்களிலும் இயற்கை சீற்றங்களிலும் அழிகின்றன? ஏன் கடவுள் இதைச் செய்கிறார்? ஏன் கடவுளுக்குக் கருணை இல்லை?'' என்று கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தெரியாது. ஆனால் பதில் சொல்ல வேண்டுமென்று நீங்கள் என்னை வற்புறுத்தினால், அடுத்த முறை கடவுள் தம்முடைய ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை அழைக்கும்போது, இதற்கான பதிலைச் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று சொன்னேன். உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில், பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம், கடவுளிடம் இல்லை. இப்படிப்பட்ட கேள்வி தாழ்ந்த உணர்வு நிலையில் இருந்து, உங்களுடைய தர்க்க மனத்திலிருந்து கேட்கப்படுகிறது. கடவுள் நம் தர்க்கங்களைத் தாண்டியவர்.

இது போன்ற கேள்விகளுக்கு என்றுமே பதில் கிடைப்பதில்லை.

elephant

உதாரணமாக ஒரு சின்ன எறும்பு, யானையிடம் கேட்கிறது, "நீ என்னைப்போல் ஏன் கருப்பாக இருக்கிறாய்? நம் இருவருடைய தோலின் நிறமும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கலாம்?"

இந்தக் கேள்விக்கு யானையால் பதில் சொல்ல முடியுமா? எறும்புன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதே யானைக்குத் தெரியாது. யானை எறும்பையோ, அதன் கேள்வியையோ உணர்வதுகூட இல்லை. அதைப் போன்றுதான் தெய்வீக தன்மையின் விதிகளும் இருக்கின்றன.

ant

அந்த இருப்புத் தன்மையின் விதிகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

மூடர்கள்தான் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் அழுவார்கள். உண்மையான புத்திசாலி இறப்பைக் கண்டு துக்கப்பட மாட்டார்.

பல நேரங்களில் மக்கள் கேட்பார்கள், "இந்த உலகம் எப்படித் தோன்றியது? இந்து மத நூல்கள் சொல்வதுபோல் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது பழைய ஏற்பாடு சொல்வதுபோல் ஆறே நாட்களில் பெயரில்லாத கடவுளால் உருவாக்கப்பட்டதா?"

> இந்தப் பிரபஞ்சம்
> உருவாக்கவும்
> இல்லை.
> அழிக்கப்படவும்
> இல்லை.
> அது எப்பொழுதும்
> அப்படியே
> இருக்கிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு
முன்னால், புத்தர் தம் அனுபவத்திலிருந்து
என்ன சொன்னாரோ, அதைத்தான் நான்
பதிலாகச் சொல்வேன். புத்தர் சொன்னார்,
"இந்தப் பிரபஞ்சம் உருவாக்கப்படவும்
இல்லை. அழிக்கப்படவும் இல்லை. அது
எப்பொழுதும் அப்படியே இருக்கிறது."

பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக்
கொண்டது. படைத்தவர்தான்
படைத்தலாகவும் படைத்தலின்
விளைவான படைப்பாகவும் இருக்கிறார்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில், எது சரி? எது தவறு என்ற கேள்வி நமக்கு எப்பொழுது வருகிறதென்றால், அந்த நிகழ்ச்சிகள் நம்மை ஏதாவது ஒரு வகையில் பயமுறுத்தும்ப்போதுதான் வருகிறது. பிரபஞ்ச சக்திக்குக் கருணை இருக்கிறதா? இல்லையா? என்ற இந்தக் கேள்வியே நம் அஹங்காரத்திற்குப் பாதிப்பு வரும்போதும், நம் அடையாளங்களை நாம் இழந்துவிடுமோ என்ற பயம் வரும்போதும், நம் வாழ்க்கைக்கே அபாயம் வரும் போதும்தான் நம்முன் எழுகிறது.

எதுவெல்லாம்
படைக்கப்படுகிறதோ
அதுவெல்லாம்
அழிக்கவம்படும்.

தீர்க்க முடியாத மரணம் விளைவிக்கக்கூடிய புற்றுநோய் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்படும்பொழுது எந்த ஒரு மனிதரும் கேட்கிற கேள்வி, "எனக்கா இந்தக் கொடுமையான நோய்?"

aduவே சிறு குழந்தையாக இருந்துவிட்டால், அதனுடைய பெற்றோர்களும், உறவினர்களும், நிச்சயமாக, கடவுளின் நீதிமுறையைப் பற்றியும் கருணையைப் பற்றியும் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

கடவுளின் கருணையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முதலில் கடவுளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? நம்முடைய சொந்த லாபத்தைப் பற்றி மட்டும்தான் நமக்கு அக்கறை. நமக்கும், நம் குடும்பத்தார்க்கும், நமக்குப் பிடித்தவர்களுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதுதான் நமது கவலை. முதலில் நம்முடைய நலனிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தால்தான் நாம் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படுவோம்.

உங்களின் முக்காலத்தையும் அறிய முடியும்

படைப்பவரேதான் அழிப்பவராகவும் இருக்கிறார்; எதுவெல்லாம் படைக்கப்படுகிறதோ அதுவெல்லாம் அழிக்கப்படும். நாம் பிறக்கும் போதே, நாம் இத்தனை வருடங்களுக்கு வாழ்வோம், இந்த நேரத்தில் இப்படித்தான் இறப்போம் என்பதற்கான எந்த ஒரு ஒப்பந்தமும் நமக்கும் கடவுளுக்கும் இல்லை. நீங்கள் உண்மையில் உங்களுடைய உள் நிலையை உணரும்போது, ஞானம் அடையும்போது, நீங்கள் எப்பொழுது இறப்பீர்கள் என்பதும் எப்படி இறப்பீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்போது உங்கள் உடல் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, அது எந்தவித வித்தியாசத்தையும் உங்களுக்கு ஏற்படுத்துவதில்லை. அப்பொழுது உங்கள் உடல் இருக்கிறது அல்லது இல்லை என்பதைக்கூட நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள்.

பிறப்பும், இறப்பும் ஒரு நாடகம்தான் என்பதையும் அதில் நீங்கள் ஒரு அங்கமாகத்தான் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது, இவற்றில் நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். இவையெல்லாம் இயற்கையின் நடைமுறை என்பதை உணர்ந்து, ஜீவன்முக்தத் தன்மையிலேயே வாழ்ந்து, இயற்கையுடன் இசைந்து இனிமையாகப் பயணம் செய்வீர்கள்.

naam seyyum ellaac ceyalkaḷukkum naamtān poruppu.

கர்மா, விதி என்று வெறும் வார்த்தைகளை
வைத்து நாம் விளையாடிக்
கொண்டிருக்கிறோம். “நம் வாழ்க்கையில்
நடக்கும் அனைத்திற்கும் நம் விதிதான்
காரணம் என்றும், நாம் என்ன செய்கிறோமோ,
அதற்குக் கர்மாதான் பொறுப்பு என்றும்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நான் சொல்கிறேன்: நமக்கு என்ன நடக்கிறதோ அதற்கு நாம்தான் பொறுப்பு. நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் நாம்தான் பொறுப்பு. நமக்கு நிகழும் எல்லா நிகழ்வுகளுக்கும் அதன் மேல் பழி போடுகிறோம். இது, இயற்கையின் விதிகளைப் பற்றி நாம் கொடுக்கும் ஒரு தவறான விளக்கமாகும்.

மனிதன் இயற்கையைச் சுரண்டி, அதை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்தியதே, பூகம்பங்களும், சுனாமிகளும் வருவதற்குக் காரணம். எண்ணெய் கனிமங்களை எடுப்பதற்காக, நாம் நிலத்திலும் கடலிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் ஆழத்திற்கு துளைகளைப் போடுகிறோம்.

காடுகளையும் மலைகளையும் அழித்துக் கொண்டேயிருக்கின்றோம். பூ மண்டலத்தில் நாம் வசதி வாய்ப்புகளைத் தருகிறோம் என்ற பெயரில் காற்று மண்டலத்தில் இருக்கும் 'ஓசோன்' படலங்களைத் துளைத்து பல ஓட்டைகளை உருவாக்கி இருக்கிறோம். அதன் பிறகு இயற்கை ஏன் இப்படிக் கருணை இல்லாமல் நடந்துகொள்கிறது? என்று கேள்வி கேட்கிறோம். இயற்கை அன்னை செயல்படுகிறாள். அவ்வளவுதான். அவள் தவறாகச் செயல்படுவதில்லை. யார் இயற்கைச் சீர்கேடுகளை உருவாக்குகிறார்களோ அவர்களுக்கு அதே உடல் இருக்கும் போதே உடனடியாகப் பின் விளைவுகள் வந்து விடுவதில்லை.

இயற்கைக்குப் பொறுமை அதிகம். அதற்கு எல்லாம் தெரிகிறது. இயற்கையின் விதி, பயமோ விருப்போ இல்லாமல் செயல்படுகிறது. ஒரு சந்ததியினர் செய்த செயல்களின் பலன் அடுத்த சந்ததியினருக்கு ஏன் வந்து சேர வேண்டும்?

இயற்கையின் பார்வையில் நமக்கு இறப்பு
என்பது கிடையாது. நாம் மறைகிறோம்,
மீண்டும் தோன்றுகிறோம். எந்தக் காட்சியில்
நாம் மீண்டும் தோன்றினாலும் நாம் முன்
காட்சியில் செய்த செயல்களின் பின்
விளைவுகள் நமக்கு வந்து சேரும்.

அதனால்தான் ஒரு பத்து வயது குழந்தைக்கு
ஏன் மரணம் வருகிறது? ஏன் கேன்சர்
வருகிறது? இது போன்ற கேள்விகளுக்கு
அர்த்தமும் இல்லை. அவசியமும் இல்லை.

> இயற்கையின் விதி,
> பயமோ விருப்போ
> இல்லாமல்
> செயல்படுகிறது.

ஒரு பத்து வயது குழந்தை உண்மையில் இங்கு ஏற்கெனவே வாழ்ந்த ஒருவரின் மறு பிறப்புதான். அதே நபர் மீண்டும் பிறக்கலாம். பொதுவாக நாம் ஒவ்வொருவருக்குமே, இதற்கு முன்பு நாம் என்ன செய்தோம் என்பது தெரிவதில்லை; அதன் காரணமாக, ‘நாம் எதற்குப் பொறுப்பு’ என்பதுகூட நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது.

"போன ஜென்மத்தில் நாங்கள் செய்ததற்கு இந்த ஜென்மத்தில் எங்களைப் பொறுப்பேற்கச் சொல்வது என்ன நியாயம்? நாங்கள் முன்பு என்ன செய்தோம் என்றே எங்களுக்குத் தெரியாதே!" என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு.

நியாயத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? நம் சுயநலத்திலிருந்து மட்டும்தான் நியாய அநியாயம் பற்றி நாம் பேசுகிறோம். அதைத் தவிர, கடவுளின் கருணையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கடந்த பிறவிகளில் நாம் என்ன செய்தோம் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். விழிப்புணர்வோடு அடுத்த பிறப்பையும் எடுக்க முடியும். அதற்கு முன் நாம் நம் அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும். இயற்கையோடு கலந்துவிட வேண்டும்.

நம் வாழ்வை இயற்கையிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்திட வேண்டும். அப்படி நாம் செய்யும்போது, இயற்கை நமக்குப் பதில் அளிக்கும். நமக்காக மலரும்

Peather illustration

மரணமே வந்தாலும் இனி ஒரு பயமுமில்லை

கிருஷ்ணர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது சிரித்துக் கொண்டிருந்ததாக ஸஞ்ஜயன் சொல்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனரைப் பார்த்து நிச்சயமாகச் சிரித்திருப்பார். “முட்டாளே! நீ உன்னை ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு சாஸ்த்ரங்களைப் பற்றிப் பேசுகிறாய். யாரிடம் சாஸ்த்ரங்களைப் பற்றிப் பேசுகிறாய் என்று உனக்குத் தெரியுமா! நீ சொல்லும் சாஸ்த்ரங்கள் எல்லாம் என்னால் சொல்லப்பட்டவை. அவற்றின் அர்த்தங்களை உன்னால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?” என்று மனத்திற்குள் சொல்லிச் சிரித்திருப்பார்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நீயோ நானோ இங்கிருக்கும் அரசர்களோ அத்தனைபேரும் இருந்திராத காலம் என்று ஒன்று இதற்கு முன் இருந்தது கிடையாது. இதற்குப் பிறகும் இருக்கப்போவதில்லை.” இந்த ஸ்லோகத்திலிருந்துதான் கீதையின் சாரம் தொடங்குகிறது.

மொத்தக் கீதையின் சாரம் இதுதான். இதைத்தான் ஆத்ம ஞானம் என்று சொல்கிறோம். இந்த ஒரு ஸ்லோகம் உங்களுக்குப் புரிந்து விடுமானால், நீங்கள் உடனடியாக ஞானம் அடைந்துவிடலாம். நித்யானந்தத்தில் நிலைத்துவிடலாம்.

கிருஷ்ணர் சொல்கிறார், நீயும் நானும் இங்கிருக்கும் மன்னர்கள் எல்லோரும் எல்லாக் காலத்திலும் இருந்தோம். நாம் இருந்திருக்காத காலம் என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை. இந்த உடல் இறக்கும்போது, இந்த உடலோடு சேர்ந்து

விழிப்புணர்வோடு அடுத்த பிறப்பையும் எடுக்க முடியும். அதற்கு முன் நாம் நம் அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும்.

Illustration of a flying winged clock

நம்முடைய ஆத்மாவும் இறந்து போய்விடும்
என்று நினைப்பது தவறு. இந்த உடல்
பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம்.
இந்த உடல் இறந்த பின்பும் நாம் இருக்கப்
போகிறோம். எதிர்காலத்தில் நம்மில்
யாரும் இருக்கப் போவதில்லை என்று
நினைப்பது தவறு.

ஜென் புத்த மதத்தில் ஞானத்திற்கான ஒரு அருமையான த்யான நுட்பம் இருக்கிறது, நீங்கள் பிறப்பதற்கு முன்பு இருந்த உங்கள் முகத்தை நினைத்துப் பார்த்து த்யானம் செய்யுங்கள் என்று சொல்வார்கள். கோன் (Koan) எனப்படும் ஜென் ஸூத்ரம், "உங்கள் தாய் தந்தையர் பிறப்பதற்கு முன்பே இருந்த உங்கள் முகம் எப்படி இருந்தது?" என்று கேட்கிறது. அது ஒரு த்யான நுட்பம் என்று சொல்கிறது.

இந்த ஸூத்ரத்தைத் த்யானம் செய்யும்பொழுது, கடந்தகாலத்திலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள், இப்பொழுது நிகழ்காலத்திலும் இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இருக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியும். உங்கள் முகமும் உடலும் மாறிக்கொண்டே இருக்கும்;

ஆனால் நீங்கள் தொடர்ந்து இருக்கப் போகிறீர்கள். இதுதான் ஸத்யம். பிறகு நாம் ஏன் இறந்து விடுவோமோ என்று பயப்படவேண்டும்? நாம் ஏன் மரணத்தைப் பார்த்துப் பயப்படவேண்டும்?

சொர்க்கம் உங்களைத் தேடி வரும்

கிருஷ்ணர் சொல்வது உண்மையாக இருந்தால் நாம் பிறப்பையும் மரணத்தையும் பார்த்துப் பயப்படவேண்டிய அவசியம் என்ன? முதலில் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்றால் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் கிருஷ்ணர் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் காலத்தைப் பற்றி விளக்குகிறேன். காலம் என்பது எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு பெண்டுலத்தைப் போன்றது. (படத்தைப் பார்க்கவும்). படத்தில் உள்ள நடுக்கோட்டின் வலதுபுறத்தில் எதிர்காலம் இருக்கிறது. இடது புறத்தில் கடந்தகாலம் இருக்கிறது.

எதிர்காலம் தொடர்ந்து கடந்தகாலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நொடியும் எதிர்காலம் கடந்தகாலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நிகழ்காலத்தில்தான் கடந்தகாலமும் எதிர்காலமும் சந்திக்கிறது. உங்கள் மனம் என்பது வேறொன்றுமில்லை. உங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மாறி மாறித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இயக்கமே!

உங்கள் கடந்தகாலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ நினைப்பதை நிறுத்திவிட்டால் எண்ணங்களே தோன்றாது.

Time Shaft - Theory Diagram

எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இடையே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் செயல்களின் தொகுப்பே எண்ணம். எதிர்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்கும் அல்லது கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கு உங்கள் மனத்தின் இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக நடக்கிறதோ, அந்த அளவிற்கு எண்ணங்களின் வேகமும் அமைகிறது.

கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
மாறி மாறி நடக்கும் இயக்கங்கள் எந்த
அளவிற்கு குறைகிறதோ, அந்த அளவிற்கு
உங்கள் எண்ணவோட்டம் குறைகிறது.
எண்ணங்களின் எண்ணிக்கை குறைகிறது.

நிகழ்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முயற்சி
செய்து பாருங்கள். உங்களால் முடியாது.
நிகழ்காலத்தை, கடந்தகாலத்திற்கோ அல்லது
எதிர்காலத்திற்கோ எடுத்துச் சென்றுதான்
உங்களால் நினைக்க முடியும்.

உங்கள் மனம் என்பது
வேறொன்றுமில்லை.
உங்கள்
கடந்தகாலத்திற்கும்
எதிர்காலத்திற்கும்
மாறி மாறித் தொடர்ந்து
நடந்து கொண்டிருக்கும்
இயக்கமே!

ஒன்று எதிர்காலத்தை நினைத்து நாம் கவலைப்படுகிறோம் அல்லது கடந்தகாலத்தை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். எண்ண ஓட்டத்தின் அளவு அதிகமாக அதிகமாக நாம் உலக வாழ்க்கையில் அதிகமாக சிக்கிக்கொள்கிறோம்.

உதாரணத்திற்கு ஒரு நொடியில் நீங்கள் நூறு எண்ணங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் (TPS) என்றால், ஒரு நொடியில் நூறு முறை நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் குதித்திருக்கிறீர்கள். எண்பது எண்ணங்கள் தோன்றியிருக்கின்றன என்றால் எண்பது முறை நீங்கள் இந்த இரண்டு காலங்களுக்கு இடையில் குதித்திருக்கிறீர்கள்.

எண்ண ஓட்டம் அதிகமாகும்போது, நீங்கள் நிகழ்காலத்திலிருந்து விலகியிருக்கிறீர்கள். எண்ண ஓட்டத்தின் அளவு அதிகமானால் உங்களுக்கு அதிகக் கவலையும் பிரச்சினைகளும் இருக்கும். எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தால், நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிறீர்கள்.

ஆனந்தப் பேரலை உங்களை ஆட்கொள்ளும் நேரம் ‘நிகழ்காலம்’

உபநிஷதங்கள் ஐந்து கோசங்களைப் பற்றிப் பேசுகின்றன. உங்கள் எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருந்தால் நீங்கள் ஸ்தூல உடலில் இருப்பீர்கள். ஸ்தூல உடலிற்கு அன்னமய கோசம் என்று பெயர்.

எண்ணங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தால், நீங்கள் அதைவிட சக்திவாய்ந்த ப்ராணமய கோசத்தில் இருப்பீர்கள்.

எண்ணங்களின் எண்ணிக்கை இன்னும்
குறைந்தால் (உதாரணத்திற்கு நொடிக்கு 60
எண்ணங்கள்) நீங்கள் மனோமய கோசத்திற்கு
வந்து விடுவீர்கள்.

எண்ணங்கள் மேலும் குறைந்தால், சுகங்களின் கோசமான விஞ்ஞானமய கோசத்திற்கு வருவீர்கள். அதாவது ஆத்மாவுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள். நீங்கள் முற்றிலுமாக நிகழ்காலத்திற்கு வந்துவிட்டால் ஆழமான உட்பகுதியில் அமைந்திருக்கும் அடுக்கில் நீங்கள் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஆத்மாவாக மாறி விடுவீர்கள். இதுதான் ஆனந்தமய கோசம்.

கடந்தகாலம்,
நிகழ்காலம்
மற்றும் எதிர்காலம்
இந்த மூன்றும் சேர்ந்து
ஒரே காலமாக
ஆவதைத்தான்
நாம் நித்யம்
என்கிறோம்

கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இந்த மூன்றும் சேர்ந்து ஒரே காலமாக ஆவதைத்தான் நாம் நித்யம் என்கிறோம்; அதுவே நிலையானது; நித்யமானது; அதையே ஆத்மன் என்று சொல்கிறோம். நீங்கள் நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான் ஆத்மாவை உணர முடியும்; உங்கள் உண்மையான சொரூபத்தை உணர முடியும். ஆனால் தற்போது நீங்கள் தொடர்ந்து கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்து கொண்டேயிருக்கிறீர்கள்.

எண்ணங்களின் எண்ணிக்கை குறையக் குறைய காலம் கடந்து கொண்டிருப்பதைக்கூட உங்களால் உணர முடியாது. உதாரணத்திற்கு, உங்களுக்குப் பிடித்தமானவரோடு இரண்டு மூன்று மணி நேரங்கள் செலவழித்தாலும்கூட, உங்களுக்கு அது சில நிமிடங்கள் போன்றே தோன்றும். ஆனால் உங்களுக்குப் பிடிக்காதவரோடு இருக்கும்போது, சில நிமிடங்கள்கூட நீண்ட நேரமாகத் தெரியும். நீங்கள் தொடர்ந்து உங்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள். நேரம் நீண்டுகொண்டே செல்வதுபோல் இருக்கும். ஏன் நேரம் நகரவேமாட்டேனென்கிறது என்று அதிசயித்துக் கொண்டிருப்பீர்கள்.

Illustration of two people sitting at a table with coffee cups

நேரம் என்பது கால ரீதியானதைவிட
உளவியல் ரீதியானது. அதனால்தான்
காலத்தை அளக்கும் அளவீட்டிற்கு
வேதத்தில் க்ஷணம் என்ற வார்த்தையை
உபயோகிக்கிறார்கள். க்ஷணம் என்றால்

ஒரு நொடி கிடையாது. அது இரண்டு
எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் கால
இடைவெளி.

இரண்டு எண்ணங்களுக்கு இருக்கும்
இடைவெளி நீண்டதாக இருக்கும்போது, நாம்
அதிக நேரம் நிகழ்காலத்தில் இருக்கிறோம்.

க்ஷணம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது, அது அவரவர்களுடைய மனம் இயங்குவதைப் பொறுத்து அமைகிற விஷயமாக இருக்கிறது! பொதுவாக நம்மில் பெரும்பாலாேனோரின் க்ஷணம் சில மைக்ரோ செகண்டாகக்கூட இருக்கும். காரணம் நாம் தொடர்ந்து எண்ணவோட்டங்களினால் அடித்துச் செல்லப் படுபவர்களாக இருக்கிறோம், எண்ணங்களில் மூழ்கடிக்கப்படுகிறோம்.

உங்களுக்குள்
எண்ணங்களே
எழாதபோது
உங்களை
நீங்கள்
ஆத்மா என்று
உணர்வீர்கள்.

நம்முடைய ஒரு நொடிக்கான எண்ண ஓட்டங்கள் குறைவாக இருக்கும்போது, இயல்பாக நாம் பரவசத்திலும் ஆனந்தத்திலும் இருக்கிறோம். எண்ணங்கள் குறைவாக இருக்கும்போது எவ்வளவு நேரம் கடந்தது என்பதே நமக்குத் தெரிவதில்லை. அப்போது நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். நம் எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருக்கும்போது நாம் நரகத்தில் இருக்கிறோம்.

சொர்க்கம், நரகம் என்பது வேறு ஒன்றும் இல்லை; நாம் எத்தனை எண்ணங்களை, நம் மனத்திற்குள் அனுமதித்து, அவற்றை ஊக்கப்படுத்தினோம் என்பதைப் பொறுத்ததே! அதனால்தான் நான் எப்போதும் சொல்கிற ஒரு ஸத்யம்: சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியானது அல்ல. அது உளவியல் ரீதியானதே!

எண்ணங்கள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். அந்நமய கோசத்தைப் பிடித்துக்கொண்டு நீங்கள் ஒரு உடல் என்று நம்பிக் கொண்டிருப்பீர்கள். எண்ணிக்கை குறையும்போது, நீங்கள் உங்களை மனம் என்றும், உணர்ச்சி என்றும் நினைக்கிறீர்கள்.

உங்களுக்குள் எண்ணங்களே எழாதபோது, உங்களை நீங்கள் ஆத்மா அல்லது இருப்பு என்று உணர்வீர்கள். அப்பொழுது நீங்கள் நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பீர்கள்.

எந்த மனிதருக்கு எண்ணங்களே இல்லையோ அந்த மனிதரால்தான், “நீ எல்லாக் காலங்களிலும் இருப்பாய்,” என்று கிருஷ்ணர் சொல்கிற ஸத்யத்தைப் புரிந்துகொள்ள முடியும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். நீங்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது உங்களுடைய எண்ணவோட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கிறது. உங்கள் சுபாவத்தை, உங்கள் இருப்பை, உங்கள் ஆத்மாவை உணர்ந்துகொள்வதற்கான பொறுமையோ, சக்தியோ உங்களிடம் இல்லை. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது மட்டுமே, நீங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாக் காலங்களிலும் இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நீங்கள் கடந்தகாலத்தில் இருந்தீர்கள், நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இருப்பீர்கள். உங்களுக்கு மரணம் கிடையாது.”

இப்படிஃ கிருஷ்ணர் சொல்லும்போது, நீங்கள் நித்ய ஆத்மா, நிலையான விழிப்புணர்வு என்றும், உடல் மற்றும் மனத்தைக் கடந்தவர்கள் என்றும் சொல்கிறார். ஆனால் நீங்கள் பரபரப்பாக இருப்பதால், கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஓடிக்கொண்டிருப்பது எப்படி என்பது மட்டும்தான் தெரியும். உங்களுக்குள் நிகழ்காலம் என்ற ஒரு தளம் இருப்பத்தையே உங்களால் நம்ப முடிவதில்லை.

நீங்கள் நிகழ்காலத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், நிலையான விழிப்புணர்விலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் நித்யானந்தம் என்ற உணர்வை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. உங்கள் எண்ண ஓட்டம் அதிகமாக இருக்கும்வரை நீங்கள் நிகழ்காலத்திலிருந்து அதிகத் தொலைவில் இருப்பதால் ஆனந்தத்தை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. உங்கள் எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்போது, உங்களால் உங்கள் சுய உணர்வைத் தெளிவாகப் பார்க்க முடியும், ஆழமாக உணர முடியும்.