குரு தெய்வீகத்திற்கான ங்களின் பாலம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கேள்வி: ஸ்வாமிஜி, குரு, சீடருக்கு எப்படி உதவுகிறார்? அதன் செயல்முறை என்ன?
மொத்தக் கீதையுமே இந்த ஒரு கேள்விக்கான விடைதான். மொத்தக் கீதையுமே இந்த ஒரு செயல்முறைதான். கீதை குரு தம் சீடருக்குத் தர்க்க ரீதியான விளக்கங்களைத் தருவதில் தொடங்குகிறது, பிறகு அனுபவத்தைத் தந்து, சீடரை ஞானத்திற்கான பாதையில் தொடர்ந்து அழைத்துச்சென்று, தாம் வாழும் அதே விழிப்புணர்வுத் தன்மையில் சீடரையும் வாழச் செய்வதில் முடிகிறது.
சீடருடன் பயணித்து இறுதியில்தான் இருக்கும் அந்த உயர்ந்த இறை நிலையிலேயே சீடரையும் நிலை பெறச் செய்கிறார். ஞானத்தை நோக்கிய பாதையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் கீதை தெளிவாக்குகிறது. உங்களால் கேட்க முடிந்தால், அதை உணர முடியும். மொத்தக் கீதையுமே உங்களின் இந்த ஒரு கேள்விக்கான விடைதான். குரு என்பவர் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் இணைப்பு இருக்கிறார். குரு வாழும் விதத்தைப் பார்த்துச் சீடர் உற்சாகமடைகிறார். தாமும் அவரைப்போல் தம்மைத்தாமே உயர்த்திக்கொண்டு, குரு வாழும் அதே நிலையில் வாழ முடியும் என்று உணர்கிறார். அதனால்தான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன், நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக நான் வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.
உங்களுடைய சொந்த தெய்வீக நிலையை உங்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கிற, உங்களைச் சுற்றி இருக்கிற அறியாமை இருளை அகற்றுவதற்காக மட்டுமே குரு அவதரிக்கிறார். குரு என்ற வார்த்தைக்குப் பொருள் அதுதான். குரு என்றால் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு, அறியாமையில் இருந்து ஞானத் திற்கு, உண்மையில் நீங்கள் யார் என்று அறிந்துகொள்ள உதவும் ஞான நிலைக்கு உங்களை எடுத்துச் செல்பவர் என்று அர்த்தம்.
குரு என்பவர்
மனிதருக்கும்
கடவுளுக்கும்
இடையில் இருக்கும்
இணைப்பு.
ஒரு பார்வையின் மூலமாகவோ, ஒரு தொடுதலின் மூலமாகவோ, ஒரு வார்த்தையின் மூலமாகவோ அல்லது ஒரு வார்த்தைகூட இல்லாமலோ, இன்னும் பல வழிகளில் குரு தம் கருணையைப் பரிசாக வழங்குகிறார். இதைத்தான் தீக்ஷை என்று சொல்கிறோம். குரு தம் சீடர் மேல் அன்பை, கருணையைப் பொழியும் நடைமுறை செயலைத்தான் தீக்ஷை என்கிறோம். சீடர் செய்யவேண்டியது எல்லாம் திறந்த மனதோடு குருவின் பரிசை ஏற்றுக்கொள்ளவது மட்டும்தான். ஆனால் அதுதான் கடினமான விஷயமாக இருக்கிறது.
பழைய ஏற்பாட்டின்படி (Old Testament) ஆதாமும், ஏவாளும் செய்த முதல் பாவம், தங்கள் தெய்வீக தன்மையை மறந்ததுதான். அந்தப் பாவத்தை குரு நிவர்த்திக்கிறார். நீங்கள் அனுமதித்தால், அவர் உங்களை உங்களுடைய தெய்வீக நிலைக்கு மீண்டும் எடுத்துச் செல்ல முடியும்.
அதைத்தான் தம் உபதேசங்கள் மூலம் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் செய்கிறார்.
முதலில் அர்ஜுனன் சொல்வதைப் பொறுமையோடு கேட்கிறார்; அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்; அவருடைய சந்தே தகங்களைப் போக்குகிறார். தேவைப்படும்போது கடிந்துகொள்கிறார்; கடைசியில் தம் உண்மையான ரூபத்தைக் காட்டுகிறார்.
குருவினுடைய சுபாவம், இயல்பு கருணை மட்டும்தான். சீடர் ஞானம் அடையும்வரை அவர் திருப்தி அடைவதில்லை. சீடரை ஞானம் அடையச் செய்வதற்கான ஒரே வழி, சீடருடைய அஹங்காரத்தை அழிப்பதுதான்.
அப்படி அழிக்கும்பொழுது சீடருக்கு வலி ஏற்படுகிறது. இந்தச் செயல்முறையும்கூட ஸ்தூல உடலில் நடக்கும் அறுவை சிகிச்சைப் போன்றதே. இங்கே குருவே அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அறுவை சிகிச்சையை நடத்துகிறார். அறுவை சிகிச்சையின் பலன்களைப் புரிந்து கொண்ட சீடர் அது நடைபெறுவதற்கு ஒத்துழைத்துப் பலனடைகிறார்; ஜீவன் முக்தராகிறார்.
கேள்வி: எப்பொழுது பகவத் கீதை உலகிற்கான பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்படும்?
டேவிட் ஹாக்கின்ஸ் என்ற புகழ் பெற்ற உளவியல் நிபுணர் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்களைப் பற்றி மதிப்பீடு செய்து, மனிதன் செல்லவேண்டிய, விஞ்ஞானபூர்வமான, உறுதிப்படுத்தப்பட்ட பாதை எது என்பதைப் பற்றி ஆராய்ச்சி கள் செய்திருக்கிறார். அதில் கீதைக்கு அவர் முதலிடம் தருகிறார். கீதை மிக உயர்ந்த ஸத்யங்களை உணர்த்துகிறது என்கிறார்.
கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான ஸத்யங்களை நீங்கள் திறந்த மனதோடு கேட்கும்போது, அவை உங்கள் இருப்புத் தன்மையின் ஆழம்வரை ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அதில் கீதைக்கு இணையாக வேறு எந்த சாஸ்த்ரங்களும் கிடையாது. அதனால்தான் கீதையைப் பற்றிச் சொல்லும்போது, அது சாஸ்த்ரம், ஸூத்ரம் மற்றும் ஸ்தோத்ரம் என்று சொல்கிறேன். கீதை நமக்கு ஞானத்தைத் தரும் சாஸ்த்ரமாகவும், பக்தியைத் தரும் ஸ்தோத்ரமாகவும், த்யானத்தைத் தரும் ஸூத்ரமாகவும், இந்த மூன்றும் இணைந்த ஒரே புத்தகமாகவும் இருக்கிறது.
சீன தேசத்தவர்கள் 'ஐ சிங்' என்ற நூலைப் படிக்கிறார்கள். அந்த நூலை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் இந்த 'ஐ சிங்' புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டுவார்கள். அல்லது குச்சிகளின் மூலமாக ஒரு எண்ணை உருவாக்கி, அந்த எண் உள்ள பக்கத்தைப் படிப்பார்கள். அந்தப் பக்கத்தில் உள்ள கருத்துகளில் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்கும்.
பலர் பைபிளையும் இதே முறையில்
படிப்பார்கள். கீதையையும் நாம்
அப்படிப் பயன்படுத்தலாம். கீதையில்
உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும்
பதில்கள் இருக்கின்றன. இறுதி ஸத்யத்தை
வெளிப்படுத்தும் நூலாக அது இருக்கிறது.
கேள்வி: அர்ஜூனன் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையே கேட்கிறார்! ஸத்யத்தைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜூனனிடம் பக்குவம்இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பிறகு ஏன் கிருஷ்ணர் அர்ஜூனனுடன் நேரத்தை வீணடிக்கிறார்?
அர்ஜூனன் மகாபாரதத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களுடைய பிரதிநிதி மட்டுமல்ல; அவர் ஒரு மன்னர். ஒரு மனிதராக உடல் அளவிலும் மன அளவிலும் உங்களுக்கு இருக்கும் எல்லாக் குறைகளும், பலவீனங்களும் அர்ஜூனனுக்கும் இருந்தன.
அர்ஜூனன் கிருஷ்ணருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவருடைய பலவீனங்கள், ஸம்ஸ்காரங்கள் என்னும் எண்ணப்பதிவுகள் வெளியேறின. அதனால்தான் கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பொறுமையாக இருந்தார். இந்த மொத்த மனித சமுதாயத்திற்கும் குருவினுடைய கருணை தேவைப்படுகிறது. மொத்த மனித சமுதாயமும் குருவின் கருணையை வேண்டி நிற்கிறது.
ஒரு இளவரசராக, போர்வீரராக அர்ஜூனன் அஹங்காரத்தின் அவதாரமாக இருக்கிறார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் 'பழம் பழுத்தப் பிறகுதான் மரத்திலிருந்து விழ முடியும்' என்ற ஒரு பழமொழி உண்டு. அதேபோல் அஹங்காரம் பழுத்தால் மட்டும்தான் விழும். அஹங்காரம் பழுக்கவிட்டால், அதை விட்டுவிட முடியாது. சரியான புரிதல் இல்லாமல் அடக்கமாக இருக்க முயற்சி செய்பவர்களுக்குள் எதிர்மறையான அஹங்காரம் இருக்கும். அதை விட்டுவிடவே முடியாது. அதை விட்டுவிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஒரு சின்ன கதை.

அக்பரின் அரசவையில் பீர்பால் என்னும் புத்திசாலி அமைச்சர் இருந்தார். ஒரு நாள் அக்பர் பீர்பாலிடம் இந்த நாட்டில் உள்ள நான்கு பெரிய மூட்டாள்களை அழைத்து வருமாறு சொன்னார். பீர்பால் மூட்டாள்களைத் தேடத் தொடங்கினார்.
ஒரு மனிதன் தம் தலையில் ஒரு பெரிய தட்டைச் சுமந்துகொண்டு திரிவதைப் பார்த்தார். அந்தத் தட்டில் கொஞ்சம் உணவு, துணி, விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. பீர்பால் அவரிடம், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர் சொன்னார், "ஐயா, என் மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறாள். அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அந்தக்க குழந்தைக்குப் பரிசளிப்பதற்காக இந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்கிறேன்," என்றார். ஆஹா! ஒரு மூட்டாளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பீர்பால் மிகவும் சந்தோஷப்பட்டார்.
அடுத்த நாள் பீர்பால், ஒரு கழுதையோடு பயணம் செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார். அவர் தம் தலையில் புல் கட்டைச் சுமந்துகொண்டு சென்று கொண்டிருந்தார். பீர்பால் கேட்டார், "நீ ஏன் புல் கட்டைச் சுமந்துகொண்டு நடக்கிறாய்? அதைக் கழுதையின் மேல் வைக்கலாமே," என்றார்.
அதற்கு அவர் சொன்னார், "ஐயா என்னுடைய கழுதை சினையாக இருக்கிறது.
அதற்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று
நானே சுமக்கிறேன்." ஆஹா, இன்னொரு
மூட்டாளும் கிடைத்துவிட்டார் என்று
பீர்பாலுக்கு ஒரே சந்தோஷம்.
மொத்த
மனித சமுதாயத்திற்கும்
குருவினுடைய கருணை
தேவைப்படுகிறது.
இந்த இருவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்ற பீர்பால் மன்னரிடம் அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை விளக்கினார். அக்பர் கேட்டார், "நான் உன்னை நான்கு முட்டாள்களைக்கொண்டு வரச் சொன்னேன். இருவர்தானே இருக்கிறார்கள். இன்னும் இருவர் எங்கே?"
பீர்பால் பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னார், "இந்த இரண்டு முட்டாள்களையும் கூட்டி வந்தது மூன்றாவது முட்டாள். அவர்களைக் கூட்டி வரச் சொன்னது நான்காவது முட்டாள்!"
அக்பர் ஒரு புத்திசாலியான, நகைச்சுவையான மனிதர். பீர்பாலின் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு, வந்தவர்களுக்குப் பரிசளித்து அனுப்பி வைத்தார்.
பலன்களை
எதிர்பார்க்காமல்
கடமையைச் செய்ய
ஒருவரால் முடிந்தால்,
அவரைக் காட்டிலும்
சக்தி வாய்ந்தவராக
ஒருவரும்
இருக்க முடியாது.
அவர் ஒரு நல்ல அரசர். அஹங்காரத்தைத் தவிர அவரிடம் எல்லாம் இருந்தது.
ஒரு அரசருக்கு அவர் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் இருக்கிறது. தம் மனத்தை விட்டுவிட வேண்டுமென்று விரும்பும்போது, தம் வாழ்க்கையில் மேற்கொள்கிற மற்ற விஷயங்களைச் செய்யும்போது எந்த அளவிற்குச் சக்தியையும் கவனத்தையும் செலுத்துவார்களோ, அந்த அளவு சக்தியையும் கவனத்தையும் இந்த முயற்சிக்கும் செலுத்துவார்கள். வெளியுலகத்தில் எப்படிச் சாதிப்பார்களோ அதே போன்று, அதே சக்தியையும் அதே கவனத்தையும் பயன்படுத்தி உள்ளுலகத்திலும் சாதிப்பார்கள்.
பாரத கலாச்சாரத்தில் உயர்வாக மதிக்கப் பட்ட பல ஞானிகள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதற்கு ஜனக மஹாராஜா ஒரு உதாரணம். பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய ஒரு மன்னர் தாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் பற்றுகொள்ளாமல், அதன் பாதையில், திட்டத்தின் செயல்முறையில் மட்டும் தம் முழுக் கவனத்தைச் செலுத்தும்போது, அவரைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக ஒருவரும் இருக்க முடியாது.
கிருஷ்ணர், மொத்த மனித சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக அர்ஜூனனைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் மொத்த மனித குலத்திற்கும் போதிக்கிறார்.
கேள்வி: நீங்கள் தத்துவவாதிகளை விமர்சிக்கிறீர்கள். அது சரிதானா? மனித விழிப்புணர்விற்காக பல தத்துவவாதிகள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்களே!
மனித விழிப்புணர்வின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்போது தத்துவவாதிகள் தத்துவவாதிகளாக இருப்பதில்லை. அவர்கள் ஆச்சாரியர்களாக, ஞானிகளாக மாறி விடுகிறார்கள்.
நான் வார்த்தைகளோடு விளையாடுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. தொன்று தொட்டு எல்லாக் காலங்களிலும் இரண்டு வகையான அறிஞர்களை நீங்கள் பார்க்கலாம். ஒரு வகையினர், தங்கள் உள்உலக, வெளிஉலக அனுபவங்களின் அடிப்படையில் கற்பிக்கும்போது, கேட்பவரின் மேல் ஆழ்ந்த மரியாதைகொண்டு, நேர்மையாக உபதேசிக்கிறார்கள்.
இரண்டாம் பிரிவினர், தாங்கள் படித்ததையும் மற்றவர்களின் அனுபவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உபதேசிக்கிறார்கள். என்ன படித்தார்களோ அல்லது கேட்டார்களோ அதை அவர்கள் தங்களுடைய அனுபூதியாக மாற்றாமல், தாங்கள் சொல்லும் ஸத்யங்களை அனுபவமாக உணராமல் இருப்பார்கள். இவர்களைத்தான் மேதைகள் அல்லது தத்துவவாதிகள் என்று சொல்கிறேன்.
மனித விழிப்புணர்வின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்போது தத்துவவாதிகள் தத்துவவாதிகளாக இருப்பதில்லை. அவர்கள் ஆச்சாரியர்களாக, ஞானிகளாக மாறி விடுகிறார்கள்.
அடுத்தவர்களை அரைகுறையாக ஆராய்வதற்கு எந்தப் புத்திசாலித்தனமும் தேவையில்லை. ஏற்கனவே ஒரு கருத்தை உருவாக்கிவிட்டு, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டு, தமது அனுமானம் சரிதான் என்று நிரூபிப்பதற்காக முயற்சி செய்பவர்கள் தத்துவவாதிகள்.
தமது அனுமானத்திற்கு எதிராக ஒரு ஸத்யம் இருந்தால், அதை அவர்கள் புறக்கணித்து விடுவார்கள். இந்தக் காலத்தில் செய்யப்படும் பல பெரிய ஆய்வுகளும் இந்த மாதிரி நடப்பதாகவே தோன்றுகின்றன. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களுக்குள் ஏராளமான கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் இருக்கின்றன.
சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) என்னும் மனோதத்துவ அறிஞர், "மனிதன் சுபாவத்தினாலேயே துக்கமயமானவர்," என்று சொன்னார். காரணம், அவர் தம் வாழ்நாளில் ஒரு ஞானியைக்கூட சந்திக்கவில்லை. எல்லா மனிதர்களும் துக்கத்தில் மட்டும்தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே அவர் முடிவு செய்துவிட்டார். அதன் பிறகு அவருடைய வாழ்வின் லட்சியமே தம் முடிவைச் சரி என்று நிரூபிப்பதற்காக ஆதாரங்களைத் திரட்டுவது மட்டும்தான்.
ஃப்ராய்டின் நண்பரும் சக ஊழியருமான கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்தார். ரமண மஹரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆனால் அவரைச் சந்திக்கவில்லை. தம் வாழ்நாளின் பின்னாளில், அந்த ஆனந்தமயமான ஞானி இரமண மஹரிஷியை தாம் சந்தித்தால், வாழ்நாள் முழுவதும் தாம் உழைத்து உருவாக்கிய கருத்துக்களும், தம் வாழ்நாள் சாதனையும் தகர்ந்துவிடுமோ என்ற பயத்தினால்தான் அவரைச் சந்திக்கவில்லை என்பதை அவர் ஒத்துக் கொண்டார்.
மேலை நாட்டு தர்க்க சித்தாந்தத்தை உருவாக்கியவர் ரெனே டெஸ்கார்டெஸ் (Rene Descartes) என்ற பிரஞ்சு தேசத்து தத்துவவாதி. அவர், “நான் நினைப்பதால், நான் இருக்கிறேன்,” என்று சொன்னார் இரக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவரைப் போன்ற ஒரு புத்திசாலியான மனிதர்கூட ஆழமாகச் சென்று, உண்மையில் நாம் நம்மை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை நிறுத்தினால்தான் ‘நாம் யார்’ என்பதை உணர்ந்துகொள்ள முடியும் என்ற உண்மையை உணர விரும்பவில்லை என்பதுதான்.
அவ்வாறு உணராதவரை, நாம் நம் மனத்தின் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருப்போம். மனத்தின் அடிமையாக மட்டுமே இருப்போம். மனத்தின் எஜமானனாக இருக்க முடியாது. அடிமையாக இருப்பதில் நமக்கு என்ன பெருமை?
அதே சமயம் கிரேக்க தத்துவவாதி சாக்ரடீஸைப் போன்று தாம் உணர்ந்த உண்மைக்காக உயிரைக்கூடத் தியாகம் செய்த பல தத்துவஞானிகளும் இருக்கிறார்கள். மனித உணர்வு நிலையை உன்னத நிலைக்கு உயர்த்திய அத்தகைய தத்துவவாதிகள் உண்மையில் ஞானிகளே.
உண்மையில் நம்
எண்ணங்களை
நிறுத்தினால்தான்
நாம் யார் என்பதை
உணர்ந்துகொள்ள
முடியும்.
கேள்வி : துரோணாச்சாரியர், பீஷ்மாச்சாரியர் போன்ற மதிப்பிற்குரிய ஆச்சாரியர்களை எதிர்த்து நான் போரிட மாட்டேன் என்று அர்ஜுனன் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? கற்றுக் கொடுத்த ஆச்சாரியர்களுக்கு எதிராகப் போர் புரிய வேண்டாம் என்றுதான் எந்தப் புத்திசாலி மாணவரும், தர்மத்திற்குக் கட்டுப்பட்ட மாணவரும் நினைப்பார்?
நீங்கள் சொல்வது சரி. இதே காரணத்தைத்தான் அர்ஜுனனும் சொல்கிறார். தான் பெரியோர்களை, ஆச்சாரியர்களை எப்படி நடத்தினோம் என்பதை வைத்துத்தான் எதிர்கால சந்ததிகள் தம்மை எடைபோடுவார்கள் என்பது அர்ஜுனனுக்குத் தெரியும்.
எதிர்காலத்தில் மக்கள், "எப்படிப்பட்ட மனிதர் இவர்! தம்மை நேர்மையான, தர்மப்படி வாழும் இளவரசர் என்றும், பெரிய போர்வீரர் என்றும் சொல்லிக்கொண்டு, தமக்கு வித்தை கற்றுக் கொடுத்த, வணங்கி போற்றத்தக்க ஆச்சாரியர்களை எதிர்த்துச் சண்டை போட்டுப் போரில் கொன்றிருக்கிறாரே!" என்று சொல்வார்கள். அதனால்தான் அர்ஜுனன் தம் பெயரையும் புகழையும் கவுரவத்தையும் அடையாளங்களையும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்.
"நான் ஆச்சாரியர்களைக் கொல்லமாட்டேன் என்று எல்லோர் முன்னிலையிலும் சொன்னேன். ஆனால் இந்தக் கிருஷ்ணர்தான் என்னைக் கொல்லச் சொன்னார்," என்று அர்ஜுனன் மக்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறார்.
உண்மையில் அர்ஜுனனுக்குப் பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் போர்க்களம்வரை அவர் வந்திருக்க மாட்டார். உண்மையில் யுதிஷ்டிரர் போரிட விரும்பவில்லை. அவரை அவருடைய சகோதரர்கள்தான் போரிடத் தூண்டினார்கள். அவருடைய சகோதரர்கள் பழி தீர்க்க வேண்டுமென்று விரும்பினார்கள்.
திரௌபதி, கெளரவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று நினைத்தார். அர்ஜுனனுக்கு ராஜ்ஜியம் வேண்டும் என்ற ஆசை. அர்ஜுனனுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஒன்று, அவர் போர்க்களத்திற்கே வந்திருக்க மாட்டார் அல்லது எந்தவித தயக்கமும் இல்லாமல் போர் புரிந்து எதிரிகளை வீழ்த்தியிருப்பார்.
> பெரியோர்கள் மற்றும் ஆச்சாரியர்களின் சொல்படி நடக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பான்மை இருக்கும்வரை ஒருவரால் ஸத்யத்தை உணர முடியாது.
ஆனால் இங்கு அர்ஜூனன் குழம்பிப்போய் இருக்கிறார். அவர் பேராசைக்கும் பயத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப் படுகிறார். எப்படியிருந்தாலும் அர்ஜூனன் ஒரு சாதாரண மனிதர்தானே!
நமக்கிருப்பது போன்றே பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கு அர்ஜூனனுக்கும் இருந்தது. பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற ஸம்ஸ்காரங்களின் உருவகமாகப் பீஷ்மர் இருக்கிறார். ஆச்சாரியர்களை மதிக்க வேண்டும் என்ற ஸம்ஸ்காரங்களின் உருவகமாக துரோணாச்சாரியார் இருக்கிறார்.

இந்த இரண்டு ஸம்ஸ்காரங்களையும் கடந்தால்தான் உண்மையை உணர முடியும். பெரியோர்கள் மற்றும் ஆச்சாரியர்களின் சொல்படி நடக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பான்மை இருக்கும்வரை ஸத்யத்தை ஒருவரால் உணர முடியாது.
ஸத்யத்தைச் சொல்வது யாராக இருந்தாலும் சரி, அது ஞானியாகவே இருந்தாலும் சரி, அது உங்களின் சொந்த ஸத்யமாக ஆக வேண்டுமென்றால், அது உங்களின் சொந்த அனுபவமாக உங்களுக்குள் மலர்ந்திருக்க வேண்டும். குருவால்கூட வழிகாட்டத்தான் முடியும். அறியாமை என்னும் இருளை அகற்ற அவர் விளக்கை ஏற்ற முடியும். ஆனால் ஞானம், ‘தன்னை உணர்தல்’ என்பது உங்களுக்குள் தானாகவே மலர வேண்டும்.
