KAILASA Library/பகவத்கீதை/சரணாகதி என்பது உங்கள் வசதியை அடிப்படையாகக் கொண்டது இல்லைSign in
பகவத்கீதை

சரணாகதி என்பது உங்கள் வசதியை அடிப்படையாகக் கொண்டது இல்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

ஓ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பீஷ்மரையும், துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்?

இவர்களைப் போன்ற மேலான ஆச்சாரியர்களை அழித்துவிட்டு வாழ்வதை விட பிக்ஷை எடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்ற பிறகு, நான் அனுபவிக்கும் சொத்துகளும், ஆசைகளும் இவர்களின் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும்.

நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் முன் இருக்கும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் உயிர்வாழ விரும்ப மாட்டோம்.

என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவு செய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.

இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், ஐஸ்வரியங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கும் இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா?

Peacock feather

தெளிவின் உச்சத்தில் சரணாகதி நிகழ்ந்துவிடும்

"எழுந்து போர் புரி...," என்று கிருஷ்ணர் தெள்ளத் தெளிவாக ஏற்கனவே சொல்லிவிட்டாலும் அர்ஜுனன் மீண்டும் பழைய வாதங்களை எடுத்து வைக்கிறார். அர்ஜுனன் அவசியம் போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்பதைக் கிருஷ்ணர் தெளிவாகச் சொல்லியிருந்தாலும் கிருஷ்ணர் சொன்னதையே அவர் கேட்காதது போன்றும் அல்லது சரியாகப் புரிந்துகொள்ளாதது போன்றும் அர்ஜுனன் பேசுகிறார்.

அர்ஜுனன் சொல்கிறார், "கிருஷ்ணா, நீங்கள் இந்த உலகத்தைப் படைத்தவர். உங்களுடைய விருப்பப்படி யாரையும் அழிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. மது மற்றும் கேசின் போன்ற அரக்கர்களை நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் இறைவன் என்பதால் உங்கள் செயல்கள் நியாயமாகலாம். ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எப்படி என் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் கொல்லும் நோக்கத்தோடு போர் புரிய முடியும்?

இத்தகைய புனிதமானவர்களை நான் வணங்க வேண்டும், கொல்லக் கூடாது. இவர்களை எதிர்த்து நான் போர் புரிந்தால் மீளாப் பழிக்கு ஆளாவேன்.

இவர்களைக் கொல்வதைவிட நான் பிக்ஷை எடுத்தோ அல்லது துறவு பூண்டோ வாழ்வதே மேல். இவர்களைக் கொன்று என் கையை இரத்தக்கறை ஆக்கிக்கொண்ட பிறகு நான் எதை அனுபவிக்க முடியும்? அவர்கள் என்னைக் கொல்வது நல்லதா? அல்லது நான் அவர்களைக் கொல்வது

நல்லதா? என்று எனக்குப் புரியவில்லை.
பெரியவர்களையும் உறவினர்களையும்
கொன்றுவிட்டு நாங்கள் எப்படி உயிர்
வாழ்வது?"

அர்ஜுனன் மேலும் தொடர்கிறார், "என்
கடமை எது என்று தெரியாமல் நான்
மனம் குழம்பியிருக்கிறேன். என்னுடைய
துக்கத்தாலும் பலவீனத்தாலும் என்
நிதானத்தை இழந்திருக்கிறேன்.

உண்மையான
சரணாகதி நமக்குள்
நிகழ்ந்துவிட்டால்
நாம்
பட்டறிவுப்பூர்வமான
விளக்கங்களைக்
கேட்டுக்கொண்டிருக்க
மாட்டோம்.

என்னுடைய குழப்பத்திற்கு எந்தத் தீர்வும் எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் கொன்றுவிட்டு இந்தப் பூவுலகத்திற்கோ அல்லது மேலுலகத்திற்கோ அதிபதியானாலும் அதனால் என்ன பயன்? இந்த நிலையில் கிருஷ்ணா, நான் உங்களிடம் வேண்டுகிறேன்.

எது எனக்கு நல்லது என்று நீங்கள்தான் தெளிவுப் படுத்த வேண்டும். இப்பொழுது நான் உங்களுடைய சீடன். என் ஆத்மா உங்களிடம் சரணடைந்துள்ளது. தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள்."

நான் உங்களிடம் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்ல வேண்டும். இங்கு அர்ஜுனன், "என் ஆத்மா உங்களிடத்தில் சரணடைந்துள்ளது," என்று சொல்கிறார். அது ஒரு பொய்.

உண்மையிலேயே அர்ஜுனனுடைய ஆத்மா கிருஷ்ணரிடம் சரணடைந்திருந்தால், கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, வெறுமனே அதை மட்டும் அர்ஜுனன் செய்திருப்பார். கிருஷ்ணரிடம் பட்டறிவுப்பூர்வமான விளக்கங்களைக் கேட்டிருக்க மாட்டார். அர்ஜுனனின் நிலையில் இருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நடந்த நிகழ்ச்சி:

ஒரு நாள் நடு இரவில் எனக்கு ஒரு பக்தரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒரு அரசு அதிகாரி. ஒரு முக்கியமான பிரச்சினைக்கான தீர்வு வேண்டி அவர் என்னைத் தொடர்பு கொண்டார்.

நான் அவருக்கு உதவாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். "ஐயா காலையில் வாருங்கள். இதைப் பற்றி நாம் பேசுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம்," என்று சொன்னேன். ஆனால் அவர் தமக்கு உடனே அப்போதே தீர்வு வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டார்.

அதனால் அவர் விவரித்த பிரச்சினையை ஆழ்ந்து கேட்டுவிட்டு, "அதை நான் பார்த்துக்கொள்கிறேன்," என்று சொன்னேன். ஆனால் மறு நாள் அவர் ஆச்'ரமத்திற்கு வர வேண்டும், அப்பொழுதுதான் அந்தப் பிரச்சினையைப் பற்றி முழுமையாக ஆராய முடியும்; மேலும் அதே போன்ற பிரச்சினை மீண்டும் வராமல் இருக்கக்கூடிய வழியையும் ஆராய முடியும் என்றும் சொன்னேன். அதற்கு அந்த மனிதர், "நான் காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் ஆச்'ரமத்திற்கு வர முடியாது," என்று சொன்னார்.

Text inside a paper scroll

அவர் பிரச்சினையைச் சொன்னபோது, தம் வாழ்க்கையே என் காலடியில் இருக்கிறது என்றார். ஒரு சீடராக, முழுமையாக சரணடைந்துவிட்டதாகச் சொன்னார். நான் மட்டும்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்றார். ஆனால் நான் மறுநாள் காலையில் ஆச்'ரமத்திற்கு வாருங்கள் என்றால், "இல்லை, நான் அலுவலகத்திற்குப் போக வேண்டும்" என்கிறார்!

அர்ஜுனன் இதே நிலையில்தான் இருக்கிறார். தாம் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் கிருஷ்ணர், ஒரு செயலைச் செய்யச் சொல்லி உத்தரவு கொடுத்தால் அதைச் செய்வதற்கு அவர் தயாராக இல்லை. குழம்பி நிற்கிறார்!

குழப்பத்தினால் வரும் ச'ரணாகதி உண்மையான ச'ரணாகதி அல்ல. ஏனென்றால் நீங்கள் சரியான செயலைத்தான் செய்கிறீர்களா என்றுகூட உங்களுக்கே தெரியாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். சா'ஸ்தரத்தைப் படித்து அதன் ஞானக்கருத்துக்களைப் புரிந்து கொண்ட பிறகு உணர்ந்த பிறகு வரும் ச'ரணாகதிதான் உண்மையான ச'ரணாகதி. அர்ஜுனன், "நான் குழப்பமடைந்திருக்கிறேன்," என்று சொல்லும் பொழுதே, அவர் வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே சரணடைந்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, நீங்கள் உங்களுக்குச் சரி என்று எது படுகிறதோ அதைச் செய்ய வேண்டும் அல்லது குரு சொல்வதைச் செய்ய வேண்டும்.

இங்கே அர்ஜூனன் தாம் என்ன நினைக்கிறாரோ அதையே கிருஷ்ணர் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறார். கிருஷ்ணர் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதைக் கேட்க அவர் தயாராக இல்லை. அதனால்தான் அர்ஜூனன், தாம் சரணடைந்துவிட்டதாக சொன்னாலும் அவர் கிருஷ்ணர் சொல்வதைப் போன்று செய்யவில்லை.

உங்கள் விதியைேயே மாற்றி எழுதும் புத்திசாலித்தனம் உங்களுக்கு உண்டு

பல நேரங்களில் மக்கள் என்னிடம் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கேட்பார்கள். "எனக்குப் பிரச்சினை இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு அறிவுரை சொல்லுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்," என்று சொல்வார்கள்.

"சரி, கொஞ்ச நாள் ஆச்ரமத்தில் வந்து தங்குங்கள் அல்லது ஒரு தியான வகுப்பில் கலந்துகொள்ளுங்கள்," என்று சொல்வேன். ஏனென்றால் அவர்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவர, அவை அவர்களுக்கு உதவும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்படிச் சொன்ன உடனே, ஒரு டஜன் காரணங்களைக் காட்டித் தங்களால் அப்படிச் செய்ய முடியாது என்பார்கள். நான் சொல்வதைச் செய்ய முடியாததற்கு என்னென்ன முக்கியக் காரணங்கள் தடைகளாக இருக்கின்றன என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆச்ரமத்தில் வந்து தங்குவதற்கோ, தியான வகுப்பில் கலந்துகொள்வதற்கோ முன் தாங்கள் சில முக்கியமான பணிகளைச் செய்தே ஆக வேண்டுமென்றும், அதற்குமுன் வேறு எதைப் பற்றியும் யோசிக்கக்கூட முடியாது என்றும் சொல்வார்கள்.

சிலர் சொல்வார்கள், "சரியான சந்தர்ப்பம் கூடி வரவில்லை. சரியான நேரம் வரும்வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்."

உண்மையில், ஒரு ஞானியின் வாழ்க்கை அவருடைய கைகளில் இல்லை. அவர் எதைச் செய்தாலும் அதைச் செய்ய வைப்பது பராசக்திதான்.

Illustration

முட்டாள்தனம்... வடிகட்டிய முட்டாள்தனம்! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏதோ தெரியாத விதியினால் கட்டுப்படுத்தப்படவில்லை. செயலைச் சரியான முறையில் நீங்கள் செய்ய முடியாததற்கு விதியின் மீது நீங்கள் பழி போட முடியாது. உங்கள் தலையெழுத்து அல்லது விதி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

ஆனால் உண்மையில் பார்க்கும்பொழுது, ஒரு ஞானியின் வாழ்க்கைதான் அவருடைய கைகளில் இல்லை. அவர் எதைச் செய்தாலும் அதைச் செய்ய வைப்பது அந்தப் பிரபஞ்ச சக்திதான்; பராசக்திதான். பராசக்தியினுடைய வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் என் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. ஒரு வார்த்தையைக்கூட பேச முடியாது. ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்யும் சக்தி இருக்கிறது. அதனால் அர்ஜுனனும் தம் விருப்பம்போல் செய்கிறார்.

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தாம் செய்யவேண்டியது என்ன என்று கேட்பதுகூட நான் சற்றுமுன் உங்களுக்குச் சொன்ன ஒரு நிகழ்வை போன்றதுதான். அவர்கள் விரும்பியதை நான் சொல்லும்பொழுது மட்டுமே, அதை ஒப்புக்கொண்டு, பின்பற்ற தயாராக இருக்கிறார்கள்.

அஹங்காரமெனும் புற்றுநோயைக் குணப்படுத்த வந்தவர்

அதேபோல் அர்ஜுனனும் கிருஷ்ணர் சொல்வது தமக்கு உடன்பாடுடையதாக இருந்தால் மட்டும் அதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார். இது கிருஷ்ணருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆனால் பொங்கும் கருணையின் காரணமாகக் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தொடர்ந்து ஸத்யத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இங்கே கிருஷ்ணர் சாஸ்த்ரத்தைச் சொல்லத் தொடங்குகிறார். இதற்கு முன் கிருஷ்ணர் சொன்ன இரண்டு ஸ்லோகங்களும் ஸூத்ரங்கள்தான். ஆனால் அவற்றை உள்வாங்குவதற்கு அர்ஜுனன் தயாராக இல்லாதால் அவர் ஞானத்தை விளக்கும் சாஸ்த்ரங்களைத் தருகிறார். இந்தத் தருணம்வரை அர்ஜுனன் இன்னும் முழுமையாகக் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை. அவர் குழப்பத்தில் இருக்கிறார். தம்முடைய கடமை எதிரிகளைப் போரிட்டு ஜெயிப்பது, தேவையென்றால் அழிப்பது என்பது அவருக்கே தெரியும்.

ஆனால் இங்கு அவருடைய ஆச்சாரியர்களும், உறவினர்களும், மூத்தோர்களும் எதிரிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள உறவின் முறையால், அவர்கள் உறவினர்கள் என்று தன்னுள் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களினால் எழுந்த குழப்பத்தால் செய்வதறியாது தடுமாறுகிறார். அதனால்தான் அவர்களுடன் போரிடுவதைத் தவிர்ப்பதற்காகத் தமக்குத் தெரிந்த அத்தனை சாஸ்திரங்களையும் பாரம்பரியத்தையும், அவர் இதுவரை கேட்டு வந்த உறுதி செய்யப் படாத செய்திகளையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அர்ஜுனனின் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் முழுத் தெளிவோடு புரிந்துகொண்ட கிருஷ்ணர், தம் லக்ஷியப் பாதையின் அடுத்த கட்டப் பணியாக, அர்ஜுனனுக்குள் இருக்கும் உறவுகள் என்னும் அடையாளங்களை அழிக்கும் வேலையைத் தொடங்குகிறார். உங்களுக்குள் இருக்கும் அஹங்காரம் என்னும் கொடிய புற்றுநோயை அறுத்தெடுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்தான் குரு. கீதை முழுவதும் கிருஷ்ணர் இதைத்தான் செய்கிறார். அர்ஜுனன் பாராட்டுக்குரியவராகிறார். ஏனென்றால் அந்த அறுவை சிகிச்சை முழுமையாக நடைபெறுவதற்கு அவர் அனுமதிக்கிறார்.

சரணாகதி அடையும் குணமே உங்களைக் காப்பாற்றிவிடும்

பலவீனமானவர்கள் தங்கள் அடையாளங்களை இழக்க விரும்பாமல் பாதியிலேயே அறுவை சிகிச்சையிலிருந்து, போர்க்களத்திலிருந்து தப்பி ஓடியிருப்பார்கள். ஆனால் குரு சொன்னதைக் கேட்க வேண்டும், அவர் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்கிற வைராக்கியம்தான் அர்ஜுனனுடைய சிறப்பு.

அதனால் அவர் மன்றாடுகிறார், "கிருஷ்ணா
நான் என்ன செய்ய வேண்டுமென்று
சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன்.
நீங்கள் எனக்கு அபயம் அளிப்பவர்."

துக்ககரமான
சூழ்நிலைக்குத்
தீர்வைத் தராத
எந்த ஸத்யமும்
இறுதி
ஸத்யமாக
இருக்க முடியாது

குருவிடம் சரணடைவதற்குத் தயாராக
இருக்கும் மன நிலை அர்ஜூனனைக்
காப்பாற்றுகிறது. அவர் போரில் வெல்வதற்கு
உதவுகிறது. உண்மையில் அர்ஜூனன்
புரிந்த யுத்தம் வெளியில் நடக்கவில்லை;
அவருக்குள்ளேதான் நடக்கிறது.

நன்றாக விழிப்புணர்வோடு பார்த்தால், நாமும் ஒவ்வொரு நாளும் இந்த மஹாபாரத யுத்தத்தை நமக்குள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மைப் பூமியோடு இணைத்து வைத்திருக்கிற எல்லாப் பந்தங்களையும் அதாவது அஹங்காரம், மனம், அடையாளங்கள் இவற்றை அழிப்பதற்காக நாம் இந்தப் போரில் ஈடுபட்டாக வேண்டும்.

நீங்கள் உங்களுடையது என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ, நீங்கள் யார் என்று நினைக்கிறீர்களோ அதற்கும் ஸத்யத்திற்கும் சம்மந்தமில்லை.

உங்களை நீங்களே அறிந்துகொள்ளும் பயணத்திற்கு குருவால்தான் வழிகாட்ட முடியும். கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் வழி நடத்தப்படுவதற்கு, முதலில் நீங்கள் சரணடையும் மனோ நிலையில் இருக்க வேண்டும்.

Hands playing a flute
Lord Krishna