இரக்கம் என்பது கருணையாகாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் அர்ஜுனனின் நிலையைப் பற்றிச் சொல்லும்போது அவர் கொண்டது 'இரக்கம்' என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் 'தம் உறவினர்களோடு போர் புரிய வேண்டாம்' என்று நினைப்பது கருணையின் வெளிப்பாடுதான் என்று சிலர் சொல்கிறார்கள். இரக்கத்திற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம்?
இரக்கத்திற்கும் கருணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நீங்கள் உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ, அவர்களின் மேல் உங்களுக்கு ஏற்படும் உணர்வுதான் இரக்கம். உதாரணத்திற்கு, ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தால், உங்களுக்கு இரக்கம் வருகிறது. நீங்கள் இரக்கப்படுவதற்கு ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.
அகராதியில் வேண்டுமானால், இரக்கமும் கருணையும் ஒரே உணர்வைக் குறிக்கும் இரண்டு வெவ்வேறு சொற்கள் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. நம்மில் பெரும்பான்மையினரால்

இரக்கப்பட முடிகிறது. இரக்கம்
அஹங்காரத்திலிருந்து உதிக்கிறது.
அது நம்முடைய அடையாளங்களில்
இருந்து தோன்றுகிறது.
நாம் நம்முடைய உயர்ந்த நிலையை
மற்றவர்களுக்கு உணர்த்த
வேண்டுமென்று நினைக்கிறோம்.
அதன் மூலம் நம் மதிப்பைத் தெரிவிக்க
முயற்சி செய்கிறோம். இரக்கம்,
நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்
பார்ப்பதினால் உண்டாகிறது.
யாரைப் பார்த்து இரக்கப்படுகிறீர்களோ அவர் இருக்கும் நிலையைவிட, நீங்கள் இருக்கும் நிலை உயர்ந்தது என்று நினைத்தால் மட்டும்தான் உங்களால் இரக்கப்பட முடியும்.
அஹங்காரத்திலிருந்துதான் வன்முறை பிறக்கிறது. அடக்கி வாசிக்கப்படுகிற வன்முறையே இரக்கம். இரக்கம், இந்த வன்முறையின் சாயத்தைப் பூசி க்கொண்டே வெளிப்படுகிறது.
அர்ஜுனனிடம் வன்முறை இருக்கிறது. அவருக்கு இருக்கும் அஹங்காரத்தால் தம் அடையாளங்களை இழந்து விடுவோமோ என்கிற பயம் உண்டாகிறது. அடையாளங்களை இழந்துவிடுமோ என்கிற பயம்தான், உற்றார் உறவினர்கள் மேல் அவருக்கு இருக்கும் இரக்கம் என்ற பெயரில் வெளிப்படுகிறது.
மற்றவர்கள் மேல்
நமக்கு ஏற்படும்
இரக்கம்
கருணையாக
மாற வேண்டுமானால்,
நம் அஹங்காரம்
மறைய வேண்டும்.
தம்முடைய நிலையைப் பற்றிக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்
இப்பொழுது தம்முடைய உறவினர்களைப்
பற்றிக் கவலைப்படுகிறார். அவ்வளவுதான்.
தம் அடையாளங்களை இழந்து விடுவோமோ
என்கிற அவருடைய பயம் மறைக்கப்பட்டு,
அது பிறர் மேல் அவருக்கு ஏற்படும் இரக்க
உணர்வாக, வெளிப்படுத்தப்படுகிறது.
மற்றவர்கள் மேல் நமக்கு ஏற்படும் இரக்கம் கருணையாக மாற வேண்டுமானால், நம்
அஹங்காரம் மறைய வேண்டும். அதுவரை
நமக்கு ஏற்படும் கருணை உண்மையான
கருணையாக இருக்க வாய்ப்பே இல்லை. அது
ஒரு பாசாங்காகவே இருக்கும் அவ்வளவுதான்.
கருணை, அது வெளிப்பட ஒரு பொருள்
தேவையில்லை; அது வெறுமனே, பொங்கி
ஓடிக் கொண்டேயிருக்கும்.
ஒரு ஞானியால் மட்டுமே முழுமையான கருணையை வெளிப்படுத்த முடியும். ஒரு ஞானியின் இயல்பான வெளிப்பாடே கருணைதான். யார் அவர் முன் இருக்கிறார்கள், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி அவர் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஞானி வெளிப்படுத்துகிற, அவரைச் சுற்றி அவர் பாய விடுகிற அவருடைய சக்தியே ஒரு கருணைதான்! ஒரு ஞானியிடமிருந்து கருணை மட்டுமே வெளிப்படுகிறது.
ஒரு ஞானியால் மட்டுமே
கருணையை
வெளிப்படுத்த முடியும்.
ஒரு ஞானியின்
இயல்பான வெளிப்பாடு
கருணை!
தமக்கு எல்லையில்லை என்ற அனுபவத்திலிருந்து, அனுபூதியில் இருந்து கருணை பிறக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு அங்கமாகத் தம்மை ஒருவர் உணரும்பொழுது, தாமும் இறைத்தன்மை தான் என்பதை உணரும்பொழுது அந்த மனிதர் தாமாகவே பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் தம்முடைய பாகமாக உணர்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து, ஒரு இயல்பான கருணை உணர்வு பொங்கிப் பிரவகித்து, அவரைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களையும் அனைத்துப் பொருட்களையும் சென்றடைகிறது. கருணை என்பது இதுவே!
ஒருவருடைய அஹங்காரம் அழிந்து, தன்னைப் பற்றிய தவறான அடையாளங்கள் மறையும்பொழுது கருணை பிறக்கிறது. சொல்லப்போனால் இரக்கமும், கருணையும் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிரான உணர்வுகள்.
கேள்வி: கிருஷ்ணர் ஆர்ய என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆர்ய இனத்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
ஸம்ஸ்க்ரு தத்தில் ஆர்ய என்றால் உண்மையான உயர்க் குடிமகன் என்று அர்த்தம். ஆர்ய என்ற சொல் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களைக் குறிக்கவில்லை. தம் நடத்தையின் மூலம் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துபவரையே குறிக்கிறது. அதனால் ஆர்ய என்ற வார்த்தைக்கும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிவியல் சான்றுகளின்படி ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்குள் எந்த ஆர்ய ஊடுருவலும் நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. இந்தியாவின் பல பாகங்களில் வசிக்கும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கட்டுகதைதான் ஆர்ய படையெடுப்பு. இந்திய கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே திட்டமிட்டு ஆர்ய ஊடுருவலைச் சித்தரித்தார்கள்.

ஆங்கிலேயர்களின் திட்டம் வெற்றியடைந்தது. தென்னிந்தியாவில் கடந்த அறுபது ஆண்டுகளில் பலர் நாத்திகத்திற்கு மாறினார்கள். காரணம் அவர்கள் ஊடுருவல்களையும் மதத்தையும் போட்டு குழப்பிக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு சிறு பகுதியில் இருக்கும் ஆலயங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட இந்தியா மொத்தமும் இருக்கும் ஆலயங்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தியாவிலேயே பிறந்த, பாரத மண்ணிற்கே சொந்தமான உள்நாட்டு மன்னர்கள் இந்த வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார்கள். ஆனால் தங்களுடைய மதத்தை மறுக்கும்படி இவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. மதத்தை மறுத்தால்தான் தங்கள் சொந்த அடையாளத்தைப் பெற முடியும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஸநாதன தர்மம் எனும் வேத அறிவியல் இந்தியாவின் பல பாகங்களில் தானாகவே ஒரே நேரத்தில் வளர்ந்தது. வேத அறிவியலை அடிப்படையாகக்கொண்டு பல மதங்கள் உருவாகின. அதில் ஒன்று இந்து மதம். புத்த மதம், சமண மதம் போன்ற பல பெரிய மதங்களும் ஸநாதன தர்மத்தையே தங்களுடைய ஆதாரமாகக்கொண்டுள்ளன. அவர்களுடைய வேர் மூலம் ஸநாதன தர்மத்திலிருந்தே தோன்றின.
வேத அறிவியலை நன்கு புரிந்து கொண்டவர் ஆர்யர். வேத தத்துவங்களைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ முடிபவர் ஆர்யர். மேன்மையான வேத ஸத்யங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஞானத்தையும் உயர்ந்த குணங்களையும் தம்முடைய நடத்தையில் வெளிப்படுத்துபவர் ஆர்யர்.
கேள்வி: ஸ்வாமிஜி, கீதையைச் சொல்வதற்கு ஏன் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார்?
கீதையைச் சொல்வதற்குக் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம், உலகமே ஒரு போர்க்களம் என்பதால் தான்!
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். வரலாற்றுப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் ஐந்தாயிரம் போர்களைப் புரிந்திருக்கிறோம். போர் செய்வதைத் தவிர நாம் வேறொன்றையும் செய்வதாகத் தெரியவில்லை.
ஒரு போருக்கும் இன்னொரு போருக்கும் இடையில் இருக்கும் காலத்தை, நாம் ‘அமைதி காலம்’ என்று சொல்ல முடியாது, ஏனென்றால் அது, அடுத்த போருக்கு ஆயத்தமாகும் காலம்தான்!
நீங்கள் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்று, சண்டை போடுவது அல்லது சண்டை போடுவதற்காகத் தயார் ஆவது.
காலையில் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் மனைவியோடு ஒரு சண்டை நடந்திருந்தது என்றால், மாலையில் வீட்டிற்குத் திரும்பியவுடன் இன்னொரு சண்டை காத்துக் கொண்டிருக்கும். இந்த வகை மனப்பான்மைதான் இந்தப் பூமியே போர்க்களமாக இருப்பதற்கு காரணம். அதனால்தான் கிருஷ்ணர் கீதையைச் சொல்வதற்குப் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார்.
நாம் போடும் சண்டைகளால் மூன்று வகையான முடிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒன்று, இருதரப்பினருக்கும் வெற்றி. இரண்டாவது, ஒரு தரப்பினருக்கு வெற்றி, ஒரு தரப்பினருக்கு தோல்வி. மூன்றாவது, இரண்டு தரப்பினருக்குமே தோல்வி. குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் நடக்கும் சண்டை முதல் வகையானது. குரு சிஷ்யரை வெற்றிகொள்கிறார். சிஷ்யரும் அ்ஞானத்தை அடைகிறார். இந்தவகையில் இரண்டு பேருக்கும் வெற்றிதான். இரண்டு பேருக்கும் எந்த இழப்பும் இல்லை. 'ஞானம் வழங்குதல்' என்ற செயலை குரு ஆனந்த கொண்டாட்டமாக நிகழ்த்துகிறார். அதனால் குரு இங்கே எதையும் இழப்பதில்லை. சீடனும் அ்ஞானத்தை அடைகிறார். அதனால் அவரும் எதையும் இழப்பதில்லை.
இரண்டாவது வகை முடிவில், விளைவு ஒருவருக்கு வெற்றி, அடுத்தவருக்குத் தோல்வி. எல்லா வியாபாரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒருவருக்கு வெற்றி என்றால், அது அடுத்தவருக்குத் தோல்வியாகத்தான் முடிகிறது.
மூன்றாவது வகை முடிவிற்கு உதாரணமாக, போரைச் சொல்லாம், போர்தான் இருப்பதிலேயே மோசமானது. காரணம் இதில் இருதரப்பினருமே தோல்வியடைகிறார்கள். போர்க்களத்தில் இருதரப்பினருக்கும் நஷ்டம்தான். போரில் கிடைக்கும் வெற்றிகூட உண்மையான வெற்றி கிடையாது.
கிருஷ்ணர் போர்க்களத்தில் கீதையை வழங்கியதற்கான காரணம் அவர் மிக மோசமான சூழ்நிலைக்கும் தீர்வைத் தருகிறார். நம் வாழ்வில் ஏற்படும் துக்ககரமான, துரதிருஷ்டமான சூழ்நிலைகளுக்கும் கீதையில் தீர்வு இருக்கிறது.
கீதையை வழங்குவதற்கு ஏற்ற இடம் போர்க்களம்தான். காரணம் துக்ககரமான சூழ்நிலைக்குத் தீர்வைத் தராத எந்த ஸத்யமும் இறுதி ஸத்யமாக இருக்க முடியாது. ஒரு ஸத்யம் ஒரு மோசமான சூழ்நிலைக்கும் தீர்வைத் தருமானால், அந்த ஸத்யத்தை நீங்கள் வேறு எந்த நிலைக்கும் பயன்படுத்தலாம்.
அப்படிப்பட்ட ஸத்யம் எந்தக் கதவையும் திறந்துவிடும் சக்திவாய்ந்த சாவியாகி விடுகிறது. ஒரு சாவியால் கடினமான பூட்டையும் திறந்துவிட முடியுமென்றால், அதனால் மற்ற எல்லாப் பூட்டுகளையுமே திறந்துவிட முடியும். கிருஷ்ணர் மோசமான சூழ்நிலைகளுக்கும்கூடத் தீர்வுகளாக இருக்கக்கூடிய ஸத்யங்களை வெளிப்படுத்துகிறார்.