பக்தியில் மலர்ந்திட வாழ்வின் ஸூத்ரங்கள் கிடைத்துவிடும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதே வார்த்தைகள்தான். ஆனால் அர்ஜுனன் பக்தியில் கரைந்து, சரணாகதி நிலையில் நிலைத்து நிற்கிறபோது அந்த வார்த்தைகள் ஸூத்ரங்களாக வேலை செய்யத் தொடங்குகின்றன. அப்போது அவை அர்ஜுனனுக்கு ஞானத்தை அளிக்கும் ஸூத்ரங்களாக மாறின.
ஆனால் இப்பொழுது அர்ஜுனன் _பக்தி_ மனப்பான்மையில் இல்லை. அதனால்தான் அதே வார்த்தைகள் வெறும் ஞானக் கருத்துகளாக மட்டும் இருந்து விடுகின்றன.
கிருஷ்ணர் ஒரு தத்துவவாதி கிடையாது. உண்மையில் எல்லாத் தத்துவவாதிகளின் முடிவான நோக்கமும், அடுத்தவரைத் தம் சொல்லைக் கேட்டுச் செயல்படுபவராக மாற்ற வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் மெது மெதுவாக வேண்டுமானால் வெளிப்படலாம். ஆனால் ஒரு தத்துவவாதியின் இறுதி நோக்கம் என்பது தாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.
‘ஒரு பொய்யையே நூறு முறை சொன்னால், அது உண்மையாக மாறி விடுகிறது. ஆனால் முதல் முறையாகச் சொல்லப்படும் உண்மையைக்கூட மக்கள் பொய் என்றே நினைக்கிறார்கள்’ என்று தம்முடைய சுய சரிதையில் ஹிட்லர் எழுதுகிறார்.
ஒரு கருத்து உண்மையா அல்லது பொய்யா என்பது அந்தக் கருத்தின் பொருளைக்கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை. ஆனால் எத்தனை முறை அந்தக் கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் நிர்ணயமாகிறது!
அது கம்யூனிஸமாகட்டும், அரசியலாகட்டும் அல்லது மதமாகட்டும், எல்லாத் தத்துவங்களின் இறுதி நோக்கமும் ஒன்றுதான். தத்துவவாதிகள், தங்கள் பேச்சை மற்றவர்கள் ஏன் கேட்க வேண்டும் என்பதற்கான தர்க்க ரீதியான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள், அவ்வளவுதான்!
ஒரு தத்துவவாதியின்
இறுதி நோக்கம்
என்பது, அவர்
சொல்வதைத்தான்
மற்றவர்கள்
செய்ய வேண்டும்
என்பதுதான்.
கிருஷ்ணர் அப்படிப்பட்ட தத்துவவாதி கிடையாது. அவர் எந்தத் தத்துவத்தையும் உருவாக்கவில்லை. அவர் அர்ஜுனனுக்கு இறுதி ஸத்யத்தை நேரடியாகத் தருகிறார்.
ஆனால் அதை உள்வாங்கும் உணர்வு நிலையில் அர்ஜுனன் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய உணர்வில் முதிர்ச்சி இல்லை. அதனால்தான் அவருக்கு விச்வரூப தர்சனத்தை - அதாவது நேரடியான அனுபவத்தை, அனுபூதியை - கிருஷ்ணர் தர வேண்டியிருந்தது.
மனத்தை விட்டுவிட, இறைவனின் விச்வரூப தர்சனம்
உபநிஷத்திலிருந்து ஒரு அருமையான கதை:
ஒரு சீடர் குருவிடம் கேட்கிறார், "குருவே தயவு செய்து எனக்கு ஆத்ம ஞானத்தைக் கற்றுக் கொடுங்கள்."
குரு உபதேசிக்கிறார், "தத்தவமஸி- நீதான் கடவுள்!"
இதைக் கேட்ட சீடர் யோசிக்கிறார், "நான் எப்படிக் கடவுளாக முடியும்? என் மனைவியைக் கண்டு நான் பயப்படுகிறேன். எனக்குப் பல கவலைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. ஆயிரம் சந்தேகங்கள் இருக்கின்றன."
ஒரு குரு முதலில், 'தாமே கடவுள்' என்று சீடருக்கு நிரூபித்தால் மட்டுமே சீடரால் குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையை வைக்க முடியும்.

'நீங்கள் கடவுள்' என்று உங்களை உணரவைப்பதற்கு, குருவானவர், 'தான் கடவுள்' என்பதை முதலில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
"நானே அனைத்துமாக இருக்கிறேன்," என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் கிருஷ்ணர் இங்கு அதைத்தான் செய்கிறார். அடுத்தடுத்த அத்தியாயங்களில், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளைப் பற்றிச் சொல்லும்போது, எல்லா வேதங்களும், கடவுளர்களும், புனித நூல்களின் ஞானக்
> கிருஷ்ணர் தத்துவவாதி கிடையாது. அவர் எந்தத் தத்துவத்தையும் உருவாக்கவில்லை. அவர் அர்ஜுனனுக்கு இறுதி ஸத்யத்தை நேரடியாகத் தருகிறார்.
கருத்துகளும் இறுதியில் தம் காலடியிலேயே
சரணடைகின்றன என்பதையும், மொத்தப்
பிரபஞ்சமுமே தமக்குள் அடக்கம்
என்பதையும் விளக்குகிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், கிருஷ்ணருக்கு
அஹங்காரம் இருப்பதாகத்தான் தோன்றும்.
ஒரு சாதாரண மனிதருக்கு அது நம்ப
முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத
கருத்தாகத்தான் இருக்கும். அவ்வாறு
தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கான
வாய்ப்பு இருந்தபோதிலும் கிருஷ்ணர்
தன்னைக் கடவுள், என்று மீண்டும்
மீண்டும் சொல்வதன் மூலம், ‘நீங்கள்
கடவுள்’ என்று உங்களை உணரவைக்கிறார்.
"நான் கடவுள், ‘நீயும் கடவுளே’ என்பதை உணரச் செய்வதற்காக வந்துள்ளேன்," என்று தகுந்த சான்றுகளுடன் வலியுறுத்திச் சொல்கிறார். ‘நீங்கள் கடவுள்’ என்பதை உங்களை உணரச் செய்வதற்காகத்தான், ‘தான் கடவுள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
சாதாரண மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளை நாம் நம்பமாட்டோம். சொல்வதற்குத் தகுதி படைத்தவர்கள், சொல்வதற்கான உரிமை உடையவர்கள் சொல்லும்போதுதான் ஒருவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்.
கீதை முழுவதும் கிருஷ்ணர் தம் இறை நிலையை மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் நிலையில், ஏற்றுக்கொள்ளும் நிலையில் அர்ஜுனன் இல்லை. தற்போதைய நிலையில் அவரால் கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது அவருக்கு ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாகத்தான் தெரிகிறது.
கிருஷ்ணர் ஒருமுறை தம்முடைய தெய்வீகத்தை நிரூபித்த பிறகுதான், அர்ஜுனன் கிருஷ்ணருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறார்; அதனைப் பின்பற்றவும் தயாராகிறார்.
ஞானிகள் தங்கள் தெய்வீகத்தை நமக்கு உணர்த்தும்போதும், அதிசயங்களைச் செய்து காட்டும்போதும், அதை அவர்கள் தங்கள் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்வதில்லை.
அவர்கள் அதைத் ‘தாங்கள் கடவுள்’
என்பதை நிரூபிப்பதற்காகச் செய்கிறார்கள்.
அப்பொழுது மட்டுமே, நீங்கள் அவர்கள்
சொல்லும் வார்த்தைகளை நம்புவீர்கள்!
‘நீங்கள் கடவுள்’ என்பதையும்
அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.
நீங்கள் கடவுளின் அம்சங்கள் என்று புரிய
வைப்பதற்காகத்தான் அவர்கள் அப்படிச்
செய்கிறார்கள்.
ஞானிகளை இறையம்சங்களாக நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போதுதான், உணர்ந்துகொள்ளும்போதுதான் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களின் இறைத் தன்மையை உணர்கிறீர்கள். அதனால்தான் குருமார்கள் தொடர்ந்து தங்கள் சக்தியை வெளிப்படுத்தி தங்களுடைய தெய்வீகத்தை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
பகவத்கீதை, வேதத்தின் ஒரு பாகமோ அல்லது புனித நூல்களாகக் கருதப்படும் ச்ருதி எனப்படும் உபநிஷத்தின் பாகமோ கிடையாது. ச்ருதி என்றால் இறைவனால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட சாஸ்த்ரம் என்று பொருள். கீதை, இதிஹாஸம் எனப்படும் மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இன்னும் சிலர் கீதையை மஹாபாரதத்தின் பிற்சேர்க்கை என்றும் சொல்கிறார்கள். எப்படியானாலும் உலகில் உள்ள எல்லா இந்து பண்டிதர்களும் கீதையை வேத நூலாகவே ஏற்றுக்கொள்ளிறார்கள்.
கிருஷ்ணர் கீதையை அனுபவப்பூர்வமாக, ஆணித்தரமாக வெளிப்படுத்துகிற விதம்தான், கீதையை ஒரு வேத நூலாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது.

“நான் கடவுள், இதை நம்பினால்
நீயும் உன் கடவுள் தன்மையை
உணர்ந்துகொள்வாய்,” என்று
கிருஷ்ணர் சொல்கிறார். இது
ஒரு மிகப்பெரிய ஆனால்
மிக எளிமையான உண்மை.
காலங்காலமாக பல தலைமுறைகளின் உள்ளத்திலும் உணர்விலும் இந்த ஸத்யம் எதிரொலித்து வந்திருக்கிறது. அதனால் கீதையின் புனிதத் தன்மை நிரூபணமாகியுள்ளது.
ஒரு பெரிய அறிஞர் தம்முடைய மொத்தத் தத்துவத்தையும் நாற்பது பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமாக வெளியிட்டார். அவரிடம் பலர் கேட்டார்கள், "ஏன் வெறும் நாற்பதே பக்கத்தில் உங்கள் புத்தகத்தை நிறைவு செய்துவிட்டீர்கள்," என்று.
அதற்கு அந்த அறிஞர், "ஐயா, எனக்குப் போதுமான நேரம் கிடைத்திருந்தால் அந்தப் புத்தகத்தை இருபது பக்கங்களில் முடித்திருப்பேன்!" என்று சொன்னார்.
புத்திசாலித்தனம் இருந்தால் மட்டும்தான்
சொல்ல வந்த விஷயத்தை எளிமையாகவும்
சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல
முடியும்.
சொல்லிக் கொண்டே போவதற்குப் புத்திசாலித்தனம் தேவையில்லை. ஒரு விஷயத்தில் உங்களுக்கு எந்த அளவிற் குக் குறைவாக அறிவிருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிகமாக அதைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பீர்கள். புத்திசாலிகள் அதே கருத்தைச் சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுவார்கள். அதுதான் உண்மை. இங்கே கிருஷ்ணர் கீதையில் சொன்ன எல்லா ஸ்லோகங்களின் அர்த்தமும் இரண்டே ஸ்லோகங்களில் அடங்கி விடுகிறது.

பிரச்சினைக்கு உயிரூட்டுவதை நிறுத்துங்கள், உயிர்த்தெழுவீர்கள்!
அர்ஜுனன் தம்முடைய பெயர் மற்றும் புகழ் பறிபோய்விடுமே என்ற கலக்கத்தில், ரஜோ குணத்தில் கட்டுண்டு இருக்கிறார் என்பதை கிருஷ்ணர் நேரடியாகச் சொல்லி விடுகிறார்.
ஸத்வ குணத்தில் மையம் கொண்டிருக்கும் மனிதர் பேராசையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ இயங்காமல் நடு நிலையான மன
நிலையுடன் கருணையிலிருந்து இயங்குவார்.
ஆனால் ரஜோ குணத்தில் இருக்கும்
மனிதர் தம்முடைய பெயருக்காகவும்
புகழுக்காகவும்தான் செயல்படுவார்.
தமோ குணத்தில் இருப்பவர் மந்தத்
தன்மையிலேயே நிலைத்து, புலன்
இன்பங்களுக்காக மட்டும் இயங்குவார்.
துரியோதனன் தமோ குணத்திலிருந்து
இயங்குகிறார். அவருடைய கொடூர
மனப்பான்மையும் கீழான, இவ்வுலக
வாழ்க்கையை மட்டுமே பெரிதாகக் கருதும்
குணமும் அதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.
யுதிஷ்டிரர் ஸத்வ குணத்திலிருந்து, அன்பினால் இயங்குகிறார்.
அர்ஜுனன் பெயருக்காகவும் புகழிற்காகவும் மட்டும் இயங்குகிறார். ரஜோ குணத்தில் மாட்டியிருக்கிறார்.
அதனால்தான் கிருஷ்ணர், அர்ஜுனன் தம் அணுகுமுறையை மாற்ற வேண்டுமென்றும் அப்படிச் செய்யாவிட்டால், இறுதியில் அர்ஜுனனுக்குக் கேடுதான் வந்து சேரும் என்றும் சொல்கிறார்.
அர்ஜுனனுக்குள் எங்கே புண் இருக்கிறதோ, ஸூக்ஷ்மமான அஹங்காரம் என்னும் புற்று நோய் இருக்கிறதோ, அங்கேயே கிருஷ்ணர் சரியாகக் கை வைக்கிறார்.
அர்ஜுனன் புத்திசாலியாக இல்லாமல் போனது நமக்கெல்லாம் நன்மையே! ஒருவேளை அவர் கிருஷ்ணர் சொல்லுவதைப் புரிந்துகொள்ளுமளவிற்குத் sதமக்குப் போதுமான புத்திசாலித்தனம் இல்லாததுபோல் நடித்திருக்கலாம். அர்ஜுனன் கிருஷ்ணரோடு முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அதனால் அவர் புத்திசாலியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அர்ஜுனன் தமக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலத் தலைமுறையினரும் மொத்த மனிதகுலமும் பயன்பட வேண்டுமென்பதற்காக கிருஷ்ணரிடம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டிருக்க வேண்டும்.
கிருஷ்ணர் நேரடியாக விஷயத்தைச் சொல்லி விடுகிறார். எந்தத் தத்துவத்தையும் அவர் முன் வைக்கவில்லை; சுற்றி வளைத்துப் பேசவில்லை. அவர் சொல்கிறார்...
"ஓ அர்ஜுனா, நீ பலவீனமான மனவோட்டத்திற்குள் ஆழ்ந்துவிடாதே. பலவீனமானவனைப்போல் நடந்துகொள்ளாதே, பலவீனத்திலிருந்து வெளியே வா!"
ஒரு சின்ன கதை
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் இந்தக் கதையைப் படித்தேன். ஒருவருக்குத் தம்முடைய கையில் கிடைத்த எதையும் கிழித்துப் போடும் பழக்கம் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் அவரைப் பல மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று, பல விதமான வைத்தியங்களைச் செய்தார்கள். இருந்தும் எந்தப் பயனும் இல்லை.
ஆனால் அந்த ஊரில் ஒரு இளம் மனநல மருத்துவர் இருப்பதாகவும் அவர் புதுமையான முறைகளைக் கையாண்டு எப்பேர்ப்பட்ட மனநோயாளிகளையும் குணப்படுத்தி விடுவார் என்றும் உறவினர்கள் கேள்விப்பட்டார்கள். அந்த இளம் மனநல மருத்துவரிடம் இந்த நோயாளியை அழைத்துச் சென்றார்கள்.
அந்த இளம் மருத்துவர், தாம் அந்த நோயாளியோடு தனிமையில் சில நிமிடங்கள் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மருத்துவரும் நோயாளியும் சில நிமிடங்கள் தனிமையில் நடந்தார்கள். அதன் பிறகு டாக்டர், "இந்த மனிதர் முழுவதுமாகக் குணம் அடைந்துவிட்டார். அவரை நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்," என்று சொன்னார்.

உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார்கள். அந்த நபர் உண்மையிலேயே குணமடைந்து விட்டார். ஒரு வருடம் கழிந்தபின்னும் அந்த நபர் முழுவதுமாகக் குணமடைந்தே இருந்தார். உறவினர்கள் அந்த இளம் மருத்துவரைச் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.
மற்றவர்களால் குணப்படுத்த முடியாத
நோயை அவரால் எப்படித் குணப்படுத்த
முடிந்தது என்று மருத்துவரிடம்
கேட்டார்கள். மருத்துவர் சொன்னார்,
"நான் அந்த நோயாளியிடம் வேறொன்றும்
சொல்லவில்லை. அப்பா இனி மேல் எந்தத்
தாளையும் நீ கிழிக்கக் கூடாது. அப்படி
இனி ஒருமுறை நீ கிழித்தாயானால்,
உன்னை என்னிடம் அவர்கள் அழைத்து
வந்து விடுவார்கள். நான் உன்னை இந்த
ஜன்னலில் இருந்து கீழே தள்ளிவிட்டு
விடுவேன் என்று சொன்னேன்.
அவ்வளவுதான்!’”
பல நேரங்களில் நம்முடைய பிரச்சினைகள்
மிக எளிமையானவை. நாம்தான் அவற்றை
ஆராய்ந்து ஆராய்ந்து பெரிதுபடுத்தி
விடுகிறோம்.
பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பேசியும் ஆராய்ந்தும் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி விடுகிறோம். பிரச்சினைகளுக்கு உயிர் கொடுத்து விடுகிறோம். நாம் நினைப்பதைப் போன்று நம்முடைய பிரச்சினைகள் ஒன்றும் அவ்வளவு பெரிதானவை அல்ல!
நாம் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதும், அலசி ஆராயும்போதும். அவற்றிற்கு பெயர் கொடுக்கும்போதும், அதுவரை நம் இருப்பு நிலையில் இல்லாத ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி விடுகிறோம். இப்படித்தான் மனநல மருத்துவர்கள் பல புதிய புதிய நோய்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
எந்த அளவிற்கு அதிகமாக ஆராய்கி றாமோ, அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம். அந்த இளம் மருத்துவரின் நேரடியான எளிமையான அணுகுமுறை உடனடியாகப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது. ஆனால் அதற்கு முன் அந்த நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள், மனநல சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மனம்தான். அதை நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்; இல்லையென்றால், இயற்கையாகவே அதைப் புதிய பிரச்சினைகளை உருவாக்கத்தான் பயன்படுத்துவீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நீங்கள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்வீர்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மனத்தைப் பொறுத்தவரை ஒன்று, நீங்கள் மேலே ஏறிக் கொண்டிருக்கலாம்; அல்லது கீழே இறங்கிக் கொண்டிருக்கலாம்; நடுவில் வெறுமனே நின்று கொண்டிருக்க முடியாது; அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே கிருஷ்ணர் அர்ஜூனனின் பிரச்சினையைப் பற்றி நேரடியாகச் சொல்கிறார்.
இறுதி சத்தியத்தை முதலில் சொல்வதே வேதங்களின் வழக்கம்
இன்னொரு சின்ன கதை
தம் வளர்ப்புப் பன்றியோடு ஒருவர் மதுபானக் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் பன்றிக்கு மரக்கால்கள் இருப்பதைப் பார்த்து வியப்படைகிறார். "ஏன் சார், மதுபானக் கடைக்குப் பன்றியோடு வந்திருக்கிறீர்கள்? அதுவும் அந்தப் பன்றிக்கு மரக்கால்கள் இருக்கிறதே? என்ன நடந்தது?" என்று ஆர்வம்ாகக் கேட்டார். வந்தவரும் தமக்கு இலவசமாகக் கொஞ்சம் மதுபானம் கொடுத்தால்தான் அந்தப் பன்றியின் கதையைச் சொல்ல முடியும் என்று சொன்னார். மதுக்கடைக்காரர் அதற்குச் சம்மதித்தார்.
"ஐயா ஒரு நாள் எங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. இந்தப் பன்றிதான் என்னையும் என் மனைவியையும் என் குடும்பத்தையும் காப்பாற்றியது," என்று வாடிக்கையாளர் சொன்னார்.
"ஆனால் அதற்கும் பன்றியின்
மரக்கால்களுக்கும் என்ன சம்மந்தம்!" என்று
அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். "எனக்கு
இன்னொரு கப் மதுபானம் கொடுங்கள்.
நான் மீதிக் கதையைச் சொல்கிறேன்," என்று
சொல்லி இலவசமாக மேலும் கொஞ்சம்
வாங்கிக் குடித்துவிட்டு வாடிக்கையாளர்
தொடர்ந்தார்.
"இன்னொருமுறை நான் ஆற்றில்
விழுந்துவிட்டேன். இந்தப் பன்றிதான்
வேகமாக என் மனைவியிடம் சென்று நான்
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக்

காண்பித்து மீண்டும் என் உயிரைக் காப்பாற்றியது," என்று இன்னொரு கதையைச் சொன்னார்.
கடைக்காரர் அந்தக் கதையையும் கேட்டுவிட்டுச் சொன்னார், "உங்கள் பன்றி உங்கள் உயிரை பல முறை காப்பாற்றியிருக்கிறது. அது இருக்கட்டும், அந்தப் பன்றிக்கு எப்படி மரக்கட்டையால் ஆன கால்கள் வந்தது. அதை முதலில் சொல்லுங்கள்," என்றார்.
வாடிக்கையாளர், "தமக்கு இன்னொரு கப் இலவச மதுபானம் வேண்டும்," என்றார். கடைக்காரரும் இதுதான் கடைசி முறை என்று சொல்லி இலவசமாகக் கொஞ்சம் மதுபானத்தைக் கொடுத்தார்.
அந்தப் பன்றி, தம்மை ஒருமுறை சூறாவளிக் காற்றில் இருந்து எப்படிச் காப்பாற்றியது என்பதைப் பற்றி அந்த வாடிக்கையாளர் சொல்ல ஆரம்பித்தார்.
இப்போது கடைக்காரர் சுத்தமாகப் பொறுமையை இழந்துவிட்டார். வாடிக்கையாளரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, "ஒழுங்காக அந்த மரக்கால்களைப் பற்றிச் சொல்லப் போகிறாயா, இல்லையா?" என்று கேட்டார்.
வாடிக்கையாளர் சொன்னார், "என்னைப் பலமுறை இந்தப் பன்றி காப்பாற்றியிருக்கிறது. இவ்வளவு சிறப்பான பன்றியை எப்படி முழுமையாகச் சாப்பிடுவது. அதுதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்."
ஒரு வரியில் முடிக்கவேண்டிய கதையை அந்தக் குடிகாரர் இப்படி விலாவாரியாகச் சொல்கிறார்; அவர் ஒரு பெரிய தத்துவவாதியாக இருக்க வேண்டும்.
மனத்தைப் பொறுத்தவரை
ஒன்று, நீங்கள்
மேலே ஏறிக்
கொண்டிருக்கலாம்.
அல்லது
கீழே இறங்கிக்
கொண்டிருக்கலாம்.
நடுவில் வெறுமனே
நின்று கொண்டிருக்க
முடியாது
இங்கே கிருஷ்ணர் எந்தக் கதையையும் எந்தத்
தத்துவத்தையும் தரவில்லை. நேரடியாகப்
பிரச்சினைக்கான தீர்வை ஒரே வரியில்
தருகிறார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும்
நிலையில் அர்ஜுனன் இல்லாததால்,
கிருஷ்ணர் அவர் சொல்ல வந்ததைத் தர்க்க
ரீதியாக விளக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலை நாட்டுத் தத்துவங்கள் அத்தனையும் தர்க்கரீதியான விளக்கங்களோடு தொடங்கி பின்பு தீர்மானத்தில் முடியும். கீழை நாட்டுத்
தத்துவங்கள் தீர்மானத்தில், அதாவது இறுதி
ஸத்யத்தில் இருந்து தொடங்கும். அதற்குப்
பிறகுதான் அதற்குரிய தர்க்க ரீதியான
விளக்கங்களைக் கொடுக்கும்.
கீழைநாட்டு ஞானிகள் கருணை மிக்கவர்களாக இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று இறுதி ஸத்யத்தை முதலிலேயே தந்து விடுகிறார்கள். புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை நமக்கு முதலிலேயே அளிக்கிறார்கள்.
கேட்பவர்களுக்குப் புத்திசாலித்தனம் இல்லை என்றால், அவர்களுக்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால்தான், அவர்கள் விரிவான விளக்கத்திற்குள்ளும், ஆராய்ச்சிக்குள்ளும் செல்லவேண்டி இருக்கிறது, அதன் பிறகு ஸத்யங்களைத் தர்க்க ரீதியாக விளக்குகிறார்கள்.
மொத்த உலகத்திற்கும் சொந்தமானது பகவத்கீதை

ஞானிகள், அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமாகவே நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நமக்கு அந்தப் பக்குவம் இல்லை என்றால், அதன் பிறகு வழக்கமான வழிமுறைகளை ஆரம்பிக்கிறார்கள், நமக்கு விளக்கங்களாலும், ஆய்வுகளாலும் புரியவைக்கிறார்கள். இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உடனடியாக ஞானம் அடையும் வழியை, உடனடியாக விடுதலை அடையும் வழியைப் பற்றிய நுட்பத்தைத் தர முயற்சிக்கிறார்.
ஆனால் கிருஷ்ணர் சொல்லும் ஸத்யங்களை ஆழ்ந்து உள்வாங்கி, அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனுக்குப் போதிய மனப்பக்குவம் இல்லாததனால், அவருக்குப் படிப்படியாக விளக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணரின் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் மக்கள் இரண்டு விதங்களில் புரிந்துகொள்கிறார்கள். கிருஷ்ணரைக் கடவுள் என்று சொல்லுகிற அளவிற்கு, அவரிடம் எந்த ஒரு சிறப்பான தகுதியும் கிடையாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கடவுள்
என்கிற கருத்தையே நம்பாதவர்களாகத்தான்
இருக்கிறார்கள். அப்படிப்பட்ட
நாத்திகர்களுக்கு கீதையில் தர்க்க ரீதியான
விளக்கங்கள் இருக்கின்றன. கீதையில்
வருவதைப் போன்ற தெள்ளத் தெளிவான
விளக்கங்களையும் ஞானத்தையும் தாங்கிய
உரையாடல்கள் எந்த மொழியிலும் எந்தக்
காலக் கட்டத்திலும் எழுதப்படவில்லை.
காலத்தாலும் ஞானக்கருத்துக்களாலும் என
அனைத்து வகையிலும் மற்ற நூல்களைக்
காட்டிலும் கீதை விஞ்சி நிற்கிறது.
> யாரால் கீதையை
> ஏற்றுக்கொள்ள
> முடியவில்லையோ,
> அவர்களுக்குத்
> தங்களை
> உயர்ந்த நிலைக்கு
> மாற்றிக்கொள்ளும்
> பக்குவம் வரவில்லை
> என்றுதான் அர்த்தம்.
கிருஷ்ணரின் செய்தி எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டவருக்கும் பொருந்தும். யாரால் கீதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்குக் கீதையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும், தங்களை உயர்ந்த நிலைக்கு மாற்றிக்கொள்ளும் பக்குவமும் இன்னும் வரவில்லை அதற்கான நேரம் வரவில்லை என்றுதான் அர்த்தம். அவ்வளவுதான்.
நமக்குப் புரியவில்லை என்பதற்காகவும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவும் இயற்கையின் விதிகள் மாறப்போவதில்லை. பூமி என்றுமே உருண்டைதான். அது என்றுமே சூரியனைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பல தலைமுறைகளாக இந்த உண்மையை மதவாதிகளும், சமுதாயவாதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்த உண்மையைச் சொன்னவர்களை அவர்கள் கொன்றே விட்டார்கள்.
.